Loading

லோக்கல் சேனலில் இருந்து நேஷ்னல் சேனல் வரை மேத்தா புரொடக்ஷன்ஸ் இயக்கும் அடுத்த படமே விவாத பொருளாக இருந்தது. 

 

காரணம் அசோக் மேத்தா இறந்து அடுத்த தலைமையில் எடுக்க போகும் முதல் படம். அதுவும் தென்னிந்திய நடிகர் என்பதால் எல்லா இடமும் இதே பேச்சு. 

 

விபி இல்லம், 

 

கார்த்திக்  “என்னடா இவ்வளவு பெரிய விசயம் நடந்து இருக்கு உன் முகத்தில் சந்தோசமே இல்லை.  என்ன தான் உனக்கு பிரச்சினை.  ஜெனி கிட்ட கூட ஒழுங்கா பேசலைனு அவ மது கிட்ட புலம்பி தள்ளி இருக்கா” என்று கடலை வெறித்து கொண்டு இருக்கும் நண்பனிடம் கேட்க, 

 

“ஒன்னுமில்ல டா வாழ்க்கையில் நம்ம நினைக்காதது நம்ம கட்டுபாடு இல்லாமல் நடந்தா நம்மால் ரியாக்ட் கூட பண்ண முடியாதுல அதான் நான் இப்படி இருக்கேன். சரி ஆகிடுவேன்” என்று மனதில் தோன்றியதை சொல்ல,

 

“அப்படி  உன் கட்டுப்பாடு இல்லாமல் என்ன நடந்துச்சு” என்று கேள்வியாக பார்க்க, 

 

சற்று தெளிந்து “இப்ப நான் ஓகே கார்த்தி…. கொஞ்சம் மயின்ட் டிஸ்டர்பா இருந்துச்சு. நௌ ஆல் கிளியர்” என 

 

“எதோ சொல்ற…. சரி என்னடா எப்ப மும்பை போற” என்றதும் 

 

“நாளைக்கு கிளம்பனும் டா. அதுக்கு அடுத்த நாளே பூஜை இருக்கு, இந்த மந்த் என்டில் ஸூட்டிங் ஸ்டார்ட் ஆகுது டா” என

 

“சூப்பரு……  மூவி நேம் என்ன டா இன்னும் சொல்லலை” 

 

“ம்ம்….  பூஜையில் சொல்லுவாங்க  போல” என்று யோசனையாக சொல்ல, 

 

“உனக்காவது தெரியுமா இல்ல உன் கிட்டவும் சொல்லலையா” என்று கேலியாக கேட்க, 

 

சலித்து கொண்டு “சார் இருக்கும் போது சொன்னாங்க டா. இப்ப அது தானானு சொல்லமுடியாது டா. மாற்றி இருந்தாலும் இருக்கலாம்” என

“ம்ம்…. சார் என்ன நேம் சொன்னார்” என்று ஆர்வமாக கேட்டான். படத்தின் பெயர் தான் முதல் விளம்பரம். பெயரால் கவர்ந்து படம் பார்க்க வருவோர் நிறைய பேர். அதற்காகவே ஒவ்வொரு படத்தின் பெயரையும் மக்கள் மனதில் பதிய வேண்டும் என்று எண்ணத்தோடு வெளியிடுவார்கள். 

 

“சொல்லலைனா விட மாட்ட போல. படத்தோட பெயர் ‘பியார் கீ துனியா’ (காதலின் உலகம்)” என

 

“இதுவே நல்லா இருக்கு டா. உன்னோட முதல் பாலிவுட் படத்திற்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் டா. நீ மேலும் மேலும் வளர்ந்து பெரிய நடிகனாகி ஹாலிவுட் போகனும்” என்று எந்தவித பொறாமையும் இல்லாமல் வாழ்த்த, 

 

“தாங்ஸ் டா” என்று அவனை அனைத்து கொண்டான். 

 

மும்பை, மலபார் ஹில்ஸ் பெரும் செல்வந்தர்கள் வாழும் பகுதி.  அங்கு தான் இருக்கிறது மேத்தா மேன்சன். 

 

வந்த முதல் நாளே தாயின் நினைவாக இருந்த ஊஞ்சலை சீர் செய்து விட்டாள். தாயின் மடியில் தலை சாய்க்க தான் வழியில்லை.  தாய் மடியின் சுகத்தை கொடுத்த ஊஞ்சலை தடவிக்கொண்டு அடுத்து நடக்க வேண்டியதை யோசித்தாள். 

 

‘சொந்தமே இல்லாத நாட்டில் கூட நான் தனிமையை உணரலை. ஆனால் சொந்த வீட்டில் தனிமை ரொம்ப மிரட்டுதே. இத்தனை வருசத்தில் இவங்க கொஞ்சம் மாறி இருப்பாங்கனு நினைச்சேன். பத்து வயசில் நான் போகும் போது எப்படி இருந்தாங்களோ இப்பவும் இப்படியே தான் இருக்காங்க’ என்று பாயலும் சுலோச்சனா வீட்டிற்கும் வந்ததும் நடந்த நிகழ்விலே மனது சுற்றியது. 

 

எதோ ஒரு பைலை வீட்டுலே வைத்து விட்டது நியாபகம் வர, அதை எடுக்கவே மதியம் போல் வீட்டுக்கு வந்தவளை வரவேற்றது “வாடியமா என்ன அதிசயமா இந்த பக்கம் எல்லாம் வந்து இருக்க. அப்பா தான் இல்லையே இனி அவர் சொத்து மொத்தம் நமக்கு தான் என்ற எண்ணம் போல. வந்ததும் எல்லாத்தையும் பிடிச்சிட்ட. எல்லாத்துக்கும் வாரிசா என் பொண்ணு இருக்க அவளுக்கு துணையா நான் இருக்கேன் என் தம்பி இருக்கான் ராஜா மாதிரி. உன்னை யாரு இங்க கூப்பிட்டா.

 

சும்மா சொல்ல கூடாது உன் அம்மா மாதிரியே இருக்க, இப்படி தான் அவளும் நான் ஆசையா காத்திருக்க   குறுக வந்து எல்லாத்தையும் மாற்றி விட்டுட்டா. ரொம்ப கஷ்டப்பட்டு திரும்ப நான் ஆசை பட்டது எல்லாம் எனக்கு கிடைச்சது. இப்ப நீ என்ன செய்ய போற” என்று எதோ எதோ பேசி அவள் மனதை வதைக்க,

 

“அம்மா” என்ற பாயல் குரலில் தான் அவள் நிறுத்தினாள். பாயல் உடனே “அவங்க தீ உங்களை இப்ப தான் முதல் முறை பார்க்கறேன். அப்படியே அப்பா மாதிரி இருக்கீங்க” என்று ஆசையாக அவள் முகத்தில் வருடி கொண்டே சொல்ல,

 

சுலோ “ஆமா அது ஒன்னு தான் குறை” என்று அவளை இழுத்து கொண்டே உள்ளே சென்று விட்டார்.

 

முயன்று தளரும் மனதை தேற்றிக் கொண்டு நேத்ரனுக்கு அழைத்தாள். 

 

“சொல்லுங்க மேம்”

 

“நாளைக்கு நடக்கிற பூஐைக்கு வேண்டிய ஏற்பாடு எல்லாம் ஓவரா”

 

“எஸ் மேம். எல்லாமே தயாரா தான் இருக்கு. விபி சார் மார்னிங் மும்பை வந்திட்டார். ஹோட்டலில் ஸ்டே பண்ணி இருக்கார். நாளைக்கு மார்னிங் ஸ்டூடியோ வந்திடுவார். மேம்  நீங்க எப்ப வருவிங்க” என

 

“நான் வரனுமா நேத்ரன் நீங்க மேனேஜ் பண்ணிக்க மாட்டிங்களா” 

 

“இல்ல மேம்… சாருக்கு அப்புறம் யார் வருவானு நம்ம போட்டி கம்பெனி எல்லாமே ஆவலாக பார்த்திட்டு இருக்காங்க. நம்ம தனியா ப்ரெஸ் மீட் வெச்சி சொல்றதை விட இந்த பூஐை மூலமா காண்பிக்கலாம் மேம்” என்று என்ன சொல்லுவாங்களோ என்ற தயக்கத்தில் சொல்ல, 

 

“யூ ஆர் ரயிட் நேத்ரன். நான் நேரத்திற்கு அங்க இருப்பேன்”

மறுநாள், 

 

உரிய நேரத்தில் அனைவரும் வந்து விட விபி மட்டுமே வரவில்லை. மோகித்ராவே வந்து விட்டாள். 

 

சில துணை இயக்குநர் மோகித்ரா காதுப்படவே  ‘பூஐைக்கே நடிகர் லேட் ரொம்ப நல்ல ஆரம்பம் மாதிரி இல்ல. இந்த படம் முடியக்குள்ள நம்ம காலி. நம்மலே இவ்வளவு பதட்டத்தில் இருக்கோம் மேடமை பாரேன் கூலா இருக்காங்க’

 

‘பணம் பத்தும் செய்யும். இங்க தான் உழைக்காமலே பல கோடி சொத்துக்கு வாரிசு ஆகியாச்சே.  எப்படி நேரத்தோட மகிமை, உழைக்கும் அருமை எல்லாம் புரிய போகுது’

 

சலசலப்புக்கு மத்தியில் வெள்ளை நிற குர்தி மற்றும் ஜீன்ஸ் அணிந்து சோர்வான முகத்துடன் விபி வர, 

 

அடுத்த நிமிடம் வேகமாக பூஐைக்கான ஏற்பாடு தொடங்கியது. 

 

மோகித்ரா எதிலும் கலந்துக் கொள்ளாமல் ஒரமாக நின்று கொண்டு கண்கள் வேடிக்கை பார்க்க, மனமோ காலையில் நடந்ததை நினைவு கூர்ந்தது. 

ஜூவுவின் கடற்கரை பகுதியில் இருக்கும்  ஹோட்டல் நோவோட்டலில் நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்த விபியை எழுப்பியது அவனது கைபேசியின் ஓசை. 

 

“ஹலோ….. ” என்று தூக்கம் கலையா குரலில் சொல்ல, 

 

“குட் மார்னிங் டா…. இன்னுமா தூங்கற…  படத்தோட பூஐைக்கு போகனும்னு சொன்னியே” என்ற தாயின் குரலில் அடித்து பிடித்து எழுந்தவன் நேரத்தை பார்த்து, 

 

“மா… வந்து பேசறேன் நேரம் ஆச்சு”  என்று வேகமாக குளித்து விட்டு நேற்று நேத்ரன் கொடுத்த பார்சலை பிரித்து கொண்டே, 

 

“ஸ்கூல் பசங்க மாதிரி ஒரே கலரில் டிரஸ் போடனும்னு கடுப்பை கிளம்பிட்டு” என்று பிரித்து அதில் இருந்த வெள்ளை குர்தியை பார்த்து, 

 

“வைட்  கலரா…. நோ….” என்று நொடியும் தாமதிக்காமல் மோகித்ராவிற்கு அழைக்க, 

 

“ஹலோ…  கோன் ஹ” (யாரது)   என

 

‘கட்டின புருஷன் நம்பர் தெரியலை. இதுல கோன் ஹ குச்சி ஐஸ் ஹ னு.  இவளுக்கு புருஷன் நான் தான் என்றதே மறந்து போய் இருக்கும் இதுல வாய்ஸ் வெச்சி கண்டிப்பிக்கலைனு உனக்கு ப்ளிங்கு’ என்று மனசாட்சி துப்ப, 

 

“விபி பேசறேன் மேடம்” என்று அழுத்தமாக சொல்ல, 

 

“ஓ… சொல்லுங்க”

 

‘சொல்றாங்க சுரைக்காய்க்கு உப்பு இல்லனு’ என்று வாய் வரை வந்த வார்த்தையை முழுங்கி விட்டு, 

 

“என்னால  வைட்  குர்தா எல்லாம்  போட முடியாது. வேற போட்டு வரேன்” என்று பள்ளி மாணவனை போல் குறை சொல்ல, 

 

“இடியட்…. படத்துல நடிக்கனும்னா அந்த டிரஸை போட்டு வா… இல்ல அப்படியே போய்டு” என்று கோபத்தில் கத்த, 

 

விபிக்கு ஒன்றும் புரியவில்லை. வேற சட்டை போடுறேன்னு சொன்னது ஒரு தப்பா என்று விழிக்க, 

 

அந்த பக்கம் மோகித்ரா ஏற்கனவே இருந்த கோபத்தில் விபி கேட்டதும் கத்தி விட்டு போனை வைத்து விட்டாள். 

 

அவனுக்கு தெரியாதே இந்த ஏற்பாடு செய்தது எல்லாம் நேத்ரன் என்று. 

 

‘என்னை என் அம்மா கூட திட்ட மாட்டாங்க… இப்ப இந்த வெள்ளை சட்டையை போடனுமா….’ என்று அழுது கொண்டே குர்தாவை  போட்டவனுக்கு தெரியவில்லை அடுத்த நடக்க போகும் சம்பவம். 

 

அதிகாரம்… அனைத்திலும் சிலருக்கு அதிகாரமாக தான் இருக்க தெரியும் கோவத்தில் பாசத்தில் அக்கரையில் அழுகையில் ஆளுமையில் சிரிப்பில் சிந்தனையில் சொல்ல போனால் சோகத்தில் கூட அவர்களுக்கு அதிகாரமாக தான் காட்ட தெரியும். அவர்களே அறியாத உணர்வை வெளிக்கொண்டு வரும் உறவே எவரோ???

தொடரட்டும் 

நிலானி 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்