ஜான்வியும் பிரணவ்வும் பேசிக்கொள்வது பார்த்த மாதவ் “உங்க இரண்டு பேருக்கும் முன்னாடியே தெரியுமா” என
பிரணவ் “தெரியுமாவா இவ என் ஸ்கூல் டைம் பெஸ்ட் பிரென்ட். நாங்க எல்லாம் ஒரே கேங். இவ பார்க்க தான் சைலன்ட் ரொம்ப பெரிய வாயாடி என்ன டாக்டர் ஆகிடியா. என்ன மேஜர்” என அவளோ அவனை சிரிப்புடன் பார்த்து “மனநிலை மருத்துவர்” என
“கடைசியா நீ படிச்சது எனக்கு யூஸ் ஆகுது. ரொம்ப நாள் ஆச்சு இப்ப சடனா பார்த்ததும் சந்தோசமா இருக்கு. உண்மையாவே தாங்க்ஸ் என்னை சரி பண்ணதுக்கு” என்று உண்மையாக சொல்ல,
“நான் எதுவுமே பெரிதா பண்ணல உண்மையாக உன்னை பார்த்துக்கிட்டது உன் மனைவி தான். ரொம்ப நல்ல பொண்ணு. எங்க நம்ம மேடம் ஆளை காணோம்” என
பிரணவ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, மாதவ் “அவ வீட்டுக்கு போய் இருக்கா ஜானு. நீ வேணா அங்க போய் அவளை பாரேன்” என அவனுக்கு ப்ரணீதா நினைத்து கவலையாக இருக்க, அவளிடம் இவளை அனுப்ப நினைத்தான்.
ஜான்வி “போகணும் தான் ஆனா கொஞ்சம் வேலை இருக்கு. நான் அவளை அப்பறமா பார்க்கறேன். ஓகே பிரணவ் உன்னை பார்க்க தான் வந்தேன். யூ ஆர் ஓகே நொவ். வரேன் ஆண்ட்டி பை மாதவ் டேக் கேர் பிரணவ்” என்று கிளம்பி விட்டாள்.
வீட்டில் தனியாக இருந்த ப்ரணீதா முன் அவளின் கடந்த காலம் பசுமையாக காலம் நிழல் ஆடியது.
இ சி ஆர் சாலை, புகழ் பெற்ற ரெசிடென்டில் ஸ்கூல், அன்று தான் அவளின் முதல் நாள். யாரும் பத்தாம் வகுப்பில் பெரிதாக பள்ளி மாற மாட்டார்கள். ஆனால் இவள் மாற வேண்டிய கட்டாயம். அவள் அம்மா தீபாவிற்கு சற்று உடல் சரியில்லாத காரணத்தால் அவரை பார்த்து கொள்ளவே ஒருத்தர் வேண்டும் என்ற நிலையில் அவளை ஹாஸ்டல் சேர்க்க வேண்டிய கட்டாயம். அவள் படித்த பள்ளியில் ஹாஸ்டல் இல்லை வெளியே சேர்க்கவும் ராகவனுக்கு மனது இல்லை.
அதனாலே வேற ஒரு நல்ல பள்ளி தேடிய போது தான் அவருக்கு இந்த பள்ளி பற்றி தெரிய சேர்த்து விட்டார்.
ஆர்வமாக பல கனவுடன் நிறைய படிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவளுக்கு தெரியாதே அவள் மனதை ஒரே நிமிடத்தில் பறித்து கொள்ள போகணும் நாயகன் அங்கே தான் இருக்கிறான் என்று.
உள்ளே துள்ளி கொண்டு சந்தோசமாக செல்ல தூரத்தில் நண்பர்களாக அமர்ந்து பேசி சிரித்து கொண்டு விளையாடி கொண்டு ஒரு கேங் அமர்ந்து இருக்க, கிளாஸ் எங்க என்று கேட்க நினைத்து அவர்களை நெருங்க,
ஜான்வி “என்னடா இது இப்ப தான் கிளாஸ் ஸ்டார்ட் பண்ணாங்க அதுக்குள்ள எக்ஸாம். டூவல்த் படிக்கிறது ஒரு குற்றமா,
பியூஸ் “டாக்டர் அம்மா நல்ல படிக்கணும் அப்ப தான் டாக்டர். இல்லை என்றால் நர்ஸ் தான்” என்று கிண்டலாக சொல்ல,
“சாருக்கு என்ன கவலை. படிச்சதும் உங்க இண்டஸ்ட்ரீஸ் எல்லாம் பார்த்தப்ப எனக்கு அப்படியா நான் படிக்கணுமே. நீ என்ன பண்ண போற பிரணவ்” என
“நமக்கு ராஸிங் தான். நான் காலேஜ் முதலில் ஒரு ராஸிங் கோச்சிங் தான் போவேன்” என
அவர்களை நெருங்கிய ப்ரணீதா காதில் பிரணவ் பேசிய வார்த்தை தான் கேட்டது. அது தான் அவனை அவள் முதல் முறை பார்த்தது. பார்த்ததும் வயிற்றியில் பட்டம்போச்சி பறக்கிற உணர்வு. அவன் முகத்தையே தன்னை மறந்து பார்க்க,
அவர்கள் யாரும் பார்க்கவில்லை ஆனால் பியூஸ் அவளையும் அவள் பார்வை பிரணவ்வை தொடர்வதையும் மாறி மாறி பார்த்து, அவளை நோக்கி சென்றான்.
“எதுக்கு என் பிரெண்டை பூச்சாண்டி மாதிரி வெறிக்க வெறிக்க பார்க்கற” என முதலில் பயந்து பின் “ஐயோ அண்ணா நான் எங்க பூச்சாண்டி மாதிரி பார்க்கறேன். என் கிளாஸ் எங்க என்று கேட்க வந்தேன்” என
அவளை நம்பாமல் பார்த்தாலும் “சரி தான் அந்த பக்கம்” என அவளும் சென்று விட்டாள். நாள் செல்ல செல்ல அவனை பார்க்கும் ஒவ்வொரு முறையும் தன்னையும் மீறி அவள் பார்வை அவனையே சுற்றும். இப்படியே ஆறு மாதம் சென்றது. அவளுக்கு இது தான் காதலா என்று புரியவில்லை. புரிந்த நேரம் அவன் அங்கே இல்லை.
அவளின் கெட்ட நேரம் பிரணவ் ஒரு முறை கூட அவளை கண்டதோ அவளிடம் பேசியதோ இல்லை. அவனிற்கோ இன்னும் சில மாதத்தில் பள்ளி படிப்பு முடியும் தருணம்.
அவனிடம் எதாவது பேச வேண்டும் என்று தோன்றிய ஆசையில் அன்று பேச நினைத்தாள். அவளின் துரதிஷ்டம் அன்று பெரிய சண்டையில் தான் அவனை கண்டாள்.
“கம் ஆன் ப்ரீ உன்னால முடியும் இன்றைக்கு என்ன நடந்தாலும் என் செல்லக்குட்டி கிட்ட பேசிடனும்” என்று எண்ணிக்கொண்டே வர, அவள் நினைத்து வந்ததோ ஒன்று ஆனால் நடப்பதோ ஒன்று.
பிரணவ் வேறு வகுப்பு மாணவன் ஒருவனை புரட்டி போட்டு அடித்து கொண்டு தான். மொத்த பள்ளியே இதை வேடிக்கை பார்க்க, யாருக்கும் காரணம் தெரியவில்லை. கடைசியாக பள்ளி முதல்வர் வர அவனோ அவரிடம் கூட என்ன பிரச்சனை என்று சொல்ல வில்லை. ஆனால் இருவரையும் நாளை பெற்றோரை அழைத்து வர சொல்ல, பிரணவ் தானாகவே டி சி வாங்கி கொண்டு தன் நண்பர்களுடன் சில வார்த்தை பேசி விட்டு பின்னே திரும்பி ஒரு நிமிடம் பார்த்து விட்டு சென்றான்.
அன்று தான் அவள் பிரணவ்வை கடைசியாக பார்த்தது. அதன்பின் தான் அவன் நண்பர்களுடன் இவள் தோழமை பழக தொடங்கினாள். காரணம் அவன் இருந்த வரை இது என்ன உணர்வு என்று யோசித்து கொண்டு இருந்தவளுக்கு அவன் சென்ற நொடி தோன்றிய வலி, இது தான் காதல் என்று புரிய வைத்தது. அவன் தாலி கட்டிய நொடி தான் பல வருடங்கள் கழித்து பார்த்தாள்.
ஜான்வி மற்றும் பியூஸ் இருவரிடமும் நன்றாக தான் பேசுவாள். ஜான்வி கொஞ்சம் நெருக்கம். ஆனால் இருவருக்கும் கூட அவள் தன் மனதில் இருப்பதை சொன்னது இல்லை.
நடுவே அவளுக்கும் பியூஷ் க்கும் பெரிய சண்டையே வந்தது. இவள் மனதில் பிரணவ் இருப்பது தெரிந்தும் அவளிடம் அவனை மறக்க சொல்லி பெரிய வாதமே நடக்க, கடைசியில் அவன் பள்ளி முடித்து கல்லூரிக்கு வெளிநாடு சென்று விட்டான். அதன் பின் அவனை மாலில் தான் பார்த்தான்.
அவனிற்காகவே வாழ நினைத்தவள் இப்பொழுது அவனிற்காகவே பிரிய நினைத்தாள். அவனின் எண்ணம் தான் என்னவோ????