686 views

 

          அஸ்வின் மருத்துவமனைக்கு சென்ற போது அவனது தந்தையை தவிர மொத்த குடும்பமும் அங்கு இருந்தது. அவனது தாயை அழைக்க, திரும்பியவர் கையில் ஒரு குழந்தையும் இருந்தது. அவனோ அதை கவனியாமல்என்னாச்சும்மா? ஏன் அவசரமா வர சொன்னீங்க?” எனக் கேட்டுக் கொண்டே அருகில் வர, “டேய் நீ சித்தப்பா ஆகிட்டடா. அருணுக்கு பையன் பொறந்துருக்கான்என்றவாறே குழந்தையை அவனிடம் காட்டினார்.

ஆசையாக குழந்தையை பார்த்தவன்,அச்சோ. என்னை மாதிரியே இருக்கான் இல்லம்மா.” என்றவன் அனுவை அருகில் அழைத்து, “பேபி கியூட்டா இருக்கில்லஎனக் கேட்டான். அவளும் ஆசையோடு மெதுவாக தொட்டு பார்த்தாள். பிறகு குழந்தையை அவர் சம்பந்தியிடம் கொடுக்க, தனது அன்னையிடம் அஸ்வின். “ஏம்மா அவ்ளோ வேகமா பேசினீங்க. நான் பயந்தே போயிட்டேன்என்றான்.

உனக்கு எத்தனை தடவை கால் பண்றது. லைனே கிடைக்கல. அப்பறம் பேசிட்டு இருக்கப்பவே டாக்டர் வந்துட்டாங்க. அதான் பேச முடியல.” என்றார். பிறகு தன் அண்ணனிடம் சென்றவன், கட்டிபிடித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து,அண்ணி எப்படி இருக்காங்கஎன்க,ம்ம் நல்லா இருக்காடா. வார்டுக்கு மாத்தினா நீயும் பார்க்கலாம்எனவும் சரி என்றான்.

பிறகு செவிலியர் பார்க்க போகலாம் என்க, களைப்பாக இருந்த ஆருவிடம் சென்ற அஸ்வின், “இப்ப ஓகே வா அண்ணிஎனவும் மெலிதாக சிரித்தாள். குழந்தையை அவளருகில் படுக்க வைக்க, தனது அன்னையிடம்அம்மா, எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க?” எனக் கேட்க,இன்னும் மூனு நாள் கழிச்சுதான்டா.” என பதில் குடுக்க,அப்ப பிரின்ஸ் நம்ப வீட்டுக்கு வர த்ரீ டேய்ஸ் ஆகுமா?எனக் கேட்டான்.

த்ரீ டேய்ஸ் இல்லாப்பா. த்ரீ மன்த்ஸ் ஆகும்என்றார் ஆருவின் தாயார். அஸ்வின், “ஆன்ட்டி என்ன சொல்றீங்கஎன்க,ஆமாம் எங்க வீட்டுக்கு வந்து மூனு மாசம் ஆன அப்பறம் உங்க வீட்டுக்கு வருவாங்கஎனவும்,நோ. ஆல்ரெடி மூனு மாசமா அண்ணி அங்கதானே இருக்காங்க. அதெல்லாம் முடியாது. நாங்க கூட்டிட்டு போய்டுவோம். அண்ணி. நீங்க சொல்லுங்க நம்ம வீட்டுக்குதானே வருவீங்கஎன்றான் ஆருவிடம்.

பிறகு அனைவரும் அவளிடம் நலம் விசாரித்தனர்.அவனது அடத்தை பார்த்து, அவர்களின் அன்பை கண்டு அனைவரும் மனம் நிறைந்தனர். அப்போது சரஸ்வதிதான், “அதை அப்பறம் பார்க்கலாம் அவ ரெஸ்ட் எடுக்கட்டும் நீ வாடா.” என அவனை வெளியே அழைத்து வந்தார்.

அப்போது அனு, “ஓகே ஆன்ட்டி அப்ப நான் கிளம்பறேன்என்க,ஹேய் எங்க கிளம்பற. இரு நானே டிராப் பண்றேன்என்றவன் அன்னையிடம் கூறி விட்டு அழைத்து சென்றான். அவனது உற்சாகத்தில் அனுவின் மனமும் மகிழ்ச்சியடைந்தது.

              மருத்துவமனையில் பவித்ராவின் உடல்நிலை தேறி இருக்க, அன்று அவளை பார்க்க சென்றிருந்தான் அசோக். இவன் போனபோது அவள் உறங்கி கொண்டிருக்க அவளிடம் ஏதாவது பேச முடிந்ததா? என அவளது தந்தையிடம் கேட்டான். அவரோ கண்களில் நீர் நிறைய, “அவ யாரையும் பக்கத்துல விட மாட்றா சார். ரொம்ப பயப்படறா. முழுசா சரியாகிற வரை அவளை ஸ்டெரஸ் பண்ணாதிங்கன்னு டாக்டர் சொல்றாங்க. என்ன பண்றதுனே தெரியலஎன்றார் கவலையாக.

பிறகு மருத்துவரிடம் அவளது உடல்நிலை பற்றி கேட்டறிய. அவர், “அவகிட்ட கொஞ்சம் வல்கரா பிகேவ் பண்ணிருக்காங்க. சோ, அவ இன்னும் அந்த இன்சிடென்ட்ல இருந்து வெளியில் வரல. எதுக்கும் நாம கவுன்சிலிங் செக்ஷன் குடுக்கலாமானு அப்சர்வ் பண்ணிட்டு இருக்கோம்என்றார்.

அஸ்வின், “அதை டிரை பண்ணலாம்ல டாக்டர்எனக் கேட்க,அவளோட காயங்கள் ஆறவே இன்னும் டூ டேஸ் ஆகலாம். அதுக்கப்பறம் அரென்ஜ் பண்ணலாம்என்றார். “ஓகே பாத்துக்கோங்க எனக் கூறியவன் அங்கிருந்து வெளியேறினான். அவளை கண்டெடுத்த இடத்திலும் பெரிதாக ஆதாரம் எதுவும் சிக்கவில்லை.

அதற்குள் நடிகை ஒருவர் அரசியலுக்கு வருவதாக செய்தி வெளியாக ஊடகங்கள் அதன்பக்கம் திரும்பி விட்டதில் அவர்கள் தொல்லை சற்றுக் குறைந்தது. ஆனால் இன்னொருபுறம் அவனுக்கு கஷ்டமாகவும் இருந்தது. எல்லாமே சென்ஷேஷனல், டி ஆர்பிக்கு தானா. அடுத்த பிரச்சனை வந்தால் பழைய பிரச்சனைகளை அப்படியே மறந்து விடுகின்றனர்.

ஊடகவாதிகள் மட்டுமல்லமக்களும் சில நேரம் அப்படித்தானே நடந்து கொள்கின்றனர் என நினைத்தவன் பெருமூச்சுடன் கிளம்பி சென்றான். மேலும் மூன்று நாட்கள் சென்றிருக்க, இன்றைக்கு பவித்ராவிற்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வந்தது.

அந்த மருத்துவரிடம் பேசி அவனை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள செய்ய வேண்டும் என நினைத்தவன் தானும் மருத்துவமனைக்கு கிளம்பி வந்தான். அவன் வந்தபோது கவுன்சிலிங் தொடங்கியிருக்க, அவன் கண்ணாடியில் பார்த்தது, பொம்மை உடை அணிந்தபடி அவளிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு உருவத்தைதான்.

அவள் தாயிடம்,கவுன்சிலிங் நடக்குதுன்னு சொன்னீங்க. இங்க பார்த்தா, இன்னும் அந்த டாக்டர் வரலயா?”  என கேள்வி எழுப்ப, “அங்க நிற்கறதே அந்த டாக்டர்தான்என்றாள் அவள். பிறகு பவித்ராவிற்கு டிரீட்மெண்ட் பார்த்த டாக்டர் வர அவரிடமும் கேட்டான் இதுதான் கவுன்சிலிங்கா என.

பாவம் அவனுக்கு என்ன தெரியும். கவுன்சிலிங் என்றால் மணிக்கணக்கில் அமர வைத்து பேசுவார்கள். இல்லையெனில் நிறைய ஒயர்களை மாட்டி பேச வைப்பார்கள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தான். இங்கோ, டாக்டர் பொம்மை உடையை அணிந்து கொண்டு நடனமாடினால் அவனுக்கு சந்தேகம் வரத்தானே செய்யும்.

அப்போது மருத்துவர் அவனை ஒரு அறைக்கு கூட்டிச் சென்றுஇங்கேயே காத்திருங்கள். நான் அந்த மருத்துவரை வரச் சொல்கிறேன். பேசிக் கொள்ளுங்கள்என விட்டு விட்டு சென்றுவிட்டார். சற்று நேரத்தில் அதே பொம்மை உருவம் அவனிருந்த அறைக்கு வந்து ஒரு கையில் கதவை திறந்து கொண்டு, மறு கையில் தலைப்பகுதியை கழற்றி முகத்தை காட்டியவாறு உள்ளே வர, இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அதிர்ந்தனர்.

உள்ளே வந்தது சாட்சாத் நமது சஞ்சனாவே தான். அவனை அமரவைத்துவிட்டு வெளியே சென்ற மருத்துவருக்கு வேறு ஒரு கேஸ் வர அவளிடம் சொல்லாமலே அங்கு சென்று விட்டார். அதனாலே அவன் அறையில் இருப்பது சஞ்சனாவிற்கு தெரியவில்லை.

உள்ளே நுழைந்தவள் வேகமாக எழுந்த அவனிடம் சென்று,நான் எங்க போனாலும் என்ன ஃபாலோ பண்றதே உங்க வேலையா?” என கோபமாக கேட்டாள். அவனோ சஞ்சனா டாக்டரா என்ற அதிர்வில் இருந்தே இன்னும் மீளாமல் அவளது கேள்விகளை காதில் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

முதல்ல வெளில போங்க மிஸ்டர்என அவள் கத்த, அப்போது தான் தெளிந்தவன், “ம்ம் நான் ஏன் வெளில போகனும்என்றவாறே மறுபடி அமர்ந்தான்.சஞ்சனா, “நீங்க போலீஸ்தானே. உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” எனக் கேட்க. “இப்பக்கூட நான் டியூட்டில்லதான் இருக்கேன் டாக்டர் மேடம்என்றான் டாக்டரில் அழுத்தம் குடுத்து.

அவனை திட்டியவாறே உள்ளே சென்று உடையை மாற்றிக் கொண்டு வந்தவள். “சொல்லுங்க என்ன வேணும் உங்களுக்குஎனக் கேட்டாள். இவனோ வந்த வேலையை மறந்து,ஆமா நீ டாக்டர்னு ஏன் சொல்லவே இல்ல.” எனக் கேட்டான். என்னவோ பல வருஷமா பழகி சொல்லாதது மாறி கேட்கற நீ என்ன லூசா என்றது போல பார்த்தாள் சஞ்சனா.

அவளது பார்வையை புரிந்து கொண்டவன்ஓகே ஓகே. நான்தான் நீ காலேஜ் ஸ்டூடண்ட்னு தப்பா நினைச்சுக்கிட்டேன். நீ எப்ப பார்த்தாலும் ப்ரண்ட்ஸ் கூட ஊர் சுத்திட்டே இருப்பியா. அதான்என்றவன் அவளது முறைப்பில் வாயை மூடினான். பிறகு சஞ்சனா,நான் உங்களுக்கு என்ன வேணும் எதுக்காக இங்க வந்தீங்கன்னு கேட்டேன்என்றாள்.

ம்ம் சாரி கம் டு பாயிண்ட். நான்தான் பவித்ரா கேஸை ஹேண்டில் பண்றேன்என்றவன்,அந்த பொண்ணுக்கு நீதானே கவுன்சிலிங் குடுக்கறஎனக் கேட்டான். “ம்ம் ஆமா. ரிப்போர்ட்ல அந்த பேர்தான் இருந்தது. ஆன அவ வேற பேர் சொன்னாலே.என யோசிக்க, ஆமா அவ பேர் வேறதான். சில ரீசன்க்காக இந்த பேர் குடுத்துருக்கோம்என்றான்.

பிறகு அவளிடம், “ஏதாவது முன்னேற்றம் இருக்கா அவகிட்ட. ஏதாவது சொன்னாளா?” எனக் கேட்க,என்ன சொல்லனும்?” என இவள் எதிர்க்கேள்வி கேட்டாள். “அதான் யார் இப்படி பண்ணாங்கன்னுஎன தயங்கவும், “அதை பத்தி நான் இன்னும் கேட்கவே இல்லை. முதல்ல அவளை மென்டலா சேஃப்பா பீல் பண்ண வைக்கனும். அப்பறம்தான் இதை பத்தில்லாம் கேட்க முடியும்.

இன்னும் ஒரு ஒன் வீக்காவது செஷன் குடுத்தாதான் மேற்கொண்டு என்ன பண்றதுனு முடிவுக்கு வர முடியும்என்றாள் சஞ்சனா. “ஓகே நோ ப்ராப்ளம் எவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்கறமோ அவ்ளோ நல்லது. பட் நீ சொல்ற மாதிரி அவளோட ஹெல்த்தையும் பார்க்கனும்.

எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணு. அவ இதை பத்தி ஏதாவது உன்கிட்ட சொன்னாலும் நீ அவ பேரண்ட்ஸ்கிட்ட சொல்ல வேண்டாம். இது என்னோட பர்சனல் நம்பர். எனக்கு கொஞ்சம் ஃபோன் பண்ணி சொல்ல முடியுமா?” எனக் கேட்டு அவனது நம்பரை கொடுத்தான். அவளும் மறுக்காமல் வாங்கி கொண்டாள்.

இவ்வளவு நாட்கள் மரியாதையாக பேசிக் கொண்டிருந்தவன் இன்று ஒருமைக்கு மாறி விட்டது அவளுக்கும், தன்னை கண்டாலே சத்தம் போடுபவள் இறுதியில் எந்த மறுப்பும் சொல்லாமல் ஆமோதித்தது அவனுக்கும் புரிந்தே இருந்தது. ஆனால் அது அவர்களுக்கு பிடித்தும் இருந்ததோ.

              சந்திரிகா அலுவலகத்தில் சற்று மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாள். கடைசியா அவர்கள் எடுத்த பிராஜக்ட் வெற்றி பெற்றதில் லாபமும் நிறையவே வந்திருந்தது. அதைபற்றி அனைவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருக்க இறுதியில் இன்று இரவு அனைவரும் வெளியில் சாப்பிட போகலாம் என முடிவு செய்து அபியிடம் டேபிள் புக் செய்ய சொன்னாள்.

அபியிடமும், தான்யாவிடமும் மாலை சீக்கிரமாக கிளம்பி சென்று தங்களது இணைகளோடு வந்து விட வேண்டும் என செல்லமாக கட்டளையிட. அவர்களும் சரி என்றனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்தது. அது என்னவென்றால் ஸ்கூல்ஸ் ரினோவேஷன் என்ற பிராஜக்ட் புதிதாக டென்டர் விடப்படுகிறது.லாப நோக்கம் பெரிதாக இல்லாமல் சமூக சேவையோடு செயல்பட விரும்பும் விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது ஆட்சியரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் எனவும் அது பற்றிய இன்னும் சில தகவல்களும் அடங்கியிருந்தது.அதே நேரம் அஸ்வினும் தனது கம்பெனியோடு டைஅப் வைத்து சந்திரிகாவின் நிறுவனம் செயல்படும் வகையில் ஒரு புராஜக்டை தயார் செய்து கொண்டிருந்தான். இருவரில் எந்த புராஜக்டை சந்திரிகா தேர்ந்தெடுக்க போகிறாள்….!!!??!!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
1
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *