733 views

 

ஈர்ப்பு 27

நான் கூறியதைக் கேட்டு ராகுல் அதிர்ந்து நின்றதை சிரிப்புடன் பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நழுவினேன்.

‘அட பரவாலயே நதி, அவனையே ஷாக்கடிச்சு நிக்க வச்சுட்ட!’ என்று என்னை நானே பாராட்டிக் கொண்டு அன்றைய நடைபயிற்சியை நிறைவு செய்தேன்.

வீட்டிற்குள் செல்ல முயன்றபோது வாசலிலேயே என் அம்மாவை கண்ட நான் உற்சாக மிகுதியில் அவரை அணைத்து முத்தமிட்டேன். ஏற்கனவே, நான் அதிகாலை எழுந்த அதிர்ச்சியில் இருந்த அவருக்கு எனது இந்த செயல் மிகுந்த அதிர்ச்சியையே கொடுத்திருக்கும்.

அவர் இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதவராய் என்னை பார்த்துக் கொண்டிருக்க, அவரை நோக்கி கண்ணடித்தவாறே உள்ளே சென்றேன்.

“ஐயோ, என் பொண்ணுக்கு காத்து கருப்பு எதுவும் பிடிச்சுருக்குமோ! ஃபர்ஸ்ட் எங்கேயாவது கூட்டிட்டு போய் மந்திரிக்கணும்.” என்று அவர் புலம்பியது என் காதிலும் தெளிவாக கேட்டது.

‘ச்சே, லூசு இப்படியா பிஹேவ் பண்ணுவ?’ என்று என்னையே திட்டிக் கொண்டேன்.

அதன் பின் நடந்தவை அனைத்தும் எப்போதும் நடக்கும் நிகழ்வுகள் தான் என்றாலும் அதிலும் காலையில் ஏற்பட்ட மகிழ்ச்சியுடனே பங்கு கொண்டேன்.

ஷீலா கூட என் முகத்தில் அவ்வபோது தோன்றும் முறுவலுக்கான காரணத்தை கேட்க, அவளிடம் எதுவோ சொல்லி சமாளித்து விட்டேன்.

காலை உணவிற்காக அதிசயமாக அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தோம். அப்போது என் அம்மா, என்னை பற்றி பெருமை பேசிக் கொண்டிருந்தார்!

“டேய் அபி உன் தங்கச்சிக்கு ஏதோ ஆச்சு டா.” என்று அவர் கூற, அனைவரின் பார்வையும் என்னை நோக்கி திரும்பியது.

நானோ என் அம்மாவை, ‘இப்படி தான் மொட்டையா சொல்வீங்களா?’ என்ற ரீதியில் பார்த்தேன்.

“அது… இன்னைக்கு என்னைக்கும் இல்லாத அதிசயமா உன் தங்கச்சி காலைல அஞ்சரை மணிக்கெல்லாம் எழுந்து வாக்கிங் போனா.” என்று கூற, என் அப்பா அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் உண்டு கொண்டிருக்க, அபி என்னை பார்த்தானே ஒழிய வேறு எதுவும் கேட்கவில்லை.

‘நல்லவேளை யாரும் எதுவும் கேட்கல.’ என்று உள்ளுக்குள் நிம்மதியாக உணர்ந்தேன்.

என் மகிழ்ச்சி அந்த நாள் முழுவதுமே தொடர்ந்தது. என் புன்னகை முகம் பார்த்து சாண்டி, “என்ன டி ஒரே ரொமான்ஸ் தான் போல.” என்று கேலி செய்ய, “அ…அது….அதெல்லாம் ஒன்னும் இல்லையே.” என்று சமாளித்தேன்.

“எதுக்கு டி பொய் சொல்ற? அதான் உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே!” என்று அவள் கூற, ‘அவ்ளோ வெளிப்படையாவா தெரியுது!’ என்று நினைத்துக் கொண்டேன் நான்.

பிறகு, அவளிடம் மறைக்க முடியாது என்ற காரணத்தினால், தயங்கியவாறே நடந்ததைக் கூறி முடித்தேன்.

“எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. அடியேய் சீனியர் அந்த சைடு வாக்கிங் போறாருன்னு தெரிஞ்சு தான நீயும் போன.” என்று அவள் என்னை உலுக்க, அவளிடம் வாய்விட்டு எதுவும் கூறாமல் நமுட்டுச் சிரிப்பு சிரித்தேன்.

“அடிக்கள்ளி எனக்கு தெரியும் டி. நீ இப்படி ஏதாவது ஃப்ராட் வேல பண்ணுவன்னு தெரியும்.” என்றாள் அவள்.

“ச்சு, சும்மா இரு டி. நானே எங்க அம்மா கிட்ட வாக்கிங் போறேன்னு பில்ட்-அப் கொடுத்துருக்கேன்.” என்று சிணுங்கினேன் நான்.

“உனக்கென்ன மா, நல்லா என்ஜாய் பண்ணு!” என்று வாழ்த்தினாள் சாண்டி.

*****

அன்றைய தினமும் க்ரிஷை எதிர்பார்த்து ஏமாந்தேன். ஆனால் முன்தினம் ஏற்பட்ட சோர்வு, ஏமாற்றம் இன்று ஏற்படவில்லை. அதற்கான காரணத்தை புரிந்து கொண்ட நான் மீண்டும் காலையில் நடந்ததை நினைவில் கொண்டு வந்து சிரித்தேன்.

இரவு க்ரிஷிற்காக காத்திருந்தேன். ‘இன்னைக்கு ஆன்லைன் வரட்டும். இருக்கு அவனுக்கு!’ இவ்வாறு நான் யோசித்துக் கொண்டிருக்க, என் சிந்தையை கலைத்தது செய்தி வந்த அறிவிப்பு.

க்ரிஷ் : ஹாய் மேடம், என்ன ரொம்ப கோபமோ!

நான் : யாரு சார் நீங்க? எனக்கு எதுக்கு மெசேஜ் பண்றீங்க?

க்ரிஷ் : ஆமால, சாரி மேடம், பை!

நான் : எதுக்கு இன்னமும் பொடிக் வராம ஆட்டம் காட்டிட்டு இருக்க?

க்ரிஷ் : ஓய், நான் என்ன டெய்லி வரேன்னா சொன்னேன். போனா போகுது, ஏதோ ஒரு நாள் வரேன்னு சொன்னேன். அப்போ மேடம் என்னை எதிர்பார்த்துட்டே இருக்கீங்க போல.

நான் : எதிர்பார்க்குற அளவுக்கு நீ ஒன்னும் பெரிய ஆள்லா இல்ல. இனி உன்னை கண்டுபிடிச்சுட்டு தான் உன் கூட பேசுவேன். பை!

க்ரிஷ் : ஹாஹா, அது உன்னால முடியாது.

நான் : அதெல்லாம் முடியும்.

க்ரிஷ் : பார்க்கலாம், ஆல் தி பெஸ்ட் நதி!

நான் : ம்ம்ம், பை.

க்ரிஷ் : குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ். அப்பறம் ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் டூ டேஸ் முடிஞ்சது.

நான் : எல்லாம் எனக்கு தெரியும்!

*****

அடுத்த நாள் காலை மிகுந்த உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் நடைபயிற்சிக்கு கிளம்பினேன்!

‘என்ன டா இது நடக்க ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷமாச்சு, இன்னும் ஆளை காணோமே!’ என்று தேடியபடியே நடந்தேன்.

மேலும் ஐந்து நிமிடம் காக்க வைத்து வந்தான் அவன். எதுவும் பேசாமல் சிறிது நேரம் நடந்தோம் நாங்கள்.

‘நேத்து நான் கேட்டதுக்கு ஏதாவது ரெஸ்பான்ஸ் இருக்கும்னு எதிர்பார்த்தா, எதுவும் சொல்லாம நடந்துட்டு இருக்கான். ஒருவேளை இவனுக்கு அம்னீஷியாவா இருக்குமோ?’ என்று யோசித்துக் கொண்டே அவனை பார்த்தேன். அப்போது அவனும் என்னை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

நான் பார்த்ததை பார்த்த அவன் என்னவென்று புருவம் உயர்த்திக் கேட்டான். நானோ வேகமாக தலையசைத்து ‘ஒன்றும் இல்லை’ என்று கூறினேன்.

அவனே கேட்டான், “உனக்கு சமைக்கத் தெரியுமா?”

‘என்னாது சமைக்கத் தெரியுமா வா?’ என்று மனதிற்குள் அதிர, “ஹ்ம்ம், சமைச்சு வச்சா நல்லா சாப்பிட தெரியும்.” என்று ஏதோ ஒரு ஞாபகத்தில் கூறிவிட்டேன்.

‘அச்சோ நான் வேற லூசு மாதிரி ஏதோ உளறிட்டேனே. என்ன சொல்லப் போறானோ?’ என்று நான் திகைக்க, அவன் முகத்திலிருந்து எதுவும் கண்டுபிடிக்க இயலவில்லை. அவன் சட்டென்று நின்று விட, நின்றதில் நானும் தயக்கத்துடன் நின்றேன்.

“ஓஹ், அப்போ எனக்காக கூட சமைக்க மாட்டீயா?” என்று கேட்டுவிட்டு நிற்காமல் சென்று விட்டான்.

இம்முறை அதிர்வது என் முறை! அதுவும் சாதாரண அதிர்ச்சி இல்லை, தலையில் இடி இறங்கியது போன்ற அதிர்ச்சி!

‘என்னாது சமைக்கணுமா? ‘என்ன கொடுமை டா இது’ மொமெண்ட். நான் சமைச்சா நானே சாப்பிட மாட்டேன். இதுல இவன் வாலாண்டியரா வந்து என்னை சமைக்க சொல்லி கேட்குறானே. ஒருவேளை நம்ம நல்லா சமைப்போம்னு யாராவது ராங்க் இன்ஃபார்மேஷேன் கொடுத்துருப்பங்களோ?’

இப்படி யோசித்துக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். வீட்டிற்குள் நுழையும் போது, ‘சரி அவன் கேட்டான், சமைச்சு கொடுத்துடுவோம். நான் சமைக்குறதை டேஸ்ட் பண்ணி இனி அவன் என்னை சமைக்க சொல்லவே மாட்டான்.’ என்ற முடிவை எடுத்தேன்.

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், அன்றே என் முயற்சியை மேற்கொள்ள நினைத்தேன்!

“ம்மா, என்ன சமைக்குறீங்க?” என்று திடீரென்று சமையலறைக்குள் செல்ல, “எருமை, எதுக்கு டி இப்படி கத்துற? ஒரு நிமிஷம் பயந்தே போய்ட்டேன்!” என்று கத்தினார் என் அம்மா.

அதற்கெல்லாம் சளைக்காமல், “ப்ச், என்ன சமைக்குறீங்கன்னு கேட்டேன்ல.” என்று நான் வினவ, “எதுக்கு டி இங்க வந்து என் உயிர வாங்குற?” என்று புலம்பினார் அவர்.

‘நான் இன்னும் சமைக்கவே ஆரம்பிக்கவே இல்லையே, இப்போவே ‘உயிரை வாங்குற’கிறாங்க!’

“ம்மா, உனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா? இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆகப்போற பொண்ணுக்கு சமைக்க தெரியாதே, அதை சொல்லிக் கொடுப்போம்னு தோணுதா உனக்கு!” என்று உருக்கமாக நான் பேச, “அத்தை, உங்க பொண்ணுக்கு கொஞ்ச நாள்ல கல்யாணமா? என்கிட்ட சொல்லவே இல்லையே.” என்றவாறே என்ட்ரி கொடுத்தாள் ப்ரியா.

“அடியேய் ஏதாவது சொன்ன, அண்ணின்னு கூட பார்க்காம உன் லவ்ல கபடி விளையாண்டுடுவேன் பார்த்துக்கோ.” என்று அவளிடம் நான் முணுமுணுக்க,. “நான் வாயவே திறக்கல மா.” என்று பின்வாங்கினாள் ப்ரியா.

“ஹே என்ன டி என் மருமகளை திட்டுற. உன்னையெல்லாம் சமைக்க விட்டா இன்னைக்கு எல்லாரும் பட்டினியா தான் இருக்கணும். ஒழுங்கா தள்ளு டி எனக்கு நிறையா வேலை இருக்கு.” என்று அவர் கூற, “ம்மா இப்போ என்னை சமைக்க விட போறீயா இல்லையா. இல்லனா நீங்க ‘மருமக மருமக’ன்னு கொஞ்சிட்டு இருக்கிறதை அப்பாகிட்ட போட்டுக் கொடுத்துடுவேன்.” என்று பிளாக்மெயில் செய்ய, “அடிப்பாவி, இந்தா என்னமோ பண்ணித் தொல!” என்று நகர்ந்து விட்டார் அவர்.

‘ஹ்ம்ம், ஃபர்ஸ்ட் டைம் சமைக்குறோம் ஏதாவது ஸ்வீட் செய்யலாம்.’ என்று யோசித்து கேசரி செய்ய முடிவெடுத்தேன்.

ரவையை கிண்டிக் கொண்டே மனதில் நேற்றும் இன்றும் நடந்தவற்றை அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில், ‘என்ன டா இது கரண்டி எதுலயோ சிக்கிகிச்சு போல!’ என்று அடுப்பைப் பார்த்தால், அங்கு கோந்து போன்ற ஏதோ ஒன்றில் சிக்கிக் கொண்டது அந்த கரண்டி…

அப்போது அங்கு வந்த அம்மா, “என்ன டி பண்ணி வச்சிருக்க?”என்று பதறினார்.

“ம்மா, உனக்கு பொறுப்பே இல்ல. சமைக்குறப்போ கூடவே இருந்து ஹெல்ப் பண்ணாம நீ பாட்டுக்கு என்னை தனியா விட்டுட்டு போய்ட்ட!” என்று சமாளிக்க வேண்டி பழியை அவர் மீது போட்டுவிட்டேன்.

அதற்கு பிறகு என் அம்மாவிடம் திட்டு வாங்கி, ப்ரியாவின் கேலிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் என் முதல் சமையலை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.

“ஷப்பா, இதுக்கே டயர்டா இருக்கு. ம்மா ஒரு ஜூஸ் ப்ளீஸ்!” என்று நான் கேட்க, என் அம்மாவோ என்னை முறைத்தார்.

“உன் ஆசைக்கு பண்ணிட்ட, தயவு செஞ்சு இதை யாருக்கும் கொடுத்துடாத.” என்று என் அம்மா கூற, “உங்களுக்கு எல்லாம் இதை சாப்பிட கொடுத்து வைக்கல.” என்று உச்சுக்கொட்டி விட்டு வெளியே சென்றேன்.

“அடியேய் அதை எங்க டி எடுத்துட்டு போற?” என்று அவர் வினவ, “க்கும், உங்களுக்கு என் அருமை தெரியலைல, அதான் எதிர் வீட்டுல இருக்க ஆன்ட்டிக்கு கொடுக்கப் போறேன்.” என்றேன்.

“ஹே பாவம் டி அவங்க.” என்று அவர் அங்கிருந்தே கத்த, அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லையே நான்!

அப்போது என் அருகில் வந்த ப்ரியா, “உன்னை பார்த்தா ஆன்ட்டிக்கு கொடுக்க போற மாதிரி இல்லையே. ஆண்டியோட பையனுக்கு கொடுக்க போற மாதிரி இருக்கே!” என்று சந்தேகமாக கூற, நானோ லேசாக புன்னகைத்து விட்டு சென்று விட்டேன்.

அங்கிருந்து கிளம்பியவள் நேராக ராகுலின் வீட்டிற்கு முன்பு நின்றேன். வாசல் திறந்தே இருக்க், வெளியில் இருந்தே, “ஆன்ட்டி…” என்று அழைத்தேன்.

அவரோ உள்ளிருந்து வந்து, “அட வா நதி, என்ன இன்னைக்கு சர்ப்ரைஸ் விசிட்? எப்பவும் இங்க தனியா வர மாட்டீயே?” என்றவாறே உள்ளே அழைத்துச் சென்றார்.

“ஆன்ட்டி, இந்தாங்க கேசரி. இது ஃபர்ஸ்ட் டைம் நானே சமைச்சது.” என்று பெருமையாக கூறியபடி அவரிடம் நீட்ட, “சூப்பர் நதி மா, நீ ஹால்ல உட்காரு டா. இதோ வந்துடுறேன்.” என்று அதை வாங்கி உள்ளே சென்றார்.

அங்கு ஹாலிலோ ராகுல் நீள்சாய்விருக்கையில் அமர்ந்திருந்தான். நான் வந்தது தெரிந்ததாலும் எதுவும் காட்டிக் கொள்ளாமல் இருந்தான்.

‘க்கும், என்னது இது கண்டுக்கவே மாட்டிங்குறான்?’

“நதி மா சூப்பரா இருக்கு டா.” என்று பாராட்டியவாறே வந்தார் சுதா ஆன்ட்டி.

“இந்தா டா நீயும் டேஸ்ட் பண்ணு” என்று ராகுலிடம் கொடுத்தார்.

“ம்மா, இதை சாப்பிட்டு எனக்கு ஏதாவது ஆகிடுச்சுனா?” என்று அவன் நக்கலாக கூற, நான் அவனை முறைத்தேன்.

“டேய் நல்லா தான் டா பண்ணிருக்கா.” என்று ஆன்ட்டி கூறவும் சிரித்துக் கொண்டே அதை சாப்பிட்டான்.

நானும் ஆர்வமாக அவன் என்ன சொல்வான் என்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ சாப்பிட்டு விட்டு ஒன்றும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்று விட்டான்.

‘அடப்பாவி, நீ சொன்னதுக்காக என் அம்மா கிட்ட திட்டெல்லாம் வாங்கி சமைச்சுருக்கேன். அதை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லையே!’ என்று நான் மனதிற்குள் அவனை வறுத்துக் கொண்டிருந்தேன்.

வெளியே யாரோ கூப்பிட, சமையலறைக்கு செல்லவிருந்த சுதா ஆன்ட்டி என்னிடம் வந்து, “நதி மா, ஒரு ஹெல்ப் டா. இதை மட்டும் கிச்சன்ல வச்சுடுறியா? வெளிய யாரோ கூப்பிடுறாங்க, நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன்.” என்று கூற, வந்ததற்கு இதையாவது செய்யலாம் என்ற நினைப்பில், ஒரு பெருமூச்சுடன் ஒப்புக்கொண்டேன்.

அங்கு சமையலறையில் ராகுல் கை கழுவிக் கொண்டிருக்க, நான் சென்று என் கையில் இருந்தவற்றை மேடையில் வைத்து விட்டு திரும்பினேன்.

அப்போது வெகு அருகில் ராகுலின் முகம் தெரிய பதறி பின் நகர்ந்தேன். சற்று நேரத்திற்கு எங்கள் மூச்சு சத்தம் மட்டுமே அங்கு கேட்டது.

‘அச்சோ, இவன் எதுக்கு இப்படி பார்க்குறான்?’ என்று மனதோடு நான் பேச, வாயிலிருந்து வார்த்தை தான் வெளிவரவில்லை.

மிகுந்த தயக்கத்துடன், “எ…என்…என்ன…” என்றேன்.

“மேடம் தான் நான் உங்க சமையலை பாராட்டலைன்னு ரொம்ப கோபமா இருக்கீங்களே, அதான் உங்கள கூல் பண்ண வேண்டாமா?” என்றவாறே என் அருகில் வந்தான்.

நானோ என் கண்களை அகல விரித்து உறைந்த நிலையில் நின்றேன்.

அவன் குறும்புப் புன்னகையோடு மெல்ல என்னை நெருங்க, நானோ ஆர்வமும் வெட்கமும் கலந்த மனநிலையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் பின்னே நகர்ந்து கொண்டு இருந்தேன்.

இரண்டே எட்டில் என் பின்புறம் இருந்த மேடை என்னை தடுக்க, மேலும் நகர முடியாமல் அவனை பார்ப்பதும், அவனிடமிருந்து பார்வையை விலக்குவதுமாக அவஸ்தையோடு நின்றிருந்தேன்.

‘அச்சோ பக்கத்துல வந்துட்டானே, இப்போ என்ன பண்ண போறான்?’ என்ற பதட்டம் என்னுள்ளே…

அவனிற்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஐந்தடி தூரமே. இதற்கு மேல் முடியாது என்று கண்களை நான் மூடிக்கொள்ள, அதற்கடுத்த நொடிகள் மௌனமே அங்கு ஆட்சியாய், எங்களின் இதயத்துடிப்பு மட்டுமே ஓசையாய்!

இதோ எண்ணிக் கொண்டிருக்கிறேன், கரைகின்ற ஒவ்வொரு மணித்துளியையும்! ‘ஒன்… டூ… த்ரீ… ஃபோர்… ஃபைவ்… சிக்ஸ்…செவன்… எயிட்… நைன்… டென்… என்ன இன்னும் ஒன்னுமே நடக்கல? ஒருவேளை இதுவும் கனவா இருக்குமோ?’

அதை உறுதிபடுத்த என் கண்களை திறந்தேன். அதற்காகவே காத்திருந்தது போல அவன் சிரிப்புடன் என்னை இன்னும் நெருங்கினான்.

‘ஐயோ, இது உண்மை தானா?’ என்று மீண்டும் அவசரமாக கண்களை மூடிக்கொண்டேன்.

அடுத்த நொடி என் இடது கன்னத்தில் அவன் ஸ்பரிசம். கைகளால் அல்ல, அவன் கன்னத்தால்! அவனின் சொரசொரப்பான கன்னம் என் கன்னத்தோடு உரச, அதில் சிலிர்த்த நான், சிந்தை மயங்கி நின்றேன்.

இதோ அவனின் அடுத்த தாக்குதல். அவன் மூச்சுக்காற்று என் கழுத்தை கூசச் செய்ய, அவன் இதழ்கள் என் காதுகளில் உரச ஏதோ கூறினான் அவன்.

அதில் எங்கே என் கவனம் இருந்தது? என் கவனம் முழுவதும், என் இடைக்கும் இடப்புற கைக்கும் நடுவே அவன் கொண்டு சென்ற அவன் கைகளில் அல்லவா இருந்தது.

கண்களை மூடி இருந்தாலும் அதை உணர்ந்த நான், ‘இன்னும் என்ன செய்யப் போறானோ?’ என்று யோசித்துக் கொண்டிருந்ததில் அவன் கூறியதை கவனிக்கத் தவறிவிட்டேன்.

அடுத்த நொடி, என் வாயில் எதுவோ திணிக்கப் பட்டது. ‘சீ, என்னது இது, ஒரு டேஸ்டும் இல்லாம மண்ணு மாதிரி இருக்கு! ஃபர்ஸ்ட் டைம் ஊட்டி விடுறான். ஏதாவது நல்லதா ஸ்வீட்டா ஊட்டி விட வேண்டியது தான?’

“ஹலோ மேடம், கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்க, இப்போ நீ சாப்பிட்டது, நீயே உன் கையால பண்ண ‘ஸ்வீட்’ தான். அது பேரு கூட ஏதோ சொன்னியே, ஹான் கேசரி!” என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறியதும், சட்டென்று கண்களை திறந்து பார்க்க, அங்கு அவன் கைகளில் இருந்ததோ, சற்று முன்பு எதை செய்து என்னை நானே பெருமையாக நினைத்தேனோ அதே கேசரி!

நானோ வாயில் வைத்ததை விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அவனை பார்த்து முழித்துக் கொண்டிருந்தேன். அவனோ சிரிப்பை அடக்க முடியாமல் என்னை பார்த்துக் கொண்டிருந்தான்.

கஷ்டப்பட்டு அவன் அள்ளி வைத்ததை விழுங்கினேன். ஏதோ சாதித்தவாறு நிமிர்ந்தால், அடுத்த வாய்க்காக தயாராக இருந்தான்.

‘ஆத்தாடி, என்னை வாந்தி எடுக்க வைக்காம விடமாட்டான் போலயே!’ என்று பதறிய நான், “இ…இல்ல எனக்கு போதும்.” என்றேன் தயங்கியவாறே.

“நீங்க சமைச்சதை அவங்களே சாப்பிடலைனா எப்படி?” என்று என் வாயில் திணித்தான்.

நான் மறுக்க மறுக்க அந்த கிண்ணத்தில் இருந்த எல்லாவற்றையும் எனக்குள் தள்ளிய பின்பே என்னை விட்டான்.

‘பாவி பாவி, சமைச்சது ஒரு குத்தமா! அதுவும் நீ சொல்லி தான சமைச்சேன். அதுக்காக இப்படி ஒரு பனிஷ்மெண்டா?’ என்று அவனை கோபமாகப் பார்த்தேன்.

அவனோ கொஞ்சமும் அசராமல், “நீ செஞ்சதை சாப்பிட்டு நான் மட்டும் ஹாஸ்பிடல் போகவா? கூட கம்பெனிக்கு ஆள் வேண்டாம்.” என்று கூற, அவனை முறைக்க மட்டுமே முடிந்தது என்னால், வாயை தான் திறக்க விடாமல் செய்து விட்டானே!

“நான் போகணும்.” என்றேன் கீழே பார்த்தவாறு.

“நான் என்ன உன்னை பிடிச்சா வச்சுருக்கேன்? போ.” என்றான் கண்களில் குறும்போடு.

‘இப்படி ஒட்டிட்டு நின்னா எப்படி போறதாம்?’ என்று மனதிற்குள் கூறியபடி நிமிர்ந்து அவனை பார்த்தேன்.

அவனோ ‘என்ன’ என்று புருவம் உயர்த்தி வினவினான். அவ்வளவு தான் என் கோபத்தின் ஆயுள்! அவன் ஒற்றை புருவம் உயர்த்தலில் என் கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது.

‘இவன் வேற ஆனாஊனா இப்படி பண்ணி என்னை ஸ்டன்னாக வச்சுடுறான்.’ என்று செல்லமாக சலித்துக் கொண்டேன்.

அவனோ இன்னும் சிரிப்புடன், லேசாக நகர்ந்து நான் செல்ல வழிவிட்டான். நானும் அவனை பார்க்காமல் கடந்து செல்ல, “ஓய் பப்ளி.” என்ற சத்தம் கேட்டது.

சத்தம் கேட்டு அதிர்ச்சியாக திரும்பினேன் நான். அவனோ அதே புன்னகையில், “தேங்க்ஸ், நான் கேட்டேன்னு இன்னைக்கே ‘எனக்காக’ சமைச்சதுக்கு.” என்று சிரிப்புடன் கூறினான்..

உள்ளுக்குள் கும்மாளமிட்டாலும் வெளியே அதைக் காட்டிக்கொள்ளாமல், “நான் ஒன்னும் ‘உங்களுக்காக’ சமைக்கல. எனக்கு தோணுச்சு அதான் சமைச்சேன். அப்பறம் இங்க கொண்டு வந்து கொடுத்ததும் உங்களுக்கு இல்ல. சுதா ஆன்ட்டிக்குத் தான்.” என்றேன்.

“ஆஹான், எனிவே தேங்க்ஸ் ஃபோர் தி ஒண்டர்ஃபுல் மொமெண்ட் பப்ளி!” என்றான்.

‘இவன் எந்த மொமெண்டை சொல்றான்?” என்று புரியாது பார்க்க, அவனோ நான் நினைத்தது புரிந்தது போல, “எல்லாத்துக்குமே தான் தேங்க்ஸ்!” என்றான்.

குப்பென சிவக்க ஆரம்பிக்க, ‘அடியேய் சீக்கிரம் இந்த இடத்தை விட்டு கிளம்பு’ என்று உள்ளிருந்து குரல் கேட்க, உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
19
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *