521 views

ரஞ்சித் தன் கேபினில் இருக்க கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த ரவி, 

“அங்கிள்… நீங்க வர சொன்னதா உங்க பி.ஏ. சொன்னாரு… ஏதாவது ப்ராப்ளமா அங்கிள்..” எனக் கேட்க,

ரஞ்சித், “உட்காருப்பா… கொஞ்சம் பெரிய ப்ராப்ளம் தான்.. ஆரு கிட்ட சொன்னா அவன் வேற டென்ஷன் ஆகுவான்.. அதான் உன் கிட்ட சொன்னா நீ சால்வ் பண்ணி வைப்பன்னு தான் உன்ன வர சொன்னேன்…” என்றவர் சற்று நிறுத்தி விட்டு,

“உனக்கு தெரியுமேப்பா தொடர்ந்து நம்ம கம்பனி தான் நம்பர் வன் இடத்துல இருக்குன்னு… அடுத்ததா எஸ்.எம். கம்பனி இருக்கு… எஸ்.எம். கம்பனி ஓனர் மிஸ்டர்.ராஜசேகர் அவங்க கம்பனிய நம்பர் வன் இடத்துக்கு கொண்டு வரனும்னு ரொம்ப நாளா ட்ரை பண்ணிட்டு இருக்காரு… அது நல்ல விஷயம் தான்.. பட் அதுக்காக இப்போ அவர் தேர்ந்து எடுத்து இருக்குற வழி தான் தப்பா இருக்கு… தொடர்ந்து ரெண்டு தடவ நான் டென்டர்க்கு ஃபிக்ஸ் பண்ணி வெச்சி இருந்த அமவுன்ட்ட விட கரக்டா ஒரு ரூபா கம்மி பண்ணி அந்த டென்டர அவங்க எடுத்துக்குறாங்க.. முதல் தடவ நடக்கும் போது தற்செயலா நடக்குதுன்னு நினைச்சேன்… பட் திரும்ப இப்பவும் நடக்கும் போது தான் எனக்கு டவுட்டா இருக்கு… நம்ம கம்பனி டீட்டைல்ஸ் எல்லாம் ராஜசேகர் தெரிஞ்சி வெச்சி இருக்காரு… அவரோட ஆட்கள் தான் இந்த கம்பனில இருந்துக்கிட்டே அங்க டீட்டைல்ஸ் கொடுக்குறாங்க… நீ தான்பா அது யாருன்னு கண்டு பிடிக்கனும்… இதனால எங்களுக்கு கோடி கணக்கு லாஸ் வேற…” எனப் பிரச்சினையை விளக்கினார்.

ரஞ்சித் கூறியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ரவி, 

“அங்கிள் உங்க கம்பனி எம்பளாயிஸ் எல்லாரையும் ஒரே இடத்துக்கு கூப்பிட முடியுமா..” என்றான்.

சிறிது நேரத்திலே ரஞ்சித்தின் கட்டளைப்படி அனைவரும் மீட்டிங் ஹாலில் கூடினர்.

முதலில் அங்கு வேலை செய்யும் அனைவருமே வந்திருப்பதை உறுதி செய்து கொண்ட ரவி ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராய்ந்தான்‌.

அனைவரும் சாதாரணமாக இருக்க அவர்களில் ஒருவனின் முகம் மட்டும் பதட்டமாக இருந்தது.

ரவி ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராயும் போது அந்த ஜீவா என்றவன் மாத்திரம் மற்றவர்களின் பின்னால் தன்னை மறைத்துக் கொள்ள முயன்றான்.

ரவி, “எல்லாரும் உங்க மொபைல எடுத்து டேபிள் மேல வைங்க..” என்கவும் ஒவ்வொருவராக வைக்க பின்னால் ஒளிந்து நின்றவன் தன் மொபைலை எடுத்து மேசையில் வைக்கும் போது கரம் நடுங்கியது.

அந்த மொபைலைக் கையில் எடுத்த ரவி அதனை அவனிடம் நீட்டி, “அன்லாக் இட்..” என்கவும் நடுங்கியபடியே அன்லாக் செய்தான்.

ரவி கால் ஹிஸ்ட்ரியில் இறுதியாக இருந்த எண்ணுக்கு அழைக்க மறுபக்கம் அழைப்பை ஏற்றவன்,

“நான் கால் பண்ணாம நீயே எனக்கு கால் பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல… ” எனக் கத்தியவன்,

“சரி சீக்கிரம் சொல்லு.. என்ன விஷயம்.. அந்த ரஞ்சித் திரும்ப ஏதாவது டென்டர் வாங்க போறானா…” எனக் கேட்கவும் அழைப்பைத் துண்டித்தான் ரவி.

ஜீவாவின் சட்டைக் காலரைப் பிடித்த ரவி அவனை ரஞ்சித்தின் கேபினுக்கு இழுத்துச் சென்று நன்றாக அடித்தான்.

ரவி, “சொல்லு… யாரு உன்ன இப்படி பண்ண சொன்னது… இப்போ பேசினது ராஜசேகர் தானே..” எனக் கேட்டு இன்னும் அடிக்க,

ஜீவா வலி பொறுக்க முடியாமல், “இல்ல..‌இல்ல.. சொல்றேன் சார்….  சொல்றேன்… யாருன்னு நான் பார்த்ததில்லை…. அவரு பேரு கூட தெரியாது… ஆனா எஸ்.எம் கம்பனிக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்கன்னும் ராஜசேகருக்கு இதை பத்தி தெரியக் கூடாதுன்னும் சொன்னாரு… பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேன் சார்…‌ ப்ளீஸ்..‌ புள்ள குட்டிக்காரன் சார்.. விட்டுருங்க சார்..” எனக் கெஞ்ச ரவி போட்டு இன்னும் அடித்தான்.

ரஞ்சித், “போதும்பா ரவி.. அவன விட்டுரு… உனக்கு இந்த கம்பனில வேலை இல்ல இனி… கிளம்பு…” என ஜீவாவை விரட்டியவர்,

“என்னப்பா பண்ண போற… ராஜசேகரும் இல்ல… ஆனா யாரோ அவருக்கு ஹெல்ப் பண்றாரு…” என்க,

ரவி, “நீங்க கவலைப் பட வேணாம் அங்கிள்… அந்த ஆளோட நம்பர் என் கிட்ட இருக்கு… மத்தத நான் பாத்துக்குறேன்…” என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

_______________________________________________

நாட்கள் வேகமாகக் கடக்க சிதாரா, ஆர்யான் திருமணம் முடிந்து நியுயார்க் வந்து ஆறு மாதங்களைக் கடந்திருந்தது.

ஆர்யானின் ஒவ்வொரு செயலிலும் சிதாராவின் மனம் அவன்பால் கவரப்பட்டது.

அன்று யுனிவர்சிட்டியில் ஃப்ரீ பீரியட்டில் சிதாரா வகுப்பில் தனியே அமர்ந்தவாறு ஆர்யான் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் கையோ மேசை மீதிருந்த கொப்பியில் தன்னாலே ஏதோ கிறுக்கியது.

முதல் முறை தனக்கு வலிப்பு வந்த போது அவன் பதறியது, தனக்காக பிரணவ்விடம் கெஞ்சியது என அவனின் ஒவ்வொரு செயலையும் நினைத்து சிரித்தாள்.

அன்று ஆர்யானின் டயரியைப் படித்த பின் அவளாகவே அவனை அணைத்துக் கொண்டு படுத்தாள்.

அடுத்து வந்த நாட்களும் அவ்வாறே படுக்க முதலில் வலியில் என்று நினைத்திருந்த ஆர்யான் தொடர்ந்தும் சிதாரா அவ்வாறு நடக்கவும், 

“என்ன மினி.. கொஞ்ச நாளா வித்தியாசமா பிஹேவ் பண்ற… தனியா சிரிக்கிற… புதுசா என்ன ஹக் பண்ணிக்க வேற செய்ற..என்னாச்சு..” என சந்தேகமாகக் கேட்க,

திடீரென ஆர்யான் அவ்வாறு கேட்கவும் சமாளிப்பதற்காக சிதாரா, 

“எனக்கென்ன… நான் நல்லா தான் இருக்கேன்… ஹக்கி பிலோ இல்லாம எனக்கு தூக்கம் போகாதுன்னு உனக்கு தெரியும் தானே ஜிராஃபி.. அதான் ஆறடிக்கு மேல நீ தண்டமா வளர்ந்து இருக்காய்… அதான் உன்னயே ஹக்கி பிலோவா யூஸ் பண்ணிக்குறேன்… உனக்கு பிடிக்கலன்னா சொல்லு.. நான் நாளைக்கே வேற ஹக்கி பிலோ வாங்கிக்குறேன்..” என்க,

அவசரமாக மறுத்த ஆர்யான், “ச்சேச்சே.. அப்படி எதுவும் இல்ல மினி… நீ தாராளமா என்னைய ஹக் பண்ணிட்டு தூங்கு… எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல.. எந்த மடையன் காதலிச்சு கல்யாணம் பண்ண பொண்டாட்டியே தன்ன நெருங்கி வரும் போது வேணான்னு சொல்லுவான்..” என இறுதி வாக்கியத்தை மட்டும் தனக்குள் முனங்கினான்.

ஆனால் ஆர்யான் கூறியது சிதாராவுக்கு தெளிவாக விளங்கி விட ஆர்யான் அறியாதவாறு வாயை மூடி சிரித்தாள்.

அதன் பின் வந்த நாட்களில் ஆர்யான் தலையில் ஓடிய பிரச்சினைகளில் சிதாரா ஆர்யானையே எப்போதும் ரசிப்பதையும் அவளின் நடவடிக்கைகளில் இருந்த மாற்றத்தையும் கவனிக்கத் தவறினான்.

ஆர்யான் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவள் ஏதோ சத்தம் கேட்கவும் தன்னிலை அடைந்து தன் கொப்பியைப் பார்க்க அந்தப் பக்கம் முழுவதும் ஹார்ட் போட்டு ஆர்யானின் பெயருடன் அவளின் பெயரை எழுதி வைத்திருந்தாள்.

அதனைக் கண்டு புன்னகைத்தவள், “அப்போ நான் ஜிராஃபிய லவ் பண்றேனா…” என தன்னையே கேட்டுக் கொள்ள அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.

சிதாரா, “யப்… ஐ லவ் ஜிராஃபி… பட் அவன் தான் இன்னும் என் கிட்ட லவ் பண்றதா சொல்லவே இல்லையே… ஹ்ம்ம்ம்.. பரவாயில்ல… நாம ஃபர்ஸ்ட் சொன்னா அவனுக்கு ஷாக்கிங்ஙா இருக்கும்… எப்படி ரியாக்ட் மண்ணுவான்..” என பல விதத்தில் சிந்தித்தவளின் மனசாட்சி,

“முதல்ல அவன் கிட்ட போய் உன் லவ்வ சொல்லு… கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகுது… இப்ப தான் மேடம் லவ் பண்ணவே போறாங்களாம்…” எனக் கேலி செய்தது.

“அதுக்கென்ன… கல்யாணத்துக்கு அப்புறம் வர லவ் தான் பெஸ்ட்… இன்னைக்கு இத சொல்லி ஜிராஃபிய சர்ப்ரைஸ் பண்ணலாம்..” என்ற சிதாரா உடனே சுகயீனம் எனக் காரணம் சொல்லி விட்டு இடையிலேயே யுனிவர்சிட்டியிலிருந்து கிளம்பினாள்.

ஆர்யானுக்கு கூட தகவல் கூறவில்லை.

வீட்டை அடைந்தவள் ஏதோ நெட்டில் சேர்ச் செய்து விட்டு யாருக்கோ அழைத்து பேசி விட்டு குளிக்கச் சென்றாள்.

குளித்து முடித்து வந்தவள் கப்போர்ட்டைத் திறந்து ஆர்யான் முதல் முதலில் அவளுக்கு பரிசளித்த சேரியை எடுத்தாள்.

இளஞ்சிவப்பு நிறத்தில் அழகான கல் வேலைப்பாட்டுடன் கூடிய சில்க் சேரி.

“இது நானே சொல்லி உனக்காக ரெடி பண்ண சேரி மினி… உனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான உன் மனசுக்கு நெருக்கமா ஃபீல் பண்ற மொமன்ட்ல தான் நீ இதை வியர் பண்ணனும்…” என அதை அவளிடம் தந்த போது ஆர்யான் கூறியது ஞாபகம் வந்தது.

சிதாரா, “இந்த சேரிய போட இதை விட ஸ்பெஷலான மொமன்ட் என்ன இருக்க முடியும் ஜிராஃபி..” என்று புன்னகைத்தாள்.

அந்த சேரியை அணிந்து அளவான ஒப்பனையுடன் தயாரானவள் ஆர்யானுக்கு ஏதோ குறுஞ்செய்தியொன்றை அனுப்பி விட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள்.

_______________________________________________

பிரணவ், “இப்ப தான் ரீச் ஆனேன்… வேலை விஷயமா வெளியூர் போறதா அபினவ் கிட்ட சொல்லி இருக்கேன்… அதனால அவனுக்கு சந்தேகம் வராது… இங்க பக்கத்துல ஒரு ஹோட்டல்ல தான் தங்கி இருக்கேன்..” என அலைபேசியில் யாரிடமோ கூற,

மறுபக்கத்தில் இருந்தவன் ஏதோ கேட்கவும், “அதுக்கு தான் சான்ஸ் கிடைக்கும் வர வெய்ட் பண்றேன்… அவன் சின்னதா ஒரு தப்பு பண்ணினா போதும்… ஆள தூக்கிடலாம்…” என பிரணவ் பதிலளித்தான்.

இன்னும் ஏதோ பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தான் பிரணவ்.

_______________________________________________

அன்று ஆர்யானுக்கு ஆஃபீஸில் வேலை அதிகமாக இருந்தது.

கிடைத்த சந்தர்ப்பத்தில் மொபைலை எடுத்துப் பார்க்க சிதாராவிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதைக் காட்டியது.

அதைத் ஓப்பன் செய்து பார்க்க, “எந்த வேலையா இருந்தாலும் விட்டுட்டு இப்பவே கிளம்பி ரூஃப் கார்டன் வா ஜிராஃபி..” என்றிருக்க,

ஆர்யான், “மினி இந்த நேரம் யுனிவர்சிட்டில தானே இருக்கனும்.. எதுக்கு என்னை ரூஃப் கார்டன் வர சொல்லி இருக்கா..” என யோசித்தான்.

சிதாரா எப்போது குறுஞ்செய்தியை அனுப்பி இருக்கிறாள் எனப் பார்த்தவன் அதிர்ந்தான்.

“என்ன… ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியா… அப்போ மினி அங்க தனியா இருக்காளா… ஷிட்.. அதுக்கப்புறம் எந்த மெசேஜும் இல்ல..” எனப் பதறியவன் அவசரமாக ரூஃப் கார்டன் கிளம்பினான்.

ஆர்யான் அங்கு சென்று பார்க்க அவ்விடம் முழுவதும் பலூன்களாலும் ரோஜாக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆர்யானுக்கு எதுவுமே புரியவில்லை.

அவனைத் தவிர யாருமே அங்கு இருக்கவில்லை.

சிதாராவும் கண்ணுக்குத் தெரிய இருக்கவில்லை.

“மினி… மினி.. ” எனக் கத்திப் பார்த்தவன் பதில் வராமல் போக பயந்து சிதாராவுக்கு கால் செய்தான்.

ஒவ்வொரு ரிங்கிற்கும் அவனின் இதயம் வேகமாகத் துடித்தது.

இரண்டு முறை அழைத்தும் முழுவதுமாக ரிங் சென்று கட் ஆனது.

மீண்டும் ஒருமுறை முயற்சிக்க இம்முறை அழைப்பு ஏற்கப்பட்டது.

மறுபக்கம் எந்த சத்தமும் வராமல் போக நடுங்கும் குரலில், “மினி…” என்றான் ஆர்யான்.

மறுபக்கம்‌ யாரோ சிரிக்கும் சத்தம் கேட்கவும், “ஏ… ஏய்… யாரு நீ.. மினியோட மொபைல் உன் கிட்ட எப்படி வந்தது… மினி எங்க…” என கோவமாக ஆர்யான் கேட்க,

“என்ன ஆர்யான் நீ… இவ்வளவு அழகான பொண்டாட்டிய பக்கத்துல வெச்சிக்கிட்டு எதுவுமே செய்யாம இருந்திருக்க… ஆளு இன்னும் ஃப்ரஷ்ஷா இருக்கா…” என மறுபக்கத்தில் இருந்து பதில் வர ஆர்யான் அதிர்ந்தான்.

அதே குரல்… ஆறு மாதத்திற்கு முன் ஆர்யானுக்கு அழைத்து மிரட்டிய அதே குரல்…

மறுபக்கம், “எல்லாரும் உன்ன மாதிரி முட்டாளா இருப்பானா என்ன… பரவாயில்ல ஆர்யான்… மேரேஜ் வேணா உன் கூட நடந்திருக்கலாம்… பட் ஃபர்ஸ்ட் நைட் இப்போ என் கூட நடக்க போகுது… என் பேபி கிட்ட இருந்து வர வாசனை அப்படியே என்னை வா வான்னு அவ பக்கம் இழுக்குது… ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்… வாட் அ ஸ்ட்ரக்சர்…” என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அவனின் பேச்சில் கோவத்தில் பல்லைக் கடித்த ஆர்யான் மீண்டும் சிதாராவின் எண்ணுக்கு முயற்சிக்க ஸ்விட்ச் ஆஃப் என்று வரவும், “மினி…….” எனக் கத்தியவன் அப்படியே மடங்கி கீழே அமர்ந்தான்.

_______________________________________________

ஹோட்டலின் வீ.ஐ.பி. சூட்டில் இருந்த பஞ்சு மெத்தையில் சிதாரா மயங்கிக் கிடக்க அவளின்‌ முகத்தின் அருகில் நெருங்கியவன், “பேப்……” என்றான் கிறக்கமாக.

❤️❤️❤️❤️❤️

மீ எஸ்கேப்….🙈🙈🙈🙈

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  3 Comments

  1. Mala Saro

   Innaiku mattum tha escape agamudium… Next epi potu tha aganum… Slient reader irukalam patha vida matringaa

   1. Nuha Maryam
    Author

    😂😂Idhukahawe suspense wechi ezhudhalam pola.. Apa thane silent readers um reply pannuwanga 🙈 keep supporting ma

  2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.