Loading

“கீச் கீச்” என்ற பறவைகளின் சத்தத்தில் மூடி இருக்கும் இமையை திறந்தாள் பிரணிதா. தன் மேனியை மெத்தையாக எண்ணி துயில் கொள்ளும் பிரணவை சற்று தள்ளி படுக்க வைத்து விட்டு, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு நடைப் பயிற்சி செய்ய பின்னே இருக்கும் தோட்டம் நோக்கி சென்றாள்.

நாள் முழுவதும் நடக்கும் பல போராட்டங்களுக்கு பொறுமையை தாக்கு பிடிக்க பெரிதும் உதவுகிறது இப்பயிற்சி.

எப்பொழுதும் போல் அன்றும் அவளுக்காக காத்திருந்தான் மாதவ்.

“பிரீ….” என்று பேச தொடங்க, அவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்து விட்டு கோபத்துடன் முன்னேறி விட்டாள்.

*****

“அவன் திரும்ப நம்ம வழியில் வரான் போல, கூடாதே. அவனுக்கு என்ன பிடிக்குமோ அதை அவன் கிட்ட இருந்து பிரிச்சிடலாமா” என்றவன் கையில் பிரணவ் சமீபத்தில் முகம் கொள்ளா புன்னகையுடன் பிரணிதா உடன் இருக்கும் புகைப்படம் இருக்க,

அவனது பிஏ “நான் பார்த்திட்டு உங்களுக்கு ரிப்போர்ட் பண்றேன் சார்” என்று அறையை விட்டு வெளியேறி விட,

இவனது விழியோ ஒரு வித மயக்கத்துடன் புகைப்படத்தில் இருக்கும் பிரணிதாவை ரசிக்க, கரமோ அவளின் நிழல் உருவத்தை வருடி கொண்டு இருக்க, இதழோ “கமிங் ஃபார் யூ பேபி” என்று  முணுமுணுத்தது. 

உயிரோட்டங்கள் தொடரட்டும்…

நிலானி தாஸ் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment