Loading

அன்றைய காலை பல்வேறு திருப்பங்களைத் தர விடிந்தது.

ஆண்கள் அனைவரும் ஹாலில் கூடியிருக்க அங்கு வந்த அக்ஷரா,

“சீனியர்ஸ்… இன்னிக்கி என்ன ப்ளேன்..” எனக் கேட்டாள்.

ஆதர்ஷ், “முதல்ல பைகாரா வாட்டர்ஃபால் போலாம்னு இருக்கோம் அக்ஷு… அதுக்கப்புறம் மத்த ப்ளேஸஸ் விசிட் பண்ணிட்டு நைட் ஒன்பது பத்து மணிக்கெல்லாம் இங்க வந்துருவோம்.. நீ போய் கர்ள்ஸ் எல்லாரையும் சீக்கிரம் ரெடி ஆகி கீழ வர சொல்லு..” என்க அக்ஷரா சரி என்று விட்டு சென்றாள்.

அனைவரும் தயாராகி கீழே வர சிதாரா, லாவண்யா, அக்ஷரா மட்டும் இன்னும் வராமல் இருந்தனர்.

அபினவ் ஆதர்ஷிடம், “இதுங்க இன்னும் வராம என்ன பண்ணுதுங்க.. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சி.. இப்பவே போனா தான் கரக்ட் டைம்ல எல்லாம் பாத்துட்டு வந்துர முடியும்..” என்க ஆர்யான் தான் பார்த்து விட்டு வருவதாக கூறி மேலே சென்றான்.

பிரணவ் மனதில், “ஆமா இவரு போலன்னா அவங்க கீழ வர மாட்டாங்க.. ரொம்பத்தான் பண்றான்.. எப்ப பாரு தாரா கூடவே சுத்திட்டு இருக்கான்..” என ஆர்யானை வருத்தெடுத்துக் கொண்டிருந்தான்.

மேலே அறையில், “ப்ளீஸ் சித்து.. இதுக்காக தான் வந்தியா.. ஓக்கேனு சொல்லேன்..” என அக்ஷரா சிதாராவிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அங்கு வந்த ஆர்யான்,

“என்னாச்சி கர்ள்ஸ்.. ஏன் இன்னும் கீழ வரல மூணு பேரும்..” எனக் கேட்டான்.

“நீங்களே கேளுங்கண்ணா.. இவ்வளோ கஷ்டப்பட்டு பேரன்ட்ஸ சம்மதிக்க வெச்சி டூர் வந்தா இவ என்னன்னா வர மாட்டாளாம்.. எங்கள மட்டும் போக சொல்றா..” என லாவண்யா கூற சிதாராவை கேள்வியாய் ஏறிட்டான் ஆர்யான்.

சிதாரா, “இல்லடா காலைல எந்திரிச்சத்துல இருந்து மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு… அந்த ஃபீல எப்படி சொல்லன்னு தெரியல… அதான் நான் இன்னெக்கி இங்கயே இருக்கேன்னு இவங்க ரெண்டு பேரையுப் போய்ட்டு வர சொல்லிட்டு இருந்தேன்..” என்க,

“நீ சும்மா எதையாச்சும் போட்டு மனச கொழப்பிக்காதே மினி.. எதுவும் ஆக போறதில்ல.. ஏதாச்சும்னா உனக்கு துணையா நாங்க மூணு பேரும் இருக்கோம்.. உன்னோட அண்ணனுங்க இருக்காங்க..” என ஆர்யான் அவளை சமாதானப்படுத்த,

“அதில்லடா நான்…” என சிதாரா ஏதோ கூற வர அவளைத் தடுத்தவன், “நீ எதுவும் சொல்ல வேணாம்.. ஒரு பேச்சும் இல்ல.. நீ எங்க கூட வர..” என்றதும் சிதாரா அவர்களுக்காக சம்மதித்தாள்.

சற்று நேரத்திலே அனைவரும் கிளம்பி பைகாரா நீர்வீழ்ச்சி சென்றனர்.

நீர்வீழ்ச்சியுடன் சேர்த்து சுற்றியுள்ள பசுமையான இயற்கை அழகை ரசித்தபடி ஓய்வெடுக்க சிறந்த இடம்‌.

அருகிலே போட் ஹவுஸும் ரெஸ்டூரன்ட் ஒன்றும் காணப்படும்‌.

அனைவரும் நீர்வீழ்ச்சியை சுற்றிப் பார்க்க முன்னே செல்ல கடைசியாக லாவண்யா, அக்ஷரா செல்ல அவர்களுக்குப் பின்னே சிதாராவும் ஆர்யானும் வந்தனர்.

ஆர்யான் ஏதோ கூற அதற்கு சிதாரா சிரிக்க சரியாக அவ்விடம் வந்தாள் அவர்களின் தோழிகளில் ஒருவரான மயூரி.

சிதாரா அவளை நோக்கி, “என்னாச்சு மயூ..” என்க அவள் ஏதோ கூற வருவதும் தயங்குவதுமாக இருக்க ஆர்யானும் சிதாராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆர்யான் சிதாராவைப் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தி என்ன என கேட்க அவளும் தோளைக் குலுக்கி சைகையாலே தெரியல என்றாள்.

பின் மயூரி தைரியம் வரப் பெற்றவளாக சிதாராவிடம், “சித்து நான் உன் ஃப்ரன்ட் கூட கொஞ்சம் தனியா பேசனும்..” என்க ஆர்யான் அதிர்ந்தான்.

சித்து ஆர்யானைப் பார்த்து வாயை மூடி சிரிக்க, ஆர்யான் கண்களாலே அவளிடம் வேண்டாம் எனக் கூறினான்.

சிதாராவோ மயூரியிடம், “அதுக்கென்ன மயூ.. நீ தாராளமா அவன் கூட பேசலாம்… நான் முன்னாடி போறேன்..” என்றவள் பின் ஆர்யானிடம் திரும்பி, “நீ பேசிட்டு வா ஜிராஃபி.. நல்லா டைம் எடுத்து பேசு..” என நக்கலாக கூறி விட்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்றதும் ஆர்யான் எதுவும் செய்ய முடியாமல் மயூரியைப் பார்த்து இளித்து வைத்தான்.

மயூரி, “அது வந்துங்க… நான்.. அது… நீங்க…” என சொல்லாமல் இழுக்க,

ஆர்யான் அவசரமாக, “ஒன்னும் பிரச்சினை இல்லங்க.. நீங்க நிதானமா அப்புறம் சொல்லுங்க..” என அங்கிருந்து செல்லப் பார்க்க,

“இல்ல இல்ல.. நான் சொல்ல வந்த விஷயத்த இப்பதே சொல்லிட்றேன்…” என அவனை நிறுத்தினான் மயூரி‌.

மயூரி, “ஆர்யான்.. அது வந்து.. உங்கள பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி.. உங்க ஹியுமர்சென்ஸ் என்ட் நீங்க சித்துவுக்காக கேர் பண்ற விதம் எல்லாமே என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சி.. ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யூ..” என ஆர்யானுக்கு மினி ஹார்ட் அட்டேக் ஒன்றையே ஏற்படுத்தினாள்.

அதிர்ச்சியில் வாயடைத்து நின்ற ஆர்யான் பின் மயூரியிடம்,

“மயூரி.. எனக்கு உங்க கிட்ட என்ன சொல்லன்னே புரியல… உண்மைய சொன்னா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… நேத்து நைட் கூட நீங்க என்னயே பாத்துட்டு இருந்தத்த நான் பாத்தேன்… உங்கள கல்யாணம் பண்ணிக்க குடுத்து வெச்சிருக்கனும்… எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு…” என்றான்.

ஆர்யானிடம் பேசக் கூறி விட்டு சற்று முன்னால் வந்த சிதாரா நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தாள். பின் சிறிது நேரத்தில் ஆர்யான் மற்றும் மயூரி இருந்த பக்கம் திரும்பிப் பார்க்க, மயூரி ஏதோ கூற ஆர்யான் வெட்கப்படுவதைக் கண்டவள் புன்னகைத்தாள்.

திடீரென யாரோ அவள் கரம் பற்றி இழுக்க திரும்பிப் பார்த்தவள் பிரணவ்வைக் கண்டதும் அவசரமாக கையை இழுக்க முயற்சித்தாள்.

ஆனால் பிரணவ் அவளின் கையை அழுத்திப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று யாருமற்ற மறைவான இடமொன்றில் அவளை நிறுத்தினான்.

அவன் விட்டதும் அவன் அழுத்திப் பிடித்த இடம் சிவந்திருக்க வலியில் கையைப் பிடித்துக் கொண்டு சிதாரா, “ஹவ் டேர் யூ… யாரு உங்களுக்கு என் கைய பிடிச்சு இழுத்துட்டு வர இவ்வளோ ரைட்ஸ குடுத்தது…” என ஆவேசமாகக் கேட்டு விட்டு அங்கிருந்து செல்லப் பார்க்க,

மீண்டும் அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன் விடாமலே, “ஏன் நான் பிடிச்சா மட்டும் உனக்கு வெறுப்பா இருக்கா தாரா… நான் பிடிக்காம உன் கூட வந்தானே ஒருத்தன் எப்பப்பாரு உன்னையே ஒட்டிக்கிட்டு… அவன் பிடிச்சா மட்டும் சுகமா இருக்….” என அவன் முடிக்கும் முன்னே அவன் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது சிதாராவின் கைகள்.

சிதாரா, “அவன பத்தி என்ன தெரியும்னு இவ்வளோ அசிங்கமா பேசுறாய்… அது சரி.. உன் புத்தியே இதானே.. அது எப்படி மாறும்..” என்க,

“ச…சாரி தாரா… அது உன் மேல உள்ள லவ்வுல பேசிட்டேன்… அவன் யாரு என் தாராவ தொட்டு பேசன்னு ஒரு பொசசிவ்னஸ்ல பேசிட்டேன்.. ஐம் சாரி தாரா…” என பிரணவ் அவளிடம் கெஞ்ச,

அவன் கூறியதைக் கேட்டு கத்தி சிரித்தாள் சிதாரா.

பின், “உனக்கு என் மேல லவ்வு… இதுல பொசசிவ்னஸ் வேறயாம்.. ச்சீ.. இப்படி சொல்லவே உனக்கு அசிங்கமா இல்ல… உன்ன பாத்தாவே வெறுப்பா இருக்கு..” என்றாள்.

அவள் தோள்களைப் பற்றிக் கொண்ட பிரணவ், “நீ பொய் சொல்லுற தாரா… எனக்கு தெரியும் நீ எனக்காக தான் இவ்வளவு மாறி‌ இருக்கன்னு… உனக்கு என் மேல இன்னும் லவ் இருக்கு..” என்க,

அவன் கரங்களைத் தட்டி விட்டவள் ஆவேசமாக, “இல்ல.. இல்ல… இல்ல… நான் உன்ன வெறுக்குறேன்… அடியோட வெறுக்குறேன்… உன்ன எந்தளவு காதலிச்சேனோ அத விட பல மடங்கு உன்ன நான் வெறுக்குறேன்… உன் பார்வை என் மேல படுறதயே நான் அசிங்கமா நெனக்கிறேன்…” என கத்தினாள்.

அவ்வளவு நாளும் கட்டுப்படுத்தி வைத்த கண்ணீர் அவளையும் மீறி வெளிப்பட்டது.

அவள் சத்தம் கேட்டு அனைவரும் அவ்விடம் வரப்பார்க்க அவர்களை தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறி அனுப்பிய அபினவ்வும் ஆதர்ஷும் அங்கு வந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து லாவண்யா, அக்ஷரா மற்றும் ஆர்யான் வந்தனர்.

ஆர்யான் அங்கு வந்ததுமே அவசரமாக சிதாராவிடம் சென்று, “மினி கூல்.. அமைதியா இரு.. எதா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்..” என அவளை சமாதானப்படுத்தப் பார்க்க அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளிய பிரணவ்,

“நீ யார்ரா எங்களுக்குள்ள வர… அவ என் தாரா.. அவ என்ன பத்தி என்ன வேணாலும் பேசுவா.. உனக்கென்னடா வந்தது..” என்றான்.

அக்ஷராவும் லாவண்யாவும் சிதாராவின் அழுகையை நிறுத்தப் போராட மேலும் மேலும் அவள் அழுகை அதிகமானது.

அவன் தன்னை தள்ளி விட்டதைக் கூட பொருட்படுத்தாத ஆர்யான், “ப்ளீஸ் பிரணவ்.. நீங்க என் கூட எப்ப வேணாலும் சண்ட போடுங்க… ப்ளீஸ்… இப்ப மினிய எதுவும் கேக்க வேணாம்..” எனக் கெஞ்ச,

“இவ்வளவு சொல்றேன் திரும்ப திரும்ப மினி மினின்னுட்டு வராய்… அவ என் தாரா.. எனக்கும் அவளுக்கும் இடைல ஆயிரம் இருக்கும்.. நீ யார்ரா அத பத்தி பேச..” என பிரணவ் மீண்டும் ஆர்யானை அடிக்கப் பாய, 

ஆதர்ஷும் அபினவ்வும் அவனைத் தடுக்க முன் வர அதற்குள் சிதாரா, “நிறுத்துங்க…” எனக் கத்தியதும் பிரணவ் அப்படியே நின்றான். 

பின் பிரணவ்வை நோக்கி சிதாரா வர, ஆர்யான், “மினி.. வேணாம் ப்ளீஸ்டா…” என்க அவன் முன் கை நீட்டி தடுத்தவள் தன் கண்களைத் துடைத்து கொண்டு பிரணவ்விடம் திரும்பி,

“சொல்லு.. நீ யாரு எனக்கு.. வார்த்தைக்கு வார்த்தை என் தாரா என் தாரானு சொல்லுறாய்… எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்..” என்க,

பிரணவ், “தாரா நீ ஏன் இப்படி எல்லாம் பேசுறாய்.. நான் உன்னோட பிரணவ்.. நானும் நீயும் ரெண்டு வருஷமா காதலிச்சோம்… ” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு கை தட்டி சிரித்த சிதாரா, “ஓஹ்… காதலிச்சது உண்மை தான்.. பட் நான் மட்டும் தான் காதலிச்சேன்… நீ….. ச்சீ.. சொல்லவே அசிங்கமா இருக்கு..” என்க,

“ஓக்கே தாரா… எல்லாம் விடு… இந்த நிமிஷம் நான் உன்ன லவ் பண்றேன்… எனக்கு தெரியும் நீயும் என்ன இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்காய்…” என பிரணவ் கூற,

சிதாரா, “நான் எப்படி பிரணவ் நீ சொல்றத்த நம்புவேன்.. எவ்வளவு சீப்பான ரீசன் சொல்லிட்டு விட்டுப் போனாய்…” என அவள் சொல்லி முடிக்கும் முன்னே கண்ணீர் அவள் கன்னத்தைத் தாண்டி ஓடியது.

ஆர்யான், “போதும் மினி.. இதுக்கு மேல எதுவும் சொல்லாதே.. ப்ளீஸ்…” என்றவனைத் தடுத்தவள்,

“இல்லடா.. நான் இன்னெக்கி பேசியே ஆகனும்.. எவ்வளவு நாளெக்கி தான் என் மனசுலயே எல்லாம் வெச்சிட்டு இருப்பேன்… இதுக்கு ஒரு முடிவு வேணாம்..” என்ற சிதாரா அழுதவாறே பேசினாள்.

“உன் கிட்ட அன்னெக்கி எவ்வளவு கெஞ்சினேன்… என்ன விட்டுப் போகாதேன்னு… உன் கால்ல கூட விழுந்தேன்…” என உடைந்த குரலில் கூறியவள் திடீரென பிரணவ்வின் சட்டையைப் பிடித்து,

“ஆனா நீ… என்ன வார்த்தையெல்லாம் சொன்னாய்.. இப்ப கூட அதப் பத்தி நெனச்சா…” என சொல்லும் போதே அவளுக்கு மூச்சு வாங்க அனைவரும் அவர்களின் பின்னே நின்றதால் அவர்களுக்கு அவள் முகம் தெரியவில்லை. 

பிரணவ் மாத்திரம் அவள் வேகமாக மூச்சு வாங்குவதைக் கண்டவன், தாரா என ஏதோ சொல்ல வர அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தவள், “ச்சீ… இனி என்ன அப்படி கூப்பிடாதே… உனக்கு அந்த தகுதி கூட இல்ல… உன் வாய்ல இருந்து என் பேரு வரதே அசிங்கமா நெனக்கிறேன்.. ” என்றவள்,

பின் அவன் முன் விரல் நீட்டி, “திரும்ப என் லைஃப்ல என்டர் ஆகனும்னு நெனச்ச… அசிங்கமாகிரும்… திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங்…” என்றாள்.

சிதாராவின் பேச்சிலே பிரணவ் தன் தவறு உணர்ந்திருந்தான். 

எதுவுமே கூறாது அவளைத் தடுக்க வழியற்று கண்களில் சோகத்தைத் தேக்கி கல்லாக சமைந்திருந்தான்.

சிதாரா நேராக ஆர்யானிடம் சென்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

அங்கிருந்த யாரும் எதுவுமே பேசவில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

தன் நெஞ்சு சூடாவதையும், அணிந்திருந்த டீ ஷர்ட் ஈரமாவதையும் வைத்து‌ சிதாரா அழுகிறாள் என உணர்ந்த ஆர்யான் அவனும் அவளை ஆறுதலாக அணைக்க, “இங்கிருந்து போய்றலாம் ரயன்.. என்னால முடியல…” என்க, சிதாராவின் பேச்சே அவள் எவ்வளவு மன உளைச்சலில் உள்ளாள் எனக் கூறியது.

ஏனென்றால் அவள் அதிக கவலையில் உள்ள போதோ அல்லது மன உளைச்சலில் உள்ள போதோ அல்லது அதிகம் உணர்ச்சி வசப்படும் போதோ மட்டும் தான் அவனை ரயன் என அழைப்பாள்.

மற்ற நேரமெல்லாம் ஜிராஃபி தான். இல்லாவிட்டால் பெயர் சொல்லி அழைப்பாள்.

திடீரென தன் கை பாரமாக குனிந்து சிதாராவைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

வேகமாக மூச்சு வாங்க ஆரம்பித்தவள் கொஞ்சம் கொஞ்சமாக தலையும் கையும் ஒரு பக்கம் உதர வாயில் நுரை தள்ள அவன் கைகளில் சரிந்து கொண்டிருந்தாள்.

❤️❤️❤️❤️❤️

ஆறாவது அத்தியாயம் பத்தின உங்க கருத்த தெரிவிங்க மக்களே… கீப் சப்போர்ட்டிங்… நன்றி… ☺️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.