359 views

        கல்லூரி தொடங்கிய நான்கு மாதங்களிலே சந்திரிகா ஓரளவு கல்லூரியில் பிரபலமாகி விட்டாள். சாதாரணமாகவே நன்கு படிக்க கூடியவள் அவள். அவள் எழுப்பும் சந்தேகங்கள் ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு அவளை பிடிக்கவும் வைத்தது. அதேபோல் மாணவர்கள் மத்தியிலும், கள்ளமில்லாமல் பழகும் அவளது குணம் அனைவரையும் நண்பர்களாக்கியிருந்தது.

ஆனால் தனது வீட்டை பற்றிய விவரம் மட்டும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டாள். தன்னுடன் ஒரு நான்கு பேர் நட்பாக பழகினாலும் அது தனக்கான நட்பாக இருக்க வேண்டும் என்பது அவளது எண்ணம். இந்த நிலையில் தான் அவர்களது கல்லூரியில் ஒரு ஓவிய கண்காட்சி நடைபெறுவதாக இருந்தது.

ஆர்க் மாணவர்கள் அனைவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விதிப்படி அனைவரும் தங்களது கற்பனை திறனை தீட்டி தங்களது படைப்பினை செதுக்கி கொண்டிருந்தனர். அன்று காலையிலே நேரமாக கல்லூரி வந்தவள் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்க, அவளருகில் வந்தாள் அவளது வகுப்புத் தோழி திவ்யா.

திவ்யாவும் பணக்கார வீட்டை சேர்ந்தவள் தான். ஆனால் அவளுக்கு படிப்பின் மீது அவ்வளவு நாட்டமில்லை. ஒரு கவுரவத்திற்காக படிக்கிறாள் அவ்வளவே. திவ்யா அருகே வரவும், “என்ன திவ்யா. இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கஎனக் கேட்டாள் சந்திரிகா. “நீயும்தான் சீக்கிரமே வந்துட்ட.” என்ற திவ்யா, அதற்கு பதில் சொல்ல வந்த சந்திரிகாவை பேச விடாமல் தானே தொடர்ந்தாள்.

அதை விடு எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனுமே.” எனக் கேட்க,ம்ம். சொல்லு ஏதாவது நோட்ஸ் வேணுமாஎன சந்திரிகா கேட்க, அதெல்லாம் இல்ல. காம்படிஷனுக்கு கண்டிப்பா எல்லாரும் கலந்துக்கனும்னு சொல்லிட்டாங்க. பட் எனக்கு இந்த வரையறதுலாம் வராது..

நீதான் நல்லா டிராயிங் பண்ணுவன்னு கேள்விப்பட்டேன். அதான் எனக்கும் வரைஞ்சு தரணும். உனக்கு எவ்ளோ பணம் வேணும்னாலும் தரேன்என்றாள் சந்திரிகாவை பற்றி அறியாமல். சந்திரிகாவோ புன்னகை மாறாமல், “நான் அவ்ளோ நல்லாலாம் வரைவனானு தெரியல. அதவிட இது ஒரு காம்படிஷன். நம்ப திறமையை வளர்க்கதான் நடத்தறாங்கநான் வரைஞ்சு குடுத்து நீ மட்டும் கலந்துகிட்டா கூட பரவாயில்ல.

ஆனா நானும் கலந்துகிட்டாகனும். ஒருவேளை உனக்கு தரத விட என்னோடது நல்லா இருக்குனு யாராவது சொல்லிட்டா. நான் வேணும்னே உனக்கு சரியா பண்ணி குடுக்கலன்னு தோணும். அதனால நீயே டிரை பண்ணி பாரு. அப்பறம் காம்படிஷன்ல கலந்துக்க தான் ஆசையே தவிர பணத்துக்கு ஆசைப்படறவ நான் இல்லை. புரியுதா?என கடைசி வரியை அழுத்தமாக கூறியவள் அங்கிருந்து எழுந்து சென்றாள். வழக்கம் போல அவள் பின்னால் யார் நிற்கின்றார்கள் என்பதை அறியாமலே.

ஆனால் அவள் சொன்னதை சரியாக தவறாக புரிந்து கொண்ட திவ்யாவோ, அவள் மீது கோபம் கொண்டு, ‘எனக்கா வரைஞ்சு தர மாட்டேனு சொன்ன, எவ்ளோ செலவு பண்ணியாச்சும் உன்ன ஜெயிக்க விட மாட்டேன்என எண்ணிக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

அந்த கண்காட்சிக்கு முன்பாகவே அவர்களது பல்கலையில் ஸ்போர்ட்ஸ் மீட் நடக்க, அனைத்து கல்லூரி மாணவமணிகளும் கலந்து கொள்ளும் திருவிழா போல நடந்து கொண்டிருந்தது. அதனால் வகுப்புகள் பெரிதாக நடைபெறாமல் இருக்க, நூலகம் செல்லலாம் என தனது தோழி சுகன்யாவோடு சென்று கொண்டிருந்தாள் சந்திரிகா.

அப்போது எதிரில் வந்த அன்பும், எழிலும், “எங்கம்மா இந்த பக்கம்?” எனக் கேட்க, “கிளாஸ் இல்லன்னா. அதான் லைப்ரரி போலாம்னு.” என்றாள் சந்திரிகா. “அதுக்கு லைப்ரரிதான் போகனுமா என்ன?” என கேட்ட எழில், “என்னோட வாங்க.” என அழைத்தான்.

எங்கன்னா கேண்டீன்கா?” என சந்திரிகா கேட்க,எப்ப பார்த்தாலும் சாப்பிடறதுலயே இரு. அங்கல்ல. கிரவுண்ட்க்கு போலாம்என அழைத்தான் அன்பு. “இல்லன்னா எனக்கு ஸ்போர்ட்ஸ்ல அவ்வளவா இண்ட்ரஸ்ட் இல்ல. நீங்க போய்ட்டு வாங்கஎன பதில் கொடுத்தாள் சந்திரிகா.

அட வாப்பா. இன்னைக்கு எங்க டிபார்ட்மெண்ட் ஸ்டூடண்ட்ஸ் மேட்ச். எங்களுக்காக வா. கண்டிப்பா உனக்கு பிடிக்கும்.” என வற்புறுத்தி அழைக்க, “என்ன மேட்ச்?” என சுகன்யா தயங்கிபடி கேட்க, அப்போதுதான் அவளும் அங்கிருப்பதை உணர்ந்த சந்திரிகா தனது தவறை உணர்ந்து அவர்களுக்கு அவளையும் அறிமுகப்படுத்தினாள்.

பிறகு எழில்ஃபுட் பால் மேட்ச்.” எனவும், “ஹே அப்பன்னா போலாம்டி. எனக்கு ஃபுட்பால்னா ரொம்ப பிடிக்கும்.” என சுகன்யா கூற, அதன்பின்பு மறுக்காமல் அவர்களோடு சென்றாள் சந்திரிகா. அங்கே சென்ற போது மேட்ச் இன்னும் தொடங்காமல் இருக்க, அங்கே சில தின்பண்டங்களோடு அமர்ந்திருந்தான் ஆதவ்.

அவனை கண்டதும், “ஆமா. உதய்யண்ணா எங்க காணோம்.” என சந்திரிகா கேட்க, “இப்ப வந்திருவான் நீ உட்காருஎன எழில் கூற, அனைவரும் அமர்ந்து நொறுக்கு தீனிகளை காலி செய்ய அப்போது மைதானத்தில் தோன்றினான் உதய்.

ஹேய். அங்க இருக்கறது உதய் அண்ணாதானே. அவங்க ஃபுட்பால் விளையாடுவாங்களா!!” என உற்சாகமாக சந்திரிகா கேட்க, “ஆமா, அதுக்குதான் உன்னை கூட்டிட்டு வந்தோம். இன்னைக்கு கண்டிப்பா நம்ப டீம் தான் ஜெயிக்கும் பாரு.” என்றான் அன்பு.

. அவ்ளோ நல்லா விளையாடுவாங்களா. இருந்தாலும் ஒருத்தர் நல்லா விளையாடுனா டீம் எப்படி ஜெயிக்கும்? ஓவர் கான்பிடன்ஸ்னா.” என்றாள் சந்திரிகா.” அதுக்கு வேற ரீசன் இருக்கு. பொறுத்திருந்து பார்.” என்றான் எழில்.

அதன் காரணம் மேட்ச் தொடங்கியதும் அவளுக்கு புரிந்தது. அந்த அணியில் ஒருவர் அனைவரையும் வழிநடத்த, மற்ற அனைவரும் அவனது குறிப்புகளை பின்பற்றி, அனைவரும் இணைந்து ஆடியதில் பாதி மேட்ச் நடக்கும் போதே வெற்றியின் தராசு அவர்கள் பக்கம் சாய்ந்திருந்தது.

யார்ன்னா அது. ரொம்ப சூப்பரா விளையாடுறதோட டீமையும் அழகா லீட் பண்றாங்கஎனக் கேட்டாள் சந்திரிகா. “ம்ம். அவன்தான் சத்யா. பெஸ்ட் புட்பால் பிளேயர். யுஜி படிக்கும்போதே. ஸ்டேட் லெவல் ரெக்கார்ட் வைச்சிருந்தானாம். இப்ப பிஜி கூட மெரிட்ல தான் ஜாயின் பண்ணிருக்கான்.

படிப்புலயும் சரி, விளையாட்டுலயும் சரி. ஏன் கவிதை மாதிரி கல்ச்சுரல் ஆக்ட்டிவிட்டில்லயும் செமையா ஸ்கோர் பண்ணுவான்என அவள் கேட்காத தகவல்களையும் அவளிடம் கூறிக் கொண்டிருந்தான் எழில். அப்போது அவளுக்கு அன்றைக்கு கவிதை வாசித்ததும் ஒரு முதல்வருட எம்.பி. மாணவன் என தனது அண்ணன் கூறியது நினைவிற்கு வந்தது.

உடனே எழிலிடம், “அப்ப அன்னைக்கு மேடையில பாரதியார் கவிதை வாசிச்சது இவர்தானா!!” என ஆச்சர்யமாக கேட்டாள் சந்திரிகா. “சாட்சாத் இவனே தான்.” என எழில் கூற, அவள் கண்கள் சத்யாவிடம் சென்று நின்றது. அதற்குள் மேட்ச் முடிந்திருக்க சத்யாவின் அணியே வெற்றி பெற்றிருந்தனர்.

அது அரையிறுதி ஆட்டம் என்பதால் இறுதி போட்டி நாளை மறுநாள் இதே நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு வந்த உதய் தன் கூடவே சத்யாவையும் அழைத்து வந்திருந்தான்.

உதய்யும், சத்யாவும் சிறு வயதில் இருந்தே தோழர்கள். அதன்பிறகு இளங்கலை படிக்கும்போது உதய்க்கு கிடைத்த தோழர்கள்தான் மற்ற மூவரும். இளங்கலை படிப்பினை உதய்யும், சத்யாவும் வேறு வேறு கல்லூரியில் படிக்க வேண்டி இருக்க, அதன்பிறகு முதுநிலைக்கு அனைவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்தனர்.

உதய் அனைவரிடமும் கலகலப்பாக பழக கூடியவன். ஆனால் சத்யா தானுண்டு தன் பணியுண்டு என இருப்பவன். அதனால்தான் இவர்கள் நால்வரும் ஒரு இடத்தில் இருந்தால் சத்யா வேறு ஏதாவது ஒரு வேலையில் இருப்பான். அதனால் சந்திரிகாவையும் அவனுக்கு அறிமுகம் செய்ய முடியாமல் போனது.

இருவரும் அங்கு வர,மச்சான். கலக்கிட்டடாஎன சத்யாவை பார்த்தும், “பங்கு நீயும்தான்டாஎன உதய்யை கட்டிப்பிடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் நண்பர்கள் அனைவரும்.

பிறகு சந்திரிகாவை காட்டிய உதய், “மச்சி நான் சொன்னேன்ல. இவதான் சந்திரிகாஎன அவளை சத்யாவிடம் அறிமுகப்படுத்த, அவளும், “ஹாய். நான் சூர்ய சந்திரிகா.” என்க, சத்யாவும் ஆம் சத்யேந்திரன்என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அதுவரை அமைதியாக சத்யாவையே பார்த்துக் கொண்டிருந்த சுகன்யா, அவளையும் சத்யாவிடம் அறிமுகப்படுத்தியதும், “ஹாய் சார்நான் சுகன்யா. சூப்பரா விளையாடினீங்க இன்னைக்கு. ஆக்ச்சுவலி நான் தீவிர புட்பால் ஃபேன். இன்னைல இருந்து உங்க ஃபேனும் ஆகிட்டேன்.” என அவன் கைகளை பற்றிக் கொண்டு பேசிக் கொண்டே சென்றாள்.

சத்யா அமைதியாகவேதேங்க்ஸ்என்றபடி கைகளை உருவிக் கொள்ள, சற்றே சங்கடமாக உணர்ந்த சந்திரிகா அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அவளையும் கூட்டிக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

அங்கிருந்து கிளம்பிய பின்பும் சுகன்யா சத்யாவின் புராணமே பாடிக் கொண்டு வர, கடுப்பான சந்திரிகா, “ஹேய். போதும் நிறுத்துடி. ரொம்ப ஓவரா போற. என்ன இப்ப உனக்கு.” என்க, “நீ ஏன் சந்து கடுப்பாகற. உனக்கு அவரை பிடிக்கலயா?” என பாவமாக கேட்டாள் சுகன்யா.

என்னடி கேள்வி இது. இன்னைக்கு தான் அவரை பார்த்தோம். பிடிக்கலயானு கேட்கற. யாராவது கேட்டா தப்பா நினைக்க போறாங்க.” என்றாள் சந்திரிகா. “சீ சீ நான் அப்படி சொல்லலடி. ஆள் பார்க்க ஹேண்ஸமா இருக்காரு. உன் அண்ணாஸ் வேற. அவர் அப்படி இப்படினு பெருமையா சொன்னாங்க. அதுக்கு தான் கேட்டேன்.

மத்தபடி நான் எதுவும் தப்பா சொல்லல. அவர் விளையாடுற ஸ்டைல்தான் பிடிச்சிருக்குனு சொன்னேன். அவரை பிடிச்சு கல்யாணம் பண்ணிக்க போறேனா சொன்னேன். சரி விடு இனிமே அவரை பத்தி பேசல சரியா.” என சுகன்யா கேட்க, அதன்பின்புதான் ஏனோ சந்திரிகாவின் மனதில் ஒரு இதம் பரவியது.

ஆனால் அதை அறியாத சந்திரிகா ‘அவரை பற்றி எண்ணம் நமக்கு எதற்குஎன மனதில் நினைத்தவள், அதே எண்ணத்தோடு வீட்டிற்கு சென்று விட்டாள். ஆனால் இரு நாட்கள் கழித்து நடந்த இறுதிப்போட்டிக்கு யாரும் அழைக்காமலே முதல் ஆளாக சென்று மைதானத்தில் அமர்ந்திருந்தாள் சந்திரிகா.

அவளை ஆச்சர்யமாக பார்த்தபடி. அங்கு வந்த அன்பு, எழில், ஆதவ் மூவரும், “எப்ப வந்த சந்திரிகா. இவ்ளோ சீக்கிரம் ஆஜராகியிருக்க.” என இயல்பாகவே கேட்டனர். “அதெல்லாம் ஒன்னுமில்லன்னா. இப்பதான் வந்தேன். ரொம்ப போரடிச்சது. சரி நீங்கள்ளாம் இங்கதானே இருப்பீங்க. அதான்என ஏதோ பதில் கூறி மழுப்பினாள்.

அதன்பிறகு போட்டி தொடங்க அன்றைக்கு விட இன்று மிகவும் ரசித்து பார்த்தாள். இறுதியில் எதிர்பார்த்தபடி சத்யாவின் அணியே வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்க தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத எதிர் அணியின் கேப்டன் சத்யாவின் காலை நசுக்கி விட்டான்.

அப்போதும் வலியை தாங்கியபடியே விளையாடியவன் வெற்றி பெற்றதை அறிவித்ததும் மயங்கி விழுந்தான். சாதாரணமாக அவன் காலை மிதித்தது வலிக்கிறது என நினைத்து தான் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

ஆனால் அவனோ முட்கள் நிறைந்த ஷூ கொண்டு காலை மிதித்திருக்க, காயம் ஆழமாக பட்டதில் இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. அதோடு விளையாடியதில் சோர்வடைந்து தான் மயங்கி விழுந்திருந்தான்.

அவன் விழுந்ததும் அனைவரும் அவனை நோக்கி ஓட, சந்திரிகா திடீரென எதிர்பாராத நிகழ்வு நடந்து விட்டதில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *