இரண்டு மாதங்கள் கழித்து தாயகம் திரும்புகிறான். மாதவ்வை ஏர்போர்ட் வர வேண்டாம் என்று இவன் தான் சொன்னது. ஆனால் அதையும் மீறி யாரையோ மனம் எதிர்ப் பார்த்தது. காரில் வீட்டை நெருங்க நெருங்க எதோ மனம் படபடப்பாக இருந்தது,.
இவன் தான் அவன் மனைவி முகத்தைக் கூட பார்க்க தோன்றாமல் சென்றவன். தற்பொழுது பார்க்கத் தோன்றுகிறது ஏன் என்றே அவனுக்குப் புரியலை. வீட்டையும் அடைந்து விட்டான். அங்கே இருந்த ப்ளூ கலர் கார் தன் தோழி ஜான்வியும் அங்கே இருப்பதை உணர்த்த,
“இவ வீட்டுக்குப் போகவே மாட்ட போல. நானே ரொம்ப நாள் அப்பறமா வரேன் இவ என்னைப் பற்றி எதாவது சொல்லி வைச்சா…. கடவுளே” என்ற எண்ணத்தில் தான் வேகமாக உள்ளே வந்தான்.
உள்ளே வந்தான் அப்படியே நின்றுவிட்டான். அவன் நடந்து வந்த சத்தம் கேட்டு எல்லாரும் திரும்ப, அங்கே தோள் பையை மாட்டு கொண்டு ப்ரணீதாவையே தான் வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்க,
ப்ரணீதா பிரணவ்வைக் கிட்டத்தட்ட 3 மாதங்கள் மேல் இப்பொழுது தான் பார்க்கிறாள். ‘கண்ணா’ என்று வாய்க்குள் சொல்லக்கொள்ள,
மாதவ் “வாடா நல்லவனே எப்படிப் போச்சு ட்ரைனிங் எல்லாம்” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் ப்ரணீதாவையே பார்க்க, அவனின் பார்வை அவளை நெளிய வைக்க,
‘எதுக்கு இப்படிப் பார்க்கிறான். அதுவும் எல்லார் முன்னாடியும் பார்ப்பது வேற சங்கடமாக இருக்க,
ஜான்வி “நீ இப்படியே பார்த்துட்டு இருப்ப என்னால முடியாது. முக்கியமா உன் பொண்டாட்டியால் நிற்க முடியாது. நீ ஒக்காரு டி. அவன் கிடக்கறான்” என
“மாதவ் இது” என்று ப்ரணீதாவைக் கைகாட்டி சொல்ல, “ரொம்ப சந்தோசம் உலகத்தில் முதல் முறையை இது எல்லாம் நம்ம வீட்டில் தான் நடக்கும்” என்று சொல்லி “இவ ப்ரணீதா உன் மனைவி. உனக்கும் சொல்லனுமா இவன் என் தம்பி இப்ப உன் புருஷன்” ப்ரணீதா அவனை முறைக்க,
பின் அவளே “அத்தை அவங்க எவ்வளவு தூரம் இருந்து வராங்க. இவங்க தான் லூசு மாதிரி பேசிட்டு இருகாங்க நீ எங்க வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கீங்க. போய் அவரை கவனீங்க” என்று சொல்லிவிட்டு மெதுவாகக் கீழே உள்ளே தன் அறைக்குச் செல்ல நினைக்க,
“ஏங்க ஒரு நிமிஷம்” என்று பிரணவ் கூப்பிட, அவனின் அழைப்பில் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றவள் ‘என்ன’ என்று பார்வையால் கேட்க, அவனோ அவளையே பார்த்துக் கொண்டு பேச வந்ததையே மறக்க,
ஜான்வி மாதவ்விடம் “உன் தம்பி எதுக்கு இப்ப படம் கட்டிட்டு இருக்கான். உன்ன மாதிரி நினைச்சேன் பரவாயில்ல கொஞ்சம் ரொமான்டிக் மேன் தான்” என
அவளை முறைத்து பார்த்தவன் “மேடம் இன்னும் ஓகே சொல்லவே இல்ல. அதுக்குள்ள ரொமான்டிக் கேக்குதா” என்று கடுப்பாகச் சொல்ல,
இருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள, இந்திரா மகனுக்குச் சமைக்க சென்று விட, பிரணவ் பார்த்து கொண்டு தான் இருந்தான். ப்ரணீதா ‘அடபோங்கடா என்னால முடியலை’ என்று உள்ளே போக,
அது வரைப் பார்த்துக்கொண்டே இருந்தவன் அவள் உள்ளே போனதைப் பார்த்து “பரி” என
அடுத்த நிமிடம் “என்ன சொன்ன” என்று அவனிடம் கேட்க, “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க பார்க்கவே சோர்வா இருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க அப்பறமா பேசலாம்” என
“ஹலோ மிஸ்டர் இப்படி யாரோ மாதிரி என் கிட்ட பேசறதா இருந்த என் கிட்ட பேசாதீங்க. இவர் எப்படிப் பேசுவார்னு இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும். வந்துட்டாரு நீங்க உங்க னு பேசிட்டு. பாப்பா டாடா பேச்சு கா விட்டுடு” என்று முறைத்து விட்டு உள்ளே செல்ல,
அவள் போனதும் “டேய் நான் என்ன தப்ப சொல்லிட்டேன்னு இப்படி பேசிட்டு போறாங்க” என “இப்ப மரியாதையைக் கொடுக்கிறேன் என்ற பெயரில் யாரோ மாதிரி பேசினா. நீ எப்படித் தெரியுமா அவ கிட்ட பேசுவ” என்று அவன் அவளிடம் பேசுவது முதல் ரேஸ் முதற்கொண்டு அவன் அச்சிடேன்ட் என்று எல்லாமே சொல்ல,
“நான் அவங்க கிட்ட பேசணும். அப்பறமா உங்க கிட்ட பேசறேன் என்று அவள் இருந்த அறையை நோக்கி செல்ல,
மாதவ் “இவன் உள்ளே சென்று வேகத்தைப் பார்த்தால் கொஞ்ச நேரத்தில் பெரிய பிரச்சனையாகப் போகுது” என
ஜான்வி “ச்ச… ச்ச… உன் தம்பி போய் உடனே அவள் காலில் விழுந்து என்ன மன்னிச்சிடுமா என்று கொஞ்சப் போறான் பாரு” என, அதே மாதிரி தான் நடந்தது. ஆனால் கொஞ்சம் வேறு விதமாக.
கதவு திறக்கும் சத்தத்தில் வேறு யாரோ என்று நினைத்துப் பார்க்க, சத்தியமாக அவள் பிரணவ் வருவான் என்று எதிர்ப் பார்க்கல. உடனே எழுந்து “எ…….என்ன” என்று தடுமாறி கேட்க,
“வெளியே நல்ல சத்தமா பேசின மாதிரி இருந்துச்சு இப்ப என்ன வார்த்தைத் தடுமாறுது” என்று கிண்டலாகச் சொல்லி கொண்டே அவளை நெருங்க,
பதட்டத்தில் அவளும் பின்னே செல்ல, அதைச் சின்ன சிரிப்புடன் பார்த்து “பாப்பா உங்க அம்மா மக்கு போல. நீ உங்க டாடா போல புத்திசாலியா இருங்க” என்று இன்னும் நெருங்க, அவளோ பின்னே இருந்த சுவற்றில் மோதி நிற்க,
“என்ன மேடம் அதுக்கு மேல போக இடம் இல்லையா” என “நீங்க உங்களுக்கு பழசு…”என்று மேல சொல்ல முடியாமல் தயங்க,
“உன் கூட எப்படிப் பேசினேன்னு தெரியாது. உன் கூட எப்படிப் பழகனேன்னு தெரியாது நீ எப்படி என் கூட பேசுவ அதுவும் தெரியாது இன்னும் சொல்லப் போன” என்று அவளின் வயிற்றில் தன் கையால் வருடி கொண்டு “உள்ளே இருக்கங்களே என் லிட்டில் சம்ப் இவங்க உருவனா கதைக் கூட தெரியாது” என முதல் சொன்னதை எல்லாம் முகத்தைச் சுருக்கி கேட்டவள், கடைசி வரியில் வெக்கம் கொண்டு முகம் சிவந்து தலையைக் குனிந்து கொள்ள,
“ஹலோ உண்மையா தான் சொல்றேன்” என அவ்ளோ “உங்க வார்த்தையில் எதோ வித்தியாசம் தெரியுதே. எதுவும் தெரியாத மாதிரி இல்லையே. எதோ இருக்கு” என
அவனோ சிரித்துக் கொண்டு “என்னைப் பற்றி அவ்வளவு தெரியுமா என் செல்லக்குட்டிக்கு. உண்மைத் தான் என்னனு சொல்லவா” என அவளும் தலையை ஆட்ட,
“எதுவுமே தெரியாது தான் ஆனால் உன் கூட இப்படித் தான் வாழணும்னு பதினெட்டு வயசிலே முடிவு பண்ணிட்டேன்.முதல் முதலா உன்னைப் பார்த்தேன் குட்டியா இரட்டை ஜடைப் போட்டு ஸ்கூல் யூனிபோர்மில் அப்பா….. சொல்ல வார்த்தையே அவ்வளவு அழகு. ஆனா நீ சின்ன பொண்ணு தானே அதன் வெயிட் பண்ணேன். கொஞ்ச வருஷம் தான் வெயிட் பண்ணனும் இருந்தேன். எவ்வளவு வருஷம் ஆகும்னு நினைக்கல” என
இன்பமாக அதிர்ந்தாலும் அவனிடம் “அதான் பெரிய பொண்ணு ஆகிட்டேன் தானே இப்ப சொல்லுங்க” என்று அவள் கேட்க, அவனும் சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.
இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்த சொல்லா காதல் காலங்கள் தாண்டி சேர்ந்து இப்பொழுது பூத்து குலுங்குகிறது. உண்மைக் காதலில் தான் எவ்வளவு சக்தி.