“நான் சொல்றதை கேட்க கூடாதுனே இருக்காள். இன்றைக்கு என் அம்மாவை பார்க்க போகலாம்னு இருந்தேன். ஆனால் எல்லா பிளானும் மாறிடுச்சு. நாளைக்கு தான் பார்க்க போகனும்” என்று புலம்பி கொண்டே வெளியே செல்ல தயாராகி கொண்டு இருக்கான்.
ஜெனி நேற்று நைட்டே சென்னை வந்துவிட்டாள். இப்பொழுது அவளை பார்க்க தான் வேக வேகமாக கிளம்பிக் கொண்டு இருக்கிறான். இல்லை என்றால் மேடம் அவனது ஊருக்கே வந்துவிடுவதாக மிரட்டல் வேறு. ‘இவளை வெச்சுட்டு சப்பா….. முடியலை’ என்று கடுப்புடன் அவர்களின் ஃபேவரைட் ஸ்பாட் குயின்ஸி கஃபே சென்றான். கண்டிப்பாக இவனுக்கு முன்னாடியே வந்து காத்திருப்பாள்.
“இந்த வொயிட் சர்ட் போடலாம்னு பார்த்த போடவே மனசு வர மாட்டேன்து. இவளுக்கு தான் தெரியுமே எனக்கு இந்த கலர் பிடிக்காதுன்னு இருந்து வாங்கி கொடுத்து இருக்கா” என்று அவன் பிறந்தநாளுக்காக அவள் கொடுத்த சட்டையை எடுத்து பார்த்தவன் திரும்ப அதை அங்கையே வைத்து விட்டு வேற சட்டையை அணிந்து கொண்டான்.
‘என் கிட்ட படத்தை டைரக்டர் சொல்லும் போதே வொயிட் கலரில் டிரஸ் மட்டும் வேண்டாமே என்ற கண்டிஷனுடன் தான் படமே கமிட் ஆகிறேன். எல்லாரும் என்ன என்ன கண்டிஷன் போடுவாங்க நான் எதை போடுறேன் பார்த்தா எனக்கே சிரிப்பா தான் இருக்கு. இருந்தும் என்ன செய்ய அந்த கலர் மேல ஒரே வெறுப்பு. இப்ப வந்த வெறுப்பு இல்லை. நான் என் அப்பாவை இழந்த நேரம் என் அம்மா அப்பக்காக விரும்பியே அவங்களுக்கு பிடிச்ச வண்ணங்களை விட்டுட்டு வெள்ளை புடவை மட்டும் கட்ட ஆரம்பிச்ச போதில் இருந்து அந்த கலர் மேல வெறுப்பு தான்’ என்று அவன் மனதில் நினைத்து கொண்டே கார் ஒட்டிக்கொண்டு இருந்தான்.
விபி குயின்ஸி கஃபே அடைய அங்கே அவன் நினைத்தது போல் ஜெனி காத்திருந்தாள்.
ஜெனி “விபி ஆல்வேஸ் லேட். நான் எவ்வளவு நேரமா தான் வெயிட் பண்றது”
“நான் சொன்ன டைமிற்கு கரெக்டா தான் வந்து இருக்கேன். நீ தான் லூசு முன்னாடியே வந்து இருக்க” என்று அவளின் தலையை தட்டி அவள் எதிரே அமர்ந்தான்.
“உன்னை ரொம்ப நாள் கழித்து பார்க்க போற ஆர்வம். சரி அதை விடு எனக்கு என்ன வாங்கிட்டு வந்த” என்று ஆர்வமாக கேட்க,
“நான் வந்ததே உனக்கு பெரிய கிஃப்ட் தான். ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா ஏன் நோயாளி மாதிரி இருக்க” என்று அவளின் மெலிந்த உடலை பார்த்து கேட்க,
“டேய்… கஷ்டப்பட்டு அடுத்த படத்துக்காக உடம்பை குறைச்சா அசால்ட்டா நோயாளினு சொல்ற. என் அடுத்த பட ரோல் என்ன தெரியுமா. ஸ்கூல் ஸ்டோரி டா. அப்ப ஸ்கூல் படித்திற பொண்ணு மாதிரி இருக்கனும்ல” என்று அவளின் முகத்தை திருப்பி திருப்பி காட்ட,
“அடிப்பாவி நீ கொடுத்த பில்டப்பில் எதோ சரித்திர கதைனு நினைச்சிட்டேன்” என்று வாய் மேல் கையை வைத்து சொல்ல,
“விபி அம்மா கிட்டபேசிட்டியா. என் அப்பா உடம்பு வேற நாளுக்கு நாள் ரொம்ப மோசமாக போயிட்டு இருக்கு. நான் உன்னை காதலிக்கிற விசயத்தை இன்னும் சொல்லாமல் தான் இருக்கேன். ஆனால் அவருக்கு என்னுடைய கல்யாணத்தை பார்க்கனும்னு ரொம்ப ஆசை. சீக்கிரமா எதாவது செய்டா” என்று தன் தந்தையின் ஆசைக்காக கேட்க,
“இன்றைக்கு அதுக்கு தான் ஊருக்கு போகலாம்னு இருந்தேன். மேடம் அதுக்குள்ள வந்து என் பிளானை மொத்தமா கெடுத்துட்டு பேச்சை பாரு நாளைக்கு வேற கமிட்மென்ட் இருக்கு. நாளப்பின்ன தான் கிளம்பனும்” என்று தன் நிலைமையை சொல்ல,
“சாரிடா நீ தானே சொன்ன அடுத்த படம் ஸ்டார்ட் பண்ணிட்டா பிஸியாகிடுவனு அதான்” என்று இழுக்கும் ஜெனியை பார்த்து
“அம்மா கிட்ட சீக்கிரமா பேசிட்டு சொல்றேன் ஜெனி. இதை நினைச்சுட்டு ஸ்ட்ரெஸ் ஆகாதே. கிளம்பலாமா. நாளைக்கு இப்ப பண்ண படத்தில் கொஞ்ச சீனுக்கு டயலாக் மாற்றி இருக்காங்க. அதை முடிச்சிட்டா மூவி ஓவர். டைம் ஆகுது நான் கிளம்பவா” என
‘பாய் டா. அதோ என்னை விட்டு போறதை நினைச்சாலே ஒரு மாதிரி இருக்குடா. எதோ பாரமா இருக்கு. ரொம்ப தூரம் போகிற மாதிரி இருக்கு’ என்று மனதில் தோன்றும் வலியுடன் கிளம்பும் விபியை பார்க்கும் ஜெனி அறியவில்லை அடுத்த முறை பார்க்கும் போது அவன் மீது இவள் உரிமையை இழந்து இருப்பாள் என்று.
பல வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் கால் பதிக்கும் மோகித்ரவை வரவேற்க தான் யாரும் இல்லை.
“யாருக்காக எதுக்காக நான் இந்தியா வரேன்னு கூட தெரியலை. குழந்தையாக இருக்கும் போது தாய் கிட்ட இருந்து பிரிந்தேன். பத்து வயசில் தாய் நாடு கிட்ட இருந்து பிரிந்தேன். இப்ப இரன்டும் எனக்கு சொந்தமில்லாத உணர்வு” என்று எண்ணிக்கொண்டே விமான நிலையத்தில் இருந்து அவர்களது மாளிகைக்கு டாக்ஸி மூலம் சென்றாள்.
மேத்தா மேன்சன், பத்து வயதில் கண்டதை விட பல மடங்கு வளர்ச்சி பெற்று பளபளப்பாக இருந்தது. அரணாக அமைந்த பெரிய இரும்பு கதவின் முன் நிற்க வாட்ச்மென் “யாருங்க யாரை பார்க்கனும்” என
“மோகித்ரா மேத்தா. இந்த வீட்டோட வாரிசு” என்று தன்னை இப்படி அறிமுக படுத்ததும் தன் நிலைமையை கண்டு வேதனை கொண்டே சொல்ல,
பார்த்தது இல்லை என்றாலும் பெயர் கேள்வி பட்டதால் “மன்னிச்சுடுங்க மேடம். பார்த்தது இல்லைல அதான் தெரியலை. உள்ள போங்க” என்று பணிவாக சொல்ல
“உங்க தப்பு இல்லை” என்று உள்ளே சென்றவள் மனதில்,
‘இங்க இருக்கிற நிலைமையை பார்த்தா உரிமையில்லாத இடமா தான் நினைக்க தோன்றுது. சீக்கிரமா லண்டனுக்கு கிளம்பிடனும்’ என்று தோன்றாமல் இல்லை.
வழியெங்கும் பூக்கள் பூத்து இடமே ரம்மியமாக இருந்தது. பூக்களை ரசித்து கொண்டே வந்தவள் கண்கள் ஒரு இடத்தில் நிலைகுத்தி நிற்க மனமோ வேதனையில் நிரம்பியது.
தோட்டத்தின் ஒரத்தில் மாமரம் அடியில் கவலைக்கிடமாக இருந்த பெரிய மர ஊஞ்சல்.
இவளை பார்த்து கொண்ட மிட்டா பாய் கூறியது மனக்கண்ணில் தோன்றியது. ‘மித்ராம்மாக்கு ஊஞ்சல் என்றால் அவ்வளவு பிடிக்கும். எந்நேரமும் இங்கவே தான் இருப்பாங்க. நீ வயிற்றில் இருக்கும் போது மித்ராம்மாக்கு இரவு தூக்கமே வராது. இங்க உட்கார்ந்து தான் பாட்டு பாடிட்டு தூங்கிடுவாங்க’ என்றது நினைவுக்கு வர,
“நான் தான் வேண்டாதவளா ஆகிட்டேன்னு பார்த்தா என் அம்மாவிற்கு பிடிச்ச பொருள் கூட வேண்டாத பொருள் ஆகிடுச்சு. அப்பாவோட மனைவிக்கு தான் இதன் அருமை தெரியாது. ஆனால் அப்பாவிற்கும் தெரியலைனு நினைக்கும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று வீட்டில் நுழைய,
வேலையாட்கள் யாருக்கும் இவளை அடையாளம் தெரியாத காரணத்தால் “மேடமை பார்க்க வந்திருக்கீங்களா” என
அக்கேள்வியை கூட கவனிக்காமல் ஹாலில் எங்கும் மாட்டப்பட்டு இருந்த புகைப்படத்தையே பார்த்தாள். தாய் தந்தையுடன் சிரித்து கொண்டு இருக்கும் பாயல். தந்தை மற்றும் அவரின் மனைவியுடன் இருக்கும் பெரிய புகைப்படம். பாயம் மட்டும் இருக்கும் பல்வேறு படம்.
“மோகி பாப்பா” என்று தளரும் குரலில் மிட்டா பாய் கூப்பிட திரும்பி அவரை பார்த்தாள்.
ஐம்பதின் தொடக்கத்தில் இருக்கும் மிட்டா பாய் பெயரில் மட்டுமே இனிப்பை கொண்டவர். வாழ்வில் நடந்தது அனைத்தும் கசப்பான நிகழ்வே.
பதினைந்து வயதில் திருமணம், இருபதாவது வயதில் தாய்மை, இருபத்தி ஐந்தாவது வயதில் விதவை, இருபத்தி எட்டாவது வயதில் பெற்ற மகனின் இறப்பு. அதன் பின் யாருமே தமக்கு இல்லை என்று சாவை தேடி போகும் சமயத்தில் தான் மித்ரா இவரை கவனித்து வீட்டு வேலைக்காக கூப்பிட்டு வந்தார். மோகித்ரா பிறந்ததில் இருந்து லண்டன் செல்லும் வரை வளர்த்து இவரே. அதான் வளர்த்த பாசம் எளிதில் அடையாளம் கண்டு கொண்டார்.
“ஹாய் ஆன்ட்டி எப்படி இருக்கீங்க” என்று இவளும் அடையாளம் கண்டு கேட்க,
“எனக்கு என்ன குறை. உன்னை பார்க்காமலே போய் விடுவேனோ தான் பயம் எனக்கு. உன்னை ஆசை தீர பார்த்துட்டேன். இனி என் கட்டை வேகும். இனிமேல் எங்கவும் போக மாட்டிங்க தானே” என்று குஜராத்தியில் பேச,
அவரின் பாசம் ஒரு பக்கம் அவளுக்கு சிலிர்ப்பு தான் தந்தது “இல்ல ஆன்ட்டி மிட்டல் அங்கிள் கூப்பிட்டாங்க. பார்த்திட்டு கிளம்பிடுவேன்” என்று அவரின் மொழியிலே பேசிவிட்டு தான் பல வருடங்களுக்கு முன் தங்கி இருந்த அறைக்கு ஒய்வு எடுக்க சென்றார்.
குஜராத்தி பல வருடங்கள் கழித்து பேசி இருக்கிறாள். இவரிடம் தான் கற்றுக்கொண்டாள். இவளின் தாய் மொழி என்ன என்றே புரியாது. தாய் மித்ரா தமிழ் தந்தை அசோக் மராத்தி வளர்த்த மிட்டா பாய் குஜராத்தி. தமிழ் மராத்தி குஜராத்தி ஹிந்தி இங்கிலீஸ் என்று பத்து வயதிலே நன்கு கற்று தேர்ந்தவள்.
ஆனால் எப்பொழுது லண்டன் சென்றாலோ அப்போ இருந்து ஆங்கிலம் மட்டுமே அவளிடம் மிட்டல் மட்டுமே பேசுவார். அவரும் தமிழ் மற்றும் ஹிந்தியே பெரிதும் பயன்படுத்துவார்.
நாளை அவளது வாழ்வே மாற போவதை அறியவில்லை. உரிமையில்லை உறவில்லை என்றவளுக்கு அனைத்தும் கிடைக்க போவதை இவள் தடுத்தாலும் விதி நினைத்தால் நடப்பதை தடுக்க முடியாதே.
பிறக்கும் போதே இன்னாருக்கு இன்னார் என்று முடிவு செய்த பின்னே பூமியில் பிறக்கிறோம். ஆனால் யார் என்று தெரியாத நாமோ பலரிடம் நம் அன்பை பகிர்ந்து அதில் பல ஏமாற்றம் துரோகம் நம்பிக்கையின்மை என்று பலதும் சந்தித்தே நமக்கான உயிரை சென்றடைகிறோம். கண்ணுக்கே தெரியாத விதி நம்மை சரியாக வழி நடத்தும். விதியை அறிய இயலுமோ???
தொடரட்டும்
நிலானி