Loading

அத்தியாயம் 4

 

 

சிறிது நேர பயணத்திற்க்கு பின் தன் இல்லத்தை அடைந்தவள்..

 

தன் அறை சென்று தன்னை தூய்மைப்படுத்தி கொண்டு வந்தவள். “அம்மா காஃபி கொடுங்களேன் ரொம்ப தலைவலிக்குது என்று கூறியவாறு ஹாலில் உள்ள சோஃபாவில் அமார்ந்தாள்”.

 

“ஏன் டா கண்ணாம்மா” வேலை ரொம்ப கஷ்டமா இருக்கா? ரொம்ப சோர்வா தெரியிரியே டா என்று வினாவினார் .

 

“இல்லைமா நான் நல்ல தான் இருக்கேன், இன்னைக்கு முதல் நாள்ல அதான் அப்படி தெரியுறேன் போல, “ம்மா பாருங்க நான் உங்க கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்”,

 

“என்ன டா சொல்ல மறந்த”,  அது “ம்மா எனக்கு ஆபிஸ்ல புதுசா ஒரு அண்ணா கிடைச்சுருக்காங்க ம்மா, அவர் பேரு வருண் ரொம்ப நல்லவர் ம்மா பார்த்ததுமே அவர் என்ன தங்கச்சினு தான் கூப்பிட்டார்”.

 

“சரி டா மா யார இருந்தாலும் எதுன்னாலும் பாத்து பத்திரமா இரு டா” என்று கூறியவர் இரவு உணவு தயாரிக்க சென்றுவிட்டார்.

 

“அம்மா ஏன் இப்படி சொல்லிட்டு போனாங்க என்னவா இருக்கும்?” சரி அவங்க எது சொன்னாலும் நம்ம நல்லதுக்கு தான் இருக்கும் விடு பாத்துக்கலாம் என்றவள் டிவியில் கேட்ட பாடலில் மூழ்கிவிட்டாள். சிறிது நேரத்தில் இரவு உணவை தயாரித்து உண்டுவிட்டு சமையலறையை சுத்தம் செய்துவிட்டு இருவரும் படுக்கையறை சென்று நித்திரை தேவியின் ஆளுமைக்குள் உட்புகுந்தனர்.

 

மறுநாள் காலை கதிரவன் அவன் தன் காதலியான நிலவு மகளை அனுப்பிவிட்டு தன் செங்கதிர்களை மெல்ல புவிக்கு பரப்பிக்கொண்டிருந்தான்..

 

அதிகாலையிலே உறக்கம் கலைந்து எழுந்தவள் தன் காலை கடன்களை முடித்து கொண்டு நடைபயிற்சியையும் முடித்துக்கொண்டு வந்தாள் தன் அறைக்கு சென்று தன்னை தூய்மைப்படுத்தி கொண்டு அலுவலகம் செல்ல தயாரகி வந்தவள், தன் அன்னை செய்து வைத்த உணவை உண்டுவிட்டு அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி தான் எப்பொழுதும் செல்லும் அந்த ஈசனின் ஆலயத்தை நோக்கி வண்டியை செலுத்தினாள்..

 

சிறிது நேர பயணத்திற்கு பின்பு அக்கோவிலை அடைந்தவள்  வண்டியை அதான் இருப்பிடத்தில் நிறுத்திவிட்டு, பக்கத்தில் இருந்த பூக்கடையில், பூ வாங்கி கொண்டு கோவிலுனுள் சென்றாள். அக்கோவிலில் இன்று வழக்கத்துக்கு மாறாக சற்று கூட்டம் அதிகம் காணப்பட்டது..

 

தான் வாங்கி வந்த பூவை அர்ச்சகர் கையில் கொடுத்து, ” ஐயா இது சாமிக்கு போட்டுருங்க என்றாள்”.

 

“சரி மா” என்றவரும் கற்பகிரகத்திற்குள் சென்று அவள் தந்த பூவை சாமிக்கு வைத்து அர்ச்சனை செய்து தீபாராதணை கட்டி இவளிடம் வந்தார். அத்தீபாராதனையை எடுத்து கண்ணில் ஒத்திக்கொண்டவள் ஆலயத்தை வலம் வர சென்றுவிட்டாள்..

 

ஆலயத்தை வலம் வந்தவள் சற்று நேரம் உக்கார்ந்து இருந்துவிட்டு, மீண்டும் தன் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டாள்.

 

சிறிது நேரத்தில் அலுவலகத்திற்குள் நுழைந்தவள் அங்குள்ள அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லி கொண்டு தன் இருப்பிடத்தில் சென்று அமர்ந்து தன் வேலையை பார்க்க தொடங்கினாள்..

 

அதே நேரம் அங்கு நம் நாயகன் எழுந்து தன் அன்றாட பணிகளான வொர்க் அவுட் மற்றும் நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவன் செவிகளின் அவன் தாய் சத்தமிடுவது கேட்டது சத்தம் வந்த திசையை நோக்கி சென்றன் அவன்..

 

அங்கு அவர் தன் மகளை எழுப்ப போரடிக்கொண்டிருந்தார். “அடியேய் எழுந்திரிடி விடுஞ்சு எவ்வளவு நேரம் ஆச்சு தெரியுமா? இப்படி தூங்குனா என்னத்துக்கு ஆகுறது நீ வாக்கப்பட்டு போற இடத்துல என்னை தான் டி பேசுவாங்க என்ன புள்ளையை வளர்த்து வெச்சுருக்கேனு கேட்பாங்க.”

பாரு நான் எவ்வளவு கத்துறேன் கொஞ்சமாது அசையுறளா எழுந்திரிக்கவும் மாட்டிங்குறா என்று புலம்பியவரை பார்த்து, ” ம்மா ஏன் இப்படி காலையிலையே குட்டிமாவ திட்டுறிங்க பாவம் புள்ளை தூங்கட்டும் விடுங்க ம்மா” என்றவனை பார்த்து முறைத்தவர்.

 

“ஏன் டா கண்ணா நீயும் அவளுக்கே சப்போர்ட் பண்ணுற, இங்க இப்படி தூங்குறவ நாளை பின்ன கல்யாணம் ஆகி அவ புருஷன் வீட்டுக்கு போயும் இப்படி தூங்குனா” என்ன டா பேசுவாங்க அவங்க நம்மளை?..

 

“ம்மா என்ன மா நீங்க இன்னும் அந்தகாலத்துலையே இருக்கிங்க அது எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டங்க அதே மாதிரி நம்ம குட்டிமாவும் அவங்க குறை சொல்லுற மாதிரி நடந்துக்க மாட்ட ம்மா என்றான்”.

 

“என்னமோ போ டா நம்ம இவ்வளவு சத்தம் போடுறேமே எங்காவது எழுந்துருச்சாள பாத்தியா? எல்லாம் நீ குடுக்குற  செல்லம் தான்” அவ இப்படி பண்ணுறா என்றவரை பார்த்து, “ம்மா நீங்க போங்க போய் சமையல பாருங்க நான் இவள எழுப்பிவிடுறேன்” என்றவன்‌, அவரை அவ்வறையிலிருந்து அனுப்பிவிட்டு தன் தங்கையின் புறம் திரும்பியவன் குழந்தை போல் தூங்கும் தன் தங்கையை பார்த்தவன் அவள் அருகில் சென்று அவளை எழுப்பினான்..

 

“குட்டிமா தங்கபுள்ளை எழுந்திரி டா காலேஜ்க்கு டைம் ஆச்சு பாரு எழுந்திரி என்றான்”. அண்ணா ஒரு ஐஞ்சு நிமிசம் டா அப்புறம் எழுந்திரிக்குறேன் பிளிஸ் பிளிஸ் டா அண்ணா”என்று தூக்கத்திலையே கெஞ்சியவளை பார்த்து,”முடியாது சீக்கிரம் எழுந்திரி இப்பவே டைம் ஆச்சு எழுந்துருச்சு காலேஜ்க்கு கிளம்பு நானே உன்னை கொண்டுப்போய் டிராப் பண்ணிட்டு அப்புறம் ஆபிஸ் போறேன்”.

 

“சரி எழுந்துரிக்குறேன் நீயும் போய் ரெடி ஆகி வா, நானும் அதுக்குள கிளம்பிடுறேன்”..

 

“ம்ம் குட் சரி சீக்கிரம் ரெடி ஆகிடு எனக்கு இன்னை முக்கியமான மீட்டிங் இருக்கு உன்னை கொண்டுப்போய் விட்டுட்டு நான் ஆபிஸ் போகனும் என்ன ஒகே வா”..

 

“சரி டா இப்பே நீ தான் இங்க நீன்னு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க போ போய் கிளம்புற வழிய பாரு இல்லை இன்னைக்கு மீட்டிங் ஸ்வாக தான்”..

 

“வாலு வாலு சரியான அருந்த வாலு” என்று தன் தங்கையின் தலையில் கொட்டியவன் சிரித்து கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டான்..

 

சிறிது நேரத்தில் இருவரும் தயாராகி வரவும் உணவு மேசையின் அருகிலிருந்து பார்வதியம்மா உணவு உண்ண அழைத்தார்..

 

இருவரும் சென்று உணவு உண்ட பின் தான் தாயிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்..

 

தன் காரை எடுத்தவன் முதலில் தன் தங்கையின் கல்லூரி நோக்கி சென்றான். அப்பொழுது நம் தேவி ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருப்பதை பார்த்து அவளிடம் என்ன என்று வினாவினான்? அவன்..

 

 

என்ன குட்டிமா என்ன யோசிச்சுட்டே வர என்ன ஆச்சு டா காலேஜ்ல எதும் பிரச்சினை யா டா ?

(மை.மைவா:ம்க்கும் உன் தங்கச்சினால காலேஜ்ல இருக்க யாருக்கும் பிரச்சினை வரமா இருந்த சரி புள்ளையா டா அது குட்டி  சாத்தான் 😈) (😠😠😠 இப்பே உங்க கிட்ட இத கேட்டங்களா?) (ஈஈஈஈ இந்த புள்ளை என்ன டா இப்படி மொறைக்குது உண்மையா சொன்னது ஒரு குத்தமா 🤷எதுக்கு வம்பு நம 🏃🏃🏃)..( கைல மாட்டமையா போவிங்க அப்போ வெச்சுக்குறேன் உங்கள இப்போ நான் போய் என் அண்ணனுக்கு பதில் சொல்லுறேன்)..

 

“அது எல்லாம் ஒரு பிராப்ளம் இல்லை  ண்ணா” இது வேற..

 

“அது தான் எது டா”?

 

“ம்ம் நேத்து இதே டைம்க்கு இங்க ஒரு பொண்ணு பார்த்தேம் லா அதான் இன்னைக்கும் அவங்கள வருவாங்களனு யோசிக்குறேன்”..

 

“நான் நேத்தே உங்கிட்ட சொன்னான் தான படிக்குற வேலையா மட்டும் பாரு கண்டதையும் யோசிக்காதன்னு”..

 

“ஈஈஈஈஈஈ சாரி ண்ணா அவங்க அழகா இருந்தங்களா” அதான்.

 

“ம்க்கும் இவ கிட்ட அவ நம்ம ஆபிஸ்ல தான் எனக்கு பிஏவா வொர்க் பண்ணுறான்னு இப்போ சொன்னேன் அப்புறம் அவ்வளவு தான்  இப்பவே கூட்டிக்கிட்டு போக சொல்லுவா வேண்டாம் இவகிட்ட இப்ப எதும் சொல்ல வேண்டாம். என்று மனதில் தனக்கு தானே கூறிக்கொண்டான்”..

 

” டேய் ண்ணா டேய்”

 

“ஹான் என்ன டா குட்டிமா”

 

‘சரியா போச்சு போ எவ்வளவு நேரம் கூப்புடுறேன் ‘காதுல விழுகலையா? என்னை சொல்லிட்டு நீ  இப்பே டிரிம்க்கு  போய்டியா?.

 

“அது எல்லாம் ஒன்னும் இல்லை டா”..

 

“அப்புறம் என்ன ரோசனை உனக்கு”?.

 

அது இன்னைக்கு ஒரு முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இருக்கு டா அதான் அத பத்தி யோசிச்சுட்டு இருந்தேன் வேற ஒன்னும் இல்லை.”இந்த மீட்டிங் சாக்ஸஸ்ஸாப்பூல்லா முடுஞ்ச நம்ம கம்பெனி நெக்ஸ்ட் லெவல்க்கு மூவ் ஆகும்”.

 

“கவலைப்படாத ண்ணா” அந்த மீட்டிங்க நீ வெற்றிகரமாக முடிப்ப அல் தி பெஸ்ட்..

 

இவ்வாறாக இருவரும் பேசிக்கொண்டே தேவியின் கல்லூரியை சென்றடைந்தனார்..

 

கல்லூரி வளாகத்தில் காரை நிறுத்தியவன் கிழ் இறங்கி தன் தங்கையிடம் “குட்டிம்மா இப்போ உன் கவனம் எல்லாம் படிப்பு மேல தான் இருக்கனும் சரியா வேற எதுவும் யோசிக்க கூடாது நல்ல படியா படிச்சு டிகிரியை  முடிக்கிற வழிய பாரு என்ன என்றவனை பார்த்து அங்கலாய்த்தவாரே   “ம்ம் நீ இந்த டையலாக் மாத்த மாட்டியா டா எப்ப பாரு படி படி சொல்லிக்கிட்டே இருக்க அதுலாம் நாங்க நல்ல படிப்போம் இப்பே நீங்க உங்க ஆபிஸ் கிளம்புறிங்களா டைம் ஆச்சு”..

 

“ம்க்கும் அதான இவளுக்கு போய் அட்வைஸ் பண்ணேன் பாரு என்ன சொல்லனும்”.

 

“பிரதர் நான் உங்ககிட்ட அட்வைஸ் கேட்டேனா?  நீங்களா தானே சொல்லுறிங்க  போவியா அங்குட்டு சரி சரி எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு நான் இப்பே உள்ள போறேன் நீயும் கிளம்பி போய் நல்ல படியா மீட்டிங் அட்டன் பண்ணு அல் தி பெஸ்ட் டாட்டா பை என்றவறு தன் வகுப்பறையை நோக்கி ஓடியேவிட்டாள் அவள்”..

 

அவள் சென்ற திசையை பார்த்து சிரித்தவன் “ஊருல பத்து பதினைஞ்சு தங்கச்சி வைச்சுருக்கவன்லாம் சந்தோசமா இருக்கன் எனக்குனு வந்து வாச்சுருக்கு பாரு குட்டி பிசாசு மாதிரி ஷ்ப்பா முடியலை டா,என்று புலம்பியவாறு தன் காரை கிளப்பிக்கொண்டு அலுவலகம் நோக்கி புறப்பட்டான்”..

துர்கா கார்த்திகேயன்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்