664 views

                   மாலை ஏழு மணி. சென்னையின் புகழ்பெற்ற உணவகம் ஒன்றில் குழுமியிருந்தனர் சந்திரிகாவும் அவளது தோழமைகளும். தரணியிடம் தான்யாவின் கணவன் அருள்குமரனையும், அபியின் மனைவி நேத்ராவையும் அறிமுகம் செய்தாள் சந்திரிகா.

“ஹாய் சிஸ்டர். நீங்க நல்லா சமைக்கிறீங்க. எனக்கு ஒருநாள் அந்த காளான் பிரியாணி செஞ்சு தரீங்களா?” என தரணி நேத்ராவிடம் உரிமையுடன் கேட்க, “பண்ணிட்டா போச்சு. நாளைக்கே செஞ்சு கொடுத்து விடறேன்” என்றாள் நேத்ரா. பிறகு அருள்குமரனிடம், “ஏன் ப்ரோ. தான்யாவோட ஸ்பெஷல் ஐட்டம் என்ன?” என தரணி கேட்க, “பிரியாணிதான் பாஸ் அதுவும் மட்டன் பிரியாணினா அவ்ளோ இஷ்டம்” என்றான் அருள்.

தரணி, “அப்படியா. தான்யா மேடம் என்கிட்ட சொல்லவே இல்லை. நாளைக்கு” என ஆரம்பிக்க, அருள் இடைபுகுந்து, “அட நாளைக்கு செஞ்சு எடுத்துட்டு வான்னு தானே சொல்ல போறீங்க.” என்றான். அவன் தலையாட்ட, “அவசரப்படாதீங்க புரோ. அவளுக்கு அது ரொம்ப பிடிக்கும் நல்லா சாப்பிடுவான்னு தான் சொல்ல வந்தேன். மத்தபடி மேடம்க்கு சமையல்னா கொஞ்சம் அலர்ஜி” என்றான் அருள்.

அதைக்கேட்டு சந்திரிகா, “இன்னுமாடி நீ சமைக்க கத்துக்கல.” என தான்யாவை பார்த்து கேட்க, அவளோ, “நான் என்னடி பண்றது. எனக்கு வர மாட்டேங்கிது. அதுவும் இல்லாம அத்தை சூப்பரா சமைப்பாங்களா. சோ நான் சாப்பிடுற வேலையை கரெக்டா செய்றேன்” எனும்போதே அவர்கள் ஆர்டர் செய்த உணவுகள் வந்தது.

பிறகு சிரித்தபடி உணவை பரிமாறிக் கொள்ள, அதே நேரம் அவர்களுக்கு பக்கத்தில் இருந்த மற்றொரு டேபிளில் சத்யாவும், அசோக்கும் அமர்ந்திருந்தினர். இவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டு சத்யா திரும்பி பார்க்க, அப்போது தரணி அருளிடம், “ப்ரோ சந்துக்கு பனீர் ஒத்துக்காது. வைக்காதீங்க” என கூறி விட்டு, “நீ மஷ்ரூம் கிரேவி எடுத்துக்கோ” எனக் கூறிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

சட்டென கோபம் வர சூழ்நிலை கருதி அமைதி காத்தான் சத்யா. ஆனால் அசோக்கோ, “இவங்க சஞ்சனாவோட அக்காதானேடா” என பெரிய சந்தேகம் போல கேட்க, சத்யாவோ, “ஏன் உனக்கு தெரியாதா?” என அவனிடம் பொரிந்துவிட்டு “பேசாம சாப்பிடுடா” என்றான்.

அசோக், “இப்ப எதுக்கு நீ கோபப்படற. எனக்கென்னவோ நீ சந்திரிகாவை பார்த்தா ஏதோ எமோஷனல் ஆகிடற. உனக்கு அவங்களை முன்னாடியே தெரியுமா?” எனக் கேட்டான். “அதெல்லாம் ஒன்னுமில்லடா. நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல. சஞ்சனாகிட்ட பழகாதன்னு அதான்.” என சமாளித்தான் சத்யா.

அசோக்கோ, “ம்ம்.” என்றபடி ஏதொ யோசனை செய்ய, “சரி. நீ சொல்லுடா பவித்ரா இப்ப எப்படி இருக்கா. நீ ஏதோ கவுன்சிலிங் குடுக்கனும்னு சொன்னியே. அந்த டாக்டர் வந்தாங்களா?” எனக் கேட்டான் சத்யா. ‘இப்ப சஞ்சனா தான் டாக்டர்னா. அதுக்கும் கோபப்படுவான்’ என நினைத்த அசோக். “ம்ம் ஒன் வீக் ஆகும்னு சொல்லிருக்காங்கடா” என்று மட்டும் சொன்னான்.

பிறகு சற்று நேரம் தொழில் விசயங்களை பேசிக் கொண்டே இருவரும் சாப்பிட்டு முடித்தனர். அதற்குள் அவர்களும் சாப்பிட்டு முடித்திருக்க, பேச்சு அலுவலக விசயமாக மாறியது. “கலெக்டர் ஆபிஸ்க்கு கொட்டேஷன் நாளைக்கு அனுப்பிடலாம்” என்றான் தரணி.

சந்திரிகாவோ, “இந்த புராஜக்ட் எடுக்க வேண்டாம்னு நினைக்கறேன்” என்றது தெளிவாக சத்யாவின் காதில் விழுந்தது. பிறகு இவர்கள் கிளம்ப எத்தனிக்க, அதே நேரம் அவர்களும் கிளம்பினர். சத்யாவை பார்த்த தரணி, “ஹாய் சார் எப்படி இருக்கீங்க. நாம அடிக்கடி பார்க்கிறோம்ல” எனக் கேட்டான்.

சத்யா, “ம்ம் ஆமா நல்லாருக்கேன்” என்றதும், “நாங்க இப்பதான் உங்களை பத்தி பேசிட்டு இருந்தோம்” என வாயை விட்டான் தரணி. சத்யா, “என்ன பேசிட்டு இருந்தீங்க?” எனக் கேட்டபோது சந்திரிகா, வேணாம் என சைகை காட்ட, தரணியோ அதை கவனியாமல், “புதுசா ஒரு புராஜக்ட் டெண்டர் குடுத்திருக்கீங்கல்ல அதை பத்திதான்” என பதில் கொடுத்தான்.

அதை கேட்ட சத்யாவோ, “பட் அது உங்களுக்கெல்லாம் யூஸ் ஆகாது. ஏன்னா அதுலயே சொல்லியிருந்த மாதிரி சேவை மனப்பான்மை இருக்கறவங்கதான் அதை செய்ய முடியும். பெரிசா லாபமும் இருக்காது. சோ நீங்க டென்டர் எடுக்க மாட்டீங்க” என்றதும் சந்திரிகாவிற்கு சுள்ளென கோபம் வந்தது.

“ஏன் சார். சேவை, உதவிக்கெல்லாம் டிக்சனரில்ல உங்க பேர்தான் போட்டிருக்காங்களோ. இப்ப சொல்றேன் நாங்கதான் இந்த புராஜக்ட் எடுக்கறோம். பார்க்கலாமா” என சவால் விட்டாள் சந்திரிகா. “அதுக்கு மேல உங்க இஷ்டம்” என்று தோளை குலுக்கியபடி சென்று விட்டான் சத்யா.

‘இப்பதானே வேண்டாம்னு சொன்னா அதுக்குள்ள சவால் விடுறா. என்ன நடக்குதுனே புரியலயே’ என குழம்பியபடி நின்றிருந்தான் தரணி. காரில் ஏறிய சத்யாவின் இதழ்களிலோ புன்முறுவல் பூத்தது.

           மேலும் இரு நாட்கள் கழிந்திருக்க, அதற்குள் கொட்டேஷன் ரெடி செய்து அனுப்பியிருந்தனர் சந்திரிகாவும், தரணியும். அன்று காலையிலே பத்து மணிக்கு சந்திரிகாவை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்தனர். அஸ்வினும், தீபக்கும்.

அவர்கள் உள்ளே வந்தபோது சந்திரிகா மட்டும் அறையில் இருக்க, அஸ்வினை இன்முகத்துடன் வரவேற்றாள். சற்று நேரத்தில் தரணியும் இணைந்துக் கொள்ள, “சொல்லுங்க அஸ்வின் என்ன விசயமா வந்திருக்கிங்க?” எனக் கேட்டாள் சந்திரிகா.

 உடனே ஒரு ஸ்வீட் பாக்ஸை எடுத்து நீட்டிய அஸ்வின், “எடுத்துங்கோங்க” எனவும், “ஓ உங்களுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சா. பொண்ணு என்ன பண்றாங்க?” எனக் கேட்டாள் சந்திரிகா. அவளை ஏகத்துக்கும் முறைத்தவன், “அதுக்கு மட்டும்தான் ஸ்வீட் தருவாங்களா. நாங்க புதுசா கம்பெனி ஸ்டார்ட் பண்ணிருக்கோம். அப்பறம் என் அண்ணாக்கு பையன் பொறந்திருக்கான் அதுக்குதான் ஸ்வீட்” என விளக்கினான் அஸ்வின்.

“ஓ ஓகே ஓகே கூல். அதுக்கும் சீக்கிரமா குடுங்க” எனவும் அஸ்வின், “நீ ஓகே சொல்லிருந்தா எப்பவோ குடுத்திருக்கலாம்” என முணுமுணுக்க, ஆனால் அது அவள் காதுகளில் தெளிவாக கேட்டது. “நான் ஓகே சொல்லாட்டா என்ன? வேற பொண்ணு சொல்லுவாங்க. நீங்க இதை சொல்லதான் வந்தீங்களா?” எனக் கேட்டாள் சந்திரிகா.

“இல்லல்ல ஒரு முக்கியமான விசயம் இருக்கு” என்றவன் தனது நிறுவனத்தை பற்றிய விவரங்களை கூறினான். கூறி விட்டு “இந்த புராஜக்டை நீங்கதான் செஞ்சு குடுக்கனும்” என முடித்தான் அஸ்வின். “ஓஓ நைஸ் புராஜக்ட். ஆனா இப்ப எங்களால செய்ய முடியாத நிலைமைல்ல இருக்கோமே” என சந்திரிகா கூறினாள்.

“இல்ல சந்திரிகா. இது எங்களோட முதல் பிஸினஸ். பினிஷிங் பக்காவா இருந்தாதான் எங்களுக்கு அடுத்தடுத்த டீல் கிடைக்கும். வேற ரிலையபில் சோர்ஸஸ் எங்ககிட்ட இல்லை. அதோட பீல்ட்ல நியூவா இருக்கறதால யாரும் அவ்ளோவா இன்வால்வ் பண்ணி செய்ய மாட்டாங்க. கொஞ்சம் கன்சிடர் பண்ணு” என்றான் அஸ்வின்.

‘அவனது தந்தைக்கு இருக்கும் செல்வாக்கிற்கு, அவன் கம்பெனிக்கு பண்ண முடியாது என யாரும் சொல்வார்களா. என்னம்மா அளந்து விடறான். எல்லாம் காதல் படுத்தும் பாடு’ என நினைத்தான் தீபக். இவள் முடியாது என்றே வாதிட, அவனோ கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றே கூற, இறுதியில் தரணிதான் தலையிட்டு, “ஹேய் கைய்ஸ் வெயிட் வெயிட்” என்றான்.

பிறகு அஸ்வினிடம், “உங்க புராஜக்ட்டை குடுத்துட்டு போங்க. ஒன்ஸ் நாங்க படிச்சு பார்த்துட்டு டிஸ்கஸ் பண்ணி உங்களுக்கு டூ டேய்ஸ்ல சொல்றோம்” என்று பைலை வாங்கிக் கொண்டான். அதன்பிறகே, அஸ்வினுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஒரு சிரிப்போடு வந்து காரில் ஏற, “ஹேய் இப்ப என்ன நடந்ததுன்னு இப்படி சிரிக்கற?” எனக் கேட்டான் தீபக்.

“அதான் பைலை வாங்கிட்டாங்களே” என அஸ்வின் கூற, “அததான் நானும் சொல்றேன். வாங்கி மட்டும்தான் இருக்காங்க. ஓகே பண்ணல” என நினைவுபடுத்தினான் தீபக். “இல்லடா ஃபைலை படிச்சா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்குவா. ஏன்னா இது அவளோட டிரீம்” என்றபடி அவள் பேசியதை நினைவு கூர்ந்தான்.

“உங்களோட டிரீம் புராஜக்டா நீங்க எதை பார்க்கறீங்க.” என ஒரு பார்ட்டியில் ஒருவர் கேட்க, “பழைய காலத்து வீடுகள்ள ஒரு கலைநயம் இருக்கும். அந்த கலைநயத்தை திரும்ப கொண்டு வர முடிஞ்சா அதை ஒரு சக்ஸஸா எடுத்துக்கலாம். அது மட்டும் என்னோட டிரீம்னு சொல்லிட முடியாது” என்றாள் சந்திரிகா.

அஸ்வின் கூறியதை கேட்ட தீபக், “அப்ப இந்த கம்பெனியே அவங்க ஐடியாவுல தான் ஆரம்பிச்சதா..?” எனக் கேட்க, அஸ்வின், “அப்படில்லாம் இல்ல மச்சான். அவளோட சேர்ந்து பிஸினஸ் பண்ணலாம்னு நினைச்சப்ப அவளை பத்தி சில தகவல் கலெக்ட் பண்ணேன். அப்ப தோணுச்சு அவ்ளோதான்” என்றான்.

“ஆனா நீ சொன்னதை கேட்ட அப்பறம்தான் ஒரு விசயம் புரியது. எங்க ரெண்டு பேரு டிரீம்ல கூட ஒரே வேவ்லென்த் இருக்குல்ல” என்றான் அஸ்வின். “ஆமா ஆமா. டிரீம்ல மட்டும்தான் இருக்கு. நெஜத்துல ஒன்னும் வரப்போறது இல்ல” என்றான் தீபக் விளையாட்டாக. அதுதான் உண்மை என தெரியாமல்.

மேலும் ஒரு இரு நாட்கள் கழித்து, ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்த அசோக்கிற்கு கால் வந்து கொண்டேயிருக்க, அட்டென் செய்து விசயத்தை கேட்டவன், “உடனே வரேன்” என ஃபோன் காலை கட் செய்துவிட்டு மீட்டிங்கில் இருந்து பாதியிலே வெளியேறினான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
3
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *