Loading

மறுநாள் அழகாய் விடிய முதலில் ஆர்யான் தான் கண் முழித்தான்.

குனிந்து பார்க்க சிதாரா அவன் நெஞ்சில் தலை வைத்து ஒரு கையால் அவனை அணைத்தபடி காலையும் அவன் மீது தூக்கிப் போட்டு படுத்திருந்தாள்.

ஆர்யானுக்கு அவளைப் பார்க்க சிரிப்பாக வந்தது.

இரவு அவள் தனக்கு போட்ட சட்டம் என்ன.. இப்போது அவளே அதனை உடைத்து விட்டு தன்னை அப்பியபடி படுத்துக் கொண்டிருப்பதென்ன…

ஆர்யான் அவள்‌ முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, 

சிதாராவின் கருமணிகள் அசைவது தெரிந்ததும் அவசரமாக கண்ணை மூடிக் கொண்டான்.

கண் விழித்த சிதாரா முதலில் கண்டது தன் முகத்துக்கு மிக நெருக்கமாக இருந்த ஆர்யானின் முகத்தைத் தான்.

பதறியபடி எழுந்து அமர்ந்தவள் தலையில் அடித்தபடி,

“என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க சித்து…. நைட் பெரிய இவ மாதிரி ஜிராஃபி கிட்ட பேசிட்டு இப்போ அவன கட்டிப் பிடிச்சுக்கிட்டே தூங்கி இருக்கேன்… ஐயோ…. இவனுக்கு தெரிஞ்சா நம்மள ரொம்ப கலாய்ப்பானே…” என தனக்கே சொல்லிக் கொண்டவள் மெதுவாக ஆர்யானைப் பார்க்க அவன் இன்னும் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

இல்லை இல்லை உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தான்.

அப்போது தான் கண் விழிப்பது போல ஆர்யான் சோம்பல் முறித்தபடி எழுந்து கொள்ள,

சிதாரா எழுந்தமர்ந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன்,

“குட் மார்னிங் மினி…” என்றான் புன்னகையுடன்.

ஆர்யானுக்கு தான் அவனை அணைத்தபடி உறங்கியது தெரிந்திருக்குமோ என பதட்டமாக இருந்தவள் அவனுக்கு, “கு… குட் மார்னிங் ஜிராஃபி..” என்றாள் பதிலுக்கு.

சிதாராவின் பதட்டமான முகத்தைக் கண்டு ஆர்யானுக்கு சிரிப்பு வர அதனைக் கட்டுப்படுத்தியவன் முகத்தை சுருக்கியவாறு தன் கை கால் என தேய்க்கவும்,

“என்… என்னாச்சு ஜிராஃபி…” என அவசரமாக கேள்வி வந்தது சிதாராவிடமிருந்து.

ஆர்யான், “தெரியல மினி… அன்னைக்கு விளையாட்டுக்கு சொன்னது இன்னைக்கு நிஜமாகிடுச்சு போல… உண்மையாவே மோகினி பிசாசொன்னு என் மேல ஏறி அடிச்சு போட்டது போல இருக்கு… தூங்கும் போது கூட நெஞ்சில ஏதோ வெய்ட்டா இருந்தது போல தோணுச்சு… ரொம்ப டயர்ட்னால கண்ண தெறந்து பார்க்க முடியல…” என்கவும் சிதாரா அதிர்ந்தாள்.

சிதாரா ஆர்யானைப் பார்த்து பொய்யாக சிரித்துக் கொண்டு, “ஏதாவது கனவா இருக்கும் ஜிராஃபி… அப்படில்லாம் ஏதும் இருக்காது… சரி நான் குளிச்சிட்டு வரேன்…” என்றவள் அவசரமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவள் சென்றதும் சிரித்துக் கொண்ட ஆர்யான் எழுந்து கட்டிலின் கீழே மறைத்து வைத்திருந்த சிதாராவின் ஹக்கி பிலோவை எடுத்தவன் அதனைப் பார்த்து,

“சாரி மை டியர்… இனிமே உனக்கு இங்க வேலை இல்ல…” என்றவன் அதனைத் தூக்கி கப்போர்டுக்கு மேலே வெளியே தெரியாதவாறு மறைத்து வைத்தான்.

சிதாரா குளித்து முடித்து வெளியே வர ஆர்யான் அறையில் இருக்கவில்லை.

பின் இருவருக்கும் காலை உணவை தயாரித்து விட்டு அதனை எடுத்து டைனிங் டேபிளில் வைக்க குளித்து முடித்து ஆர்யான் வெளியே வந்தான்.

ஆர்யான், “மினி… எனக்கு ஆஃபிஸ்ல இருந்து கால் வந்திடுச்சு.. வன் மந்த் மேல லீவ் எடுத்துட்டேன்ல… கண்டிப்பா போயாகனும்.. சாரி மினி… ” என்க,

“இதுக்கு எதுக்கு ஜிராஃபி சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு… ஏதோ சிச்சுவேஷன் நம்ம கல்யாணம் நடக்க வேண்டிய கட்டாயம்… அதுக்காக நீ உன்னோட ரெகியுலர் ரௌட்டின சேன்ஜ் பண்ணனும்னு ஒன்னும் அவசியமில்ல… எப்பவும் போல இரு…” என சிதாரா கூற,

“ஓஹ்….. ஆமால…” என்று மட்டும் கூறி விட்டு அமைதியாகி விட்டான்.

சிதாரா அவனை யோசனையுடன் பார்த்தவள்,

“ஆமா கேக்கனும்னே இருந்தேன்… உன் அப்பா தான் அவ்வளவு பெரிய கம்பனி வெச்சி நடத்துறார்ல… அப்படி இருக்கும் போது நீ எதுக்கு இங்க வந்து யாரோ ஒருத்தர் கீழ வேலை பாத்து கஷ்டப்படுற…” என்க,

அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான்,

“எனக்கு க்ரேட் பிஸினஸ்மேன் ரஞ்சித்தோட பையனா இந்த உலகத்துக்கு தெரியிரத விட என் சொந்த முயற்சியால ஜெயித்து ஆர்யானா இந்த உலகத்துக்கு என்ன அறிமுகப்படுத்தனும்னு தான் ஆசை… அதுவுமில்லாம டாடோட கம்பனில வர்க் பண்றது எனக்கு பிரச்சினை இல்ல… பட் சாதாரண எம்ப்ளாயியா இருந்து அதுக்கப்புறம் முன்னேறி வரனும்னு நினைக்கிறேன்… பட் நான் அங்க சாதாரண எம்ப்ளாயியா வர்க் பண்றது டாடுக்கு பிடிக்கல… அவருக்கடுத்து நான் அந்த கம்பனிய எடுத்து நடத்தனும்னு விரும்புறாரு… அதான் எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு டாட் கூட சண்டை போட்டு அவர சம்மதிக்க வெச்சி இங்க வர்க் பண்றேன்… அதுக்கப்புறம் சொந்தமா பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண ஐடியா…” என்றான்.

தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஆர்யானின் உறுதி

 சிதாராவுக்கு பெருமையாக இருந்தது.

ஆர்யான் ஆஃபீஸ் செல்ல அவசரமாக சாப்பிட்டு முடித்தவன்,

“சரி மினி… நான் கிளம்புறேன்… நீ இன்னைக்கு ஃபுல்லா ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்னேல்ல… டார் லாக் பண்ணிக்கோ… ஏதாவதுன்னா எனக்கு உடனே கால் பண்ணு… பாய்..” என்று விட்டு சென்றான்.

ஆர்யான் சென்றதும் கதவை அடைத்து உள்ளே வந்தவள் பெருமூச்சு விட்டபடி,

“செம்ம போரா இருக்கே… இப்பதே தூங்கவும் என்னவோ போல இருக்கு… பேசாம வீட்ட கொஞ்சம் ஆர்கனைஸ் பண்ணலாம்.. ஜிராஃபிக்கும் சர்ப்ரைசா இருக்கும்…” என்றவள் வீட்டை சற்று மாற்றி அமைக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில், “முதல்ல போய் வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் கொஞ்சம் வாங்கிட்டு வரலாம்… இந்த ஜிராஃபி எதுவுமே வாங்கியில்ல… பேசிக் ஐட்டம்ஸ மட்டும் வாங்கி வெச்சி இருக்கான்… கொஞ்சம் கூட ரசனையே இல்லாதவன்… ” என்றவள் தான் வெளியே சென்று விட்டு வருவதாக ஆர்யானிடம் கூற அழைக்க, 

அவனோ ஒரு மாதத்திற்கு மேல் விடுமுறை எடுத்துக் கொண்டதால் தலைக்கு மேல் வேலை இருக்க சிதாராவின் அழைப்பைக் கவனிக்கவில்லை.

பல முறை முயன்றும் ஆர்யான் அழைப்பை ஏற்காததால் வந்து சொல்லிக் கொள்ளலாம் என நினைத்து வீட்டை மூடிக் கொண்டு வெளியேறினாள் சிதாரா.

வீட்டிற்கு மிக அருகில் இருந்த கடையொன்றுக்குத்தான் வந்திருந்தாள்.

தனக்கு மற்றும் வீட்டிற்கு என தேவையானவற்றை வாங்கியவள் அடிக்கடி பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டாள்.

யாரின் பார்வையோ தன் முதுகைத் துளைப்பது போல் ஒரு எண்ணம்.

வீட்டை நோக்கி நடந்தவள் மனதில்,

“ஏன் எனக்கு யாரோ என்ன ஃபாலோ பண்ற மாதிரியே ஃபீல் ஆகுது… ச்சீச்சீ… இருக்காது… நான் தான் சும்மா கண்டதையும் நெனச்சிட்டு இருக்கேன்… இத பத்தி ஜிராஃபி கிட்ட சொன்னா அவன் வேற டென்ஷன் ஆகுவான்…” என நினைத்தபடி வந்தவள் வீட்டை அடைந்ததும் அவசரமாக உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள்.

மனதை சமாதானப்படுத்திக் கொண்டாளும் உள்ளுணர்வு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது.

ஆனால் அது என்ன என்று தான் சிதாராவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தன்னால் முடிந்தளவு வீட்டை ஒழுங்குபடுத்தியவள் அதனை ரசித்தபடி,

“பரவால்ல சித்து… அழகா தான் இருக்கு… ஜிராஃபி வந்தா சர்ப்ரைசா இருக்கும்…” என்றவள்,

“ஓக்கே நம்ம ரூமயும் கொஞ்சம் ரீஅரேன்ஜ் பண்ணலாம்…” என்று அவர்களின் அறைக்குள் நுழைந்தாள்.

கட்டிலின் அருகே சிறிய டிராயர் ஒன்றிருப்பதை அப்போது தான் கவனித்தவள் அதனை என்னவெனத் திறந்து பார்க்க இரண்டு டயரிகள் இருந்தன.

சிதாரா, “நம்ம ஜிராஃபிக்கு டயரி எழுதுற பழக்கம் எல்லாம் இருக்கா என்ன… இது வரைக்கும் நம்ம கிட்ட சொல்லியே இல்ல… அதுவும் நான் இங்க வந்த இயர்ல இருந்து தான் இருக்கு… பாக்கலாம் என்னன்னு.. நம்ம பையன் தானே…” என புன்னகையுடன் கூறிக் கொண்டவள் முதல் டயரியை எடுத்து வாசிக்க அமர சரியாக காலிங்பெல் சத்தம் கேட்டது.

அதனை இருந்த இடத்திலே வைத்தவள் யாரெனப் பார்க்க ஆர்யான் தான் வந்திருந்தான்.

அவன் முகத்தைப் பார்க்கும் போதே மிகுந்த களைப்பாக இருக்கிறான் என சிதாராவுக்கு விளங்கியது.

உள்ளே வரும் போதே பேக்கைத் தூக்கி சோஃபாவில் போட்ட ஆர்யான், 

“செம்ம டயர்டா இருக்கு மினி… ரொம்ப வர்க்… முடியல தலைவலி வேற படுத்துது… ப்ளீஸ் மினி.. நல்ல சூடா ஒரு கப் காஃபி கிடைக்குமா…” என்க,

சிதாரா அவசரமாக அவனுக்கு காஃபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள்.

ஆர்யான் அதனைக் குடித்து முடிக்க தைலம் எடுத்து வந்தவள், “பின்னாடி சாஞ்சிக்கோ ஜிராஃபி.. நான் தைலம் தேச்சி விடுறேன்… ” என சிதாரா கூற,

ஆர்யான், “வேணாம் மினி… நீ போய் உன் வேலைய பாரு… உனக்கு நாளைக்கு யுனி போக இருக்குல்ல… நான் பாத்துக்குறேன்..” என்றான்.

சிதாரா இடுப்பில் கையூன்றி அவனை முறைக்க அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான் எதுவும் கூறாமல் பின்னால் சாய்ந்து கொண்டான்.

ஆர்யான் பின்னால் சாய்ந்து கண்ணை மூட சிதாரா தைலத்தை எடுத்து அவன் நெற்றியில் தடவி விட்டாள்.

ஆர்யானின் மனதில் பல்வேறு சிந்தனைகள் ஓடின.

_______________________________________________

ஆர்யான் ஆஃபீஸ் சென்றதும் ஒரு மாதத்திற்கான வேலைகளும் மீதமிருக்க அதனுள் மூழ்கினான்.

சில மணி நேரத்திலே அவனின் மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதனை ஏற்று காதில் வைக்க மறுபக்கம் யாரோ சத்தமாக சிரிக்கும் சத்தம்.

“இருக்குற வேலை பத்தாதுன்னு எவன்டா இது கால் பண்ணி பேய் மாதிரி சிரிச்சிட்டு இருக்கான் லூசுப் பையன்..” என நினைத்த ஆர்யான்,

“யோவ்… யாருயா நீ… கால் பண்ணினா பேசணும்… அதை விட்டுட்டு பைத்தியம் மாதிரி சிரிச்சிட்டு இருக்க… ஆல்ரெடி தலைக்கு மேல வேலை.. இதுல நீ வேற கடுப்ப கிளப்பிக்கிட்டு…” என ஏற்கனவே இருந்த களைப்பில் மறுபக்கம் இருந்தவனை வறுத்தெடுத்தான்.

மறுபக்கம், “என்ன மிஸ்டர்.ஆர்யான்… நாம தேடிட்டு இருந்தவன் செத்துட்டானே… இப்போ எப்படி வந்தது யாருன்னு கண்டுபிடிக்கிறதுன்னு டென்ஷனா இருக்குறியா என்ன…” என மீண்டும் அதே சிரிப்பு.

மறுபக்கம் இருந்தவனின் பேச்சில் அதிர்ந்த ஆர்யான்,

“ஏ…ஏய்… யாரு நீ… எதுக்காக மினிய கடத்த ட்ரை பண்ற… தைரியம் இருந்தா முன்னாடி வாடா… இப்படி கோழை மாதிரி ஒழிஞ்சி ஒழிஞ்சி சீன் காட்டுறியா… என்ன தாண்டி உன்னால மினிய ஒன்னும் பண்ண முடியாதுடா..‌” என ஆத்திரத்தில் கத்தினான்.

“ஹஹஹா… என்ன ஆர்யான் இது… நீ இப்படி பேசினா நான் உடனே முன்னாடி வருவேன்னு நினைச்சியா… நிச்சயம் உன் முன்னாடி வருவேன் ஆர்யான்… ஆனா உன்னால என்ன கண்டு பிடிக்க முடியாது… வந்து என் பேபிய தூக்குறேனா இல்லையான்னு வெய்ட் பண்ணி பாரு…” என மறுபக்கம் இருந்தவன் நக்கலாகக் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

இவ்வளவு நாளும் பிரணவ் தான் ஏதோ செய்கிறான் என ஆர்யான் நினைத்துக் கொண்டிருக்க திடீரென இப்போது யாரோ ஒருவன் அழைத்து இவ்வாறு கூறவும் அவனுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

அவனுக்கு அழைப்பு வந்த எண்ணை அனுப்பி யாரெனக் கண்டு பிடிக்கக் கூறியவன் அதற்கு மேல் வேலையில் கவனம் செல்லாம் உடனே கிளம்பினான்.

_______________________________________________

அந்த அழைப்பு பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவனின் புருவம் சுருங்க சிதாரா அதனை நீவி விட்டாள்.

பட்டென ஆர்யான் தன்‌ நெற்றி மீதிருந்த சிதாராவின் கரத்தை பிடித்து அழுத்த,

சிதாரா, “என்னாச்சு ஜிராஃபி… ஏன் டல்லா இருக்க.. இன்னும் தலைவலி குறையலயா…” எனக் கேட்டாள் கவலையாக.

கண்களை இறுக்கி மூடி தன்னை சமன்படுத்திக் கொண்ட ஆர்யான் சிதாராவின் கைகளை விடுவித்து விட்டு கண்களைத் திறந்து புன்னகையுடன்,

“எதுவும் ப்ராப்ளம் இல்ல மினி… ஹெவி வர்க்… அதான் கொஞ்சம் தலைவலி… உன்னோட காஃபிக்கும் தைலத்துக்கும் இப்போ பெட்டரா ஃபீல் பண்றேன்… ஆமா என்ன இது வீட்டுல எல்லாம் புதுசா இருக்கு… ” என்க,

சிதாரா, “அழகா இருக்குல்ல ஜிராஃபி.. நான் தான் கடைக்கு போய் எல்லாம் வாங்கிட்டு வந்து வீட்ட அரேன்ஜ் பண்ணேன்…” எனக் கண்கள் பளிச்சிடக் கூறினாள்.

ஆர்யான், “என்னது… நீ தனியா வெளிய போனியா… ஏன் என் கிட்ட சொல்லிட்டு போகல மினி… எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுன்னு சொல்லிட்டு தானே போனேன்…” என ஏற்கனவே தனக்கு வந்த அழைப்பில் பதட்டமாக இருந்தவன் கத்த சிதாராவின் முகம் வாடியது.

இதுவரை எதற்குமே தன் மீது கோவப்பட்டோ கத்தியோ இல்லாதவன் திடீரென இப்படிப் பேசவும் சிதாராவுக்கு வேதனையாக இருந்தது.

ஆனால் தான் அவனுக்கு அழைத்தும் ஆர்யான் தான் அழைப்பை ஏற்காமல் இருந்து விட்டு இப்போது தன்னைத் திட்டவும் சிதாரா,

“எதுக்கு இப்ப சும்மா கத்துற… நான் என்ன சின்ன குழந்தையா தனியா போக பயப்பட… இதுக்கு முன்னாடியும் இங்க இருக்கும் போது நான் தனியா வெளியே போவேன் தானே… நீ என்ன கல்யாணத்துக்கு அப்புறம் புதுசா சட்டம் எல்லாம் போடுற… அப்படி இருந்தும் உன் கிட்ட சொல்லிட்டு போக தான் நான் அத்தனை தடவ கால் பண்ணேன்… நீ தான் அட்டன்ட் பண்ணவே இல்ல…” என்றாள் கோவமாக.

ஆர்யான், “அப்போ இருந்த சிட்டுவேஷன் வேற மினி.. இப்ப உன்…” என பாதியில் நிறுத்த,

“எதுக்கு நிறுத்திட்ட… சொல்லு… என்ன மாறிடுச்சு இப்போ மட்டும்…” என சிதாரா அவனின் பதட்டமான முகத்தைப் பார்த்து சந்தேகத்துடன் கேட்க,

“இல்ல… மினிக்கு இது எதுவும் தெரிய வேணாம்.. அவள் வீணா டென்ஷன் ஆகிறுவா… அது அவளோட ஹெல்த்த தான் பாதிக்கும்…” என மனதில் நினைத்துக் கொண்ட ஆர்யான் சிதாராவிடம்,

“சாரி மினி… வர்க் டென்ஷன்… அதான் தேவையில்லாம உன்ன கத்திட்டேன்… விடு… நீ எவ்வளவு ஆசையா பண்ணி இருப்ப… நான் சும்மா கத்தி உன் மூடயும் கெடுத்து விட்டுட்டேன்… எனக்கு டின்னர் வேணாம்… டயர்டா இருக்கு நான் தூங்குறேன்… நீ நாளைக்கு யுனி போக தேவையானத எடுத்து வை…” என்றவன் சிதாராவின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

சிதாராவிற்கு ஆர்யானின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது.

ஆனால் அவனாக கூறாமல் தான்‌ என்ன செய்ய முடியும் என அமைதியாகி விட்டாள்.

பின் சிதாராவும் சாப்பிடாது எல்லாம் முடித்து விட்டு அறைக்கு வர ஆர்யான் கட்டிலில் சாய்ந்து கால்களை நீட்டி ஒரு கையால் முகத்தை மூடியபடி அமர்ந்திருந்தான்.

அவனைத் தொந்தரவு செய்யாமல் இரவு உடைக்கு மாறி வந்த சிதாரா ஆர்யான் இன்னும் அதே நிலையில் இருக்கவும் அவன் அருகில் சென்று அமர்ந்து,

“என்னாச்சு ஜிராஃபி… ஆஃபீஸ்ல ஏதாவது ப்ராப்ளமா… வந்ததுல இருந்து ஏதோ யோசிச்சிட்டே இருக்க…” என்க,

ஆர்யான், “சும்மா தான் மினி… எதுவும் பிராப்ளம்லாம் இல்ல…‌ நீ தூங்கு…” என்றான்.

சிதாரா அதன் பின் எதுவும் கேட்காமல் உறங்கிட சற்று நேரத்தில் கண்ணைத் திறந்து சிதாராவைப் பார்த்த ஆர்யான் அதிர்ந்தான்.

ஆர்யான் அவசரமாக அவளைத் தட்டி எழுப்பி, “மினி… இதென்ன புதுசா இருக்கு…” என்க,

அவனை முறைத்த சிதாரா, “இதை கேக்க தான் தூங்கிட்டு இருக்குற மனுஷிய கத்தி எழுப்பினியா… என்னோட ஹக்கி பிலோ..” என்றாள் கோவமாக.

அசடு வழிய சிரித்த ஆர்யான், “அதில்ல மினி… இது உன்னோட ஹக்கி பிலோ மாதிரி தெரியல… புதுசா இருக்கு… அதான் கேட்டேன்…” என்க,

“இன்னைக்கு வெளிய போனப்போ வாங்கிட்டு வந்தேன்… என்னோடத வீட்டுலயே வெச்சிட்டு வந்துட்டேன் போல… அது இல்லாம எனக்கு தூக்கம் போறதே இல்ல… மரியாதையா என்ன டிஸ்டர்ப் பண்ணாம தூங்கிடு ஜிராஃபி.. மார்னிங் நான் ஏர்லியா கிளம்பனும்…” என்றவள் தன் புதிய ஹக்கி பிலோவை அணைத்தபடி படுத்தாள்.

சில நொடி அந்த ஹக்கி பிலோவையே முறைத்த ஆர்யான், “கூடிய சீக்கிரம் உன்னயும் மேல அனுப்புறேன்…” என மனதில் சூளுரைத்துக் கொண்டு படுத்தான்.

மறுநாள் காலையிலேயே ஆர்யான் சிதாராவை யுனிவர்சிட்டியில் விட்டவன் தன்னிடம் கூறாமல் எங்கேயும் செல்லக் கூடாது… வகுப்பு முடிந்ததும் தனக்கு அழைத்து கூறி விட்டுத் தான் வீடு செல்ல வேண்டும்.. என ஏகப்பட்ட அறிவுரைகள் கூற அனைத்தையும் கேட்டு ஒரு தலையசைப்பை மட்டும் வழங்கினாள் சிதாரா.

ஆனால் அவள் மனதிலும் ஆர்யான் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என பல கேள்விகள்.  

அங்கிருந்து வீட்டுக்கு வந்த ஆர்யான் உடனடியாக தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும், “அந்த நம்பர் யாரோடதுன்னு தெரிஞ்சிதா…” என்க,

“இல்ல ஆர்யான்… அது ஒரு சேட்டலைட் மொபைல் நம்பர்… யாரோடதுன்னு கண்டுபிடிக்க முடியாது… ரொம்ப கவனமா அவன் யாருன்னு தெரிய கூடாதுன்னு இது மூலமா உன்ன கான்டேக்ட் பண்ணி இருக்கான்…” என மறுபக்கம் கூறப்பட்டதும்,

ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவன், “ஷிட்…. எல்லா பக்கத்தாலையும் நம்மள ப்ளாக் பண்ணி வெச்சிருக்கான்… ராஸ்கல்… எதுவுமே பண்ண முடியல…” என்றான்.

மறுபக்கம், “டோன்ட் வொரிடா… ஏதாவது வழில அவன் மாட்டிப்பான்… நீ பொறுமையா இரு..” என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் அவனைக் கண்டறியும் போது ஏற்கனவே அனைத்தும் கை மீறி இருக்கப் போவதை பாவம் அவர்கள் அறியவில்லை.

❤️❤️❤️❤️❤️

சாரி மக்களே.. நேத்து யூடி தர முடியல… அதுக்கு பதிலா சீக்கிரம் அடுத்த யூடியையும் தர ட்ரை பண்றேன்… மறக்காம உங்க ஆதரவ வழங்குங்க.. நன்றி… ☺️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.