Loading

செக்கப் முடித்து மருத்துவ அறையை விட்டு வெளியே வந்தனர் ஞானசேகரனும் எழிலனும். அவனை ஓரிடத்தில் அமர வைத்தார் ஞானசேகரன். 

 

“எழிலா…”

“சொல்லுங்க…”

“நீ பண்ணுறது தப்புடா… உனக்குப் புரியுதா இல்லையா… “ 

 

“ நான் குடிப்பேன். குடிச்சு செத்து போவேன். அதுனால உங்களுக்கு என்ன… “ 

 

“நீ செத்தா பரவாயில்லை. ஏற்கனவே தேவையில்லாம ஒரு அம்மாவக் கொன்றுட்ட… இப்ப என்ன நினைச்சுட்டு இருக்க ‌‌… “ 

 

“நான் எதுவும் நினைக்கல… போங்க” என்றவனுக்குக் குற்றவுணர்வு கொல்லாமல் கொன்றது. அவனுடைய அசட்டுத்தனத்தினால் யாரைக் கொன்றானோ அவருடையக் கண்கள் மூலம் தான் தற்போது அவன் இவ்வுலகைப் பார்க்கிறான் என்பதே பெரும் தண்டனையா இருக்கிறது அவனுக்கு. பழைய நினைவில் இருந்து மீண்டவன் எழிலனையும் ஞானசேகரனையும் வீட்டில் விட்டுவிட்டு தன் தோழியை காணச் சென்றான். 

ஆனால் ஞானசேகரோ ஒருவரிடம் வாங்கி வைத்திருந்த விதுராவின் அலைபேசி எண்ணுக்கு அழைத்து அவளின் தாயின் கண்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தி விட்டார். 

 

“நான் கேட்டது என்ன ஆச்சுடா…” 

 

“ எல்லாம் அக்காவா ரெடியா இருக்கு டா…” 

 

“என்ன டீடைல்ஸ் கிடைச்சிருக்கு…” 

 

“ அத நான் சொல்லவா…” இந்த படி திரை மறைவிலிருந்து வெளியே வந்தாள் விதுரா.

 

ஒரு கணம் அவளை எதிர்பாராமல் அதிர்ந்தாலும் அவளின் வார்த்தைகளை கேட்க காத்திருந்தான் வேந்தன். 

 

“எத்தனை நாள் ஆகியும் நீ ஒரு விஷயம் கூட என்கிட்ட டேரக்டா கேட்ட தெளிவு பெற மாட்டல…” என்று தன் மன வருத்தத்தின் மிகுதியில் அவனிடம் கேட்டவள், அவனை நிமிர்ந்து பார்க்க அவனும் தலை குனிந்த நிலையில் நின்றிருந்தான். 

 

“பப்பு… அவன் எனக்கு ஒரு நல்ல ஃபிரண்ட்… ஆனா அவன் மனசுல என் மேல காதல் இருக்கு… ஒரு நிதானமான காதல்… எனக்காக மூன்று வருடமாக காத்திருக்கும் காதல்… 

 

எனக்காக எதையும் செய்யும் காதல்… அந்த காதல் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். ஆனா அதுக்காக என் வாழ்க்கையை ஒருத்தன் கிட்ட ஒப்படைக்க எனக்கு விருப்பமில்லை. 

இன்னொரு விஷயம் தெரியுமா… என்னால குழந்தை பெத்துக்க முடியாது. இந்த விஷயம் உனக்கு தெரியுமா என்று கூட எனக்கு தெரியாது… 

 

எதுக்கு இன்னொருத்தன் காதலையும் வாழ்க்கையையையும் சிதைக்கணும்…” என்று கூறி புன்னகை மிளிர நின்றிருந்தாள் பெண்ணவள். 

 

“என்ன மன்னிச்சிடு விடுமா”…  

 

மன்னிப்பை யாசித்து வேந்தன் நிற்க, பதிலாக விதுராவோ

 

“வேண்டாம் அந்த வார்த்தையே வேண்டாம்… மன்னிச்சுட்டு திரும்ப நானே குத்தி காட்டினாலும் ஆச்சு… இல்ல பேசாம ஒதுங்காலும் ஆச்சு… மன்னிச்சுட்டு மறக்கிற காரியமா எல்லாரும் எனக்கு செஞ்சீங்க… 

என்ன பெற்ற அப்பாவே என்னை நம்பல… நீ எல்லாம் எம்மாத்திரம்… 

 

விட்டுத் தள்ளு… இப்போ மீரா சொல்லும் போது எனக்குக் கசந்தது. ஒரு காதல் என்ன உயர்த்தி இருக்கணும்… ஆனா என் வாழ்க்கையில வறுமையே தான் தந்துச்சு… 

 

ஆனால் என் வாழ்க்கையில உயிருள்ளவரை உன்னுறவு தொடரும்… ஏன்னு கேக்குறியா… பல நாட்களாக என் அம்மாவோட கண்கள் யாருக்கு பொருத்தி இருக்குனுனு தேடுனேன். இப்ப அதுக்கு பதிலா எழிலன் தான் னு சொல்றாங்க… 

 

நான் செய்த தவற்றுக்கு விடையா நம்ம எழிலனுக்கு என் அம்மாவோட கண்கள்… என் தாயோட விழிகள் வழியாக உலகத்தைப் பார்ப்பான். எனக்குனு இந்த உலகத்தில் உன் தம்பியோட கண்கள் இருக்கு… அது போதும்… 

 

நீ வேற ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கோ. இப்ப பிஹெச்டி வேற பண்ணுற… எல்லாம் நல்லதா அமையும்… முதல்ல நம்பிக்கையைப் பதி…

 

அவசரமா வந்த காதல் அவசரமாகவே போயிடுச்சு… என்னைக்கும் நம்பிக்கை கொடுத்து ஏமாற்றாதே. அது என்னோடவே முடியட்டும்” என்று முடித்தாள். 

 

அந்த நாள் எல்லாவித பாரங்களையும் இறக்கி வைத்து தன்னை இலகுவாக உணர்ந்தவளாய் மீராவைத் தேடிச் சென்றாள். 

 

இருவரின் காதல் கைசேர்ந்தால் நான் இன்பமான முடிவா… 

விரும்பி ஏறிய விமானமானாலும் சரியில்லையெனில் பாதியில் இறங்கி செல்ப் லவ் செய்யலாம். தவறி

ல்லையே… 

 

காதல் தொடரட்டும்… சுதந்திரம் வீசட்டும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்