Loading

பாண்டிச்சேரியில் கடற்கரை அருகே அமைந்துள்ள மிக பெரிய கல்யாண மண்டபம். நடப்பதோ இரு பெரும் செல்வ குடும்பங்களின் இணைவு. இரண்டு பக்கமும் நடக்கும் முதல் விசேஷம். பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டு இருப்பது மண்டபத்தின் ஆடம்பரத்தில் தெரிய,

மாதவ் வெட்ஸ் பிரணிதா என்ற மலர் எழுத்துக்கள் வாசலில் அலங்கரித்திருக்க, 

மணமகள் அறையில் பிரணிதா தன் வாழ்க்கையின் முக்கிய அத்தியாயத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தாள். 

****

“கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்ற சத்தத்தில் தன் கையில் இருந்த தாலியை இறுக்கிய முகத்துடன் பிரணிதா கழுத்தில் கட்டியிருந்தான் பிரணவ்.  நடப்பது வந்த சுற்றத்தினர் பலருக்கும்  புரியாவிட்டாலும் மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.

வீட்டின் ஓரத்தில் கல்யாணப் புடவை இன்னும் மாற்றப்படாமல், கழுத்தில் இருக்கும் மாலை கூட கழட்டப்படாமல் இருக்க, கண்களில் இருந்து வழியும் கண்ணீரை துடைக்க மறந்து சிலையாக நின்று இருந்தாள் பிரணிதா. 

“ஐயோ என் பொண்ணு வாழ்க்கை போச்சே… நீங்க எல்லாரும் இப்படி நம்ப வெச்சு ஏமாத்திட்டீங்களே….  உனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம் டா. வந்திடு அம்மா கூடவே வந்துடு” என்று கதறும் தாயை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கவலையுடன் பார்த்தாள் பிரணிதா. 

உயிரோட்டங்கள் தொடரட்டும்…..

நிலானி தாஸ் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்