764 views

 

       சஞ்சனா தனது காதலை பற்றி கேட்டதும் அதிர்ந்து எழுந்த சந்திரிகா, அதே வேகத்தோடு கீழே இறங்கி தனது அறைக்குள் சென்று கதவை சாத்தினாள். ஆனால் அவள் கதவை மூடும் முன்னே தானும் அறையில் நுழைந்திருந்தாள் சஞ்சனா. “நீ போய் தூங்கு. சஞ்சனா. அப்பறம் பேசிக்கலாம்என்றாள் சந்திரிகா தன்மையாகவே.

நீ ஏன் அதை பத்தி எப்ப பேசுனாலும் அவாய்ட் பண்ணிட்டே இருக்க. என்கிட்ட சொல்லக் கூடாதா?” எனக் சஞ்சனா கேட்க, அதை தெரிஞ்சிட்டு என்ன பண்ண போற? போய் வேலையை பாரு.” என்க, “அதெல்லாம் முடியாது நீ சொல்லிதான் ஆகனும்.” என சஞ்சனா பிடிவாதமாக இருக்க, வேறு வழியில்லாமல் சொல்ல ஆரம்பித்தாள்.

         “அம்மா நான் ரெடி ஆகிட்டேன்.” என குதூகலத்துடன் சொல்லிக் கொண்டே படி இறங்கி வரும் தன் மகளை ஆசையாக பார்த்தார் மல்லிகா. இன்று சந்திரிகாவிற்கு கல்லூரி முதல் நாள். அவள் கிளம்பி வருவதற்குள் அவளுக்கு பிடித்த உணவுகள் உணவு மேஜையை அலங்கரித்தன.

அவளது சத்தம் கேட்டதும் பாட்டி தட்டில் உணவு வகைகளை எடுத்து வைத்ததோடு டைனிங் ஹாலில் அமர வைத்து தானே ஊட்டி விடவும் செய்தார். அப்போது அங்கே ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டு இருந்த மூவரும் அதே ஆசையோடு அவள் சாப்பிடும் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.

திடிரென அவளுக்கு விக்கல் வர மூவரும் தண்ணீர் எடுத்துக் கொண்டு எழ, அனைவரையும் அடக்கியவள், “ஒன்னும் வேண்டாம். நீங்க நான் சாப்பிடறத பாத்து கண்ணு வைக்காதீங்கஎன செல்லமாக கோபித்துக் கொள்ள, “யார் நாங்க கண்ணு வச்சோமா?என கேட்டான் அவளது அண்ணன் சுரேந்திரன்.

ஆமா. பின்ன சாப்பிடறப்ப ஏன் என்னையே பாத்துட்டு இருங்கீங்க. சீக்கிரம் சாப்பிட்டு வாங்க. எனக்கு காலேஜ்க்கு நேரமாச்சுஎன்றாள் சந்திரிகா. “இதோ, அப்பா வந்துட்டேன்டா. நீ கார்ல வெயிட் பண்ணுஎன சக்கரவர்த்தி கூற, “அப்பா நீங்க பொறுமையா சாப்பிடுங்க. நானும் அதே காலேஜ்தான் போறேன். நான் கூட்டிட்டு போறேன்என எழுந்தான் சுரேந்திரன்.

டேய். பாத்து பத்திரமா கூட்டிட்டு போடா.” என அவளது தாத்தா சொல்ல, “கண்டிப்பா தாத்தாஎன்றவாறே முன்னே செல்ல, பெரியவர்களின் ஆசியை வாங்கியபடியே அவனது பின்னால் சென்றாள் சந்திரிகா.

டேய் அண்ணா, உங்க காலேஜ்ல ராக்கிங்லாம் பண்ணுவாங்களா?” என காரில் செல்லும்போது சந்திரிகா கேட்க, “நான் இருக்கும்போது உன்னை யாராவது ராக்கிங் பண்ணிடுவாங்களா? நான்தான் விட்டுருவனா?என அவன் கூற, “ம்ம். அதெல்லாம் நானே டீல் பண்ணிப்பேன். நீ தலையிடாத. குறிப்பா நான் உன் தங்கச்சின்னு யாருக்கும் தெரியவே கூடாது. அவ்ளோதான். சரியாஎன்றாள் சந்திரிகா.

அதெல்லாம் முடியாது. நான் இருந்தாதான் உனக்கு ஒரு சேஃப்.” என சுரேந்திரன் விளக்க முயல,அப்படி ஏதாவது பிரச்சனைன்னா, நானே உன்கிட்ட சொல்றேன். நான் கொஞ்சம் பிரீயா இருக்கனும். பிளீஸ்என தலைசாய்க்க, சிரித்தபடியே அதற்கு சரியென்றான்.

சென்னையின் தலைசிறந்த பல்கலைக்கழக கல்லூரியில் பி.டெக். ஆர்க்கிடெக்சர் முதலாம் ஆண்டு மாணவியாக புதிதாக சேர்ந்திருந்தாள் சந்திரிகா. அதே கல்லூரியில் எம்.பி.. கடைசி வருட படிப்பினை படித்துக் கொண்டிருந்தான் சுரேந்திரன்.

கேட்டிலே இறங்கி கொண்ட சந்திரிகா நடந்து தனது வகுப்பினை தேடி வந்துக் கொண்டிருக்க, நான்கு பேர் அவளை அருகில் அழைத்தனர். இவள் அருகில் வந்ததும், “உன் பேர் என்னஎனக் கேட்டான். அவர்களில் ஒருவன்.

இவளோ, “அண்ணா, நீங்க என்ன ராக்கிங் பண்ண போறீங்களா? ஏன் எப்ப பார்த்தாலும் பேர் கேட்டே ஸ்டார்ட் பண்றீங்க? உனக்கு என்ன ஸ்னாக்ஸ் பிடிக்கும். எந்த ஐஸ்கிரீம் பிளேவர் பிடிக்கும்? இப்படில்லாம் கேட்க மாட்டீங்களா?என திருப்பி கேட்டவள்,

அவர்கள் பதில் சொல்வதற்குள் இவளே தொடர்ந்து, “சரி நானே சொல்றேன். எனக்கு பக்கோடா ரொம்ப பிடிக்கும். அப்பறம் ஸ்டாபெர்ரி பிளேவர்ல ஐஸ்கிரீம். இதெல்லாம் நம்ம காலேஜ் கேண்டின்ல கிடைக்குமா? எனக்கு இப்பவே சாப்பிடனும் போல இருக்கு. வாங்கிட்டு வாங்க சீக்கிரம்.” என பேசிக் கொண்டே போக,

ஒருவன் இடைபுகுந்து,ஹேய். ஹேய் நிறுத்து. என்ன விட்டா பேசிட்டே போற. உன்ன ராக்கிங் பண்ணதான் நாங்க கூப்பிட்டோம்னு உனக்கு தெரியுமா? தனியா நடந்து வரவும் காலேஜ் தெரியாம தேடறீயோ, ஹெல்ப் பண்ணலாம்னு கூப்பிட்டா நீ ஏதோ உளறீட்டு இருக்க. போ, போ.” என அவளை அனுப்பி விட்டான் மற்றொருவன்.

அப்ப சாக்லேட்என இழுத்தவள், அவன் முறைத்ததில் அங்கிருந்து நகரவும், நண்பர்களில் ஒருவன், “நல்லவேளைடா. கரெக்டான டைம்ல சமாளிச்ச. இல்லன்னா இன்னைக்கு நம்ப பர்ஸ் காலியாகி இருக்கும். சரியான சாப்பாட்டு ராமியா இருப்பா போல” என புலம்ப சென்றவள் திரும்பி வந்து, “கரெக்டா சொன்னிங்கண்ணா. கேண்டீன் போலாமாஎனக் கேட்க இவர்கள் முழித்தனர்.

ஏதோ டிபார்ட்மெண்ட் போக ஹெல்ப் பண்றேனு சொன்னதால திரும்பி வந்தா என்கிட்டயே நடிச்சிருக்கிங்க.” என முறைக்க அசடு வழிந்தனர். பிறகு அவர்களிடம்ப்ரண்ட்ஸ்.” எனக் கேட்க, “ம்ம்.” எனவும்,சரி சரி. கேண்டீன் சாயங்காலம் போகலாம். என் டிபார்ட்மெண்ட்க்கு எப்படி போகனும்என வழி கேட்க அவர்களும் வழி சொல்லவும் கிளம்பி விட்டாள்.

ஆனால் இதனை இரு ஜோடி கண்கள் ஆவலாக பார்த்ததை பாவம் அவள் அறியவில்லை. அதன்பிறகு அன்றைய தினம் பெரிதாக கிளாஸ் எதுவும் நடக்காமல் அறிமுக படலத்தோடு முடிய வீட்டிற்கு கிளம்பினாள்.

கேட்டில் வந்து காரில் ஏறிக் கொண்டவள் அண்ணனிடம் பேசிக் கொண்டே வர அவன்,பரவாயில்ல சந்தும்மா. நல்லாவே சமாளிக்கற.” எனக் காலையில் நடந்ததை நினைவு கூற,நீ எப்ப பார்த்தண்ணா.” எனக்கேட்டாள். “நான் உன் பின்னாடிதான் வந்துட்டு இருந்தேன். ஏதாவது பிராப்ளம்னா வரலாம்னு பார்த்தேன். நீயோ அழகா சமாளிக்கவும் என் கிளாஸ்க்கு போயிட்டேன்.என்றான் சுரேந்திரன்.

நான் நாளைல இருந்து காலேஜ் பஸ்ல வரலாம்னு இருக்கேன். நீ என்ன நினைக்கற?” என சந்திரிகா கேட்க, “அதெல்லாம் முடியாது. ஒத்துக்கவே மாட்டேன். நான் வேணா இன்னைக்கு மாதிரி உன்ன கேட்லயே இறக்கி விட்றேன். உன் பின்னாடியும் வரல சரியாஎனப் பேசி அவளை சம்மதிக்க வைத்தான்.

இப்படியே ஒரு மாதம் கழிந்திருக்க, பல்கலைக்கழகம் என்பதால் அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் ஏதாவது ஒரு கல்லூரியில் நடந்து கொண்டே இருக்கும். அன்றைக்கும் எம்.பி. டிபார்ட்மெண்டில் கல்ச்சுரல் என்பதால் சுரேந்திரன் சந்திரிகாவை அழைத்தான்.

வகுப்பு இல்லாத இடைவெளியில் வருமாறு கூற இவளும் சில தோழிகளோடு சென்றிருந்தாள். இவள் அரங்கிற்குள் நுழையும் போதே, அவள் செவிகளை தீண்டியது அந்த வரிகளும், குரலும்.

சுட்டும் விழிச் சுடர் தான்

கண்ணம்மா சூரிய சந்திரரோ..!!!

வட்டக் கரிய விழி கண்ணம்மா 

வானக்கருமைகளோ..!!!

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் 

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ..!!!

சோலை மலரொளியோ

நினது சுந்தரப் புன்னகை தான்..!!!

நீலக் கடலலையே நினது

நெஞ்சின் அலைகளடீ..!!!

கோலக் குயிலோசை உனது

குரலின் இனிமையடீ..!!!

வாலைக் குமரியடீ கண்ணம்மா 

மருவக்காதல் கொண்டேன்..!!!

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா 

சாத்திரம் ஏதுக்கடீ..!!!

ஆத்திரம் கொண்டவர்க்கே

கண்ணம்மா சாத்திரமுண்டோடீ..!!

மூத்தவர் சம்மதியில் வதுவை

முறைகள் பின்பு செய்வோம்.

காத்திருப்பேனோடீ இது பார்

கன்னத்து முத்தமொன்று..!!!

என்ற பாரதியின் வரிகள் அவள் காதுகளுக்குள் செந்தேனாக பாய, அதை படித்தவரின் அந்த கம்பீரக்குரலோ அவள் இதயத்தில் பதிந்தது. மேடையில் இருந்தவனை பார்க்க அவளால் முடியவில்லை. ஆனால் அதே நினைவில் தனது அண்ணனிடம் பேசியவள், “அந்த கவிதை படிச்சது யாருண்ணா?” எனக் கேட்டாள்.

அது பேர் தெரியலம்மா. பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்னு நினைக்கறேன்.” என்றான். அதன்பிறகு வேறு பேச்சுக்கு தாவி விட பின்பு அதை பற்றி மறந்தும் போனாள். ஆனால் இரு நாட்கள் கழித்து, எப்போதும் இரவில் பாரதியார் பாடல்களை கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தாள் சந்திரிகா.

அன்றும் அது போல கேட்டுக் கொண்டிருக்க,சுட்டும் விழி சூடர்தான் கண்ணம்மா என பாடல் ஒலிக்க சடாரென அவளது நினைவு அவனிடம் சென்றது. பாடல் அது பாட்டுக்கு ஒலித்துக் கொண்டிருக்க, அவள் மனமோ அவன் அதை கம்பீரமாக சொன்ன விதத்திலே நின்றது. அதே நினைவில் உறங்கியும் போனாள்.

அடுத்த இரு வாரங்கள் கழித்து, ஒரு நாள் கேண்டினில் தனியாக சந்திரிகா அமர்ந்திருக்க, அவள் முன் ஒரு பக்கோடா தட்டும், ஸ்டாபெர்ரி ஐஸ்கிரீமும் வைக்கப்பட்டது. ‘நாம எதுமே ஆர்டர் பண்ணலயேஎன யோசித்தபடி நிமிர்ந்து பார்க்க முதல் நாள் அவளிடம் வம்பு செய்த நால்வரும் நின்றிருந்தனர்.

என்ன சிஸ்டர், எந்த கோட்டையை பிடிக்க இந்த யோசனைஎனக் கேட்டபடியே அவளை சுற்றி அமர்ந்தனர் அனைவரும். “அண்ணாஸ் நீங்களா!!” என ஆச்சர்யப்பட்டவள்,ஒன்னுமில்லண்ணா. சும்மாதான்என பதில் குடுத்தாள்.

உங்களை பத்தி சொல்லுங்கஎன சந்திரிகா கேட்டதும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள், “நான் அன்பு, இது ஆதவ். அப்பறம் உதய். அவன் எழில்என்றான் அன்பு. “நீங்க என்ன படிக்கறீங்கஎனக் கேட்டதற்கு, “நாங்கள்ளாம் எம்.பி.. பர்ஸ்ட் இயர்.” என்றான் உதய்.

என்னது பர்ஸ்ட் இயரா அப்பறம் ராக்கிங்லாம் பண்ணிங்க?” என சந்திரிகா கேட்க,உன்ன விட நாங்க சீனியர்தானே. காலேஜ்லயும் ஒன் மந்த் முன்னாடி வந்துட்டோமே அதான்என்றான் ஆதவ். பிறகு சற்று நேரம் பொதுப்படையாக பேசிக் கொண்டிருக்க எழில்,”ஏதாவது பிரச்சனையா? ஏதோ யோசனைல்ல இருந்த மாதிரி இருந்ததுஎனக் கேட்டான்.

இல்லன்னா, கொஞ்சம் ரெபரன்ஸ்க்கு புக்ஸ் வேணும். அதான் எங்க கிடைக்கும்னு, புதுசா வாங்கனுமான்னு யோசனைஎன்றாள் சந்திரிகா. “நம்ப சென்ட்ரல் லைப்ரரில்லயே மேக்ஸ்ஸிமம் புக்ஸ் கிடைக்குமே. அங்க பாத்தியாஎனக் கேட்டான் உதய்.

அந்த பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனியாக நூலகம் இருப்பினும் பொதுவான நூலகம் ஒன்றும் இருந்தது. அதில் அனைத்து துறை சார்ந்த புத்தகங்களும் இருக்கும். அதைத்தான் எழில் கூறினான்.”இல்லையே, அந்த நியாபகமே வரல. இப்ப திறந்திருக்குமாஎனக் கேட்டாள் சந்திரிகா.

ம்ம். இன்னும் அரை மணி நேரம் திறந்திருக்கும். ஆனா நீ உன் ஐடியை காட்டி இன்னைக்கு மெம்பர் ஆனாதான் நாளைல இருந்து புக்ஸ் எடுக்க முடியும்.” என எழில் கூற, “அப்ப இப்பவே போறேன்னா, பாய் அண்ணாஸ். நாளைக்கு இதே டைம். இங்கேயே பார்க்கலாம்என்றவள் வேகமாக அங்கிருந்து கிளம்பினாள்.

அதே வேகத்தோடு நூலகத்திற்கு வர அங்கு ஒருவன் வந்து கொண்டிருப்பதையே பார்க்காமல் அவன் மீது மோதினாள். அவன், அவள் கீழே விழாமல் தாங்கி பிடிக்க, அவனது முகத்தை பார்க்காமலே,”சாரி. கவனிக்கல.அண்ட் தேங்க்ஸ்என்றபடி உள்ளே சென்று விட்டாள்.

ஆனால் அவளது முகத்தை பார்த்த அவனோ, அவள் சென்ற பாதையையே இரு நிமிடங்கள் பார்த்திருந்து ஒரு புன்முறுவலோடு அங்கிருந்து அகன்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
3
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments