668 views

 

அசோக்கிற்கு அழைப்பு வந்ததில் பாதியிலே மீட்டிங்கை விட்டு விட்டு வெளியேறினான். அழைத்தது வேறு யாருமல்ல சஞ்சனாவேதான். பவித்ராவிற்கு தொடர்ந்து அளித்த சிகிச்சை பயன்தர தற்போது உடல்நிலை நன்றாகவே தேறி இருந்தது. மனதளவிலும் தேறி வருவதால் அன்றைய நிகழ்வினை பற்றி அறிய முயலலாம் என நினைத்தாள் சஞ்சனா.

ஆனால் அவளே எதிர்பாராத விதமாக, அந்த நிகழ்வினை பற்றிய கவுன்சிலிங்கிலும் நல்ல ஒத்துழைப்பு வர அசோக்கும் உடனிருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துதான் அவனை வரச் சொன்னாள். அசோக் வந்ததும், அவனை மறைவாக இருக்க சொல்லி தனது கேள்விகளை ஆரம்பித்தாள் சஞ்சனா.

“ஹாய் டியர், எப்படி இருக்கிங்க.” என்றபடி குழந்தையிடம் ஒரு ஐஸ்கிரீமை நீட்ட அவள், “ஐ எனக்கு பிடிச்ச பட்டர் ஸ்காட்ச். நீங்க ரொம்ப ஸ்வீட் ஆன்ட்டி” என்றாள். “ஓகே டியர். உங்களுக்கு அடி பட்ட அன்னைக்கு நீங்க ஹால்லதானே டிவி பாத்துட்டு இருந்தீங்க. அப்பறம் ஏன் வெளில போனீங்க. விளையாடவா” எனக் கேட்க, “இல்ல ஆன்ட்டி ரகு அங்கிள்தான் என்ன கூப்டாங்க. அதான் போனேன்.” என்றாள் பவித்ரா.

“அவங்க யாரு” என சஞ்சனா கேட்க, பவித்ரா, “அவங்க எங்க பக்கத்து வீட்டு அங்கிள். நல்லா விளையாடுவாங்க. சாக்லேட்லாம் வாங்கி தருவாங்க” என்றாள். “ஓ சரி. அன்னைக்கு என்ன குடுத்தாங்க. வேற என்ன பண்ணிங்க” எனக் கேட்டாள் சஞ்சனா.

“அன்னைக்கும் சாக்லேட்தான் குடுத்தாங்க. ஆனா எப்பவும் மாதிரி இல்லாம வேற கலர்ல இருந்துச்சு. இது பாரீன் சாக்லேட்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அது சாப்டதும் தூக்கம் வந்திருச்சு. அப்பறம் எழுந்தப்ப நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். அம்மாதான் எனக்கு அடி பட்டிருச்சுனு சொன்னாங்க. நான் கீழே விழுந்துட்டனா?” என அப்பாவியாக கேட்க, வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.

பிறகு குழந்தையிடம் தூங்க சொல்லிவிட்டு தனது அறைக்கு வர அசோக்கும் வந்தான். “என்ன நடக்குது சஞ்சனா. எனக்கு ஒன்னுமே புரியல” என்க, “சொல்றேன் அசோக். ஆக்ச்சுவலி, நடந்த எதுவும் அந்த பொண்ணுக்கு நியாபகம் இல்லை. ஏன்னா எல்லாமே மயக்கத்துல இருந்தப்ப நடந்திருக்கு.

திடீருனு எனக்கு என்னாச்சுன்னு கேட்க, அவங்கம்மா, நீ கீழ விழுந்துட்ட. அடி பட்டுருச்சுனு சொல்லிருக்காங்க. அத அவ நம்பிட்டா அதான் அன்னைக்கு நடந்ததை பத்தி பேசறப்ப அவ டென்ஷன் ஆகல” என்றாள் சஞ்சனா.

அவள் பதிலில் சற்று நிம்மதியுற்றவன், “அப்படின்னா. அவ மென்டலா அஃபெக்ட் ஆக மாட்டால்ல.” எனக் கேட்க, அதற்குள் அவளது பெற்றோரும் உள்ளே வந்தனர். அவர்களையும் அமரச் சொன்னவள் அசோக்கிடம், “அப்படி சொல்ல முடியாது அசோக். ஏண்ணா அவளுக்கு இது நியாபகமே வராதுனு சொல்ல முடியாது.

என்னதான் மயக்கத்தில் இருந்தாலும் நமக்குள்ள நடக்கறத மூளை சேகரிக்கும். அது எப்ப வெளிப்படும்னு சொல்ல முடியாது. கனவு மாதிரி காட்டலாம். எக்ஸாம்பிள் டிவில அந்த மாதிரி இன்சிடென்ட் பத்தி பேசினா நினைவுக்கு வரலாம். அப்ப ரூடா பிகேவ் பண்ண சான்ஸ் இருக்கு” என்றாள் சஞ்சனா. “ஓகே.” என்றவன் பவித்ராவின் பெற்றோரிடம், “ரகுன்னா யாரு?” எனக் கேட்டான்.

அவளது தந்தை, “எங்க பக்கத்து வீட்டு பையன்தான் சார். ரொம்ப நல்ல பையன். நல்லா ஹெல்ப்லாம் பண்ணுவான்” என சொன்னார். “அவன் என்ன பண்றான். குழந்தை அடிக்கடி அங்க போவாளா? என்ற அசோக்கின் கேள்விக்கு, “படிச்சிட்டு வேலை தேடுறான் சார். நல்லா விளையாடுவா சார் அவன்கிட்ட” என பதில் சொன்னவள், “ஏன் சார் அவனை பத்தி கேட்கறீங்க?” எனக் கேள்வியும் கேட்டாள் பவித்ராவின் அன்னை.

“ஒன்னுமில்லை சும்மாதான் கேட்டேன். அன்னைக்கும் அவன்கூட விளையாட போனதாக தான் சொல்றா. நான் விசாரிச்சுக்கறேன்.” என்றவன் “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்” என அவர்களிடம் கூறிவிட்டு சஞ்சனாவிடமும் விடைபெற்று கிளம்பினான்.

தனது டீமை அழைத்து ரகு இருக்குமிடத்தை விசாரிக்க சொல்ல, அவன் கெட்ட நேரமோ என்னவோ வீட்டில்தான் இருந்தான். அவர்களிடம் சில வேலைகளை கொடுத்தவன் பவித்ராவை கவனித்த மருத்துவரிடமும் ஒரு உதவி செய்யுமாறு கூறிவிட்டு அலுவலகம் வந்தான்.

வழக்கம் போல கமிஷனர் கூப்பிட்டு திட்ட, எதையும் காதில் வாங்காதவனாக ஏதோ யோசனையில் இருந்தான். “அந்த ரேப் கேஸ் என்னாச்சு.” என இருமுறை கேட்டபின் யோசனையை கைவிட்டு, “விசாரிச்சுட்டு இருக்கேன் சார்” என்றான் அசோக்.

“இன்னும் எவ்ளோ நாள் ஆகும். இன்னும் யார் மேலையும் சந்தேகம் கூட வரலயா..?” என கத்தியவர், இன்னும் நான்கு நாட்கள்ள குற்றவாளியை பிடிக்கிற வழியை பாருங்க” என எச்சரிக்கை செய்தார். “கண்டிப்பா சார்” என்றவன் வீட்டிற்கு கிளம்பினான்.

            அன்றைய தினம் சந்திரிகா வீட்டில் இருக்க, அலுவலகம் சென்று வந்த தரணி, “சந்து. சந்து. எங்க இருக்க நீ?” என கத்திக் கொண்டே வர, மல்லிகா வந்து, “என்னாச்சுப்பா” எனக் கேட்டார். “ஆன்ட்டி ஒரு முக்கியமான விசயம் சொல்லனும். சந்து எங்க?” எனக் கேட்டான் தரணி.

“அவ தோட்டத்துல இருக்கா” என மல்லிகா கூற, “தேங்க்ஸ் ஆன்ட்டி” என்றவாரே தோட்டத்திற்குள் நுழைந்தான். அங்கே அவளோ, மல்லிகை பந்தலின் கீழ் இருந்த மேடையில் அமர்ந்து கொண்டு, தோட்டக்காரரின் எஃப்.மில் இருந்து ஒலித்த பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள்.

மல்லிகை என் மன்னன் மயங்கும் 

பொன்னான மலரல்லவோ……!!!

பொன் மாங்கல்யம் வண்ணப்பூச்சரம்

மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது

ஓராயிரம் இன்பக்காவியம் உந்தன்

கண்களில் அள்ளி நான் தந்தது…!!

நம் இல்லம் சொர்க்கம் தான்!!

நம் உள்ளம் வெள்ளம் தான்..!!

என் சொந்தமும் இந்த பந்தமும்

உன்னோடு தான் நான் தேடி கொண்டது..!!

மல்லிகை என் மன்னன் மயங்கும் 

பொன்னான மலரல்லவோ..!!

எந்நேரமும் உன்னாசை போல்

பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ…!!!

             அவள் செய்கையே ஏதோ பழைய நினைவில் உள்ளாள் என சொல்லாமல் சொன்னது. அதை கலைக்க விரும்பாதவனாக, அவளை பார்த்துக் கொண்டே நின்று விட்டான். பாடல் முடிந்ததில் தன்னை மீட்டவள் எதிரில் தரணி நிற்பதை பார்த்து, “ஹேய் தரணி எப்ப வந்த?” எனக்கேட்க, “இப்பதான் வந்தேன்” என்றான்.

“அவளருகில் அமர்ந்தவன், நான் வேணும்னா ஒருமுறை சத்யா சார்கிட்ட பேசி பார்க்கட்டுமா சந்து?” எனக் கேட்டான். அவளோ, “அதெல்லாம் வேண்டாம். விட்டுடு. ப்ளீஸ்” என்றவள், “நீ என்ன சொல்ல வந்த அதை சொல்லு” என்றாள். “நாம கலெக்டர் ஆபிஸ்ல சப்மிட் பண்ண டென்டர் ஓகே ஆகிடுச்சு, நாளைக்கு ஏலம்னு நியூஸ் வந்தது. ஆபிஸ் வர சொல்லிருக்காங்க. அதை சொல்லதான் வந்தேன்” என்றான் தரணி.

“ஓ. ஓகே.” என்றாள் சந்திரிகா கடமைக்கு. அப்போது அங்கு வந்தாள் சஞ்சனா. “வாங்க மேடம். இன்னைக்கு அதிசயமா சீக்கரம் வந்துட்டிங்க?” என தரணி கேட்க, “ஒன்னுமில்லடா. வேலை சீக்கிரம் முடிஞ்சது. அதான்” என்றவளின் முகம் சோர்வை தத்தெடுத்திருந்தது.

“ஏண்டி டல்லா இருக்க” என சந்திரிகா கேட்க, சஞ்சனா, “ஒன்னுமில்லக்கா” எனவும், “பரவால்ல சொல்லு. வேலைல ஏதாவது ப்ராளமா?” எனக் கேட்டாள். “ஒரு சின்ன பொண்ணை ரேப் பண்ணிருக்காங்க. அதுவும் மயக்க மருந்து சாக்லேட் கொடுத்து.” என்றதில் அதிர்ந்தவர்கள், “என்ன சொல்ற.” என மற்ற இருவரும் ஒருசேர கேட்டனர்.

“ஆமாக்கா. இவ்ளோ நாள் நான் வேஸ்ட் பண்ணிட்டேன். இதை பத்தி முன்னாடியே பேசியிருக்கலாம்” என சஞ்சனா தன்னையே நொந்து கொள்ள. “இப்ப யாருனு கண்டுபிடிச்சாச்சா?” என கேட்டான் தரணி. சஞ்சனா, “இன்னுமில்ல. அசோக்தான் இந்த கேஸை டீல் பண்றார். நான் பாத்துக்கறேனு சொல்லிட்டாரு” எனவும், “எந்த அசோக்?” எனக் கேட்டாள் சந்திரிகா.

சஞ்சனா, “அவர்தான்க்கா. ஏசிபி. உன்னோட ஃப்ரண்ட். அன்னைக்கு கூட தான்யா அக்காவோட ஃபங்சனுக்கு வந்திருந்தாரே” என்க, “என்னது. என் ஃப்ரண்டா. எனக்கு அப்படி யாரையும் தெரியாதே. ம்ம் தரணிதான் எனக்கே இண்டர்டியூஸ் பண்ணான்” என சந்திரிகா கூறவும், இருவரும் அவனை பார்த்தனர்.

தரணி, “எனக்கு அசோக் யாருன்னு தெரியறது இருக்கட்டும். ஒன்னு மட்டும் நல்லா தெரியுது. அன்னைக்கு பங்சன்ல ரெண்டு பேரும் சத்யாவை தவிர வேற எதையும் கவனிக்கலன்னு” என்க, இருவரும் அவனை முறைத்தனர். “சரி நாங்கதான் பார்க்கல. நீ என்ன பார்த்தனு சொல்லு.” என சஞ்சனா கேட்க, “சத்யாவோட ஃப்ரண்டுதான் அசோக். அவர் அப்படின்னு சொல்லிதான் இண்ட்ரோ பண்ணாரு” என்றான் தரணி.

அப்போது சஞ்சனாவுக்கு ஒன்று தோன்றியது. அசோக்கிடம் பழகுவதன் மூலம் சத்யாவை பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும் என்பதுதான் அது. “சரி ஓகே விடு. அவர் இவகிட்ட விசயத்தை வாங்கிட்டாருல்ல. இனிமே அவராச்சு அவர் கேஸ் ஆச்சு. போய் உங்க வேலையை பாருங்க” என இருவரையும் விரட்டிய சந்திரிகா தானும் தனது அறைக்கு சென்றாள்.

ஆனால் சஞ்சனாவின் மனதிலோ அந்த சாக்லெட் விசயம் சாதாரணமாக படவில்லை. அதே நேரம் அசோக்கின் மனதிலும் அதே எண்ணமே தோன்றிக் கொண்டிருந்தது. அதனாலே முழு உண்மையும் தெரியாமல் ரகு மீதான சந்தேகத்தையும் யாரிடமும் பகிர கூடாது என முடிவெடுத்து அவன் நினைத்ததை ரகசியமாக செய்ய முடிவெடுத்துக் கொண்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *