330 views

     

               சந்திரிகா அவர்களை பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் கேள்விகளை கேட்டுக் கொண்டே போக, இருவரும் அமைதியாக இருப்பதை கண்டு கேள்வியாக பார்க்க, அதற்குள் தனது முகபாவனையை மாற்றிக் கொண்ட உதய், “ம்ம் ஆமாம்மா. ரூம்ல தான் இருக்கோம்.

அவங்கல்லாம் ஊர்ல இருக்காங்கஎன அவள் கூறியதையே கூறியவன்,சரி நீ சாப்பிட்டியாஎன பேச்சை மாற்றினான். “இல்லன்னா. நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கறேன்என சந்திரிகா கூற, “நீ சாப்பிட்டு எடுத்து வர வேண்டியது தானே. மொதல்ல நீ கிளம்பு.” என எழுந்தான்.

இல்ல பசிக்கல. கொஞ்ச நேரம் இருக்கேன்என்றவளை சட்டையே செய்யாமல் அழைத்து கொண்டு வெளியில் வந்தவன், “நைட்டுக்கெல்லாம் நாங்க இங்கையே சாப்பாடு அரென்ஜ் பண்ணிக்குவோம். நீ தேவை இல்லாம அலையாத. சரியா. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கன்னு நினைக்கறேன். அதனால நீ வீட்ல இருந்து ரெஸ்ட் எடுக்கற.” என கண்டிப்பாக கூறி அனுப்பி வைத்தான்.

ஆனால் இரவு உணவும் சந்திரிகா வீட்டில் இருந்துதான் வந்தது. என்ன ஒன்று இவள் வராமல் தனது வீட்டு டிரைவர் மூலம் குடுத்து அனுப்பி இருந்தாள். ஒருபுறம் சில மாதங்களே பழகி இருந்தாலும் அவளது அன்பையும் அக்கறையும் கண்டு மகிழ்ந்தாலும், மறுபுறம் அது இருவருக்கும் பயத்தையும் கொடுத்திருந்தது.

சத்யாவின் மூலம் சந்திரிகாவின் செல்வ நிலை உதய்க்கும் தெரிய வந்தது. அதன்பிறகே அவனுக்கும் அந்த பயம் இயல்பாகி போனது. மறுநாள் காலையில் மீண்டும் உணவு எடுத்து வந்தவளை கண்டு நேரடியாகவே கோபத்தை காட்டினான் சத்யா.

எத்தனை தடவை சொல்றது. எங்கள பாத்துக்க எங்களுக்கு தெரியும். வீட்ல அடக்கமா இருக்க தெரியாதா. எப்ப பாரு எங்கையாவது வெளில சுத்திட்டு இருக்கனுமா உனக்குஎன சம்பந்தமில்லாமல் கத்த அவனை அடக்க முயன்று தோற்றான் உதய். அவள் அதிர்ந்து நிற்பதை பார்த்த உதய்,அவன் ஏதோ டென்ஷனா இருக்கான். நீ என் கூட வாஎன வெளியே கூட்டி வந்தவன்,

நான்தான் நேத்தே சொன்னேன்ல. இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம். நீ வர வேண்டாம்னு. அப்பறம் ஏம்மா?” எனக் கேட்டான். “நானும் அதுக்குதாண்ணா வந்தேன். டிஸ்சார்ஜ் பண்ணா நீங்க போக சிரமப்படுவீங்கல்ல. நம்ப கார்லயே போய்டலாம்என்ற அவளின் பதிலில் அதிர்வது அவன் முறையானது.

சில நிமிடங்களில் சுதாரித்தவன், “இல்லமா. நான் ஏற்கனவே எழிலை வர சொல்லிட்டேன். நீ கிளம்பு நான் பார்த்துக்கறேன்என்றான். “ஓ.என ஒரு நிமிடம் யோசித்தவள்,சரி ஓகேனா. நான், நீங்க சாப்பிட்டதும் கிளம்பறேன்என மீண்டும் அறைக்கு கூட்டி வந்தாள்.

வந்தவள் சத்யாவிடம், “சாரிங்க. அண்ணா எழில் அண்ணாவ வர சொன்னது எனக்கு தெரியாது. பசியோடு இருப்பிங்கன்னு வந்தேன். சாப்பிட்டதும் கிளம்பிடறேன்என்றாள் தன்மையாக. அதன் பின்பு கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் சரியென்றான் சத்யா.

அவர்களுக்கு பரிமாறியவள் தானும் ஒரு தட்டில் போட்டுக் கொள்ள, கேள்வியாக பார்த்த உதய்யிடம்,நீங்க தானேன்னா. ரொம்ப நேரம் சாப்பிடாம இருக்க கூடாதுன்னு சொன்னிங்க. அதான் எனக்கும் எடுத்துட்டு வந்தேன்.” என சொல்லி சிரித்தாள்.

பிறகு மூவரும் சிரித்து பேசியபடியே சாப்பிட்டு முடிக்க அறையே சற்று நேரம் கலகலப்பாக இருந்தது. அப்போது சந்திரிகா, “உங்க கூட வந்தா இன்னைக்கு உங்க வீட்ட பார்க்கலாம்னு நினைச்சேன்.” என இழுத்தவள்,

சத்யா முறைத்ததை பார்த்ததும்,அதனால என்ன. இன்னொரு நாள் அம்மால்லாம் வரும்போது கூட்டிட்டு போங்கண்ணாஎன உதய்யிடம் முடித்தாள். சற்று நேரத்தில் அவள் கிளம்பி விட, அதன் பின்பு ஒரு ஆட்டோவை எடுத்து வந்து சத்யாவை டிஸ்சார்ஜ் செய்து கூட்டிக் கொண்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

அம்மாக்கு சொன்னியாடா?” என சத்யா கேட்க,ம்ம். சொன்னேன்டா. பணம் ஏதாவது வேணுமான்னு கேட்டாங்க. நான் அதெல்லாம் காலேஜ்லயே பே பண்ணிடாங்கன்னு சொல்லிட்டேன்என்றான் உதய். “ம்ம் சரிடா.” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவன் மனது சந்திரிகாவையே சுற்றிக் கொண்டிருந்தது.

இன்னும் ஒரு வாரத்திற்கு அவளை பார்க்க முடியாதே என வருத்தமாக இருந்தது. ஆனாலும் இன்னும் ஒரு வாரத்திற்கு அவன் கல்லூரிக்கு செல்ல முடியாது என்பது ஒரு வகையில் நிம்மதியாகவும் இருந்தது. சந்திரிகாவிற்கு தன்னை பார்க்காவிட்டால் தன் மீது உள்ள ஈர்ப்பு குறையும் என மனக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தான்.

அடுத்த ஒரு வாரம் கண்மூடி திறப்பதற்குள் சென்றிருக்க, பாவம் சந்திரிகாதான் தவித்து போனாள். ‘அவன் நேரத்திற்கு சாப்பிட்டானோ? இல்லையோ? நன்றாக இருப்பான் தானேஎன்றெல்லாம் யோசித்து அவன் நினைவிலே நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

அவனது நண்பர்களிடம் தினமும் சத்யாவின் உடல்நிலையை விசாரிக்கவும் தவறவில்லை. இதற்கிடையில் ஓவியக் கண்காட்சிக்கும் நாள் நெருங்கி கொண்டிருந்தது. கண்டிப்பாக கண்காட்சியை பார்க்க சத்யாவும் அவனது நண்பர்களும் வர வேண்டும் என அன்புக் கட்டளை இட்டாள்.

ஆனால் சத்யா அதற்குள் கல்லூரிக்கு வந்து விடுவானா என்பதும் சந்தேகமாகவே இருக்க, ஒரு வழியாக கண்காட்சி நாளும் வந்தது. இவள் நினைத்தபடியே சத்யா அன்று கல்லூரிக்கு வரவில்லை. ஓவியத்தை இவளுக்குரிய இடத்தில் காட்சிப்படுத்திக் கொண்டு இருக்க அப்போதுதான் அவன் வரவில்லை என்ற தகவல் வந்தது.

சரி. இன்னும் உடல்நிலை சரியாகவில்லை போலஎன நினைத்துக் கொண்டவள், நாளை வந்து விடுவான் என தன்னை தேற்றிக் கொண்டாள். இரு நாட்கள் நடக்கும் கண்காட்சிக்கு தனித்தனியே ஓவியங்களை சமர்பிக்க வேண்டும் என்ற போட்டியின் விதிப்படி இன்று ஒரு ஓவியத்தையும், நாளை ஒரு ஓவியத்தையும் காட்சிப்படுத்த வேண்டும்.

நாளையே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதால் நாளை வந்தால் கூட போதும் என நினைத்தாள். அனைவரது ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்க நடுவர்கள் ஓவியங்களை பார்வையிட்டு கொண்டு வந்தனர்.

திவ்யா மார்டன் ஆர்ட் எனப்படும் விலையுயர்ந்த ஓவியம் ஒன்றினை காட்சிப்படுத்தியிருக்க அதன் கைத்திறன் அனைவரையும் கவர்ந்தது. அங்கிருந்த அனைவருமே ஒரு அழகிய சித்திரத்தை தீட்டி இருக்க, சந்திரிகாவின் ஓவியத்தை பார்த்தவர்கள் மெர்மறந்து நின்றனர் என்றால் அது மிகையாகாது.

அவளது ஓவியத்தில் மாட மாளிகை ஒன்று இருக்க அதை அழகாக வண்ணம் தீட்டியிருந்தாள். ஆனால் அனைவரும் அதை விட்டு விட்டு அந்த மாளிகையின் மேற்புறத்தில் ஒரு பறவை ஒன்று தனது மெல்லிய அலகால் தனது குழந்தைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்ததை பார்த்தனர். அதன் கூடும் அந்த மாளிகையின் மீதே அமைத்திருந்ததை போல மிகவும் தத்ரூபமாக வரைந்திருந்தாள்.

வெறும் பணத்தால் செழுமையாக கட்டப்பட்டிருந்த அந்த மாளிகையை விட, பாசம் கொண்டு கட்டப்பட்ட அந்த பறவைக் கூடே அன்போடு அதிக மகிழ்ச்சியையும் தரவல்லது என சொல்லும்படியான ஒரு கருத்தை வைத்து வரைந்திருந்தாள். அந்த கருத்து அச்சு பிசகாமல் அனைவருக்கும் சென்று சேரும்படி இருந்தது மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது அந்த ஓவியம்.

அன்று நிறைய ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க சந்திரிகா, திவ்யா இருவருமே அடுத்த சுற்றுக்கு தேர்வாகி இருந்தனர். அன்றைய தினம் கண்காட்சி இனிதே நிறைவுற்றது. முந்தைய நாளை விட இன்று சற்று முக மலர்ச்சியோடு காணப்படும் தனது தோழியை பார்த்த சந்திரிகாவின் தோழிகள் அவளருகில் வந்தனர்.

என்னப்பா. நேத்து செலக்ட் ஆனதுனால இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போலஎன ஒருத்தி கேட்க, “அப்படில்லாம் இல்லப்பா. எப்பவும் போலதான் இருக்கேன்.” என்றவளின் வாய் பேசிக் கொண்டிருக்க, கண்களோ ஒருவித அலைப்புறுதலிலே இருந்தது.

ஓகே.ஓகே. இன்னைக்கும் நீதான் வின் பண்ணுவ. சிரிப்பை நாளைக்கும் சேர்த்து வச்சுக்கோ.என வாழ்த்தியபடி அவர்கள் வேறுபுறம் சென்றனர். அப்போது அவளருகே சத்யாவின் நண்பர்கள் வர அவள் சத்யாவை தேடினாள். ஆனால் அவன் அங்கு இல்லை.

என்ன உதய்யண்ணா, இன்னைக்கும் உங்க ஃப்ரண்டு வரலயா?என கவலையோடு கேட்க,நாங்க இத்தனை பேர் வரோம். நீ என்ன சத்யாவை பத்தியே கேட்கிற. அப்ப நாங்கள்ளாம் வர வேணாமா? சரி போ நாங்க போறோம். டேய் வாங்கடா.” என கூறியபடியே அன்பு கிளம்ப எத்தனிக்க,

என்னண்ணா அப்படி சொல்லிட்டீங்க. நீங்கல்லாம் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு உடம்பு சரி இல்லன்னு தான் கேட்டேன். மத்தபடி எல்லாருமே எனக்கு வரணும்.” எனக் கூறி சமாதானம் செய்தாள். ஆனால் மனதின் ஓரத்தில் ஒரு ஏமாற்றம் இருந்ததென்னவோ உண்மை. ஆனால் இன்முகத்துடனே தனது பணிகளை கவனித்தாள்.

அன்றைய நாள் கண்காட்சிக்கு வெவ்வேறு விதமான ஓவியங்களை வரைந்திருக்க, பெரும்பாலும் சிறப்பாகவே இருந்தது. திவ்யா முதல் நாள் தேர்வாகி விட்டதில் மகிழ்ச்சியுடனே இருக்க அடுத்த நாளும் அதே போல ஒரு மாடர்ன் பெயிண்டிங்கையே வரைந்திருந்தாள் இல்லையில்லை வாங்கியிருந்தாளோ..!!

சற்று நேரத்தில் கண்காட்சி தொடங்க, சந்திரிகாவின் ஓவியத்தை பார்த்த திவ்யாவிற்கு தனது எண்ணம் தவறோ என நினைக்குமளவிற்கு அத்தனை அழகாக வரைந்திருந்தாள். பெண்ணின் வாழ்வில் அனைத்து பரிமாணங்களையும் ஒரு கிராமத்து பெண்ணின் பாவனையில் அழகாக தனது ஓவியத்தில் தீட்டியிருந்தாள்.

பிறப்பு முதற்கொண்டு மகளாக, மருமகளாக, மனைவியாக, தாயாக, ஏன் பாட்டி ஆனபிறகும் உள்ள நிலைகளை. கிராமத்து பெண் இருப்பது போல அமைந்திருந்தது அந்த ஓவியம். அனைவரின் கண்களும் ஒரு நிமிடம் அதிகமாகவே அந்த ஓவியத்தை உற்று நோக்கிக் கோண்டிருக்க அவளோ சாதாரணமாகவே இருந்தாள்.

அன்றும் நிறைய ஓவியங்கள் இருக்க, இறுதியாக பத்து ஓவியங்கள் சிறப்பானதாக தேர்வு செய்யப்பட்டது. சந்திரிகா, திவ்யாவின் ஓவியங்களையும் உள்ளடக்கி. பத்து பேருக்கும் பிரைஸ் குடுக்க போறாங்களா? என கூட்டத்தில் சலசலப்பு எழ, அதை கேட்ட திவ்யா எப்படியோ தானும் ஜெயித்தாள் போதும் என்ற மனநிலைக்கு வந்தே விட்டாள்.

ஆனால் அப்போது நடுவர் குழு அந்த அறிவிப்பினை வெளியிட்டது. அவர்களில் ஒருவர் மேடையில் ஏறி நின்று, “வணக்கம் மாணவ செல்வங்களே. நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்து இந்த கண்காட்சியை வெற்றி பெற செய்திருக்கிறீர்கள்.

ஆனால் சிறந்த படைப்பை தேர்வு செய்வதில் எங்களுக்கு குழப்பமே நிலவுகிறது. இந்த பத்து படைப்புகளும் சிறப்பாக அமைந்துள்ளதால் படைப்பாளிகளின் திறமையை அடிப்படையாக கொண்டே முடிவுகள் அறிவிக்கப்படும். அதற்காக இந்த பத்து ஓவியங்களை படைத்த படைப்பாளிகள் அனைவரும் இதே இடத்தில் ஒரு ஓவியத்தை வரைந்து சமர்பிக்க வேண்டும்.

அதனையும் பார்வையிட்ட பின்பே முடிவுகள் வெளியிடப்படும். அரை மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டு சற்று நேரத்தில் போட்டி தொடங்கும்என்றதும் மாணவமணிகள் பலரும் உற்சாக கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் அனைத்திற்கும் மாறாக திவ்யாவிற்கு அதிர்ச்சியில் முகம் சிவக்க தடுமாறி தனியே நின்று கொண்டிருந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *