680 views

               

 

               “டேய். யார்டா நீங்கள்ளாம். எதுக்காக என்ன கட்டி போட்டு வச்சிருக்கிங்க. ஒழுங்கா அவுத்து விடுங்க. நான் போகனும்” என கத்திக் கொண்டிருந்தான் அவன். அவன் கூறியதை காதிலே வாங்காமல், அவன் அருகே வந்து சிரஞ்சில் கொஞ்சம் இரத்தத்தை எடுத்துக் கொண்டு சென்றான் மற்றொருவன்.

அந்த அறையில் அவனோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர் இருக்க, மற்றொருவன் “டேய் ஜீவா. நீயே போய் சாம்பிளை குடுத்துட்டு வா” எனவும் இரத்தத்தை எடுத்தவன் கிளம்பி விட்டான்.

“எங்கடா அவன் என் இரத்தத்தை எடுத்துட்டு போறான்” என கட்டப்பட்டு இருந்தவன் கேட்க, “ம்ம் உன் இரத்தத்துல ஏதோ புது ஹார்மோன் இருக்காம். டெஸ்ட் பாசிட்டிவ்னு வந்தா, மொத்த இரத்தத்தையும் எடுத்து சேல் பண்ணலாம்னு இருக்கோம். இல்லடா மாறா” என்றான் சஞ்சய். அவர்களில் ஒருவன்.

“என்னையா கிண்டல் பண்றிங்க. இப்ப விடப் போறீங்களா இல்லையா” என அவன் கத்தினான். அவன் தலையிலே இரண்டு தட்டு தட்டியவன் “வாயை மூடிட்டு பேசாம இருக்கனும். இல்லனா மயக்கம் போட வேண்டியிருக்கும்” என ஆதி என்பவன் மிரட்டிக் கொண்டிருக்க, சரியாக உள்ளே வந்தான் அசோகமித்திரன்.

“ஹேய் மித்ரா வந்தாச்சுடா” என அவனை கட்டிக் கொண்ட சதீஷ், “இவன் வேற இரிட்டேட் பண்றான்டா” என கட்டப்பட்டு இருந்தவனை கைகாட்டினான்.
அசோக்கை பார்த்ததும் மிரண்டு போய் முழித்தது ரகுதான். “என்ன சார். என்ன அடையாளம் தெரியுதா? நான்தான் ஏசிபி. அசோகமித்திரன் ஐ.பி.எஸ்” என்றான் மிடுக்காக.

“என்ன ஏன் இங்க கூட்டிட்டு வந்திருக்கிங்க” என ரகு கேட்க, “பயப்படாத. உன்னை ஒன்னுமே பண்ண மாட்டோம். அன்னைக்கு நீ அந்த பொண்ணுக்கு குடுத்த சாக்லேட் ஆளுக்கு ஒன்னு குடுத்தா விட்றலாம்” என்றவன் தனது சகாக்களிடம் திரும்பி “என்னடா ஓகே வா” என்றான்.

அந்த அறையில் இருந்த மற்ற நால்வரும் அசோக்கின் கல்லூரி தோழர்கள். படித்து முடித்து வேறு பணிகளில் இருந்தாலும் அவர்களில் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வர்.

இந்த முறை அனைவருமே சென்னையில் இருந்ததால் எல்லாரும் இணைந்து அசோக் சொன்ன ரகுவை கடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். “சரி குடு சாக்லேட்” என சஞ்சய் கேட்க, “அதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. நீங்க எதைப் பத்தி கேட்கறீங்க” என தெரியாத மாதிரியே கேட்க, அவன் மூக்கிலே ஒரு குத்து விட்டான் ஆதி.

“நான் சாதாரணமாதான் சாக்லேட் குடுத்தேன். இதுக்கெல்லாமா அரெஸ்ட் பண்ணுவீங்க. ஆமா என்னை ஸ்டேஷன் கூட்டிட்டு போகாம இங்க ஏன் வைச்சிருக்கிங்க?” எனக் கேட்டான் ரகு. மீண்டும் மீண்டும் அவன் இதே பதிலை கூற, அசோக் கடுப்பானான். அதே நேரம் அவனது செல்பேசி இசைத்தது.

விஷயத்தை உள்வாங்கியவன் சற்று அதிர்ந்து ஃபோனை வைத்தான். “என்னாச்சுடா” என சதீஷ் கேட்க, “டெஸ்ட் நெகட்டிவ்டா” என பதில் கொடுத்தான் அசோக். ரகசியமாக விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும் என நினைத்தவன் முதலில் தனது நண்பர்களிடம் கூறி ரகுவை கடத்த வைத்தான்.

பிறகு அவனது இரத்த மாதிரி மற்றும் அந்த சிறுமியின் இரத்த மாதிரிகள் கொண்டு அட்வான்ஸ் டெக்னாலஜியில் வன்புணர்வு செய்தது இவன்தானா என செக் செய்து அதன்பிறகு லீகலாக ஆக்ஷன் எடுத்தால் தப்ப முடியாது என்பது அசோக்கின் எண்ணம்.

ஆனால் இப்போது நெகட்டிவ் என வர என்ன செய்வதென்று தெரியாமல் தொடங்கிய இடத்திலே நின்றது போல இருந்தது அவனுக்கு. அப்போது ரகுவை அனுப்பி விடலாம் என நினைத்து கட்டை அவிழ்க்க சொல்ல அப்போது திடீரென ஆதிக்கு அந்த சந்தேகம் தோன்றியது.

“ஒரு நிமிஷம் இருங்க. எனக்கு ஒரு டவுட். இப்ப இவன் பண்ணலன்னாலும் கடைசியா பவித்ரா பார்த்தது. இவனைதானே! இவன் சாக்லேட் குடுத்ததும் அவ மயங்கிட்டா. அப்ப இவனுக்கு எதுவுமே தெரியாமலா இருந்திருக்கும்” என ஆதி கேட்க, மற்றவர்களுக்கும் அது சரியென பட்டது.

ரகுவிடம் சென்ற அசோக், “இங்க பாரு நீ தப்பு பண்ணலன்னு தெரியுது. ஆனா நடந்த உண்மையை சொல்லிட்டன்னா இங்கிருந்து உயிரோட போவ. இல்லைன்னா அவ்ளோதான்” என மிரட்டினான்.

அவன் பதில் கூறாமல் இருக்க, “உனக்கு நாளைக்கு ஈவ்னிங் வரைதான் டைம்” என்று அவனிடம் கூறியவன், நண்பர்களிடம் அவனை விசாரிக்க சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

               அன்று காலையிலே பாந்தமாக புடவை கட்டி, மேட்சாக அணிகலன் அணிந்து, மெலிதான ஒப்பனையுடன், சிரித்த முகத்தோடு இறங்கி வந்தாள் சந்திரிகா.

வீட்டில் இருந்த அனைவரின் கண்களும் அதை கண்டு மகிழ, அவளது அண்ணி கீர்த்தியிடம், “அண்ணி. கொஞ்சம் பூ வச்சு விடுறீங்களா?” எனக் கேட்க, அவளுக்கோ மயக்கம் வராத குறைதான். பின்பு ‘வாராத வந்த மாமணி’ போல சந்திரிகாவே அதுவும் சிரித்து பேசினால் பாவம் கீர்த்தி என்ன செய்வாள்.

ஓடிச்சென்று சரமாக தொடுத்து வைத்திருந்த மல்லிகை பூவை எடுத்து வந்து அழகாக வைத்து விட்டாள். நடந்த எந்த தவறுக்கும் கீர்த்தி பொறுப்பாக மாட்டாள் என்பதை அறியாமல் இல்லை சந்திரிகா. அது மட்டுமில்லாமல் சந்திரிகாவின் நெருங்கிய தோழியும் கூட.

ஆனால் வீட்டில் யாருடனும் பேசக் கூடாது என முடிவெடுத்தப்பின் அவளிடம் மட்டும் பேச முடியாது என்றே இத்தனை நாட்கள் தவிர்த்து வந்தாள். இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் நேற்று தனது அண்ணனும், அண்ணியும் பேசுவதை கேட்க நேர்ந்தது தான். அது நினைவிற்கு வந்தது அவளுக்கு.

பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி. அவளருகில் வந்த அவளது கணவன் “இன்னையோட ஏழு நாள் ஆச்சு. நீ என்கிட்ட பேசி, எப்பதான் பேசுவ?” எனக் கேட்டான்.

“நான் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டேன். இவ்வளவு நாள் அந்த பையன் எங்க இருக்கானு தெரியலன்னு சமாளிச்சிங்க. இப்பதான் தெரியும்ல. போய் பேசி ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிற வழியை பாருங்க. அதுக்கப்பறம் உங்ககிட்ட பேசறதை பத்தி யோசிக்கிறேன்” என்றாள் கீர்த்தி.

சென்ற வாரம்தான் சத்யாதான் கலெக்டர் என்பது தெரிய வந்தது அவளுக்கு அவளது தந்தை மூலம். அதன்பிறகே கணவனிடம் அதை தெரியப்படுத்தினாள். சாதாரணமாக சொன்னால் கேட்க மாட்டானோ என நினைத்து இந்த வழியை தேர்ந்தெடுத்தாள்.

நனவுக்கு வந்தவள், இனிமேல் அதற்கு வாய்ப்பில்லை என கீர்த்தியிடம் தெளிவாக கூறிவிட வேண்டும் என நினைத்தவள் விடைபெற்று வெளியில் வந்தாள். அதற்குள் தரணியும் கிளம்பி வர, இருவரும் நேராக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

ஏற்கனவே சத்யா சொல்லியிருந்தபடி, மூன்று விதங்களில் கொட்டேஷன்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க ஏலம் தொடங்கியது. மொத்தமாக மூன்று கம்பெனிகள் தேர்வு செய்யப்பட்டிருக்க, மிகவும் குறைவான மதிப்பை குடுத்திருந்தது சந்திரிகாவின் கம்பெனியே.

என்றும் இல்லாத வகையில் இன்று சத்யாவின் முகம் கூட சற்று பொலிவாக இருப்பது போல அலுவலகத்தில் இருப்பவர்களுக்கே தோன்றியது. மற்றவர்கள் ஏலம் சம்பந்தப்பட்ட பார்மாலிட்டஸை முடித்துக் கொண்டிருக்க, சந்திரிகாவின் கண்களோ தன்னவனை தான் அளவெடுத்துக் கொண்டிருந்தது.
யாரும் பார்க்காதபோது சத்யாவின் கண்களும் சந்திரிகாவைதான் நோட்டமிட்டுக் கொண்டிருந்ததோ!!!

ஒருவழியாக அனைத்து பணிகளும் முடிய, சட்டென சத்யா தனது உதவியாளரிடம், செலக்ட் ஆன கம்பெனிகளை சார்ந்தவர்களை தனித்தனியா தனது அறைக்கு வரச் சொன்னான். முதலிரண்டு கம்பெனி முதலாளிகள் போன வேகத்தில் திரும்ப, இறுதியாக உள்ளே நுழைந்தனர் சந்திரிகாவும், தரணியும்.

அதற்கெனவே காத்திருந்தார் போல, உள்ளே நுழைந்தவுடன் சந்திரிகா, தரணியிடம்,”என்ன தரணி, யாரோ நாமல்லாம் புராஜக்ட் எடுக்க மாட்டோம்னு சொன்ன மாதிரி இருந்ததில்ல” என்றாள்.

அதை கேட்ட சத்யா, “அதுக்குத்தான் நானும் கூப்பிட்டேன். புராஜக்ட் எடுக்கறத விட முக்கியமானது. அதை வெற்றிகரமா கம்ப்ளீட் பண்றது. ஏதாவது பிரச்சனைனு பாதியிலேயே விட்டுட்டு போய்ட கூடாதில்ல. ஏன்னா பாதியில விடறது உங்களுக்கு ஒன்னும் புதுசில்லையே” என்றான் குத்தலாக.

சந்திரிகா, அவன் கூற்றில் முகம் வெளுத்து அமைதியாக மாறாக தரணியோ, “வாட் யூ மீன் சத்யா சார்” எனக் கேட்டான். “நத்திங். பாரின் ஒர்க்கை பாதில விட்டுட்டு தானே இங்க வந்து பிஸினஸ் பண்றாங்க. அதை சொன்னேன்” என்றான் சத்யா.

“நோ சார். இந்த புராஜக்டை பாதில விட மாட்டேன்” என்றாள் சந்திரிகா. நேராக சத்யாவை பார்த்து. “சந்தோஷம்” என்றான் சத்யா ஒரு வார்த்தையில். பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்றதும் சத்யா, குத்தாட்டம் போட்ட தன் மனதை அடக்க வழி தெரியாமல் நீண்ட நேரம் சிரித்தவாறே இருந்ததை அவர்கள் அறிய வாய்ப்பில்லை தானே.

              மறுநாள் மாலையில் ரகுவை அடைத்து வைத்திருந்த குடோனுக்கு வந்தான் அசோக். அதற்குள் அவனது நண்பர்கள் ரகுவிற்கு கொடுத்த டிரீட்மெண்டில் எப்போது கேட்டாலும் உண்மையை ஒத்துக் கொள்ளும் அளவிற்கு மாறி இருந்தான்.

அசோக் வந்ததும் “சார் நான் எல்லா உண்மையும் சொல்லிடுறேன். என்னை விட்டுங்க ப்ளீஸ். அப்பறம் அந்த வீடியோவை டெலிட் பண்ண சொல்லுங்க” என கதறினான் ரகு.

“அப்படி என்னடா பண்ணீங்க?” என அசோக் கேட்க, “ஒன்னுமில்லை மச்சி. ஒரே ஒரு நியூட் வீடியோதான். அப்பறம் அதை கொஞ்சம் எடிட்டிங் பண்ணிருக்கேன்.” என வீடியோவை காட்டினான் சஞ்சய்.

ஒரு பெண்ணிடம் தவறாக நடந்தது போல அப்படியே எடிட்டிங் செய்யப்பட்டிருந்தது அந்த வீடியோவில் “இதை மட்டும் இவன் லவ் பண்ற பொண்ணுக்கு அனுப்பிடவா” என சஞ்சய் கேட்க. “வேணாம் சார்.” என கெஞ்சினான் ரகு.

“ஏண்டா நாயே. உனக்கு இருக்கறது மானம். அதே பொண்ணுங்களுக்கு பண்ணா என்ஜாய்மெண்ட்டா” என அவன் வயிற்றிலே உதைத்தான் ஜீவா. அதன்பிறகு அவன் நடந்ததை கூற. அதைக் கேட்ட அனைவருமே அதிர்ச்சிக்கு உள்ளாதோடு அவனை கொன்றுவிடும் வெறியோடு அவனை முறைத்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *