உள்ளே போனதும் ஜான்வி “ஹே லீடர் கம் கம்” என்றே வாசகத்தில் ஒரு நிமிடம் தடுமாறித் தான் போனாள். புதிய ஆட்களைக் கண்டதும் சற்று மிரண்டு தான் போனான் பிரணவ். ப்ரணீதா கையை பற்றியவன் விடவே இல்லை.
மாதவ் பற்றிக் கேட்கவா வேண்டும் ‘எதற்கு இங்கே வந்தோம், இங்கே மனிதர்கள் வருவார்களா’ என்று எல்லாம் கேட்டவன் தற்பொழுது வாயில் ஈ போவது கூட தெரியாமல் ஆ என்று ஜான்வியை பார்த்து இல்ல இல்ல அவ அழகில் மயங்கி நின்று இருந்தான்.
மூவரும் அவள் முன் அமர, ஜான்வி “ஹொவ் ஆர் யூ?” என்ற கேள்விக்குச் சிரித்து கொண்டே “பைன்” என்ற ப்ரணீதாவை கண்டதும் உணர்ந்து கொண்டாள். பெயருக்குப் புன்னகைக்கும் போலி புன்னகை இது என்பது. தோழி ஆயிற்றே பார்த்ததும் கண்டு கொண்டால் இவளின் நிலையை.
பிரணவ் புறம் திரும்பி “ஹாய் பிரணவ்” என அவனோ பதில் சொல்லாமல் ப்ரணீதாவை பார்க்க, “பேசு கண்ணா நான் சொன்னேன்ல டான்சர் ஆண்ட்டி அவங்க தான் இது” என்று என்றோ ஒரு ஆள் அவன் தூங்கக் கதை சொல்லும் போது தன் பள்ளி கால கதையைச் சொன்ன பொழுது சொல்லி இருந்தான்.
“என்ன ஆண்ட்டி ஆஹ்” என்று அதிர்ந்து ப்ரணீதாவை பார்க்க, மாதவ் சிரிப்பை அடக்கிக் கொண்டு “அவன் அவளையே அப்படி தான் கூப்பிட்டான்” என
“கடவுளே” என்று சிரித்துக் கொண்டே “ஆமா ஆமா நான் டான்சர் ஆண்ட்டி தான் இப்ப ஹாய் சொல்லுங்க” என
“ஹாய்” என்று மெலிதாக சொல்ல, ஜான்வி “சரி நீங்க இரண்டு பெரும் வெளிய நில்லுங்க. நான் இவங்க கிட்ட பேசணும்” என ப்ரணீதா புரிந்து கொண்டு மாதவ் மாட்டேன் மாட்டேன் னு கதறக் கதற வெளியே அழைத்து வந்தாள்.
மாதவ் “உன் பிரென்ட் என் தம்பியைச் சரி பண்ணிடுவாங்க தானே. வெளியே யார் கிட்டவும் சொல்ல வேண்டாம்னு சொல்லிடு ப்ரீ” என
“எதுக்கு இப்ப இவரோட நிலைமை யாருக்கும் தெரிய கூடாதுனு பேசிட்டு இருக்கீங்க. இவர் என்ன தப்ப பன்றார்” என்க , “உனக்கு சொன்னா புரியாது ப்ரீ. நீ வீட்டுக்கு வந்ததிலிருந்து எத்தனை நாள் அப்பா வீட்டிலே இருந்து பார்த்து இருக்க. மாக்ஸிமம் இரண்டு நாள், அவ்வளவு தான். ஏன் தெரியுமா எங்க இரண்டு பேருக்கும் சேர்த்து இப்ப அவரே இந்த வயசில் கூட வேலை பார்த்துட்டு இருக்காரு. நான் உதவிக்கு வரேன் னு சொன்னாலும் வீட்டுல தம்பியைப் பார்த்துக்கோனு சொல்லிடுவாரு.
தொழிலில் எவ்வளவு முன்னாடி இருக்கோமோ அவ்வளவு எதிரிங்க துரோகிங்க நமக்குப் பின்னாடி இருப்பாங்க. பிரணவ் நிலைமையை நாங்க வெளிய சொல்லத்துக்கு காரணம் என்ன தெரியுமா. இவன் நிலைமையை நம்பி ஒரு டாக்டர் கிட்டச் சொன்னோம். எங்க பேட் லக் அவர் எங்க ஆப்போசிட் பார்ட்டி ஓட அங்கிள். பிரணவ்வை கடத்தி அப்பா கிட்ட பிளாக் மெயில் எல்லாம் பண்ணி ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்.
நானும் அப்ப அப்பா கூட பிஸ்னஸ் பார்த்துட்டு தான் இருந்தேன். அதுக்கு அப்பறமா நான் ரொம்ப முக்கியமா மீட்டிங் மட்டும் தான் போயிடு வரேன். எங்களுக்கு எதாவது என்ற கூட நாங்க மேனேஜ் பண்ணிப்போம் பட் இவனுக்கு எதாவது என்றால் கண்டிப்பா எங்களால் தாங்கிக்கவே முடியாது.
உனக்குப் பெரிய பாவத்தை பண்ணிட்டு இவனை எதுக்கு உனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க தெரியுமா. இவன் உயிருக்குக் கண்டம் இருக்காம். ஒரு முறை இவன் நாங்க காப்பாத்திட்டோம். ஆனா இன்னும் ஒரு வருஷம் கேடு கொடுத்தாங்க போல. அந்த ஜாதகம் பார்த்ததிலிருந்து வீட்டில் யாருக்கும் தூக்கமே இல்ல.
உனக்குத் தாலி பாக்கியம் அமோகமா இருக்குனு சொன்னதும் பிரணவ் தான் கண்ணுக்கு வந்தான். இதை எல்லாம் சொல்ல கூடாதுனு தான் இருந்தோம். சாரி” என
அவனை சிறிது நேரம் பார்த்து விட்டு “ஓகே மாம்ஸ் நீங்க எவ்வளவு கெஞ்சி கேட்கிறதுனாலே நான் உங்களை மன்னிச்சு விடுறேன். இனி நீங்க கவலை படாதீங்க எல்லாமே இந்த பிரீ பார்த்துப்பா” என
அவனும் சிரித்துக் கொள்ள, மணி சத்தம் கேட்டதும் உள்ளே சென்ற அந்த மனிதர் இருவரும் உள்ளே வரச் சொல்லியதாகச் சொல்லி விட்டு தன் இடத்தில் அமர்ந்து விட்டார்.
“வா லீடர் வந்து இப்படி உட்காரு” என்று தன் பக்கத்திலிருந்த இருக்கையைக் காட்ட, மாதவ் பிரணவ் பக்கத்தில் உட்கார,
“என்ன கண்டிஷன் ஜானு” என்று பரபரப்பாகக் கேட்க, “பொறுமை பொறுமை சொல்றேன். நீங்க இவரைக் கூப்பிட்டுப் பக்கத்தில் பிலே ரூம் இருக்கு போய் விளையாடுங்க” என்று மாதவை பார்த்துச் சொல்ல, பாவமாக அவளைப் பார்த்து கொண்டு பக்கத்தில் இருக்கும் ப்ரணீதா விடம் கண்ணால் சைகை செய்து விட்டு பிரணவை அழைக்க, “பரி நீயும் வா” என “நீ போ கண்ணா நான் வரேன்” என்று சொல்லவும் அவனும் சென்று விட்டான்.
“சொல்லு ஜானு இவரைச் சரி பண்ணிடலாம் தானே” என, “ நீ இவங்க கண்டிஷன் சொன்னதும் நான் ரொம்ப பயந்துட்டேன். இரண்டு வருடம் மேல ஆச்சு வேற சொன்ன. பட் இவர் ஆக்சிடென்ட் ஆனா கொஞ்சம் மாசத்தில் இருந்தே டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணி இருந்தால் ஹீ மே கியூர் நொவ்.
இட்ஸ் ஓகே. இப்ப கூட பார்த்துக்கலாம். இவரோட கண்டிஷன் ரொம்ப மோசம் எல்லாம் இல்ல. கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிடலாம்” என
“எனக்கும் நம்பிக்கை இருக்கு ஜானு. அது தான் நல்ல டாக்டர் தேடிட்டு இருந்தோம்.. என் நல்ல நேரம் நீ இங்க வந்துட்டீங்க. என்ன மாதிரி டிரீட்மென்ட் தரலாம்” என
“ பெரிசா இப்ப எதுவும் இல்ல மா. கொஞ்சம் டப்ளேட்ஸ் தரேன். நீ டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணதும் சரி ஆகிடுவாங்கனு எதிர்பார்க்கக் கூடாது. உனக்குப் பொறுமை ரொம்ப முக்கியம் புரியுதா” என “ஹ்ம் புரியுது” என்று தலை ஆட்டினாள்.
“உன் கிட்ட எப்படி நடந்துக்கிறாங்க” என்ற அவளின் கேள்விக்கு “ம்ம்ம்…. ரொம்ப சமத்தா தான் இருப்பாங்க. சொல்றதை கேட்டுட்டு அப்படியே நடந்துப்பாங்க. எனக்கு பெருசா எதுவும் தப்பா தெரியாது. எனக்குப் புருஷனா பீல் வராது ஒரு குழந்தையை நான் பார்த்துகிறேன் மாதிரி தான் இருக்கும்” என
“அடியே நீ குழந்தை குழந்தை என்று சொல்லி இன்னும் மோசம் ஆகாத. அவருக்கு பெரிசா இப்ப எதிலும் நாட்டம் இல்லை. ஐ மீன் இப்ப அவருக்கு எதிலுமே விருப்பம் இல்லை. அவருக்கு ரொம்ப பிடிச்சதை அவரால இப்ப பண்ண முடியலை. அதுனால் அவருக்கு எது மேலையும் பெருசா விருப்பம் இல்லை. எதோ விளையாடனும் மட்டும் தான் இருக்கு. அது என்னனு கண்டுபிடிச்சு அதை பண்ண வைங்க.
இட் மே ஹெல்ப் ஹிம் டு கெட் ஹிஸ் கான்ஷியஸ். அவர் மூளை தான் அவரோட நினைவை நியாபகம் படுத்த விரும்பலை. அவருக்கு பிடிச்ச விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து அவர் மூளைக்கு வேலை கொடுக்கணும். தென் ஒரு பர்சனல் கொஸ்டின் கேக்கலாமா” என்று தயக்கமாகக் கேட்க,
“ஓ கேளுங்க” என்று அவள் சாதாரணமாகக் கேட்க, “இந்த….. பிஸிக்கல் ரிலேஷன்……” என்று தயக்கமாக இழுக்க,
“என்ன கேட்கிற ஜாணுமா அவரே குழந்தை மாதிரி இப்படி எல்லாம் எப்படி” என்று சற்று கடுப்பாகக் கேட்க,
“அதுல என்ன இருக்கு ப்ரீ. நீ கிராமப்புறத்தில் நடக்கிறதை எல்லாம் கேள்விப்பட்டது இல்லையா. அந்த காலத்தில் மூளை குழம்பிய சிலருக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வைப்பாங்க பார்த்து இருக்கியா” என
“நான் எங்க இது எல்லாம் கண்டேன்” என்ற அவளின் சீறலில் “எதுக்கு கோவம் ஜஸ்ட் சில். உண்மையா ஒரு விஷயம் நீயே யோசிச்சு பாரு. அவர் மூளையோட வயசு வேண்டுமென்றால் ஐந்து இருக்கலாம். ஆனா உடம்பு நார்மல் மனுஷன் தானே. ஹீ அல்சோ ஹாவ் பீலிங்ஸ். ஒருவேளை ஹி அப்போர்ச் யூ டோன்ட் டேனி இஃப் யூ ஹாவ் பீலிங்ஸ் டூ” என்று டாக்டர் பாதி தோழி பாதியாகச் சொல்ல,
“நீ என்ன என்னமோ சொல்ற மா. எனக்கு ஒன்றுமே புரியல. பட் எனக்கு தெரிஞ்சது எல்லாம் பிரணவ் சரி ஆகணும். அவ்வளவு தான் எனக்குத் தெரியும் இவருக்காகத் தான் நிறைய விஷயத்தை தெரிஞ்சிக்கிறேன் இன்னும் கத்துப்பேன். நெஸ்ட் எப்ப வரணும்” என்ற அவளின் கேள்விக்கு ஜான்வி பதில் சொல்லும் முன்னே,
“ஐயோ பரி இந்த காட்டு மாடு கிட்ட இருந்து என்ன காப்பாற்று” என்று பிரணவ் கையில் இரண்டு கார்ட்டூன் பொம்மை இருக்க, பின்னாடி அவனைத் துரத்தி வந்த மாதவ் முகத்தில் காட்டு எருமை மாஸ்க் இருந்தது.
“நான் இந்த காட்டுக்கே ராஜா…… ஹா ஹா ஹா உன் கையில் இருக்கே அந்த பிரின்சஸ் எனக்கு வேண்டும். இல்ல உன்னால இன்னைக்கு வீட்டுக்கே போக முடியாது” என்று அரக்கக் குரலில் சொல்லிக் கொண்டே வந்தவன் மறந்தே விட்டான் தங்கள் இருப்பதோ மருத்துவமனை என்பது.
இருவரின் சேட்டையும் பார்த்து பார்த்துப் பழகிய ப்ரணீதாவிற்கு ‘மறுபடியுமா’ என்ற நிலை தான். ஆனால் இவர்களை பார்த்த ஜான்விக்கு சிரிப்பும் வந்ததும் ஆச்சரியமாகவும் இருந்தது.
இருவரும் சிறுவர்கள் அல்ல. வளர்ந்த ஆண்கள் தான். ஆனால் இருவரும் தங்கள் வயதை மறந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். தனக்கு ஏன் இது கிடைக்கவில்லை என்ற ஏக்கம் அவள் கண்களில் தெரிந்தது.
“இப்ப இரண்டு பேரும் உங்க சண்டையை நிறுத்த போறிங்களா இல்லை அந்த உருட்டி கட்டையை எடுக்கவா” என்ற ப்ரணீதாவின் சத்தத்தில் தான் அமைதியாகினர்.
ஜான்வியை பார்த்து “ஐ கால் யூ லெட்டர் ஜானுமா” என்று கிளம்பிவிட்டனர். அன்று இரவு அவனது கபோர்டில் இருந்து எடுத்த அவனின் டைரி ப்ரணீதா கண்ணில் பட அதைத் தான் இரவு முழுவதும் படித்துக் கொண்டு இருந்தாள். ஒரு தீடிர் முடிவையும் எடுத்து இருந்தாள். அந்த முடிவு தான் என்னவோ??
உயிரோட்டம் தொடரட்டும்
நிலானி