அத்தியாயம் – 8
‘ஹாய் ஹலோ வணக்கம் வந்தனம் நமஸ்தே… எல்லாரும் எப்படி இருக்கீங்க… நான் சூப்பர இருக்கேன்…
அஸ் யூஸூவல் இன்னைக்கு நம்மளோட சூப்பர் சென்னை டாபிக்ல நாம பேசப்போறது சென்னை… என்ன புரியலயா… எஸ் முன்னாடிலாம் சென்னைக்கு வந்தா ஏழை பணக்காரனா மாறலாம்னு படம் பார்த்து வளர்ந்திருப்போம். அதுக்காகவே சென்னை போறேன் ஒரு கலக்கு கலக்குறேன்னு சொல்வோம் இல்லையா…
ஆனா காலம் நம்மைய எப்படி மாத்திடுச்சுனா ‘பேசாம வீட்டுலயே இருந்திருக்கலாம், நாமளா வந்து மாட்டிக்கிட்டோமே’ னு நம்ம நிலைமையப் பாத்து புலம்புற நிலைக்கு மாறிட்டோம் ரைட்…,
என்னடா இந்த பொண்ணு பேசுறானு இன்னமும் குழப்பமா… ஓகே இன்னையோட டாபிக்… சென்னை… லைஃப் டீச்சர். இப்ப நிறைய பேர் வீடியோ எடிட்டிங் பாத்தேன். எனக்குமே சில விஷயங்கள் ஃப்ளேஸ் ஆச்சு.
வீட்டுக்குள்ள ராஜரீகம் பண்ணுன ஆளுங்க எல்லாம் முதல் முறையா வெளிய வந்து ‘பே’ னு முழிச்சுகிட்டு நின்ற நாட்கள்… புதுப்புது முகங்களின் அறிமுகம்… நம்பி ஏமாந்துபோன நினைவுகள்… பேசாம எல்லாத்தையும் விட்டுட்டு எங்காவது ஓடிப்போகலாமா னு தோன்றுற நாட்கள்… இப்படி எத்தனை எத்தனையோ…
கல்லூரி காலமே சென்னைல வந்து பேச்சிலர்ஸ்டா னு கெத்து காட்டாறவங்க நிலைமை பரிதாபம்ல… ஹாஸ்டல் ஃபுட் ஹெல்த்க்கு டேன்சரஸ் னு என்னைப் பார்… என் சமையலைப் பார்னு தொடங்கி அப்புறம் தான் நமக்கு தெரிய வரும் நமக்கு சமைக்க வராது மச்சினு.
சரி போகட்டும் கழுதைனு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சேமியா ரவைனு வெந்தும் வேகாம சாப்பிட சில நாட்கள் இதுக்கு மேல முடியாதுடானு கடைல சாப்பிட்டு கைல இருந்த காசு தேஞ்சு கடைசி நூறு ரூபாய் ல டீ குடிச்சு பசியடக்கி அது போய் வெறும் தண்ணிரில் உயிர் வாழ்ந்து பெரும் கடுப்புகளுக்கு அப்புறமா யூடியூப் பாத்து சோறு வடிக்க ட்ரை பண்ணி கைல கொட்டி காலேஜ்ல பண்ணாத பிராக்டிகல சாப்பாடு வைக்குறதுல பண்ணி பாத்து… வாவ் அந்த நினைவுகளை எல்லாம் ‘மறக்குமா நெஞ்சம்’ னு சாங்கே (song) டெடிக்கேட் பண்ணலாம் தானே…
இது மட்டுமா… நீ துணி துவைச்சிட்டியா… ஹேய் இந்த பாத்திரமும் கழுவிடேன்… இன்னைக்கும் வீடு கூட்டணுமா… எறும்பு கூடே கட்டிரும் போல இருக்கே… உன் துணி ஒரு நாளைக்குக் குடுடா… இப்படி இன்னும் எத்தனை எத்தனை குரல்கள்…
இது எல்லாம் பசங்களுக்கு மட்டுமானு கேட்டா… பெண்களுக்கும் தான்… இத சொல்ற நானே வெளியூர்ல இருந்து வந்து ஹாஸ்டல் செட் ஆகாம வீடு எடுத்து சமைக்க தெரியாம உருட்டி நான் சமைச்சது சாப்பிட்டு நானே ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி, அம்மாவோட தலை நிமிர்ந்து கோதலுக்கு ஏங்கி அப்பாவோட போடுற குட்டி குட்டி சண்டைக்கு ஆசைப்பட்டு அடுத்த லீவு எப்ப வருமோ தெரியலயேனு புலம்புன நாட்கள்…
ஹாஹாஹா… உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கா… கண்டிப்பா கமென்ட் செக்சன்ல சென்னை உங்களுக்கு ஒரு லைஃப் டீச்சரா இருந்திச்சானு சொல்லுங்க… உங்க கருத்துகளுக்கு நான் வெயிட் பண்றேன் தங்கம்ஸ்…’
நாய்க்குட்டியின் குரலில் அழகாய்ப்பதிந்து வேந்தனின் அலைபேசியில் வெளியிட்டது யூடியூப்.
“அண்ணே இது எவ்வளவு உண்மைல… ஒன்னும் தெரியாதவனையும் ஓகோனு மாத்திடுதே இந்த சென்னை…”
“வெறும் சென்னைனு சொல்ல முடியாதுடா… சொந்த ஊரை விட்டு படிப்புக்காக பிழைப்புக்காக வெளிய வந்து வேற மாவட்டம் மாநிலம் நாடுனு போற எல்லாருக்கும் அந்த புது இடம் ஒரு லைஃப் டீச்சர் தான். ஆனா என்ன பலர் அப்படி வெளிய போற இடம் சென்னை…” என தன் மகனுக்கு விளக்கினார் எழிலின் தந்தை ஞானசேகரன்.
“ஆனா அத்தம்மா தனியா சமாளிச்சுப்பாங்களா ப்பா… அவங்களையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்ல ப்பா…”
ஊரில் இருந்து நேற்று இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் கிளம்பினார் ஞானசேகரன். அவரது மனைவி அவன் அன்பு அத்தையை அழைத்து வரவில்லையே அவர் அங்கு எப்படி தனியாக சமாளிப்பார் என்ற கவலை கொஞ்சம் என்றாலும் எழிலிற்கு தான் அம்மாவைக் காணமுடியவில்லை என்ற கோபம்.
“வேந்தா… அங்கப் பாருப்பா அந்தப் பொண்ணு… டேய் வேந்தா
“யாருப்பா”
“அந்தா போறா பாருடா… அந்த ஒயிட் கலர் ஸ்கூட்டி…”
“யோவ் தகப்பா… பாஞ்சுடாத… சும்மா இரு” என்று எழில் இடைபுக
“இடைல வந்து அடிபடாம ஓடிடு “ என்றவர் வண்டியில் செல்லும் விதுராவை இனம் காட்டுவதில் குறியாக இருந்தார். பதிலுக்கு எழில் முறைத்தாலும் யார் அந்தப் பெண் என்று அறிவதில் அவனும் முனைப்பாக இருந்தான்.
“ப்பா ப்பா…அந்தப் பொண்ணு தான்… “ என்றவன் தவிப்போடு ஞானசேகரனை நோக்க, “ விதி எழுதுனது… கர்த்தர் மேல பாரத்த போட்டு உன் வேலைய தொடங்கு. இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா ஆச்சா “ என்றவர் வேந்தனின் தலையை வருடிக் கொடுக்க, வேந்தனும் அமைதியாகி எழிலனின் உடல்நல பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றான்.
“ப்பா நீங்க அவன செக்கப்புக்குக் கூட்டிட்டு போங்க… நான் வெளியவே இருக்கேன்… “ என்ற வேந்தன் அவர்கள் பதிலைக் கேளாது மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டான்.
நினைவுகள் அவனைப் பின்னோக்கி இழுக்க அந்த சுகமான நாட்களை தன்னுள் இழுத்துக் கொண்டான்.
~~~
“ப்ரொஃபசர் ஃப்ரொபசர்
எஸ் பாப்பா
இன்டேர்னல் டெஸ்டு
நோ பாப்பா
காம்பன்சேஷன் டியூட்டி
நோ பாப்பா
எல்லாரும் பாஸ்
ஹா ஹா ஹா”
மதிய வேளையின் இடைவேளை முடிந்து வகுப்பறையில் அமர்ந்திருந்தனர் மாணவ மாணவிகள். இன்று இன்டர்னல் தேர்வு என்று கூறப்பட்டிருக்க, பாடம் படிக்காமல் அமர்ந்து பாட்டு பாடிக் கொண்டிருந்தாள் மீரா.
“மீரா மீரா
எஸ் பாப்பா
டெஸ்ட் இன்னைக்குக்
கன்பார்ம் ப்பா
நெட்ட மரமும் இப்போ
வருவான் ப்பா
இப்போ கீழ இறங்கணும்
ஹா ஹா ஹா”
மீராவின் பாட்டிற்கு எசப்பாட்டு பாடினாள் விதுரா.
“எதே நான் தான் கீழ இறங்கணுமா…”
“போன எக்ஸாம்க்கு நான் தானே தரைல உக்காந்தேன். ஒழுங்கா நீ இறங்குற… இல்ல உன் பாக்கெட்ல இருக்குற பிட்டு பேப்பர் ஒன்னு விடாம எல்லாத்தையும் போட்டு குடுத்துடுவேன்” என்று விதுரா மிரட்ட வேறு வழியின்றி மீரா கீழே இறங்கப் போனாள், தன் பேப்பர், பென் மற்றும் இதர பொருட்களோடு.
“நீ ஏன் கீழ இருக்குற… என் பக்கத்துல உக்காந்துக்கோ”
சமயம் பார்த்து எழில் நுழைய,
“அவள கிட்ட சேர்க்காத… எக்ஸாம் நேரத்தில் அவ உனக்கு ஆபத்து” என்றிட காரணம் புரியாமல் எழிலன்
“ எங்களைப் பிரிக்க வந்த தீய சக்தியே
ஓடிப்போ “ என்றவன் அத்தோடு அவனது நோட்டில் இருந்த பாடங்களை ஒருமுறை வாசிக்க ஆரம்பித்தான்.
“இப்படித் தான் என் லவ்வர் கூட பரிட்சைக்கு முன்னாடி அழகா வாசிப்பாரு”
இவ்வாறு கூறிய மீராவை விநோதமாகப் பார்த்தான் எழில்.
“எக்ஸாம் முன்னாடி படிச்சது ரிவைஸ் பண்றது நார்மல் தானே” என்றிட,
“அவரு என் லவ்வர்ல அதுனால எனக்கு அது ஸ்பெஷல்”
“எதே” எனத் திருத்திருவென முழித்தவன், “எப்படியோ போய்த்தொல” என்று விட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தான்.
“என் எட்டு வருச காதல் கதைடா இது… கேளுடா” மீண்டும் மீரா துவங்க,
“உன்ன என் பக்கத்துல உக்கார வச்சதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத சிறப்பா செய்யுற” என்று புலம்ப, “சரி வேணாம்னா போ” என்று கூறி தனது பிட்டு பேப்பர்களை அடுக்க ஆரம்பித்தாள்.
“பாரி பாரி
எஸ் பாப்பா
டெஸ்ட் இன்னைக்கு
வேணாம் ப்பா
எட்டு வருச
காதல் தானேப்பா
நமக்கொரு குழந்தை
ஹா ஹா ஹா”
“எதே… முடியல… தயவு செய்து விட்ரு…”
“இப்ப தெரியுதா… எதுக்கு அவ பக்கத்துல போகாதனு சொன்னேன்னு “
“ரொம்ப சரி…”
“சைலன்ஸ்”
சத்தம் வந்த திசையை நோக்க, அங்கு வசீகரிக்கும் முகமூடி அணிந்து நின்றிருந்தார் ஒரு நபர்.
“என்ன ஒரே சத்தமா இருக்கு… சைலன்டா இருக்க மாட்டீங்க… “ என்ற கண்டிப்புடன் உள்ளே நுழைந்தனர் இருவர்.
முகமூடி அணிந்த நபர் தன் முகமூடியைக் கழற்ற, ஒரு பெண் முகம் வெளிப்பட்டது.
“பாரி சீனியர்… “
“எதே… “
“சாரி… சாரி சீனியர்…” என்க, வகுப்பறையே அவளைக் கொலைவெறியில் பார்த்தது. ஏனெனில் வந்திருப்பது கடைசி வருட மாணவர்கள் மதுரவேணியும் குறிஞ்சி வேந்தனும். இருவரும் படிப்பிலும் மற்ற விஷயங்களிலும் பலே கில்லாடியானவய்கள்.
“நக்கலு… சரி எல்லாரும் புக்ஸ் க்ளோஸ் பண்ணுங்க…“ என்றிட , ‘மாட்டிக்கிட்டோம் பங்கு’ என்ற மனநிலை தான் யாவருக்கும்.
“கைல இருக்குற புக்ஸ் உங்க ஃபோன் எல்லாம் டேபிள் மேல இருக்கணும். இடம் மாறிச்சு…“ என்று கூறிய வேந்தன் நக்கலாகச் சிரிக்க, அனைவரும் அவன் சிரிப்பின் பொருள் உணர்ந்து தானாகவே அவன் கட்டளைக்குக் கீழ்படிந்தான்.
“சரிங்க பாரி மேடம்… கொஞ்சம் எழும்புங்க…”
மீராவும் திருட்டு முழி முழித்து எழுந்து நிற்க,
“வாட் இஸ் ஹைட்ரோஸ்படைஸஸ்?..” (what is hydrospadiasis?)
“…”
“முழிக்காம பதில் சொல்லு… ஜஸ்ட் இரண்டு மார்க்குக்குப் பதில் சொன்னா போதும்…” என்றிட,
“ ஆங்… இந்தா சொல்றேன் “ என்றவள் , “வாட்டர் அக்கியூமிலேஷன் இன் தி பிரைன் ஸக்..” (water accumulation in the brain sac)
அவளின் பதிலில் அதிர்ச்சியாகினர் மொத்த வகுப்பறையும். அவளின் பதிலில் கடுப்பான குறிஞ்சி வேந்தன், மேசையில் இருந்த சுண்ணாம்புகட்டியை எடுத்து கடகடவென முழு மனித உடலை வரைந்து அதில் உறுப்பு மண்டலம் தனியாகப் பிரித்து மண்டலம் வாரியாக நோய்களின் பெயரும் சொல்லி கொடுக்க ஆரம்பித்தான். அதுவரை பிட்டு பேப்பர்களை மட்டுமே நம்பி இருந்த மீராவுக்கு கூட ஓரளவு புரிய ஆரம்பித்தது.
“சீ (see)..” பேசிக் விஷயங்கள் கூட மக்அப் பண்ணாம கொஞ்சம் புரிந்து படிக்க ட்ரை பண்ணுங்க…
நாம எல்லாரும் ஹேண்டில் பண்ண போறது மிஷின்ஸ் கிடையாது. உயிரும் உணர்வும் உள்ள மனுஷங்களை…“ என்றவன் ,
“இன்னைக்கு உங்களுக்கு இன்டர்னல் டெஸ்ட் கிடையாது. அதுக்குப் பதிலா நாளைக்கு நாங்க ஒரு கிளாஸ் எடுக்க போறோம்… கிளாஸ் முடியும் போது நீங்க ஒரு ஃபீட்பேக் மட்டும் எழுதி குடுத்தா போதும்…” என்றாள் மதுரவேணி.
இவர்கள் இப்படி சீரியஸாகப் பேச, விதுராவோ “இவங்க இரண்டு பேரும் லவ்வர்ஸா..” என்று எழிலிடம் குசுகசுவெனக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
இதை கவனித்த வேந்தன் வேணியின் காதில் கிசுகிசுக்க, அவளும் “எழில் பக்கத்துல இருக்குற பொண்ணு… ஏ பாரி நீ இல்ல… லெஃப்ட் சைட்ல இருக்குறவ.. நீ என்ன பண்ணுற… ஒரு நல்ல காதல் கவிதை எழுதி எடுத்துட்டு வர்ற… நாங்க ஃபண்டமென்டல் லேப்ல தான் இருப்போம். உனக்கு அரை மணி நேரம் தான் டைம் “ என்றவர்கள் கிளம்பிச் செல்ல, வகுப்பறையே ‘ஹோ’வெனக் கத்தியது. விதுராவோ திருதிருவென விழித்தபடி என்ன செய்யவெனத் தெரியாது நின்றிருந்தாள்.
விதுரா காதல் கவிதை எழுதினாளா…?
தொடரும்…