650 views

 

ஈர்ப்பு 33

 

வீடு முழுவதையும் மாவிலைத் தோரணங்களும் சீரியல் பல்புகளும் அலங்கரித்திருக்க, உறவுகள் மற்றும் நட்புக்களின் கேலிப் பேச்சுக்களும், செல்ல சீண்டல்களும் அவ்விடத்தை கலகலப்பாக மாற்றியது.

 

இதோ அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எங்களின் திருமணம் நாளை நடக்கவிருக்க, இன்றோ இளையவர்களின் பிரத்யேக கொண்டாட்டமான மெஹந்தி மற்றும் சங்கீத் விழா இனிதே நடைபெற்று கொண்டிருந்தது.

 

நான் பிரவுன் லெஹெங்காவும் சந்தன நிற துப்பட்டாவும் அணிந்து மிதமான அலங்காரத்தில் அமர்ந்திருக்க, பியூட்டி பார்லரிலிருந்து வந்த பெண் எனக்கு அழகாக மெஹந்தி போட்டுக் கொண்டிருந்தாள். சுற்றி என் தோழிகள் அனைவரும் பாட்டுப் பாடி ஆடிக் கொண்டிருந்தனர்.

 

அவர்களின் மேல் என் கவனம் இருந்தாலும், மனதிற்குள் என்னவனின் நினைவே நிறைந்திருந்தது. ஆம், இன்றோடு ஒரு வாரம் ஆகிறது அவனை நேரில் பார்த்து!

 

ஒரு வாரத்திற்கு முன், ஏதோ முக்கியமான வேலை இருப்பதாக கூறி டெல்லி சென்றவன் தான், முன்தினம் இங்கு வந்தும், இன்னும் அவன் முகத்தை என்னிடம் காட்டவில்லை.

 

என் பார்வை நொடிக்கு ஒரு முறை வாசலை தொட்டு மீள்வதைக் கண்ட ப்ரியாவோ,

 

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

 

என்று நமுட்டு சிரிப்போடு பாட, அவளை முறைத்த நான் வேண்டுமென்றே,

 

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

 

என்று பாட, அதைக் கேட்ட அவள் உடனே அமைதியானாள்.

 

இப்பாடல் அபி ப்ரியாவிற்காக வைத்திருக்கும் ரிங்-டோன்!

 

இது எல்லாருக்கும் தெரிந்தது தான். அது மட்டுமல்லாமல் அபி ப்ரியாவை தனியாக சந்திக்க வேண்டுமென்றால் இப்பாடலையே ஒலிக்க விடுவான். இது எனக்கு மட்டுமே தெரிந்தது! 

 

அவர்களை கலாய்க்க வேண்டுமென்றால் இப்பாடலையே பாடுவேன்.

 

‘யாருக்கிட்ட? பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கலாம்னு பார்த்தா விட மாட்டாங்க போலயே.’ என்று புலம்பிக் கொண்டேன்.

 

அப்போது சரியாக ‘ஓ ப்ரியா ப்ரியா’ என்ற பாடல் ஒலிக்க, அனைவரும் கொல்லென சிரிக்க, நானோ சும்மா இருக்காமல், “அண்ணி, உனக்கு தான் அழைப்பு வந்துடுச்சு போல!” என்றேன்.

 

ப்ரியாவோ வேகமாக சுற்றிலும் பார்த்துவிட்டு, பெரியவர்கள் யாரும் அருகில் இல்லை என்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டாள்.

 

“ஏன் டி உனக்கு இப்படி ஒரு நல்லெண்ணம்! இந்நேரம் யாருக்காவது இது கேட்டுருந்தா? லூஸி கல்யாணப் பொண்ணு மாதிரியா இருக்க?” என்று தலையிலடித்துக் கொண்டாள்.

 

“நீ தான டி ஃபர்ஸ்ட் ஆரம்பிச்ச!” என்று நானும் பேச, “சரி சரி நாத்தனார் சண்டைய அப்பறம் போடுங்க.” என்று சாண்டி கூறிக் கொண்டிருக்க, சரியாக அப்போது ‘தியா’ என்ற அழைப்பு கேட்டது.

 

இப்போது சிரிப்பலை அவளை நோக்கி திரும்ப அவளோ சட்டென்று பேச்சை நிறுத்தினாள்.

 

நானோ அவளை விடாமல், “என்ன மேடம், ஏதோ சொல்லிட்டு இருந்தீங்களே?” என்று கூற, அவளோ இதற்கு மேல் இங்கிருந்தால் மேலும் எங்களின் கேலிக்கு ஆளாக நேரிடும் என்பதை உணர்ந்து வேகமாக வெளியில் சென்றாள்.

 

“ம்ம்ம், அப்போ கூட சத்தம் வர டைரக்ஷன்ல தான் கரெக்ட்டா போறா!” என்று நான் கூற மேலும் சிரிப்பு வலுத்தது.

 

அங்கு நின்றிருந்த ப்ரியாவை நோக்கி, “நீ மட்டும் இன்னும் ஏன் இங்க நிக்கிற? உனக்கு தான ஃபர்ஸ்ட் கால் வந்தது. இன்னும் போலையா?” என்று கேலி செய்தேன்.

 

“போடி! உன்னையெல்லாம் அடக்க ராகுலால தான் முடியும்.” என்று புலம்பிவிட்டு அபியை பார்க்க சென்றாள்.

 

‘ராகுல்’ என்ற பெயரைக் கேட்டதும், நான் மறந்துப் போன… இல்லை மறந்ததாக எண்ணிய நினைவுகள் மீண்டும் எனக்குள் எழ, நீண்ட பெருமூச்சு விட்டேன்.

 

“என்ன நதிக்கா மூச்செல்லாம் பலமா இருக்கு! யாரையாவது மிஸ் பண்றீங்களா?” என்று கூறி கிண்டல் செய்தாள் நேஹா.

 

நானோ அவளை, ‘நீயுமா’ என்று பாவமான பார்வை ஒன்றை பார்த்துவிட்டு மீண்டும் என் வேலையைத் தொடர்ந்தேன்.

 

சிறிது நேரத்தில் அந்த பெண் எனக்கு மெஹந்தி போட்டு முடிக்க, நான் என் கைகளை முகத்திற்கு நேராக நிமிர்த்தி அதனை பார்த்து மகிழ்ந்தேன். என் கைகளை இறக்க, அங்கு தன் அக்மார்க் புன்னகையோடு நின்றிருந்தான் அவன்… ராகுல்… ராகுல் கிருஷ்ணா!

 

அவனை பார்த்ததும் ஒரு நொடி ஆனந்த அதிர்ச்சியில் திளைத்ததென்னவோ உண்மை தான். ஆனால், அடுத்த நொடியே கோபம் தலைத்தூக்க அவனை முறைத்துவிட்டு, அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தேன்.

 

வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தேன். அப்போது என் நாசி உணர்ந்த பெர்ஃப்யூம் வாசனை அவன் வருவதை கட்டியம் கூற, என் இதயமோ வழக்கம் போல் மின்னல் வேகத்தில் துடிக்க, கோபம் கலந்த எதிர்பார்ப்புடன் அவனிற்கு மறுபக்கம் திரும்பி நின்றேன்.

 

அவன் வந்து ஐந்து நிமிடங்கள் ஆகியும், எதுவும் நடக்காததால், ‘என்ன இது, ஒன்னுமே நடக்கல! ஒரு வேளை அவன் வரலையோ?’ என்று குழம்பியபடி நான் திரும்ப, அங்கே நான் திரும்புவதற்காகவே காத்திருந்ததை போல் ஒரு காலை தூக்கி அங்கிருந்த மேசையில் ஊன்றி, அதில் லேசாக சாய்ந்தவாறு கைகளைக் கட்டி என்னையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

 

மெல்ல இதழ் பிரித்து, “என்ன பப்ளி இன்னும் கோபம் தீரலையா?” என்று கேட்க, என் பார்வையோ அவனிலேயே நிலைத்தது.

 

பார்வை கூர்மையானதால், செவியின் கேட்கும் திறன் குறைந்ததோ! அவன் கேட்டது என் செவி வழி உள்ளே செல்லவே இல்லை.

 

அவனோ சந்தன நிற ஷெர்வானி மற்றும் மெரூன் நிற பேண்ட்டில் ஆளை அசத்துபவனாக நின்றிருக்க, நானோ அவனை பார்த்தது பார்த்தபடி இருக்க, அவனோ புருவம் உயர்த்தி ‘என்ன’வென்று கேட்டான்.

 

‘அச்சோ இப்படி லூசு மாதிரி அவனை பார்த்துட்டு இருக்க, இப்போ நீ கோபமால இருக்கணும்!’ என்று கண்களை மூடி எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு என் கண்களை திறந்து பார்க்க, அங்கு வெகு அருகில் என்னை அவன் கண்களால் கைது செய்ய முயன்று கொண்டிருந்தான் அந்த கள்வன்!

 

மெல்ல அருகில் வந்து, என் மூக்கோடு மூக்கை உரசி, “பப்ளி, உனக்கு இந்த மூக்குக்கு மேல தான கோபம் வருது. அதை எப்படி குறைக்கிறதுன்னு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணி தெரிஞ்சுக்கலாமா? பின்னாடி ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்!” என்று அவன் கண்ணடிக்க, நானோ வெட்கத்துடன் தலை கவிழ்ந்தேன்.

 

“என் பப்ளியா இது! இந்நேரம் படபடன்னு பத்து சென்டென்ஸாவது பேசுவன்னு நினைச்சேன்.” என்று மேலும் என்னை சீண்ட, “ஹ்ம்ம் கல்யாணப் பொண்ணுல, அதான் அடக்க ஒடுக்கமா இருக்கேன்.” என்றேன் மெல்லிய குரலில்.

 

அவன் அதை கேட்டு ஆர்ப்பாட்டமாக சிரிக்க, நான் அவனிடம், “ஸ்ஸ்ஸ் எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க?” என்றேன்.

 

அவனோ, “ரொம்ப அழகா இருக்க பப்ளி!” என்றான், என்னை மேலிருந்து கீழ்வரை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டே.

 

என் கன்னத்தை இருபுறமும் பற்றி மெல்ல அவன் நெருங்கி வர, என் கைகளில் மெஹந்தி இருந்ததால், அவனை விலக்க முடியாமல், கண்களை மூடிக் கொண்டேன்.

 

அவன் மூச்சுக்காற்றை என் முகத்தில் நான் உணர்ந்த நேரம், கதவு தட்டும் சத்தத்தில் சட்டென்று விலகினோம். இருவருக்குள்ளும் ஒருவித தடுமாற்றம்… அவனே முதலில் தெளிந்து என் முகம் பார்க்க, நானோ இன்னும் வெட்கத்தில் அவனை ஏறிட்டு பார்க்க முடியாமல் நின்றேன்.

 

அவன் கதவை திறக்க செல்ல, மெல்ல நிமிர்ந்த என் கன்னத்தில் அவசரமாக முத்தத்தை பதித்துவிட்டு கதவைத் திறந்தான் அவன்.

 

வெளியே அந்த மூவர் கூட்டணி, ப்ரியா – சாண்டி – நேஹா, தங்களின் கேலியைத் துவங்கினர்… இவர்களின் சத்தம் எனக்கும் கேட்டது.

 

“என்ன ஆர்.கே உள்ள போய் இவ்ளோ நேரமாச்சு, அவளை சமாதானப் படுத்திட்டியா?” என்று ப்ரியா கேட்க, “அதை அவகிட்டயே கேட்டுக்கோ.” என்று அவன் நழுவியதும் எனக்கு தெரிந்தது.

 

‘அடப்பாவி என்ன இப்படி மாட்டிவிட்டுட்டு போய்ட்டானே! இதுங்க பார்க்குற பார்வையே சரி இல்லையே.’ என்று உள்ளுக்குக்குள் புலம்பினேன் நான்.

 

“இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. ஆனா, அதுவரைக்கும் கூட வெயிட் பண்ண முடியலையா மேடமுக்கு? அதுக்குள்ள உங்க ரொமான்ஸை ஸ்டார்ட் பண்ணிட்டீங்க?” என்றவாறே உள்ளே நுழைந்தாள் சாண்டி.

 

“அது எப்படி, இவங்க தான் ரொமான்டிக் கப்பில் ஆச்சே! நிச்சயத்தன்னைக்கே எவ்ளோ கலாய்ச்சாலும் கையை பிடிச்சுட்டே இருந்தவங்களாச்சே! இன்னைக்கு என்னென்ன நடக்கப் போகுதோ? எதையெல்லாம் நாம பார்க்க வேண்டியதிருக்குமோ!” என்றாள் ப்ரியா.

 

“ஹே அண்ணி, ஓவரா பேசாத. உன் கல்யாணத்துக்கு அந்த ரூமை விட்டு வெளிய வருவீங்களா, இல்ல அந்த ரூமுக்குள்ளேயே கல்யாணத்தை முடிச்சுருவீங்களான்னு வெயிட் பண்ணி தான் பார்க்கணும். எனக்கு ஒரு டவுட் அண்ணி, அது எப்படி எத்தன பேர் சுத்தி இருந்தாலும், அவங்க கண்ணுலயெல்லாம் மண்ணை தூவிட்டு, அந்த ரூமுக்குள்ள போய்டுற?” என்று பதிலுக்கு நானும் அவளை கலாய்த்தேன்.

 

“ஸ்ஸ்ஸ் எரும, சும்மா இரு டி.” என்றாள் அவள் வெட்கத்துடனே.

 

“ஹே, நீ தான கல்யாணப் பொண்ணு. உன்னை தான் நாங்க கலாய்க்கணும். நீ எப்படி எங்களை ஓட்டலாம்?” என்று சாண்டி கேட்க, “வாங்க மேடம், அது எப்படி,  வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு, இப்போ ஒன்னா போறது என்ன, வரது என்ன?” என்று பாரபட்சம் பார்க்காமல் அவளையும் கிண்டல் செய்ய,  “அடியேய் நீ அமைதியாவே இருக்க மாட்டியா?” என்றாள் சாண்டி.

 

“ஹ்ம்ம் அமைதியா இருந்தவளை டிஸ்டர்ப் பண்ணிட்டு, இப்போ அமைதியா இருக்க மாட்டியான்னு கேட்குறீங்க!” என்று நான் முணுமுணுக்க,

 

“நதிக்கா, இப்போ ஏதாவது சொன்னீங்களா?” என்று நேஹா சிரிப்புடன் கேட்க, “ஆனந்த்…“ என்று சத்தமாக நான் அழைத்தேன்.

 

“அச்சோ நதிக்கா, எதுக்கு இப்போ அவரை கூப்பிடுறீங்க?” என்று அவசரமாக என் வாயை பொத்தினாள்.

 

“அவனை பார்த்து இப்படி பயப்படுற?”

 

“இது பயம் இல்ல நதிக்கா.” என்றாள் சன்னக் குரலில், உதட்டில் சிரிப்புடன்.

 

“ஆஹான், பயம் இல்லைனா வேற என்ன மா?” எங்கள் மூவரின் குரலும் கேட்டதும்,  வெட்கத்தில் தலை குனிந்தாள்.

 

“இதை மட்டும் ஆனந்த் பார்த்தா ஃபிளாட் தான்!” என்று நான் கூற, சரியாக அப்போது ஆனந்தும், “என்ன நதி, கூப்பிட்டியா?” என்றபடி வர, நாங்கள் மூவரும் கேலிச் சிரிப்புடன் நேஹாவை பார்த்தோம்.

 

அவளோ குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தாள். அங்கு ஆனந்தோ அவள் மேல் பதித்த பார்வையை விலக்காமல் இருந்தான்.

 

“க்கும், கூப்பிட்டது நான். ஆனா, பார்வை மட்டும் வேற எங்கேயோ இருக்கு.” என்று நான் அவனையும் விடாமல் கலாய்க்க, “கூப்பிட்டது நீன்னாலும் வந்தது அவளுக்காக தான!” என்றாள் சாண்டி.

 

“நதி, எனக்கொரு டவுட். நீ இங்க இருந்து கூப்பிட்டதால சார் வந்தாரா, இல்ல நீ எங்க இருந்து கூப்பிட்டாலும் வருவாரா?” – ப்ரியா.

 

“எங்கயிருந்தாலும் நேஹா பக்கத்துல இருந்தா வருவாரு.” – நான்.

 

அதற்கு மேல் தாங்கதவானாக, “அம்மா மூதேவிங்களா…” என்று அவன் கூறியதும், “ஹே…” என்றோம் கோரசாக.

 

“இல்ல மூன்று தேவிங்கன்னு சொல்ல வந்தேன். கொஞ்சம் டங்க் ஸ்லிப்பாகிடுச்சு. ஆளை விடுங்க.” என்று கூறியவாறு வெளியே ஓடினான்.

 

இப்படியே கேலி, கிண்டலாக கழிந்தது அன்றைய நாள், என் அம்மா வந்து என்னை திட்டும் வரை!

 

“அடியேய் கல்யாணப் பொண்ணு மாதிரியா இருக்க?” என்று இன்னும் ஏதோ சொல்ல வர, அவரை தடுத்த நான், “ம்மா ஸ்டாப், கல்யாணப் பொண்ணுனா அடக்க ஒடுக்கமா இருக்கணும். இதை தான சொல்லப் போற. இதை கேட்டு கேட்டு எனக்கு காது தான் வலிக்குது.” என்றேன்.

 

“ப்ச், உன்னயெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு அந்த புள்ள என்ன பாடு படப்போகுதோ!” என்று அவர் புலம்ப ஆரம்பிக்க, “அண்ணி, அதெல்லாம் என் மருமக அசால்டா சமாளிச்சுடுவா.” என்றவாறே அங்கு வந்தார் சுதா அத்தை. நானும் அவரும் ஹை-ஃபை அடித்துக் கொண்டோம்.

 

இந்த இடைப்பட்ட நாட்களில் அவரிடம் நன்கு பழகி, அவரின் மகன் இல்லாத குறையைப் போக்கிக் கொண்டேன்!

 

“ம்மா, நான் சொன்ன மாதிரி உனக்கு பொறாமை தான!”

 

“போடி, அங்க போய் நல்லா இருந்தா சரி தான்.” என்றவரை அணைத்துக் கொண்டேன்.

 

*****

 

சிறிது நேரம் கழித்து….

 

‘என்ன இது யாரையுமே காணோம்!’ என்று குழம்பியவாறு வெளியே சென்றேன்.

 

அப்போது பக்கத்து அறையில், என் அண்ணன் அவனின் தன் வருங்கால மாமனாரிடம் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான்.

 

அவன் பேசி முடித்ததும், “என்ன டா அண்ணா, இப்போவே மாமனாரை காக்கா பிடிக்குறியா? என்ன அடுத்து உன் கல்யாணத்தை சீக்கிரம் நடத்தி வைக்க சொல்லப் போறீயா?” என்றபடி உள்ளே நுழைந்தேன்.

 

“ச்சேச்சே அதுக்குள்ள கல்யாணமா!”

 

“என்ன டா அண்ணா, இப்படி சொல்லிட்ட?”

 

“இப்போவே கல்யாணம் பண்ணா லைஃப யாரு என்ஜாய் பண்றது?”

 

“டேய் அண்ணா பின்னாடி அண்ணி…”

 

“என்னாது ரியாவா…” என்று அடித்துப் பிடித்து திரும்பினான்.

 

அங்கு யாரும் இல்லாததை பார்த்து அவன் என்னை முறைக்க, நானோ, “இவ்ளோ பயம் இருக்கா?” என்றேன்.

 

“ச்சே யாருக்கு பயம்!” என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத பாவனையில் அவன் கூற, “ஓஹ், அப்போ கல்யாணமானா உன்னால என்ஜாய் பண்ண முடியாது. அப்படி தான?” என்று போட்டு வாங்க முயன்றேன்.

 

“அஃப்-கோர்ஸ், கல்யாணமான ஆண்களுக்கு அவங்க ஃப்ரீடம் பறிபோறதே இந்த பொண்ணுங்களால தான. அதான் கொஞ்ச நாள் பேச்சிலர் லைஃபை நல்லா அனுபவிச்சுட்டு, அப்பறம் என் தலைல என்ன எழுதிருக்கோ…” என்று அவன் கூறி முடிக்கவில்லை, இதுவரை அவன் பின்னாலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ப்ரியா பத்ரகாளியாக அவன் முன் நின்றாள்.

 

“இனி நீ லைஃப் ஃபுல்லா பேச்சிலரா தான் என்ஜாய் பண்ணுவன்னு நினைக்கிறேன் டா அண்ணா!” என்று அங்கிருந்து நகர்ந்தேன்.

 

“ரியா பேபி, ப்ளீஸ் புரிஞ்சுக்கோ டா. அது சும்மா பேசுனது டா.”

 

“எப்படி எப்படி கல்யாணம் பண்ணா உங்க ஃப்ரீடம் பறிபோய்டுமா?”

 

“அச்சோ பேபி, அது… அது… நான் என்ன சொல்ல வந்தேனா… இந்த மாதிரி லூசுத்தனமா என் பிரெண்ட் ஒருத்தன் உளறிட்டிருந்தான். அவனை திட்டணும்னு சொல்ல வந்தேன் டா. நீ பாதியை மட்டும் கேட்டுட்ட.”

 

“ப்ச், அப்பா நம்ம கல்யாணத்தை இன்னும் த்ரீ மந்த்ஸ்ல நடத்த பிளான் பண்ணிட்டு இருக்காரு. நான் போய் ‘உங்க மாப்பிள்ளைக்கு இப்போ கல்யாணம் வேண்டாமா’ன்னு சொல்லிட்டு வரேன்.”

 

“இப்போ என்ன டி, நான் தான் அப்படி சொன்னேன். சொன்ன வாய்க்கு உன் வாயால பனிஷ்மெண்ட் கொடுக்காம சும்மா அப்பா கிட்ட சொல்ல போறேன்னு சொல்ற. இப்போ என்ன போய் சொல்லு. அப்படி சொன்னா, உங்க பொண்ணு தான் கல்யாணம்லா வேண்டாம், டைரக்ட்டா மத்ததுக்கு போய்டலாம்’ன்னு சொன்னான்னு சொல்வேன்.”

 

‘அடப்பாவி அண்ணா! இதுக்கு மேல இங்க நின்னா சென்சார் போட வேண்டியது வரும் போல. மீ எஸ்கேப்!’ என்று அங்கிருந்து ஓடினேன்.

 

‘அடுத்து யாரை பார்க்கலாம்’ என்று நான் யோசித்துக் கொண்டிருக்க, என் கண்களில் சிக்கியது, ஆனந்த் – நேஹா ஜோடி.

 

“ஹாய் ஆனந்த்.” என்று நான் கூற, “போச்சு வந்துட்டா, நான் ரொமான்ஸ் பண்ண நினைச்சா கரெக்ட்டா மூக்கு வேர்த்த மாதிரி வந்துடுறா!” என்று அவன் முணுமுணுத்தது எனக்கும் கேட்டு சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டேன். நேஹாவோ சிரித்துவிட, அவன் அவளை முறைத்தான்.

 

“என்ன ஆனந்த், என்னை தான் புகழ்ந்து பேசுற மாதிரி இருக்கு?” என்று நான் கண்களை சுருக்கியபடி வினவ, “ஆமா ஆமா நதி, உன்னை தான் ரொம்ப ‘புகழ்ந்து’ பேசிட்டு இருக்கேன்.” என்று கடுப்புடன் கூறினான் அவன்.

 

“சாருக்கு என்ன கடுப்பு?” என்று நான் வினவ, “ஹ்ம்ம், நீங்கயெல்லாம் இன்னும் ஆறு மாசத்திலயோ ஒரு வருஷத்துலயோ கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடுவீங்க. நான் மட்டும் இன்னும் மூணு வருஷம் வெயிட் பண்ணனுமா?” என்று பெருமூச்சு விட, பக்கத்தில் நின்றிருந்த நேஹாவோ, “சும்மா இருங்க க்ரிஷ்.” என்று சிணுங்கினாள்.

 

“ஓய், நான் இருக்குறப்போ இவனை ‘க்ரிஷ்’ன்னு கூப்பிடாத. வேணா அகி, அரு, கிணு – இப்படி ஏதாவது கூப்பிட்டுக்கோ.” என்று நான் நேஹாவிடம் கூறவும், “ஏன்… ஏன்… என் செல்லாக்குட்டி அப்படி தான் கூப்பிடுவா. நீ அப்படியே கூப்பிடு குட்டிமா. இப்படி பேரை சுருக்கி விளையாடுறதெல்லாம் உன் ஆளுட்ட வச்சுக்கோ. பாவம் என் செல்லத்துக்கு சொல்லி கொடுத்து அவளையும் கெடுத்துடாத.” என்றான் ஆனந்த்.

 

பின் அவன் அவளை செல்லமாக அழைத்ததை நான் கேலி செய்ய, அதற்கு அவள் வெட்கத்துடன் சென்று விட்டாள். அவள் பின்னாடியே அவனும் சென்று விட்டான்.

 

‘ஹ்ம்ம், இன்னும் ஒரு ஜோடி மிஸ்ஸிங்.’ என்று நானும் தேடிப் பார்த்தேன். பால்கனியில் சத்தம் கேட்க, அங்கு சென்றேன்.

 

“ம்ப்ச், க்ரிஷ் உங்ககிட்ட இதுவர சிக்ஸ்டி த்ரீ டைம்ஸ் சொல்லிட்டேன். நீங்க எப்போ சொல்லப் போறீங்க?” என்ற சலிப்பான குரல் சாண்டியுடையது.

 

‘இங்கயும் க்ரிஷா!’ என்று அலுத்துக் கொண்டேன்.

 

“என்ன தியா சொல்லணும்?” என்று கிருஷ்ணா வினவ, “க்கும், தெரியாத மாதிரியே கேட்குறது!” என்று நொடித்துக் கொண்டாள் சாண்டி.

 

“அதான் எனக்கு தெரியலையே, நீயே சொல்லு.” என்று அவன் ஊக்க, “ஹ்ம்ம், இது சிக்ஸ்டி ஃபோர்த் டைம். ஐ லவ்…” என்று அவள் கூறிக் கொண்டிருக்க,

 

“என்னாது சிக்ஸ்டி ஃபோர்த் டைமா?”  – உணர்ச்சி மிகுதியில் சற்று சத்தமாக சொல்லிவிட்டேன்.

 

குரல் வந்த திசையை அவர்கள் பார்க்கவும், இளித்துக் கொண்டே அவர்களிடம் சென்று, “நான் ஒட்டு கேட்கலாம் இல்ல ப்ரோ. சும்மா போயிட்டு இருக்கப்போ காத்துவாக்குல காதுல விழுந்துச்சு.” என்று ஒருவாறு சமாளித்தேன்.

 

சாண்டியை பார்த்து முறைத்துக் கொண்டே, “சிலர் எல்லாத்தையும் என்கிட்ட ஷேர் பண்ணுவேன்னு பேச்சுக்கு மட்டும் தான் சொல்றது. ஆனா லவ் ப்ரொபோஸ் பண்ணதை கூட என்கிட்ட சொல்லல.” என்றேன்.

 

“ஹே அப்படியெல்லாம் இல்ல டி…” என்று அவள் என்னை சமாதானப்படுத்த, அதை காதிலேயே வாங்காமல் அவளை சிறிது நேரம் அலைய விட்டேன்.

 

“ஹே லூஸி, அவங்களும் ரிப்ளை பண்ணிருந்தா கண்டிப்பா சொல்லிருப்பேன். ஆனா சிக்ஸ்டி த்ரீ டைம்ஸ் சொல்லி இன்னும் ஒன் டைம் கூட ரிப்ளை வரல!” என்றாள் சாண்டி சோகமாக.

 

“யாரோ இனிமே லவ் பண்ண மாட்டேன்னு வீராப்பா சொல்லிட்டு திரிஞ்சாங்க, அவங்களை எங்கேயாவது பார்த்தியா சாண்டி?” என்று கோபம் விடுத்து அவளை கேலி செய்ய, அவளோ, “போடி.”என்று சிணுங்கினாள்.

 

அங்கு எங்களை சிரிப்புடன் நோக்கிக் கொண்டிருந்த கிருஷ்ணாவிடம், “ப்ரோ என் பிரெண்டயே கரெக்ட் பண்ணிட்டீங்க, கங்கிராட்ஸ் ப்ரோ!” என்று கூறிவிட்டு சாண்டி என்னை துரத்துவதற்குள் அங்கிருந்து ஓடிவிட்டேன்.

 

சாண்டியின் வாழ்வை இனி கிருஷ்ணா பார்த்துக் கொள்வான் என்று என் மனம் மகிழ்ந்தது. அதே மகிழ்ச்சியோடு என் அறைக்கு சென்றேன்.

 

கையில் காய்ந்திருந்த மெஹந்தியை கழுவினேன். மெஹந்தி ‘டார்க் பிரவுன்’ கலரில் நன்றாக பிடித்திருந்தது.

 

“மெஹந்தி நல்லா பிடிச்சுருந்தா மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப பிடிக்குமாமே. ஹ்ம்ம், இங்கயிருந்து போய் நாலு மணி நேரமாச்சு. இன்னும் ஒரு கால் பண்ணல!” என்று நான் வாய்விட்டு புலம்பிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு வந்தது அவனிடமிருந்து.

 

“ஹலோ!”

 

“ஹே பப்ளி, மெஹந்தியை எடுத்துட்டியா?”

 

“ஹ்ம்ம், இப்போ தான் எடுத்தேன்.”

 

“ம்ம்ம் அதுக்காக தான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணி இப்போ கூப்பிட்டேன்.”

 

‘ச்சே லூஸி, இவனை போய் அவசரப்பட்டு திட்டிட்டியே!’ என்று என்னை நானே திட்டிக் கொண்டிருக்க, “என்ன பப்ளி அதுக்குள்ள என்ன திட்டி முடிச்சாச்சா?” என்றான் அவன்.

 

“ரொம்பலா திட்டல, லைட்டா இப்போ தான் திட்ட ஆரம்பிச்சேன்.” என்று நான் சிரிப்புடன் கூற, “ஓய், ஓவரா நடிக்காத. நீ யாருன்னு எனக்கு தெரியும்! சரி மெஹந்தி எப்படி பிடிச்சுருக்கு?” என்றான்.

 

“ம்ம்ம் நல்லா பிரவுன் கலர்ல இருக்கு.”

 

“அப்படியா, அப்போ எனக்கு உன்மேல் ஏகப்பட்ட லவ்வுன்னு சொல்லு!”

 

“ம்ம்ம்…”

 

“அப்போ உனக்கு என்மேல எவ்ளோ லவ்?” என்றான் கிசுகிசுப்பாக.

 

அதை கேட்டு கன்னங்கள் சிவந்தாலும், “ஹ்ம்ம், நீங்களும் மெஹந்தி போட்டுக்கோங்க. அப்போ எனக்கு உங்கமேல எவ்ளோ லவ்வுன்னு தெரியும்.” என்றேன்.

 

நாங்கள் இருவரும் எங்களின் இந்த ஒரு வார பிரிவை ஈடு செய்வதை போல் நேரம் காலம் பார்க்காமல் அன்றைய இரவை பேசிக் கொண்டே கழிக்க, எங்களின் அலைபேசிகளோ பொறுமை இழந்து உயிர்விடும் நிலைக்கு வந்த பின்பே, நேரம் கடந்ததை உணர்ந்தோம்.

 

“ஹே பப்ளி, ரொம்ப நேரம் ஆச்சு. நீ போய் தூங்கு. அப்பறம் நாளைக்கு தூங்க நேரம் இருக்காது.” என்று அவன் கூர்க், “ஏன் நேரம் இருக்காது?” ஒரு உந்துதலில் கேட்ட பின்பே, அவன் கூறியதற்கு அர்த்தம் புரிந்து வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டேன்.

 

நான் கூறியதற்கு சிரித்த அவன், “இப்படி தலைல அடிச்சு அடிச்சு தான் உள்ள எதுவுமே இல்லையோ?” என்று மீண்டும் என்னை கிண்டல் செய்ய, “ஹலோ, என்ன எனக்கு மூளையே இல்லன்னு சொல்… ஹே உங்களுக்கு எப்படி நான் தலைல அடிச்சது தெரியும்?” என்று கூறியவாறே அவன் எங்கேயாவது தென்படுகிறானா என்று தேடிக் கொண்டிருந்தேன்.

 

அவன் வீட்டில், அவன் அறையின் ஜன்னல் திறந்திருந்தது. இருட்டாக இருந்தாலும் அங்கு தெரிந்த அசைவில், அவன் தான் என்பது உறுதியானது.

 

“என்ன பப்ளி, கண்டுபிடுச்சுட்ட போல!” என்று ஹஸ்கி வாய்ஸில் கூற, “ஹே அப்போ இவ்ளோ நேரம் அங்க இருந்து பார்த்துட்டே தான் பேசுனீங்களா?” என்று சிரிப்புடனே வினவினேன் நான்.

 

“இன்னைக்கு மட்டும் இல்ல, எப்போ எல்லாம் நீ பால்கனில நின்னுட்டு இருந்தையோ, அப்போ எல்லாம் உன்னை பார்த்துட்டு தான் இருந்தேன்.” என்றான் கிசுகிசுப்பாக.

 

இரவு நேர குளிரையும் தாண்டி என் உடல் சூடானது. எதுவும் பேச தோன்றாமல், அவனிருக்கும் திசையை பார்த்துக் கொண்டே இருந்தேன்…. அவன் முழு உருவம் தெரியாவிட்டாலும், அவன் வரி வடிவம் காண்பதே போதும் என்று!

 

சிறிது நேரம் கழித்து அவன் இயல்பிற்கு மீண்டவாறு, “ஹே பப்ளி, என்ன ஃப்ரீஸ் ஆகிட்ட?” என்றான்.

 

நானோ அவன் கேட்டதற்கு சற்றும் சம்மந்தமில்லாமல், ஆனால் அவன் கேட்க துடிக்கும் ஒன்றை கூறினேன். “ஐ லவ் யூ ரணு!”

 

இப்போது அவன் அறையில் வெளிச்சம் பரவ, அவன் முகம் எனக்கு தெளிவாக தெரிய, அம்முகத்திலோ உணர்ச்சிக் குவியல்கள்!

 

“ஹே நிது, இப்போ என்ன சொன்ன? திரும்பி சொல்லு.” அவன் குரலில் அப்பட்டமான எதிர்பார்ப்பு.

 

அவனின் ‘நிது’வில் என்னை தொலைத்த நான், அவனிடம், “கோல்டன் வொர்ட்ஸ் ஆர் நாட் ரிப்பீடட்!” என்று கூறிவிட்டு உடனே அலைபேசியை அணைத்து விட்டேன்.

 

என்னதான் அலைபேசியை அணைத்து விட்டாலும், அங்கிருந்து நகர அவசரம் காட்டவில்லை நான். நின்று  நிதானமாக அவனை சைட்டடித்து விட்டே என் அறைக்கு சென்றேன்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
20
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *