Loading

அத்தியாயம்…!4

பேருந்தில் வந்து கொண்டிருந்த சாதனாவிற்கு தன்னை நினைத்து வியப்பாக “ சே என்னாச்சு எனக்கு, ஏற்கனவே அவங்க என்ன பத்தி தப்பா நினைச்சுட்டு இருக்காங்க இதுல நான் வேற டீ கொண்டுவரவா?,,,, பிஸ்கட் கொண்டுவரவான்னு கேட்டு ம்கூம் இனிமேல அவங்க என்னை பத்தி நல்ல விதமாகவே நினைக்க மாட்டாங்க,’ என்று ஒரு மனது குரல் கொடுக்க இன்னொரு மனதோ அவங்க நல்ல விதமா நினச்சா உனக்கென்ன கெட்டவிதமா நினச்சா உனக்கென்ன…. ”இது ஒரு உதவி அந்த இடத்துல யார் இருந்தாலும் நீ அப்படிதான் செஞ்சிருப்ப, அப்படிதான் செய்யனும் அப்படி செய்யிறவங்கதான் மனசாட்சி உள்ளவங்க. அதனால் நீ ஒன்னும் பீல் பன்னாதஎன்று சமாதானம் செய்தது. ஒருவாறு தெளிந்தவள் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

 

இங்கே அபியின் மனதோ ஏனென்றே தெரியாமல் மிகவும் சந்தோசத்தில் குதித்து கொண்டிருந்தது. அந்த மகிழ்ச்சியுடனே அபி கன்ஸ்ட்ரக்ஸன் சென்று, இன்று என்னென்ன வேலைகள் நட்தது என கேட்டு கொண்டு தன் வீட்டிற்கு சென்றான். அங்கு தன் அன்னையிடமும் பாட்டியிடமும் சற்று நேரம் பேசிவிட்டு, வாசுகி கொடுத்த காபியையும் குடித்து விட்டு, தனது அறைக்கு சென்றான்…. குளியலறை சென்று முகம் கழுவி கீழே வந்தவன் அன்னையிடம் “அம்மா ரொம்ப பசிக்குது, சாப்பிட என்ன இருக்கு?” என “ஏன் அபி மதியம் சாப்பிடலையா?…. ஒரு போன் செஞ்சிருந்தால் நம்ம டிரைவர்கிட்ட கொடுத்து அனுப்பிருப்பேன்ல……சாப்பிடாம அப்படி என்ன வேலைபார்க்கிற…” என படபடவென பொரிந்து கொண்டே சிறிது நேரத்தில் தோசையும், தக்காளி சட்னியும், செய்து டேபிளில் வைத்தார் வாசுகி.

 

அன்னை கூறியதை காதில் வாங்காமல், அவர் செய்த தோசையை அவர் கையால் (ஊட்டி விட்டார்) வாங்கி கொண்டிருந்தான். “நான் இவ்வளவு பேசுறேனே எதாவது பதில் சொல்றியா நீ?..” என அலுத்துக்கொள்ள, “அம்மா புதுசா வாங்கின ஆபீஸ்ல நிறைய வேலைம்மா….. அதான் சாப்பிட மறந்துட்டேன். ஆனா காபியும், பிஸ்கட்டும் சாப்பிட்டேன்மா…” என்றவனை அதிசயமாக பார்த்தார்.

எப்பொழுதாவது மாலை வேளைகளில் காபியோடு, பிஸ்கட்டும் கொடுத்தால்,.. “நான் என்ன சின்ன பிள்ளையா பிஸ்கட் சாப்பிட..” என்று அதை தொடவே மாட்டான்……. ஆனால் இன்று….. ம், என்னவோ இருக்கு.” என்று மனதில் நினைத்து கொண்டார் வாசுகி. தன சேகர் அலுவலக விசயமாக வெளியூர் சென்றிருந்தார். சிறிது நேரம் தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்தவன், பின் வீட்டிலிருந்த அலுவலக அறைக்குள் சென்றுவிட்டான்.

 

தனது அத்தையிடம் வந்த வாசுகி “ அத்த உங்க பேரனை பாத்தீங்களா…? முகம் ரொம்ப பிரகாசமா இருக்கு.. அவனுக்கு பிடிக்காத ஒரு விசயத்த யார் என்ன சொன்னாலும் செய்யவேமாட்டான். ஆனா இன்னைக்கு அதை செஞ்சது மட்டும் இல்லாம.. சிரிச்சுக்கிட்டே வேற சொல்றான்… எனக்கெனமோ உங்க பேரன் காதல் கடல்ல தொபக்கடீர்னு விழுந்துட்டான்னு நினைக்கிறேன்…” என்றவரை, போலி கோபத்துடன் முறைத்து பார்த்த பாக்கியத்தம்மாள் “ அவனுக்கு அம்மா மதிரியா பேசுற… பையன் லவ் பன்றான்னு தெரிஞ்சா ஒரு அம்மாவா என்ன செய்யணும்..?. அவன கூப்பிட்டு கண்டிக்காம சந்தோசபட்டுட்டு இருக்க?…. என்று போலியாக கோப பட்டவரிடம்

 

“என்னத்தை இப்ப்டி சொல்லிட்டிங்க….? நான் எவ்வளவு கோவமா இருக்கேன் தெரியுமா?…… அவன் காதலிப்பது மட்டும் கன்ஃபார்ம் ஆகட்டும் அப்பறம் பாருங்க இந்த வாசுகி யாருன்னு காட்டுறேன்” … என்றவரிடம் “என்ன செய்வீங்க வாசுகி மேடம்” கிண்டலாக கேட்ட பாக்கியத்தமாளிடம் ”என்ன செய்வேனா உடனே ரெண்டுபேத்துக்கும் கல்யாணம் பன்னி, அந்த பொண்ண எந்த வேலையும பார்க்க விடாம, அபிய மட்டும் கவனிச்சா போதும்னு… சொல்லி மாமியார் கொடுமை செய்வேன்.” என்றவரிடம்

 

”அட போடி உனக்கு மருமகளை எப்படி கொடுமை செய்வதுன்னு கூட தெரியல” … என்று கிண்டல் செய்துவிட்டு சென்றார். “மருமகளை இப்படிதான கொடுமை படுத்துவாங்க, வேற எப்படி செய்வாங்க…. ?இதுக்கு எதாவது புக் இருக்கான்னு பார்க்கனும்”.. என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு சென்றார்…. சாதனாவின் வருங்கால மாமியார், பாவம் சாதனா…….

 

இங்கே வீடு வந்த சாதனா, தன் அன்னையிடம் அலுவலகத்தில் அபியிடம் தனது மேலதிகாரி தன்னபற்றி புகார் செய்ததையும், அதற்கு தான் விளக்கம் கூறியதையும் சொன்னதை கேட்டவர்.. “என்னடா இந்த புது நிர்வாகம் உனக்கு சரிவருமா? ஆரம்பத்துலேயே சந்தேகம் வந்துட்டா.. தொட்டதுக்கெல்லாம். உன்னைதான்மா சொல்லுவாங்க…” என்று கவலை பட்டவரிடம்” “இல்லம்மா இந்த எம்.டி ரொம்ப நேர்மையா இருக்காங்க,,,, நடுநிலையா விசாரிக்கிறாங்க…. அதனால ஒன்னு பிரச்சனை இல்லமா….

அதுமட்டும் இல்ல நான் எந்த தப்பும் செய்யலையே பின்ன நான் எதுக்கு பயப்படணும்…?” என்றவள் நான் எதுவா இருந்தாலும் உங்ககிட்டதான சொல்லுவேன் அதான் இதையும் சொன்னேன்… மத்தபடி எந்த பிரச்சனையும் இல்லம்மா.” அன்னயை சமாதானம் செய்ய,

 

”தனு நான் உனக்கு எப்பவும் சொல்ற ஒரே விசயம் நம்ம மேல தப்பே இல்லாத பட்சத்துல நம்ம அந்த பிரச்சனைய பார்த்து பயப்பட கூடாது. தைரியமா எதிர்த்து நிக்கனும் சரியா?. அங்க நடந்த பிரச்சனைல உன் மனசு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கதான் முதல்ல அப்படி பேசினேன். என்ற தன் அன்னையை ’என செல்ல அம்மா..!” கொஞ்சியபடி அன்னையை அணைத்து கொண்டாள்…

 

மறு நாள் அலுவலகம் வந்த சாதனாவை எம். டி அழைப்பதாக பியூன் வந்து கூற அவன் அறைக்கு சென்றாள். அங்கு அவளுடய மேலதிகாரியும் இருந்தார். “சாதனா பணம் வாங்கினவங்கள பத்தி விசாரிக்கணும் அதனால்தான் உங்களையும் வர சொன்னேன்…” என்றவன். மேலதிகாரியை அழைத்து “ சொல்லுங்க மிஸ்டர்.மூர்த்தி எதுக்காக இவ்வளவு பணம் வாங்குனிங்க? அதற்கு ஏன் கணக்கு சொல்லவில்லை?….” என்று கேள்வி கேட்டவனை பயத்துடன் பார்த்த மூர்த்தி அப்பொழுதும்…

 

”சார் இந்த பொண்ணு அதுவா எதாவது எழுதி வச்சுருந்தா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்…..? இதுக்கு எதாவது ஆதாரம் இருந்தா சொல்லுங்க…” என்றவரிடம்… ”அவங்கதான் சிசி டிவி கேமராவ பார்க்க சொன்னாங்களே பார்த்துவிடலாமா?” என்றவன், ”இப்ப நடக்கிற விசாரணை என் அறைக்குள் நம்ம மூணுபேத்துக்கு மட்டும் தான் தெரியும், ஆனா சிசி டிவி கேமராவ பார்த்ததுக்கு பிறகு எல்லார் முன்பும் விசாரிக்கபடுவீங்க எது வசதி?….” தப்பு நிரூபிக்க பட்டுச்சுன்னா தண்டனை மிக கடுமையா இருக்கும். அது யாராக இருந்தாலும் சரி…..” என்றான்.

 

“சார் நான் எந்த தப்பும் செய்யவில்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை…”அப்பொழுதும் அவர் தெனாவட்டாக பேச, “ஓ அப்படியா…?” என்றவன், தொலைபேசி எடுத்து கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரிடம், குறிப்பிட்ட தேதிகளை சொல்லி அதை மட்டும் சிடியில் பதிய சொன்னவன்… இப்பொழுதும் எந்த பதட்டமும் இல்லாம்ல் நிதானமாக இருந்த சாதனாவை பார்த்து, ” எப்படி இப்படி எந்த சூழ்நிலையிலயும் பதட்டமில்லாம இருக்கா?,, சரியான ராட்சசி, என்று திட்டியவன்…… ஆனா அழகான ராட்சசி….” என்று அப்பொழுதும் மனதில் அவளை கொஞ்சிக்கொண்டான்.

 

சாதனாவிடம் ”நான் திரும்ப உங்களை கூப்பிட்றேன் இப்ப நீங்க போகலாம்.” என்றான். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் சாதனாவிற்கு அவனிடமிருந்து அழைப்பு வந்தது. அனைவரையும் மீட்டிங் ஹால் வரசொன்னவன்… அனைவரும் வந்த பிறகு “ அனைவருக்கும் வணக்கம் இப்ப நான் உங்களை எதுக்கு வரசொன்னேன்னு தெரியுமா?” என்றவனை பார்த்து….. அனைவரும் இல்லை என்று தலை அசைக்க, அவன் அருகில் சாதனாவும், மூர்த்தியும் இருந்ததை பார்த்து குழப்பமடைந்தனர்.

 

மது சாதனாவை பார்த்து, ”என்னடி..” என்று பார்வையால் கேட்க, ”ஒன்றும் இல்லை” என்று சொன்னாள். நம்ம கம்பெனி கணக்கு வழக்கு எல்லாம் யார் பார்க்கிறாங்கன்னு தெரியுமா?”…… என்று கூட்டத்தை பார்த்து கேட்க….அனைவரும் ”மூர்த்தி” என்றனர். எனக்கு கம்பெனி வரவு செலவுகளில், சில சந்தேகம் வந்திருக்கு. அதை நான் யார் மூலமாக அறிந்து என் சந்தேகத்தை தீர்த்து கொள்ள வேண்டும்?.. என்றவனை அனைவரும் வித்தியாசமாக பார்த்தனர்…. பதில் சொல்லுங்க பிரெண்ட்ஸ் என்றவனிடம் மறுபடியும் அனைவரும் ”மூர்த்தி” என்றனர். 

 

”ம்… சரியா சொன்னிங்க” என்றவன். அந்த சந்தேகத்தை தான் நான் அவரிடம் கேட்டேன், அவர் உங்கள் அனைவரின் முன்பாகத்தான் சொல்வேன் என்கிறார்…” என்றவன். மூர்த்தியைப் பார்த்து இப்ப சொல்லுங்க சார்…” என்றான். மூர்த்தி அனைவரையும் பார்த்து “நான் எத்தனை வருஷமா இஙகே வேலை பார்க்கிறேன். என்னப்பற்றி உங்க எல்லாருக்கும் தெரியும்… இப்ப கம்பெனில பணம் குறையுதுன்னு, இதோ இங்க நிக்கிறாங்களே சாதனா மேடம்…… அவங்க ஏதோ கணக்கு எழுதி வச்சுருக்காங்க, அதுல எல்லாமே நாந்தான் அவங்ககிட்ட பணம் வாங்கினதா இருக்கு… ஆனா அதற்கான ஆதாரம் இல்ல……. அந்த கணக்கில் எல்லாம் என் பெயரை எழுதி, இந்த பெண்தான் பணத்தை எடுத்திருக்கிறாள்…….

 

ஆனால் சாதனா பணத்தை எடுத்ததற்கான ஆதாரமும் எங்கிட்ட இல்ல…. ஏன்னா இந்த பொண்ணு மேல உள்ள நம்பிக்கையில் நான் படிக்காமலயே சிலதில் கையெழுத்து போட்டுவிட்டென், இப்பொழுது நிர்வாகம் என்மேல் பழி போடுகிறது. அதை தீர்க்கத்தான் இங்கே வந்திருக்கிறேன். அந்த பொண்ணு சிசி டிவி கேமராவ பார்க்க சொல்லுது. எனக்கு எந்த பயமும் இல்லை ஏனென்றால் நான் தப்பு செய்யவில்லை. அது உங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டுமே அதனால் தான் இங்கே அந்த பொண்ணு சொன்ன தேதில சிசி டிவி கேமராவ இயக்கி அத காட்ட போறாங்க,…..

 

இன்னு சிறிது நேரத்தில் யார் தப்பு செய்தாங்கன்னு உங்களுக்கே தெரியும்.” என்று மிக நீளமாக பேசிமுடித்தார். அவர் பேசுவதை எல்லாம் புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான் அபி……. அவன் கோபத்தை விட புன்னகை மிகவும் ஆபத்தானது என்று மூர்த்தி அறிய வில்லை பாவம்…………

அந்த மீட்டிங் ஹாலே அமைதியாய் இருக்க….. அங்கு சாதனா, குறிப்பிட்ட தேதிகளில் வீடியோ ஒளிபரப்ப பட்டுகொண்டிருந்தது. ஆனால் அதில் சாதனா எழுதியது போல் மூர்த்தி பணம் எதுவும் வாங்குவது போல் காட்சி எதிலும் வரவில்லை….. சாதனா முதன் முறையாக பதட்டமடைந்தாள்… அதை பார்த்து கொண்டிருந்த மூர்த்திக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்க…. அபி இன்னும் அதே புன்னகை முகமாகவே இருந்தான்.

 

வீடியோ அனைத்தும் முடிந்தவுடன் மீண்டும் மூர்த்தி தன் பேச்சை ஆரம்பித்தார். “பார்த்தீங்களா.. என் மேல எந்த தப்பும் இல்லன்னு நான் சொன்னேன்ல…. அதை இந்த வீடியோவே நிரூபித்துவிட்டது. இப்பொழுதாவது தெரிகிறதா?,,,,, கணக்கில் குறைந்த பணத்திற்கு நான் காரணமில்லை.,, சாதனாதான் காரணம் என்று….” கூற

”இப்பொழுது கம்பெனி நிர்வாகம் என்ன செய்ய போகிறது…..

பெண் என்பதால் இரக்கம் காட்ட போகிறதா?……. தப்பு யார் செய்தாலும் தண்டனை ஒன்றுதான் என்று என்னிடம் சொன்னீர்களே, எம் டி சார்…. இப்பொழுது இந்த பொண்ணுக்கு என்ன தண்டனை தர போறீங்க?” என்றவரை பார்த்தவன்……

 

தன் கண்களில் இருந்த கண்ணீரை அடக்க முயற்சி செய்து கொண்டிருந்த சாதனாவை பார்த்து கொண்டே, தன் கோபத்தை முகத்தில் காட்டாமல் “நான் முதலில் சொன்னதைத்தான் இப்பொழுதும் சொல்கிறேன். தப்பு யார் செய்தாலும் தண்டனை மிக கடுமையாக இருக்கும்” என்றவன், மூர்த்தியை பார்த்து….. தண்டனை கொடுப்பதற்கு முன் இன்னொரு வீடியோவும் இருக்கு அதையும் பார்த்து விடுவோமா? மிஸ்டர் மூர்த்தி” என்று நக்கலாக கேட்டவன், தனது உதவியாளர் பிரபுவை அழைத்து ஏதோ கூற, அவன் தனது பையில் உள்ள பென்டிரைவை எடுத்து கொடுத்தான். “பிரெண்ட்ஸ் நீங்க இவ்வளவு நேரம் பார்த்த வீடியோ மிஸ்டர்.மூர்த்தி எடுத்தது…. அதாவது மூர்த்தி வருகிற காட்சி மட்டும் கட் பண்ணி எடிட் பண்ணி மூர்த்தி எடுத்த வீடியோ இது. ஆனால் உண்மையான வீடியோ இதோ..” என தன் கையிலிருந்த பென்டிரைவை காண்பித்தான்.

 

கூட்டத்தில் இருந்த அனைவரும் ”அய்யோ தலை முடிய பிக்க வைக்கிறாங்களே……” என்கிற பாவனையில் அமர்ந்திருக்க…..

அபி கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரை அழைத்து அந்த பென்டிரைவை போட சொன்னான்……. அதில் சாதனா குறிப்பிட்ட தேதிகள் மற்றும் நேரம் அனைத்திலும், மூர்த்தி சாதனாவிடம் பணம் வாங்கிய காட்சி இருந்தது. அனைவ்ரும் அதிர்ச்சியோடு பார்க்க பயத்தில் உடல் முழுவதும் வேர்த்து, நடுங்கி கொண்டிருந்த மூர்த்தியை பார்த்து…….. “என்ன மிஸ்டர் மூர்த்தி நாம தான் நேத்து நைட் முழுதும் இருந்து நம்ம இருந்த வீடியோவ மட்டும் அழித்து விட்டோமே…… திருமபவும் எப்படி வந்தது என்று யோசிக்கிறீங்களா?” நக்கலாக கேட்டவன்..

 

”நேற்று மிஸ்.சாதனா என்னிடம் சிசி டிவி கேமராவ பத்தி சொல்லி அத செக் பன்ன சொன்னப்ப உங்க முகத்தை பார்த்தேன். அதில் நிறைய பதட்டம் இருந்ததையும் பார்த்தேன்… நான் அதை பார்க்க தேவை இல்லைன்னு சொன்ன வுடனே உங்க முகம் மலர்ந்ததையும் பார்த்தேன். அப்பவே எனக்கு நீங்க ஏதோ செய்ய போறீங்கன்னு உறுதியாக தெரிந்தது அதான் நான் பிரபுவை அழைத்து உடனே வீடியோவ பென்டிரைவில் காப்பி பன்ன சொன்னேன்.” என்ற அபி… சாதனாவிடம் திரும்பி அவள் கண்களில் இப்பவே விழவா? என்று துருத்தி கொண்டிருந்த கண்ணீரை துடைக்குமாறு கண்களால் கூற சாதனா தொட்டு பார்த்து அவசரமாக பிறர் அறியாமல் கைகுட்டையில் தன் கண்களை ஒற்றி எடுத்தாள்.

 

“சோ மூர்த்தி சார் இதற்கு என்ன விளக்கம் தர போகிறீர்கள்? என்று முகத்தை மிகவும் கடுமையாக வைத்து கொண்டு கேட்க அவன் கோபத்தில் சாதனாவே ஒரு நிமிடம் பயந்து விட்டாள். உடனே தன் வயதையும் மறந்து அபியின் கால்களில் விழப்போனார். அவரின் நோக்கம் அறிந்து அபி நொடியில் விலகி கொண்டான். மூர்த்தி அபியை பார்த்து ”சார் தெரியாம தப்பு பன்னிட்டேன் சார் இந்த ஒரே ஒருதடவை மன்னித்து விட்ருங்க சார்” என்று கெஞ்சியவரிடம்….. அபி “கணக்கில் குறைந்த பணம் சுமார் பதினைந்து லட்சம்… அது எனக்கு ஒரு பெரிய தொகையே இல்லை……. நான் தவறை மன்னிப்பேன் ஆனால் நம்பிக்கை துரோகம் என்னால் பொறுத்து கொள்ள முடியாத ஒன்று.

ஆனால் அதையும் தாண்டி உங்களுக்கு நான் இரண்டு முறை வாய்ப்பளித்தேன் அதை நீங்கள் பயன்படுத்தி கொள்ளவில்லை,” என்றவன்..

 

”இவை அனைத்தையும் விட மன்னிக்க முடியாத பெரிய தப்பு, நீங்க செஞ்ச தப்ப சனா…. சாரி சாதனா மேல போட்டது”. இதுக்கு நீங்க தண்டனை அனுபவிக்க வேண்டாமா?” நான் உங்களை காவல் துறையிடம் ஒப்படைக்க போவதில்லை என்றவுடனே மூர்த்தியின் முகம் நிம்மதியை காட்ட……

அதை பார்த்தவன் புன்னகையுடன் உங்களுடைய இந்த வேலை இன்று முதல் பறிக்க படுகிறது….. இந்த கம்பெனியில் நீங்கள் ஒரு பியூனாக வேலை செய்ய போகிறீர்கள். உங்களுடை சம்பளம் ஐந்தாயிரம், அதில் மூவாயிரம் நீங்கள் எடுத்த பணத்திற்கு பிடித்தம் செய்யப்படும். மீதம் இரண்டாயிரம் உங்கள் கையில் தரப்படும். நீங்கள் வெளியே வேறு வேலைக்கும் செல்ல முடியாது.” என்றவன் பின்பு

 

இதற்கு சம்மதிப்பதை தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை,,,, மூர்த்தி” என்று அவரை பார்த்து கூறினான். மூர்த்தியின் முகம் ரத்த பசை இல்லாமல் வெளுத்து போயிருந்த்து.பின்பு கூட்டத்தினரை பார்த்து….. ”மூர்த்தி உங்கள் அனைவரின் முன்பாக பேசுவதற்கு நான் ஏன் சம்மதித்தேன் தெரியுமா?….. மூர்த்தி போல் ஒருவர் தப்பு செய்து விட்டு எளிதாக தப்பிவிட முடியாது என்பதை உங்களுக்கு காட்டத்தான்.

மீண்டும் இதுபோல் தப்பு நேர்ந்தால் தண்டனை இதை விட மிக கடுமையாக இருக்கும் என எச்சரிக்கிறேன் என கர்ஜனையாக கூறியவன் முகத்தை அனைவரும் பயத்துடன் பார்த்தனர்.

 

கூட்டம் முடிந்து அனைவரும் விலகிச் செல்ல, அபியும் தன் அறைக்கு சென்றான். ”எவ்வளவு தைரியம் இருந்தா என் சனா மேல பழி போடுவான். அன்னைக்கு நான் அவ்வளவு பேசியபொழுதும் அழாம எவ்வளவு தெளிவா நிதானமா என்ன பார்த்தா? ஆனா இன்னைக்கு….. அவளை அழ வச்சுட்டானே” அவன் மூர்த்தி மீது மிகவும் கோபத்தில் இருக்க

அவனை பார்க்க சாதனா அனுமதி கேட்டு அவன் அறை வாயிலில் நின்று கொண்டிருந்தாள். உடனே அவன் அனுமதி கொடுக்க உள்ளே வந்த சாதனா அபியை பார்த்து “ நீங்க செய்த உதவிக்கு ரொம்ப நன்றி சார்” என்றவள், தொடர்ந்து “நான் வேலையை ராஜினாமா செய்கிறேன்…….” என ஒரு நொடி அபி திகைத்து நின்றுவிட்டான். பின் சுதாரித்து கொண்டு “எதற்காக இந்த திடீர் முடிவு என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என சாதரணமாக கேட்க..

 

அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க… ”நான் ஒரு கேள்வி கேட்டேனே?” என்றான். அவள் கண்களில் கண்ணீர் விழ தயாராக் இருக்க அதை பார்த்து துடித்தவன்….. ”பிளீஸ் சாதனா அழாதீங்க இப்ப நடந்த விசயம் உங்கள ரொம்ப பாதிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அதான் உங்கமேல தப்பு இல்லைன்னு நிரூபிச்சாச்சு இல்ல பின்ன ஏன் அழறீங்க…?” என்றவனிடம்

 

”இல்ல சார் என் மேல தப்பு இல்லைன்னு எனக்கு தெரியும் ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் எந்த ஒரு தப்புமே செய்யாத மனிதன குற்றவாளியா மாற்றி விடுகிறது” என்று கூற அபி தங்களுடைய முதல் சந்திப்பை நினைத்தவன்….. அதற்காக ரொம்பவே வருந்தினான். தொடர்ந்து சாதனா பேச தன் நினைவிலிருந்து வெளிவந்தான். ”மூர்த்தி சார் காட்டிய வீடியோவ பார்த்துட்டு எல்லாரும் என்ன பார்த்த பார்வை……. என்னைக்குமே என்னால மறக்க முடியாது. ஒவ்வொரு தடவையும் தப்பே செய்யாம அனுபவிக்கிற தண்டனை இருக்கே.. ரொமப கொடுமை சார்” என்றபடி அவள் முகம் மிகவும் வேதனையை காட்டியது.

 

அவளின் வேதனையை பார்த்த அபி அணைத்து ஆறுதல் கூற துடித்த தன் கரங்களை அடக்க மிகவும் சிரமப்பட்டான். ஆனால் அவன் மனது சாதனா இதை விட ஏதோ பெரிய துன்பம் அடைந்திருக்கிறாள் என கூற அதை மெய்பிப்பது போல் “ஆண்கள் மிகப் பெரிய சுயநலவாதிகள்ன்னு எனக்கு ஒவொரு சம்பவும் எடுத்து காட்டுது…..” என தன் போக்கில் சொல்லி கொண்டிருந்தவளை “ சாதனா..!” என அவன் வியந்த குரலில் தன்னிலைக்கு வந்தாள். உடனே தன்னை சுதாரித்து கொண்டு….

 

”சாரி சார். நான் முதலில் சொன்னது போல் வேலையை ராஜினாமா செய்கிறேன்”. என கூறிவிட்டு, அறையை விட்டு வெளியேற போனவளை ஒரு நிமிஷம் என்று தடுத்தவனின் முகம், ஒரு முதலாளிக்கு உரிய தோரணை காட்டியது.

’இனி இவளிடம் அமைதியாக பேசினால் வேளைக்கு ஆகாது,’ என்று அதிரடிதான்……’. என்று மனதில் நினைத்தவன், முகத்தை கடுமையாக வைத்து கொண்டு, ”நீங்க உங்க மனசுல என்ன நினச்சுட்டு இருக்கீங்க உங்க இஷ்டத்துக்கு இருக்கிறதும், வேண்டாம்னா போவதற்கும், இது என்ன சத்திரமா?” என்று கோபமாக கேட்டவன்…… இது ஒரு இம்போர்ட் & எக்ஸ்போர்ட் கம்பெனி என்பது நினைவிருக்கா?

உங்களை எல்லாம் நம்பி வெளிநாட்டுகாரன்கிட்ட ஒப்பந்தம் வேற போட்ருக்கேன். என்னைய எதால அடிக்கலாம் சொல்லுங்க?” என்று அவளிடமே கேட்டவன் அவளின் திகைத்த தோற்றத்தை பார்த்து மனதில் திருப்தி அடந்துகொண்டு மீண்டும் பேச தொடங்கினான். இங்க பாரு…..ங்க சாதனா என்று ஒருமையில் அழைக்க போனவன் பின்பு பன்மையில் அழைத்து…….

 

நீங்க வேலைய ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், கம்பெனியோட விதிப்படி நிர்வாகத்திற்கு மூன்று மாத நோட்டீஸ் கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் முடியவும் இன்னும் மூன்று மாதங்கள்தான் இருக்கு, இப்ப நீங்க போன்ங்கின்னா கணக்கு வழக்க எல்லாம் யார் பார்ப்பார்கள். இனி புதுசா ஆள் சேர்த்து அவங்களுக்கு விளக்கம் சொல்லி அவங்க வேலை கத்துக்கிறதுக்குள்ள இந்த ஒப்பந்தமே முடிஞ்சிரும்.

இந்த கம்பெனி வாங்கிய உடனே நான் சைன் பன்ன முதல் ஒப்பந்தம் இதுல எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியா முடித்து கொடுக்க வேண்டும். சோ நீங்க மூனு மாசம் கண்டிப்பா வேலை பார்த்துதான் ஆகவேண்டும் இப்ப நீங்க போகலாம்” என கூறிவிட்டு தனது கம்ப்யூட்டரை பார்க்க ஆரம்பித்து விட்டான். 

 

முதலில் அபியின் பேச்சில் மிரண்டு விழித்த சாதனா, அவனின் பேச்சில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு எதுவும் கூறாமல் வெளியேற போன விநாடி அவளை அழைத்தவன், அவள் திரும்பி என்னவென்று பார்க்கவும்…… ”அன்னைக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் நடந்ததுக்கு ரொம்ப சாரி” என்றவனை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தாள்……. அபியை வருங்காலத்தில் ஆட்டி படைக்க போகும் சாதனா..! 

 

தொடரும்….

அத்தியாயம்..-5

அபி, சாதனாவிடம் அன்று ஷாப்பிங்க காம்ப்ளெக்ஸில் அவளிடம் கோபப்பட்டதற்காக மன்னிப்பு கேட்கவும், வியப்பில் விழி விரிக்க, அதில் சுகமாய் தொலைந்தான் அந்த கள்ளன்.. ஒருவாறு தன்னை சுதாரித்த சாதனா.. “பரவாயில்லை சார்..” என்றுவிட்டு தன் இடத்திற்கு சென்றாள்.. அபியின் அறையை விட்டு வெளியேறியதும், அபியிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளியேறியது. கடவுளே இப்பவே கண்ண கட்டுதே…… எப்ப இவக்கிட்ட என் காதல சொல்லி… இவளை என்ன காதலிக்க வச்சு…..”செல்லமாக அலுத்துக் கொண்டு, ’கடவுளே ஊர்ல எத்தனையோ பொண்ணு இருக்க,,,,,,, நான் ஏன் என் சனாவ பார்த்தேன்?’….’ என சினிமா வசனம் போல் தனக்குள்ளே பேசிக்கொண்டான்.

 

அபியின் அறையிலிருந்து வெளியே வந்த சாதனாவின் முகம் அபியை நினைத்து குழப்பத்திலிருந்தது. ஆண்களை பற்றியே நினைக்க விரும்பாதவள்.. நல்லதாகவோ.. கெட்டதாகவோ ஆனால் அபியை பற்றி நினைத்திருந்தாள் அவளை அறியாமலையே… அந்த குழப்பத்திலேயே தன் இருக்கைக்கு வந்து வேலை பார்க்க ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் மது வந்து ”என்னாச்சு சாதனா இவ்வளவு விசயம் நடந்திருக்கு நீ ஏன் எங்கிட்ட எதுவுமே சொல்லலை?” என்று கோபமாக கூறியவள்…” சாதனா அப்பொழுதும் அமைதியாக இருக்க.. ”நான்தான் உன்னை தோழியாக நினச்சிருக்கேன், ஆனா நீ அப்படி நினைக்கலைல?” என்று வருத்தத்துடன் பேசியவளை பார்த்த சாதனா ”இந்த விசயம் இவ்வளவு தூரம் வரும்ன்னு எனக்கே தெரியாது மது…..” என்றவள் நேத்து எம் டி சார் இந்த விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்னு தான், மூர்த்தி சார்க்கிட்டையும், எங்கிட்டையும் மட்டும் விசாரிச்சார்.

 

ஆனா மூர்த்தி இப்படி திடீர்னு மாறுவார்னு நான் நினச்சே பார்க்கலை தெரியுமா? நேத்து சார்கிட்ட அவ்வளவு பணிவா பேசினவர், இன்னைக்கு இப்படி பேசுவார்னு தெரியாதுப்பா?, அதுவும் என்மீது பழி போடுவார்ன்னு சத்தியமா எனக்கு தோணவே இல்ல மது, அவர் அப்படி சொன்ன உடனே ஒரு நிமிஷம் அந்த நொடி என்னோட மனசும், மூளையும் அப்படியே நின்னுருச்சு மது என்ன சொல்றதுன்னுகூட தெரியல. என்னை அறியாமலே கண்ணுல தண்ணி வந்துருச்சு…

 

எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க மது, நம்ம தப்பு செய்யாதப்ப யாருக்காவும், எதுக்காகவும் தலை குனிஞ்சு நிக்ககூடாதுன்னு, இதுவரைக்கு நான் அப்படித்தான் இருந்திருக்கேன். ஆனால், இன்னைக்கு அதுமாதிரி என்னால இருக்க முடியல மது….. ரொம்ப அவமானமா அப்படியே அந்த நிமிஷமே பூமிக்குள்ள போய்விட மாட்டேனா? தோணுச்சு. நான் தப்பே செய்யல ஆனா சூழ்நிலை என்ன தப்பு செஞ்சமாதிரி காமிச்சிருச்சு. இதுல இருந்து நான் எப்படியாவது வெளியே வந்திருப்பேன்தான். ஆனா அதுக்கு சில நாட்கள் ஆயிருக்கலாம், அதுவரைக்கும் ஆபீஸ்ல வேலை செய்றவங்க பார்க்கிற பார்வையை என்னால தாங்கிருக்கவே முடியாது மது…” இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த தன் மனக்குமுறலை சொல்லி அழுதவளை பார்த்த மது, தன்னையே திட்டியபடி,

 

”ஆனா, அதுக்கு அவசியமே இல்லாம. எம் டி சார் உடனே உண்மையை கண்டுபிடிச்சிடாரே சாது,,,,, பின்ன ஏன் அழற.” சாதனாவை சமாதானம் செய்தவள்.. ”சே, நான்தான் முட்டாள் என்கிட்ட சொல்ற விசயமா இருந்தாதான் சொல்லிருப்பல்ல?…… எம் டி சாரே சொல்ல வேண்டாம்னு சொன்னா நீ என்ன செய்வ?…. எங்கிட்ட சொல்லலையேன்னு கோபத்துல ஏதோ பேசி உன்ன அழவச்சுட்டேன் சாரிடி….” என மன்னிப்பு கேட்ட மது சாதனாவை சமாதானம் செய்து,

ஆனா நம்ம எம் டி சார் சூப்பர் இல்ல…! ஹாலிவுட் படத்துல வருகிற ஜேம்ஸ்பாண்ட் மாதிரி எப்படி உண்மைய கண்டு பிடிச்சிருக்கார். ரியல்லி கிரேட்….. சிரிச்சுக்கிட்டே அந்த மூர்த்திய எப்படி கதிகலங்க வச்சுட்டார். எல்லார் முன்னாடியும் விசாரிச்சு, தப்புக்கு தண்டனை கொடுத்த மாதிரியும் ஆச்சு, அதே மாதிரி எல்லாருக்கும் எச்சரிக்கையும் கொடுத்தாச்சு,,, அசத்திட்டாருடி…! அதனாலதான் அவர் இத்தனை கம்பெனியை மேனேஜ் செய்ய முடியுது”. என அவனைப்பற்றி புகழ்ந்து கூறிகொண்டிருந்த மது, ”சாதனாவை பார்த்து என்னடி நான் அவரை பத்தி இவ்வளவு பேசுறேன் நீ ஒன்னுமே சொல்லமாட்டிங்கிற” என,

 

சாதனா ”நான் என்ன சொல்லனும், எனக்கு ஒரு உதவி செஞ்சார், நிச்சயமா ரொம்ப பெரிய உதவிதான், அதை நான் மறுக்கல… அதுக்கு நான் நன்றியும் சொல்லிட்டேன். இதுக்கு மேல வேற என்ன செய்யனணும்,? இல்ல என்ன சொல்லணும்? எதிர் பார்க்கிற மது?” மீண்டும் தன் கூட்டுக்குள் அடைந்து கொண்டவளை வியப்பாக பார்த்தாள் மது, சாதனா முகத்தில் அபியைப் பற்றிய வியப்போ, இல்லை அவனை பற்றிய பிரமிப்போ எதுவும் இல்லை….. ’அவன் உதவி செய்தான் நான் நன்றி சொன்னேன் வேற எதுவும் இல்ல’ என்ற பாவனை தான் இருந்தது.

மது மேலும் அதை பற்றி கூறாமல் பேச்சை மாற்றும் பொருட்டு ”நான் சொல்ல வந்த விசயத்த விட்டுட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கேன் பார்” என்றவள் 

 

சாதனாவிடம் “வாழ்த்துக்கள் சாதனா…” என்று மகிழ்ச்சியோடு கை குலுக்க, சாதனா புரியாமல் “என்னடி எதுக்கு இந்த வாழ்த்து” என கேட்க மது ”நீ என்னடி கணக்கு பார்க்கிறதை தவிர கம்ப்யூட்டர எதுக்குமே உபயோகபடுத்த மாட்டியா? என்றவள், ஆனாலும் அநியாயத்துக்கு நல்லவளா இருக்காதடி….” இப்படி இருந்தா நாடு தாங்காதுப்பா,,,, என கேலி பேசியவளின் வாயை பொத்தி,,,,

”இப்ப வாயை மூடவில்லை என்றால் உன் தலையில கொட்டிருவேண்டி, ஒழுங்கா வந்த விசயத்த சொல்லு..” என மிரட்டினாள். மது “சரி போனா போகுது பிரெண்டாச்சே அதனால சொல்றேன். என்று போலியாக சலித்தவளை முறைத்து பார்த்த சாதனா மது சொன்ன செய்தியில் ஆச்சரியத்தில், திகைத்து நின்று விட்டாள்.

 

ஆம் மது சொன்ன விசயம் இதுதான். ”சாதனா இன்று முதல் நீதாண்டி இந்த கம்பெனி கணக்குகள் எல்லாத்தையும் பார்க்க போற, அதாவது மூர்த்தி சார் இருந்த இடத்துல நீ இருக்க போற……” உற்சாகமாக அறிவித்த மது, சாதனா திகைத்து நின்று இருந்ததை பார்த்து சிரித்து விட்டு, இதுல இன்னொரு சந்தோசமான விசயம் என்ன தெரியுமா?” என்று கேட்ட மது விடம் என்ன என்று பார்வையால் கேட்டவள், நீ இருந்த இடத்துக்கு நான் வர போகிறேன். என்று மகிழ்ச்சியாக அறிவித்தாள்.

 

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அலுவலக உதவியாளர் வந்து அவர்களை எம் டி அழைப்பதாக கூற, இருவரும் அபியின் அறைக்கு சென்றனர். அவன் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த அவர்கள் இருவரையும் ஒர் தலையசைப்புடன் வரவேற்று, அமர சொன்னவன், உங்கள் இருவரையும் எதற்காக வர சொன்னேன்னா?… சாதனாவை பார்த்து இன்று முதல் இந்த கம்பெனி கணக்கு வழக்குகள் அனைத்தையும் நீங்கள்தான் பார்க்கபோறீங்க, என்று சாதனாவிடம் கூறியவன், மதுவிடம் திரும்பி, இனி சாதனாவிற்கு உதவியாக நீங்கள் இருக்க வேண்டும் என உத்தரவிட்டான். பின்பு, பிரபுவை அழைத்து அதற்கான ஆர்டரை டைப் செய்ய சொல்லி அதில் கையெழுத்திட்டு, அவர்கள் இருவரிடமும் கொடுத்தான்.

 

சாதனாவிடம் இனி நீங்கள் தினமும் மாலை உங்களுடைய ரிப்போர்ட்டை நேரடியாக என்னிடம் காட்ட வெண்டும். உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னிடம் கேட்கலாம், இது சம்பந்தமாக நீங்கள் எப்போது வேண்டுமாலும் என்னை பார்க்கலாம்.” என கூறியவன் அவர்களை அனுப்பி வைத்தான்

 

இருவரும் அறையை விட்டு வெளியே வந்தவுடன், மது… “ஹே,,,,,, நாம ரெண்டுபேரும் ஒரே இடத்தில் வேலை பார்க்க போறோம்…. என உற்சாகத்தில் துள்ளி குதிக்க, சாதனா ”இவ்வளவு பெரிய பொறுப்பை, மூன்று மாதத்தில் வேலையிலிருந்து விலக போகிறவளிடம் எதற்கு கொடுக்க வேண்டும்? என யோசனையில் ஆழ்ந்தாள். (அட போப்பா எப்ப பாத்தாலும் எதாவது யோசிச்சுக்கிட்டே இருக்க)

 

சாதனா கம்பெனி கணக்குகளை பார்க்க ஆரம்பித்து இரண்டு மாதம் ஆகிவிட்டது, தினமும் மாலை அபியை பாத்து அன்றைய வரவு செலவுகளை அவனிடம் காட்டி கையெழுத்து வாங்கிய பிறகுதான் வீடு செல்வாள். பார்த்த அளவில் அபியின் மீது பெரும் மதிப்பு உண்டாகிவிட்டது, முதலில் இருந்த நிர்வாகத்திற்கும், இப்பொழுது நடக்கும் நிர்வாகத்திற்கும் மலையளவு வித்தியாசதை உணர்ந்தாள்.

பழைய நிர்வாகத்தில், கம்பெனியின் மேல்மட்ட உயர் அதிகாரிகள் மட்டுமே எம் டி யை பார்க்க முடிந்தது. கீழ்மட்ட தொழிலாளர்கள் தங்கள் குறைகள், அல்லது தேவைகள் எதுவாகினும் தன்ககு மேல் உள்ள அதிகாரிகளிடம் தான் சொல்ல வேண்டும், அதில் பல விசயங்கள் எம் டி யின் கவனத்திற்கு செல்லாமலயே போய்விட்டது அதில் சாதனாவின் விசயமும் அடங்கியது.

 

ஆனால் அபிமன்யூ இந்த கம்பெனியை வாங்கியதிலிருந்து, மேல்மட்ட, கீழ்மட்ட அதிகாரிகள், தொழிலாளிகள், அனைவரும் அவர்களுடைய குறைகள், தேவைகள், அனைத்தையும் அவனிடம் நேரடியாக கூறினார்கள்.

அதிலும் அபி அவர்களின் தேவைகள் நியாயமாக இருந்தால் தயங்காமல் உதவிசெய்தான். குறைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக தீர்த்து வைத்தான். அதனாலயே அபி தொழிலார்களின் மனதில் பல படிகள் உயர்ந்து நின்றான். ஆம் சாதனாவின் மனதிலும் தான்……..

 

அது அபிமன்யூவிற்கு தொழிலாளர்களிடம் இருக்கும் நல்ல பெயர் மட்டும் காரணம் அல்ல…… அபி செய்யும் சில செயல்கள்……. சாதனா, கம்பெனி வரவு, செலவு பார்த்த சில நாட்களிலேயே முதன் முறையாக அபியை நினைத்து வியப்படைந்தாள்.

ஆம் அபிமன்யூ கம்பெனியில் வரும் லாபத்தில் பத்து சதவீதம் தொழிலாளர்களுக்கும், நாற்பது சதவீதம் அனாதை ஆசிரமங்களுக்கு கொடுத்திருந்தான். அது அவனின் வழக்கம் போலும், ஆசிரமங்களின் முகவரியை கூறி அவளிடம் தான் பணம் அனுப்ப செய்தான். அதிலும் அந்த ஆசிரமத்து நிர்வாகிகளின் நன்றி கடிதமும், குழந்தைகளின் வாழ்த்து அட்டையும், பார்க்க, பார்க்க சாதனாவிற்கு பெரும் மகிழ்ச்சி உண்டானது.

 

சாதனாவின் மனதில் தான் உயர்ந்து நிற்பது தெரியாமல், இங்கே அபி அவளிடம் தன் காதலை எப்படி சொல்வது என யோசிக்க தொடங்கினான்…… ”டேய் அபி ரொம்ப யோசிக்காதடா அது இயல்பா வரனணும் அவ முதல்ல தன்னோட கூட்டுக்குள்ள இருந்து வெளிய வரனணும்….. மற்ற ஆட்களோட கலகலப்பா பேசனும், அவ மனசுல எதுவோ அழுத்திட்டே இருக்கு அதுல இருந்து முதல்ல அவ வெளிய வரவைக்கணும், அது எல்லாம் செஞ்சிட்டுதான், அவகிட்ட உன் மனதை, காதலை சொல்லணும்” என்று தனக்கு தானே பேசிக்கொண்டான், சாதனாவின் உயிராக போகும் அபிமன்யூ…….!

 

இங்கே அபி தனது அறையில் தனக்குள்ளே பேசிக்கொண்டிருக்க, சாதனா கதவை தட்டி அவன் அனுமதி கேட்டு உள்ளே வந்தாள். சாதனாவை பார்த்தவன் உடனே தன் முகத்தை மாற்றி கொண்டு…. ”என்ன விசயம்” என கேட்டவனிடம், சார் ரிப்போர்ட் என அவனிடம் அன்றைய கணக்குகளை காட்டியவள், அவன் அதை சரி பார்த்து கையெழுத்திட்டதும், அவனிடம் புன்னகையுடன் நன்றி கூறிவிட்டு சென்றாள். சிரித்த முகமாக சென்றவளை எட்டாவது அதிசயமாக பார்த்து கொண்டிருந்தான் அபி.

 

வீட்டிற்குள் சிரித்த முகமாக வந்த மகளை கண்டு, ஆச்சரியமாக பார்த்த மங்கை, ”என்னடா தனு ரொம்ப சந்தோசமா இருக்க?” என கேட்க தன் அன்னையை அணைத்துக் கொண்டு……….. இன்று அலுவலகத்தில் நடந்ததை சொன்னாள். அதை கேட்ட மங்கைக்கும் மகிழ்ச்சியே….. அதிலும் அந்த குழந்தைகளின் வாழ்த்து அட்டையை பற்றி பேசும்போது, சாதனாவின் முகத்தை பார்த்த மங்கை மிகவும் சந்தோசமடைந்தார். “கடவுளே என் பொண்ணு ரொம்ப நாள் கழிச்சு சிரிக்கிறா….. இந்த சிரிப்பு எப்பவும் வாடாம இருக்க வேண்டும்” என ஒரு அவசர வேண்டுதலையும் வைத்தார். தன் பொண்ணை சிரிக்க வைத்த அபிக்கும் மனதார நன்றி கூறினார்.

 

அதே நேரம் இங்கே அபியின் வீட்டில், அவன் காபி குடித்து கொண்டிருக்க, நன்றாக புரையேறியது. வாசுகி அவன் தலையை தட்டி கொண்டே “ உன்னைய எந்த பொண்ணோ திட்றாங்க போல கண்ணா” என கிண்டல் செய்த அன்னையை முறைத்தான். ”எதுக்கு கண்ணா முறைக்குற நான் உண்மையத்தான சொன்னேன்….. தினமும் எதாவது ஒரு பொண்ண திட்டலைனா உனக்கு தூக்கம் வராதே……” என்று மேலும் அவனை கேலி பேசினார். அபி அன்னையை முறைத்து கொண்டே, ”ஆமா ஏற்கனவே அதுமாதிரி பேசித்தான் ஒருத்திட்ட மாட்டிட்டு முழிக்கிறேன். இதுல இன்னொரு பொண்ணா, தாங்காது தாயே.!” என அன்னையிடம் மனதில் கூறிக்கொண்டு வெளியே 

 

”என் இமேஜ டேமேஜ் பண்ண வெளிய யாருமே தேவையில்ல மா……. நீங்க ஒருத்தரே போதும், எனக்குன்னு அம்மாவா வந்து பொறந்தீங்களே..! என போலியாய் அலுத்து கொண்டவன், போங்கம்மா நான் ரொம்ப கோவமா போறேன்.” என தன் அறைக்குள் புகுந்து கொண்டான். அபி வெளியே கம்பீரமகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், விளங்கும் மகன், தன்னிடம் குழந்தையாய் சிணுங்கி செல்வதை பெருமையாய் பார்த்திருந்தார் வாசுகி.

 

மறு நாள் அலுவலகம் வர வழக்கம் போல் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த சாதனா, இன்று பேருந்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்க திகைத்து நின்றாள். அடுத்த பேருந்தில் போகலாம் என்றால் அதற்கு இன்னும் ஒருமணி நேரம் ஆகுமே.. அலுவலகம் செல்ல தாமதமாகிவிடும் என யோசித்தவள் அந்த கூட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறிவிட்டாள். அடுத்தடுத்த நிறுத்ததில் ஆட்கள் ஏறினார்களே தவிர ஒருவரும் இறங்க வில்லை, கூட்டம் நெருங்க நெருங்க சாதனாவிற்கு மூச்சு முட்டியது.

 

இதை சாக்கிட்டு யாரோ ஒருவன் ”முன்னாடி போம்மா” என கூறி சாதனாவின் இடயில் கைவைக்க போக, ஏதோ உள்ளுணர்வில் சாதனா விலகி திரும்பி பார்க்க,,,, அவளுக்கு பின் ஒரு ஆடவன் அவசரமாக கையை நகற்றி இளித்து கொண்டிருந்தான். ”சதை வெறி பிடித்த மிருகம்” என அவனை மனதில் திட்டி கொண்டாள். சாதனாவால் முன்பக்கம் நகரவும் முடியாமல் கூட்டம் நெருக்க, அவளுக்கு பின் இருந்த கயவன் அவள் மீது மீண்டும் கைவைக்க போக சாதனா அவசரமாக தன் கைபையில் இருந்த ஏதோ ஒன்றை எடுத்து தன் இடுப்பருகில் வைத்து கொண்டாள்.

 

சில நொடிகளில் அந்த மிருகம் அம்மா,,,,,,, என கத்தினான். அவன் வலது உள்ளங்கை ஆழமாக வெட்டுப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. ஆம் சாதனா கையில் மின்னி கொண்டிருந்தது ஒரு சிறிய பேனா கத்தி. அது அவள் பையில் எப்பொழுதும் இடம் பிடித்திருக்கும். அவன் அவளை தொட வரும்பொழுது அவனது உள்ளங்கையில் நன்றாக கீறிவிட்டாள் சாதனா . அவன் அலறல் சத்தம் கேட்டதுமே பேருந்து நின்றுவிட, அவன் அவசரமாக கீழே இறங்க போனவனை தடுத்து “ உன் கை மணிகட்டு தப்பிச்சிருச்சு என கோபத்துடன் கூறினாள்.” அவளை முறைத்து பார்த்தவன் ”நீ தினமும் இந்த பஸ்லதான வருவ,,,, உன்ன பார்த்துக்கிறேண்டி” என கோபமாக கூறிவிட்டு இறங்கினான்.

 

”போடா” என்று அப்பொழுது அலட்சியமாக கூறிக்கொண்டவள்

தன்னுடைய நிறுத்தம் வந்ததும் இறங்கியவள் அந்த கயவனின் மிரட்டலை பற்றியே யோசித்து கொண்டு வந்தாள். அவன் முகமும், அதில் தெரிந்த குரூரமும், சாதனாவை சிறிது பயம் கொள்ள செய்தது.

சாதனா வழக்கமாக வரும் நேரத்தை கணக்கிட்டு தன் அலுவலக அறையில் உள்ள ஜன்னலில் அவளை தினமும் பார்த்து கொண்டிருக்கும் அபி, அவளின் பயந்த முகத்தை பார்த்து விட்டு சற்றும் யோசிக்காமல்…. வேகமாக கீழே இறங்கி வந்து, நேரே சாதனாவிடம் ”என்ன பிரச்சனை…..” என கேட்க வாய் திறந்தவன் அப்பொழுதுதான் சுற்றுபுரத்தை பார்க்க அலுவலகத்தில் உள்ள அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்தான். 

 

சாதனா தனக்குள்ளே உழன்று கொண்டு இருந்ததால் இன்னும் அபியை கவனிக்கவில்லை. அதை பார்த்த அபி… ”நல்லவேளை தப்பிச்சேன் சாதனா என்ன பார்க்கலை….” என மனதில் கூறி கொண்டான். அபி அருகே வேகமாக வந்த பிரபு “ சார் என்னாச்சு ஏன் இவ்வளவு பதட்டமா, வேகமா வந்தீங்க? என அப்பொழுது தான் சாதனா அவனை பார்த்தாள். ஒரு நொடி என்ன சொல்வது என யோசித்தவன் ”இல்ல அங்க ஜன்னல்ல இருந்து பார்த்தப்போ என் பிரெண்டு ஒருத்தன் போனமாதிரி இருந்துச்சு அதான்……” என கூற, பிரபு அபியை பார்த்து” எங்கிட்ட சொல்லிருந்தால் நான் பார்த்திருப்பேனே சார்” என,

 

அபி ”டேய் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா? என மதில் அவனை திட்டி கொண்டு, ” இல்ல பிரபு நான் இவ்வளவு வேகமா வந்தே அவனை புடிக்க முடியலை. இதுல உங்கிட்ட சொல்லி நீ எப்படி அவன பார்ப்ப? அதான் நான் சொல்லலை. சரி வாங்க உள்ள போகலாம்” என கூறிக்கொண்டு உள்ளே சென்றான். இவன் போவதையே பார்த்து கொண்டிருந்த பிரபு “ சார் கொஞ்ச நாளாவே சரியில்லையே…….” என நினைத்து கொண்டான்.

 

சாதனா அபியிடம் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, பேங்கில் பணம் எடுக்க, செக்கில் அபியின் கையெழுத்து வாங்க வேண்டி அவன் அறைக்கு சென்றாள். அவனிடம் விவரம் கூறிவிட்டு செக்கை அவனிடம் கொடுத்தாள்.

அபி, பார்வையை அதில் வைத்தவன், ”என்ன பிரச்சனை உங்களுக்கு” என்றான் சாதனாவிடம், அவன் கேள்வியில் திகைத்தவள் சுற்றும் முற்றும் பார்க்க, இங்க வேற யாரும் இல்ல நீங்க நான் மட்டும்தான் இருக்கோம். சோ நான் உங்ககிட்டதான் கேட்டேன்.” அவள் முகத்தில் இருந்த கேள்வியை படித்தவன் அதற்கான பதிலை கூற, சாதனா அவசரமாக “ இல்லையே எனக்கொன்னு பிரச்சனை இல்லையே…… என, “ஓ பின்ன ஏன் செக் புக்ல அஞ்சு லட்சத்துக்கு ஐம்பது லட்சம்னு போட்டு இருக்கீங்க? என, ஒரு நொடி அதிர்ச்சியாக நின்றவள், பிறகு, தன்னையே நொந்து கொண்டு அவசரமாக அவனிடம், சாரி சார், சாரி சார் ஏதோ நியாபகத்துல தெரியாம எழுதிட்டேன். இனிமேல் இதுமாதிரி நடக்காது சார் ” என அவனிடம் பலமுறை மன்னிப்பு கேட்டு, தான் வேறு ஒன்றை எழுதி எடுத்து வருவதாக கூறினாள்.

 

அவள் பதட்டத்தை பார்த்த அபி, அவளை முதலில் உட்கார சொல்லி, “ரிலாக்ஸ் சாதனா தவறு செய்வது மனித இயல்புதான், இதுக்காக நான் உங்களை தப்பாக நினைக்க மாட்டேன்.” என கூறி, அவளுக்கு தண்ணீர் கொடுத்து குடிக்க சொன்னான், மறுக்காமல் குடித்தவளிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்க, அவள் அமைதியாய் இருப்பதை பார்த்து, ”இங்க பாருங்க சாதனா நீங்க பார்க்குற வேலை டென்சன் இல்லாம பார்க்க கூடிய வேலை, இப்படி டென்சனா இருந்தீங்கனா……. இதுமாதிரி தப்பு தப்பாதான் வரும், அதனால அந்த விசயத்துல இருந்து கொஞ்சம் வெளிய வாங்க.” என்றவன்

 

”எதுவாக இருந்தாலும் தயங்காம என்கிட்ட சொல்லுங்க,” என்று பேச்சை நிறுத்தி.. அவளை பார்த்தவன் ”என்மேல் நம்பிக்கை இருந்தால்….. ” என்று அதோடு முடித்து கொண்டு, “ இந்த செக்க நானே வேற எழுதி பிரபுக்கிட்ட கொடுத்திட்றேன் நீங்க போகலாம்.” என கூறினான்.

ஒரு நிமிடம் தயங்கி நின்ற சாதனா, பின்பு காலையில் பஸ்டாப்பில் நடந்ததை கூற, ”நல்ல விசயம் தான் செஞ்சிருக்கீங்க” என அவளை பாராட்டியவன் அவள் முகம் இன்னும் தெளிவில்லாமல் இருப்பதை பார்த்து, வேற என்ன டென்சன்?” என கேட்டவனிடம், அந்த ரெளடி மிரட்டியதை கூற…. அனைத்தயும் கேட்டவன் “ஓ” என கூறிவிட்டு, சில நொடிகள் அமைதியாக இருந்தவன், ”இப்ப உங்களுக்கு டென்சன் குறைந்து விட்டதா?” என கேட்டான். ”நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன், சம்பந்தமே இல்லாம இது என்ன கேள்வி?” என்றபடி அபியை பார்க்க,

 

சாரி சாதனா நீங்க இந்த விசயத்த மனசில வச்சுக்கிடே வேலை பார்த்திங்கன்னா உங்களால சரியா வேலை பார்க்க முடியாது, அதனாலதான் என்ன பிரச்சனை என்று கேட்டேன். மத்தபடி நீங்களாச்சு அந்த ரெளடி ஆச்சு, இத ஆபீஸ் வரைக்கும் கொண்டு வராதீங்க” என கூறியவன்.” இப்ப நீங்க போய் வேலைய பாருங்க.” என்றபடி சாதனாவை அனுப்பி வைத்தான்.

 

அவன் அறையை விட்டு வெளியே வந்த சாதனா கண்கள் கலங்கியது, மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தாள். எதற்கு இந்த ஏமாற்றம், அபியிடம் தான் என்ன எதிர்பார்த்தோம் என்பதும் அவளுக்கு புரியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு வேலையில் கவனம் செலுத்தினாள்.

இங்கே அபி, சாதனா கொடுத்த அதே செக்கை எந்த மாற்றமும் செய்யாமல் பிரபுவிடம் கொடுத்து பணம் எடுத்து வர சொன்னான். 

 

ஆம் சாதனா தொகையை சரியாகத்தான் எழுதி இருந்தாள். அதனால்தான் அவள் செக்கை திரும்ப கேட்கும் பொழுது, அவன் அதை அவளிடம் கொடுக்காமல் தானே வேறு எழுதி பிரபுவிடம் கொடுப்பதாக சொன்னான். பின்ன…அவகிட்ட போய் ”உனக்கு என்ன பிரச்சனை” ன்னு கேட்டா, உடனே சொல்ல கூடியவளா அவள்?. அதனால், அவளை எப்படி பேசவைப்பது என யோசித்து கொண்டிருந்தவனுக்கு தோன்றியது இந்த எண்ணம் தான்.

 

மாலை அன்றைய வரவு செலவுகளை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்த சாதனா, அபியிடம் கையெழுத்து வாங்க மதுவை அனுப்பினாள். சாதனாவை எதிபார்த்த அபி, மது வரவும் ஒன்றும் சொல்லாமல் ரிப்போர்ட்டை சரிபார்த்து அதில் கையெழுத்திட்டு அனுப்பினான். ”மறுபடியும் கண்ணாமூச்சி விளையாட ஆரம்பிச்சுட்டா…… டேய் அபி..! நீ ரொம்ப பாவம்டா. “ என்று தனக்கு தானே பரிதாபம் பட்டுகொண்டான் அபி.

 

சாதனா அலுவலகம் முடிந்து வெளியேறுவதை எப்பவும் போல் ஜன்னலின் அருகே நின்று அவளை பார்த்து கொண்டே இருந்தான். சாதனா காலையில் நடந்த சம்பவத்தை வேலை மும்முரத்தில் மறந்தே விட்டிருந்தாள் அந்த கயவனை திரும்ப பார்க்கும் வரை……

காலையில் தப்பாக எழுதிய செக்கை பற்றி நினைத்து கொண்டே ”சே, எப்படி தப்பா……. எழுதினேன், நல்ல வேளை சார் தப்பா எதுவும் நினைக்கல எவ்வளவு பெரிய தொகை அவங்க மட்டும் பார்க்காம கையெழுத்து போட்டு இருந்தாங்கன்னா அவ்வளவுதான்.” என தன்போக்கில் யோசித்து கொண்டிருந்தவளின் கால்கள் அனிச்சையாய் வழக்கம்போல் போகும் பாதையில் நடக்க, அவள் மனதோ வேறு திசையில் பயணித்து கொண்டிருந்தது. பேருந்தில் ஏறி தன் நிறுத்தம் வந்ததும் இறங்கியவள், தன் பின் தொடர்ந்து வருபவர்களை கவனிக்க வில்லை.

தொடரும்.

அத்தியாயம்…6

சாதனா வேலை முடிந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவளை, ”ஹே நில்லுடி” என்ற கர்ண கொடூரமான குரல் கேட்டு, திகைத்து திரும்பி பார்க்க….. கையில் கட்டோடு காலையில் அவளிடம் வம்பு செய்தவன் நின்றிருந்தான். ஒரு நொடி திகைத்த சாதனா மறு நொடி அவனை அலட்சியமாக கடந்து செல்ல முயன்றாள்.

 

ஆம் அவளால் கடந்து செல்ல முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது. ஏனென்றால் காலையில் அவன் ஒருவன் மட்டுமே இருந்தான். இப்பொழுது ஐந்துபேரை கூட்டிக் கொண்டு வந்திருந்தான். அந்த ஐந்துபேரும் சாதனாவை சுற்றி நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவன் ”என்ன கண்ணு ஒரு பொண்ண அடிக்க அஞ்சு பேரான்னு பார்க்கிறியா கண்ணு…… உன்ன அடிக்க நான் ஒருத்தனே போதும், ஆனா உன்ன அனுபவிக்க……..” என்று அவளை ஒருமாதிரி பார்த்து, வக்கிரமாக கூறினான், சாதனாவிற்கு இப்பொழுது பயம் வர தொடங்கியது. சாதனா அவனை பார்த்து, “ஏய் ஒழுங்கா வழி விடு, காலையில கையை தான் வெட்டினேன் இப்ப வழி விடலைன்னா உன் முகத்துல ஆசிட்ட ஊத்திருவேன்.” என மிரட்டினாள்.

 

“ஹ..ஹ.. உன் கையால ஊத்துனா, ஆசிட் கூட எனக்கு அமுத மழைதான் ஊத்து கண்ணு” என்றபடி ஒருவன் அவளருகில் முகத்தை காட்டியபடி வர….. சாதனா பயத்தில் மெதுவாக பின்வாங்க.. ”அப்படியா அவங்க கையால ஊத்துனா ஆசிட்டும் அமுத மழையா?” என கேட்டவாறே, ”அப்ப இந்தா சாதனா இத அந்த நண்பர் மேல ஊத்து……” என்று சாதனாவின் கையில் ஒரு பாட்டிலை தந்தான் அபி….

சாதனா தனக்கு மிகவும் பரிச்சயமான குரலை கேட்டதுமே, முகம் மலர்ந்து திரும்பி பார்க்க, அங்கு வழக்கமாக எதிரிகளை வீழ்த்தும் போது, இருக்கும் புன்னகை முகத்துடன் இருந்தான் அபி….

 

அபியை பார்த்த சாதனாவிற்கு தன் பயமெல்லாம் எங்கோ விலகி ஓடுவதை வியப்புடன் உணர்ந்தாள். எப்பொழுதும் பயம் கொடுக்கும் அவனின் அந்த புன்னகை, இன்று எல்லை இல்லா நிம்மதியும், பாதுகாப்பு உணர்வும் ஒருங்கே கொடுப்பதாக தோன்ற, அவனையே பார்த்தபடி இருந்தாள்.

 

சாதனாவின் பார்வையை உணர்ந்த அபி, ’சனா பேபி என்னடா… இப்படி பார்க்குற? இப்படி பார்த்தா மாமா சண்டை எப்படி போடுவேன்?’ என மனதில் அவளை கொஞ்சி கொண்டான். அப்பொழுது, அந்த ரெளடிகளில் ஒருவன், ”இன்னா சாரே, உன்ன பார்த்தா ஏ சி காத்துல குளுகுளுன்னு வேலை செஞ்சுகின்னு இருக்க ஆள்மாதிரிகீது, உனக்கு இன்னாத்துக்கு வேண்டாத வேலை, உன் சோளிய பார்த்துட்டு போ நைனா…” நாங்க இந்த குட்டிய பார்த்துக்குறோம். என சாதனாவின் கையை பிடிக்க வந்தவன், திடீரென அய்யோ… அம்மா,,, என அலறியபடி, தன் பாதங்களை பிடித்து, துடித்து கொண்டிருந்தான், அவன். மற்ற நால்வரும் திகைத்து என்னவென்று பார்க்க, அவனின் பாதங்கள் தோள் பிய்ந்து சிதைந்து இருந்தது. சாதனாவின் கையில் இருந்த பாட்டில் இப்போது அபியின் கைக்கு மாறி இருந்தது. அபி அவனின் பாதத்தில் ஆசிட்டை கொட்டிவிட்டுருந்தான்.

 

திடீரென்று நடந்த இந்த செயலில் திகைத்து நின்ற நால்வரும் அபியை வெறியுடன் தாக்க வர, நொடியில் சாதனாவை தன் பின்னே மறைத்து கொண்டு, ருத்ரமூர்த்தியாக மாறி நான்குபேரையும் புரட்டி எடுத்து கொண்டிருந்தான். அதில் ஒருவன் மீண்டும் சாதனாவின் கையை பிடிக்க வர, அபி அவனின் கையை பிடித்து, ”ஏற்கனவே ஒருத்தன் அடிபட்டு கிடந்தும் புத்தி வரமாட்டிங்குது இல்ல…. எவ்வளவு தைருயம் இருந்தால், என் பேபி கையை பிடிக்க வருவ..?” என்று கோபத்துடன் கூறி அவன் கையை முறுக்கி தலையில் ஓங்கி தட்ட, அவன் மயக்க நிலைக்கு சென்றான். மற்ற மூவரும் அபியின் கோபத்தை பார்த்து மிரண்டு, தப்பி ஓட பார்க்க, அபி ”பிரபுவை பார்த்து அவர்களை பிடிக்குமாறு கட்டளையிட,

 

அப்பொழுதுதான் சாதனா பிரபுவும், அவனுடன் இன்னும் சிலரும் இருப்பதையே பார்த்தாள். அவன் வேகமாக ஒரு கயிறுடன் வர, அவனுடன் இருந்தவர்கள் தப்பி ஓடியவர்களை பிடித்து வந்தனர். அபி “இவங்க எல்லாரையும் கட்டி குடோனுக்கு கொண்டு போங்க” என கோபமாக உத்தரவிட்டவன், சாதனாவிடம் ”திரும்பி நாம போகலாம் சாதனா வாங்க.. என அவளை அழைத்து கொண்டு சென்றான்.

சாதனா அந்த ரெளடிகளை திரும்பி பார்த்து கொண்டே, அபியுடன் சென்றாள். ” அதான் நான் இருக்கேன்ல இன்னும் என்ன பயம்? அவங்க இனிமேல் உங்க பக்கமே வரமாட்டாங்க, அதனால பயப்படாம வாங்க,” என்று சாதனாவின் பார்வை உணர்ந்து கொண்டு அபி கூற,,,,

 

” நான் ஏன் பயப்பட வேண்டும் அதான் நீங்க இருக்கீங்களே…..” என தன்னை அறியாமல் சாதனா கூற, அபி அவளை வியப்புடன் பார்த்து, இந்த நம்பிக்கை எப்பொழுதும் என்மேல இருந்தா ரொம்ப சந்தோசப்படுவேன், என கூறி தன் காரை நோக்கி சென்றான்.

சாதனா ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டாள். தன் காரை நோக்கி சென்று கொண்டிருந்த அபி திரும்பி அவளை பார்த்தான். சாதனா அதே இடத்தில் நின்றிருப்பதை பார்த்தவன், “என்ன அங்கேயே நின்னுட்டீங்க வீட்டுக்கு போக வேண்டாமா? உங்க அம்மா உங்களை தேடமாட்டாங்களா?…. வாங்க சாதனா” என்று அழைக்க. 

 

அவன் தன் அம்மாவை குறிப்பிட்டவுடன், அப்பொழுதுதான் சுற்று புரம் உறைக்க நன்றாக இருட்டி விட்டதை உணர்ந்தவள் ”அச்சோ அம்மா தேடுவாங்களே” என்றபடி. வேகமாக அவன் அருகில் வந்தாள். “போகலாமா?” என்றபடி அபி அவளுக்கு காரின் கதவை திறந்துவிட,

சாதனா “பரவாயில்ல சார், நடந்து போகிற தூரம் தான், இனி நான் போய்க்கிறேன். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி சார்….!” என்று உணர்ந்து சொல்ல, அபி ஒன்று கூறாமல் அவளையே பார்த்திருக்க, அவனிடம் ”அன்னைக்கு அந்த மூர்த்தி விசயத்திலயும் நீங்கதான் உதவி செஞ்சிங்க, இன்னைக்கு இந்த ரெளடிங்க கிட்ட இருந்தும் நீங்கதான் காப்பாத்துனிங்க நீங்க செஞ்சது ரொம்ப பெரிய உதவி. இதுக்கெல்லாம் நன்றின்னு ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது, ஆனால் அதை சொல்வதை தவிர வேற நான் என்ன சொல்வது?” என்றவளையே பார்த்து கொண்டிருந்தான் அபி.

 

”எனக்கு உன் நன்றி வேண்டாம் சனா பேபி……! உன் காதல் தான் வேண்டும், சீக்கிரம் என்கிட்ட உன் காதலை சொல்லிரு பேபி” என்று அவளிடம் மனதில் கொஞ்கிக் கொண்டான். பின்பு சாதனாவிடம்,

”உங்க வீட்டுக்கு இங்க இருந்து நடந்து போனால் எவ்வளவு தூரம்” என்று சம்பந்தமில்லமல் கேட்டான். எதற்கு இந்த கேள்வி என்று சாதனா பார்த்தாலும் “ஒரு பதினைந்து நிமிசம் ஆகும் சார்,” என்று பதில் கூறினாள். ”ஆனா நான் பத்து நிமிஷத்துல போயிருவேன் சார், எங்கம்மா வேற இன்னும் என்ன காணோமேன்னு தேடிட்டு இருப்பாங்க” அதனால நான் கிளம்பறேன் சார், என்று சொல்லி கொண்டே வேகமாக நடந்தவளிடம்,

 

”ஒரு நிமிஷம் சாதனா,” என்று அவளை நிறுத்தியவன் ”நீங்க சொல்றத பார்த்தா, உங்க அம்மா உங்க மேல ரொம்ப பாசம் வச்சுருப்பாங்க போல இருக்கே?” என்றான். ”ஆமா சார், எங்க அம்மாவுக்கு நான் தான் உயிர்.” என்று பெருமையாக சொன்னவளிடம், ஆனால் உங்களுக்கு அது போல பாசம் எல்லம் உங்க அம்மா மேல இல்லை போல? என நக்கலடித்தவனை கோபத்துடன் பார்த்தாள் சாதனா. ”என்ன உளர்றிங்க” என்று கோபத்துடன் கேட்டாள்.

 

கோபப்படாதீங்க சாதனா….. கொஞ்சம் யாசிச்சு பாருங்க,,, இங்க இருந்து உங்க வீட்டுக்கு போக எப்படியும் பத்து பதினைந்து நிமிடம் ஆகும்னு சொல்றிங்க, கார்ல போனா ரெண்டே நிமிஷத்துல வீட்டுக்கு போயிரலாம். நானும் உங்கம்மா கவலை படுவாங்கன்னுதான் கார்ல விட்றேன்னு சொன்னேன், ஆனா நீங்க எங்கம்மா பத்து நிமிசம் கவலை பட்டாலும் பராவாயில்லை,” (என்பதை அழுத்தி சொன்னவன்), ஆனால் நான் உங்க கூட கார்ல மட்டும் வரமாட்டேன்னு சொல்றிங்க, நீங்க வீட்டுக்கு போற அந்த பத்து நிமிஷமும் உங்கம்மா உங்களை நினச்சு கவலை படனும். இதுதான் உங்க அம்மா மேல நீங்க வச்சுருக்கிற பாசமா?” என்றவன் பின் முகத்தை சோகமாக வைத்து கொண்டு உங்க அம்மா மேல எனக்கு இருக்கிற அக்கறை கூட உங்களுக்கு இல்லையே சாதனா?” போலி வருத்ததுடன் கூறினான்.

 

சாதனா ஒரு நிமிடம் அபியின் பேச்சில் அயர்ந்து நின்று விட்டாள். ”தன்னுடன் காரில் வரவில்லை என்பதற்காக, அம்மா மேல் பாசம் இல்லாதவள் போல் காட்டிவிட்டானே…..!” அம்மாடியோ இந்த வாய்தான் இவனை வாழவைக்குது போல?”…… என தனக்குள்ளே அவனை மெச்சிக்கொண்டவள், தன்னை அறியாமலையே அவன் காரில் ஏறி இருந்தாள். ”உங்க வீடு வந்திருச்சு சாதனா” அபி சொல்லவும் திடுக்கிட்டு சுற்றுபுறம் பார்த்தவள் அபொழுதுதான் தான் காருக்குள்ளே அவன் அருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள். ”சே” இப்படியா என்னை அறியாமலே காருக்குள்ள உட்காருவேன்?’ தன்னையே நொந்து இவங்க என் பக்கத்துல வந்தாலே என்ன அறியாம இவன் பேச்சை கேட்க வச்சிட்றாங்க?, ம்கூம், இவங்க பேச்சையே இனிமேல் கேட்க கூடாது, அப்படியே கேட்டாலும் மனசுல வச்சுக்க கூடாது, பேசி, பேசியே எல்லாத்தையும் வசியம் பன்னிருவாங்க போல?” என அபியை ஒருமை, பன்மையில் திட்டி கொண்டே அவனை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தாள். 

 

சற்றுமுன் நடந்த சம்பவங்கள் அவள் நினைவில் இல்லை, “தன் அன்னை தன்னை பற்றி கவலை படுவாறே…..!” என்ற கவலபடுவாறே., என்று நினைத்தவள்.. அபியையும் மனதில் நினைத்து அவனை அர்ச்சித்து கொண்டிருந்தாள். (அதான் பிரெண்ட்ஸ் அவனை திட்டி கொண்டிருந்தாள்.) ஆனால் அதையும் அவள் உணரவே இல்லை

சொன்னது போலவே இரண்டு நிமிடத்தில் சாதனாவை, அவளது வீட்டின் அருகே இறக்கி விட்டான், அவனிடம் கோபமாக மீண்டும் ஒரு நன்றி சொல்லி இறங்கி கொண்டவள், ’தன் வீடு அவனுக்கு எப்படி தெரியும்?’ என்று யோசிக்க மறந்தாள். ”இவ்வளவு தூரம் வந்து விட்டிருக்கேனே…. வீட்டுக்கு வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்றாளா?ன்னு பாரு….” என்று அவள் வீட்டினுள் செல்லும் வரை பார்த்து கொண்டிருந்தவன், சாதனாவை செல்லமாக கோபித்து கொண்டான்…. ’ம்…உனக்கு அதிர்ஷ்டம் ரெண்டு நிமிஷம் தான்னு எழுதிருக்கு…… அதுக்கு யாரு என்ன செய்ய முடியும்……””என்று அலுத்து கொண்ட மனதிடம்.

 

“டேய் அபி அவசரபடாத, முகத்தில் எந்த உண்ர்ச்சியும் காட்டாம இருந்தவ முதல் முறையா கோபத்தை, காட்டியிருக்கா, அதுவும் உன்கிட்ட……. அப்படின்னா என்ன அர்த்தம்..? அவ உன்கிட்ட இயல்பா இருக்க ஆரம்பிச்சிருகான்னுதான சோ….. இன்னும் கொஞ்ச நாள் இதே பொருமையோடு இரு……. உன் சனா பேபி உனக்குத்தான், என்று அவனது மனசாட்சி கூற, அதில் உள்ள உண்மயை அறிந்தவன் உற்சாகத்தோடு காரை கிளப்பினான்.

 

சாதனா, வாசலில் மங்கை தனக்காக தவிப்புடன் காத்துக் கொண்டிருப்பதை பார்த்தவள் விரைவாக சென்று தன் அன்னையை அணைத்து கொண்டாள். ”என்னடா தனு இவ்வளவு நேரம் நான் எவ்வளவு பதறி போனேன் தெரியுமா?” போன் போட்டாலும் எடுக்கலை, இன்னும் அஞ்சு நிமிஷம் லேட்டானால் நானே உன்னை தேடி வந்திருப்பேன்….” என்று தவிப்புடன் கூறியவர், இந்த வேலை ரொம்ப கஷ்டமா இருக்கா தனுகுட்டி” இந்தமாதிரி லேட்டா வந்தா நீ வேலைக்கு போகவேணாண்டா…..” என்று பதட்டத்தில் ஆரம்பித்து, கவலையுடன் கூறினார் மங்கை. அச்சோ வேலைய விட்டு நிற்பதா? ஒரு நிமிடம் திடுக்கிட்டவள், “சாரிமா, இன்னைக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் திடீர்னுதான் சொன்னாங்க, அதான் லேட், நானும் உங்களுக்கு கால் பன்னிட்டுதான் இருந்தேன், என்னன்னு தெரியலம்மா, எங்க ஆபீஸ்ல டவரே கிடைக்கவில்லை……..” என்று வாழ்க்கையில் முதல் முறையாக தன் அன்னையிடம் பொய் உரைத்தாள்,

 

”அம்மா லேட்டான கவலை படாதீங்கம்மா, நாந்தான் அன்னைகே சொன்னேன் தானம்மா……. முதல்ல இருந்த நிர்வாகம் மாதிரி இல்லை….. லேட்டானால், கம்பெனியிலேயே கார் புக் பண்ணிருவாங்கன்னு அப்புறம் ஏன் பயப்பட்றிங்க?“ இப்பகூட நான் கம்பெனி கார்லதான் வந்தேன். இந்த கம்பெனி, அங்க வேலை பார்க்கிறவங்கள ரொம்ப பத்திரமா, பாதுகாப்பா பார்த்துகிறாங்க அதனால லேட்டான பயப்படாத மங்கை…..” என்று கூறிவிட்டு குறும்பாக முடித்தாள்.

 

அன்று வெள்ளிக் கிழமை என்பதால் கோவிலுக்குச் செல்லவேண்டி அவசரமாக கிளம்பி கொண்டிருந்தார் வாசுகி. என்னம்மா இவ்வளவு அவசரமா எங்க கிளம்பிட்டீங்க? என்றபடி வந்தான் அபி, ”ம்…… உனக்கு பொண்ணு பார்க்கதாண்டா?” உனக்கு, காது கேட்காத பொண்ணா தரகர்கிட்ட பார்க்க சொன்னேன்.

அவர்தான் அந்த மாதிரி பொண்ணு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்மா, நீங்க எதாவது கோவில்ல போய் பாருங்க கிடச்சாலும் கிடைப்பாங்கன்னு சொன்னார், அதான் அவசரமா கோவிலுக்கு கிளம்பிட்டு இருக்கேன்.” என்று அவனை நக்கலடித்தவர், அபி அவரை முறைப்பதை பார்த்து….. கோவிச்சுக்காத கண்ணா, அம்மா சும்மா சொன்னேண்டா, சரி, சரி அப்பாவும் பாட்டியும் சாப்பிட்டு போய்ட்டாங்க நீயும் சீக்கிரம் சாப்பிட்டு, போற வழில என்ன கோவில்ல இறக்கி விட்றா கண்ணா” என்று கூறி கொண்டே அவனுக்கு பரிமாறினார். 

 

அன்னையின் மீது கோபத்தில் இருந்தவன், அவர் அவனை கோவிலில் விட சொல்லவும், “ ஆ ஹா, மாட்டுனீங்களா? தி கிரேட் அபியவே கலாய்க்கிறீங்களா?….. என்று மனதில் நினைத்து கொண்டு, நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியலம்மா என்ன சொன்னீங்க?, என்று கேட்டான்.

 

வாசுகி, அவன் கூறுவதை உண்மையென்று எண்ணி மறுபடியும் கூற, திரும்பவும் அவன் அதே கேள்வியை கேட்க, அப்பொழுதுதான் அவன் தன்னிடம் வம்பிழுக்கிறான் என்பதை புரிந்து. சே.. கார சர்வீஸ்க்கு விட்டிருப்பதையே மறந்த தன் மறதியை எண்ணி தனக்குள்ளே நொந்து கொண்டு….. “ஆஹா வாசு உன் வாய்தான் உனக்கு எதிரி, பையன் உன்கிட்ட நல்லவிதமா கேட்கும்போதே ஒழுங்கா பேசிருக்கலாம்ல? என்று தனக்குள்ளே புலம்பி கொண்டு, அபி அம்மா சும்மா லுள்ளலாய்க்கு தான் பொண்ணு பார்க்க போறேன்னு சொன்னேன், இன்னைக்கு கோவில்ல அபிஷேகத்துக்கு கொடுத்திருக்கேண்டா கண்ணா, லேட்டா போனா நல்லா இருக்காது. அதனால சமத்தா அம்மாவ கோவில்ல விட்ருவீங்களாம், அம்மா வரும்போது, குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிட்டு வருவேனாம்…”. என்று அவனை தாஜா செய்து கொண்டிருந்தார்.

 

அவர் சொன்னதை கேட்டவன், பக்கென்று சிரித்துவிட, ”அப்பாடி சிரிச்சிட்டியா சரி சீக்கிரம் சாப்பிடு நேரமாகிருச்சு” என்று அவனை படுத்தியவர், அபி கிளம்பி வந்ததும், கோவிலுக்கு சென்றனர். அன்னையை கோவில் வாசலில் இறக்கி விட்டவன், அவரிடம் சொல்லி கொண்டு கிளம்பி சென்றவனை கோவிலுக்குள் வருமாறு அழைத்தார் வாசுகி.

 

”இல்லம்மா எனக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. நீங்க கும்பிட்டு வாங்க. நான் கார் ரெடியாகிருச்சான்னு கால் பண்ணி கேட்கிறேன், அப்படி இல்லைன்னா என் கா முருகன் கிட்ட கொடுத்து விட்றேன்.” என்று சொல்லி கொண்டே திரும்பியவன் சாதனா கோவிலுக்குள் செல்வதை பார்த்து விட்டான். உடனே காரிலிருந்து இறங்கியவன், முகமெல்லாம் பிரகாசமாக வாசுகியிடம் திரும்பி, ”சரிமா வாங்க கோவிலுக்கள்ள போகலாம்” என்று உள்ளே செல்லபோனவனை தடுத்தவர், 

 

”என்னடா இப்பதான் ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்கு, எனக்கு நேரமாச்சுன்னு அவசரபட்ட….. இப்ப என்னாச்சு?” என கேட்க,

இல்லம்மா இவ்வளவு தூரம் வந்துட்டு கோவிலுக்குள்ள வராம போய்ட்டா மிஸ்டர் முருகன் கோவிச்சுக்க மாட்டாரா?” என்றவன். ”அதுமட்டுமில்லாம நீங்க வேற கெஞ்சி கேட்டீங்களா…… உங்க பேச்ச கேட்காம போனா என்னால மீட்டிங்க ஒழுங்கா அட்டண்ட் செய்ய முடியாது, இது முக்கியமான மீட்டிங் வேற சோ…. எதுக்கு இவ்வளவு ரிஸ்க் அதான் ஒரு அஞ்சு நிமிஷம் கோவிலுக்கு போய்ட்டு, ஆபீஸ்க்கு லேட்டா போனா தப்பில்லைன்னு தோணுச்சு” என்று கூறியவனை சந்தேகமாக பார்த்தார் வாசுகி…….

 

தொடரும்…

உன்கையில் எனை ஏந்தவா..7

அத்தியாயம் 7

”என்னம்மா அப்படி பார்க்கிறீங்க? நீங்க என்னை நம்பலையா? நீங்க பார்க்கிறத பார்த்தா…… என்னமோ நீங்க கூப்பிட்டப்ப வராதவன், எதோ ஒரு பொண்ண பார்த்தவுடனே வந்தேன்கிற மாதிரியே பார்க்கிறிங்களே?…..” என்று தன் வாயாலையே உளறியவனிடம், ”டேய் கண்ணா உண்மைய சொல்லுடா அதுமாதிரி ஏதாவது இருக்கா?,,, என்று சிரிப்புடன் கேட்டார். ”அங்க வீட்ல கோவிலுக்கு நேரமாச்சுன்னு என்ன சரியா சாப்பிட விடாம அவசரபடுத்தி கூப்பிட்டு வந்துட்டு, இங்க நின்னு நிதானமா என்னை கேள்வி கேட்டுட்டு இருக்கீங்களே……! மிஸஸ் வாசுகி தன சேகர் அவர்களே…. சீக்கிரம் வாங்க அவ கிளம்பிறப் போறா” என்று மீண்டும் உளறியவனிடம், 

 

”யாரு கிளம்ப போறா” என்றார் வாசுகி. ”அச்சோ அம்மா……. அர்ச்சனைக்கு நேரமாச்சேன்னு தான் சொன்னேன். உங்களுக்கு யாரு வாசுகின்னு பேர் வச்சாங்க?” பேசாம கேள்வியின் நாயகின்னு வச்சுருக்கணும். அப்பா..! முடியலை எவ்வளவு கேள்வி கேட்குறீங்க?” என்று போலியாக சலித்துக்கொண்டான். வாசுகி அபியிடம் ”என்ன கண்ணா இன்னைக்கு ரொம்ப தடுமாறுற, உளர்ற, அதிகமா வேற பேசற என்ன விசயம்” சந்தேகமாக கேட்க,

 

அபி ”இப்ப நான் கோவிலுக்கு வரவா?…….. வேண்டாமா?” என்று பொய் கோபத்துடன் கேட்கவும்….. வாசுகி தன் கேள்விக்கனைகளை விட்விட்டு ”அச்சோ கோவிச்சுக்காதிங்க அபிமன்யூ சார். மிஸ்டர் முருகனோட கோபத்துல இருந்து தப்பிக்கிறதுக்காகவாவது வாங்க….. ”என்று கிண்டல் செய்தவர் பின்பு என்னைக்காவது ஒரு நாள் இந்த அம்மாகிட்ட மாட்ட போற, அப்ப இருக்கு உனக்கு….. “ என்று செல்லமாக அவனிடம் கோபித்து கொண்டார். பாவம் அன்றே தன் அன்னையிடம் மாட்ட போவதை அறியாமல் சந்தோசமாக கோவிலுக்குள் சென்றான்.

 

கோவிலுக்குள் சென்றவர்கள், அர்ச்சனை சீட்டு வாங்க அபியை அனுப்பி விட்டு, கோவில் பிரஹாரத்தில் நின்று கொண்டிருந்தார் வாசுகி. ”ஹலோ ஆன்ட்டி” என்ற குரலை கேட்டு திரும்பி பார்த்தார். அங்கு நின்ற சாதனாவை பார்த்தவர் சந்தோசமாக ,“ஹே சாதனா எப்படிமா இருக்க?” என்று நெடு நாள் பழகியவர் போல் இயல்பாக நலம் விசாரிக்க, சாதனா வியப்புடன் “ஆன்ட்டி என்னை நியாபகம் இருக்கா? என் பேரை கூட மறக்காம நியாபகம் வச்சு இருக்கீங்களே.!” என்று கேட்க, ”உன்ன மறக்க முடியுமாடா…….. அன்னைக்கு கீழ விழ இருந்த என்ன நீதான பிடிச்ச, கீழ தள்ளிவிட்டவங்கள கூட மறந்திவிடலாம், மேல தூக்கி விட்டவங்களை மறக்கலாமா?,… அந்த வாழப்பழ தோலை மறந்திட்டேன். ஆனா, சாதனாவை மறக்கலை.” என்று குறும்பு பேசியவரை சாதனாவிற்கு மிகவும் பிடித்தது.

 

அவர் பேசிய தோரணையில் சாதனா சிரித்துவிட்டாள். வாசுகி சாதனா சிரிப்பதை ரசித்து விட்டு, ”அது மட்டும் இல்லாம, சிலபேர் பார்த்த உடனே மனசுல பதிஞ்சு போயிருவாங்க. அது மாதிரிதான் உன் முகமும், உன் பெயரும் என் மனசுல பதிஞ்சிருச்சு.” என்று கூற, சாதனா ”சாரி ஆன்ட்டி அன்னைக்கு வேலைக்கு போற அவசரத்துல உங்க பேர கேட்காம விட்டுடேன்.” என்றவளிடம், ”பரவாயில்லடா என்றவர், ”என் பெயர் வாசுகி தனசேகர்,” என்றார். ”உங்க பேர் சூப்பரா இருக்கு ஆன்ட்டி, எனக்கு ரொம்ப புடிச்ச பேர்” என்றவள். கடிகாரத்தில் மணி பார்த்துவிட்டு, ”சரி ஆன்ட்டி எனக்கு ஆபீஸ்க்கு நேரம் ஆகிருச்சு நான் கிளம்பறேன்.” என்று செல்ல போனவளை தடுத்தவர்,

 

”நீ எங்க வேலை பார்க்கிற சாதனா?” என கேட்க, ஃபேசன் இம்போர்ட் & எக்ஸ்போர்ட்ல ஆன்ட்டி என்றாள். வாசுகி “இப்ப அந்த கம்பெனிய வேற ஒருத்தர் வாங்கிட்டாங்கன்னு கேள்விபட்டேனே….” என்றார். “ ஆமா ஆன்ட்டி அபி குரூப் ஆஃப் கம்பெனியோட எம் டி அபிமன்யூ தான் வாங்கிருக்கார்.” என்றாள்.

 

சாதனா அபியிடம்தான் வேலை செய்கிறாள் என்பதை அறிந்தவர், அவரின் இயல்பான குறும்பு தலை தூக்க “ அபிமன்யூவா அவன் சரியான ஒரு முசுடாச்சே…… பொண்ணுங்கள மதிக்க மாட்டான்னும் சொன்னாங்களே…. நீ எப்பிடிம்மா அங்க வேலை பார்க்குற?” என்றவர், ”நான் என் பையனோட விசிட்டிங் கார்டு தர்றேன். பேசாம நீ எங்க கம்பெனில வேலைக்கு வந்துருடா….” என்று அழைக்க,. அர்ச்சனை சீட்டு வாங்கி வந்த அபி, தன் அன்னையும், சாதனாவும் பேசிகொண்டிருப்பதை பார்த்தவன், அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் போல என்று நினத்து கொண்டு,

 

தன் அன்னையும், தன் வருங்கால மனைவியும் (முடிவே பண்ணிட்டாங்க போல) பேசுவதை ரசித்து கொண்டே, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்க ஆரபித்தவன், தன் அன்னை தன்னையும், தன் பெயரையும் டேமேஜ் செய்வதை பொறுக்க முடியாமல், அவர்களிடம் செல்லா போனவனை சாதனாவின் குரல் தடுத்தது.

”இதெல்லாம் யாரு ஆன்ட்டி உங்களுக்கு சொன்னது.” அவள் குரலில் கோபம் இருந்ததோ?… அபிக்கு சந்தேகம் வந்தது. வாசுகி அப்பாவியாக ”ஏன்மா என் பையன்தான் சொன்னான். அவனும் எக்ஸ்போர்ட் கம்பெனிதான் வச்சிருக்கான்.” பெருமையாக சொனவர் மீண்டும் சாதனாவிடம் ” அந்த அபி உன்கிட்ட எதாவது வம்பு செஞ்சானா?….. “ என்றவர், 

 

”அப்படி ஏதும் செஞ்சான்னா என்கிட்ட சொல்லுமா என் பையன விட்டு மிரட்டலாம்” என்றார். கேட்டு கொண்டிருந்த அபிக்கு சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது. ”என்னைய நானே மிரட்டனுமா? ஆனாலும் இது ரொம்ப ஓவர் வாசு..” என்று நினைத்து கொண்டவன் தொடர்ந்து தன் அன்னையின் குறும்பை சாரி பேச்சை கேட்க ஆரம்பித்தான்.

 

சாதனா “ஆன்ட்டி பிளீஸ் அவங்களை பத்தி தப்பா பேசாதிங்க அவங்க ரொம்ப நல்லவங்க, இந்த காலத்துல பொண்ணுன்னு பேர் எழுதி போர்ட்ல ஒட்டுனா அதையே துகிலுரிச்சு பார்க்கிறவங்க மத்தியில, ஒரு பொண்ணு தானாக பேசவந்தால் கூட, அவங்கள கண்டுக்காம போறது எவ்வளவு பெரிய விசயம்.! அவர் பெண்களை ரொம்ப மதிக்கிறவர் ஆன்ட்டி” தான் செய்த செயல் தப்புன்னு தெரிஞ்சா தயங்காமல் மன்னிப்பு கேட்பார் ஆன்ட்டி, அது தனக்கு கீழ வேலை பார்க்கிறவங்களா இருந்தாலும் சரி,,,,,,” என்றவள், “ ஒரு இடத்துல நாம பாதுகாப்பா உணர்ந்தால் அந்த இடத்த விட்டு நாம போவோமா ஆன்ட்டி?” அதே மாதிரி நான் வேலை பார்க்கிற இடத்துல ரொம்ப பாதுகாப்பா உணருகிறேன். 

 

அதனால தப்பா எடுத்துக்காதிங்க நான் வேற எந்த கம்பெனிக்கும் வேலைக்கு போகலை ஆன்ட்டி அது எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் கூட” என்று உணர்ந்து கூற. கேட்டு கொண்டிருந்த அபி ”சனா பேபி என்ன இவ்வளவு தூரம் புரிஞ்சு வச்சிருக்கியாடா…” என்று மிகவும் சந்தோசமாக உணர்ந்தான் என்றால், வாசுகி அபியை நினைத்து மிகவும் பெருமை அடைந்தார். அதை முகத்திலும் பிரதிபலிக்க நின்றிருந்தவரிடம் சாதனா “ அப்பறம் ஒரு விசயம் ஆன்ட்டி” என்றவளிடம் ”என்னடா?” என புன்னகையுடன் கேட்க 

 

“தயவு செய்து உங்க பையனவிட்டு அவங்கல மிரட்டாதிங்க ஆன்ட்டி” என்றவளை ஏன் கேள்வியுடன் பார்க்க, அதையே அபியும் நினைக்க, தொடர்ந்த சாதனா உங்க பையன் பாவம் ஆன்ட்டி, அவர்கிட்ட அடி வாங்குற அளவுக்கு தெம்பு இருக்குமோ என்னவோ?” என்றாள், கேட்டு கொண்டிருந்த அபி சிரித்துவிட, வாசுகியும் மனதுக்குள் சிரித்து கொண்டார். தப்பா எடுத்துக்காதிங்க ஆன்ட்டி அவர் சண்டை பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றவர்.” என்றவள் நான் எதாவது தப்பா பேசிருந்தா என்ன மன்னிச்சிருங்க ஆன்ட்டி” என்றவளை பெருமையுடன் அணைத்து கொண்டார் வாசுகி.

 

அவரின் அணைப்பில் அடங்கினாலும், குழப்பமாக அவரை பார்த்தாள். வாசுகி ”உன்னுடைய நேர்மையான குணம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடா…” என்றவர் இனி உன்னுடைய எம் டிய பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேன் போதுமா?” என்றவர். பேச்சை மாற்றும் பொருட்டு, “இன்னைக்கு ஸ்பெஷல் அபிஷேகத்துக்கு சொல்லிருக்கேன் ஆரம்பிக்கிற நேரம் ஆச்சு நீயும் வாடா….” என்று அவளை அழைத்தார். இல்ல ஆன்ட்டி எனக்கு நேரம் ஆகிருச்சு, என்று மறுத்தவளை உங்க எம் டிய பத்தி அவ்வளவு புகழ்ந்த ஒரு அரை மணி நேரம் பர்மிசன் தரமாட்டாரா என்ன? கேலி பேசியவரிடம் ”சாரி ஆன்ட்டி நான் அவரை புகழவே இல்ல உண்மையத்தான் சொன்னேன்.” என்று சாதனா கூற சிரித்துவிட்டார் வாசுகி.

” இவ்வளவு நேரம் மறைந்திருந்தது போதும் நாம போய் ஒரு என்ட்ரிய கொடுப்போம்” என நினைத்தபடி, அபி தன் அன்னைக்கு அவனுடைய போனிலிருந்து செய்தி அனுப்பியபடி அவர்கள் இருவரும் இருந்த திசை பக்கம் இயல்பாக வருவதுபோல் சாதனாவின் கண்களில் படுமாறு வந்து கொண்டிருந்தான். சாதனா அவனை பார்த்துவிட, இவனும் எதேச்சையாக சாதனாவை பார்ப்பது போல் பார்த்தான். அபி சாதனாவிடம், ” ஹாய் சாதனா.. !கோவிலுக்கு வந்திங்களா?” என்று அதி முக்கியமான கேள்வி கேட்க, வாசுகி அவனிடம் ”இல்ல தம்பி இந்த கோவில்ல பொங்கலும், புளியோதரையும் நல்லா இருக்கும்னு சொன்னாங்க,” அதான் வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தோம்” என்று அவன் அனுப்பிய செய்தியை வாசித்து கொண்டே…. சிரிக்காமல் கூற, 

 

அபியும் சளைக்காமல், ”அப்படியா வாங்கிட்டிங்களா…? இல்ல நான் வாங்கி தரவா….?” என்றான். சாதனா அவர்கள் இருவரும் உண்மையாகவே சண்டை போடுவதாக எண்ணியவள், அவசரமாக அபியிடம், காலை வணக்கம் கூறியவள், வாசுகியிடம் திரும்பி “ஆன்ட்டி இவங்கதான் எங்க கம்பெனி எம் டி மிஸ்டர்.அபிமன்யூ என்று அறிமுகப்படுத்த, ”ஓ இவருதான் நீ சொன்ன எம் டியா..” என்று அபியை மேலும் கீழும் பார்த்தார். அபி சாதனாவிடம் “ஆமா இவங்க யாருன்னு சொல்லவே இல்லை சாதனா” என கேட்க “இவங்க எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க சார் என்று அதோடு முடித்து கொண்டாள்.

 

சாதனா வாசுகியை ரொம்ப தெரிந்தவர்கள் என்று அறிமுக படுத்திய பின் எதுவும் பேசாமல் இருக்க…. “வாசுகி இவ்வளவு நேரமும் என்கிட்ட நல்லா பேசின பொண்ணு அபிய பார்த்தவுடனே ஏன் முகத்த இறுக்கமா வச்சிருக்கா? என்னவா இருக்கும்?…….” என்று தனக்குள் எண்ணியபடி அபியிடம் திரும்பி, “தம்பி உங்க சாதனாவுக்கு ஒரு ஒருமணிநேரம் பர்மிசன் வேணும்” என்று அந்த உங்க என்பதில் அழுத்தம் கொடுத்து கேட்க அபி தன் அன்னையை பார்த்தான். அதில் நீ பர்மிஸன் தந்தே ஆகவேண்டும் என்ற உத்தரவு இருக்க….. அபி சாதனாவிடம் “ எதுக்காக பர்மிஸன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றான். அச்சோ ஆண்ட்டி இப்படி திடீர்ன்னு கேட்டாங்களே…. நான் வரலை, பர்மிஸன் வேண்டாம்னு சொன்னாலும் தப்பா எடுத்துக்குவாங்க, இப்ப என்ன சொல்றது,?” என்று அவள் குழம்பி கொண்டிருக்கையில், அபிக்கு பதில் வாசுகியே கூறினார்.

 

“அது ஒண்றுமில்லை தம்பி என் பையன் பேர்ல ஒரு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கேன். அவனை காலையில கூப்பிட்டேன். உஙளை கோவில்ல வேண்டுமானாலும் விடறேன். கோவிலுக்குள்ள வரமுடியாது, வேலை இருக்குன்னு சொல்லிட்டான். வயசாயிடுச்சா தனியா போக ஒருமாதிரி இருந்துச்சு என்ன செய்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப எதேச்சையா சாதனாவ பார்த்தேன். அதான் சிறப்பு பூஜைக்கு கூப்பிட்டேன் அவ ஆபீஸ்ல பர்மிஸன் கேட்கலை ஆண்ட்டின்னு சொன்னா…… சரி ஆபீஸ்ல போன் பண்ணி சொல்லுமான்னு சொல்லிட்டு இருந்தேன். நீயே….. நீங்களே வந்துட்டீங்க. அதான் உங்ககிட்டையே பர்மிஸன் கேட்டேன்.” என்றார் வாசுகி

 

அபி சாதனாவை பார்த்து, ஒ கே சாதனா பர்மிசன் எடுத்துக்கோங்க” என்றவன் வாசுகியிடம் திரும்பி, “ நானும் இதில் கலந்துக்கலாமா…..?” என ஆர்வமாக கேட்க….. வாசுகி “தாராளமா வாங்க தம்பி என் பையனாலதான் வர முடியல பாவம் முக்கியமான மீட்டிங்ன்னு போய்ட்டான். உங்களுக்கு எந்த வேலையும் இல்ல போல இருக்கே…..! அதனால் என் பையன் சார்பாக நீயே… நீங்களே இந்த பூஜையில கலந்துக்கங்க” என்றார். அவர் முதலில் கூறியதை கேட்டு மகிழ்ந்தவன் அவர் இறுதியாக முடித்த விதத்தை கண்டு வாசுகியை நன்றாகவே முறைத்தான் அபி…..

 

”சே எப்படி பேசினாலும் என்ன டேமேஜ் பண்றதுலேயே குறியா இருக்காங்களே…..! இனிமேல வெட்கம், மானம் பார்க்காம சரண்டர் ஆகிட வேண்டியதுதான்”. என நினைத்து தன் செல்லை எடுத்தவன் தன் அன்னைக்கு “போதும், வேண்டாம், வலிக்கிது அழுதுருவேன்”, என்ற குறுந்தகவலை அனுப்ப அதை படித்த வாசுகியோ,,,, சிரித்து விட இவர்கள் இருவரும் பேசியதை பார்த்து கொண்டிருந்த சாதனாவிற்கு இவர்கள் இப்பொழுதுதான் பார்த்து கொண்டவர்கள் போல் தெரிய வில்லை. ஏதோ நெடுநாட்கள், நாட்கள் இல்லை வருடங்கள் பழகயவர்கள் போலே தோன்றியது. அதிலும் வாசுகி அபியிடம் பேசு விதத்தை பார்த்து வியப்பாக இருந்தது சாதனாவிற்கு,,,,,,, அலுவலகத்தில் மட்டுமல்ல தொழில் துறை வட்டாரங்களிலும் அபி அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவன், இங்கே இப்பொழுதுதான் பார்த்த ஒருவரிடம் அவன் வெகு இயல்பாக பேசியது ஆச்சரியமாக இருந்தாலும், மனதின் ஓரத்தில் இதமாகவே இருந்தது.

 

மூவரும் கோவிலுக்குள் செல்ல அங்கிருந்தவர்கள் அவர்களுக்கு அளித்த மரியாதையை பார்த்து சாதனா வியந்தாள். ”இந்த ஆண்ட்டி கோவில்ல இருக்கிறவங்களுக்கு நல்ல பழக்கம் போல… அதான் இவ்வளவு மரியாதை தருகிறார்கள்.” என்று அவர்கள்தான் இந்த கோவிலின் ட்ரஸ்ட்டி என்பதை அறியாமல்…. நினைத்து கொண்டாள். கோவில் கருவறைக்குள் முதலில் வாசுகியும், அவருக்கு அருகில் சாதனாவும் சாதனாவிற்கு அருகில் அபியும் நின்றிருந்தனர். வாசுகி இருவரின் ஜோடி பொருத்தத்தையும், பார்த்து மனதிற்குள் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர் முருகனுக்கு மனமார நன்றி கூறினார்.

 

தன் அருகில் நின்றிருந்த சாதனாவை பார்த்த, அபியின் மன நிலையோ வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவில் சந்தோசத்தில் மிதந்து கொண்டிருந்தது. “முருகா….! என் பக்கத்தில நிக்கிறாளே என் செல்ல ராட்சசி இவளே எனக்கு வாழ்க்கை துணையா…… இல்ல இல்ல இவளே எனக்கு வாழ்க்கையா வர கருணை காட்டுங்க கடவுளே…! இவ மனதில் இருக்கிற வேதனையை வெளிய கொண்டு வருவதற்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க முருகா……!” என அவசர வேண்டுதலையும் வைத்தான்.

 

”உன்னுடைய வேண்டுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூடிய சீக்கிரம் நீ நினைத்தது நிறைவேறும்” என்று சொல்வது போல், புன்னகை முகத்துடன் இருந்தார் முருகன். சாதனா கடவுளிடம் எதுவும் கேட்க தோன்றாமல், அமைதியாக கண்களை மூடி நின்றாள். அபிஷேகம் முடிந்து தீபாராதனையை ஐயர் அனைவருக்கும் காட்டி கொண்டு வர… அபியும் சாதனாவும் அருகருகே இருப்பதை பார்த்து, வாசுகியிடம் ஏனமா உங்க பையனுக்கு கல்யாணம் ஆயிருச்சா…..? என்று அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டவர்…. 

 

சாதனாவை பார்த்து பொண்ணு மகாலெட்சுமி மாதிரி ரொம்ப நன்னா இருக்கா…. ரெண்டுபேத்துக்கும் ஜோடி பொருத்தம் ரொம்ப நன்னா இருக்கு…” என்று மனதார கூறியவர். சாதனாவிடம்” தீர்க்க சுமங்கலியா இருக்கனும்”, என்றும் அபியை பார்த்து, “தீர்காயுசோட ஷேமமா இருக்கனும் ” என்று ஆசீர்வாதம் கூற, சாதனா விதிர்த்து இரண்டடி தள்ளி நின்றாள்.

 

தொடரும்

அத்தியாயம்-8

அய்யர் கூறியதை கேட்டு சாதனாவிதிர்த்து தள்ளை நி ற்க, அபியோ மிகவும் மகிழ்ச்சியில் இருந்தவன். ’அய்யரே நீரும் உம்ம பிள்ள குட்டிய்யோட ஷேம்மா இருக்கணும்’ பதிலுக்கு அவரை வாழ்த்தியவன் தன் மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல்,,,, ஐயருக்கு மனதார நன்றி கூறி தீபாராதனை தட்டில், தன் பர்ஸில் இருந்து பணத்தை அள்ளி வைத்தான். சாதனா ஐயரிடம் ”நீங்கள் நினைப்பது போல் நாங்கள் கணவன் மனைவி இல்லை” என்று சொல்ல வாய் திறந்தாள். அதை உணர்ந்த வாசுகி, ”அச்சோ நேரம் ஆயிருச்சே சாதனா உனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆகிவிட்டதுதானே…..! வாம்மா போகலாம்” அவசரமாக அழைத்துச் சென்றார்…

 

மூவரும் கோவிலை விட்டு வெளியே வந்தார்கள், அலுவலகத்திற்கு மிகவும் தாமதமாகி விட்டதை உணர்ந்து, வாசுகியிடம் சொல்லி சென்ற சாதனாவை

“நீ எப்படிடா ஆபீஸ் போகப்போற?” என கேட்க “எப்பவும் பஸ்ல போவேன் இன்னைக்கு ரொம்ப நேரம் ஆகிருச்சு, அதனால ஆட்டோல தான் போகனும் ஆண்ட்டி” என்றாள். அவரோ ”ஏம்பா அபி நீயும் ஆபீஸ்க்கு தான போற” என கேட்க, “ஆமாம்மா” என்றான். இன்னைக்கு சாதனாவிற்கு என்னாலதான் லேட்டாகிருச்சு, கொஞ்சம் கோவிச்சுக்காம சாதனாவையும் உன் கூட கூப்பிட்டு போக முடியுமா?” என்று அப்பாவியாக கேட்க.. ‘என் செல்ல வசு நான் சின்னதா கோடுதான் போட்டேன் நீங்க ரோடு போட்டுட்டீங்களே..!’மனதில் அன்னையை பாராட்டியவன்

 

தாராளமா கூட்டிட்டு போறேன் மா” என்றான். ”ஆண்ட்டி எப்ப அம்மா ஆனாங்க” என்று யோசித்து கொண்டிருந்த சாதனாவிடம்” சாதனா நீ இந்த தம்பிகூட போடா” என்றார். இல்ல ஆண்ட்டி பரவாயில்ல நான் ஆட்டோவிலேயே போய்க்கிறேன். மறுத்து கூறிய சாதனாவை பார்த்த அபி தன் அன்னை எப்படியும் அவளை சம்மதிக்க வைத்துவிடுவார் என்று கூலாக இருந்தான். ”ஏன்மா ரெண்டுபேரும் ஒரே இடத்துக்குதான் போறிங்க பிறகு எதுக்கு தனி தனியா போறிங்க?…… எனக்கு கார் வர கொஞ்ச நேரம் ஆகும். இல்லன்னா நானே உன்ன ஆபீஸ்ல விட்ருவேன்” என வருத்தமாக கூற,,,,,,,, ’அடேங்கப்பா என்னா நடிப்புடா சாமி..!’ அபி கவுண்டர் கொடுக்க

 

அச்சோ நீங்க வருத்தப்படாதீங்க ஆண்ட்டி நான் கார்லேயே போறேன் நீங்க வருத்தபடாதீங்க” அவரின் வருத்தம் உண்மை என்று நம்பி…. சாதனா அபியுடன் காரில போக சம்மதித்தாள். ”நீங்களும் எங்க கூட வாங்கம்மா உங்கள வீட்ல இறக்கிவிட்டுட்டு போறேன்” அபி அழைக்க ”இல்ல தம்பி என் பையன் கால் டாக்ஸி சொல்லிட்டான் நான் அதுலயே போய்க்கிறேன். உங்க ரெண்டுபேருக்கும் நேரமாயிருச்சு நீங்க கிளம்புங்க” என இருவரையும் அனுப்பி வைத்தார்.

 

அபி ”ஐ லவ் யூ சோ மச் அம்மா…….” என வாசுகிக்கு குறுந்தகவல அனுப்பிவிட்டு தனது காரை எடுத்தான். அவர்கள் கிளம்பிய மறு விநாடி அபியின் மற்றொரு கார் வந்து வாசுகியை அழைத்து கொண்டு போனது. அபி கார் ஓட்டி கொண்டிருக்க, சாதனா நகத்தை கடித்து கொண்டு ஒருவித பதட்டத்துடன் இருந்தாள். அதை உணர்ந்த அபி, ”இதுக்கு முன்னால என்கூட கார்ல வராதவ மாதிரி இப்படி டென்சனா இருக்காளே…… என்மேல நம்பிக்கை இல்லையா…..? என்று அவன் மனம் சுணங்க…. ”அடேய் மடையா அவளுக்கு உன்மேல மட்டும் இல்ல மொத்த ஆண்கள் மேல நம்பிக்கை இல்ல……” என்று மனது அவனுக்கு ஞாபக படுத்த…… ”ஆமால்ல மறந்துட்டேன்” என அசடு வழிய கூறியவன்

 

அவளின் மனதை மாற்றும் பொருட்டு…… அலுவலகத்தை பற்றி பேசினான். அவளும் சிறிது இயல்பாகி அவனுடன் பேச ஆரம்பித்தாள். கலகலப்பாக பேசவில்லை என்றாலும், கேட்ட கேள்விக்கு இயல்பாக பதில் சொல்ல ஆரம்பித்தாள். அவர்கள் பேசிக்கொண்டே அலுவலகத்தை அடைந்தனர். ”சே எவ்வளவு மெதுவா ஓட்டினாலும் இவ்வளவு சீக்கிரம் வந்துருச்சே…” அபி மனதில் நொந்து கொண்டே காரை விட்டு இறங்க,, அதற்கு நேர்மாறாக சாதனாவோ அப்பாடா ஆபீஸ் வந்திருச்சா?…… மனதில் நிம்மதியோடு இறங்கினாள்.

 

சாதனாவிற்கு அபியிடம் பயமோ….. இல்லை பாதுகாப்பின்மையோ……. தோன்றவில்லை….. மாறாக அவனின் பேச்சையும், அவனின் சிரிப்பையும் பார்த்து, மனது அவனிடம் இயல்பாக இருக்க சொல்லியது. மூளையோ முன்பு வாழ்வில் ஏற்கனவே வாங்கிய அடி…… ஆண்களை நம்பாதே…..! என எச்சரித்து கொண்டே இருந்தது. சாதனா மனதுக்கும், மூளைக்கும் இடையில் தவித்து கொண்டிருந்தாள். அதனால் தான் முடிந்த வரை அபியை தவிர்த்தாள். ஆனால் அபி……. அதை புரிந்து கொண்டு,,,,,,, அவளுக்கு அந்த வாய்ப்பை அளிக்காமல்…… அவள் விலகிச் செல்லும் ஒவ்வொரு முறையும், ஏதாவது ஒரு வேலை கொடுத்து தன் கண்பார்வையிலயே அவளை வைத்து, கொண்டிருந்தான்.

 

அலுவலகத்திற்குள் நுழைந்த அபியிடம் பிரபு வர…… ”மீட்டிங்கிற்கு எல்லாம் தயாரா……?. அந்த மைக்கேல் கம்பெனி எத்தன மணிக்கு வராங்க…….?” அவர்களை வர்வேற்க நம்ம கம்பெனி சார்பா யார் போயிருக்காங்க……..? கேள்வி கேட்டு கொண்டே தன் அறைக்குள் நுழைந்தான். பிரபுவும் அவனின் கேள்விக்கு உரிய பதில் அளித்தவாறு அவனுடன் சென்றான். காதல் மன்னன் அபி மறைந்து,,,, தொழிலதிபன் அபிமன்யூவாக மாறிப்போனான். 

 

”கோவில்ல இருந்தப்ப எப்படி இருந்தார்……. இப்ப எப்படி மாறிட்டாரு” அவனின் இருவேறு குணங்களை நினைத்து வியந்தவாறே சாதனாவும் தன் வேலையை பார்க்க சென்றாள்.

தன் அறைக்குள் வந்து சிறிது நேரத்தில் சாதனாவை அழைத்தவன்….. அவள் உள்ளே வரவும், இந்த மூன்று மாதத்திற்குரிய கம்பெனியின் கணக்கு வரவு செலவுகள் அனைத்தையும், ஒரு பென்ட்ரைவில் காப்பி செய்து எடுத்து வரசொன்னான்.

 

அப்பொழுதுதான் சாதனாவிற்கு அந்த வெளிநாட்டு ஒப்பந்தமே ஞாபகம் வந்தது. “ சே எப்படி மறந்தேன்……” என்று தன்னையே நொந்து கொண்டு… அவசரமாக ”கடவுளே இந்த மீட்டிங் நல்லபடியா முடியனும். நாங்க செஞ்ச வேலை புடிச்சு அடுத்த ஆர்டரும் எங்களுக்கே கிடைக்க வேண்டும்.” என்று, இந்த ஒப்பந்தம் முடிந்தவுடன், தான் இந்த வேலையை விட நினைத்ததையும் மறந்து… வேண்டுதல் வைத்தாள். அப்பொழுது அபி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து…… ”என்….. என்ன சார்” தடுமாற்றத்துடன் கேட்டாள். அபி “அத நான் உங்கக்கிட்ட கேட்கனும் சாதனா…….. நான் நம்ம கம்பெனி வரவு செலவுகளை எல்லாம் பென்டிரைவ்ல காப்பி செஞ்சு எடுத்துட்டு வர சொன்னேன்.” நியாபகப்படுத்த

 

”அச்சோ சாரி சார்……. இதோ அஞ்சு நிமிஷத்துல காப்பி பண்ணி எடுத்துட்டு வர்றேன் சார்.” என்றவள் சொன்னது போலவே ஐந்தே நிமிடத்தில் வந்துவிட்டாள். அவள் கொடுத்த பென்டிரைவை தனது லேப்டாப்பில் போட்டு பார்த்து கொண்டிருந்தான். பைசாவை கூட விட்டு விடாமல் சாதனா தெளிவாக செய்திருந்தாள். அதை பார்த்த அபிக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. மனதில் சாதனாவை பாராட்டி கொஞ்சிகொண்டான்.

 

அரைமணி நேரம் சென்று லேப்டாப்பில் இருந்து பார்வையை எடுத்தவன் சாதனா இன்னும் அங்கேயே இருப்பதை பார்த்து, நீ…. சாரி நீங்க இவ்வளவு நேரம் இங்கேயா இருந்தீங்க…….? என்றவனிடம் “ இல்ல சார் இதுல எதாவது சந்தேகம் வந்தா அதை தெளிவு பண்றதுக்காக இருந்தேன்.” ”ஓ எனக்கு தெளிவு பண்ற அளவுக்கு நீங்க வந்துட்டீங்களா……? “என்று விளையாட்டாக கேட்க,

சாதனா அவனை திடுக்கிட்டுப் பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த சிரிப்பில், ஒரு கணம் தடுமாறியவள்… 

 

“இல்லை சார் அந்த அளவுக்கு நான் வரவில்லை. இது முழுவதும் நான் சம்பந்த பட்டது. இதுல ஒரு ரூபா குறைந்தாலும் கேள்வி கேட்குற உரிமை உங்களுக்கு இருக்கு…….அந்த மாதிரி எதாவாது இருக்கான்னு கேட்பதற்குதான் இவ்வளவு நேரம் இங்கே இருந்தேன்.” என்று கோபமாக பேச “ ஆஹா செல்லம் கோவிச்சுக்கிட்டீங்களா….? என்று மனதில் அவளை கொஞ்சி கொண்டான். “வேற ஒண்ணும் இல்லை என்றால் நான் கிளம்பலாமா சார். ”

 

”ராட்சசி ரொம்ப கோவிச்சுகிட்ட போல……. கொஞ்சம் மலை இறக்குவோம்” மனதில் நினைத்து கொண்டே……… “மிஸ் சாதனா,,, இது ஒரு விளையாட்டு பேச்சு இதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்குவீங்கன்னு நான் நினக்கலை. எனிவே நான் பேசினது உங்க மனச ஹார்ட் பண்ணிருந்தால் சாரி.” என்று முகத்தை கோபமாக வைத்து கொண்டு பேசியவன்….. “நீங்க கொடுத்த கம்பெனி வரவு செலவுகள் எல்லாம் புரியும்படி ரொம்ப தெளிவா இருக்கு. அதனால் தான் உங்களிடம் நான் எதுவும் கேட்கவில்லை.” என்று முகத்தில் எதையும் காட்டாமல் இயந்திர தன்மையுடன் பேசியவன்…. “இப்ப நீங்க போகலாம்” என்றான்.

 

அபி அப்படி பேசியது… சாதனாவிற்கு முகத்தில் அறை வாங்கியது போல் இருந்தது. இதேதான் நீயும் அவருக்கு செஞ்ச செய்துட்டும் இருக்க…” என்று மனசாட்சி அவளை இடித்துரைக்க…. அவள் அமைதியாக இருந்தாள்.

 

அவளுக்கு மீண்டும் அன்று ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் பார்த்த அபி மனதில் வந்து போனான். “என்னாச்சு எனக்கு ஒரு சாதரண விளையாட்டு பேச்சு அதை கூட என்னால ஈஸியா எடுத்துக்க முடியலையே……. என் பேச்ச கேட்டு அவங்க முகமே ஒரு மாதிரி ஆயிருச்சு. எப்பவும் சிரித்த முகத்தோட பேசுறவங்கள கோபமா பேச வச்சுட்டேனே…..” என்று தன்னையே திட்டி கொண்டாள்.

 

”அவங்க ஒரு தடவை கோபமா பேசினதையே…… என்னால தாங்க முடியல. நான் ஒவொரு முறையும் பேசும்போதும் அவரிடம் கோபமாகத்தானே பேசிருக்கேன். அப்ப அவங்க மனசு எவ்வளவு வேதனை பட்டிருக்கும்.” என்று அபிக்காக வருத்தப்பட்டாள். ஏனோ சாதனாவிற்கு அபியின் கோபம் தாங்க முடியாததாக இருந்தது. அவளுக்கு அழுகை வரும்போல் இருந்தது…… அதற்கு காரணம் என்னவென்று அவளுக்கு புரியவில்லை. உடனே அவனிடம் மன்னிப்பு கேட்டு…… அவனின் கோபத்தை குறைக்க வேண்டும் என்று மனதில் எழுந்த பேராவலை அடக்க முடியாமல், அபியின் அறையை நோக்கி சென்றாள்.

 

இங்கே அபியோ….. ”அச்சோ சனா பேபிய கோபமா பேசிட்டேனே……. ஏற்கனவே என்னை கண்டாளே ஒதுங்கி போவா…. நான் வேற இப்படி பேசி அவளோட கோபத்த தூண்டி விட்டுடேனே. தனக்குக்ள்ளே புலம்பி கொண்டு, அவளின் கோபத்தை எப்படி குறைப்பது என யோசித்து கொண்டே அறையில் நடந்து கொண்டிருந்தான். ”அட மானம் கெட்டவனே இப்பதான உன்ன அவ்வளவு பேசிட்டு போனா, திரும்பவும் அவள பத்தியே நினச்சுட்டு இருக்க உனக்கு கொஞ்சம் கூட இந்த வெட்கம், மானம், சூடு, சொரனைன்னு சொல்வாங்களே அதெல்லாம் இருக்கா…..?” என மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்டது.

”காதல்ல இதெல்லாம் சகஜமப்பா….. என்று சினிமா வசனம் பேசியவன்… அதுமட்டுமில்லாம காதல்ல ஈகோ எல்லாம் பார்க்க கூடாது….. என்று அறிவுரை கூறிவனை… ”தூ……… மனசாட்சி அவனை பாத்து துப்பியது… ”நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோ என் சனா பேபிக்கிட்ட நீ சொன்ன எதுவுமே பார்க்க மாட்டேன்… இப்ப நீ போ..’ என்று கண்டிப்பாக சொல்லி தன் மனதினை அடக்கியவன், மீண்டும் அவளின் கோபத்தை எப்படி குறைக்க?” என்று யோசனையில் இறங்கினான்.

 

தன் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டு யோசனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தவன்…….. பிரபுவாக இருக்கும் என்ற எண்ணத்தில் “ வாங்க பிரபு மீட்டிங்க்கு எல்லாம் ரெடியா………? என கேட்டவாறே நிமிர்ந்து பார்க்க……….. அங்கு நின்றிருந்த சாதனாவை சத்தியமாக அவன் எதிர்பார்க்கவே இல்லை…… அவளின் முகம் அழும் நிலையில் இருக்க…… அபியால் தாங்க முடியவில்லை. வேகமாக அருகில் வந்து “ என்னாச்சு சாதனா…….. என்ன பிரச்சனை…… என கேட்ட நொடி அவள் அழுது விட….. அபி பதறி போனான். 

 

”என்னடா…. எதுக்கு இந்த அழுகை சொன்னாதானே தெரியும்…” அபி தன்னை அறியாமல் அவளை உரிமையாக அழைத்து சின்ன குழந்தையிடம் பேசுவது போல் பேச…. சாதனா அவனின் அழைப்பை கவனிக்காமல், அவனின் அக்கறையை கவனித்து….. “ உங்களுக்கு என் மேல கோபம் இல்லதான….?” என குழந்தை போல் கேட்க…..

அபி அவளின் கேள்வியில் ஒரு நொடி திகைத்து உருகி, நின்றவன் அவள் பதிலுக்காக காத்திருப்பதை புரிந்து……. ”எனக்கு எதுக்கு உன் மேல கோபம் வரப்போகுது…? அவளிடம் கேள்வி கேட்க…… “ இல்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க விளையாட்டா பேசினதுக்கு நான் உங்க மேல கோபமா பேசினேன்ல அதனால நீங்க என்மேல கோபமா இருக்கீங்களா…?” என பாவம் போல் கேட்க……… அபி ரொம்பவே உருகி போனான்.

 

எதுக்காக இப்படி கேட்குறா…? யோசித்தவனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது தான் பேசியதற்காகத்தான்….. சாதனா அவ்வாறு கேட்கிறாள் என்பது. ” ஆஹா…. சனா பேபி நான் பேசினத வச்சு கோபமா இருக்கேன்னு நினைச்சுட்டாங்க போல…… அப்போ சனா, என்னுடைய கோபம் உன்ன பாதிக்குதா….? மனதில் சந்தோசமாக அவளிடம் கேட்டு கொண்டான். அபி, தன்னுடைய கோபம் சாதனாவை பாதிக்கிறது என்பதை அறிந்தவன்……. மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தான். “ ஆனால் அவள் வருந்துவது தாங்காமல்,,,, சாதனாவிடம் “ இல்லடா என் சனா பேபிமேல எனக்கு கோபம் வருமா?.. என்ன?” என்று அவளை சமாதானம் செய்ய…. சாதனா திடுக்கிட்டு “ என்ன சொன்னீங்க” சந்தேகமாக கேட்க,,, ”ஆஹா உஷாராகிட்டா சமாளிடா அபி…..” தனக்குள்ளே சுதாரித்து கொண்டவன்…..

 

”என்ன சொன்னேன்” என்று அவளிடமே திருப்பி கேட்க சாதனா “என்னமோ சனா……… ன்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் என்னமோ சொன்னீங்க….. அவள் யோசித்து கொண்டே சொல்ல…… :டேய் அபி நல்லா மாட்டுனடா” ——- ”கடவுளே இவளுக்கு அடுத்த வார்த்தை ஞாபகம் வரவே கூடாது” அபி வேண்டுதல் வைத்து கொண்டிருக்கும்பொழுதே…… பிரபு கதவை தட்டி அனுமதி கேட்க…… அவசரமாக ”வா பிரபு” என அழைத்து விட்டு “கிரேட் எஸ்கேப்….. ” யாரும் அறியாமல் ஒரு பெரு மூச்சை வெளியிட்டான் அபி.

உள்ளே வந்த பிரபு “சார் மீட்டிங்க்கு எல்லா அரேஞ்ச் பண்ணிட்டேன்…… 

 

மைக்கேல் கம்பெனி ஆன் தி வே சார்……” என அபியிடம் விபரம் கூற…. அபி ”ஒ கே பிரபு… வா போகலாம்” என அவனை அழைத்து போகும் முன் சாதனாவிடம் ”சாதனா நீங்க ஒரு பத்து நிமிஷம் கழிச்சு இந்த போக்கே எல்லாம் எடுத்துட்டு,,,, ஆபீஸ் வாசலில் வந்து நில்லுங்க” என்று அவள் மேலே ஏதும் கூறும் முன் பிரபுவுடன் சென்றுவிட்டான். ‘அவங்க சனான்னு சொல்லி என்னமோ சொன்னாங்களே..!’ யோசனையோடு பூங்கொத்தை எடுத்துச் சென்றாள்..

 

மீட்டிங் ஹால் சென்றவர்கள் அங்கு பிரபு செய்திருந்த ஏற்பாடுகள் அனைத்தையும் பார்த்தவன் அதி திருப்தியுற்று, பின்பு பிரபுவை அழைத்து கொண்டு ஆபீஸ் வாசலுக்கு வரவும்,, அந்த வெளிநாட்டவர் வரவும் சரியாக இருந்தது. அதில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களுமாக இருந்தனர். அபி அவர்களை வரவேற்று……. ஆண்களிடம் அபி பொக்கே கொடுக்க…….. பெண்களிடம் சாதனாவை கொடுக்க வைத்தான்.. அவர்கள் அனைவரும் அபியுடன் கை குலுக்கி அணைத்துவிட்டு…. சாதனாவிடமும் அதேபோல் செய்யவர பெண்களிடம் இன்முகமாக ஏற்றுக்கொண்டவள்….. 

 

ஆண்களிடம் நாசுக்காக மறுத்து விட்டு….. புன்னகையுடன் இருகரம் கூப்பி அழகாக வணக்கம் வைத்தாள். அந்த ஆண்களும் இவளை பார்த்து “ இண்டியன் கல்ச்சர் வீ ஆர் லைக் சோமச்……. அண்ட் யூ லுக் லைக் எ ஏஞ்சல்” என்று அவளை பாராட்டி…. கொஞ்சம் தடுமாறினாலும், அழகாகவே வணக்கம் வைத்தனர்.

 

அதுவரை அவளின் செயலை பார்த்து கொண்டிருந்த அபி அப்பொழுதுதான் மூச்சே விட்டான். ”ஆண்களை கண்டால் ஒதுங்கும் சாதனா… இவர்களிடமும் அதேபோல் நடந்து,,,,, முகத்தில் அறைவதுபோல் எதுவும் பேசிவிடுவாளோ..? என்று சிறிது பயந்து கொண்டே இருந்தான். ஆனால் அவள் நடந்து கொண்ட முறையை பார்த்து…….. மனதில் மிகவும் சந்தோசமும்…….. நிம்மதியும் கொண்டான். சிறிது சிறிதாக அவள் தன்னுடைய கூட்டிலிருந்து வெளிவருவதையும் உணர்ந்து கொண்டான்.

 

அபி தன்னருகே இருப்பதால்தான்…. சாதனா அவ்வாறு நடந்துகொண்டாள். அபியை மீறி தனக்கு எதுவும் நடக்காது என்று அவளது உள்ளுணர்வு சொல்ல… தன்னையறியாமலயே அவள் இவ்வாறு நடந்து கொண்டாள். தன்னுடைய சில செயல்களால்… தன்னை அறியாமலயே சாதனாவிற்கு அந்த எண்ணத்தை கொடுத்ததை…… அபியும் அறியாமல் இருந்தான்.

 

அனைவரும் மீட்டிங் ஹாலுக்கு செல்ல….அபி, சாதனாவை தன் அருகில் உள்ள இருக்கையில் அமர சொல்ல…. சாதனா மறுப்பேதும் சொல்லாமல் அவனருகில் அமர்ந்தாள். மீட்டிங் ஆரம்பமாக…….. அபி அவர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதை வியப்புடன் பார்த்து கொண்டிருந்தாள். அவர்கள் பேசும் சிலவார்த்தைகள்….. சாதனாவிற்கு புரியவில்லை என்றாலும்…. அபியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்து, அவர்களுக்கு தாங்கள் செய்த வேலை பிடித்திருக்கிறது……. என்பதை புரிந்து கொண்டாள். இருப்பினும் அதை அபியின் வாயால் கேட்டால்தான் மனது திருப்தி அடையும் என்பதை உணர்ந்து….. மீண்டும் அவர்கள் பேசுவதை கவனித்தாள்.

 

சிறிது நேரத்தில் அபி…. பிரபுவை அழைத்து ஏதோ சொல்ல…. பிரபு அவசரமாக வெளியேறினான். அபி சாதனாவிடம்… “சாதனா நம்ம பியூன் கிட்ட சொல்லி இவங்களுக்கு ஜீஸ் கொண்டு வர சொல்லுங்க…… ஒரு பத்து நிமிஷம் பிரேக் எடுத்துக்கலாம்…..” என்று அவளை அனுப்பி வைத்தான். அவனுக்கும் சிறிது டீ குடித்தால்….. நன்றாக இருக்கும் என்று தோன்றியது.. ஆனால், அதை சாதனாவிடம் சொல்ல மறந்துவிட்டான். இவர்களை விட்டு செல்லவும் மனம் இல்லை……. அவனுக்கு தலைவலி லேசாக வர ஆரம்பித்து விட்டது. ”சரி… சாதனாவிற்கு கால் செஞ்சு ஒரு டீ கொண்டுவர சொல்லலாம்” என நினைத்து அவன் செல்லை கையில் எடுக்க….. கதவை தட்டிவிட்டு சாதனா உள்ளே வந்தாள்.

 

சாதனாவை தொடர்ந்து பியூன் கையில் ட்ரேயோடு உள்ளே வந்தான். அதில் வெளிநாட்டவர்களுக்கு ஜீஸும், அபிக்கு டீயும் இருக்க……. அவன் சந்தோசமாக சாதனாவை பார்த்தான். பியூன் அவர்களுக்கு கொடுக்க, அபியும் எடுத்து கொண்டு ஒருவாய் அருந்தியவன் திகைத்தான்… டீ அவன் எப்பொழுதும், இனிப்பு குறைவாகவும், கொஞ்சம் ஸ்ட்ராங்காகவும் தான் குடிப்பான். எப்பொழுதும் கேண்டினில் அவனுக்கு பிரபு…… டீ சொல்லும்போது, இப்படி சொல்வது வழக்கம்……ஆனால் இன்று தான் சொல்லாமலே…. தனக்கு டீயும் கொண்டு வந்து, அது தனக்கு பிடித்த வகையில் இருந்ததை எண்ணி, மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

 

அபி அந்த டீயை மிகவும் ரசித்து குடித்தான். பத்து நிமிடம் கழித்து,, அனைவரும்… அபியின் கம்பெனியை சுற்றி பார்க்க சென்றனர்…. அபி அவர்களின் கேள்விகளுக்கு, தெளிவாகவும்…. அழகாகவும்… விளக்கம் அளித்து கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் கம்பெனியை சுற்றி பார்த்து விட்டு வருவதற்கும்….. வெளியில் சென்ற…. பிரபு வருவதற்கும் சரியாக இருக்க…. மீண்டும் அனைவரும் மீட்டிங்ஹால் வந்தனர். அபி பிரபு கையில் இருந்த பேப்பரை வாங்கி படித்து கொண்டிருந்தான்.

 

தான் படித்து விட்டு, அதை அந்த வெளிநாட்டவரிடம் கொடுக்க…… அவர்களும் அதை படித்து விட்டு….. சம்மதம் தெரிவித்தனர். பிறகு அதில் அபி கையெழுத்திட…… அதை தொடர்ந்து, மிக்கேல் கம்பெனியினரும் கையெழுத்திட்டனர். அபி அருகில் இருந்த சாதனாவிடம், “சாதனா…. இவங்களுக்கு நாம செஞ்சு கொடுத்த மெட்டீரியல்ஸ் ரொம்ப புடிச்சிருக்காம்…, அதுவும் அவங்க சொன்ன நாட்களுக்குள்ள நாம முடிச்சு கொடுத்தது…. அவங்களுக்கு ரொம்பவே சந்தோசமாம்… அதான், இனி தொடர்ந்து அவங்க கம்பெனியோட ஆர்டரை நமக்கே தரப்போறாங்க…… அதற்கான ஒப்பந்தத்திலதான்… நாங்க கையெழுத்துப் போட்டது.” என அபி சாதனாவிடம் மகிழ்ச்சியாக் கூறினான்.

சாதனாவிற்கும் மிக்க மகிழ்ச்சியே…! “வாழ்த்துக்கள் சார்” என சந்தோசமாக அபியை வாழ்த்தினாள்.

 

ஒரு வழியாக மீட்டிங் அனைத்தும் நல்லபடியாக முடிந்து… அபி அவர்களை, மதிய உணவிற்காக…. ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்றான். சாதனாவையும் அவன் அழைக்க……. அவள் மறுத்து விடவே……. அவள் இன்றைக்கு இவ்வளவு நேரம், அவள் தன் கூட்டுக்குள் போகாமல் இருந்ததே…! பெரியதாக எண்ணியவன்…….. அவளை வர்புறுத்தாமல், தன்னுடன் பிரபுவையும் அழைத்து சென்றான்.

இங்கு சாதனாவிடம் வந்த மது……. ” ஹே….சாது என்னடி இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க…… ரொம்ப சந்தோசமாவும் இருக்க..? மதியம் வரைக்கும் மீட்டிங்ல தான இருந்த……. அந்த டென்சனே இல்லாம சிரிச்சுட்டு இருக்கியே…….?” மீட்டிங்ல அப்படி என்னப்பா நடந்துச்சு” என ஆர்வமாக கேட்டவள்… ”ஆனா ஒண்ணுடி உன்ன இப்படி பார்க்கிறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு…..எப்பவும் இதேமாதிரி இருக்கிறதுக்கு என்னவாம்….” என ஆதங்கத்துடன் முடித்தாள்.

 

மது பேசுவதை பொறுமையாக கேட்டவள்……… அதே புன்னகையுடன்… “மீட்டிங்ல நடந்ததை நான் சொல்ல மாட்டேன்…… அதபத்தி எம் டி சார்தான் சொல்லுவாரு….ஆனால், இன்னைக்கு காலைல ஒரு விசயம் நடந்தது மது……” என்றவள் தொடர்ந்து……. இன்னைக்கு நான் ஒரு ஆன்ட்டியை மீட் பண்ணினேன், சான்சே இல்ல……… அவங்ககிட்ட கொஞ்சநேரம் பேசினாலே நம்ம மனசுல இருக்கிற கவலை எல்லாம் போற மாதிரி ஒரு பீலிங். நம்ம எம் டி சாரையே வம்பிழுத்தாங்கன்னா பாரேன்‼” என்று வியப்புடன் கூறியவள்… இன்று காலையில் வாசுகியை பார்த்ததையும், அங்கு அபி வந்ததையும், வாசுகி அவனிடம் வம்பிழுத்ததையும், அதற்கு அபியும் சரிசம்மாக வாயடித்ததையும் கூறியவள்…… 

 

மறந்தும் அய்யர் சொன்னதை மட்டும் சொல்லவில்லை……

சாதனா கூறியதை கேட்ட மது……. வியப்பின் உச்சத்தில் இருந்தாள். அதற்கு காரணம் ஒன்று அல்ல…… பல, முதலில் சாதனா இவ்வளவு பேசுவதே அதிசயம்….. அதிலும் சிரித்து கொண்டே பேசுவது அதைவிட அதிசயம்….. யாரைப்பற்றியும் அதிகம் பேசாதவள் பார்த்த சில நிமிடங்களிலேயே… ஒருவரை பற்றியும், அவருடைய குணத்தை பற்றியும் பேசுவது அதிசயத்திலும்…….. அதிசயம். இதை அனைத்தையும் விட ……அபியை பற்றி பேசியது…….. மாபெரும் அதிசயம் என்றே நினைத்தாள்….. மது.

 

மது.. சாதனாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்க… சாதனா “ என்ன மது நான் பேசிட்டே இருக்கேன் நீ எதுவுமே சொல்லாம என்னையே பார்த்துட்டு இருக்க…?” மதுவின் பார்வைக்கான அர்த்தம் புரியாமல் சாதனா குழப்பத்துடன் கேட்க…… ”இல்ல…… நீ சாதனாவா? இல்லன்னா சாதனாவோட டூப்ளிகேட்டான்னு பார்க்கிறேன்?” என்று சந்தேகமாக சொன்னவள்….. ”என்ன உளர்ற..?” சாதனா அவளை திட்டவும் . “ நீ வேலையில் சேர்ந்த இத்தன நாட்களில்…… இப்படி நீ சந்தோசமா சிரிச்சு பேசினத பார்த்ததே இல்லை….. ”என்ற மதுவிடம்… ”என்ன மது நான் உன்கிட்ட சிரிச்சதே இல்லையா….? நான் என்னமோ சிடுமூஞ்சி மாதிரியே பேசறியே” மதுவிடம் குறைபட்டாள் சாதனா….

 

”ஹே சாது நான் அப்படி சொல்லலடா… நீ சிரிக்கவே இல்லன்னு நான் சொல்லலை… அந்த சிரிப்பு எல்லாம் உன் உதட்டோட சரி…… ஆனால் அது உன்னோட கண்ணுக்கு வந்ததே இல்ல…… ஆனா இப்ப சிரித்து பேசுறது…..உன் கண்ணுல்ல மட்டும் இல்லாம…… உன் முகத்தையே ரொம்ப அழகா காட்டுது சாது….நீ எப்பவுமே இப்படியே இருக்கனும்…..” என்று மனதார கூறினாள்.

 

மதுவே தொடர்ந்து….. ”உன்ன இப்படி மாத்துன வாசுகி ஆன்ட்டிய எனக்கும் பார்க்க வேண்டும்போல இருக்கு‼ அவங்க போன் நம்பர் ஏதாவது இருக்கா..?” என ஆர்வமாக கேட்டாள். அப்பொழுதுதான் சாதனாவிற்கு புரிந்தது… அவ்வளவு நேரம் அந்த ஆன்ட்டி கூட இருந்தேன்… அவங்க போன் நம்பரை வாங்க மறந்துட்டேனே’ என தன் ஞாபகமறதியை எண்ணி தன்னையே திட்டி கொண்டாள்.

”சரி விடு சாது அடுத்த முறை பார்க்கிறப்போ மறக்காம போன் நம்பர் வாங்கிக்க,,,” சாதனாவை சமாதானப்படுத்தினாள். அங்கே அபி, 

 

வெளிநாட்டவரிடம் சேர்ந்து மதிய உணவை முடித்தவன்…. அவனுக்கு உடனே சாதனாவை பார்க்க வேண்டும்போல் பேராவல் எழவே…. அவர்களுக்கு தேவையானதை பிரபுவிடம், பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றவன்… உடனே கிளம்பிவிட்டான்… அவன், சாதனா இங்கு மதுவிடம் பேசிய போதே வந்துவிட்டான்… அவள் தன் அன்னையை பற்றி பேசியதையும், அவள் வேண்டுமென்றே…! அந்த அய்யர் சொன்ன வார்த்தையை மறைத்ததையும் கேட்டவன்… உற்சாகத்தில் சிறுபிள்ளயை போல் துள்ளி குதித்தான்…

 

உடனே தன் அன்னைக்கு அழைத்தவன் அவர் போனை எடுத்தவுடன் “ ஐ லவ் யூ மா… “ என உற்சாகமாக கூறியவன்… அவருக்கு பல முத்தங்களை பரிசாக அளித்தான். இங்கே வாசுகியோ… மகனின் சந்தோசத்தில் தானும் பங்கு கொண்டவர்போல்… “டேய் கண்ணா நான் சாதனா இல்லடா…” என்று அவனை நக்கல் ப்ண்ண… அபியோ.. “ மா என் சனா பேபிக்குன்னா… இந்த மாதிரி போன்லையா கொடுப்பேன்… என்னம்மா நீங்க…இந்த அபிய பத்தி தெரியாம பேச்சுறீங்களே…! என்று அவருக்கு பதில் கொடுத்தான்… “டேய் கொஞ்சமாவது அம்மாக்கிட்ட பேசறமாதிரியாடா பேசுற…” என மகனை அதட்டியவரிடம்… “மா யுவர் ஆல்வேஸ் மை ஃப்ரெண்ட் மா” என செல்லம் கொஞ்சியவனிடம்…

 

“என்னடா ஆபீஸ் நேரத்துல அம்மா ஞாபகம் வந்துருக்கு… என்ன விசயம்…?” தன் மகனை பற்றி அறிந்தவராக கேட்க… சாதனா மதுவிடம் பேசியதை சொன்னவன்… மாலை வீட்டிற்கு வந்தவுடன் மற்றதை பேசலாம்” என்றபடி செல்லை அணைத்தான்.

சொன்னது போலவே மாலை வீட்டிற்கு வந்தவுடன், தன் அன்னை, தந்தை, மற்றும் பாட்டியையும் அழைத்தவன்… அவர்களிடம் தான் சாதனாவை விரும்புவதாக அறிவித்தான்.” அபி கல்யாணத்திற்கு சம்மதித்தே சந்தோசமாக எண்ணி இருந்த,

 

அவ்ன் தந்தைக்கும், பாட்டிக்கும்… அவன் ஒருபெண்ணை விரும்புவது இரட்டிப்பு சந்தோசமாக இருந்தது… தங்களைவிட இதில் வாசுகிக்குத்தான்… அதிக மகிழ்ச்சியாக இருக்கும்… என்று நினைத்து அவரை பார்க்க… வாசுகியோ மிகவும் சாதரணமாக இருந்தார். அவரை பார்த்து திகைத்தவர்கள்… ”என்ன வாசு பையன் இவ்வளவு பெரிய விசயத்த சொல்லிருக்கான்…‼ நீ எதுவுமே ரியாக்ட் பண்ணாம இருக்க… “என்று ஆச்சரியாமாக கேட்டார்கள்.

 

அவரோ அசால்ட்டாக… உங்களுக்குத்தான் இது புது செய்தி எனக்கு பழைய செய்தி… என்று கூறியவர், பொண்ணகூட நான் பார்த்துட்டேன்… என்று மேலும் கூற… “என்ன…!” இருவரும் ஒருசேர அதிர்ச்சியாக கூவினர். அவர்களின் அதிர்ச்சியான முகத்தை பார்த்த அபி தன் அன்னையிடம் “ அம்மா போதும்மா… பாவம் அப்பாவும், பாட்டியும், அவங்களும் எவ்வளவு அதிர்ச்சியத்தான் தாங்குவார்கள்” என்று அவர்களுக்காக அனுதாபம் கொண்டான்… “வாசு என்ன நடக்குது இங்க…? உனக்கு ஏற்கனவே தெரியுமா…? ” தனசேகர் அதிர்ச்சியாக கேட்டார்.

 

”என்ன வாசு நீ கூட எங்கிட்ட மறச்சிட்டல்ல… உனக்கு எப்பவுமே… அபிதான் உசத்தி இல்லையா…?” என ஆதங்கத்தோடு கேட்டவரிடம்… ”என்னங்க இப்படி சொல்லிட்டிங்க… எனக்கு எப்பவுமே ’கணவனே கண்கண்ட தெய்வம்’, ’மணாளனே மங்கையின் பாக்கியம்’ என்பது உங்களுக்கு தெரியாதா…? ” என கேட்க, அபி பக்கென சிரித்து விட்டான். தனசேகர், இருவரையும் முறைத்து பார்க்க… வாசுகி அபியிடம்” ச்…சு சும்மா இருடா… நீ லவ் பண்றேன்னு சொல்லி எங்களுக்குள்ள சண்டைய வரவச்சுட்ட…” என போலியாக சலித்து கொண்டார்…

 

பின்பு சீரியஸாக, கணவரிடம் திரும்பி…” என்னங்க நான் உங்ககிட்ட இதுவரைக்கும் ஏதாவது ஒரு விசயத்த சொல்லாம மறச்சிருக்கேனா…? என்று ஆதங்கத்துடன் கேட்டவர்… அவர் அமைதியாக இருக்கவும்… பின்பு ” அபி லவ் பண்றது எனக்கும் இன்னைக்கு தான் தெரிஞ்சது… என்ன… உங்களுக்க சாயந்திரம் தெரிஞ்சிருக்கு… எனக்கு காலையில தெரிஞ்சிருக்கு… கொஞ்ச நாளாவே சாரோட நடவடிக்கையில… எனக்கு வித்தியாசம் தெரிஞ்சிச்சு… அது எதனாலன்னு இன்னைக்கி காலையிலதான் தெரிஞ்சுச்சு…” என்றவர் இன்று காலையில் கோவிலில் சாதனாவை சந்தித்ததையும், அபி அவளிடம் நடந்து கொண்டதையும்… தானும் கொஞ்சம் நடித்ததையும் கூறியவர்… அப்பொழுதுதான் அபியோட மனசு பத்தி தெளிவாச்சுங்க…

 

சாயந்தரம் நீங்க வந்தவுடனே உங்க்கிட்டையும், அத்தையிடமும் சொல்லணும்னு இருந்தேன்… அதுக்குள்ள அவனே சொல்லிட்டான்… அவன் முதல் முதலா சாதனாவ காதலிக்கிறேன்னு… நம்ம மூணுபேத்துக்கிடயும் ஒண்ணாதாங்க சொல்லிருக்கான்.” எங்கிட்ட மட்டும் தனியா சொல்லலை தெரிஞ்சுக்கோங்க…” என்று தன் கணவரிடம்… எதையும மறைக்கவில்லை… என்பதை புரிய வைத்துவிடும் நோக்கில் பேசிக்கொண்டிருந்தார்.

 

தன் மனைவி பேசியதை… கேட்ட தனசேகர் வாய்விட்டு சிரித்தார். அவரை புரியாமல் பார்த்த வாசுகியும், அபியையும் பார்த்து புன்னகைத்த அவரின் அன்னை…” ஏன் வாசு அவன் என்னைக்காவது உன் மேல கோபப்பட்டிருக்கானா..? என கேட்க இல்லை… என்று தலை அசைத்தவரிடம்… அப்பறம் இப்பமட்டும் எப்படி கோபப்படுவான்னு நினச்ச…” என்று வாசுகியிடம் கேட்டவர்… அவன் எப்படி கேட்டாலும் நீ விளையாட்டுதனமாவே… பதில் சொன்னல்ல… அதான் உன்ன கொஞ்சம் கலாட்டா செஞ்சான்.. கோபமா இருக்கிறமாதிரி நடிச்சான்…” என சிரித்துகொண்டே கூறினார்.

 

வாசுகி தன் கணவரை முறைத்து பார்க்க “கோவிச்சுக்காத செல்லம் நான் எப்படி கேட்டாலும் நீ என்ன கலாய்ச்சுகிட்டேதான் இருப்ப… அதான் உன்கிட்ட கோப பட்றமாதிரி நடிச்சேன்… அது நல்லாவே வொர்க் அவுட் ஆகிடுச்சு…” என்று சிரித்தபடி கூறி… தான் வாசுகியின் கணவன் என்பதை நிரூபித்தார். “போங்க அபிப்பா… நான் கொஞ்ச நேரத்துல… பயந்துட்டேன் தெரியுமா…? என்று முகத்தை சுருக்கியவரை…. சமாதானம் செய்துகொண்டிருந்தார் அபியின் அப்பா…. அவர்கள் இருவரையும் பெருமையாக பார்த்த அபி… தானும் இதேபோல் வயதான பிறகும்.. சாதனாவுடன்… காதலுடன் வாழவேண்டும் என்று நினைத்துகொண்டான். அதுக்கு நீ இன்னும் கொஞ்சம் கஷ்டப்பணும் தம்பி..

 

தொடரும்.

அத்தியாயம்…9

தன் அன்னை, தந்தையின் ஊடல்களை மனதில் ரசித்த அபி..பாட்டியிடம் வந்து “என்ன பாட்டி உங்க மகனை… உங்க மருமக முறைக்கிறாங்க… நீங்க அதை பார்த்து ரசிச்சுட்டு இருக்கிங்க…? நீ எப்படி என்மகனை முறைக்கலாம்னு… கேளுங்க பாட்டி… “ என்று தன் அன்னயை பாட்டியிடம் மாட்டி விட்டான்… அபியின காதை திருகிய பாட்டி… ”படவா என் மகனுக்கும், மருமகளுக்கும் சண்டை மூட்டிவிட பார்த்து… அது நடக்கவில்லை… என்றதும், எனக்கும்… என் மருமகளுக்கும் சண்டை மூட்டிவிட பார்ர்கிறியா…? என்று வலிக்காமல் அவன் காதை பிடித்து திருகினார்.

 

வாசுகி தன் அத்தையிடம் “விடுங்க அத்தை அவனுக்கு சாதனா வேண்டாம் போல அதான் என்னையபத்தி… உங்கக்கிட்டையும் அவர்கிட்டையும் போட்டு கொடுக்கிறான்.” என்று அசால்ட்டாக சொன்னவரை பார்த்த அபி ”ஙே” என முழித்தான். அச்சோ அபி..! எப்பவும் போல உனக்கு உன் வாய்தாண்டா எதிரி… சாதனா விசயத்துல, அம்மாவோட உதவி தேவை படும்னு தெரிஞ்சு…. வாய் விட்றியே…” தன்னையவே திட்டியவன்… ”அம்மா, தாயே உங்க பவரை பத்தி தெரியாம பேசிட்டேன்… அத எதையும் மனசுல வச்சுக்காம… என் காதலுக்கு உதவி பண்ணுங்க தாயே…‼” என்று அவரின் காலில் விழுந்து முழு சரணகதி அடந்தவனை… தன சேகரும் அவரின், அன்னையும் “அடப்பாவி” என்பதுபோல் பார்த்தனர். வாசுகியோ அபியை பார்த்து ”அது அந்த பயம் இருக்கனும்” என்று கெத்தாக முடித்தார்.”எல்லாம் என் நேரம்” அபி வாய்க்குள் முணுமுனுத்ததை கேட்ட மூவரும் வாய்விட்டு சிரித்தார்கள்.

 

தன சேகர் வாசுகியிடம் “ எப்ப வாசு அந்த பொண்ணு வீட்டுக்கு போகலாம்…” என கேட்க வாசுகி அபியை பார்த்தார். அவன் சிறிது தயங்கவே… தனசேகர் “ என்ன அபி என்னாச்சு அவங்க வீட்டுக்கு போகனணும் தான…? ஏன் தயங்குற…” என குழப்பமாக கேட்க… அபி சாதனாவை பற்றியும்… அவளுக்கு ஆண்களிடம் உள்ள வெறுப்பை பற்றியும் கூறியவன்… தன் பெற்றவர்களின் புரியாத பார்வையை பார்த்து… “ சாதனாவோட வாழ்க்கைல ஏதோ பெரிசா நடந்திருக்குப்பா… அதனாலதான் அவ ஆண்கள் என்றாலே வெறுக்கிறா…

அவளோட வாழ்க்கையில என்ன நடந்திச்சுன்னு தெரியனும்… அந்த நிகழ்வுல இருந்து அவள வெளிய கொண்டுவரணும். அதுக்கப்புறம்தான் என்னோட காதல சொல்லி… அவள சம்மதிக்க வச்சு… அப்புறம்தான் நீங்க சொன்னதெல்லாம் நடக்கும்…” என்று உறுதியுடன் கூற மூவரும் அபியை பெருமையாக பார்த்தனர்…

 

”அதுக்கு இப்ப நாங்க என்ன செய்யனும்…” மூவரும் கேட்க, அபி வாசுகியிடம்” அதான்மா எனக்கும் தெரியல…” என்று குழம்பியவன் “ கொஞ்ச நாட்களாகத்தான்… சாதனா என் முகத்த பார்த்து பதில் சொல்ல ஆரபிச்சுருக்கா… இப்ப போய் ”உன் மனசுல என்ன இருக்கு… உன் கடந்த கால வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு… கேட்டேன்னு வச்சுக்கோங்களேன்…நீயும் வேண்டாம்… உன் வேலையும் வேண்டாம்ன்னு போயிருவா… அதுமட்டுமில்லாம கொஞ்சமே… கொஞ்சம் தன் கூட்டிலிருந்து வெளிய வந்தவ… சுத்தமா ஒடுங்கிருவா… அதான் என்ன செய்றதுன்னு யோசிக்கிறேன்.” என்று கூறியவன்

வாசுகி “நாளைக்கு சாதனா வீட்டுக்கு போகலாம்” என உறுதியுடன் கூற… ஏதோ யோசனையில் இருந்த அபி… தன் அன்னை கூறியதை கேட்டு திகைத்தான். 

 

“என்னம்மா இப்பதான சொன்னேன்… சாதனாவ சரி பண்ணிட்டுதான் அவங்க வீட்டுக்கு போகனும்ன்னு… இப்ப இப்படி சொல்றிங்களே…” என அலுத்து கொள்ள… ”டேய் முந்திரி கொட்டை… நான் சொல்லவருவதை முழுசா கேட்டுட்டு அப்பறமா நீ சொல்ல வந்ததை சொல்லு” என அதட்டியவர்… அபி அமைதியாக இருக்கவும்…

”நம்ம நாளைக்கு சாதனா வீட்டுக்கு போகலாம்… ஆனா சாதனா இல்லாதப்ப… சாதனா வேலைக்கு போனவுடனே… நாம அவ வீட்டுக்கு போகலாம்… அவங்க அம்மாகிட்ட என்ன நடந்ததுன்னு கேட்கலாம்… அதுக்கு முன்னாடி அபி அவன் மனசுல இருக்கிறத சாதனாவோட அம்மாக்கிட்ட சொல்லனும்.” என அபியிடம் சொல்ல “இதுக்கு சாதனா அம்மா ஒத்துக்குவாங்களா…?” என அபி சந்தேகம் கேட்க…

 

”எந்த தாயும் தன் பிள்ளையோட வாழ்க்கை நல்லா இருக்கனும் என்றுதான் நினைப்பாங்க… கெட்டுப்போகனும்ன்னு நினைக்க மாட்டாங்க… அவங்க மனசுல நம்பிக்கை வருகிற மாதிரி பேசுவது உன் கையில் தான் இருக்கு… உன் மேல நம்பிக்கை வந்துட்டா… நீ கேட்காமலயே அவங்களே சாதனாவை பத்தி சொல்லுவாங்க…” வாசுகி கூற, அபி தன் அன்னையை தூக்கி தட்டாமாலை சுற்றி… ”அம்மா தங்க்யூம்மா…… ஐ லவ் யூம்மா…. “ உற்சாகத்தில் அவரை சுற்றி கொண்டிருந்தான். ”டேய் போதும்டா எம் பொண்டாட்டிக்கு தல சுத்த போகுது… “ தனசேகர் அவனை கடிந்தார். 

 

அபி ”எப்படிம்மா உங்களுக்கு இப்படி ஒரு ஐடியா தோணுச்சு…” என்று வியந்தவாறே கேட்க… ”டேய் தம்பி பையா… உனக்கு தொழில்ல இருக்கிற புத்திசாலித்தனம்… வாழ்க்கையில இல்லடா… “என்று அவனை கிண்டலடித்தவர்… சாதனா விசயத்துல மூளை சொல்றத கேட்காம… மனசு சொல்றத கேள்… உனக்கே தானாகத் தெரியும்” என்று இலவச அறிவுறையும் வழங்கினார். அபி அதனை ஏற்றுக்கொள்பவன் போல் புன்னகையுடன் இருந்தான்.

 

அந்த குடும்பம் சந்தோசத்தில் மிதந்து கொண்டிருந்தது… நாளை தாங்கள் அழப்போவது தெரியாமல்… எதையும் சிரித்த முகத்துடனே பேசி முடிக்கும் வாசுகி… கண்ணீரில் கரையபோவது தெரியாமல்… அழுவதென்றால் என்னவென்றே அறியாத… அபியின் கண்கள் கண்ணீர் விடுவது தவிர வேறு எதுவும் செய்ய தோன்றாமல்… இருக்க போவதை அறியாமல்… அவர்கள் நால்வரும் சந்தோசமாக…. சாதனாவின் வீட்டிற்கு செல்வதை பற்றி பேசிகொண்டிருந்தனர். அங்கே அபியின் குடும்பம்… சாதனாவை பற்றி பேசிகொண்டிருக்க… இங்கே சாதனாவோ…தன் வருகைக்காக அங்கே நான்கு ஜீவன்கள் காத்துகொண்டிருப்பதை பற்றி அறியாமல்… எப்பவும் போல் தன் அன்னையிடம் இன்று அலுவலகத்தில் நடந்ததையும், கோவிலில் நடந்ததையும்… (சாது செல்லம்.. அய்யர் சொன்னத சமத்தா அம்மாக்கிட்ட மறச்சிட்டாங்க…) மலர்ந்த முகத்துடன் கூறிய… மகளை பார்த்த மங்கைக்கு… சந்தோசமாக இருந்தது. கொஞ்ச நாட்களாகவே சாதனாவிடம் சிறிது மாற்றம் தோன்றியிருப்பது கண்டு. தாயுள்ளம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. அதற்கு காரணம் எதுவாக… அல்லது யாராக இருந்தாலும் அவருக்கு மனதார நன்றி கூறினார் அந்த தாய்.

 

சாதனா சற்று தயக்கத்துடன்… ” அம்மா நான் உங்ககிட்ட ஒரு விசயத்த மறச்சிட்டேன் “ என்ற் பீடிகையுடன் சொன்னவள் இரண்டு நாட்களுக்கு முன்பு… பேருந்தில் ஒரு ரௌடிக்கும் தனக்கும் நடந்த சண்டையை கூறி… அன்று மாலை மீண்டும் அவர்கள் ஐந்து பேராக தன்னிடம் வம்பிழுத்ததையும் கூறியவள்… “என்ன சொல்ற சாது… உனக்கு ஒண்ணும் இல்லையே…?” என்று பதட்டத்துடன் தன் மகளை முழுதாக ஆராய்ந்தார்…” இத நீ ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லலை…? அவங்ககிட்ட இருந்து நீ எப்படி தப்பிச்சு வந்த…?” என்று கோபமாக தொடங்கி கேள்வியாக முடித்தார்.

 

சாதனா தன் அன்னையின் பதட்டத்தை தணிக்கும் விதமாக அவருக்கு தண்ணீர் குடிக்க கொடுத்து “ அம்மா பயப்படாதிங்கம்மா எனக்கு ஒண்ணும் ஆகலை… அதுமட்டுமில்லாம இந்த சம்பவம் நடந்து ரெண்டு நாளாயிருச்சு… பாருங்க உங்க முன்னாடி… நான் நன்றாகத்தானே இருக்கேன்.” என்று தாயிடம் சமாதானமாக பேசியவள்… “நீங்க இப்படி பயந்து பதட்டப்படுவீங்கன்னு தான் நான் அன்னைக்கு உங்ககிட்ட சொல்லலை.” என்று தன் அனையிடம் சொல்லாததற்கு விளக்கமளித்தவள். இன்னக்கு ஏன் சொன்னேன்னா… அந்த பிரச்சனையோட தாக்கம்… குறைஞ்சிருச்சு… அதுவுமில்லாம உங்ககிட்ட சொல்லாம மறைக்கிறது.. என்னமோ தப்பு செஞ்சமாதிரி இருந்துச்சு… அதான் இன்னைக்கு சொல்லிட்டேன்.” என்றவள் அந்த ரௌடிகளிடம் இருந்து…. அபி தன்னை காப்பாற்றியதையும் சொன்னாள்… அவன் தான் தன்னை வீடுவரை வந்து விட்டதையும் சொன்னாள்.

 

சாதனா கூறியதை கேட்ட மங்கை தன் மகள் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பி இருக்கிறாள்… என்பதை நினைத்து பார்த்தவருக்கு பயத்தில் மனம் நடுங்கியது. அதே சமயம் தன் மகளை காப்பாற்றிய அபியிடம்… நன்றி பெருகியது… “ ”என்னடா…! சாது உங்க எம் டி சார் உனக்கு எவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்காங்க… வீடுவரைக்கும் வந்தவங்கள வீட்டுக்கு கூப்பிடாம விட்டுடியே…” என ஆதங்க பட்டவரிடம்… “ இல்லம்மா அவங்க அதெல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க… நம்ம நன்றி சொன்னாலும் ”அந்த இடத்துல நீங்க இல்லாம வேற யார் இருந்தாலும் அப்படிதான் செஞ்சிருப்பேன்னு சொல்லுவாங்க…” என்று அவனை பற்றி அறிந்தவள்போல் சாதனா கூற… மகளின் பேச்சை கேட்டு வியப்படந்தார் அவளின் அன்னை.

 

மறுநாள் காலை அனைவருக்கும் அழகாக விடிய… சாதனாவிற்கு இன்று ஏனோ மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது… அது ஏனென்று ஆராயாமல் அதை அனுபவித்து கொண்டே… அலுவலகத்திற்கு தயராகினாள். மகளின் உற்சாகமும், மகிழ்ச்சியும் கண்ட மங்கை… ”இது எப்பவுமே நிலைத்திருக்கனும் ஆண்டவா” என்று வேண்ட மேலே இருந்த தேவர்கள் “ததாஸ்து” என்று வாழ்த்தியது மங்கைக்கு கேட்கவில்லை. சாதனா காலை டிபனை உண்டுவிட்டு… மதிய லஞ்சை தன் பையில் எடுத்து வைத்து கிளம்பியவளை… ” சாதனா பார்த்து போய்ட்டு வாடா யாரோடையும் சண்டை போடாதடா…அன்னைக்கு அந்த தம்பி வந்ததுனால பரவாயில்ல… இல்லன்னா என்னவாகிருக்கும்… அம்மாவுக்காக அந்த மாதிரி ஆளுங்கக்கிட்ட ஒதுங்கி இருடா…” என அறிவுறை கூற… 

 

அன்னையின் மனதினை உணர்ந்து ”சரிமா” என கூறி மங்கையின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு கிளம்பினாள்.

அலுவலகம் வந்த சாதனாவிடம் மது காலவணக்கம் கூறினாள். சிறிது நேரத்தில் சாதனாவிற்கு ஏனோ வெறுமையாக இருந்தது அது ஏனென்று புரியவில்லை.. (நம்ம ஹீரோதான் ஆஃபீஸ் வரலையே அதனால இருக்கலாம்.) ஆர்வமில்லாமல் வேலை பார்த்து கொண்டிருந்தவளிடம்… பிரபு வந்து… போன மாதம் வரவு செலவுகளை… பிரிண்ட் அவுட் எடுத்து தர சொல்ல… சாதனா “இந்தமாதிரி எல்லாம் அவங்கதான கேட்பாங்க… இப்ப பிரபு வந்து கேட்கிறாரு… காலையில இருந்து அவங்கள பார்க்கவே இல்லையே… ஆஃபீஸ்க்கு வந்தாங்களா…? வரலையான்னு தெரியலையே…? எப்படி தெரிஞ்சிக்கிறது…” என்று யோசனை செய்தவளை 

 

”அடியே யார் ஆஃபீஸ்க்கு வந்தா உனக்கென்ன…? வரலைன்னா உனக்கென்ன… உன் வேலைய மட்டும் பாரு” என்று மனசாட்சி அவளை அதட்ட… சாதனா தன் எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட்டு… பிரபு கேட்டதை… மதுவிடம் கொடுத்தனுப்பினாள்.கே சாதனாவின் நாயகனோ… தன் அன்னையை பாடாய் படுத்தி கொண்டிருந்தான். “அம்மா சீக்கிரம் வாங்கம்மா… அந்த ஆன்ட்டி வெளிய எங்கையாவது போயிற போறாங்க…” என அவசரப்படுத்தினான்.

 

தன் பேரனின் அவசரத்தையும், பதட்ட்த்தையும் பார்த்த… பாட்டி “டேய் பேராண்டி என் பேத்தி நம்ம வீட்டுக்கு… வர்றதுக்கு முன்னாடியே என் மருமகளை… இப்படி படுத்திறியே… அவ வந்துட்டா என் மருமகளை என்ன பாடு படுத்துவ..” என அபியை கிண்டல் பண்ண…. ஆமா உங்க பேத்தியும் உங்க மருமக்ளும் என்ன படுத்தாம இருந்தா சரி… இப்பவே அம்மாவுக்கு அவ விசிறி ஆகிட்டா…! இதுல மருமகளா ஆகிட்டா… என்பாடு திண்டாட்டம்தான்.” என பெருமையாக அலுத்துகொண்டவன்… திருபவும் தன் அன்னையை அழைக்க வாயை திறந்தவன்… அவர் கிளம்பி வரவும் வாயை மூடிக்கொண்டான்.

 

வாசுகியோ நிதானமாக வந்தவர் “ஏண்டா இப்படி அவசரப்படுத்துற மணி என்னன்னு பார்த்தியா” என்று கோபத்தோடு கேட்க அப்பொழுதுதான் மணியை பார்த்தவன்… அதில் 9.30 என காட்ட… அசடு வழிந்தான் அபி “இப்ப சாதனாவே அவங்க வீட்டுல இருந்து கிளம்பிருக்க மாட்டா… நீ அங்க போய் என்ன பண்ண போற…? என கேட்க அபி அமைதியாக இருந்தான். “இங்க பாரு அபி சில விசயங்கள்ல நிதானத்தை கடைபிடிச்சாத்தான் நாம நினைச்சத அடைய முடியும் புரியுதா…? அதுவும் சாதனா விசயத்துல… நீ ரொம்பவே நிதானத்தை கடைபிடிக்கனும்.” என்று அறிவுரை வழங்கியவர்… 

 

அவனின் முகத்தை நிமிர்த்தி… அம்மா இருக்கேன்ல அப்புறம் எதுக்கு இந்த பதட்டம் சாதனாவ… நம்ம வீட்டுக்கு வரவச்சிரலாம்…” ஆறுதல் கூறியவர்… ” அபி… என அழைக்க அவன் நிமிர்ந்து பார்க்காவும்… சாதனாவோட கடந்தகால வாழ்க்கையில என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்… அந்த என்ன வேண்டுமானாலும் என்பதை அழுத்தி சொன்னவர் பின்பு .. “அதை கேட்டு உன் மனசுல சஞ்சலமோ… அவசரபட்டுட்டோமோ… அப்படிங்கற எண்ணம் வரக்கூடாது… அதைவிட முக்கிக்யம் அவமேல பரிதாபம் வரவேக்கூடாது… இதை எல்லாம் யோசிச்சு பார்த்துக்க…” என தீர்க்கமாக கூறிய தன் அன்னையை வேதனையுடன் பார்த்தான்.

 

அம்மா சாதனாவோட கடந்தகாலம் எனக்கு அவசியம் இல்லாதது… இருந்தும் அதை தெரிஞ்சிக்க நினைக்கிறேன்னா… அவள அந்த கடந்த காலத்துல இருந்து மீட்பதற்கு மட்டும் தான். நான் உங்க பையன் மா… நான் அந்தமாதிரி நினைப்பேன்னு நீங்க எப்படி நினைக்கலாம்…? என அபி வருத்தத்தோடு கேட்க… வாசு அவன் நெற்றியில் முத்தமிட்டு “சாரிடா அபிக்கண்ணா… அம்மா இந்த விசயத்துல… அம்மாவா யோசிக்காம… ஒரு பொண்ணா யோசித்து பார்த்துட்டேன்…” என அவனிடம் மனிப்பு கேட்டவர்… ” மற்றபடி என் மகனை பத்தி எனக்கு தெரியாதா…? என்ன” என்று பெருமையாக கூறி அவனை அணைத்துக் கொண்டார்.

 

”அம்மவும் பையனும் இங்கயே பேசிட்டு இருந்தால்… எப்ப என் பேத்தி வீட்டுக்கு போகப்போறீங்க…?” என அதட்டிய பாக்கியத்தம்மாள்… அவர்களை உணவு மேஜைக்கு அழைத்து சென்று, தானே பரிமாறினார்… மறுத்த வாசுகியை உங்கம்மா பரிமாறினால், வேணாம்னு சொல்லுவியா வாசு…?” என அதட்டி உட்கார வைத்தார். பின்பு இருவரும் காலை உணவை உண்டுவிட்டு… சாதனா வீட்டிற்கு சென்றனர். போகும் வழியில் பூவும், பழமும் வாங்கிக் கொண்டார்கள்.

 

சாதனா வீட்டின் அருகே வண்டியை நிறுத்தி விட்டு… அபியும் வாசுகியும் வெளிகேட்டை திறந்து… அழைப்பு மணியை அழுத்தினான் அபி… சில வினாடிகள் கழித்து கதவு திறந்த மங்கை… அவர்கள் இருவரையும் பார்த்து யாரென்று தெரியாமல், குழம்பினார். அதை அவர் கேட்கும் முன்னே… வாசுகி ” வணக்கம் என் பெயர் வாசுகி தனசேகர்.. இவன் என் பையன் அபிமன்யூ தனசேகர்…. அபி குரூப் ஆஃப் கம்பெனி எம் டி….அதாவது இப்ப சாதனா வேலை பார்க்கிற கம்பெனியோட எம் டி…” என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டார்… அவர்களை பார்த்து ஆச்சரியம் அடைந்த மங்கை… ”வாங்க… வாங்க… உள்ள வாங்க…” என்று அவர்களை அழைத்தார். அவர்களை அங்கிருந்த சோபாவில் அமரச் சொன்னவர்… அடுப்படி உள்ளே சென்று தண்ணீர் கொண்டுவந்து குடிக்க கொடுத்தார்.

 

அவர்கள் தண்ணீர் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவர்… பின்பு அபியிடம் திரும்பி “ சார் என் பொண்ண அன்னைக்கு அந்த ரௌடிங்ககிட்ட இருந்து நீங்கதான் காப்பாத்துனிங்கன்னு சாதனா சொன்னா…. அது மட்டுமில்லாம அன்னைக்கு ஆபீஸ்லயும்… என் பொண்ணு மேல விழுந்த பழிய …. நீங்தான் போக்கினிங்கன்னும், சொன்னாள். ஒவ்வொரு முறையும் என் பொண்ணு ஆபத்துல இருக்கிறப்ப நீங்கதான் அவளை காப்பாத்திருக்கிங்க…. ரொம்ப நன்றி சார்…” என்று கையெடுத்து கும்பிட்டவரை… ஒரு நொடி திகைத்து பார்த்தனர்.

 

பின்பு அபி வேகமாக வந்து, அவரின் கையை கீழே இறக்கிவிட்டவன்… “என்ன ஆன்ட்டி நீங்க… எனகிட்ட நன்றி சொல்லிக்கிட்டு…” என்று பதறியவன் சிறிது தயங்கிவிட்டு… ”நான் உங்களை ஆன்ட்டின்னு கூப்பிடலாமா…?” என கேட்க அவர் சம்மதமாக தலை அசைக்கவே…. “அதே மாதிரி நீங்களும் என்ன சார்ன்னு சொல்லகூடாது… என் பெயர் அபிமன்யூ, எல்லாருக்கும் அபி… உங்களுக்கு எப்படி கூப்பிட தோணுதோ, அப்படியே கூப்பிடுங்க…” என்று அன்புக் கட்டளையிட்டான்.

 

”ஆன்ட்டி அன்னைக்கு ஆஃபீஸ்ல சாதனாக்கிட்ட நேர்மை இருந்தது… அந்த நேர்மைதான் அவ… அவங்களை காப்பாத்துச்சு….” என்று சாதனாவை ஒருமையில் அழைக்க போனவன் மாற்றிக்கொண்டான். அதேமாதிரிதான்… அந்த ரௌடிங்ககிட்ட இருந்து காப்பாத்தினதும்… அங்க சாதனா இல்லாம வேற யார் இருந்தாலும் நான் அப்படிதான் செஞ்சிருப்பேன்.” நீங்க என் அம்மா அமாதிரி, அதனால… தயவு செய்து நன்றி, சொல்லாதிங்க ஆன்ட்டி” என சொல்ல மங்கை ஆச்சரியமாக அபியை பார்த்தார். எவ்வளவு பெரிய தொழிலதிபன் எந்த பந்தாவும் இல்லாமல் தன்னிடம் இயல்பாக பேசுவது…. மங்கைக்கு வியப்பாக இருந்தது.

 

அதே சமயம் காரணமே இல்லாமல் இன்னொரு தொழிலதிபன் முகமும், அதில் இருந்த அலட்சியமும் அவர் மனதில் வந்து போனது… அதில் திடுக்கிட்டவர், தன்னை சமாளித்து கொண்டு… :”சாதனாவும் இதேதான் சொன்னாள்” என கூற புரியாமல் பார்த்த அபியிடம்… “இல்ல இப்ப சொன்னிங்களே “அங்க சாதனா இல்லாம வேற யார் இருந்தாலும் நான் அப்படிதான் செஞ்சிருப்பேன்.”ன்னு நேத்து சாதனாவும் இதேதான் சொன்னாள்.” என்று கூறினார். அபி மனதுக்குள் “ சனா பேபி என்ன பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கியா..? ஆனா இது உனக்கு புரியுமான்னு தெரியலையே…” என மங்கை அறியாமல் பெருமூச்சு விட்டான்…

 

அபியும் மங்கையும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த வாசுகி “பயபுள்ள என்னமா போட்டு தாக்குது… என்னோட உதவியே தேவப்படாது போல இருக்கே…? அபிக்கு பாராட்டு பத்திரம் வாசித்தவர்… அவ்ர்கள் பேசுவதை புன்னகையுடன்… பார்த்துக்கொண்டிருந்தார்…. அதில் அவர் தலையிடவே இல்லை…‼ மங்கை வாசுகியை பார்த்து “ தப்பா எடுத்துக்காதிங்க நீங்க என்ன விசயமா என்ன பார்க்க வந்திருக்கின்ங்கன்னு தெரிஞ்சுக்கலாமா…? என கேட்க 

 

“ உங்க பொண்ணு சாதனாவ எங்க வீட்டுக்கு மருமகளா அனுப்புவிங்களா…?ன்னு கேட்க வந்திருக்கோம்.” வாசுகி சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்துக்கு வர…மங்கை அதிர்ச்சியாகி அப்படியே நின்றுவிட்டார்.

 

அவரின் அதிர்ச்சியான தோற்றத்தை பார்த்த வாசுகி… எப்படி அழைப்பது என்று தெரியாமல்“ சம்பந்தி” என்று அழைக்க அவரின் அதிரடியான அழைப்பில்… தன்னை மீட்டு கொண்டவரின் கண்களில்… கண்ணீர் தாரை தாரையாக விழ… அவரை பார்த்துக் கொண்டிருந்த அபியும், வாசுகியும் திகைத்து நின்றுவிட்டார்கள். “ “என்னாச்சு நாங்க எதாவது தப்பா கேட்டுடோமா…?” என குழம்பியவர்.. பின்பு மங்கையிடம் ” அபி என் பையன் அப்படிங்கிறதுக்காக சொல்லலை அபி ரொம்ப நல்ல பையன்… சாதனாவ உயிரா நேசிக்கிறான். 

 

ஆனா, சாதனா மனசுல ஏதோ கஷ்டம் இருக்குன்னு தெரிஞ்சு… அந்த கஷ்டத்தை போக்கின பிறகுதான்… தன்னோட காதலை சாதனாக்கிட்ட சொல்லணும்ன்னு இருக்கான்.ஆனா இதப்பத்தி சாதனாக்கிட்ட பேசமுடியாது இல்லையா…? அப்படி பேசினா அவளோட காயத்த மேலும் கிளறிவிட்டமாதிரி ஆகிரும் அதனால்தான்… நாங்க உங்ககிட்ட பேச வந்திருக்கோம். சாதனாவோட கடந்த காலம் எங்களுக்கு தேவை இல்லாதது தான்… ஆனா அத சாதனா மறந்திட்டு சந்தோசமா இருந்தால் அதைபத்தி கேட்டிருக்க மாட்டோம்… அவளுக்குள்ளேயே ஒரு வட்டத்தை போட்டு அதை விட்டு வெளிய வரமாட்டேன்னு சொல்றப்ப அதுக்கான காரணம் தெரியனும் இல்லையா….?” என்று வாசுகி இதமாக பேச… 

 

வாசுகியின் இதமான பேச்சு மங்கயின் மனதில் அழுத்தியிருந்த இத்தனை வருட பாரம் கண்ணீராக வெளியேற “ அய்யோ… எங்க பொண்ணோட வாழ்க்கைய நாங்களே நாசம் பண்ணிட்டோம்…. அழகா சிட்டுக்குருவி மாதிரி சுற்றி திரிஞ்ச, எங்க பெண்ணை…! ஒரு காமுகனுக்கு கட்டி கொடுத்து, அவ வாழ்க்கையே கெடுத்துட்டோம்….” என கதறியவரை… தேற்றக்கூட தோன்றாமல், இருவரும் சிலையாக நின்றனர்.

 

தொடரும்.

அத்தியாயம்..10

”சாதனாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது…” என்று மங்கை கூறியதை கேட்ட அபியும், வாசுவும், அதிர்ச்சியாக இருக்க… அபியின் மனதோ “ தன்னுடைய சனா பேபி இன்னொருவனுக்கு சொந்தமானவள்…” என்பதை நம்ப மறுத்தது… மனம் அதிலேயே உழன்றது. வாசுகிதான் முதலில் தன் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தார். அவர் திகைப்பில் இருந்த அபியை உலுக்கி… “ அபி வீட்ல பேசுனது மறந்திருச்சா…? சாதனா அம்மா சொன்னது… சாதனாவோட கடந்தகாலம்… புரிந்ததா..?” என கேட்க தன் அதிர்ச்சியில் இருந்து மீண்டவன், “ ஆமாம்மா… சாதனாவோட கல்யாணம் கடந்த காலம்…” அன்னையிடம் சொல்வதுபோல், தன்னை தேற்றிகொண்டான்.

இவர்கள் தங்களை தேற்றிக்கொண்டு மங்கையை பார்க்க… அவர் இன்னமும் அதே இடத்தில் நின்று அழுதுகொண்டிருந்தார். இப்பொழுது, வாசுகி… அடுப்படி சென்று அவருக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க… அதை மறுக்காமல் வாங்கி பருகியவர்…. தன்னை கொஞ்சம் தேற்றிக் கொண்டார். பின்பு அபியிடம் திரும்பி…”தம்பி கொஞ்ச நாளாவே சாதனாவோட நடவடிக்கையில, ஒரு மாற்றம் தெரியுது… முகத்துல, ஒரு மலர்ச்சி தெரியுது… அதுக்குக் காரணம் நீங்கதான்னு இப்பதான் எனக்கு புரியுது…” என்றவர் ”அவ உங்களை ஏதோ ஒரு விதத்துல நம்புறா… ”நீங்க செஞ்ச உதவி…உங்களை என் மனதும் நம்ப சொல்லுது….” என கூறியவர்… ”சாதனாவோட வாழ்கையில என்ன நடந்ததுன்னு சொல்றேன்… அதை கேட்ட பிறகும் உங்களுக்கு அதே அன்பு சாதனா மேல இருந்தால்… சாதனா ரொம்ப கொடுத்து வைத்தவள்……” என்று அவர்களின் கடந்த காலத்தை கூற ஆரம்பித்தார்.

“சாதனா ஓடாத நில்லுடி… என அவளை துரத்திக்கொண்டே மங்கை ஓடிவர… அவள் வேகமாக ஓடிவந்து, அங்கு சோபாவில் அமர்ந்திருந்த, தன் தந்தையின் மடியில் படுத்துக்கொண்டாள்…அவர் மகளின் தலையை, வாஞ்சையுடன் தடவிகொடுக்க… அதை பார்த்த மங்கை “அடிக்கழுத… உன்ன எண்ணெய் தேச்சு குளிக்க நேரமாச்சுன்னு, எழுப்பிவிட்டா மறுபடியும், உங்க அப்பா மடியிலயா படுத்து தூங்கற… உன்ன விறகு கட்டையால சாத்துனாதான் சொன்னபடி கேட்ப….” என்று மங்கை அவளை அடிப்பதற்கு எதாவ்து கிடைக்குமா..? சுற்றும் முற்றும் தேட… சாதனா “ அப்பா… பாருங்கப்பா இந்த மங்கையை, லீவு நாள்ள கூட தூங்க விடாம இம்சை பண்றாங்க… சரியான கொடுமைக்கார அம்மாவா இருக்காங்க… நம்ம வேற அம்மா வாங்கலாம்பா… இவங்க வேண்டாம்” தன் தந்தையிடம் புகார் சொல்லி செல்லம் கொஞ்சியவள் மீண்டும் தூக்கத்தை தொடர…

மங்கை அவளை ஒரு அடி அடித்து நல்ல நாள் அதுவுமா சீக்கிரம் எழுந்தோமா… குளித்தோமா… புது ட்ரெஸ் போட்டோமான்னு இல்லாம… இது என்ன பொமபளை பிள்ளைக்கு அடம்…” என்று கண்டித்தவர்… தன் கணவரிடம் திரும்பி, “அவதான் புரியாம நடந்துக்குறான்னா… நீங்களும் அப்படியே இருக்கிங்களே…!” என குறைப்பட்டார். கருணாகரன் “மங்கை இப்ப எதுக்கு இவ்வளவு கோபப்பட்ற…? அம்மு எழுந்திருச்சு, குளிச்சு புதுட்ரெஸ் போடணும் அவ்வளவுதான…” புன்னகையுடன் கூறியவர் “ நீ போய் எண்ணெய் சீயக்காய், எல்லம் எடுத்து வை… என் அம்மு இப்ப சமத்தா வருவா..” என்று அவரை அனுப்ப… மங்கை புலம்பிக்கொண்டே சென்றார். அவரின் கோபத்திலும் ஒரு நியாயம் இருந்தது..

ஏனென்றால் இன்று தீபாவளி… ஒவ்வொரு வருடமும்.. அவளை எழுப்பி எண்ணெய், தேய்த்து குளிக்க வைப்பதற்குள் போதும்.. போதும் என்றாகிவிடும். இன்றும் அதே தொடர மங்கை “எப்படியோ போங்க… அப்பாவும் பொண்ணும்” என்று சலித்தபடி கிச்சனுக்குள் சென்றார். மடியில் படுத்திருந்த சாதனாவின் தலை கோதியபடியே… அம்மு இன்னக்கு என்ன நாள்டா…?” என கேட்க “இன்னைக்கு தீபாவளிப்பா இது கூட தெரியாதா?” என்று கேட்டுவிட்டு… இப்படியே செய்ப்பா தூக்கம் கண்ணை சொக்குது…என தந்தையின் வருடலில் சுகம் காண… “அம்மு என் செல்லம் தான…? அம்மு என் பட்டுதான…? அப்பா சொன்னா கேட்பிங்கதான..? ” என அவளை கொஞ்ச.. அவள் ஒவ்வொன்றிற்கும் ஆமாம் போட்டுக்கொண்டிருந்தாள்.

தீபாவளி எதுக்கு கொண்டாடிறாங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்…” என சாதனாவிடம் கேட்க ”இன்னைக்கு கிருஷணன் நரகாசுரனை, வதம் செய்த நாள்…” அதைத்தான் எல்லாரும் தீபாவளியா கொண்டாட்றாங்கன்னு..நீங்க தானப்பா சொன்னிங்க“ என சாதனா கூற ”அதாவது கெட்டத அழிச்சு நல்லதை நிலை நிறுத்திய நாள். அப்படித்தான..? ”ம்..ம்ம்” தலையாட்டினாள்.. இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு தெரியுமா?.. என பீடிகையோட கேட்க, சாதனா தெரியாது என்பது போல தன் உதட்டை பிதுக்கினாள்.. அப்பா உங்களுக்க அந்த கதையை உங்களுக்கு சொல்லவா…? என கேட்க ஆர்வமாக தலையாட்டினாள். ”தான் இறக்கிறப்ப நரகாசுரன், கிருஷ்ணர்கிட்ட, நான் இந்த பூமில இருந்தப்போ… எத்தனையோ பேருக்கு நிறைய கஷ்டத்தை கொடுத்திருக்கிறேன்…. அதுக்கு பிராயசித்தமாக, என்னுடைய இறப்பை, அனைவரும் இந்த நாளில்… அதிகாலையிலேயே எழுந்து, தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து புத்தாடை, போட்டு… வெடி வெடிச்சு, சந்தோசமாக கொண்டாட வேண்டும்” அப்படின்னு கேட்டானாம்.. அதுக்கு கிருஷ்ணரும் அப்படியே ஆகட்டும் சொன்னாராம்…. சோ, இது நரகாசுரனோட விருப்பம் மட்டும் இல்லை… இது கிருஷணரோட கட்டளை…கடவுளோட கட்டளைய நம்ம மீறலாமா…?

மீறினா என்னாகும்…? கடவுள் நம்ம மேல கோபப்படுவார்… கடவுளுக்கு கோபம் வந்தா…என்னாகும். கடவுள் அம்முகுட்டிக்கு படிப்பு தரமாட்டார்… அதுமட்டுமில்லாம இந்த குட்டி பொண்ணு தன்னோட அம்மா பேச்ச கேட்க மாட்டிங்குது நீ பேர்ட் கேர்ள்னு சொல்லிருவார்” சோகமாக முகத்தை வைத்துகொண்டு சொல்ல.. ”என் அம்மு பேர்ட் கேர்ள் இல்லன்னு, கடவுள்கிட்ட நீங்க சண்டை போடுங்கப்பா…” என சாதனா கோபமாக கூற.. “எப்படிடா சொல்றது நீங்கதான் அம்மா பேச்ச கேட்கமாட்டிங்கறிங்களே…” என பாவமாக சொல்ல… “நான் குட் கேர்ள் அம்மா பேச்ச கேட்பேன்…” என்று கூறிக்கொண்டே தன் அன்னையை தேடி கிச்சனுக்குள் சென்றாள்… ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் சாதனா… இதை இருவரிடமும் சொல்லிகொண்டிருந்த மங்கைக்கு, இப்பொழுதும் லேசாக புன்னகை அரும்பியது… அதை கேட்டுகொண்டிருந்த அபி மற்றும் வாசுவின் முகத்திலும் புன்னகை…!

” அம்மு…என்று ஆர்ப்பாட்டத்துடன் சாதனாவை அழைத்துகொண்டே வீட்டிற்குள் நுழந்த கணவரிடம் என்னங்க என்னாச்சு…? என பதட்டத்துடன் மங்கை கேட்க… “அம்முவை கூப்பிடு மங்கை சொறேன்…” “சாது இங்க வாடா அப்பா கூப்பிட்றாங்க” என அழைத்தவர்.. சாதனா வந்தவுடன் “அம்மு நீ சாதிச்சிட்டடா… ப்ளஸ் டூ ல 700 மார்க் வாங்கிருக்கடா…” என கருணாகரன் பெருமையாக பேச.. அப்பா நான் நல்லாதான்பா படிச்சேன்.. எனக்கு அந்த மேத்ஸ் மட்டும வரவே மாட்டிங்குதுப்பா.. நான் பாஸாகிடுவேனான்னு டௌட்டாவே இருந்துச்சுப்பா… ” எபடியோ பாஸாகிட்டேன்…” என சந்தோசத்துடன் கூற… அதை கேட்ட மங்கை தன் தலையிலேயே அடித்து கொண்டார்.

ஏண்டி இதெல்லாம் ஒரு மார்க்குன்னு எடுத்திருக்க.. இதுல ரெண்டுபேத்துக்கு பெருமை வேற… நான் பயங்கர கோபத்துல இருக்கேன் ரெண்டுபேரும் இங்க இருந்து போங்க…” மங்கை கோபமாக கூற.. அவர்கள் போகாமல் அங்கேயே சிரித்து கொண்டிருப்பதை பார்த்தவர்… நீங்க போகமாட்டிங்க… நானே போறேன். என்று தன் அறைக்கு செல்ல போனவரை… வெளியிலிருந்து கேட்ட சத்தம் தடுத்து நிறுத்தியது… என்னவென்று எட்டி பார்க்க.. அங்கே உள்ளூர் பத்திரிக்கை, டிவி சேனல்கள் சாதனாவை பேட்டி எடுக்க வந்திருந்தனர். ஆம் சாதனா பன்னிரெண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே… இரண்டாவதாக வந்திருந்தாள். அவளை பேட்டி எடுக்கவே…. அவர்கள் அனைவரும் வந்திருப்பதை… அறிந்த மங்கைக்கு, அளவில்லா மகிழ்ச்சியும், அதே சமயம் தன்னிடம் விளையாடிய, தன் மகளையும் கணவரையும் நினைத்து செல்ல கோபமும் ஒருங்கே தோன்ற பேசாமல் நின்றார்.

நிருபர்கள் கேட்ட கேள்சிகளுக்கு சாதனா தெளிவாக பதில் அளிக்க.. இறுதியாக ஒரு நிருபர்… “நீங்க படிச்சு, என்னவாக போறீங்க?… என கேட்க, ”எனக்கு சிறந்த ஆடிட்டராக ஆக வேண்டும் என்பது.. எனது ஆசை, லட்சியம்.. எல்லாமே…” என கூற வந்திருந்தவர்கள் வியப்புடன்… “பொதுவா எல்லோருமே டாக்டர், இல்லைன்னா இஞ்சினீயர்.. ஐ.ஏ.எஸ் இப்படித்தான் ஆகனும்னு ஆசைப்படுவாங்க… ஆனால் நீங்க வித்தியாசமா… ஆடிட்டராக ஆக வேண்டும் சொல்றிங்க…? இதுக்கு எதாவது தனிப்பட்ட காரணம் இருக்கா…? எனக் கேட்க… ”தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை… எங்க அப்பாவுக்கு அதுதான் விருப்பம்… எங்க அப்பா விருப்பம் தான் என் விருப்பம்…” என்றவளை பெருமையுடன் பார்த்திருந்தனர் சாதனாவை பெற்றவர்கள்.

பேட்டி முடிந்து, அனைவரும் சென்றவுடன்… மங்கை கோபமாக அவர்கள் இருவரையும் முறைத்தார். கருணாகரன் மங்கையிடம் “என்ன மங்கை இதுக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டு… உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு அம்முதான் சொன்னா… இந்த ஐடியா கொடுத்ததும்… அம்முதான்… வேண்ணா அம்முக்கிட்ட கோவிச்சுக்க… நான் அப்பாவி…என்கிட்ட கோவிக்காத மங்கை… “ என அப்பாவியாக முகத்தை வைத்து… கருணாகரன் பேச, ”அப்பா…. யூ டூ ப்ரூட்டஸ்பா..” தந்தையிடம் சண்டைக்கு செல்ல தயரானாள்… மங்கை எதும் பேசாமல் கிச்சனுக்குள் செல்ல… சாதனா “ உங்களை அப்பறமா கவனிச்சுக்கிறேன். இப்ப மங்கையை சமாதானம் பண்ணிட்டு வாரேன்…” அன்னையை சமாதானப்படுத்த அவளும் உள்ளே சென்றாள்.

”அம்மா சா….ப்ப்ப் ” சாதனா சாரி கேட்க வாயை திறந்தவள்… தன் வாயில் இனிப்பாக ஏதோ திணித்த்தில் அதை சொல்ல முடியாமல் திணறினாள்… அதன் சுவையை உணர்ந்து… தன் அன்னையை இறுகக் கட்டிக்கொண்டாள். அது அவளுக்கு மிகவும் பிடித்த ரசகுல்லா… அன்னையை சந்தோச திகைப்புடன் பார்த்தவள்… “என்னடி உனக்கு மட்டும்தான் பொய் சொல்ல தெரியுமா…? ஏன் எங்களுக்கெல்லாம் வராதா…? நான் உன் அம்மாடி… எனக்கு தெரியாதா..? என் பொண்ணப் பத்தி… நீ நல்லமார்க் வாங்குவங்கிறது ஏற்கனவே எனக்கு தெரியுமே… ஸ்கூல் ஃபர்ஸ்ட், வருவேன்னு நினச்சேன்… ஆனா என் தங்கம்… மாநிலத்திலேயே ரெண்டாவதா வந்து… எங்களை பெருமை படுத்திட்டடா…” என பெருமையாக கூறி சாதனாவை அனைத்துக்கொண்டார்.

இவர்கள் பேசுவதை கிச்சன் வாசலில் கைகளை கட்டிக்கொண்டு புன்னகையுடன் பார்த்திருந்தார் கருணாகரன். அன்று சாதனாவுக்கு பிடித்த மீன்குழம்பும் செய்திருந்தார் மங்கை… மீன்குழம்பென்றால், சாதனாவிற்கு… மிகவும் இஷ்டம்… ஆனால் அதில் உள்ள முள் எடுத்து சாப்பிடுவதுதான் அவளுக்கு கஷ்டம்… அதனால் எப்பொழுது மீன் குழம்பு வைத்தாலும் தன் தந்தையிடம் தான் உணவை ஊட்டிவிடச் சொல்வாள். மங்கையும் அவளிடம் எத்தனையோ முறை…மீன் முள் எடுக்க பழகிக் கொடுத்தாலும், இல்லை அவர் ஊட்டிவிட வந்தாலும்… “போங்கம்மா அப்பா மாதிரி உங்களுக்கு பொறுமையா ஊட்ட வரமாட்டிங்குது… எப்படி இருந்தாலும் சின்ன முள்ளாவது இருக்குது” என மறுத்துவிடுவாள். ”ஆனாலும் ஒரு பொம்பளை பிள்ளைக்கு இவ்வளவு சோம்பேரித்தனம் ஆகாதுடி…” என்று ”இப்ப அப்பா முள் எடுத்து தருவாரு.. நாளைக்கு கல்யாணம் பண்ணி போனா… யார் எடுத்து தருவாங்க…? (எங்க தலைவர் அபி எதுக்கு இருகார்…?)என சாதனாவிடம் கேட்டவர்.. கணவரிடம் திரும்பி… அவதான் செல்லம் கொஞ்சரான்னா நீங்க அவளுக்கு மேல இருக்கிங்க…” என குறைபட

”விடு மங்கை அம்மு என்ன பெரிய தப்பு பண்ணிட்டா சாப்பாடு ஊட்ட சொன்னா… அதுதான.. இதுல என்ன தப்பு இருக்கு.. என்னோட அம்மு தேவதை மாதிரி அவளுக்குன்னு ஒரு ராஜகுமாரன் எங்கையாவது பிறந்திருப்பான்… அவளை தங்க தட்டில் வச்சு தாங்குவான்.. அப்படி பட்ட மாப்பிள்ளையத்தான் நான் பார்ப்பேன். நான் என்ன பார்க்கிறது… அவனே என் அம்முவ தேடி வருவான் பாரேன்..” என பெருமையாக சொல்ல…

மங்கை ”ரொம்ப கற்பனைய வளர்த்துக்காதிங்க… நம்ம பொண்ணுக்கு ராஜகுமாரன் எல்லாம் வேண்டாம்… அவளை கண்கலங்காம வச்சு பார்த்துக்கிற, சாதரண மனுசன் போதும்…” மங்க எதார்த்த்தை கூறினார்…. தாயும், தந்தையும் தன்னை பற்றிதான், பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாமல்… மீனை ஒரு கை (அவ எங்க மீனை கையில தொட்டா…) பார்த்துகொண்டிருந்தாள் நம் பட்டாம்பூச்சி…. ”சரி… சரி நம்ம பேசிட்டு இருந்ததுல சொல்ல வந்த விசயத்த மறந்திட்டேன்…? கருணாகரன் கூற… “என்னங்க என்ன விசயம்” …“என்கூட ஆஃபீஸ்ல வேலை பார்த்துட்டு இருக்காரே… கேசவன்…” “ ஆமா அவருக்கு என்ன?” அவரோட மகளுக்கு… நாளை மறுநாள்… குன்னூர்ல கல்யாணம்… கணிப்பா குடும்பத்தோட வரணும்ன்னு… ஆஃபீஸ்ல பத்திரிக்கை வச்சுட்டு போயிருக்காரு… நம்ம அம்முக்கும் லீவுதான… அப்படியே ஒரு ரெண்டுநாள்… ஊட்டி வரைக்கும் போயிட்டு வரலாமா…? கருணாகரன் கேட்க…

” ஐ…! ஊட்டிக்கு போறோமாப்பா ஜாலி….ஜாலி” என சந்தோசத்தில் குதிக்க…மங்கை அவள் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்து… “பொம்பள பிள்ளையா அடக்கமா இருக்கமாட்ட…எப்ப பார்த்தாலும் சின்ன பிள்ளைமாதிரி…” சிறிது கோபம் கொண்டு மங்கை… சாதனாவை அதட்ட, சாதனாவின் முகம் சுருங்கி விட்டது…” இப்ப எதுக்கு அம்முவ திட்டற…? அவளை கொஞ்சம் இயல்பா இருக்க விடேன்… எப்ப பார்த்தாலும் எதாவது சொல்லிக்கிட்டே இருக்க…?” மகளின் வாடிய முகத்தை பார்க்க பொறுக்காமல், மங்கையை கருணகரன் அதட்ட… சாதனாவின் முகம் உடனே மலர்ந்தது…. மங்கையிடம் ”வவ்வ…” வக்கனை காட்டியவள்… அவர் அடிக்க கையை ஓங்கியதும், சிட்டாக பறந்துவிட்டாள். அவள் செல்வதை பாசத்துடன் பார்த்து கொண்டிருந்த மங்கை ஒரு பெருமூச்சுடன் கணவரின் புறம் திரும்பி…” நான் நம்ம அம்முவ ரொம்ப கண்டிஷன் பண்றேன்னு நினைக்கிறிங்களா…?” என கேட்க அதற்கு அவர் பதில் கூறாமல், மௌனமாக இருக்க…. “நீங்க அம்முவ இன்னும் குழந்தையாதான் பார்க்கறிங்க… அதனால் அவ விளயாட்டுதனமா இருக்கிறது… உங்களுக்கு பெருசா படலை… ஆனா நான் ஒரு வயது வந்த பெண்ணோட அம்மாவா… பார்க்கிறேன். இப்ப நாட்டுல என்னென்ன நடக்குதுன்னு பார்க்கிறிங்கதான… ஒரு அஞ்சு வயசு சின்ன குழந்தைய கூட, விட்டு வைக்க மாட்டிங்கறாங்க… இதுல நம்ம அம்மு ரொம்ப விளையாட்டுத்தனமா இருக்கா… எல்லார்க்கிட்டையும் எளிதா பழகுறா…. எல்லாரையும் சீக்கிரமா நம்பிட்றா…எவ்வளவு நாள்தான் நம்ம கைக்குள்ளயே வச்சுக்க முடியும்… அவளுக்கும் வெளி உலகம் தெரிய வேண்டாமா..? அதனாலதான் நான் சில விசயங்கள்ள கண்டிப்பா இருக்கேன்… எனக்கு மட்டும் நம்ம மக மேல பாசம், அக்கறை இல்லையா என்ன… இது ஏன் உங்களுக்கு புரிய மாட்டிங்குது…? என்று ஆதங்கத்தோடு கேட்டு, கண்ணிரோடு முடித்தார்.

மங்கை கூறுவதை அமைதியாக கேட்டிருந்த கருணாகரன் அதில் உள்ள உண்மை புரிந்து “ சாரிடா மங்கை அம்முவோட முகம்… வாடிப்போனதும், என்னால தாங்க முடியலை…. அதான் அப்படி பேசிட்டேன். இனிமேல் அம்முவ நீ கண்டித்தால், நான் அதுல தலையிடமாட்டேன் போதுமா…? மனைவியை சமாதானம் செய்ய, மங்கை சம்மதமாக தலை அசைத்தார்… “ஆனா ஒரு கண்டிசன்” என்றவரிடம் மங்கை என்னவென்பதுபோல் பார்க்கவும் “அம்முவ என் கண்ணுமுன்னாடி கண்டிக்காத?” என கூற மங்கை கணவரை கொலை வெறியோடு முறைத்து பார்த்தார்… “அம்மு… அப்பாவை கூப்பிட்டியா…? இதோ வர்றேண்டா…” என்று வெற்றிகரமாக பின்வாங்கினார்… அந்த பாசமிகு தந்தை.. குன்னூர் பயணம் சாதனாவின் வாழ்க்கையே மாற்றி அமைக்க போவதும், தன் மகள் சிரிது முகம் வாடினாலே பொறுக்காதவர்.. தன் மகளின் கண்ணீருக்கும், ஆண்களிடம் தோன்றும்.. வெறுப்பிற்கும் தானே காரணம் ஆகப்போகிறோம் என்பதை அறியாமல்… மனைவி, மகளோடு சந்தோசமாக குன்னூருக்குச் சென்றார் கருணாகரன்….

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
8
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.