Loading

 

ஈர்ப்பு 31

 

“அடேய் எல்லாம் சொல்லி முடிச்சியா இல்ல ரொமான்ஸ் பண்ணதுல மிச்சம் மீதி ஏதாவது இருக்கா?” என்று கூறியவாறே கண்ணை மூடிக்கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தான் ஆனந்த்.

 

“டேய் கண்ணை திற டா பக்கி!” என்று ராகுல் கூற, “நான் மாட்டேன் பா, நீங்க பண்ற ரொமான்ஸ்ல இந்த சின்ன பையன் கெட்டு போய்டுவேன். இதுல ரெண்டு பேரும் போட்டிப் போட்டு என்ன என் செல்லாக் குட்டி கிட்டயிருந்து என்ன பிரிக்கிறதுலயே குறியா இருக்கீங்க. அப்பறம் நீங்க பண்றதெல்லாம் பார்த்துட்டு என் மனசு கஷ்டப்படவா? நோ வே!” என்றான் ஆனந்த்.

 

“டேய் ஓவரா பண்ணாத டா, இப்போ ஒழுங்கா கண்ணை திறக்கல, நீ இன்னும் ஒரு வருஷத்துக்கு நேஹாவை பார்க்க முடியாத மாதிரி பண்ணிடுவேன்.” என்று ராகுல் கூற, “அடப்பாவி, நீயெல்லாம் ஒரு பிரெண்டா! மத்தவங்களெல்லாம் அவங்க பிரெண்டு லவ்வுக்காக என்னவெல்லாமோ பண்றாங்க. ஆனா நீ எப்படி பிரிக்கலாங்கிறதுலயே இருக்க.” என்று புலம்பினான் ஆனந்த்.

 

இவர்கள் இருவரது சம்பாஷனைகளை கேட்டு அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தேன்.

 

“நீங்க ரெண்டு பேரும் இப்படி பேசுறதை யாராவது கேட்டா, சத்தியம் பண்ணா கூட உங்க ரெண்டு பேரையும் சிபிஐ ஆபீஸர்னு யாரும் நம்ப மாட்டாங்க.” என்றேன்.

 

“ஹே நதி மா, இப்போ ஓகே வா?” என்றான் ஆனந்த்.

 

“ஹான் வந்து ஐஞ்சு நிமிஷமாச்சு, இப்போ தான் உன் கண்ணுக்கு நான் தெரியறேனோ? அதுவும் இல்லாம இந்த கடத்தல் பிளானை போட்டுக் கொடுத்ததே நீ தானாமே…” என்று கூறி ராகுலை பார்த்துக் கண்ணடித்தேன்.

 

“அடப்பாவிங்களா, இப்படி வேற இந்த தடியன் உன்கிட்ட போட்டுக் கொடுத்துருக்கானா! நதி நீ யாரை வேணும்னாலும் நம்பு, ஆனா இவனை மட்டும் நம்பாத.” என்று ஆனந்த் கூற, “அதெல்லாம் இல்ல, நான் இவனை தான் நம்புவேன்.” என்று ராகுலின் கையோடு என் கையை கோர்த்துக் கொண்டேன்.

 

“என்ன கொடுமை டா இது! இதுக்கு தான் நல்லதுக்கே காலம் இல்லன்னு சொல்றாங்க போல.” என்று அவன் புலம்பவும், நாங்கள் இருவரும் சேர்ந்து நகைத்தோம்.

 

பின் இருவரும் சற்று தீவிரமாக அந்த அமைச்சர் வழக்கை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

 

“வெளிய என்ன நடக்குது ஆனந்த்? எல்லாம் நம்ம பிளான் படி போகுதா?” என்று ராகுல் வினவ, “ம்ம்ம் ஆமா ராகுல், அவங்க இப்பவும் கன்ஃப்யூஸ்டா தான் இருக்காங்க. இன்னும் அந்த மினிஸ்டரோட ஆளுங்க கிட்ட பேசலன்னு நினைக்கிறேன். அப்படி அவங்க கான்டாக்ட் பண்ண ப்ரூஃப் மட்டும் கிடைச்சா அந்த மினிஸ்டர் இனி எப்போவுமே வெளிய வரமுடியாத மாதிரி பண்ணிடலாம்.” என்றான் ஆனந்த்.

 

“நாளைக்கே அந்த ப்ரூஃப் கிடைச்சா தான் நாளை மறுநாள் அந்த மினிஸ்டர் கோர்ட் போறதுக்கு முன்னாடி அதை எவிட்டேன்ஸா கொடுக்க முடியும்.” என்று யோசனையுடன் ராகுல் கூற, “ரெண்டு பேரும் ஏன் இவ்ளோ கவலை படுறீங்க? அதெல்லாம் நாளைக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும். சோ டோன்ட் ஒர்ரி!” என்றேன் நான்.

 

இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து மெலிதாக சிரித்துக் கொண்டனர்.

 

பின் ஆனந்த் என்னிடம், “எங்களுக்கு நல்லதா நடக்கும். ஆனா உனக்கு உன் வீட்டுல என்ன நடக்கும் தெரியுமா?” என்று அவன் கூறியதும் தான் எனக்கு என் வீட்டின் நினைவே எட்டிப் பார்த்தது.

 

மணியைப் பார்த்தால், அது ஒன்பதை தாண்டி பத்து நிமிடங்கள் ஆகின்றன என்று காட்டியது.

 

“அச்சச்சோ போச்சு இன்னைக்கு ஹிட்லர் கிட்ட நல்லா மாட்டினேன்.” என்று நான் புலம்ப ஆரம்பிக்க, “எதுக்கு டா இப்போ அவளை பயமுறுத்துற?” என்று ராகுல் ஆனந்திடம் கேட்டான்.

 

“க்கும், என்னை உன் ஆளு எவ்ளோ ஓட்டுன்னா, அப்போலாம் வாயை திறக்காம… இப்போ வந்து ஏன்னு கேட்குறியா?” என்று ஆனந்த் அங்கலாய்த்தான்.

 

இவை எதுவும் என் காதில் விழவில்லை. என் வீட்டை பற்றிய பயமே முதன்மையாக தோன்றியது.

 

“ஹே பப்ளி, இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற? அவன் சும்மா சொல்றான். உங்க வீட்டுல இங்க நடந்ததை ஓரளவுக்கு உண்மையும் பொய்யும் கலந்து சொல்லியாச்சு. இப்போ கூட நீ சேஃப்பா இருக்கன்னும், உன்னை கூட்டிட்டு வரேன்னும் சொல்லிட்டு தான் ஆனந்த் வந்துருக்கான்.” என்று அவன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் என் பயம் போகவில்லை…

 

பின் அவன், “உன் மிஸ்டர். பெர்ஃபெக்ட்டை நம்ப மாட்டியா?” என்று அவன் கேட்க, சட்டென்று அவனை பார்த்தேன் நான். அதிசயமாக அவ்வளவு நேரம் இருந்த பயம், பதட்டம் அனைத்தும் குறைவது போல இருந்தது.

 

நான் ஒரு பெருமூச்சு விட்டு என்னை இயல்பிற்கு கொண்டு வந்தேன். பின் ராகுலை பார்த்து தலையசைத்து கிளம்பலாம் என்று சைகையில் கூறினேன்.

 

நாங்கள் இருவரும் எழுந்து வெளியே செல்ல எத்தனித்த போது தான், எதிரில் இருந்த ஆனந்தை பார்த்தோம். அவனோ வாயை கைகளால் மூடி இருந்தான்.

 

“இப்போ எதுக்கு டா இப்படி வாய மூடி இருக்க?” என்று ராகுல் வினவ, “ஹ்ம்ம், இந்த ரணகளத்துலையும் உங்களுக்கு கிளுக்கிளுப்பு கேட்குது!” என்று அவன் கூறவும், ராகுல் அவனை துரத்த அதை பார்த்து நான் சிரிக்க என்று என் மனநிலையை மாற்றியே என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் இருவரும்.

 

வீட்டிற்கு சென்றவுடன் அங்கிருந்த சூழ்நிலையே அவர்களின் மனநிலையை உணர்த்தியது. நான் உள்ளே நுழைந்ததும் என் அம்மா என்னை கட்டிக்கொண்டு அழுதார். என் அப்பாவோ இறுகிப்போய் இருந்தார். அபி அம்மாவை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

 

நானும் என் அம்மாவிடம், “எனக்கு ஒன்னும் இல்ல, நல்லா தான் இருக்கேன்.”’ என்று கூறிக் கொண்டிருந்தேன்.

 

அவரோ கைகளால் என்னை தடவி அதை உணர்ந்து கொள்ள முயன்றார். நான் என்ன தான் நன்றாக இருப்பதாக கூறினாலும் தாயின் மனம் அதை உணர்ந்தால் மட்டுமே திருப்தியடையும் என்று புரிந்ததால் அவரின் கைகளில் என்னை ஒப்படைத்து அமைதியாக நின்றிருந்தேன்.

 

என் அப்பாவோ ராகுலிடம் சென்று, “என் பொண்ணை இந்த இக்கட்டான சூழ்நிலைல இருந்து காப்பாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.” என்றார்.

 

“அங்கிள், இன்னும் அந்த மினிஸ்டர் கேஸ்ல ஃபைனல் ஜட்ஜ்மெண்ட் வரல. அது வரவரைக்கும் உங்க பொண்ணு பத்திரமா தான் பார்த்துக்கணும். ஐ வில் ஹாண்டில் இட். நீங்க கவலை படாதீங்க.” என்றான் ராகுல்.

 

“ஒரு போலீஸா நீங்க உங்க கடமை… அதாவது என் பொண்ணோட பாதுகாப்பை யோசிக்கிறது ஓகே. ஆனா, வேற எந்த காரணத்துக்காகவும் என் பொண்ணோட உங்களை சேர்த்து வச்சு பார்க்க எனக்கு விருப்பமில்ல. நீங்க புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்.” என்று கூறி ராகுலை வழியனுப்பி வைத்தார்.

 

அவர் அப்படி சொன்னதும், அவருக்கு எங்கள் இருவரின் காதல் தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது.

 

ராகுல் செல்லும்போது என்னை பார்க்க, நான் அவனிடம் ‘சாரி’ என்று உதட்டைசைக்க, அவனோ தான் பார்த்துக் கொள்வதாய் தலையசைத்து சென்றான்.

 

“ப்பா அது…” என்று செல்வதற்குள் என் அப்பா, “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். எல்லாம் எனக்குத் தெரியும்.” என்று என்னை திட்டிவிட்டு, “பொண்ணு காலைல எழுந்து எங்க போறா, யாரு கூட போறான்னு கூட தெரிஞ்சுக்காம நீயெல்லாம் வீட்டுல என்ன பண்ற?” என்று என் அம்மாவையும் திட்டினார்.

 

“ஏன் டி எங்க மானத்தை வாங்கணும்னே இருக்கீயா, இதுக்கு தான் காலைல வேகவேகமா கிளம்பி போறீயா? எல்லாம் என்னை சொல்லணும், நீ எங்க போற, என்ன பண்றன்னு உன்னை கேட்காம, உனக்கு ப்ரைவசி கொடுத்தா அதை இப்படி தான் மிஸ்யூஸ் பண்ணுவியா?” என்று என் அம்மா புலம்ப ஆரம்பிக்க, என் அப்பாவோ வேறு எதுவும் சொல்லாமல் அவரின் அறைக்குச் சென்று விட்டார்.

 

மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்த என் மனநிலை முற்றிலுமாக மாறியிருந்தது. எப்படி என் அப்பாவின் சம்மதத்தைப் பெறுவது என்ற தீவிர ஆலோசனைக்கு அப்போதே தள்ளப்பட்டேன்.

 

“எப்படி டி உனக்கு தைரியம் வந்துச்சு லவ் பண்ண…” என்று என் அம்மாவோ என்னை யோசிக்க விடாமல் திட்டிக் கொண்டே இருக்க, “ம்ச் ம்மா, அப்பா போய் ரொம்ப நேரமாச்சு. உன் நடிப்பை கொஞ்சம் ஸ்டாப் பண்ணு.” என்று எரிச்சலாக கூறினேன்.

 

“ஹப்பா, ஒரு வழியா அந்த மனுஷன் ரூமுக்குள்ள போய்ட்டாரா? அவரு போறதுக்குள்ள நான் எவ்ளோ கஷ்டப்பட வேண்டியதாயிருக்கு. ஆமா நீ எப்படி டி என் நடிப்பை கண்டுபிடிச்ச?” எந்தது அவர் ஆர்வமாக வினவ, நானும் அபியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தோம்… 

 

பின் நான், “ம்ம்ம், உன் நடிப்பு தாங்க முடியாம தான் அப்பாவே உள்ள போயிருப்பாரு.” என்றேன்.

 

“உனக்கு பொறாமை டி!” என்று அவர் கூற, “ஆமா ஆமா உன் நடிப்புக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுக்க பிளான் பண்ணிருக்காங்க, அதை பார்த்து நான் பொறாமை படுறேன்!” என்று நொடித்துக் கொண்டேன்.

 

“விடு டி, ஆமா ராகுல் உன்னை உண்மைலேயே லவ் பண்றானா?” என்று ஆச்சரியமாக அவர் வினவ, “ம்மா, ஏன் இப்படி கேட்குற?” என்று பதட்டமானேன்.

 

“இல்ல டி, ராகுலுக்கு இருக்க அறிவுக்கும், அழகுக்கும், பதவிக்கும் உன்னை போய் லவ் பண்றானே!”

 

“ஹ்ம்ம், அதை உன் ராகுல் தொம்பி கிட்டயே கேட்க வேண்டியது தான!” என்று எரிச்சலாக முணுமுணுத்துவிட்டு அறைக்கு சென்றேன்.

 

அறைக்கு சென்ற பத்து நிமிடத்திலேயே கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் ஷீலா. அவள் முகம் வாடியிருந்தது.

 

“நதி ரொம்ப சாரி, உனக்கு எங்களால ரொம்ப கஷ்டம்ல. ஃபர்ஸ்ட் என்னால, இப்போ அப்பானால.” என்றாள் வருந்தியபடி.

 

“ஹே அதெல்லாம் ஒன்னும் இல்ல, நீயேன் தேவையில்லாததுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்கு. இந்த டைம்ல இப்படி ஃபீல் பண்ணாம, எனக்கு எப்படி மருமகனையோ இல்ல மருமகளையோ பெத்துத் தரப்போறங்கிறத யோசி.” என்று அவளின் எண்ணத்தை அவள் வயிற்றில் வளரும் குழந்தையை காரணம் காட்டி திசை திருப்பினேன். அது நன்றாகவே வேலை செய்தது.

 

அவளிடம் சிறிது நேரம் பேசி, அவளின் குற்ற உணர்வை சற்று போக்கிய பின்னரே அவளை அவளின் அறைக்கு அனுப்பி வைத்தேன்.

 

இதே எண்ணங்களில் உழன்றபடி இருந்தததால், இரவு உறக்கம் வராமல் என் கட்டிலில் பிரண்டு கொண்டிருந்தேன். எப்படி என் அப்பாவை சம்மதிக்க வைப்பது என்ற யோசனையே எனக்குள் வியாபித்திருந்தது.  அப்போது என் அலைப்பேசியின் சத்தம் என் கவனத்தை ஈர்த்தது.

 

ராகுல் தான் மெசேஜ் பண்ணியிருந்தான். 

 

ஆர்.கே : பப்ளி, எதையும் நினைக்காம தூங்கு. எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். 

 

நான் : ம்ம்ம்…

 

ஆர்.கே : இன்னும் ரெண்டு நாள் அந்த கேஸ் விஷயமா கொஞ்சம் பிஸியா இருப்பேன். சோ, சாட் பண்ண முடியாது. ஏதாவது இம்போர்டண்ட் மேட்டரா இருந்தா ஆனந்துக்கு கால் பண்ணு.

 

நான் : ம்ம்ம்…

 

ஆர்.கே : பப்ளி அப்படியே என்னை நினைச்சுட்டே தூங்கு. ட்ரீம்லயாச்சும் எனக்கு ஹக், கிஸ் கொடு!

 

நான் : ம்ம்ம்…

 

என் கவனமோ வேறு எங்கோ இருந்ததால், அவனின் செய்திகளை சரியாக வாசிக்காமல் பதில் அனுப்பிக் கொண்டிருந்தேன். அப்போது வந்த அழைப்பில் முழுதாக என்னை மீட்டேன். நான் அனுப்பிய விடைகளை பார்த்து தலையிலடித்துக் கொண்டேன்.

 

‘லூஸி, இப்படியா மெசேஜ் பண்ணுவ? சும்மாவே அவன் ஓட்டுவான். நீ அவனுக்கு எக்ஸ்ட்ரா ரீசன் வேற கொடுத்துருக்க!’ என்று வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டேன்.

 

அழைப்பு ஒரு முறை நின்று பின் மீண்டும் ஒலித்தது.

 

‘அச்சோ இவன் வேற திருப்பி திருப்பி கால் பண்றானே! இப்போ எடுத்தா ரொம்ப ஓட்டுவான். எடுக்கலைனா அதுக்கும் ஏதாவது சொல்வான்!’ என்று நான் மனதிற்குள் புலம்ப, இந்த முறை அழைப்பு நின்று, செய்தி வந்தது.

 

ஆர்.கே : இப்போ நீ கால் அட்டெண்ட் பண்ணலைனா நேர்ல வருவேன்.

 

‘என்னாது நேர்ல வருவானா அதுக்கு போன் காலே பெட்டர்!’

 

அடுத்த அழைப்பில் முதல் ரிங்கிலேயே எடுத்துவிட்டேன்.

 

“இதை முதலேயே செஞ்சுருக்கலாம் பப்ளி.” என்று அழைப்பை ஏற்றவுடன் அவன் குரல் என் செவியில் விழுந்தது.

 

“ம்ம்ம்…” என்று அப்போதும் ‘ம்ம்ம்’ கொட்டினேன்.

 

“என்னாச்சு உனக்கு? ஏன் ரெஸ்ட்லெஸா இருக்க?”

 

“பயமா இருக்கு ராக்கி!” அவனின் பெயரை சொல்லிக் கூப்பிட்டதை கூட உணரவில்லை நான்.

 

“ஹே பப்ளி, இப்போ என்னனு கூப்பிட்ட?”

 

“ஹான், என்னன்னு கூப்பிட்டேன்… ராக்..கி… ஸ்ஸ்ஸ்…” என்று நாக்கை கடித்துக் கொண்டேன்.

 

“ஃபர்ஸ்ட் ஹல்க், இப்போ ராக்கியா?” என்று அவன் கேலியாக வினவ, “அது… ராகுல் கிருஷ்ணா – ரொம்பபப நீளமா இருக்கு… அதான்! என்று இழுத்தேன்.

 

“நீ சொன்ன ‘ஹல்க்’க்குகே இன்னும் ரீசன் கண்டுபிடிக்கல!” என்று அவன் பெருமூச்சு விட, சட்டென்று குறும்பு எண்ணம் தலை தூக்க, “ஹ்ம்ம், நாளைக்குள்ள கண்டுபிடிச்சா தான் நீங்க கேட்டது கிடைக்கும்.” என்றேன்.

 

“நானே அந்த நினைப்பு இல்லாம இருந்தாலும் நீ விட மாட்ட போலயிருக்கு!” என்று சிரிப்புடன் அவன் கூற, ‘ஸ்ஸ்ஸ் சும்மா இருந்தவன டெம்ப்ட் பண்ணிட்டயே!’ என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டு, “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.” என்று சமாளிக்க முயன்றேன்.

 

இப்படியே பத்து நிமிடங்கள் பேசினோம். “என்ன பப்ளி, இப்போ நீ ஓகேவா?” என்று கேட்டான்.

 

‘பார்றா, என் ஆளு என் மூடை மாத்துறதுக்காக தான் இந்த நேரத்துல போன் பண்ணிருக்கானா? ஹ்ம்ம், யூ ஆர் ஆல்வேஸ் ஸ்வீட் ரகு!’ என்று மனதிற்குள் மற்றொரு செல்லப்பெயருடன் கொஞ்சிக் கொண்டேன்.

 

“ம்ம்ம் ஓகே ஓகே.” என்று அதே நினைவில் நான் கூற, “என்ன மேடம், ஓகேயே ஒரு மாதிரி சொல்ற?” என்றான் அவன்.

 

‘இதுக்கு மேல பேசுனா நானே ஏடாகூடமா ஏதாவது பேசிடுவேன் போல. ஃபர்ஸட் காலை கட் பண்ணனும்.’ என்று எண்ணிய நான்,  “எனக்கு தூக்கம் வருது. பை… குட் நைட்… ஸ்வீட் ட்ரீம்ஸ்…” என்று வேகவேகமாக ஒப்பித்தேன்.

 

“குட் நைட் பப்ளி, உனக்கு இந்த ‘ஹல்க்’  ட்ரீம்ஸ் தான்!” என்று சிரித்தவாறு அழைப்பை துண்டித்தான்.

 

“க்கும், ஆச தான்!” என்று அலைபேசியை பார்த்தவாறு முனகினேன்.

 

*****

 

அடுத்த இரு நாட்கள் வேகமாக கழிந்தன. அவன் கூறியதை போல அந்த இரு நாட்களும் அவன் என்னிடம் பேசவில்லை. வேலை காரணமாதலால் நான் எதுவும் கண்டுகொள்ளவில்லை.

 

அந்த இரண்டு நாட்களும் என் அப்பாவும் என்னிடம் பேசவில்லை. அவர் இறுகியே இருந்தார். அதனால் எனக்கு சிறிது கவலை இருந்தாலும், ராகுல் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

 

மூன்றாம் நாள் காலை…. ஞாயிற்று கிழமை என்பதால் பொடிக்குக்கும் செல்ல வேண்டியிராததால்  அந்த நாளை எப்படி கழிப்பது என்ற யோசைனையில் மூழ்கியபடி நடந்து வந்து கொண்டிருந்தேன்.

 

எதிரில் வந்த என் அப்பா, கொஞ்சமும் என்னை கண்டு கொள்ளாமல் சென்றது மனதிற்கு வருத்தமாக தான் இருந்தது. இந்த இரண்டு நாட்களும் இவ்வாறு தான் சென்றது என்றாலும், உள்ளுக்குள் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

ஆனால், இன்று ஏனோ இந்த நிகழ்வு என்னை வேதனைக்குள்ளாக்கியது. அதன் காரணம் அவன் மீது நம்பிக்கை குறைந்தது என்பதல்ல, அவன் என்னிடம் பேசி இரண்டு நாட்கள் ஆனதால் இருக்கலாம். 

 

ஆம், அவன் காதலை உணர்த்தியதிலிருந்து அவனை மிகவும் தேடுகிறேன்.  என் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் அவனின் இருப்பை உணர துடிக்கிறேன். இது தான் காதலோ?

 

செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாததால், ஹாலில் அமர்ந்து என் நினைவுகளோடு பயணித்துக் கொண்டிருக்க, என்னை யாரோ பார்ப்பது உணர்ந்து திரும்பிப் பார்த்தேன்.

 

அங்கு அபி காதில் அலைபேசியை வைத்துக் கொண்டு என்னை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். நான் ‘என்ன’ என்று சைகையில் கேட்டதும், ‘ஒன்றும் இல்லை’ என தலையசைத்துவிட்டு அவனின் அறைக்குச் சென்று விட்டான்.

 

‘இவன் எதுக்கு இப்போ என்ன பார்த்து ஓடுறான்?’ என்ற யோசனை அதன் பக்கம் என்னை இழுத்துச் சென்றது.

 

சிறிது நேரம் கழித்து வாசலில் அழைப்பு மணி அடிக்க, என் அம்மா சமையலறையில் இருந்ததால் என்னை யாரென்று பார்க்கச் சொன்னார். என் நினைவுகளை தடை செய்ததால் ஏற்பட்ட கோபத்துடன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே கதவை திறந்தேன்.

 

அங்கு நின்றிருந்ததோ சுதா ஆண்ட்டி. அவரை பார்த்த அதிர்ச்சியில் சிலையாக நின்று கொண்டிருந்தேன்.

 

‘இவங்க எதுக்கு இப்போ வந்திருக்காங்க?’ என்று நான் யோசித்துக் கொண்டிருந்ததில், அவரை வாசலிலேயே காத்திருக்க வைத்திருந்ததோ, அருகில் நின்றிருந்தவனையோ நான் கவனிக்கவில்லை.

 

பொறுத்து பார்த்த அவர், “என்ன மருமகளே, என்னை உள்ள கூப்பிட மாட்டியா?” என்றார்.

 

அதிர்ச்சியில் இருந்த எனக்கு அவரின் பேச்சு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்த முழித்துக் கொண்டிருந்தேன் நான். அப்போது தான் அருகில் இருந்தவனை கவனித்தேன். அவனோ வழக்கம் போல் புன்னகையில் என்னை ஈர்த்துக் கொண்டிருந்தான்.

 

சட்டென்று நிகழ்விற்கு வந்த நான் அவர்களை காத்திருக்க வைத்ததில் என்னையே மனதிற்குள் திட்டிக் கொண்டு, “சாரி ஆன்ட்டி, உ… உள்ள வாங்க…” என்று அவருக்கு வழிவிட்டு நின்றேன்.

 

பின்னால் வந்த அவன் என்ன கடக்கையில் நெருங்கி வந்து, வேண்டுமென்றே என் தலையில் முட்டி, “என்ன பப்ளி உங்க ஆன்ட்டியை மட்டும் தான் வெல்கம் பண்ணுவியா? உங்க ஆன்ட்டியோட பையனலாம் வெல்கம் பண்ண மாட்டியா?” என்றவாறே கண்ணடித்து உள்ளே சென்றான்.

 

அவன் என் தலையில் முட்டியபோது அதிர்ந்த நான் யாராவது பார்த்துவிட்டார்களா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் அடுத்து பேசியதில் அவனை முறைத்தவாறு நானும் உள்ளே சென்றேன்.

 

வாசலில் யாரென்று பார்க்கச் சென்று மிகுந்த நேரம் ஆகிவிட்டிருந்ததால் என்னை தேடி என் அம்மாவும் கூடத்திற்கு வந்தார். அங்கு வந்திருந்த சுதா ஆன்ட்டியையும் ராகுலையும் பார்த்தவர், “வாங்க வாங்க…” என்றழைத்தார் மகிழ்ச்சியாக.

 

அம்மாவும் சுதா ஆன்ட்டியும் ஏற்கனவே அறிமுகமாகியிருந்ததால் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்த அபியும் ராகுலிடம் பேசிக் கொண்டிருந்தான். நான் மட்டுமே என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தபடி நின்றுக் கொண்டிருந்தேன்.

 

அப்போது அப்பா அவரின் அறையிலிருந்து வரும் சத்தம் கேட்டதில் சுதாரித்த என் அம்மா தன் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

 

அங்கு வந்த என் அப்பா அந்த சூழ்நிலையை தன் கூரிய பார்வையால் கிரகித்துக் கொண்டிருந்தார். அவர் வந்து அமர்ந்ததும் சுதா ஆன்ட்டி பேச ஆரம்பித்தார்.

 

“அண்ணா நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். பிள்ளைங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்புறாங்க. அவங்களோட விருப்பத்தை ஏன் மறுக்கணும்? அவங்க சந்தோஷம் தான நமக்கு முக்கியம். நாங்க இத்தனை வருஷம் எதிர் வீட்டுல தான் இருக்கோம். உங்களுக்கே எங்களை பத்தி தெரிஞ்சுருக்கும். உங்களுக்கு எங்களை பத்தி வெளிய விசாரிக்கணும்னு தோணுச்சுனாலும் தாராளமா விசாரிங்க. ஏன்னா பொண்ணை பெத்தவங்க அவ்ளோ சீக்கிரமா யாரையும் நம்ப மாட்டாங்கன்னு தெரியும்.” என்று அவர் நீளமாக பேச, என் அப்பா அப்போதும் அமைதியாக தான் இருந்தார்.

 

“என் பையங்கிறதுக்காக சொல்லல, ராகுல் ரொம்ப நல்லவன். உங்க பொண்ணை நல்லா பார்த்துப்பான்.” என்று அவர் கூற என் அப்பாவின் முகம் யோசனையில் சுருங்கியது.

 

நானோ அவர் என்ன கூறப் போகிறாரோ என்ற பீதியில் நிற்க, ராகுல் என்னை புன்னகையுடன் பார்த்துக் கொண்டே எழுந்து நின்றான்.

 

அனைவரும் அவனை நோக்க, அவனோ என் அப்பாவிடம், “அங்கிள் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.” என்றான்.

 

அவர் கொஞ்சம் யோசித்தாலும் மறுக்காமல் அவனுடன் சென்றதே எனக்கு சிறிது நம்பிக்கையை தந்தது.

 

பத்து நிமிடங்கள் கழிந்தது. நானோ அவர்கள் சென்ற அறையை பார்ப்பதும் பின் எனக்குள்ளே பேசுவதுமாக இருந்தேன். 

 

என்னிடம் வந்த அபியோ, “என்ன நதி மா ரொம்ப பரபரப்பா இருக்க போல?” என்றான்.

 

“ஆமா ஆமா, இன்னும் கொஞ்ச நாள்ல உன் லவ்வை அப்பாகிட்ட சொல்றப்போ எப்படி நீ பரபரப்பா இருப்பியோ அப்படி தான் நானும் இருக்கேன்.” என்றேன்.

 

“அடிப்பாவி, எதுக்கு டி இப்போ கத்துற? நீயே அப்பாகிட்ட சொல்லிடுவ போல.” என்று அவன் பதற, அவனை மிதப்பான பார்வையில் நோக்கிவிட்டு, “ம்ம்ம் இது கூட நல்லா தான் இருக்கு. அப்பா என் லவ்வுக்கு ஒத்துக்கலைனா சொல்லிடுறேன் ப்ரோ. யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம்!” என்றேன்.

 

“நீ டென்ஷனா இருப்பன்னு மச்சான் உன்னை கூல் பண்ண சொன்னாருன்னு வந்து பேசுனேன் பாரு, எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்!” என்று நொந்தபடி அவன் அங்கிருந்து விலகினான்.

 

அப்போதும் என்னை சரியாக கணித்து நான் பதட்டப்படுவேன் என்பதை உணர்ந்து என்னவன் நடந்து கொண்ட விதம் என்னுள் புன்னகையை தோற்றுவித்தது.

 

பழையபடி இயல்பாகிய நான், “என்ன ப்ரோ, இன்னும் வேணுமா? நான் வேணா அப்பாகிட்ட எக்ஸ்ட்ரா ரெண்டு பிட் சேர்த்து போடவா?” என்றேன்.

 

“அட கொரங்கே உன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இரு.” என்று திட்டியபடி அங்கிருந்து நகர்ந்தான்.

 

நேரம் ஆக ஆக மீண்டும் நான் அலைப்புறுவதைக் கண்ட சுதா ஆன்ட்டியோ என்னை அழைத்து அவரின் அருகில் அமரச் சொன்னார்.

 

“என்ன மருமகளே, ஒரே நாள் கேசரி கொடுத்து என் பையனை கரெக்ட் பண்ணிட்டியா?” என்று அவர் விளையாட்டாக கேட்க, “அச்சோ அப்படியெல்லாம் இல்ல ஆன்ட்டி.” என்றேன் வெட்கத்தில் நெளிந்து கொண்டே.

 

“அப்பறம் எதுக்கு மா அன்னைக்கு எனக்கு கூட மிச்சம் வைக்காம அவனே அந்த கேசரிய ஃபுல்லா சாப்பிட்டுருக்கான்?” என்று அவர் சிரிப்புடன் வினவ, ‘அட ஆண்ட்டி உங்க பையனை பத்தி உங்களுக்கு சரியா தெரில. பக்கா ஃப்ராட் அவன்! உங்ககிட்ட இப்படி சீனை போட்டு அன்னைக்கு கதற கதற எனக்கு தான அந்த கேசரி ஊட்டிவிட்டான்! விட்டா அன்னைக்கே உங்க பையனால வாந்தி எடுத்திருப்பேன்.’ என்று மனதிற்குள் அவனை திட்டிவிட்டு வெளியில் இளித்து வைத்தேன்.

 

அப்போது வெளியே வந்தனர் என் அப்பாவும், ராகுலும்.

 

அவர்களின் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறு செருமலுடன் ஆரம்பித்த என் அப்பா, “நான் கொஞ்சம் யோசிக்கணும்.” என்றார்.

 

அவர் ‘யோசிக்க’ வேண்டும் என்று சொன்னதே என் நம்பிக்கையை அதிகப்படுத்தியத்தியது. அதே மகிழ்ச்சியுடன் ராகுலை பார்த்தேன். அவனோ வேறு ஏதோ யோசனையில் இருந்தான். 

 

நான் ‘என்ன’ என்று கண் ஜாடையில் கேட்க, ‘ஒன்றும் இல்லை’ என்று தலையசைத்தான்.

 

நாங்கள் இவ்வாறு மௌன மொழியில் பேசிக் கொண்டிருக்க, சுதா ஆன்ட்டியோ, “அதனால என்ன அண்ணா, இது உங்க பொண்ணோட வாழ்க்கை. நல்லா யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க. அப்போ நாங்க கிளம்புறோம்.” என்றார்.

 

என் அம்மாவோ, “அண்ணி என்ன அதுக்குள்ள கிளம்பிட்டீங்க? சாப்பிட்டு போகலாம்.” என்றார், என் அப்பா அவரை முறைத்துக் கொண்டிருப்பதை அறியாமல்.

 

‘அச்சோ அம்மா! ஓவர்-எக்ஸைட்மெண்ட்னால உன் வேஷம் கலஞ்சுருச்சே.’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டேன் நான்.

 

“பரவால இருக்கட்டும் அண்ணி, இனி அடிக்கடி இங்க வரத்தான போறோம்.” என்று கூறியவாறே கிளம்பினார் சுதா ஆன்ட்டி.

 

செல்லும் போது கூட ராகுலின் முகம் யோசனையில் சுருங்கியிருக்க, லேசாக தலையசைத்து சென்று விட்டான்.

 

‘என்னாச்சு இந்த ரணுக்கு? எதை நினைச்சு இவ்ளோ யோசிச்சுட்டு இருக்கான்!’ என்று அவன் குழப்பத்தில் நானும் குழம்பினேன்.

 

அங்கு என் அம்மாவோ என் அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். திட்டி முடித்து அவர் உள்ளே சென்றதும், நான் என் அம்மாவிடம் சென்று, “என்ன ம்மா, ஆஸ்கார் அவார்ட் கிடைச்சுருச்சு போல!” என்றேன்.

 

“என்ன டி கொழுப்பா? உங்க அப்பா இன்னும் ஓகே சொல்லல!” என்று எனக்கு நினைவுபடுத்த, “அதெல்லாம் என் லவர் பார்த்துப்பான்.” கனவுகளுடனே என் அறைக்குச் சென்றேன்.

 

******

 

அன்று இரவு மகிழ்ச்சியான மனநிலையில், ராகுலுக்கு அழைத்தேன். இரண்டு முறை முயற்சித்தும் அவன் எடுக்கவில்லை. வீட்டிலிருந்து சென்ற போதே அவன் யோசைனையுடனே சென்றது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது.

 

பகலிலும் இரு முறை அவனிடம் பேச முயற்சித்து, என் முயற்சி  தோல்வியடைந்ததும், வேறு ஏதோ வேலையாக இருப்பான் என்று எனக்குள் கூறிக் கொண்டேன். ஆனால் இப்போதும் அவன் எடுக்காதது எனக்குள் உறுத்தியது.

 

‘என்னவா இருக்கும்? அப்பா ஏதாவது கண்டிஷன் போட்டுட்டாரா? அப்படி ஏதாவதுனா என்கிட்ட சொல்லிருக்கலாமே!’ என்று யோசித்துக் கொண்டே அவனிற்கு மீண்டும் அழைத்தேன். மறுபடியும் எடுக்கவில்லை அவன்.

 

‘ம்ச், இப்போ எதுக்கு போன எடுக்காம ஓவரா சீன் போடுறான்?’ என்று கொஞ்சம் கொஞ்சமாக கோபம் என்னை ஆட்கொள்ள துவங்கிய நேரம் அது!

 

இவ்வாறாக நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவனிடமிருந்து செய்தி வந்தது. அவசர அவசரமாக எடுத்துப் பார்த்தேன்.

 

“சாரி பப்ளி, இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன். நாளைக்கு பேசுறேன்.” என்று அனுப்பியிருந்தான்.

 

‘இவ்ளோ நேரம் என்ன வேலையா இருக்கும்?’ என்று யோசித்தேன்.

 

மனது கேளாமல் மறுபடியும் முயற்சித்தேன். முதல் ரிங்கிலேயே எடுத்த அவன், “ப்ச், ஒரு முறை சொன்னா கேட்கமாட்டியா? நான் தான் பிஸியா இருக்கேன், அப்பறம் பேசுறேன்னு சொன்னேன்ல!” என்று பொங்கினான்.

 

எனக்கோ ஒரு நொடி அவனின் திட்டில் அவனிற்கு எதற்காக அழைத்தேன் என்பதையே மறந்து அலைபேசியை  காதிலிருந்து கூட எடுக்க தோன்றாமல்  முழித்துக் கொண்டிருந்தேன்.

 

ஒரு நீண்ட பெருமூச்சு அந்த பக்கத்திலிருந்து கேட்டது.

 

“சாரி நதி, நான் கொஞ்சம் ஒர்க் டென்ஷன்ல இருக்கேன். நாளைக்கு கண்டிப்பா பேசுறேன்.” என்றவாறு அழைப்பை துண்டித்து விட்டான்.

 

முழுதாக ஐந்து நிமிடங்கள் ஆனது, அந்த அதிர்ச்சிலிருந்து வெளிவர!

 

‘ச்ச, இப்படி கத்துறான்! நானும் எதுவும் பேசாம அமைதியா இருந்துருக்கேன்!’ என்று என்னையே நொந்து கொண்டேன்.

 

‘பப்ளி கூட ‘நதி’யா மாறிடுச்சு!’ என்று புலம்பியபடி உறங்கிப் போனேன்.

*****

 

அடுத்த நாள் காலை, வேகமாக எழுந்தேன். ‘இன்னைக்கு வாக்கிங் போறப்போ அவன்கிட்ட பேசவே கூடாது. என்னாச்சோன்னு கவலையா கால் பண்ணா, ஒரு பச்ச பிள்ளைன்னு பார்க்காம திட்டவா செய்யுற? இனி நீயா என்கிட்ட பேசி என்ன சமாதானப்படுத்துற வரைக்கும், உன்கிட்ட பேச மாட்டேன். போடா ராகு!’ என்று சபதம் போட்டுக் கொண்டேன்.

 

எப்போதையும் விட இன்று சுறுசுறுப்பாக இருந்தேன் நான். அவனை அலைய வைக்க வேண்டும் என்ற காரணத்தினாலோ!

 

நான் நடக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே அவனும் வந்து சேர்ந்தான்.

 

“ஹாய் பப்ளி…” என்று எதுவுமே நடக்காததை போல அவன் பேச, நான் எதுவும் கூறாது நடப்பதிலேயே கவனத்தை செலுத்தினேன்.

 

“என்ன பப்ளி செம ஹாட் போல!” என்றான் குறும்பு நிறைந்த குரலில்.

 

‘அடப்பாவி, பார்க்க ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் மாதிரி இருந்துட்டு, இப்படி டபுள் மீனிங்ல பேசுறியா?’ உள்ளுக்குள் நினைத்தாலும் வெளியே கூறவில்லை.

 

“சாரி டா பப்ளி, நேத்து திடீர்னு ஒரு கேஸ் வந்ததால, அந்த டென்ஷன்ல கத்திட்டேன்.” என்றான் சட்டென்று இறங்கிய குரலில்.

 

அதற்கும் ஒன்றும் கூறவில்லை நான்.

 

“ஓகே பப்ளி, நான் சரண்டர்! உன்னை மலையிறக்க…” என்று கூற வந்தவன், நான் முறைத்ததும், “உன்னை சமாதானப்படுத்தன்னு சொல்ல வந்தேன்… டங்க் ஸ்லிப்பாகிடுச்சு. சரி சொல்லு உன்னை சமாதானப்படுத்த என்ன செய்யணும்?” என்றான்.

 

இப்படி விதவிதமாக அவன் கேட்டும் ஒன்றும் கூறாமல் அவனை அலையவிட்டுக் கொண்டிருந்தேன். வெளியில் விறைப்பாகக் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் அவனின் செய்கைகளை ரசித்து  சிரித்துக் கொண்டிருந்தேன்.

 

இதோ நடைப்பயிற்சி கூட முடியப்போகிறது. அப்போது திடீரென்று என் கைப்பிடித்த அவன், என்னை ஆளரவமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான். புருவம் சுருக்கி பார்த்தேனே ஒழிய பெரிதாக எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் உள்ளுக்குள், அவன் என்ன செய்யப் போகிறான் என்ற ஆர்வம்  எழுந்தது.

 

“ம்ப்ச் பப்ளி, இன்னும் எவ்ளோ நேரத்துக்கு இப்படி என்ன அலைய விடப்போற?” என்றான் சலிப்பாய்.

 

“நான் உங்களை ஒன்னும் செய்ய சொல்லலையே.” என்று அந்நாளில் முதல் முறையாக வாயை திறந்து பேசினேன் அவனிடம்.

 

“ஸ்ஸ்ஸ், அதான் உன் கோபம் போக நான் என்ன செய்யணும்னு கேட்டேனே. ப்ளீஸ் பப்ளி, என் சிஷுவேஷனையும் புரிஞ்சுக்கோ.” என்று அவன் கெஞ்ச, “அப்போ நேத்து என்னை கஷ்டப்படுத்துனதுக்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம்?” என்றேன் நக்கலாக.

 

“எனக்கு ரொம்ப கஷ்டமான பனிஷ்மெண்டா இல்லாம, ஹக்… கிஸ்ஸுனு ஈஸியான பனிஷ்மெண்டா கொடு பப்ளி!” என்று அவன் கண்ணடிக்க, “இங்கயே ஃபிஃப்டி டைம்ஸ் தோப்புக்கரணம் போடுங்க. அதான் உங்களுக்கான பனிஷ்மெண்ட்.” என்றேன்.

 

அவன் முதலில் அதிர்ந்தாலும் பின் சிரித்துக் கொண்டே தோப்புக்கரணம் போட ஆரம்பித்தான். சிபிஐ ஆபீஸராக பெரிய பதவியில் இருப்பவன், தான் செய்யும் செயலால் பிறர் தன்னை பார்க்கும் வாய்ப்பு இருந்தாலும் கூட, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்திற்காக நடுரோட்டில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தது என்னை கர்வத்தில் ஆழ்த்தியது.

 

‘சோ ஸ்வீட்!’ என்று கொஞ்சினேன் அவனை, மனதிற்குள் தான்!

 

“ஃபார்ட்டி எயிட்… ஃபார்ட்டி நைன்… ஃபிஃப்டி…” என்று மூச்சு வாங்க எழுந்தான் அவன்.

 

சிரிப்புடன் அவனை நோக்கி செல்ல முயன்றபோது, திடிரென்று கீழே விழுந்தேன். வலியில் கண்களை மூடிய நான், மீண்டும் கண்களை திறந்தபோது என் அறையில் இருந்தேன்.

 

ஒரு நொடி எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்க, அடுத்த நொடியில் நிகழ்ந்ததனைத்தும் தெளிவாகியது. அவனை நினைத்தபடியே உறங்கியதால், கனவிலும் வந்து என்னை தொல்லை செய்தான் அவன். 

 

‘ச்சே கனவா? ஹ்ம்ம் இது மாதிரியே நிஜத்துலயும் நடத்திக் காட்டுறேன்.’ என்று எனக்குள்ளேயே சவால் விட, என் மனசாட்சியோ, ‘நீயா…’ என்று கேலிப் பார்வையில் என்னை அடக்கியது.

 

நேரமாகியதால் சீக்கிரமாக கிளம்பி என் அறையிலிருந்து வெளியேறியபோது, என்னை தடுத்தது என் அம்மாவின் குரல்…

 

“எங்க டி போற?”

 

“ம்மா, போகும் போதே எங்க போறன்னு கேட்குற!”

 

“ப்ச், உன்கூட கதையடிக்க எனக்கு நேரமில்ல. உங்க அப்பா அஞ்சு மணியிலயிருந்து வாசலுக்கும் ரூமுக்குமா நடந்துட்டு இருக்காரு. அநேகமா உனக்காக தான் வெயிட் பண்றாருன்னு நினைக்கிறேன். அதனால இன்னைக்கு வெளிய போகாம அடக்க ஒடுக்கமா இரு.”

 

‘அச்சோ, இப்போவும் அவனை பார்க்க முடியாதா?’ என்ற ஏக்கத்தில் என் அறைக்கு திரும்பினேன்.

 

அன்று பொடிக்கிலும் வேலைகளில் கவனமில்லாது தடுமாறினேன். அதை கண்ட சாண்டி, “ஏன் டி ரெஸ்ட்லெஸா இருக்க? உடம்பு சரி இல்லையா?” என்று கேட்டாள்.

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல டி.” என்றேன் என் ஏக்கத்தை மறைத்தவாறே.

 

அவளும் ஏதோ புரிந்துக் கொண்டாள் போல, “நீ வேணா வீட்டுக்கு கிளம்பு டி. இங்க நான் மேனேஜ் பண்ணிக்குறேன்.” என்றாள்.

 

“ஹே ஐ’ம் ஓகே, நான் இல்லாம நீ மட்டும் எப்படி சமாளிப்ப?” என்று நான் வினவ, “ப்ச், ஓவரா சீன் போடாத, ஒழுங்கா கிளம்பு டி!” என்று என்னை திட்டி அங்கிருந்து கிளம்பினாள்.

 

வீட்டிற்கு வந்ததும், என் அம்மாவின் கேள்விகளுக்கு ஏதோ சமாளிப்பாய் பதில் கூறினேன். கிட்டத்தட்ட ஒரு வாரம், இரவு நேரங்களில் சரியான உறக்கம் இல்லாததால், அன்று மதியம் நன்கு உறங்கினேன்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
20
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்