Loading

அத்தியாயம் 40

 

 

காலையில் சீக்கிரமாக எழுந்த தீப்ஷீ உடற்பயிற்சி செய்து , தன் வேலையெல்லாம் முடித்தவள் ஆர்வமாகவே போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினாள் .

 

அவளுக்கு நம்பிக்கை உள்ள கான்ஸ்டபிள் அருகே சென்ற தீப்ஷீ , ” சார் ஒரு கேஸ் விஷயமா இரண்டு பேரை அரெஸ்ட் பண்ணணும் என்னோடு வாங்க.” என்றாள் .

 

போலீஸ் காரில் தீப்ஷீ , கான்ஸ்டபிள் , டிரைவர் மட்டுமே இருந்தனர் . அவர்கள் சென்றது பரந்தாமன் வீட்டிற்கு .

 

அப்போது மணி ஏழு தான் ஆகியது , வீட்டிற்கு வெளியே கார் நின்றது .

 

டிரைவர் செக்யூரிட்டியிடம் , ” கேஸ் விஷயமா பேசணும். ” என்றான் .

 

போலீஸ் என்பதால் வேறு ஏதும் கேட்காமல் கதவை திறந்தார் செக்யூரிட்டி .

 

காலிங் பெல்லை அடித்தார் கான்ஸ்டபிள் . சமையல் செய்யும் பெண் வந்து கதவை திறந்தார் .

 

” நான் ஐயாவை எழுப்புறேன். ” என்று உள்ளே செல்ல நினைத்த பெண்ணை நிறுத்தினாள் தீப்ஷீ .

 

” அவங்கள கைது செய்ய தான் நான் வந்திருக்கேன் . உனக்கும் அதில் தொடர்பு இருக்கா? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” எனக்கு இவங்க யாருனே தெரியாது? ” என்றுச் சொல்லிய பெண் வெளியே ஓடினாள் .

 

அவளை பிடிக்க கான்ஸ்டபிள் முயற்சி செய்ய .

 

” இல்ல வேண்டாம் , அவங்க போகட்டும் ‌.” என்றாள் தீப்ஷீ .

 

உள்ளே சென்றவள் முதலில் திறந்தது பரந்தாமன் ரூமை தான் . அவன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான் . அவனின் அறையை வெளியே தாள் போட்ட தீப்ஷீ சென்றது சந்தரன் ரூமிற்கு .

 

கன்னை எடுத்துக் கொண்டாள் தீப்ஷீ .

 

” சார் , போய் அவனை எழுப்புங்கள். ” என்றாள் தீப்ஷீ .

 

கான்ஸ்டபிள் சென்று அவனை எழுப்பினார் .

 

கண் திறந்தவன் பார்வையில் தீப்ஷீ கன்னோடு நின்றுக் கொண்டிருந்தாள் .

 

பயந்துக் கொண்டு எழுந்து நின்றான் சந்தரன் .

 

” தப்பிக்க முயற்சி செய்த , நான் யோசிக்காம உன்ன சுட்டுடுவேன் . அதனால், நான் சொல்வதை செய் . டிரஸ்ஸை கழட்டு டா. ” என்றாள் தீப்ஷீ .

 

” முடியாது .” என்றான் சந்தரன் .

 

கன்னை அவனை நோக்கி சுடுவது போல் டிரிகர் செய்தாள் தீப்ஷீ .

 

‘ இவள் என்ன ஜெயிலில் பிடித்து போட்டால் கூட என்னால் வெளியே வந்துவிட முடியும் நான் ஏன் இவள் கையில் சாகணும். ‘ என்று நினைத்தவன் .

 

அவள் சொன்னது போல் டிஷர்ட் மற்றும் பேண்ட்டை கழட்டினான்.

 

” மீதியையும் கழட்டு. ” என்றாள் தீப்ஷீ .

 

” வாட் ?” என்றான் சந்தரன் .

 

” சொன்னதை செய் டா வெண்ண இல்லணா சுட்டுவிடுவேன். ”

 

வேறு வழி இல்லாததால் அவள் சொல்லியதை செய்தான் சந்தரன் .

 

” சார் அவனை வீடியோ எடுங்க.” என்றாள் தீப்ஷீ .

 

” மேடம்? ” என்று தயங்கினார் கான்ஸ்டபிள் .

 

” கம் ஆன். டூ வாட் ஐ சே. ”  என்று கத்தினாள் தீப்ஷீ .

 

” ப்ளீஸ் வேண்டாம் .” என்றுச் சொல்லிக் கொண்டிருந்தான் சந்தரன் .

 

வேறு வழி இல்லாமல் சந்தரனை வீடியோ எடுத்தார் கான்ஸ்டபிள் .

 

கூனிக்குறுகி நின்றிருந்தான் சந்தரன் .

 

” ஆணாக இருக்க உனக்கே எவ்வளவு கஷ்டமா , அருவருப்பாக இருக்கு . ஒன்னும் அறியாத அப்பாவி பெண்களை நீ வீடியோ எடுத்தியே அவங்க பட்ட வேதனையை விடவா நீ இப்போ அனுபவிக்குற? ” என்றாள் தீப்ஷீ.

 

” சார் வீடியோவை சேவ் பண்ணுங்க. ” என்றாள் தீப்ஷீ .

 

இப்போது தீப்ஷீயின் நோக்கம் புரிய தலை நிமிர்வாகவே , ” சேவ் பண்ணிட்டேன் மேடம். ” என்றார் கான்ஸ்டபிள் .

 

” டிரஸை போடுடா நாயே. ”  என்றாள் தீப்ஷீ .

 

வேகமாக எடுத்து போட்டுக் கொண்டான் சந்தரன் .

 

” நீயும் உன் அப்பாவும் செஞ்ச வேலையை எல்லாம் நீ இப்போ சொல்லணும் . இல்லைணா உன் வீடியோவை நெட்டில் போட்டுடுவேன். ” என்றாள் தீப்ஷீ .

 

‘ இப்போ உண்மைய சொல்லிடலாம் . பின் கோர்ட்டில் இவள் மிரட்டி வாங்கிய வாக்குமூலம்னு சொல்லிடலாம்.’ என்று நினைத்த சந்தரன் தீப்ஷீயிடம் , ” வீடியோவை நெட்டில் போடாதீங்க . நான் உண்மைய சொல்றேன். ”  என்றான் .

 

” என் கிட்ட உன் முழு ஆதாரமும் இருக்கு. அதனால, உண்மையை மட்டும் சொல்லு. ” என்றாள் தீப்ஷீ .

 

தன் ஃபோனை கான்ஸ்டபிளிடம் தந்த தீப்ஷீ .

 

” வீடியோ எடுங்க. ” என்றாள் .

 

சந்தரனை பார்த்து கன்னை குறி வைத்துக்கொண்டே நின்றாள் .

 

போனை வாங்கி கொண்டவர் , வீடியோவை ஆன் செய்தார் .

 

” எங்க அப்பா சாஃப்ட்வேர் கம்பெனி தான் நடத்தி வந்தார் . நான் பாரினில் படிச்சிட்டு வந்தேன் . போட்டிக்கு பல கம்பெனி இருக்குறதுனால பெருசா எங்க அப்பாவால் பணம் சம்பாதிக்க முடியல்லை .

 

அமெரிக்காவில் படிச்சிட்டிருந்தப்போ , என் நண்பன் அங்கு வைரஸ் மெயில் மூலமா பணத்தை திருடிக் கொண்டிருந்தான் . எனக்கு பெரிசா ஹாக்கிங் பத்தி எதுவும் தெரியாது . ஆனால், மெயில் மூலம் மட்டும் என்ன செய்யணும்னு அவன் கிட்ட கத்துக்கிட்டேன் .

 

அவன் என்ன செய்றானு அவனோடு இருந்து முழுசா கத்துக்கிட்டேன் . அதே மாதிரி இங்கு செய்யலாம்னு முடிவு பண்ணி. இந்த வேலைக்காக தான் ஜெராக்ஸ் கடையே ஆரம்பிச்சோம் .

 

கம்பெனி மூலம் மெயில் ஐடி கிடைக்க . அந்த மெயில் ஐடிக்கு வைரஸ் உள்ள மெயிலை அனுப்பிடுவேன் .

 

அதை அவங்க போன்ல திறந்தததும் வைரஸ் அவங்க போன்ல ஏறிடும் .  அப்புறம் அந்த போனை என்னாலும் ஆப்ரேட் பண்ண முடியும் .

 

பொண்ணுங்கணா அவங்க டிரஸ் மாத்துவதையோ , தப்பான விஷயம் செய்வதையோ அவங்க போன யூஸ் பண்ணி வீடியோ எடுத்து எனக்கு அனுப்பிக்குவேன் .

 

அப்புறம் அந்த வீடியோவை அவங்களுக்கு அனுப்பி பணம் கேட்பேன். ஒரு லட்சம் தான் கேட்பேன் . மானம் பெருசுனு நினைச்சி பணத்தை ஏற்பாடு பண்ணி தந்துடுவாங்க .

 

ஆனால் , இப்போ தான் ஒருபொண்ணு கிட்ட அதிக பணம் கேட்டேன் . அதான் மாட்டிக்கிட்டேன் .

 

பணம் அதிகம் இருக்கவங்கனு தெரிஞ்சா அவங்க பேங்க் அக்கவுண்ட் டீடைல்ஸ் , பின் நம்பர் , யூபிஐ நம்பர் எல்லாம் அவங்க போன யூஸ் பண்ணி ஈஸியா நான் தெரிஞ்சிட்டு .

 

மணி டிரான்ஸ்பர் ஆப் யூஸ் பண்ணி அவங்க பணத்தை நான் எடுப்பேன். அப்போ ஓடிபி கேட்கும் . நான் அவங்க போன் மெஸேஜை பார்த்து ஓடிபி டைப் செஞ்சிடுவேன் .

 

மெயில் அனுப்புவது எல்லாம் என் கடை சிஸ்டத்துல செய்வேன் . யார் போன் எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கோ அவங்க இன்ஃபர்மேஷனை சிஸ்டத்தில் ஏற்றி விடுவேன் அப்போ தான் எனக்கு புரியும் .

 

பின் ஒவ்வொருவராக மிரட்டுவேன் . பணம் என் கைக்கு வந்து சேரும் .

 

ஒரு மாசம் என் கிட்ட மாட்டுபவர்களிடம் இருந்து நான் பணம் வாங்க இரண்டு மாசம் எடுக்கும் . அப்புறம் எல்லாத் தகவலையும் சிஸ்டத்திலிருந்து அழித்துடுவேன். ” என்றான் .

 

” சார் போதும் .” என்றாள் தீப்ஷீ .

 

வீடியோவை சேவ் செய்தார் கான்ஸ்டபிள் .

 

கன்னை உள்ளே வைத்தவள் சந்தரனை காயம் வெளியில் தெரியாதது போல் அடி பின்னி எடுத்தாள் .

 

” வேண்டாம் என்ன விடுங்க. ” என்றான் சந்தரன் .

 

அவனின் கைகளை அவன் பின் புறமாக பிடித்துக் கொண்டு அவனின் அப்பா அறைக்கு அழைத்துச் சென்றாள் .

 

ஒரு கையால் அவன் கையை இறுக்கமாக பிடித்தவள் மறு கையால் கன்னை அவன் நெற்றியில் வைத்தாள்.

 

கான்ஸ்டபிள் பரந்தாமன் ரூம் கதவை திறக்க . அங்கு நின்று கொண்டிருந்தான் பரந்தாமன் .

 

” பரந்தாமன் , உன் பையன் உண்மைய சொலலிட்டான் . இனி நீயும் உண்மைய சொல்லிடு இல்லனா . உன் பையனை சுட்டுடுவேன். ”

என்றாள் தீப்ஷீ .

 

” நான் சொல்றேன் . என் பையனை ஒன்னும் செய்யாதீங்க. ” என்ற பரந்தாமன் உண்மையை சொல்ல. கான்ஸ்டபிள் வீடியோ எடுத்துக் கொண்டார் .

 

இரண்டு பேரையும் ஹாலிற்கு அழைத்து வந்த தீப்ஷீ சந்தரனை சுட்டாள் ,” இது என் சத்யாவை கொன்றதற்காக. ” என்றவள் மீண்டும் சந்தரனை சுட்டாள் , ” இது அப்பாவி பெண்களை வீடியோ எடுத்ததற்காக .” என்றாள் தீப்ஷீ.

 

” சந்திரா ?”  என்று கத்திக் கொண்டே அழுதான் பரந்தாமன் .

 

” என் சத்யாவை நீங்க கொன்னப்ப . நான் நீ அழுததைவிட பல மடங்கு அழுதேன். ” என்றாள் தீப்ஷீ .

 

” இனியும் நீ அழுவ. ” என்ற பரந்தாமன் தீப்ஷீயை பார்த்து சிரித்தான் .

 

” அப்படியா? ” என்ற தீப்ஷீ .

 

” உன் தறுதலை பையன் தப்பு செஞ்சப்ப. அவன தடுக்காம அவனுக்கு உதவி செஞ்சதற்கு.” என்ற தீப்ஷீ பரந்தாமனை சுட்டாள் .

 

இரண்டு பேரும் இறந்துட்டாங்களா என்று உறுதி செய்த தீப்ஷீ . பின், தன் காலில் மறைத்து வைத்திருந்த கவரை எடுத்தாள் .

 

அதில் கன் இருந்தது . துணியால் கன்னை வலது கையில் எடுத்த தீப்ஷீ தன் இடது கையை சுட்டாள் .

 

” மேடம்? ” என்று ஓடி வந்தார் கான்ஸ்டபிள் .

 

” எனக்கு ஒன்னுமில்லை .” என்ற தீப்ஷீ .

 

கன்னை சந்திரன் கையில் வைத்தாள் , அவன் கை ரேகை பதிவது போல் .

 

” மேடம் , இரத்தம் வருது வாங்க ஹாஸ்பிடல் போலாம். ”

 

” லேசா குண்டு என் கைய உரசிட்டு போயிருக்கு . இது பெரிய காயமில்ல . எனக்கே முதல் உதவி செய்ய தெரியும் . நீங்க இங்கே இருங்க.  ” என்ற தீப்ஷீ .

 

சமையலறை சென்று, சுடு தண்ணீர் வைத்தவள் சுடான கத்தி மூலம் ஓரத்தில் இருந்த குண்டை எடுத்தாள் . பின் அந்த இடத்தை சுத்தம் செய்தவள் . ஒரு துணியின் மூலம் அந்த இடத்தை டைட்டாக கட்டினாள் .

 

வெளியே வந்த தீப்ஷீ , ” சார் ?” என்றாள் .

 

” யார் என்ன கேட்டாலும் நான் இங்க நடந்ததை தான் சொல்வேன் மேடம் . இரண்டு பேரையும் கைது செய்ய வந்த இடத்தில் , உண்மையை ஒப்புக் கொண்ட இருவரும் நாம ஸ்டேஷன் அழைச்சிட்டு போகும் போது  இந்த பொறுக்கி அவன் மறைச்சி வெச்சிருந்த துப்பாக்கி மூலம் உங்கள சுட வந்தான் . நம்மை காப்பாத்திக்க  வேறு வழி இல்லாம. நீங்க இரண்டு பேரையும் சுட்டுட்டீங்க. ” என்றார் கான்ஸ்டபிள் .

 

” ரொம்ப தேங்க்ஸ் சார். ”

 

” எனக்கு எதுக்கு மேடம் தேங்க்ஸ்ல்லாம் சொல்லுறீங்க . எனக்கும் பெண் பிள்ளை இருக்கு . இவனுங்க மாதிரியான நாதரி நாய்களுக்கு நீங்க தந்தது தான் சரியான தண்டனை. ”

 

” சார் உங்க போன்ல எடுத்த வீடியோவை அழிச்சிடுங்க . அவனுக்கும் மற்றவர்களின் வலி தெரியணும்னு தான் எடுக்க சொன்னேன். ”

 

” இப்பவே அழிச்சிடுறேன். ”

 

” ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்து வர சொல்லுங்க . டாக்டர் கிட்ட முதல்ல காண்பிச்சிடுங்க. பின் போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பிடுங்க.”

 

” சரிங்க மேடம் . நீங்க முதல்ல ஹாஸ்பிடல் போங்க . நான் இங்கு பார்த்துக்குறேன். ”

 

வெளியே செல்ல ஏதோ தடுத்தது .

 

தீப்ஷீ கதவு அருகே செல்ல சந்தரன் போன் அடித்தது .

 

திரும்பி அவன் அருகே வந்த தீப்ஷீ அவனின் ஃபோனை எடுத்தாள் .

 

” ஹலோ சார் , இன்னைக்கு சத்யாவை பார்க்க வர்றீங்களா? அவனுக்கு மயக்க மருந்து தரவா ?” என்றுக் கேட்டான் ஒருவன் .

 

அதிர்ச்சியாக நின்றாள் தீப்ஷீ .

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்