Loading

 

 

ஈர்ப்பு 24

 

“ஹே உன் லவ் ஸ்டோரியை சொல்லு டி.” என்று நான் கேட்டதும் சாண்டி என்னை முறைத்தாள்.

 

“சரி சரி மேடம் டென்ஷன் ஆகாதீங்க. என் ப்ரோ  எப்படி பெர்ஃபார்ம் பண்ணாருன்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்.” என்று சமாளிக்க முயன்றேன்.

 

“என்னாது ப்ரோவா! இது எப்போ இருந்து?” என்று சாண்டி கேட்க, ‘ஹ்ம்ம், உன்னை அவரு ‘என் ஆளு’ன்னு சொன்னதுல இருந்து.’ என்று நினைத்துக் கொண்டேன்.

 

அதற்கு பதிலாக, நீ தான் ரொம்ப தைரியமான ஆளாச்சே, நீ நினைச்சதை அவ கிட்ட சொல்லு, சொல்லித்தான் பாரு!’ என்று என் மனசாட்சி என்னை உசுப்ப, ‘ம்ச், அமைதியா இரு, அவ கிட்ட சொல்லி யாரு வாங்கி கட்டிக்கிறது?’ என்று அதை அடக்கினேன்.

 

“என்ன டி முழிக்கிற?” என்று மனசாட்சியுடன் நடந்த சம்பாஷனைகளை பார்த்து அவள் வினவ, “ச்சேச்சே, ஒன்னும் இல்ல டி. நீ சொல்லு என்ன நடந்துச்சுன்னு.” என்றேன் கதை கேட்கும் ஆர்வத்துடன்.

 

“புது கலெக்ஷன்ஸ் இருக்கான்னு கேட்க வந்தாராம். அப்பறம் ஜீவி பேசுனதுக்கு சாரி கேட்டாரு. அப்பறம்….” என்ற சிறிது தயங்கிவிட்டு, “அவ்ளோ தான் நடந்துச்சு…” என்றாள்.

 

“அவ்ளோ தானா? என்கிட்ட ஏதோ மறைக்குற மாதிரி இருக்கே?” என்று சந்தேகமாக அவளை பார்க்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் போய் கஸ்டமர்ஸை கவனிக்கிறேன். நீ என்ன இங்கயே ட்ரீம்ஸ்ல டூயட் பாடிட்டு இருக்கப் போறீயா, இல்ல என் கூட வரியா?” என்று சமாளித்தாள் அவள்.

 

‘ஹும், ஏதாவது சென்சார் சீனா இருக்குமோ!’ என்று நான் யோசித்தாலும், அதை வெளியே சொல்ல முடியாத காரணத்தினால், “போடி வரேன்.” என்றேன்.

 

‘என்கிட்ட சொல்லாம போறீயா, எனக்கு யாரு கிட்ட கேட்கணும்னு  தெரியும் டி. நான் என் ப்ரோ கிட்ட கேட்டுகிறேன். அய்யயோ ப்ரோ நம்பர் தெரியாதே. ஹ்ம்ம், எப்படியும் இவளை பார்க்க இங்க தான வரணும். அப்போ கேட்டுக்கலாம்.’ என்று நினைத்தவாறே வேலையை பார்க்கச் சென்றேன்.

 

*****

 

அன்று வேலையை முடித்து வீட்டிற்கு செல்கையில், அங்கு என்னை வரவேற்றது ப்ரியா தான். அருகில் சிரித்தபடி அமர்ந்திருந்தாள் ஷீலா. வந்ததற்கு இப்பொழுது சற்று தெளிவாய் இருந்தாள்.

 

அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.

 

“ஹே நதி.” என்று ப்ரியா என்னைக் கண்டதும் வரவேற்க, “என்ன டி அதிசயமா வீட்டுக்கு வந்துருக்க?” என்று அவளை மேலும் கீழும் பார்த்தேன்.

 

“ஏன் இது வரைக்கும் உங்க வீட்டுக்கே வந்தது இல்லயா? புதுசா கேட்குற.” என்று ப்ரியா வினவ, “இல்லங்க மேடம் யாருக்காக வீட்டுக்கு வந்தீங்கன்னு கேட்டேன்?” என்று அவளின் கையில் கிள்ளினேன்.  

 

அவள் என் அருகில் வந்து, மெதுவான குரலில், “சும்மா இரு டி, ஷீலா வேற இருக்கா.” என்று சொல்லவும் தான் ஷீலாவும் எங்களுடன் இருப்பது நினைவு வந்தது.

 

ஆனால் ஷீலாவோ, “வேற யாரு, உங்க அண்ணாவை தேடித் தான் வந்திருப்பா. என்ன ப்ரியா கரெக்டா?” என்று எங்களுக்கு அதிர்ச்சியளித்தாள்.

 

ப்ரியாவோ அதிர்ச்சியுடன், “உனக்கு எப்படி தெரியும்?” என்று வினவ, “ஹ்ம்ம் நீ வெளிப்படையா அவனை சைட் அடிச்சிருப்ப. அதான் கண்டுபிடிச்சுருப்பா.” என்று கூறி ஷீலாவிடம் ஹை-ஃபை அடித்துக் கொண்டேன்.

 

“ச்சு, அப்படியெல்லாம் இல்ல.” என்று சிணுங்கினாள் ப்ரியா.

 

அப்போது என் அம்மா, “ப்ரியா மா இந்தா காஃபி.” என்று வந்தவர், என்னைப் பார்த்துவிட்டு, “நீ எப்போ டி வந்த?” என்று கேட்டார்.

 

“நீ காஃபி போடும் போதே வந்துட்டேன். எனக்கு எங்க காஃபி?” என்றேன்.

 

“நீ இப்போ வருவன்னு எனக்கு எப்படி டி தெரியும்? கிச்சன்ல வந்து நீயே வாங்கிக்கோ.’ என்றார்.

 

நானும் சமையலறைக்கு எனக்கு பிடித்த குளம்பியை வாங்கச் சென்றேன்.

 

“ஏன் டி இது தான் நீ வர நேரமா? இந்த நேரத்துக்கு வந்தா கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் எப்படி சமாளிப்ப?” என்று அவர் கவலையாக வினவ, “அதெல்லாம் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் பாத்துக்கலாம்.” என்று அசால்ட்டாக கூறினேன்.

 

“என்ன ரொம்ப நாள் இருக்குன்னு நினைப்போ? நாளைக்கே உங்க அப்பா கிட்ட சொல்லி உனக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கனும்!” என்று அவர் கூற, ‘அச்சோ இதென்ன மீண்டும் மீண்டுமா? இதை எப்படியாவது டைவர்ட் பண்ணனுமே!’ என்று அவசரமாக சிந்திக்க ஆரம்பித்தேன்.

 

“ம்மா, இப்போ எனக்கு என்ன அவசரம். நான் முன்னாடியே சொன்னது தான், அபி அண்ணாக்கு ஃபர்ஸ்ட் பாருங்க.” என்று காலை உதைத்துக் கொண்டு சிணுங்கினேன்.

 

அதைக் கண்டவர், “அடியேய், முதல்ல இப்படி தரையை உதைக்குறதை நிறுத்து. இன்னும் சின்ன பாப்பான்னு நினைப்பு!” என்று என்னை திட்டி விட்டு, “உனக்கும் தான டி வயசாச்சு. அவனை கேட்டா உனக்கு பார்க்க சொல்றான். உன்னை கேட்டா அவனுக்கு பார்க்க சொல்ற. என்ன தான் டி நினைச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?” என்றார்.

 

“ஓஹோ, அப்போ உன் பையன் எது சொன்னாலும் கேட்ப, நான் சொன்னா மட்டும் கேக்க மாட்ட. அப்படி தான?” என்று பேச்சை திசை திருப்ப முயன்றேன்.

 

“இவ்ளோ நேரம் அபி அண்ணான்னு சொன்ன, இப்போ மட்டும் ‘என் பையனா’? அவனுக்கும் பொண்ணு தேடணும்ல.” என்று நான் நினைத்தது போல திசையும் மாறியது.

 

கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், “அதான் அப்போவே சொன்னேன்ல, அவனுக்கு உனக்கு பிடிச்ச மாதிரி சேலை கட்டுற பொண்ணு தான் வேணுமாம்!” என்றேன் சிரிப்புடன்.

 

“என்ன டி குழப்புற? மொட்டையா சேலை கட்டுற பொண்ணுனா நான் எங்க போவேன்?” என்று அவர் புலம்ப, ‘ஐயோ சரியான ட்யூப்-லைட் ம்மா நீ!’ என்று நொந்தேன் நான்.

 

“நீ எதுக்கு தேடிப் போற? அதான் உன்னை தேடி அவளே வந்திருக்காளே.” என்று கூறியவாறே என் அம்மாவின் நாடியைப் பிடித்து கூடத்தில் அமர்ந்திருந்த ப்ரியாவை நோக்கி திருப்பினேன்.

 

அங்கு ப்ரியா ப்ளூ கலர் ஸாஃப்ட் சில்க் சேலையில் அழகாக இருந்தாள். அதைப் பார்த்ததும் என் அம்மாவிற்கும் புரிந்தது போல என்னைப் பார்த்தார்.

 

“டி நதி, நீ ப்ரியாவையா சொல்ற?” என்றார் எதிர்பார்ப்புடன்.

 

“ஆமா ஆமா ம்மா.” என்று நாலாபக்கமும் தலையை ஆட்டினேன் நான்.

 

“அந்த பொண்ணுக்கு பிடிக்குமா?” என்று அவர் வினவ, “அதெல்லாம் பிடிச்சதுனால தான் பேசிட்டு இருக்கேன்.” என்றேன்.

 

“நிஜமாவா டி சொல்ற? இவ்ளோ அழகான பொண்ணா என் மருமக!” என்று அவர் வியக்க, “ம்மா, உன் பையனை நீயே கம்மியா சொல்றியே!” என்றேன் குறும்பாக.

 

“நான் எப்போ டி அப்படி சொன்னேன்? ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கும். அதுவும் என் மருமகளை பாரு, சேலை கட்டி பூ வச்சு மங்களகரமா இருக்கா!” என்று வருங்கால மருமகளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க, உதட்டை சுழித்த நானோ, “ரொம்பத்தான், இப்போவே உன் மருமகளுக்கு ஜால்ராவா? பொழைச்சுக்குவ ம்மா!” என்றேன்.

 

“அடிங்… ஓவரா வாய் பேசாத டி. ஆனா இந்த அபி பையனும் என்கிட்டே அவன் லவ் பண்ணுறதை சொல்லவே இல்லையே டி.” என்றார் சிறிது ஏமாற்றத்துடன்.

 

“உனக்கு ஆசை தான் ம்மா. அவகிட்டயே இன்னும் சொல்லலயாம். அதுக்குள்ள உன்கிட்ட சொல்லிடுவாராமா?” என்று நான் நக்கலாக கூற, “திரும்பவும் என்ன டி குழப்புற? அவனுக்கு பிடிச்சுருக்குன்னு சொன்ன.” என்றார் அவர்.

 

“சாருக்கு பிடிச்சுருக்கு தான். ஆனா அதை வாய்விட்டு சொல்ல மாட்டாராம். கேட்டா, கேரியர் செட்டில்மெண்ட்ன்னு ஏதேதோ ரீசன் சொல்லிட்டு இருக்கான் உன் பையன்.”

 

“இப்போ என்ன டி பண்ண போறோம்?”

 

“ஹான், இப்போ கேட்டியே, இது நல்ல கேள்வி! பண்ண போறோம் இல்ல. போற! நீ தான் ம்மா அவன் கிட்ட பேசப் போற.”

 

“என்னது நான் பேசணுமா? அதெல்லாம் முடியாது.”

 

“பின்ன உனக்கு டப்பிங் ஆர்டிஸ்டா கூப்பிட முடியும்? உனக்கு உன் பையன் கல்யாணம் நடக்கணும்னா நீ பேசித் தான் ஆகணும். ஸ்கிரிப்ட் எல்லாம் ஆன்-ஸ்பாட் தான். இப்போ வா ரொம்ப நேரமா நம்மள காணோம்ன்னு தேடிட்டு இருப்பாங்க.” என்று என் அம்மாவிற்கு பேச இடம் கொடுக்காமலேயே கூடத்திற்கு கூட்டிச் சென்றேன்.

 

“என்ன ஆன்ட்டி இவ்ளோ நேரம் காணாம போய்டீங்க? என்ன அம்மாவும் பொண்ணும் எங்களுக்கு தெரியாம சீக்ரெட் பேசிட்டு இருந்தீங்களா?” என்று ப்ரியா கேட்டாள்.

 

“ஹ்ம்ம், ஆமா உன்னை பத்தி தான் டி அண்ணி பேசிட்டு இருந்தோம்.” என்று கண்ணடித்து கூறினேன்.

 

நான் எதை சொல்கிறேன் என்று புரிந்து கொண்ட அவள் சற்று தயக்கத்துடன், “ஆன்ட்டி… அ.. அது… வந்து…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, என் அம்மா, “ஆன்ட்டி எதுக்கு மா, அழகா அத்தைன்னு கூப்பிட வேண்டியது தான?” என்றார்.

 

“அச்சோ ம்மா, அவ தான் ஏதோ சொல்ல வந்தால, அதுக்குள்ள நீ ஏன் நடுவுல பேசுன? டெரர் மாமியாரா இருப்பன்னு பார்த்தா இப்படி டம்மி மாமியாரா இருக்க!” என்றேன்.

 

“போடி, உனக்கு எப்படிப் பட்ட மாமியார் வராங்கன்னு நானும் பார்க்குறேன்.” என்று கூறியவாறே அவரின் ‘புது மருமகளை’ அணைத்துக் கொண்டார். அதை ஷீலா மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

‘என் மாமியாரெல்லாம் உன்னை விட ஸாஃப்ட் தான் ம்மா.’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

 

அப்போது தான் அபி அவன் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வருவதைக் கவனித்தேன்.

 

‘நதி உன் பெர்ஃபார்மன்ஸ ஸ்டார்ட் பண்ண வேண்டிய நேரம் வந்தாச்சு!’ என்று நினைத்தவாறே, “இப்போ எதுக்கு ம்மா அவளை அத்தைன்னு கூப்பிட சொல்றீங்க? அதான் சிலருக்கு அவ இங்க வரதே பிடிக்கலையே. அப்பறம் எதுக்கு தேவை இல்லாம ஒருத்தர் மனசுல ஆசையை விதைக்கணும்? அப்பறம் அது நடக்கலன்னு ஃபீல் பண்ணனும். ஹே நீ ஆன்ட்டினே கூப்பிடு டி.” என்றேன் கோபத்தை முயன்று வரவழைத்த குரலில்.

 

என் அம்மாவும் ப்ரியாவும் என்னை புரியாமல் பார்க்க, நான் அவர்களுக்கு கண்களாலேயே வாசலை சுட்டிக் காட்டினேன். அங்கு நான் பேசியவற்றை கேட்ட அபியோ முகத்தில் கலவையான உணர்ச்சிகளோடு நின்றிருந்தான்.

 

என் அம்மா மென்குரலில், “இப்போ நான் என்ன டி சொல்லணும்?” என்றார்.

 

மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு, “அச்சோ ம்மா, இப்போ டையலாக்கா எழுதி தர முடியும்! சும்மா நீயா ஏதாவது பேசு ம்மா.” என்று அடிக்குரலில் கூறினேன்.

 

“சரி சரி ஓவரா அலுத்துக்காத. இப்போ பாரு என் நடிப்ப!” என்று என்னிடம் முணுமுணுத்தவர், “ஏன் டி இப்படி சொல்ற? அந்த பொண்ணு ஆசையா அத்தைன்னு கூப்பிட வந்தா. அத்தைன்னு கூப்பிட்டா உனக்கு என்ன?” என்றார்.

 

‘அடப்பாவி அம்மா, நீயே அத்தைன்னு கூப்பிட சொல்லிட்டு, இப்போ பழியை அவ மேல தூக்கிப் போட்டுட்ட!’

 

அங்கு பாவமாக நின்றிருந்த இரண்டு ஜீவன்கள் – ப்ரியா மற்றும் அபி தான். ஷீலாவோ சிரிப்பை அடக்க முடியாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“ம்மா, அத்தைன்னு சொன்னா எனக்கு ஒன்னும் இல்ல. ஆனா சிலருக்கு பிடிக்குமோ பிடிக்காதோ. யாருக்குத் தெரியும்?” என்றேன் அபியைப் பார்த்துக் கொண்டே.

 

“டேய் அபி, நீ எப்போ வந்த? ப்ரியா என்னை அத்தைன்னு கூப்பிட கூடாதுன்னு உன் தங்கச்சி சொல்றா. ஏன்னு கேட்டா ஏதோ புரியாத மாதிரியே பேசுறா. நீயே எதுக்குன்னு கேட்டு சொல்லு” என்று அவனிடமே கூறினார்.

 

‘பத்து ரூபாக்கு நடிக்க சொன்னா, பத்தாயிரம் ரூபாக்கு நடிக்கிறயே ம்மா!.’ என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்தேன்.

 

“ம்மா, எனக்கு டையர்டா இருக்கு. ஃபர்ஸ்ட் ஒரு காஃபி கொடுங்க.” என்றவாறே அவன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

‘ரூம்முக்குள்ள போனா விட்டுடுவோமா?’

 

“என்ன டி உங்க அண்ணன் ரூம்முக்குள்ள போய்ட்டான்?” என்று என் அம்மா வினவ, “நீயும் பின்னாடியே காபி எடுத்துட்டு போ.” என்றவாறே என் திட்டத்தை அவருக்கு விளக்கினேன்.

 

அவர் அறைக்குள் சென்ற பின், நானும் ப்ரியாவும் அவன் அறைக்கு வெளியே ஒளிந்து நின்றோம்.

 

“ஹே நதி, உங்க அண்ணா ஏதோ டென்ஷன்ல வந்திருப்பாங்க போல. நம்ம இதை இன்னொரு நாள் கேட்போமே.” என்று அவள் கூற, “ப்ச் என்ன ஃபீலிங்ஸா? இங்க உங்க லவுக்காக நான் போராடி டையர்ட்டா இருக்கேன். நான் எல்லாம் உன் கண்ணுக்கு தெரிய மாட்டேன்ல!” என்று அவளை நோக்க, அவளோ “உன் அண்ணிக்காக இது கூட பண்ண மாட்டியா டி.” என்று என் நாடியை பிடித்து கொஞ்சினாள்.

 

“பண்ணித் தொலைக்கிறேன். டென்ஷன்ல இருந்தா தான் அவனை ஈஸியா குழப்பிவிட்டு அவனோட மனசுல இருக்கிறதை தெரிஞ்சுக்க முடியும். உன் லவ் சக்ஸஸ் ஆகணும்னா கொஞ்ச நேரம் பேசாம கோ-ஆப்ரேட் பண்ணு.” என்றேன்.

 

அங்கு உள்ளே சென்ற அம்மாவோ அவரின் திறமையைக் காட்டினார்.

 

“அபி, அம்மா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. எப்போ கல்யாணப் பேச்செடுத்தாலும் தள்ளிப் போட்டுக்கிட்டே வர. உன் தங்கச்சியும் வீட்டுல அண்ணி கூட ஜாலியா இருந்துட்டு அப்பறம் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதம் பிடிக்குறா. நீயாவது அம்மா பேச்சை கேட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ டா.”

 

“ம்மா… அது..”

 

“நீ ஒன்னும் சொல்லாத. உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு மட்டும் சொல்லு.” என்று அவனைப் பேச விடாமல் கார்னர் செய்ய, அவனோ விட்டால் போதும் என்று, “உனக்கு எந்த பொண்ணை பிடிக்குதோ, எனக்கும் அந்த பொண்ணே ஓகே!” என்று சொல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டான்.

 

“ஹப்பா, இப்போ தான் நிம்மதியா இருக்கு அபி. நீ எங்க வேற பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன்.” என்று என் அம்மா சொன்னதும், அவன் முகம் போன போக்கை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

என் அருகிலிருந்த ப்ரியாவோ என்னை இடித்து, “எதுக்கு டி இப்போ லூசு மாதிரி சிரிக்கிற? நானே அவங்க ஃபீல் பண்றாங்களேன்னு சோகமா இருக்கேன். நீ என்னனா சிரிக்கிற!” என்றாள் என்னை முறைத்துக் கொண்டே.

 

“ஹான், ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் சேர்ந்து ஃபீல் பண்ணுங்க! வொய் மீ?” என்று கூறி மீண்டும் சிரித்தேன்.

 

அதற்குள் என் அம்மா அடுத்த அதிர்ச்சியை அபிக்கு கொடுத்தார்.

 

“ப்ரியா பத்தி நீ என்ன நினைக்குற அபி?” என்று மொட்டையாக அவர் வினவ, அவன் குடித்துக் கொண்டிருந்த காஃபி அவனுக்கு புரையேறியது…

 

“ம்மா யாரை சொன்னீங்க?”என்று உறுதிபடுத்திக் கொள்ள அவன் மீண்டும் வினவ, “அதான் நதியோட பிரெண்ட் ப்ரியா, பொண்ணு அழகா இருக்கா. பாரு எவ்ளோ லக்ஷணமா சேலைல வந்திருக்கா. நல்லாவும் படிச்சுருக்கா. உன் வேலைலயும் உனக்கு உதவியா இருப்பா. உனக்கு அந்த பொண்ண பிடிச்சுருக்கா?” என்று அவனை பேசவே விடாமல் இறுதியாக அவன் விருப்பத்தை வினவினார்.

 

“அடிப்பாவி சேலை கட்டிட்டு வந்தே எங்க அம்மாவை கரெக்ட் பண்ணிட்டயே டி!” என்றேன் ப்ரியாவிடம்…

 

“க்கும், ஆனா யாரை கரெக்ட் பண்ண நினைச்சேனோ அவரு ஒன்னும் சொல்லையே!” என்று மென்குரலில் கூறினாள் ப்ரியா.

 

“பொறுமையா இருங்க அண்ணி அவர்களே!” என்று அவளை கேலி செய்தேன் நான்.

 

அங்கு அபியோ என்ன சொல்வதென்று தடுமாறிக் கொண்டிருந்தான்.

 

“ம்மா, அந்த பொண்ணு சரி வராது.”

 

“ஏன் டா அபி அப்படி சொல்ற? அந்த பொண்ணு அழகா இல்லயா?”

 

“அதெல்லாம் அழகா தான் இருக்கா.”

 

“வேற என்ன டா குறைச்சல்!”

 

“குறையே இல்ல ம்மா, எல்லாம் நம்மள விட நிறையா இருக்கு. அது தான் பிரச்சனையே!” என்றான் தீவிரமாக.

 

எனக்கு அவன் பிரச்சனை என்னவென்று ஓரளவிற்கு புரிந்தது. இருந்தாலும் அவன் வாயிலிருந்தே வரட்டும் என்று அமைதியாக இருந்தேன்.

 

“ம்மா, அவங்க எல்லாம் பெரிய ஆளுங்க. அவங்க அப்பா பெரிய லெவல்ல பிசினஸ் பண்ணிட்டு இருக்காரு. அவங்க எப்படி எனக்கு பொண்ணு தருவாங்கன்னு யோசிக்காம பேசிட்டு இருக்கீங்க.”

 

“ஹ்ம்ம், அவங்க பொண்ணு உன்னை லவ் பண்ணா தருவாங்க.” என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தேன் நான்.

 

அவன் முழிக்க, “ம்மா, வாங்க நாம இங்கேயிருந்து கிளம்புவோம்… மத்ததெல்லாம் அவங்க ரெண்டு பேரும் பேசிக்குவாங்க.” என்றவாறே அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

 

“நதி எப்படி இருந்துச்சு டி என் நடிப்பு?” என்று என் அம்மா வினவ, “பின்னிட்ட போ. உனக்குள்ள இப்படி ஒரு திறமையா?” என்று கேலி செய்தேன்.

 

“போடி, ஆமா உங்க அப்பா கிட்ட என்ன சொல்லி சமாளிக்கப் போற?” என்று அவர் வினவ,பி“என்னாது சமாளிக்கப் போறயா! என்னை எதுக்கு கோர்த்து விடுற? நீ ஆச்சு உன் பையன் ஆச்சு. ஆள விடுங்கப்பா.” என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தேன்.

 

 

*****

 

அபியின் அறையில்…

 

“சோ உங்களுக்கு என்னை பிடிக்கும். ஆனா, என் ஸ்டேட்டஸால தான் என்ன அவாய்ட் பண்ணிருக்கீங்க. அப்படி தான?”

 

அபியோ அவளின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

 

“இவ்ளோ நேரம் உங்க அம்மா கிட்ட பெரிசா எக்ஸ்பிளைன் பண்ணீங்கள, இப்போ மட்டும் எதுக்கு வாயடைச்சு நிக்கிறீங்க? எதுவா இருந்தாலும் நேரடியா என்கிட்ட சொல்லுங்க. அதை விட்டுட்டு அவாய்ட் பண்ணாதீங்க.” என்றவளின் குரலில் சோகத்தினால் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது.

 

என்ன முயன்றும் அடக்கமுடியாமல் மெல்லிய கேவல் வெளிப்பட்டது அவளிடம். அவளின் சிறு சோகத்தையும் பொறுக்க முடியாமல், “ரியா ப்ளீஸ் அழுகாத.” என்று முதல் முறையாக அவனாக அவளை நோக்கி அடியெடுத்து வைத்திருந்தான்.

 

‘ரியா’ என்ற அவனின் செல்லப் பெயர் கூறியது அவளின் மேல் அவனுக்கிருக்கும் நேசத்தை.

 

ப்ரியா இதைக் கவனித்தாலும், எது சொல்வாதாயிருந்தாலும் அவனே கூறட்டும் என்று கண்ணீர் வழிந்தபடி அமைதியாக இருந்தாள்…

 

அவனே அருகில் வந்து அவளது கண்ணீரைத் துடைத்தான் அபி.

 

“இதுக்காகத் தான்! உன் கண்ணுல இருந்து எந்த காரணத்துக்காகவும் கண்ணீர் வரக் கூடாதுன்னு தான் உன்னை பிடிச்சிருந்தும் உன்னை அவாய்ட் பண்ற மாதிரி நடிச்சேன்!”

 

அவள் தன் கண்களை உயர்த்தி அவன் முகத்தை பார்க்கவும், அவனும் சிரித்துக்கொண்டே, “ஆமா நடிக்கத்தான் செஞ்சேன். ஒவ்வொரு முறையும் நீ என்னை சுத்தி வரும் போதும் என்னை கண்ட்ரோல் பண்ண நான் தான் படாத பாடு பட்டேன். எங்க என் கண்ட்ரோலை மீறி உன்கிட்ட லவ் சொல்லிடுவேனோன்னு பயந்து தான் உன்னை திட்டி அனுப்பிருக்கேன்.” என்று கூறினான்.

 

அதைக் கேட்டு அவள் முறைக்க, அவனோ அவள் மூக்கை பிடித்து ஆட்டி, “ஆனா கடைசில குடும்பமே சேர்ந்து இப்போ என் லவ்வை சொல்ல வச்சுடீங்கள!” என்றான்.

 

“இப்போ கூட எங்க சொன்னீங்க? அரை பக்கத்துக்கு டையலாக் தான் பேசியிருக்கீங்க!” என்று அவள் முணுமுணுக்க, “ஏன் மேடம்க்கு சொன்னா தான் தெரியுமா?” என்றான் அவளை ரசனையுடன் பார்த்தபடி.

 

“ஹலோ, இன்னும் பேச வேண்டியது எவ்ளோவோ இருக்கு! அதுக்குள்ள என்ன லுக்?”

 

“இதுக்கு தான் அந்த ரவுடி கூட அதிகமா சேராதன்னு சொல்றது. இப்போ பாரு அவளை மாதிரியே பேசுற! சின்ன வயசுல எவ்ளோ ஸாஃப்டா பேசுவ.”

 

“அப்போ என்ன சின்ன வயசுல பார்த்ததும் ஞாபகம் இருக்கு உங்களுக்கு!”

 

“ஹ்ம்ம், அந்த குட்டி முகம் ரோஸ் கலர் மப்ளர்குள்ள இருந்து எல்லாரையும் பார்த்து அழகா சிரிக்குமே, அந்த ஏஞ்சலை நியாபகம் இல்லாம இருக்குமா? அப்பறம் ஸ்கூல்ல நதியை கூப்பிட வரப்போ என் சவுண்ட் கேட்டாலே அங்க இருந்து ஓடிப்போற அந்த குட்டிப் பொண்ண மறக்கத்தான் முடியுமா? இல்ல பெங்களூர்ல நான் பார்க்காதப்போ என்னை ரசிச்சு பார்த்துட்டு, நான் பார்க்குறப்போ எல்லாம் பிரெண்ட் பின்னாடி ஒளிஞ்ச என் பிரின்சஸை நினைக்காம இருக்க முடியுமா?”

 

“ஹே நா… நான் உங்… ங்களை பெங்களூர்ல பார்த்தது உங்களுக்கு எப்படி தெரியும்? அப்போ உங்களுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சுதா?” என்றாள் கொஞ்சம் தடுமாற்றம் நிறைய ஆச்சர்யத்துடன்…

 

“அது எப்படி தெரியாம போகும்? நீயும் உன் பிரெண்டும் பண்ண அலப்பரைகள் அப்படி! டெய்லி என் மொபைலை செல்ஃபி எடுக்கப் போறேன்னு வாங்கி அவ பண்ண கூத்துல அதுல அப்படி என்ன பண்ணுறான்னு பார்த்தபோ தான் உன் ஃபோட்டோவை பார்த்தேன். அதுவும் போஸ் கொடுக்குறேன்னு நாக்கை வெளிய விட்டு ஏதோ ஜோக்கர் மாதிரி இருந்த!” என்று அவன் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

 

அதில் ரோஷம் வரப்பெற்றவளாக, “ஹலோ, அதெல்லாம் என் பிரெண்டுக்கு அனுப்பின ஃபோட்டோஸ்… நீங்க அதை திருட்டுத்தனமா பார்த்ததும் இல்லாம என்கிட்டயே கமெண்ட் பண்ணுறீங்களா?” என்றாள்.

 

“ஓய் திருட்டுத்தனமாவா? அது என் மொபைல். மொபைலை பிடுங்கி வச்சுக்கிட்டு பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் சேர்ந்து அட்ராசிட்டிஸ் பண்ணிட்டு, இப்போ என்னை திருடன்னு சொல்றியா?”

 

“ஆமா ஆமா திருடன் தான்!” என்று அவள் முணுமுணுக்க, “என்ன ரியா சொன்ன, எனக்கு சரியா கேட்கல!” என்றவாறே அவளை நெருங்கினான்.

 

“ஹலோ இன்னும் ஃபுல்லா சொல்லி முடிக்கல. சோ, அங்கேயே நின்னு சொல்லுங்க.”

 

“அது என்ன ஹலோ, நீ தான் எனக்கு ஷார்ட் நேம் வச்சுருக்கியே. அதை சொல்லி கூப்பிட வேண்டியது தான!”

 

“அ…அது… எப்படி உங்களுக்கு தெரியும்?”

 

“ம்ம்ம் சிலர் ‘என் ஆளு என் உரிமை! அப்படி தான் பார்ப்பேன்!’ன்னு சொல்லிட்டு இருந்ததை கேட்டேன்.”

 

“அப்போ ஒட்டு கேட்டீங்களா?”

 

“நீங்க என்ன சீக்ரெட் மாதிரியா பேசுனீங்க?”

 

“க்கும், இப்போ என்ன டாபிக் மாத்துறீங்களா?”

 

“நானா மாத்தல மா, நீ தான் டெம்ப்ட் பண்ற!” என்றவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு, “ம்ம்ம் சரி நீ எப்படி பெங்களூர் வந்தனு சொல்லு.”

 

“நாங்க ஐ.விக்காக பெங்களூர் வந்தோம். எல்லாம் முடிச்சுட்டு ஷாப்பிங் பண்றப்போ தான் உங்களை பார்த்தேன். பார்த்தவுடனே நீங்க நதியோட அண்ணான்னு தெரிஞ்சுது. அதுக்கு முன்னாடியே உங்க மேல கிரஷ் இருந்துச்சு. அன்னைக்கு உங்களை நேர்ல பார்த்ததும், என்னனே தெரியாத புது ஃபீல்! என்னை அறியாமலேயே உங்களை பார்த்துட்டு இருந்தேன்.”

 

“ம்ம்ம், நீ அப்படி பார்த்ததை தான் என் பிரெண்ட் பார்த்து என்கிட்ட சொன்னான். அப்பறம் தான் உன்னை பார்த்தேன். வயலட் கலர் ஃபிரில் ட்ரெஸ்ல அழகா பிரின்சஸ் மாதிரி இருந்த.” என்றவாறே அருகில் நெருங்கினான்.

 

அவளோ சுவரில் இடித்து நிற்க, அவன் தன் இரு கைகளையும் அவள் இரு புறமும் ஊன்றி நின்றான்.

 

“இவ்ளோ லவ் உள்ள வச்சுட்டு எதுக்கு என் ஸ்டேட்டஸ் பார்த்து என்னை அவாய்ட் பண்ணீங்க?” என்று அவள் கூறியபோது தானாக ஒரு இறுக்கம் அவனுள் எழுந்தது. அவள் கூற்றில் அவன் கைகள் தானாக இறங்கின.

 

அவன் விலக எத்தனிக்க, அவளோ விடாமல் அவன் கைகளைப் பற்றி, “இப்போ என்னாச்சு? எங்க வீட்டுல நம்ம லவ்வை அக்ஸெப்ட் பண்ணிட்டாங்கன்னு சொன்னா நார்மல் ஆகிடுவீங்களா?” என்று அவள் கண்சிமிட்டி கேட்க, அவனிற்கோ பெரும் ஆச்சர்யம்!

 

“ரியா, என்ன சொல்ற? உங்க வீட்டுல தெரியுமா?”

 

“ம்ம்ம் இங்க வரும்போதே உங்களை பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு தான் வந்தேன். அப்பா கிட்ட தான் உங்கள லவ் பண்றேன்னு ஃபர்ஸ்ட் சொன்னேன். சொன்னதும் அவரு ஒன்னும் சொல்லல. எனக்கும் பயமா தான் இருந்துச்சு. அப்பறம் ரெண்டு நாள் கழிச்சு, அவரே உங்களை பத்தி விசாரிச்சதுக்கு அப்பறம் அவருக்கும் ‘நோ’ சொல்ல எந்த ஆப்ஷன்ஸும் இல்ல.” என்றாள் முகம் முழுதும் சந்தோஷத்துடன்.

 

அவள் சொன்னதைக் கேட்டதும் சில நொடிகள் அமைதியாக இருந்த அபி, “சாரி ரியா, நீ நம்ம லவ்வுக்காக இவ்ளோ பண்ணிருக்க. ஆனா நான் எதுவுமே பண்ணல. உன்னை நிறையா ஹர்ட் பண்ணிருக்கேன். அதுவே எனக்கு கில்ட்டியா இருக்கு!” என்றான்.

 

அவள் ஆதரவாக அவன் கைகளைப் பிடித்ததும், “உன்னை அவாய்ட் பண்ணதுக்கு காரணம் நான் முன்னாடியே சொன்ன மாதிரி நீ எப்பவும் கஷ்டப்படக் கூடாதுன்னு தான். நீ அழக்கூடாதுன்னு நான் மீன் பண்ணது, என் கூடயிருந்து கஷ்டப்படுறது இல்ல. அதுக்காக நீ ஃபீல் பண்ண மாட்டேன்னு எனக்கு தெரியும்.” என்று அவன் சொன்னதும் அவளுக்கு கர்வமாக இருந்தது, தன்னவன் தன்னை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறான் என்று!

 

“சப்போஸ் நம்ம லவ்வுக்கு உங்க வீட்டுல சம்மதிக்கலைனா அதுக்காக நீ ஃபீல் பண்ணக் கூடாதுன்னு தான், உன்மேல லவ் இருந்தாலும் அதை மறைச்சேன். எப்பவும் உன் பேரண்ட்ஸா இல்ல நானான்னு ஒரு சாய்ஸ உனக்கு கொடுக்கக் கூடாதுன்னு தான், உன்னை பிடிச்சுருந்தும் அவாய்ட் பண்ணேன்.” என்று அவனின் நிலையை விளக்கினான். அவன் குரலில் அவள் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு இருந்தது.

 

அவளின் நிலையோ வார்த்தைகளால் சொல்ல முடியாததாக இருந்தது. தன் காதல் கைக்கூடுமா என்று ஐயம் கொண்டிருந்தவளுக்கு, தன் காதலைக் காட்டிலும் பல மடங்கு காதலுடன், தன் மகிழ்ச்சிக்காக யோசித்து இவ்வளவு நாட்கள் காத்திருந்தவனது காதல், அவள் இத்தனை நாட்கள் அடைந்த வருத்தத்திற்கு மருந்தானது.

 

அவன் முகமோ அவள் என்ன கூறப் போகிறாள் என்று தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவனை ஒத்திருந்தது!

 

அவளோ அவன் நிலையைக் கண்டு, சன்ன சிரிப்புடன், “என் அனவ்வை எனக்குத் தெரியும். நீங்க ‘நம்ம லவ்’ன்னு சொன்னதே எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு. இதுக்கு முன்னாடி லவ் பண்ணலைனா என்ன, இதுக்கு அப்பறம் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு லவ் பண்ணுங்க.” என்றாள்.

 

அவளின் ‘அனவ்’விலேயே அவன் குழப்பமெல்லாம் தெளிவடைந்து, முகம் பிரகாசமானது. அவள் சொல்லி முடித்ததும், தோளோடு சேர்த்தணைத்து, “தேங்க்ஸ் ரியா, என்ன புரிஞ்சிகிட்டதுக்கு.” என்றான்.

 

“ஹலோ…” என்று அவள் ஏதோ கூற வருவதற்குள் அவள் இடையோடு தூக்கி அருகில் நிறுத்தி, “இன்னும் என்ன டி ஹலோன்னு ஏலம் போட்டுட்டு இருக்க? அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அழகா அனவ்னு கூப்பிட்டேல, அப்பறம் என்ன?” என்று அவன் பேசிக் கொண்டிருக்க, அவளோ நடந்தவற்றிலிருந்து இன்னும் வெளிவர முடியாமல் அதிர்ச்சியில் இருந்தாள்.

 

அதைப் பார்த்து சிரித்த அவன், “என்ன ரியா ரொம்ப ஷாக்கா இருக்கா? இதுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் பண்ணிடலாமா?” என்றவாறே அவளின் இதழ்களை நோக்கினான்.

 

அதில் சுயத்திற்கு திரும்பியவள், “சீ போ…” என்று அவன் அசந்திருந்த நேரம் அவனைத் தள்ளிவிட்டு கீழே சென்று விட்டாள்.

 

அபிக்கோ அன்று காலை ராகுல் அவனிடம் தன் தோழிக்காக பேசியது மனதில் ஓடியது. அதுவும் ஒரு காரணம் அவன் இன்று தன் மனம் திறந்து ப்ரியாவிடம் பேசியதற்கு!

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
24
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்