Loading

நாட்கள் வேகமாக சென்று வாரங்களாக ஓடியது. பிரணவ் நிறைய நாட்கள் ஓய்வில் கழித்தான். இரண்டு மூன்று வருடங்கள் என்ன நடந்தது என்று அறிந்து கொள்ளவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.  நிறைய விஷயங்கள் அவனுக்கு தெரிந்து கொள்ள வேண்டியதாக இருந்தது.

 

ஒரு அளவு எல்லாம் சரி செய்தவன் இன்னும் தன் மனைவி யார் அவள் முகத்தை கூட பார்க்கவில்லை. அவன் ஹாஸ்பிடல் லில் இருந்து வீட்டுக்கு வருவத்திற்குள் பக்கத்தில் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் பார்த்து தன் உடமைகளை எடுத்து கொண்டு சென்று விட்டாள். 

 

அவள் போனது பிரணவ் விற்கு நிம்மதியாக இருந்தாலும் மாதவ் மற்றும் இந்திரா இருவருக்கும் சற்று கவலையாக தான் இருந்தனர்.

 

சரியாக அவன் வீட்டுக்கு வந்து ஒன்றறை மாதம் மேல் இருக்கும். அவனுக்கு அவன் ஏஞ்சலை பார்க்க வேண்டும் தன் காதலால் அவளை முழுவதும் கரைக்க வேண்டும் என்ற பேராசை தோன்ற,

 

அவன் காதலியை பற்றி தனக்கு தெரிந்தவன் மூலம் விசாரிக்க சொல்லி விட்டு, அவன் சந்தோசமாக இருந்தான். 

 

மாதவ் “என்ன பிரணவ் முகத்தில் சந்தோசக்களை தெரியுது. என்ன திரும்ப ஏதாவது ரேஸ் போக போகிறியா” என 

 

“அப்படியா தெரியுது எனக்கு ஒன்றும் வித்தியாசமா தெரியலையே.  சரி உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் உனக்கும் ஜான்விக்கும் நடுவுல என்ன ஓடுது” என 

 

“அப்படி எல்லாம் எதுவும் இல்லையே” என்று முதலில் சமாளிக்க தான் பார்த்தான். பிரணவ்வோ “ஓ….. இதுவும் இல்லையா அப்பா சரி நானே அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்கறேன். என் பிரென்ட் தானே அவ நல்ல இருந்தா தானே எனக்கு சந்தோசம்” என்று முகத்தை தீவிரமாக வைத்து சொல்ல,

 

“எப்பா… சாமீ உன் விளையாட்டு தனத்தை இதில் காட்டாதே அவளே இன்னும் க்ரீன் சிக்னல் ஸ்ட்ரோங் கொடுக்கலை. அதுக்குள்ள நீ டைவர்ட் பண்ணிடாத. உனக்கு புண்ணியமா போகும். ஒன்னு கேட்கவா” என்று அடுத்து பேச தயங்கி அவனிடம் கேட்க,

 

“ம்ம்ம் சொல்லு என் கிட்ட என்ன தயங்கி எல்லாம் பேசற” என்றதும்,  “உனக்கு உன் மனைவி யாருனு தெரிஞ்சிக்க ஆசை இல்லையா. பெருசா ஆசை இல்லை என்றாலும் யாருனு பார்க்க தோணலையா” என 

 

“ப்ச்… தெரியல. மனசுல தவறவிட்ட மூன்று வருஷம் தான் கண்ணனுக்கு முன்னாடி வருது. அதை தாண்டி என் மனசில் எதுவும் இல்லை” என்று தன் ஏஞ்சலை பார்க்க துடிக்கும் ஆசையை கூட இவனிடம் சொல்லவில்லை.

 

தன் தோழனின் போன் காலுக்காக காத்திருக்க,  அவனோ இரவு தான் கால் செய்தான். முதலில் சில விஷயத்தை மேம்போக்காக பேசிவிட்டு,

 

“மச்சான் சொல்ல கஷ்டமா தான் இருக்கு. ஆனால் சொல்லாமல் மறைக்க முடியாதே உன் ஆளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் மேல இருக்கும் டா. அவ இப்ப இங்க இல்லை அவ புருஷன் கூட இருக்கா. விசாரிச்ச வரை நல்லா சந்தோசமா இருக்கானு தான் சொன்னாங்க. இதை எல்லாம் மறந்துட்டு உன் வாழ்க்கையை பாரு” என பிரணவ் க்கோ கண் முன்னே உலகம் அழியும் உணர்வு.

 

தனது நெருங்கிய நட்பான நந்தன் எங்கே என்றே தெரியவில்லை. அவன் இருந்து இருந்தா இந்த கல்யாணம் நடக்க விட்டு இருக்க மாட்டானே என்று யோசித்து கொண்டவனுக்கு தெரியாதே கல்யாணம் நடக்க முக்கிய காரணம் அவனும் தான் என்று.

 

‘இந்த இரவும் நிலவும் தான் எனக்கு துணை போல’ என்று அவள் வசிக்கும் ஹாஸ்டல் அறையில் இருந்து தனியாக ஒளிரும் நிலவை ரசிக்க, மனமோ ஊமையாக  அழுதது ப்ரணீதாவிற்கு.  

 

“எனக்கு இது தான் காதல்னு தெரிஞ்சி இருந்தா உன்னை ஸ்கூல் படிக்கும் போதே விட்டு இருக்க மாட்டேன். அப்ப என்னனே தெரியாம தொலைச்சேன். இப்ப தெரிஞ்சே தொலைச்சி இருக்கேன். நீ இல்லாம என்னால இருக்க முடியாதே முதல் முறை எதோ தாங்கிட்டேன். இப்ப முடியும்னு தோணலை.ப்ளீஸ் கடவுளே எதாவது மேஜிக் பண்ணி என் கூட அவனை சேர்த்துடுங்க.

ப்ளீஸ் ப்ளீஸ் அவன் சந்தோசம் தான் முக்கியம்னு நினைச்சேன் தான். ஆனால் முடியலையே” என்று புலம்பியவள் கண் முன்னே அவனோடு பயணித்த தினங்கள் தான் வந்தது.

 

“பரி…. இங்க பாரேன்” என்று விளையாட கேரம் காய்ன்ஸ் ஓட வந்தவன்  அவளிடம் கொடுக்க, “இதை மட்டும் வெச்சி என்ன பண்றது போர்டு எங்க” என  “அது தான் எனக்கும் தெரியலை” என்று நாடியில்  விரல் தட்டி யோசிக்க,

 

அவன் பாவனையில் சிரித்து “இரு கண்ணா நான் அத்தை கிட்ட கேக்கறேன்” என்று கேட்டவள் போர்டு மேலே உள்ளே ஷெல்பில் இருப்பது தெரிய அதை எடுக்க மேலே ஏறினாள்.

 

“பிரணவ் இங்க வா இதை பத்திரமா கீழே வை” என்று போர்டை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு தூக்கி கொடுக்க, அவனும் அதை வாங்கி வைத்து விட்டு,

 

“ஓகே பரி இப்ப நீ குதி நான் பிடிச்சிக்கிறேன்” என “உன்னை நம்பி நான் குதிக்கணுமா… அங்குட்டு போடா நானே மெதுவா இறங்குறேன்” என்று அவனை தள்ளி நிற்க சொல்லியவள் மெதுவாக கீழே இறங்க கடைசி நொடியில் கால் இடறி, பக்கத்தில் இவள் செய்யும் சாகசத்தை ‘என்ன இது’ என்று வேடிக்கை பார்த்த பிரணவ் மேலே விழ,  

 

அவனோ இவளின் திடீர் பாரத்தால் கீழே விழுந்து கிடக்க, அவன் மேல ப்ரணீதா இருந்தாள். பிரணவ் “பரிய்ய்….”என்றவன் குரலில் அவன் கண்ணை பார்க்க,

 

“என்னடா எதுக்கு கத்தற நான் என்ன அவ்வளவு வெயிட்டாவ இருக்கேன். கொஞ்ச நேரம் தானே இதை கூட உன்னால தாங்கிக்க முடியலை பார்க்க மட்டும் மலைமாடு மாதிரி வளர்ந்து இருக்க” என்று திட்டிக்கொண்டே இருக்கும் போதே, அவளை பிரட்டி அவள் கீழவும் இவன் மேலவும் வர,

 

“என்ன டா பண்ற” என்று அதிர்ந்து கேட்க, “ம்ம்ம் கொஞ்ச நேரம் தானே நீயும் என் வெயிட்டை தாங்கு” என இவளுக்கோ கற்பனை குதிரை வேகமாக சென்றது.

“ப்ளீஸ் டா கண்ணா எழுந்துக்கோ நான் பாவம் தானே” என்று ஹஸ்கி குரலில் கெஞ்ச,   “அப்படியா அப்ப எனக்கு ஒரு முத்தா கொடு நான் எழுந்துக்கறேன்” என்று டீல் பேச,

 

“இதை தாண்டி உனக்கு வேற எதுவும் தெரியாத” என்று அவனை எழுப்ப பார்க்க ஒன்றும் முடியவில்லை.

 

“தெரியுமான்னு தெரியல. தெரிஞ்ச சொல்றேன் இப்ப முத்தா கொடு” என  “இதில் எல்லாம் தெளிவா இரு டா” என்று அவன் கேட்டதை கொடுக்க, அவனும் சிரித்து கொண்டே எழுந்து செல்ல, இதற்கு எல்லாம் காரணமான கேரம் போர்டு ஆதரவு இல்லாமல் அனாதையாக கிடந்தது.   

 

இதையே நினைத்தவள் எப்பொழுது தூங்கினால் என்று தெரியவில்லை. காலை சற்று பொறுமையாகவே எழுந்தாள். எழுந்ததும் தலை சுற்றுவது போல் உணர, ‘பசிக்குது போல’ என்று டிரஸ் மாற்றி கொண்டு கீழே இருக்கும் மெஸ் நோக்கி சென்றாள்.

 

சாப்பிட தொடங்கும் முன்னே கண்கள் இருட்டி கொண்டு வர அடுத்த நிமிடம் தரையில் இருந்தாள். உடனே அவளை எழுப்ப அவளோ எழுந்துக்கவே இல்லை. வார்டன் உடனே பாதுகாவலர் இடத்தில் இருந்த மாதவ் நம்பருக்கு போன் பண்ண சொல்லி விட்டு இவளை ஹாஸ்பிடல் அழைத்து சென்றார்.

 

காலை உணவிற்காக பிரணவ் மட்டும் மாதவ் அமர்ந்து இருக்க, இந்திரா பரிமாறி கொண்டு “உங்க அப்பா எப்படா வெளி நாட்டில் இருந்து வருவாரு. எனக்கு சந்தேமாக இருக்கு அங்க அவருக்கு எதோ குடும்பம் இருக்கும் போல” என 

 

மாதவ் “அந்த மனுஷன் அவ்வளவு திறமைசாலி எல்லாம் இல்லை மா” என பிரணவ் அமைதியாக தான் இருந்தான். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. தெரியாமல் பார்த்துக்கொண்டான்.

 

சரியாக மாதவ் விற்கு போன் வர அதில் சொல்லியதை கேட்டு “என்ன எப்போ எந்த ஹாஸ்பிடல்… ஓகே நான் உடனே வரேன்” என 

 

பிரணவ் எதுவும் சொல்லாமல் அவனை கேள்வியாக பார்க்க, இந்திரா “என்ன பா என்ன ஆச்சு” என  “தெரியல மா ப்ரீ மயக்கம் போட்டு விழுந்துட்டா என்று ஹாஸ்பிடல் கொண்டு போய் இருக்காங்க. நான் என்னனு பார்த்துட்டு வரேன்” என்று அம்மாவிடம் சொல்லி விட்டு பிரணவ் வை பார்த்து “நீ வரியா” என அவனோ இல்லை என்று தலையை ஆட்ட அவனோ சலித்து கொண்டே சென்றான்.

 

இவன் அடித்து பிடித்து வேகமாக உள்ளே வரவும் டாக்டர் அவளை பரிசோதித்து முடிக்கவும் சரியாக இருந்தது.

 

உள்ளே வந்தவனை கேள்வியாக பார்த்த டாக்டர் “நீங்க யாரு இவங்களுக்கு” என

அவனோ “என் தம்பி மனைவி இவங்க. என்ன டாக்டர் ப்ரோப்லேம் சடனா இப்படி” என  

 

அவரோ “ஒன்றும் பிரச்சனை இல்லை. ஷி இஸ் ப்ரெக்கன்ட்” என அதை கேட்டு அதிர்ந்து ப்ரணீதாவை பார்த்தான்.

 

சிறிய உயிர் இருவரையும் சேர்க்குமா???? 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
11
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்