Loading

மாதவ் பிரணவ் ப்ரணீதா மூவரும் அன்று வெளியே சென்றனர். கொஞ்ச நாட்களாக ரொம்ப ஸ்ட்ரெஸ் இருப்பது போல் தான் உணர்ந்தனர். காரணம் மூவரும் மூன்று விதத்தில் பிஸியாக இருந்தனர். 

மாதவ் காதலை மனதில் வைத்துக் கொண்டு தந்தைக்கு உதவியாக இப்பொழுது எல்லாம் தொழிற்சாலையே கதி என்று இருக்கிறான். இதில் தம்பியின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டு அவனையும் கவனித்துக் கொண்டு இருக்க,

ப்ரணீதா மனதில் பல கவலை இருந்தும் சொல்ல ஆள் இல்லாததால் வெளியே சிரித்துக் கொண்டே பிரணவ்விற்குப் பயிற்சி மற்றும் அவனின் டிரீட்மென்ட் என தன்னை தன் கவலை பாதிக்காது போல் பார்த்துக் கொண்டு பிஸியாக இருக்க,

டிரீட்மென்ட் என்ற பெயரில் அவனுக்குப் பல பயிற்சி கொடுக்க, அதைச் செய்வதும், பின் எடுக்கும் மாத்திரை விளைவாக உடலில் மாற்றம் மட்டுமில்லாமல் மனதிலும் பல மாற்றத்தைத் தாங்கி, உடல் சோர்வுடன் இருந்தாலும் அவனின் தீரா காதல், பைக் ரேஸ் அவனை ஓட வைத்துக் கொண்டு இருந்தது. என்ன தான் உடலில் வலி இருந்தாலும் பைக் ஓட்ட மட்டும் என்றும் சலித்தது இல்லை.

எப்பொழுதும் போல் அன்றும் அவர்கள் பக்கத்தில் இருக்கும் மால் சென்று இருக்க, அங்கே அவர்களை எதிர் பார்க்காத பியூஸ் ப்ரணீதாவை சந்திக்க நினைத்தான்.

பிரணவ் “பரி உனக்கு என்ன வேண்டும்” என அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். முதல் முறை இது போல் கேட்கிறான். இதுவரை இப்படி ஒரு கேள்வி கேட்டது இல்லையே அவன்.

“உனக்கு என்ன வேண்டும் கண்ணா உனக்கு எதோ வேண்டுமோ  எனக்கும் வேண்டும்” என அதை  “இரண்டு பெரும் அங்குட்டு போய் கிரிஞ்சு பண்ணுங்க. ஒரு நாள் நிம்மதியாக இருக்கலாம்னு வந்தா இங்கையும் வந்து தொல்லை பண்ணிட்டு” என்று கடுப்பாக  சொல்ல, இவளும் சிரித்துக் கொண்டு “உனக்குப் பொறாமை நீ வேண்டும்னா ஜானு கூட வா” என்று சொல்ல,

“நீ வேற கடுப்பை கிளப்பதா” என்று தலை திருப்பிக்கொள்ள,  பிரணவ் ப்ரணீதா கையை பற்றிக் கொண்டு ஒரு கடைக்குக் கூட்டிச் செல்ல, “என்ன வாங்கணும்” என்று ப்ரீ கேட்க, 

“உனக்கு ரெட் கலரில் ஒரு சாரி வாங்கணும். அதுல வெள்ளை கலர் குட்டி குட்டி பூ இருக்கனும்” என 

மாதவ் உடனே “இப்ப என்ன சாரி எல்லாம். எதுவும் விசேஷம் கூட இல்லையே” என 

“அது அன்றைக்கு ஒரு நாள் பரி சாரி கட்டி இருந்தாலே அப்ப சூப்பரா இருந்தா. ரெட் கலரில் இருந்தா இன்னும் நல்ல இருக்கும்னு நினைச்சேன். சொல்ல நினைச்சேன் பட் மறந்துட்டேன். இப்ப தான் நியாபகம் வருதே” என்று இருவரையும் இழுத்துக் கொண்டு செல்ல,

ப்ரணீதா “அப்படியா அப்ப உடனே வாங்கிடணுமே” என்று செல்ல, சிறிது நேரத்தில் அவளுக்கு ஒரு போன் வர, அதைப் பேசச் சற்று தள்ளிப் போனாள்.     

பேசிவிட்டுத் திரும்ப அவள் முன்னே நின்று இருந்தான் பியூஸ் கோயல்.  

“எப்படி இருக்கீங்க மிஸ்.ப்ரணீதா. ஓஹ்…..மிஸஸ் தானே இப்ப. ஆனால்  எனக்கு எப்பவும் மிஸ் பூச்சாண்டி தான்” என்று சிரித்துக் கொண்டு சொல்ல,

“ஹலோ நீங்க யாருனே  எனக்குத் தெரியாது.  எதுக்கு  இல்லாதது எல்லாம் பேசிட்டு இருக்கீங்க” என்று கோவமாக முறைத்து விட்டுச் செல்ல நினைக்க,

“என்ன என்னை மாதிரியே உன் கணவனையும் ரேஸ்சர் ஆக்க ட்ரை பண்றனு கேள்விப் பட்டேன். எல்லாரும் என்னை மாதிரி இருக்க முடியாதே டார்லிங். ட்ரை பண்ணு நீ ஜெயிச்சிட்டா நீ கேட்கறதை நான் கொடுக்கறேன் அதுவே நான் ஜெயிச்சிட்டா என்ன பண்ணுவ” என 

“இடியட் கெட் லாஸ்ட்”  என்று அவனை கடந்து நடக்க, அவனோ “வைட்டிங்” என்று சிரித்துக் கொண்டான் சென்றான்.

இதைத் தூரத்திலிருந்தே இருந்தே பார்த்துக் கொண்டு இருந்தனர் இருவரும். அவர்கள் அருகே வந்ததும்  மாதவ் “அவன் தானே உன் ஸ்கூல் கிரஷ்” என்று  கிண்டலாகச் சொல்ல,

அதைக் கேட்டதும் கோவமாக பிரணவ் பிடித்து இருந்த மாதவ் கையை உதறி விட்டு முன்னே செல்ல, ப்ரணீதா “யோவ் உனக்கு நான் என்ன பாவம் போனேன். இப்படி என் வாழ்க்கையில் விளையாடுற. நீ ஜானுவை லவ் பண்றதா சொல்லும் போது உனக்கு சப்போர்ட் தானே இருந்தேன். அவ பாஸ்ட் பற்றி சொல்லி பொறுமையா இருக்க சொன்ன நீ என் ஒரே ஒரு வீக் பாயிண்டை வைச்சிட்டு இப்படி பண்றியே. உன் தம்பி பற்றித் தெரிந்தும் இப்படி பண்ற பார்த்தியா “ என்று புலம்பிக் கொண்டே பிரணவ் பின்னே சென்றாள்.

“டேய் கண்ணா நில்லுடா உங்க அண்ணா ஒரு லூசு அது பேச்சைக் கேட்டு என்னை விட்டு போறியே நான் பாவம் இல்லையா. உன் பரி தானே மன்னிக்கக் கூடாதா” என்று அவன் வேகத்திற்கு நடக்க முடியாமல் ஓடிக்கொண்டே சத்தமாகச் சொல்ல,

ஒரு நிமிடம் யோசித்து நின்று விட்டான். அவளும் அவனைப் பிடித்து விட்டாள்.  “என்ன கோபம் வருகிறது என் செல்ல கண்ணாவிற்கு  என 

அவன் “இவன் தான் உன் கிரஷ்?” என்று முகத்தைச் சுருக்கி கொண்டு  கேட்க,  அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் “நீ மட்டும் தானே என் லைபில் இருக்க. அப்ப அவன் எப்படி என் கிரஷ் ஆவான்.  சும்மா கண்டதையும் யோசிக்காத. சீக்கிரமா பைக் ரேஸ் காம்பெடிஷன் வரப் போகிறது. அதை மட்டும் தன நீ நினைக்கணும்” என்று அவன் மனதை மாற்றி அன்றைய பொழுதையை கிடத்தினாள்.

மாற்றம் ஒன்றே மாறாதது போல், மாறி கொண்டே இருக்கும் நிலை காலத்திற்கு மட்டும் தானா இல்லை மனித மனநிலைக்குமா???

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்