Loading

இரு தினங்கள் கழித்து திருவான்மியூரில் தனது அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் இருந்து தூரத்தில் தெரிந்த கடலை நோக்கினான் விபி. 

 

தாயின் கண்டிப்பாக வளர்ப்பில் வளர்ந்தவன். அவ்வளவு எளிதில் அக்ரிமெண்ட் கல்யாணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தும் முடிந்தது. ஒரே கையெழுத்தில் இதற்கு முன் சந்திக்காத பெண்ணின் கணவன் ஆகினான். 

 

இன்னும் இதை யாரிடமும் சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை அது தான் உண்மையும் கூட. 

 

‘கடவுளே…. இது மட்டும் அம்மாக்கும் ஜெனிக்கும் தெரிஞ்சா என்ன ஆகும்.  அம்மாவை கூட சமாளிச்சடலாம். ஆனால் ஜெனி அவ கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன். என்னை மிரட்டி சம்மதிக்க வெச்சாங்கனா. நல்லா புலம்ப வெச்சிட்டிங்களே மேடம்’ என்றவனின் புலம்பலை தடை செய்தது போன் ஒலி.  அதை பார்த்து

 

‘நல்லது.  ரொம்ப நல்லது.  நான் யாருக்கு என்ன தீங்கு இழைத்தேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி.  இப்ப எதுக்கு ஜெனி கால் பண்றா’ என்று எண்ணி கொண்டே,

 

“ஹலோ விபி என்னடா இரண்டு நாளா போனில் கூட உன்னை பிடிக்க முடியலை அப்படி எந்த கிரகத்திற்கு போன” என்று காட்டமாக கேட்க, 

“கொஞ்சம் உடம்பு முடியலை ஜெனி அதான் போன் எடுக்கல” என்று சின்ன குரலில் சொல்ல, 

 

“என்ன ஆச்சு உன் குரல் ஏன் இப்படி டல்லா இருக்கு. ஹாஸ்பிடல் போனியா இல்லையா” என்று தவிப்பாக கேட்க,

 

“போ.. னேன் மா. நீ எங்க இருக்க” என்று பொய்யை சொல்ல முடியாமல் தடுமாற, 

 

“வேற எங்க கோயிங் டூ ஸ்டூடியோ. எதோ வாய்ஸ் டேஸ்ட் எடுக்கனும்னு சொன்னாங்க. சரி உடம்பை பார்த்துக்கோ எனக்கு ஒரு வாரத்திற்கு செம டயிட் ஸ்கேடியூல். ஃப்ரீ டைமில் கால் பண்றேன்”

 

“ம்ம்ம்… பாய் டேக் கேர்” என்று போனை வைக்க, மறுபுறம்

 

மது “என்ன மேடம் எதோ யோசனையில் இருக்கிங்க”

 

“விபி கிட்ட எதோ மிஸ்ஸிங் மது. அவனோட வாய்ஸ் சரியில்ல அவனோட பேச்சு கூட கம்மியா இருக்கு” என்று உணர்ந்தே கூறினாள். என்னதான் காதலன் என்று கூறினாலும் இருவரும் நல்ல நண்பர்கள்.

 

“அப்படி எல்லாம் இருக்காது மேடம். நீங்க தான் தேவையில்லாத விதயத்தை எல்லாம் யோசிச்சு மனசை குழப்பிக்கிறீங்க” என்று ஆதரவாக பேச,

 

“இருக்கலாம் ஆனால் நம்ம மனசு சொல்றது தப்பா இருக்காதே நீ எதுக்கும் கார்த்திக்  போன் பண்ணி கேளு.  அம்மாவை பார்க்க போறதா விபி ஏற்கனவே சொன்னான். ஒரு வேளை ஆன்ட்டி க்கும் இவனுக்கும் எதாவது சண்டையாக  கூட இருக்கலாம்” என 

 

“நான் கேட்கறேன் மேடம்” என்றாள்.

கல்கத்தா

 

“சார் உங்க மாமா பொண்ணு எல்லா பிஸ்னஸையும் அவங்க கன்ட்ரோலில் கொண்டு வந்திட்டாங்க.  நம்மால் இப்ப பணத்தை எடுக்க முடியலை” என்று ஜெயதேவ்வின் நம்பிக்கையான ஆள் சொல்ல, 

 

“எப்படி இவ்வளவு நாள் இல்லாமல் இப்ப புதுசா இவ வந்தா. வந்ததும் என் விசயத்தில் மூக்கை வேற நுழைக்கிறா. எப்படி இது எல்லாம் நடந்தது”  என்று கோபமாக ஜெயதேவ் கேட்க, 

 

“தெரியலை சார் ரொம்ப ரகசியமா பொறுப்பை எல்லாம் அவங்க பெயருக்கு மாற்றி இருக்காங்க”

 

“இடியட்… வை போனை” என்று வைத்து விட்டு,  “இந்த அக்கா என்ன தான் பண்ணுதோ யாரோ ஒருத்தர்  வந்ததை எல்லாம் தேவையே இல்லாமல் கால் பண்ணி சொல்லும் இப்ப இவ்வளவு பெரிய விசயம் நடந்து இருக்கு எதுவும் சொல்லலை”  என்று போன் செய்ய முதலில் முழு ரிங் சென்று கட்டாகி விட அடுத்து முறை முயன்ற பின் எடுக்கப்பட, 

 

“தம்பி நானே கால் பண்ணனும்னு இருந்தேன்டா….  இங்க சிக்னல் சரியா  கிடைக்கலை. நானும் பாப்பாவும் ராமேஸ்வரம் வந்து இருக்கோம்டா. மாமா வோட அஸ்தி இங்க தான் கரைக்கிறதா சொல்லி இருந்தேனே” என்று எதிரே பேச விடாமல் சொல்ல, 

 

தன் கோபத்தை முழுவதுமாக கட்டுப்படுத்தி “சரி அக்கா பார்த்து வாங்க. இங்க இருக்கிற பிரச்சினையை கேட்கலாம்னு தான் கால் பண்ணேன். உனக்கு விசயமே தெரியாது போல” என்று பொடி வைத்து சொல்ல, 

 

“என்னடா விசயம்”

 

“உன் புருஷனோட முதல் பொண்ணு வந்திருக்கா அதுவும் மொத்த சொத்துக்கும் உரிமைக்காரியா” என 

 

“இது என்னடா கொடுமை. காத்திருந்தவ சொத்தை நேத்து வந்தவ தூக்கிட்டு போறத. நாளைக்கு காலையில் நான் அங்க இருப்பேன் டா. பார்க்கறேன் அவளா நானானு” என்று கோவத்தில் சொல்ல,

 

“போய் பார்த்துட்டு என்னன்னு சொல்லு இப்ப என்னால வரமுடியாத நிலைமை. இல்லனா உனக்கு முன்னே நான் அங்க இருந்து இருப்பேன்” என்று கடுப்பாக சொல்ல,

 

“புரியுது டா. நீ உடம்பை பார்த்துக்கோ. வேலை வேலைனு அலைஞ்சு உடம்மை கெடுத்துக்காத” என்று தாயில்லா வளர்ந்த தம்பியின் மேல் பாசம் பொங்க சொல்ல, 

 

“சரி அக்கா” என்று கைபேசியை அனைக்க,  அது வரை பேசிக்கொண்டு இருந்ததை கேட்ட பாயல் “யார்மா வந்து இருக்கா” என்றதுக்கு

 

“அந்த வெளிநாட்டுக்காரி தான். அவளை இங்க யாரு எதிர்பார்த்தா” என்று கோபமாக மொழிய, 

 

‘கடவுளே… அவங்க இனி திரும்ப போக கூடாது. என் கூடவே இருக்கனும். இதை மட்டும் எனக்கு கொடு போதும்’ என்று வேண்டுதலுடன் மும்பை  செல்ல தயாரானாள் பாயல் மேத்தா. 

மேத்தா குளோப்ஸ், 

 

நேத்ரன் “எனக்கு இது எப்படி நடந்தது எதுமே தெரியாது மேடம்.  சார் இருக்கிற வரை என் கிட்ட இருந்த எல்லா அதிகாரத்தையும்  சார் இறந்த அன்றைக்கே வாங்கிட்டு என்னை மெட்ராஸ் பிரென்ச் க்கு  சம்மந்தமே இல்லாத போஸ்டில் போட்டாங்க. என்னை வேலை விட்டு தூக்க தான் பார்த்தாங்க. பட் மேத்தா சார் என்னை ஹெயர் பண்ணும் போதே எயிட் இயர் அக்ரிமெண்ட் போட்டு தான் எடுத்தாங்க.  அதான் என்னை டிரான்ஸ்வர் பண்ணிடாங்க” என

 

சற்று முன் அறிந்த தகவலால் கோபமும் ஆதங்கமும் ஒருங்கிணைந்த நிலையில் இருந்த மோகித்ரா  “அப்பாவிற்கு அடுத்து யார் கிட்ட அதிக ஷார்ஸ்”

 

“மேம் அது ரோஷன். பட் அவர் பின்னாடி யாரோ இருக்காங்க” என்று தன் சந்தேகத்தையும் சேர்த்தே சொல்ல,

 

“வேல்…. மேக் அ மீட்டிங் வித் இம். கீப் இட் சீக்ரெட்”

 

“ஓகே மேம்” என்று கிளம்ப கதவு அருகே செல்ல, 

 

“நேத்ரன்” என்று கூப்பிட “எஸ் மேம்” என்று அவளின் சொல்லிற்காக காத்திருக்க, 

 

“விஸ்… விபி மூவி எந்த நிலையில் இருக்கு” என்றதும், 

 

“மேம் இன்னும் எதுமே ஸ்டார்ட் பண்ணலை”  என்று தயக்கமாக சொல்ல,

 

“ஓகே தென் பிரஸ் மீட் மாதிரி சின்னதா அரென்ச் பண்ணி மூவி டைட்டில் மற்றும் கேஸ்ட் பப்ளிஷ் பண்ணிடுங்க” என்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள். 

 

நமக்கு என்று இருப்பது எங்கே இருந்தாலும் அது என்றும் நமக்கு   மட்டுமே சொந்தம். இடையில் என்ன நடந்தாலும் முடிவில் அது நமக்கானதாக இருக்கும். ஓடும் பாதை கடினமாக இருந்தாலும் சேரும் இடம் நமதாக இருக்கும். சேர போகும் இடம் எதுவோ???

தொடரட்டும் 

நிலானி 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்