Loading

அத்தியாயம் 3

 

 

தன் அறைக்கு சென்றவள்,உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறை சென்று தன்னை தூய்மைப்படுத்தி கொண்டு வந்து  இளஞ்சிவப்பு வண்ண காட்டன் புடவை அணிந்து தன் இடை வரை நீண்ட கூந்தலை பின்னலிட்டு கண்ணாடி முன் நின்று தன்னை ஒருமுறை சரி பார்த்தவள்அறையிலிருந்து வெளியேறினாள்..

 

“கண்ணாம்மா ரெடியாகிட்டியா டா “.

 

“ஹான் ம்மா ரெடியாகிட்டேன் இதோ வரேன்..” என்று கூறியவாறே உணவு மேசைக்கு வந்தவள்.”ம்மா டிபன் எடுத்து வைங்க டைம் ஆகுது”.

 

“இதே டா வந்துட்டேன்” என்று கூறியவரே அவள் தட்டில் இரண்டு இட்லி வைத்து சாம்பார் ஊற்றியவரே,ஏன் டா கண்ணாம்மா நீ படிச்ச படிப்புக்கும் இப்பே பாக்க போற வேலைக்கும் சாம்பந்தமில்லையே டா அது உனக்கு கஷ்டமா இல்லையா?என்று வினாவினார்.

 

“ம்மா கஷ்டத்தை பாத்த எப்படி ம்மா,வேலையை கத்துக்குறது,அதாலம் கஷ்டமா இருக்காது ம்மா”. “அதுக்கு இல்லை டா நீ படிச்ச படிப்பு வேற இது வேற டா தங்கம்”அதான் என்று ஆதங்கபட்டவரை பார்த்து,”ம்மா எந்த வேலையையும் நம்ம பிடுச்சு , புருஞ்சுகிட்டு செஞ்சா அதோட கஷ்டம் தெரியாது” ம்மா.நீங்க கவலைப்படாதிங்க நான் பார்த்துக்குறேன்..

 

“சரிடா மா எது எப்படியே நல்லதே நடக்கட்டும்”.என்றவரை பார்த்து, “ம்மா அது எல்லாம் நல்லதா தான் நடக்கும்”.இரண்டு வருசம் கஷ்டப்பட்டு உழைச்சு பணம் சேர்த்துட்டு என் கனவான “லஷ்மி பெடிக்க” ஆரம்புச்சுட்டேனா போதும் அப்புறம் நான் கவலை இல்லமா இருப்பேன் ஓகே வா!என்றாள்.

 

“சரி டா தங்கம்” நீ சாப்பிட்டு கோவில் போய்ட்டு அப்புறமா இன்டர்வியூ போ சரியா?..”ஓகே ம்மா நீங்க சொன்ன மாதிரியே பண்ணுறேன்” இப்பே சிரிச்சுகிட்டே வந்து என்னை அனுப்புங்க பாக்கலாம்..என்றவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வழி அனுப்பி வைத்தவர். ஹாலில் மாட்டப்படிருந்த தன் கணவரின் புகைப்படத்தை பார்த்து “பாத்திங்கலாங்க நம்ம கண்ணம்மா இன்னைக்கு எவ்வளவு பெருச வளர்ந்து அவ கனவுக்கான முதல் படிய தேடி போற நீங்க இருந்துருந்தா நம்ம கண்ணம்மா இவ்வளவு கஷ்டப்பட மாட்டலாங்க”.என்று கூறியவர் தன் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தாவாரே தன் வேலையை பார்க்க சென்றார்.

 

தன் தாய்க்கு டாட்டா காண்பித்து தன் ஸ்கூட்டியை எடுத்தவள்,தன் இஷ்ட தெய்வமான சிவனலாயத்துக்கு சென்றாள்.அங்கு வீற்றிருக்கும் சிவனிடம் “ப்பா ஈசனே  நீங்க தான் எனக்கு துணை இருக்கனும்,நான் இன்னைக்கு என் கனவுக்கான முதல் படிய ஒரு வேலையை தேடி போறேன்,நீங்க தான் அதுக்கு துணை இருந்து என்ன வழி நடத்தனும்”ஆண்டாவ என்று வேண்டி  அங்கிருந்து புறப்பட்டாள்..

 

சிறிது நேர பயணத்திற்க்கு பின் தன் வர வேண்டிய அலுவலகத்தின் முன் வந்து நின்றவள்.அதான் பிரம்மாண்டத்தை பார்த்து வாயடைத்து நின்றாள்.

 

நகரத்தில் மையப்பகுதியில் ஏழு மாடி கண்ணாடி அடுக்குகள் கொண்டு “யோகேஷ் குரூப் ஆஃப் கம்பெயின்ஸ்”என்று பொன்னிற எழுத்துகளள் மின்னி கம்பீரமாக நின்றது.அந்த அலுவலகம் அதை பார்த்து தான் அவள் வாயடைத்து நின்றது..

 

‘சரி யாழி வந்தது வந்துட்டோம் இப்படி பயந்த எப்படி வேலைக்கு ஆகும் இது சரி வராது பயத்தை தூக்கி தூர போட்டு ஆபிஸ்க்குள்ள போடி..’என்று தனக்கு தானே பேசிக்கொண்டவள்.அந்த அலுவலகத்தை நோக்கி நடை போட்டாள்..

 

அலுவலகத்தின் வரவேற்ப்பபறைக்கு வந்தவள் அங்கே இருந்த வரவேற்ப்பாளினியை பார்த்து “எஸ்கியூஸ்மி இங்க இன்டர்வியூ எந்த எடத்துல மேம் நடக்குது”என்று வினாவினாள்?.

 

“யா மேம் செகண்ட் ஃபிளோருக்கு போங்க அங்க ரைட் சைட்ல செகண்ட் ரூம்” தான் இன்டர்வியூ நடக்குற இடம். “ஓகே தேங்க்ஸ்  மேம் என்று பூன்னகைத்தவரே அங்கிருந்து அகன்று மின்தூக்கியில் இரண்டாம் தளம் சென்றவள் அங்கு நேர்முக தேர்வு நடைப்பெறும் அறை முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து  தன் முறை வந்து அழைக்கும் வரை காத்திருந்தாள்..

 

தன் முறை வந்ததும் எழுந்து அந்த அறையினுள் சென்றவள்.அந்த அறையை நோட்டமிட்டவாறே அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமார்ந்தவள்.தன் பைலை எடுத்து தன் முன் இருந்தவன் முன் நீட்டினால்..இதுவரை தன் மடிக்கணினியில் பார்வையை பாதித்திருந்தவன் இப்பொழுது தான் நிமிர்ந்து பார்த்து ஆச்சர்யம் அடைந்தவன்!அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தவாரு இருந்தன்.

 

‘யாரு டா இவன் நம்ம பைலை நீட்டுறது கூட தெரியமா இப்படி பார்த்துக்கிட்டே இருக்கான் ஒருவேளை லூசா இருப்பானோ..?’என்று தன் மனதில் அவனை திட்டியாவறே வெளியில் சிரித்து வைத்தாள்.

 

அருகில் இருந்த வருண் “டேய் மச்சான் அடேய் என்று அவனை உலுக்கியவன்”அவன் காதின் அருகில் குனிந்து “ஏடேய் ஏன் டா அந்த புள்ளையா இந்த மாதிரி பாக்குற”, அந்த புள்ளையா ஏற்கனவே தெரியுமா?உனக்கு என்று கூறியவனை பார்த்து, “தெரியும் டா”என்றவனை பார்த்து ” இது எப்போ டா நடந்துச்சு எனக்கு தெரியாம”என்றவனை.

 

“அடேய் அடேய் உன் கற்பனை திறனை கொஞ்சம் மூட்டை கட்டி வை டா”,இவங்கள நேத்து தான் பார்த்தேன் அதும் சிக்கனல்ல என்று கூறியவனை பார்த்து, “அது சரி சிக்கினல்ல பார்த்துக்கே இப்படி வைச்ச கண்ணு வாங்காம பாக்குறேனே இந்த புள்ளையே”  இவனுக்கு பொண்டாட்டியா வந்த நல்ல இருக்கும்.என்று தன் மனதினில் நினைத்ததை எண்ணி சிரித்தவாறே, “சரி டா மச்சான் நீ அப்புறமா அந்த புள்ளையா பாரு ” இப்பே அவங்க ரொம்ப நேரமா பைல் நீட்டிகிட்டு இருக்காங்க அத வாங்கி பாரு என்றவன் தன் வேலையில் மூழ்கிவிட்டான்..

 

தன் நண்பன் சொன்ன பின்பு தன்னை ஒருநிலைப்படுத்தியவன் சுதாரித்து தன் முன் அமர்ந்தவளிடம் பைலை வாங்கி புரட்டி பார்த்தவன்,‌” மிஸ் யாழினி” நீங்க படுச்சது வேற இங்க இருக்க வொர்க் வேற  நீங்க எப்படி இதை செய்விங்க,எனி ரீசன் இந்த வொர்க்குக்கு நீங்க வந்ததுக்கு இருக்கா?

 

“எஸ் சார் நான் இந்த வொர்க்குக்கு வந்ததுக்கு ஒரு ரீசன் இருக்கு அது என் கனவுகளை அடைய தான்,இந்த வொர்க்க நான் சூஸ் பண்ணேன் எந்தவொரு அடிப்படை தேவைக்கும் பணம் ரொம்ப முக்கியம்,அந்த பணம் இப்போ எனக்கு தேவைப்படுது சொந்தங்கள் கிட்ட பணம் வாங்கவே இல்லை,அடுத்தவங்க கிட்ட பணம் வாங்குறதோ  எனக்கு பிடிக்காது சார்”அதான் இந்த வேலைக்கு வந்தேன் இதுல வர சம்பளத்தை சேமிச்சு என் லட்சியத்தை அடைவேன்,அப்புறேம் இப்போல்லாம் யாருக்கு சார் அவங்க படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்குது?கிடைச்ச வேலைய தான பாக்குறாங்க அந்த மாதிரி தான் இதுவும் அந்த வேலைய பிடிச்சு, புருஞ்சுகிட்டு செஞ்சாலே போதும்”சார்  என்றவளை பார்த்து பிரமித்து!!போனான் அவன்‌.

 

“வெல் சூப்பர் மிஸ் யாழினி உங்களோட இந்த உண்மை பேசுற குணம் புடுச்சிருக்கு, தென் நெக்ஸ்ட் திரி இயர்ஸ்க்கு உங்களுக்கு இங்க தான் வேலை,எனக்கு பிஏவா இருக்க உங்களுக்கு எதும் ஆப்ஜோக்க்ஷான் இருக்கா?

 

“நே சார் எனக்கு எந்த ஆப்ஜோக்க்ஷானும் இல்லை”.

 

“அப்பே சரி இந்த அக்ரிமெண்ட் பேப்பர்ல சைன் பண்ணிட்டு இன்னைக்கே நீங்க ஜாயின் பண்ணிக்கலாம்”.தென் உங்க சேலரி டீடையில்ஸ் அன்ட் வொர்க் பத்தி மிஸ்டர் வருண் சொல்லுவாரு “அவரு தான் நம்ம கம்பெனியோட ஜி.யெம்” ஒகே. “உங்களோட கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் மிஸ் யாழினி”என்று கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தான்..

 

“தேங்கியூ, தேங்கியூ சோ மச் சார்” என்றவள், தானும் எழுந்து அந்த அறையை விட்டு வெளியே வந்து தன் தாயிற்க்கு தொலைபேசியில் அழைத்து தனக்கு வேலை கிடைத்ததை பற்றி கூறியவள், “ம்மா நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க

எனக்கு எந்த கஷ்டமும் இல்லை ம்மா நான் வொர்க் முடிச்சிட்டு ஈவினிங் வந்து மீதியை பேசிக்கலாம் நீங்க காரெக்டா டைம்க்கு சாப்புட்டு ரெஸ்ட் எடுங்க”.என்றவள், அழைப்பை துண்டித்து தன் வேலையை பார்க்க சென்றாள்..

 

அவள் சென்ற பின் தன் நண்பனை பார்த்த வருண் “மச்சான் இவங்க சரி வருவாங்கல டா” என்றவனை பார்த்து “நம்பிக்கை அதானே எல்லாம்” அவங்களோட நேர்மை புடிச்சிருக்கு மச்சான், அதும் இல்லாம அவங்க வேலை மேல காட்டுனா ஆர்வம் புடுச்சிருந்துச்சு அதான் செலக்ட் பண்ணிட்டேன் பாக்கலாம். எப்படி வொர்க் பண்ணுவாங்கனு என்றவன். எழுந்து தன் அறை நோக்கி சென்றான்.

 

அவன் சென்ற பின் தானும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தவன் அதில் மூழ்கியும் விட்டான்.  சிறிது நேரத்தில் தன் அறை கதவு தட்டப்படும் ஓசை கேட்டு தலை நிமிர்த்தியவன். “எக்ஸ்கியூஸ்மி சார் மே ஐ கமின் ” என்று கூறியவளை பார்தது தலையசைத்து உள்ளே வருமாறு பணிந்தான்..

 

“ஹாய் சார் ஐம் யாழினியாள்”நீங்க தான் ஜி.எம்மா?.

 

“யா நான் தான் அது,ஒகே இந்த சாரு மோருலம் விட்டுட்டு மா.நான் உன்னை விட இரண்டு வருசம் தான் பெரியவனா இருப்பேன்” , சே நீ என்னை அண்ணானே  கூப்பிடலாம் என்றான்..

 

அவன் கூறியதை பார்த்து சற்று சிந்தித்தவள்,”நான் உங்களை இன்னைக்கு தான் பாக்குறேன் “,அப்புறம் எப்படி பார்த்த உடனே அண்ணா சொல்ல முடியும்?என்று வினாவியவள் அவனை பார்த்து சிரித்தவாறே , ஒகே நான் உங்களை அண்ணானே கூப்புடுறேன்.ஒகேவா வருண் அண்ணா‌ என்றாள்..

 

அவளை பார்த்து சிரித்தவன்,”எனக்கு ஒரு தங்கச்சி இருந்த உன்னை மாதிரியே இருப்பானு தான் நான் அண்ணானு கூப்புட சொன்னேன் டா யாழிமா”,நான் உன்னை இப்படி கூப்பிடலாம டா ? என்று வினாவினான்..

 

அவனை பார்த்து பூன்னகைப்பூத்தவள்,”தாரளாம கூப்பிடலாம் அண்ணா என்றாள்…

 

“குட் டா யாழிமா தேங்கியூடா” என்றவன் அவளுக்கு வேலைகளை பற்றி விவரிக்க ஆரம்பித்தான்.

 

டெய்லியும் நீ வந்து நம்ம எம்.டி “மிஸ்டர் யோகேஷ்ஷோட மீட்டிங்க் எத்தன மணிக்கு அப்புறம் அவரோட ஓர்க் என்னென்ன இன்னைக்கு அவர் எங்க போகனும் அவன் என்ன பண்ணனுமுனு அவனுக்கு சொல்லனும் என்றவனை பார்த்தாள் அவள்..

 

“சரி டா யாழிமா இன்னைக்கு ஒரு நாள் நீ போய் நம்ம கம்பெனிய சுத்தி பாரு..” என்றான் அவன்.

 

சரி ணா என்றவள்,அந்த அலுவலகத்தை சுற்றி பார்க்க சென்றாள் அவள்.

 

சிறிது நேரத்தில் தன் அறைக்கு வந்தவள் “அண்ணா வருண் அண்ணா நான் எல்லா இடமும் சுத்திட்டு பார்த்துட்டு வந்துட்டேன்”.இப்பே  நான் என் வேலையை பார்க்கலாம??என்றவளை.

 

பார்த்துமென்னகை புரிந்தவன்  கண்டிப்பா பார்க்கலாம் டா என்றான்.

 

இவளும் சென்று தன் வேலையில் முழ்கி போனாள்.”இனிமா சாயங்கலாம் 5மணி அச்சு டா நீ வீட்டுக்கு கிளம்பு”என்றான் அவன்..

 

“இதோ அண்ணா என்றவள் தன் வேலைகளை முடித்துவிட்டு அவள் இல்லம் நோக்கி புறப்பட்டாள்..

 

 

துர்கா கார்த்திகேயன்

                               

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்