Loading

 

 

      அந்தி சூரியன் மாலை நேரத்தை தனதாக்கி கொண்டு, தான் வீட்டிற்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என்று அறிவித்தது….., தன்னுடைய மாலை மயங்கும் கதிர்களைக் கொண்டு……,

 

       மாலை சூரியனுக்கு

                  மன்னவனும் மயங்கி

      பன்மாலை ஒன்றை சூட

                   மாலை பயணம் சென்றான்…..

 

    கண்ணம்மா, இங்க பாருங்க நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க….! இப்பவே மணி ஆறு ஆச்சு ” இன்னும் கொஞ்ச நேரத்தில் கயல் வந்துவிடுவா”…. அவ பசியோட வருவா….. அவளுக்கு சமைச்சி வைக்கனும்….. நீங்க இந்த கிச்சனை விட்டு , வெளியே போங்க….

 

 வேலப்பன், நான் கண்டிப்பா போகனமா …… “என் மனைவியாரே “….. தங்களுக்கு உதவ தான் சமையற்கட்டுக்கு வந்தேன்….” தாங்கள் என்ன வென்றால் , என்னை வெளியேற்றுகிறீர்களே”……!. …. ஏன்…?

என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கேட்க….. தன் மனைவி கண்டுபிடித்துவிடாதபடி , வாயை மூடிக்கொண்டு சிரித்தார்…..

 

 

கண்ணம்மா, அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை….. உங்க உதவியில்லை என்றால் தான் , நான் சீக்கிரமாக சமையல் செய்து முடிப்பேன்….. என்று சற்று கோவமாக பேசினார்…. “ஏனென்றால் காய்கறிகளை நறுக்கின்றேன்….. என்ற பெயரில் அரைமணி நேரமாக காய்களை நறுக்கினார்….. இல்லையில்லை கொளருபடி செய்துக்கொண்டிருந்தார்…..

 

வேலப்பர், நான் வெளியே போயி யே ஆகனுமா……!…

 

கண்ணம்மா, “அச்சச்சோ ” …. மணி ஆயிடுச்சே….. இன்னும் கொஞ்ச நேரத்தில் கயல் வந்திடுவா…. நீங்க வெளியே போங்க….. என்று கத்திவிட்டு , வேகவேக சமையல் செய்துக்கொண்டிருந்தார்….. வேலப்பர் , …சிரித்துக்கொண்டே வெளியே சென்றார்….. 

 

    மணி ஏழு ஆனது….. கயல் தன் வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு , தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்…… அவளுக்கு தெரியும் இன்று எப்படியும் தன் திருமணத்தைப் பற்றி பேசுவார்கள் என்று…… வீட்டிற்கு வந்தவள் ,தன்னுடைய ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, முகம் , கை மற்றும் கால்களை சுத்தம் செய்துவிட்டு….. பூஜையறை நோக்கி சென்றுக்கொண்டிருந்தாள்…… தன் பெற்றோர்களின் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்தும் …..,உணராததைப்போல பூஜையறையில் சென்று இறைவனை வணங்க ஆரம்பித்துவிட்டாள்…… சிறிது நேரத்தில் வெளியே வர, ஹாலில் உணவு எடுத்து வைக்கப்பட்டிருந்தது….. அனைவரும் அமைதியாக உட்கார்ந்து உணவு உண்ணு முடித்தனர்…… சாப்பிட்டு முடித்ததும் கமலா பாட்டி , அனைவரும் இரவு வணக்கத்தை கூறிவிட்டு உறங்கச் சென்றுவிட்டார்….. சாப்பிட்டு முடித்ததும் தன்னுடைய அறைக்கு சென்று புத்தகம் படிக்க ஆரம்பித்தாள் கயல்….., ஆனால் என்ன செய்ய ” கொஞ்ச நேரம் கூட கவனமாக படிக்க முடியவில்லை….. இன்று காலையில் நடந்த நிகழ்வுகள் அவளை படிக்கவிடாமல் தொந்தரவு செய்துக்கொண்டிருந்தனர்….. 

 

       காலையில் வீட்டில் இருந்து கிளம்பியதும் சிறிது தூரத்தில், போகும் வழியில் …., தன்னுடைய தோழி சித்ராவை தன்னுடைய ஸ்கூட்டில் ஏற்றிக்கொண்டு , தான் பணிபுரியும் பள்ளிக்கூடத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்….. திடீரென தன் ஸ்கூட்டியை வழிமறித்தப்படி ஒரு கார் வந்து நின்றது…… திடீரென இப்படி நடந்ததில் பதட்டமும் பயமும் ஒரு சேர வந்து ஒட்டிக்கொண்டது….. அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு, ஸ்கூட்டியை பிரேக் போட்டு நிறுத்தியதில்….., ஸ்கூட்டி சிறிது ஆட்டம் கண்டுவிட்டது…. வண்டியுடன் சேர்த்து அவளின் உடலும் உதறல் எடுக்க ஆரம்பித்தது…… சித்ராவோ தன்னுடைய தோழியை இறுக்கமாக அணைத்தப்படி கண்களை மூடி உட்கார்ந்துக்கொண்டிருந்தாள்……..

சில நொடிகளில் தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவள்….., தன்னை இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்த தன்னுடைய தோழியை ஆறுதல்படுத்திவிட்டு…., அவளுக்கு குடிக்க தண்ணீர் இருந்த பாட்டிலை எடுத்து கொடுத்தாள்…… 

 

சித்ரா, அமைதியாக தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்க, அந்த காரைவிட்டு இறங்கிய ஒரு ஆறு அடி ஆண்மகன் இவர்களின் அருகில் வந்து ஹாய், என்று சொன்ன அவனின் கடைசி மற்றும் முதலாவது வார்த்தை அதுதான்….. அவன் கூறி முடிக்கும் முன் கயலின் கைகள் அவனின் கண்ணத்தை இருபுறமும் பதம் பார்த்து தன் கை விரல்களை முத்திரையாக பதித்து இருந்தனர்….. அடிவிழும் சத்தத்தில் சித்ரா தலையை நிமிர்ந்து பார்த்ததில், குடித்த தண்ணீரையெல்லாம் வெளியே துப்பிவிட்டாள்….. சித்ரா தன்னை சமாதானம் செய்துக்கொண்டு தன் தோழியைப் பார்க்க, அவளோ காளியாக அவதாரம் எடுத்து அவனை திட்டிக்கொண்டிருந்தாள்….

 

கயல், கண்ணத்தில் கைவைத்துக்கொண்டு , இந்த இரண்டு பெண்களையும் பாவமாக பார்த்துக்கொண்டிருந்த அவனைப் பார்த்து கயல் சரமாரியாக திட்ட தொடங்கிவிட்டாள்….. “அடேய் …! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ….?….. உனக்கு கண்ணு நல்லாதானே தெரியுது, எங்க வண்டியும் நாங்க இரண்டு பேரும் உன்னுடைய நல்லகண்ணுக்கு தெரியிலையா….? ஏன்டா நாயே….! உனக்கு சர்க்கஸ் எதாவது காட்டனம்னு நினைத்தா , வேற எங்கையாவது போய் காட்டு , ….. இப்படி எங்க உசுர வாங்க தான் வந்தியா….?….. ஆளையும் மூஞ்சியும் பாரு நல்லா இஞ்சி திண்ண குரங்கு மாதிரி…… உன்னையெல்லாம் இப்படியே விடக்கூடாதுடா, இரு போலிஸ்கிட்ட பிடிச்சு குடுக்கிறேன்…… கோவத்தில் கத்திக்கொண்டே போக…… இதுவரை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த சித்ரா….., தன் தோழியை பிடித்து” கயல் “…..”கயல்” அமைதியாய் இருடி….. இவன்தான் ராம்….. கயல், அவனின் பெயர் நியாபகத்திற்கு வந்தது….. தன்னுடைய தோழியின் பியான்சி என்று….. , அவள் பெயர் மட்டும் கூறியிருந்தாள்…… தன் தலையை உலுக்கி கொண்டவள் “ராம் “னு பெயர் வெச்சதற்கு பதிலாக ” பைத்தியம்”னு வெச்சிருக்கனும் ….. என்று சற்று அவனைப் பார்த்து முறைப்போடு கூறினாள்…..

 

ராம்…., சாரி சிஸ்டர் அவர்களே …! நீங்க ஆங்கரி போர்டா இருக்கீங்க….. சென்னையில் இருந்து காலையில்தான் வந்தேன்…. சித்ராவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தேன்…… ஆனால், என்னுடைய சர்ப்ரைஸ்க்கு பரிசா “இப்படியொரு அடி , நான் நிச்சயமாக எதிர்ப்பார்க்கல”…..! என்று தன்னுடைய காரை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு சொன்னான்…… அந்த காரில் இருந்த ஒரு மனிதன் இங்க நடந்ததை வீடியோக மொபைலில் சேகரித்துக்கொண்டிருந்தது…… 

 

 

ராம் …,சித்ராவிடம் ஏதோ கண்களால் சொல்ல….. அதைப் புரிந்துக்கொண்ட சித்ரா…. தன்னுடைய தோழியைப் பார்த்து,….”கயல்”… நீ அந்த கார்ல பள்ளிகூடத்திற்கு போயிடு….. நான் ஈவ்னிங் வந்து உன்னைப் பிக்கப் பண்றேன்….. உன்னுடைய ஸ்கூட்டியை இன்று ஒருநாள் மட்டும் எனக்கு கொடு டி…. அமைதியாக ஸ்கூட்டியை விட்டு இறங்கி நின்றுக்கொண்டாள்…..

 

சித்ரா……. ‘டேய் ராம்……’ சீக்கிரம் வந்து வண்டி எடு , அவ மனசு மாறீட்டா …. கஷ்டமா போயிடும்….என்று சித்ரா கத்தா…. 

 

ராம்….., வேகமாக ஓடி வந்து ,ஸ்கூட்டில் உட்கார்ந்துக் கொண்டு, ” சிஸ்டர் ரொம்ப தேங்க்ஸ்” …..என்று கூறிவிட்டு பறந்து விட்டான்….. 

 

கயல், அமைதியாக சென்று காரின் பின்னாடி கதவை திறக்க “, உள்ளேயிருந்து ஒரு குரல் “…புன்னகையுடன் மிஸ் கயல் விழி “… நான் டைவர் இல்லை. நீங்க பின்னாடி உட்கார ,. முன்னாடி வந்து இருக்கையில் வந்து உட்காருங்க….. பின்னாடி கதவை மூடிவிட்டு, முன்கதவை திறந்து முன்னிருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்…….. அவனோ அவளைப் பார்த்துக்கொண்டே வண்டியை ஒட்ட…. அவ்வபோது ரோட்டையும் பார்த்துக்கொண்டிருந்தான்…. சிறிது தூரம் சென்றபின் ” மிஸ் கயல் விழி” ஏதாவது சாப்பிடுறீங்களா….!.

 

 

வேண்டாம் சார்…..அப்பொழுதும் அவனின் முகத்தை அவள் பார்க்க வில்லை…..

 

சிறிது நேரத்தில் , அந்த கார் ஒரு பள்ளிக்கூடத்தின் முன் நின்றது….. அவனோ இவளைப் பார்த்து சிரித்தபடி “மிஸ் கயல் விழி”….. நீங்க இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது…. என்று கூற

 

கயல், தன்னுடைய நினைவலைகளில் இருந்து மீண்டவளுக்கு , தான் பணிபுரியும் பள்ளிக்கு வந்துவிட்டோம் என்று தெரிந்தது….. அவளைப் பார்த்து “தேங்க்ஸ் ” மட்டும் கூறிவிட்டு காரில் இருந்து இறங்கி சென்றுவிட்டாள்….. போகும் அவளையே , ஒரு புன்னகையுடன் பார்த்துக்கொண்டேயிருந்தான்…. அவள் தன் கண்ணைவிட்டு மறைந்த பிறகு தான் ,…. அங்கிருந்து கிளம்பினான்….

 

 இதையெல்லாம் நினைத்துப் பார்த்தவளுக்கு ,அப்பொழுதுதான் ஒன்று நினைவு வந்தது…. அவனுக்கு எப்படி நம்முடைய பெயர் தெரியும் , நான் வேலைச் செய்யும் இடம் தெரியும் ….என்று யோசிக்க….. வேலப்பனின் குரல் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தாள்…..

 

 

வேலப்பனும், கண்ணம்மாவும் ஒன்றாக தன் அறைக்கு வந்திருப்பதைக் கண்டு, ஒரு புன்னகைச் சிந்தினால்….. அவர்கள் இருவரும் எதற்க்கு வந்திருக்கிறார்கள் …என்றும் அவளுக்குத் தெரியும்…..

 

கண்ணம்மா, இங்க பாரு கயல் மா… உன்னுடைய நல்லதுக்காக தான் சொல்றோம் “கல்யாணம் பண்ணிக்கோ மா”….. எதை நினைச்சும் பயப்பிடாதே…. 

 

  தன் பெற்றோரைப் பார்த்து ஒரு தீர்க்கமான பார்வை ஒன்றை பார்த்துவிட்டு, ” சரிம்மா”…. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ….. எனக்கு இப்ப தூக்கம் வருது மா”…..

 

தன் மகள் சம்மதம் கொடுத்ததும், இருவருக்கும் மகிழ்ச்சி தோன்றியது…..

 

கண்ணம்மா, “கயல் “மா … மாப்பிள்ளை வீட்ல எல்லோருக்கும் , உன்னைப் பிடிச்சிருக்குமா…. நான் காலையில் போன் செய்து விஷயத்தை சொல்றேன்…. இந்தா டா இதுதான் மாப்பிள்ளை போட்டோ….. அப்போ நாங்க தூங்க போறோம் என்று தங்களுடைய அறைக்கு சென்றனர்….. சிறிது நேரம் விட்டத்தைப் பார்த்தவள் பிறகு ஒரு வழியாக தன்னை சமாதானம் செய்துக்கொண்டு ,”அந்த போட்டோவைப் பார்த்தாள்,…. தன்னை காலையில் பள்ளியில் காரில் டிராப் செய்தவன் , இவனே .. என்று…. தன்னைப் பற்றியும் அவனுக்கு தெரியும் , தன்னுடைய பெற்றோர் மூலமாக….. அதனால் தான் தன்னுடைய முழு பெயரையும் கூறி அழைத்துள்ளான் என்று நினைத்துக்கொண்டு , அமைதியாக கண்களை மூடிக்கொண்டு உறங்கியும் போனாள்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்