Loading

 

 

ஈர்ப்பு 22

 

பொடிக்கில் வேலையை முடித்து விட்டு சோர்ந்து போய் வீட்டிற்கு வந்தேன். ஆனால் வீடோ அமைதியாக இருந்தது.

 

‘என்ன டா இது, முதல் நாள் பொண்ணு வேலைக்கு போயிட்டு வந்திருக்கேன். டையர்டா இருப்பாளே, வந்ததும் ஜூஸ் கொடுத்து கவனிக்கணும்னு இந்த அம்மாக்கு தோணுதா! என்ன இது அதிசயமா இந்த நேரத்துல அபியோட பைக் இங்க நிக்குது? வழக்கமா இப்போ ரெஸ்டாரண்ட்ல கூட்டமா இருக்கும்னு அங்க தான இருப்பான்!’ என்று பலவித யோசனைகளுடனே வீட்டிற்குள் நுழைந்தேன்.

 

கூடத்திற்குள் சென்று பார்த்தபோது நீள்சாய்விருக்கையில் அமர்ந்திருந்தார் என் அப்பா. அவர் முகத்தில் குழப்பம் சூழ்ந்திருந்தது. அருகிலுள்ள மற்றொரு நீள்சாய்விருக்கையில் அழுகையுடன் அமர்ந்திருந்தார் என் அத்தை.

 

என் அம்மாவோ என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நின்றிருந்த அபியோ  தீவிரமான சிந்தனையுடன் இருந்தான்.

 

‘இந்த அத்தை எதுக்கு இப்போ இங்க வந்திருக்காங்க? அடுத்த பிரச்சனையோட வந்துட்டாங்களா! அதான் அப்பாவே அவங்களை வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களே. அப்பறம் எதுக்கு மறுபடியும் வந்து சீன் க்ரீயேட் பண்றாங்க? இதுல சிம்பத்திக்காக அழுகை வேற!’ என்று மனதிற்குள் அவரைத் திட்டிக் கொண்டிருந்தேன்.

 

இவையெல்லாம் கூடத்தின் வாசலில் அவர்களை பார்த்தபோதே மனதில் தோன்றியவை. உள்ளே சென்றபோது தான் அங்கு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த ஷீலா கண்ணில் பட்டாள்.

 

‘ஷீலா வா இது!’ என்று ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது அவளின் தோற்றம். உடல் மெலிந்து கருத்து, உடையோ ஆங்காங்கே கிழிந்து என்று பார்க்கவே சகிக்க முடியாதவாறு இருந்தது அவளின் தற்போதைய நிலை.

 

இதற்கு முன்பு, லேசாக கிழிந்திருந்தாலும் அந்த உடையை தொடக்கூட மாட்டாள். ஆனால், இன்றோ கிழிசலில் பழைய துணியை ஒட்டுப் போட்டு தைத்து அணிந்திருந்தாள். இந்த நிலைமையே அவளின் திருமண வாழ்வின் அவலத்தைக் கூறியது.

 

நான் அதிர்ச்சியாகி நின்றதை பார்த்த அபி என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றான். அவன் அறைக்குள் சென்றதும், “என்ன ஆச்சு அபி? ஷீலா எப்படி இங்க வந்தா?” எனக் கேட்டேன்.

 

“எல்லாம் அவளா தேடிப் போய் விழுந்தாளே, அந்த வாழ்க்கை தந்த பரிசு!” என்றான் கோபமாக.

 

“ம்ச், அபிண்ணா ஃபர்ஸ்ட் என்ன நடந்துச்சுன்னு சொல்லு?” என்று அவனை அடக்கினேன்.

 

“அவளை இழுத்துட்டு ஓடிப் போனவன் சரியான ஃபிராடு. பணக்காரன்னு ஏமாத்தி இவளை கல்யாணம் பண்ணிருக்கான். இவங்க லைஃபை ஸ்டார்ட் பண்ணதுக்கு அப்பறம் தான் அவன்  பணக்காரன் இல்ல சாதாரண மிடில்-கிளாஸ்ஸுக்கும் கீழன்னு தெரிஞ்சுதாம். இவளும் அதை பொறுத்துக்கிட்டு வாழ்ந்துருக்கா. கொஞ்ச நாள் கழிச்சு தான் அவனோட உண்மையான முகம் தெரிஞ்சுதாம். அவன்கிட்ட இல்லாத கெட்டப் பழக்கமே இல்லையாம். தண்ணி, பொண்ணுங்க கூட பழக்கம்னு எல்லா கெட்டப் பழக்கத்துக்கும் அடிமையா இருந்தானாம். இவ அதையும் சகிச்சுட்டு இருந்தாளாம். அப்போ தான் அவ ப்ரேக்னன்ட்னு தெரிஞ்சுதாம்.” என்று அபி எரிச்சலாக கூறினான்.

 

“வாட் அவ ப்ரேக்னன்ட்டா இருக்காளா?” என்று நான் அதிர்ச்சியாக வினவ, “ம்ம்ம் சிக்ஸ் மந்த்ஸ்!” என்றான் அபி.

 

நான் அவளை பார்க்கும்போது தலை குனிந்து அவள்  தன் உடலைக் குறுக்கி அமர்ந்திருந்ததால் சரியாக கவனிக்கவில்லை.

 

“ஓஹ், சரி மேல சொல்லு.” என்றேன் நான்.

 

“இவ ப்ரேக்னன்ட்னு சொன்னதும் அவன் ரொம்ப கோபப்பட்டானாம்.  அன்னைலயிருந்து டெய்லி அவளுக்கு அடி உதை தானாம். ஒரு நாள் பொறுக்க முடியாம எதிர்த்து கேள்வி கேட்டதும்… உஃப்… அந்த பொறுக்கி சொன்னததை கேட்டு எனக்கே கோபம் வந்துடுச்சு! என்றான் பல்லைக் கடித்துக் கொண்டே.

 

“அப்படி என்ன சொன்னானாம்?” என்றேன் சிறிது நடுக்கத்துடனே.

 

“அவளை பணக்காரன் ஒருத்தனுக்கு வித்துட்டு அதுல வர காசை வச்சு ஜாலியா வாழ நினைச்சானாம். ஆனா, அதுக்குள்ள அவ ப்ரேக்னன்ட் ஆகி அவனோட திட்டத்துல மண்ணள்ளிப் போட்டுட்டாளாம்.” என்று அபி கூற, “ச்சே மனுஷனா அவனெல்லாம்! நம்பி வந்த பொண்ணை வச்சு காப்பாத்த துப்பில்ல, இதுல அவளை வேற ஒருத்தனுக்கு வித்துட்டு… ச்சைக் இந்த மாதிரி ஜென்மங்க எல்லாம் நம்ம கூட உலவிட்டு இருக்குன்னு நினைச்சாலே அருவருப்பா இருக்கு!” என்று கோபத்தில் கத்தினேன் நான்.

 

“ம்ம்ம், இன்னும் இருக்கு.  அடுத்த நாளே அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் அபார்ட் பண்ண சொன்னானாம். ஆனா, டாக்டர் தான் அபார்ட் பண்ணா உயிருக்கே ஆபத்துன்னு சொல்லி அதை தடுத்தாங்களாம்.”

 

“ம்ச்ச், இவனெல்லாம் அவங்க அம்மா வயித்துல இருக்குறப்போவே அபார்ட் பண்ணிருக்கணும்! இப்போ அவ எப்படி இங்க வந்தா?”

 

“டாக்டர் சொன்னதுனால கொஞ்ச நாள் அமைதியா இருந்த அவன் திரும்பியும் அவளை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சானாம். ஒரு நாள் தெருவே நின்னு வேடிக்கைப் பார்க்க அவளை அடிச்சானாம். தடுத்து நிறுத்த வந்தவங்களை அவக்கூட சேர்த்து அசிங்கமா பேசுனானாம். கொஞ்ச நாள் கழிச்சு அவ வெளிய வரவே இல்லன்னு சந்தேகப்பட்டு போலீஸை கூப்பிட்டு பார்த்தபோ தான், உள்ள இவ மயங்கி கிடந்தாளாம். அந்த பொறுக்கி குடிச்சுட்டு அவன் ஒரு பக்கம் மயக்கமா இருந்தானாம். அப்பறம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட் கொடுத்து அப்பறம்  விசாரிச்சதுல அவன் இது மாதிரி ஏற்கனவே பல பொண்ணுங்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணி அவங்களை மத்தவங்களுக்கு வித்தது தெரிய வந்துச்சாம். இவளுக்கு மயக்கம் தெளிஞ்சுவுடனே விசாரிச்சு அப்பாவை கூப்பிட்டு நடந்ததை சொன்னங்களாம்.”

 

“அந்த பொறுக்கி இப்போ எங்க இருக்கானாம்?” என்றேன் கோபத்துடன்.

 

“ஜெயில்ல தான் இருக்கான்!”

 

“ச்சே, அவனெல்லாம்  என்கவுண்டர்ல போட்டுத் தள்ளணும். எத்தன்ன பொண்ணுங்களை ஏமாத்திருக்கான்!”

 

அப்போது உள்ளே வந்த அம்மாவும் சிறிது நேரம் புலம்பினார். “உங்க அத்தை ரொம்ப ஓஞ்சு போயிட்டாங்க டி. உங்க அப்பா முகத்தை பார்க்க முடியல. ஹ்ம்ம், எல்லாம் அவங்கவங்க விதி படி தான் நடக்கும்!” என்றார் பெருமூச்சுடன்.

 

“ம்மா, ஷீலா எதுவும் சொல்லலையா?” என்று நான் வினவ, “ஹுஹும், உங்க அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அந்த செவத்தோரமா போய் தலை குனிஞ்சு உட்கார்ந்தவ தான், இப்பவரைக்கும் தலையை தூக்கல. இப்போ தான் ரெஸ்ட் எடுக்கட்டும்னு உனக்கு பக்கத்து ரூம்ல படுக்க சொன்னேன்.” என்றார்.

 

“சரி ம்மா, நான் போய் பார்க்குறேன்.” என்று அவளின் அறைக்கு சென்றேன்.

 

அங்கு அவளோ கட்டிலில் சாய்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

“ஷீலா…” மெதுவாக அழைத்தேன் நான்.

 

அவள் என்னை பார்த்து லேசாக சிரித்தாள். முன்போ அவளின் சிரிப்பில் ஆணவம் கலந்து இருக்கும். இன்றோ விரக்தி தான் இருந்தது.

 

“வா நதி…” என்றவளின் குரலே நடுங்கியது.

 

“எப்படி இருக்க?” என்று கேட்ட பின்பே கேள்வியின் அபத்தம் எனக்கு புரிந்தது.

 

“ஏதோ இருக்கேன் நதி. உங்க கிட்ட எல்லாம் சண்டை போட்டு, பொறாமைப்பட்டு, எனக்குன்னு சுயநலமா இருந்து, கடைசில என் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு!” என்று புலம்பினாள்.

 

“ஷீலா, இப்போ ஏன் பழசெல்லாம் பேசிட்டு இருக்க. எல்லாம் சரி ஆகும், கவலைப்படாத. எப்பவும் போலவே இரு.” என்று தேற்றினேன் நான்.

 

“இதான் நதி நீ. முன்னாடி உன்னை எப்படியெல்லாம் ட்ரீட் பண்ணிருக்கேன். ஆனா, அதெல்லம் மனசுல வச்சுக்காம இப்போவும் எனக்காக ஃபீல் பண்ற பார்த்தியா, நீ உண்மைலேயே கிரேட் நதி. என்னை சுத்தி இப்படி எனக்கு நல்லது நினைக்குறவங்களா இருந்தாலும், என் விதி இப்படி போய் மாட்டிக்கிட்டேன். இப்போ என்னோட சேர்ந்து என் குழந்தையும் இந்த உலகத்துல கஷ்டப்படணும்! அதை நினைக்குறப்போ எனக்கு வாழவே பிடிக்கல.” என்றாள் ஷீலா.

 

“ம்ச்ச், என்ன பேச்சு பேசுற? இப்போ என்ன, உன் மேரேஜ் லைஃப் சரி இல்ல. இப்போ அதுலயிருந்து வெளிய வந்துட்ட. இனிமே உன் குழந்தைக்காக வாழு. எதையும் ஃபேஸ் பண்ண கத்துக்கோ. அதை விட்டுட்டு வாழவே பிடிக்கலன்னு என்ன பேச்சு இது? இப்போ ஒழுங்கா வந்து சாப்பிடு.” என்றேன் கோபத்தில் சற்று குரலை உயர்த்தி.

 

“இல்ல இங்க ரூம்லயே சாப்பிட்டுக்குறேனே.” என்று அவள் மென்குரலில் கூற, “ஏன் இனி லைஃப் ஃபுல்லா ரூம்லயே அடஞ்சு கிடக்கப் போறியா? இல்லல அப்பறம் என்ன? ஃப்ரெஷ்-அப் ஆகிட்டு வா.” என்று கூறி வெளியே சென்றேன்.

 

நான் வெளியே வந்த போது ஹாலில் ஆனந்த் அமர்ந்திருந்தான். எனக்கு அப்போது தான் அவனை அழைத்தது ஞாபகம் வந்தது.

 

‘ச்சே இந்த நேரத்துலயா அவன் வரணும்!’ என்று நொந்தேன் மனதிற்குள்.

 

அத்தையோ அவனிடம் நடந்தவற்றை கூறி புலம்பிக் கொண்டிருந்தார். அவனோ தர்மசங்கடமாக இருந்ததை என்னால் உணர முடிந்தது. நிலைமையை கையாள நான் ஆனந்திடம் சென்று, “ஹாய் ஆனந்த், எனக்காக தான் வெயிட் பண்றீங்களா?” என்றேன்.

 

அவனோ புரியாமல் ‘ஆம்’ எனத் தலையாட்டினான்.

 

“ப்பா, ஆனந்த் கிட்ட பொடிக்குக்கு ஒரு ஹெல்ப் கேட்டிருந்தேன். அதை பத்தி அவரு கூட டிஸ்கஸ் பண்ணிட்டு வரேன்.” என்று அப்பாவிடம் கூற, அவரும், “ம்ம்ம், ரொம்ப தூரம் போகாதீங்க. சீக்கிரம் வீட்டுக்கு வரப் பாருங்க.” என்றார்.

 

அவருக்கும் சூழ்நிலை புரிந்திருக்கும். அதனாலேயே இந்த நேரத்திற்கு வெளியே சென்று பேசுமாறு கூறுகிறார் என்பது புரிந்தது.

 

நாங்கள் வெளியே வரும்போது, உள்ளே “இந்த நேரத்துல பொண்ணை அவன் கூட அனுப்பி வச்சுருக்கீங்க அண்ணா. யாராவது பார்த்தா என்ன சொல்வாங்க? அப்பறம் அவளும்…” என்ற அத்தையின் குரலும் அதற்கு அதட்டலான என் அப்பாவின் குரலும் கேட்டது.

 

‘சிலர் என்ன பட்டாலும் திருந்த மாட்டாங்க!’ என்று விரக்தியாக நினைத்துக் கொண்டேன்.

 

நாங்கள் அருகில் இருக்கும் பூங்காவினுள் நுழைந்தோம். பின் மாலை நேரமானதால் அவ்வளவாக கூட்டம் இல்லை. அங்கிருந்த மேசையில் அமர்ந்தோம்.

 

“சாரி ஆனந்த், நீங்க வந்தப்போ வீட்டுல சிஷுவேஷன் சரி இல்ல. அதான்…” என்று நான் இழுக்க, “பரவால நதி, எனக்கு புரியுது. இப்போ ஷீலா எப்படி இருக்காங்க?” என்று விசாரித்தான்.

 

அவனிடம் நடந்த அனைத்தையும் கூறினேன்.

 

“ரொம்ப கஷ்டமா இருக்கு அவளை இப்படி பார்க்க. பாவம் ரொம்ப அனுபவிச்சுட்டா இந்த ஆறு மாசத்துல. அந்த பாஸ்டர்ட்டை எல்லாம் நடு ரோட்டுல வச்சு என்கவுண்டர் பண்ணனும்.”

 

“ஹே நதி ரிலாக்ஸ், அதான் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துருக்கீங்கள. அப்பறம் என்ன?”

 

“இது வரைக்கும் எத்தனையோ கேஸ் இது மாதிரி நடந்துருக்கு. எத்தனை கேஸ்ல குற்றவாளிக்கு தண்டனை கிடைச்சுருக்கு?”

 

பேசிக் கொண்டேயிருக்கும்போது அவனிடமிருந்து எந்த சத்தமும் வராததால் திரும்பிப் பார்த்தேன். அவனோ முழித்துக் கொண்டிருந்தான்.

 

“என்னாச்சு?” என்று நான் வினவ, “இல்ல டாபிக் வேற எங்கேயோ போய்டுச்சே அதான்!” என்றான் அவன்.

 

“ஓஹ் ஆமால, சாரி ஆனந்த் உன்னை கூப்பிட்டது வேற விஷயத்துக்காக. ஆனா இப்போ அதை பத்தி பேசுற மூட்ல நான் இல்ல.” என்று நான் கூற, “ரிலாக்ஸ் நதி, நீ கேட்டாலும் என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல.” கடைசி வரியை முணுமுணுத்தான்.

 

“என்னது?” என்று நான் புருவம் சுருக்கி வினவ, “ஒன்னும் இல்ல. கிளம்பலாமா?” என்று அவன் வினவ, நானும் தலையசைத்து அவனுடன் வீட்டிற்கு சென்றேன்.

 

வீட்டிற்கு வந்ததும் அவன் வெளியிலேயே விடைபெற்றுக் கிளம்பி விட்டான். நானும் நிலைமை அறிந்து வீட்டிற்குள் வர சொல்லி வற்புறுத்தவில்லை. அவன் கிளம்பும் போதும், “சாரி ஆனந்த்…” என்றேன்.

 

“ஹே லூசா நீ, எனக்கு தான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல. திரும்பவும் ஏன் சாரி கேட்டுட்டு இருக்க?” என்றான்.

 

“இருந்தாலும்… “ என்று நான் இழுக்க, “ப்ச், இந்த குட்டி மூளைக்குள்ள எதை பத்தியும் யோசிச்சு குழம்பாம இரு.” என்று கூறியவாறு விடைபெற்றான் ஆனந்த்.

 

‘இவனுக்கு அவ ஓடிப் போனதோ, திரும்ப வந்ததோ எதுக்கும் எந்த ஃபீலிங்கும் இல்லையா?’ என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றேன்.

 

அங்கு உணவு மேஜையில் ஷீலா அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். யாரையும் பார்க்காமல் தான்! அவளிடம் தெரிந்த இந்த மாற்றமே பெரிது என்று நினைத்துக் கொண்டு நானும் சாப்பிட்டேன்.

 

நான் என் அறைக்கு செல்லும்போது, என் அம்மா என்னிடம் ஷீலாவிற்கு பால் கொடுத்து விட்டார். அதை கொடுக்க அவளின் அறைக்கு சென்றபோது அவள் வலியில் முனங்கும் சத்தம் கேட்டு உள்ளே விரைந்து சென்றேன்.

 

அங்கு நான் பார்த்த காட்சியில் உறைந்து விட்டேன். அப்படி உறைந்து போய் நான் பார்த்தது சூட்டின் தடங்கள்! அவளின் முழங்காலிலிருந்து பாதம் வரையிலும் தொடர்ந்து காணப்பட்டன. என்னை பார்த்ததும் வேகமாக சேலையை இறக்கிவிட்டாள்.

 

“என்ன நதி?” என்ன முயன்றும் அவள் குரலில் அப்பட்டமான வலி தெரிந்தது.

 

“இது…” என்று நான் தடுமாறினேன்.

 

“ம்ம்ம், எல்லாம் ஓடிப் போனதுக்கு எனக்கு கிடைச்ச பனிஷ்மெண்ட் தான்!” என்றாள் அதே விரக்தி சிரிப்புடன்.

 

“டாக்டர் கிட்ட காமிக்கலையா?”

 

“எத்தனை முறை காமிக்க? ஃபர்ஸ்ட் டைம் வாங்குன ஆயின்மெண்ட் பேரு தெரியும். அதையே வாங்கி தடவிக்குவேன்.”

 

இதை கேட்ட எனக்கு எப்படி எதிர்வினையாற்ற என்பது கூட தெரியவில்லை.

 

“நதி ஒரு ஹெல்ப், அந்த டேபிள் ட்ராயர்ல ஆயின்மெண்ட் இருக்கு. அதை மட்டும் எடுத்து தா.” என்று அவள் கேட்க, அதை எடுத்து தந்ததும், “பால் தான நதி. நான் குடிச்சுக்குறேன். நீ கிளம்பு.” என்றாள்.

 

“நான் வேணா போட்டு விடவா ஷீலா?” என்று நான் வினவ, “இல்ல நதி நா.. நானே போட்டுக்குறேன்…” என்றாள் ஷீலா நெளிந்துக்கொண்டே.

 

அப்போது தான் ஊன்றிக் கவனித்தேன், அவள் கழுத்திலும் அது போன்ற தழும்புகள் இருப்பதை. மேலும் அங்கிருந்து அவளை சங்கடப் படுத்தாமல் வெளியில் வந்து விட்டேன்.

 

அவளின் காயங்களும் வலிகளும் சகப்பெண்ணாக எனக்கும் வலித்தது. இது போன்ற காட்டு மிராண்டி செயல்களை செய்யும் அரக்கர்கள் கோட் சூட் போட்டுக் கொண்டும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நமக்கு தான் அவர்களை அடையாளம் தெரியவில்லை!

 

மனது பாரமாக இருந்ததால் அதை லேசாக்க முகநூலிற்குள் நுழைந்தேன். சிறிது நேரத்திலேயே க்ரிஷிடமிருந்து வாழ்த்துச் செய்தி வந்தது. அப்போது தான் காலையில் நடைப்பெற்ற துவக்க விழாவும் அதன் பின் நடந்த கலாட்டாக்களும் ஞாபகம் வந்தது. ஒரே நாளில் எத்தனை மாற்றங்கள், எத்தனை உணர்ச்சிகள்!

 

இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!

 

 

*****

 

க்ரிஷிடம் பேசினால் மனதில் உள்ள பாரம் சற்று நீங்கும் என்று எண்ணியவாறே அவனுக்கு “ஹாய்” என்று அனுப்பினேன்.

 

க்ரிஷ் : ஹே ஹாய்! இன்னும் தூங்கலையா மேடம்? ஃபர்ஸ்ட் டே, பிஸி ஒர்க், டையர்ட்ன்னு சீன் போட்டு படுத்துருப்பன்னு நினைச்சேன்.

 

சிறு புன்னகை என்னிடம். நான் வீட்டிற்கு வந்ததுமிருந்த மனநிலையை சரியாக யூகித்திருந்தான்.

 

நான் : ஹலோ யாரு சீன் போடுறா? நீ தான் பிஸின்னு சொல்லிட்டு இன்னிக்கு ஓப்பனிங் செரிமனிக்கு கூட வரல. கேட்டா ஆன்சைட்ன்னு பீலா விட்டுட்டு இருக்க!

 

க்ரிஷ் : அடிப்பாவி, விட்டா வேலைக்கே போகாம வீட்டுல வெட்டியா இருக்கேன்னு சொல்லுவ போல.

 

நான் : ஹாஹா, அப்படியும் சொல்லலாமே!

 

க்ரிஷ் : ஒரு நாள் நீ எக்ஸ்பெக்ட்டே பண்ணாதப்போ வந்து ஷாக் கொடுக்குறேன் பாரு.

 

நான் : இந்த ஸ்டேட்மெண்ட் எல்லாம் வந்ததுக்கு அப்பறம் சொல்லுங்க சார்!

 

க்ரிஷ் : சரிங்க மேடம், எப்படி போச்சு இன்னிக்கு ஃபர்ஸ்ட் டே?

 

நான் : ம்ம்ம் சூப்பரா போச்சு!

 

காலையிலிருந்து நடந்தது அனைத்தையும் கூறினேன்.

 

நான் : இன்னிக்கு கடைக்கு ஒரு பொண்ணு அவங்க அம்மா கூட வந்தா.

 

க்ரிஷ் : பொடிக்னா பொண்ணுங்க வர தான் செய்வாங்க.

 

நான் : ப்ச், மொக்க போடாம சொல்றதை கவனி.

 

க்ரிஷ் : சொல்லுங்க மேடம்.

 

நான் : அவங்க அண்ணா பேரு கூட கிருஷ்ணா தானாம்!

 

க்ரிஷ் : பார்றா, ஆளு எப்படி என்ன மாதிரி ஸ்மார்ட்டா இருந்தாரா?

 

நான் : உன்னையும் பார்த்தது இல்ல, அவனையும் பார்த்தது இல்ல. அப்பறம் எப்படி ஸ்மார்ட்டா இல்லையான்னு சொல்ல?

 

க்ரிஷ் : சரி விடு, க்ரிஷ்ன்னு பேரு வச்சுருந்தாலே அவங்க ஸ்மார்ட்டா தான் இருப்பாங்க!

 

நான் : அப்போ கூட உன் போட்டோ அனுப்ப மாட்டேல.

 

க்ரிஷ் : ஹாஹா, நேர்ல பார்த்தா தான் நல்லா இருக்கும்.

 

நான் : ஹ்ம்ம்!

 

க்ரிஷ் : சரி வேற என்ன இண்ட்ரெஸ்டிங்கா  நடந்துச்சு?

 

அங்கு நடந்த காதல் காவியங்களை  கூறினேன்.

 

க்ரிஷ் : ஹாஹா, பார்க், பீச்சுக்கு அடுத்து உன் கடைல தான் லவர்ஸ் கூட்டம் அள்ளுது போல!

 

நான் : கடை இல்ல பொடிக்!

 

க்ரிஷ் : ஹாஹா!!!

 

அடுத்து என்ன நடந்தது என்று யோசித்தபோது ஷீலாவின் விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. அதை அவனிடம் பகிரலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவனிடமிருந்து நான்கைந்து செய்திகள் வந்ததாக அறிவிப்பு காட்டியது.

 

க்ரிஷ் : ஹலோ!

 

க்ரிஷ் :என்னாச்சு?

 

க்ரிஷ் : ஆன்லைன்ல இருக்கியா?

 

க்ரிஷ் : ???

 

நான் : ஹ்ம்ம்…

 

க்ரிஷ் : ஆர் யூ ஓகே?

 

நான் : ம்ம்ம் ஓகே…

 

க்ரிஷ் : என்னாச்சு? ஏதாவது பிராப்ளமா? அந்த ரித்தீஷ் ஏதாவது தொல்லை செஞ்சானா?

 

இதற்கு மேல் அவனிடம் சொல்லாமல் இருக்க முடியாது. எனக்கும் இதை யாரிடமாவது பகிர்ந்தால் மனது அமைதியடையும் என்ற எண்ணம் இருந்ததால் அனைத்தையும் அவனிடம் கூறினேன்.

 

நான் : ச்சே, இப்படியெல்லாம் ஒரு மனுஷனா! அவனெல்லாம் ரோட்ல நிக்க வச்சு சுடணும். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம மிருகம் மாதிரி நடந்துருக்கான். இவனை எல்லாம் மிருகம்னு சொல்லி அதை கேவலப் படுத்தக்கூடாது.

 

க்ரிஷ் : ஹே கூல், நம்ம ரெண்டு பேரு மட்டும் தான சாட் பண்ணிட்டு இருக்கோம். நீ பேசுறத கேட்டா ஏதோ பட்டிமன்றத்துல இருக்க மாதிரி இருக்கு!

 

நான் : ஹலோ என்ன கிண்டலா?

 

க்ரிஷ் : ஐயோ இல்ல மா, இப்போ எதுக்கு இவ்ளோ கோபம்னு கேட்க மாட்டேன். உன் கோபம் எனக்கு புரியுது. ஆனா அதை நம்ம ரெண்டு பேரு மட்டும் பேசி என்ன பண்றது?

 

நான் : என்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு எனக்கு தெரியும். ஆனா என் மனசுல இருக்க கோபத்தை இப்படியாவது வெளியேத்திடணும்னு தான் இப்படி பேசுறேன்.

 

க்ரிஷ் : நீ ஏன் உன்னால எதுவும் பண்ண முடியாதுன்னு நினைக்குற. இவ்ளோ பேசுனியே இது மாதிரி மத்தவங்களுக்கு நடக்கக் கூடாதுன்னு நீ ஏதாவது ஸ்டெப் எடுத்தியா? இல்ல ஷீலாக்கு இப்படி ஆகிடுச்சுன்னு அதுக்கு என்ன ஆக்ஷன் எடுக்குறதுன்னு யோசிச்சியா?

 

நான் : அது… இப்போதைக்கு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துருக்கோம். ஆனா எனக்கு தான் அவங்க மேல நம்பிக்கை இல்ல!

 

க்ரிஷ் : ஏன்?

 

நான் : ஆமா இப்போ எத்தனை கேஸ் பார்க்குறோம். எத்தனை குற்றவாளிங்க தண்டிக்கப்படுறாங்க. நமக்கே சிலர் தான் அந்த குற்றத்தை செஞ்சாங்க தெரியும். ஆனா அவங்க ஃப்ரீயா நடமாடிட்டு தான் இருக்காங்க. இந்த மாதிரி சம்பவங்க நடக்குறப்போ யாரை நம்புறது?

 

க்ரிஷ் : எல்லாத்தையும் ஏன் நெகடிவா பார்க்குற? குற்றவாளின்னு தெரிஞ்சதும் என்கவுண்டர் பண்ற போலீஸும் இருக்கத் தான் செய்றாங்க.

 

நான் : இருக்கலாம்… ஆனா நூறுல பத்து பெர்ஸன்ட் தான் இந்த மாதிரியான அதிசயங்கள் நடக்குது!

 

க்ரிஷ் : ஊப்ஸ், உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?

 

நான் : ஹ்ம்ம்…

 

க்ரிஷ் : ஓகே ஜோக்ஸ் அபார்ட்… இப்போ ஷீலாக்கு தேவை ஆறுதல் தான். அவங்க இந்த உலகத்துல ஏன் வாழணும்னு அவங்களுக்கு புரிய வைக்கணும். லைஃப் இதோட நிக்க போறதுல இல்ல. இனிமே தான் அவங்க லைஃபே ஸ்டார்ட் ஆகப் போகுதுன்னு அவங்களுக்கு உணர்த்தணும். இதையாவது மேடம் செய்வீங்களா?

 

நான் : என்னது?

 

க்ரிஷ் : இல்ல, இதை நீ செஞ்சுடுவேலன்னு கேட்டேன்!

 

நான் : ம்ம்ம்…

 

இப்படியே அரை மணி நேரம் நீண்டது எங்கள் உரையாடல்.

 

நான் : சார் எப்போ தான் எங்க பொடிக்குக்கு வருவீங்க?

 

க்ரிஷ் : நான் தான் சொன்னேன்ல எப்போ வேணாலும் வருவேன். ஏன் நாளைக்கே கூட வருவேன். எக்ஸ்பெக்ட் மீ!

 

நான் : உன்னலாம் நான் எதுக்கு எக்ஸ்பெக்ட் பண்ண போறேன்? எனக்கு வேற இல்ல.

 

அவனிடம் அவ்வாறு சொன்னாலும் என் மனம் இப்போதே அவன் வரவை எதிர்பார்த்திருந்தது. அத்துடன் இருவரும் இரவு வணக்கத்தை கூறிவிட்டு உறங்கச் சென்றோம்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
23
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்