Loading

 

 

ஈர்ப்பு 20

 

“ஹாய் தாமோ அங்கிள், வெல்கம் டு அவர் பொடிக்.” என்றேன் சிரிப்புடன்.

 

“ஹாய் க்யூட்டி, லூக்கிங் கார்ஜீயஸ்.” என்று அவர் கூற, “க்கும், போதும் போதும் உங்க கொஞ்சல்ஸ். சில பேருக்கு வயிறு எரியுது போல.” என்றாள் சாண்டி கடைசி வரியை மட்டும் மெதுவாக என் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு!

 

அதைக் கேட்டதும் உடனே சுற்றிலும் பார்வையிட்டேன். அங்கு ராகுல் என்னையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

‘அச்சோ, இவன் ஏன் இப்படி பார்க்குறான்? அதுவும் எல்லாரு முன்னாடியும்!’ என்று சிறிதளவு எட்டிப் பார்த்த வெட்கத்துடன்  நினைத்துக் கொண்டேன்.

 

‘பார்க்கலேனா ஏன் பார்க்க மாட்டிங்குறான்னு சொல்ற. பார்த்தா ஏன் பார்க்குறன்னு சொல்ற. அப்போ என்ன தான் பண்ணனும்?’ என்று வழக்கத்திற்கு மாறாக நியாயமாக பேசியது என் மனசாட்சி.

 

‘ச்சு, இப்போ யாராவது உன்னை கூப்பிட்டங்களா? ஏன் தேவை இல்லாம வர?’ என்று அன்றையநாளின் நூறாவது முறையாக அதை அடக்கினேன்.

 

“ஹே என்ன டி, ஃப்ரீஸ் ஆகிட்ட? வா ரிப்பன் கட் பண்ண கூப்பிடுறாங்க.” என்றவாறு என்னை இடித்தாள் சாண்டி.

 

அங்கு எல்லாம் தயார் நிலையிலிருந்தது. என் அம்மா, அப்பா, அபி, ராகுல், ப்ரியா, ஆனந்த் இன்னும் சிலர் காத்துக் கொண்டிருந்தனர்.  நாங்கள் சென்றதும் தாமோ அங்கிள் ரிப்பன் வெட்ட, இதோ எங்கள் கனவு நனவாகி விட்டது. மகிழ்ச்சியில் நானும் சாண்டியும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டோம்.

 

அடுத்த அரை மணி நேரம் பம்பரம் போல சுழன்றோம். அவர்களுக்கு எங்கள் பொடிக்கை சுற்றிக் காண்பித்தோம். எல்லாரும் எங்கள் முயற்சியைப் பாராட்டினர்.

 

தாமோ அங்கிள், “க்யூட்டி, இன்டீரியர் சூப்பர். மியூசிக் ஐடியாவும் நல்லா இருக்கு.. இன்னைக்கு நான் தான் உங்க பொடிக்கை திறந்து வச்சுருக்கேன். உங்க ஃபர்ஸ்ட் கஸ்டமர் நான் தான். சோ, நானே ஃபர்ஸ்ட் பர்சேஸ் பண்றேன்.” என்றார்.

 

அடுத்து என் அம்மாவிடம் சென்ற நான், “ம்மா, உனக்கு எதுவும் வாங்கலையா. எங்க உன் ஹஸ்பண்ட்?” என்று கேட்டேன்.

 

“ஷ், அமைதியா இரு டி. இப்போ எதுக்கு அவரை வம்பிழுக்குற?” என்று அவர் கூற, “ஓஹ், அவரை சொன்னா உனக்கு கோபம் வருதோ? நீ தானா ஏன் எப்போ பார்த்தாலும் உன்னையே வம்பிழுக்குறேன்னு கேட்ட. அதான் ஒரு சேஞ்ஜுக்கு அவரை வம்பிழுக்குறேன்.” என்று கூறியதும் என் பின்னால் இருந்து, “க்கும்…” என்ற சத்தம் கேட்டது. கேட்டதும் புரிந்தது அது என் அப்பா என்று!

 

“ப்பா…” என்றவாறே நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு திரும்பினேன். உள்ளுக்குள் எங்கு அவர் நான் கூறியதை கேட்டுவிட்டாரோ என்ற பயம் இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு நின்றேன்.

 

“ம்ம்ம், நல்லா தான் இருக்கு. இனிமே எல்லாத்தையும் பொறுப்பா பார்த்துக்கோ.” என்றவரின் குரல் நெகிழ்ந்திருந்ததோ என்ற சந்தேகம் எனக்கு!

 

“சரி ப்பா…” என்றேன் அதே நல்ல பிள்ளை குரலில்!

 

“அப்படியே உங்க அம்மாக்கு ஏதாவது சேலை எடுத்து கொடு. இன்னைக்கு நீ பொடிக்  ஆரம்பிச்சதுக்கு நானும் ஏதாவது வாங்கணும்ல.” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

 

“பார்றா, அம்மாக்கு தான் வாங்கணுமாம்ல. ஏன் பொண்ணுக்கு எடுத்தா ஆகாதா?” என்று அப்போதும் அம்மாவை வம்பிழுக்க, “சும்மா இரேன் டி… எப்போ பார்த்தாலும் கிண்டல் பண்ணிட்டு…” என்று அழகாக வெட்கப்பட்டார்.

 

“ம்ம்ம் ம்மா வெட்கப்படுறியா? சரி வா வா உன் ஹஸ்பண்ட் வேற சேலை எடுக்க சொல்லிருக்காருல.” என்று மேலும் கிண்டலடித்தவாறே என் அம்மாவை அழைத்துச் சென்றேன்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் என் அம்மாவும் அப்பாவும் கிளம்பி விட அங்கிருந்தது நான், சாண்டி, ப்ரியா, அபி மற்றும் ராகுல். மற்ற வாடிக்கையாளர்களின் கூட்டமும் குறைந்து விட்டது.

 

அப்போது என்னை வெறுப்பேற்ற வேண்டியே, “ஹாய் சீனியர்…” என்றாள் சாண்டி.

 

நான் எந்த எதிர்வினையும் புரியவில்லை. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

 

“எதுக்கு சீனியர்லாம்? இது காலேஜ் இல்லையே.” என்று ராகுல் கூற, “சூப்பர்… அப்போ அண்ணா ஓகே வா?” என்று பாசப்பயிறை வளர்க்க ஆரம்பித்தாள் சாண்டி.

 

“ம்ம்ம் டபுள் ஓகே!” என்று அவனும் ஆமோதிக்க, “ஹா இன்னைக்கு தான் ஒரு அண்ணாவை தத்தெடுக்குறேன்னு இந்த ப்ரோ – சிஸ் பேர் கிட்ட சவால் விட்டேன். அது இவ்ளோ சீக்கிரம் நடக்கும்ன்னு எதிர்பார்க்கல! இன்னைலயிருந்து நம்ம ரெண்டு பேரும் அண்ணன் – தங்கச்சி. இந்த ஊருலயே இது மாதிரி அண்ணன் தங்கச்சி இல்லன்னு நம்மள பார்த்து நிறைய பேர் சொல்லணும்.” என்றவாறு ஹை-ஃபை போட்டுக் கொண்டனர் இருவரும்.

 

‘இது வேறயா!’ என்ற பார்வை மட்டும் அவளிடம் செலுத்திவிட்டு, நான் என் வேலையிலேயே கவனமாக இருந்தேன்.

 

“அப்பறம் அண்ணா உங்க ஆளுக்கு எதுவும் வாங்கலையா?” என்று என்னை பார்த்தவாறே தான் அவள் இந்த கேள்வியை கேட்டிருக்க வேண்டும்…

 

அவன் மறுமொழிக்காக என் காதுகளை கூர்மைப்படுத்திக் கொண்டேன். அவனோ மெல்லிய சிரிப்புடன், “அவங்களை கூட்டிட்டு வந்து வாங்கி கொடுத்துக்குறேன்.” என்று கூறினான்.

 

எதே! கூட்டிட்டு வந்து வாங்குவானா?’ என்று நான் ஜெர்க்காகியது உண்மையே!

 

“இப்போ யாருக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க அண்ணா?” என்று மேலும் சாண்டி கேள்விகளாக கேட்க,  “என் கஸின் நேஹா வரேன்னு சொன்னா. அவளுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.”என்றான் ராகுல்.

 

‘ஏன் இவரு கஸின் தனியா வந்தா நாங்க பார்த்துக்க மாட்டோமா? ரொம்பத் தான்!’ என்று முந்தைய கடுப்பில் சிடுசிடுத்தேன், மனதிற்குள்ளே!

 

“இங்க சில பேருக்கு ஸ்டோமக் பர்ணிங்கா இருக்கு. வாங்க ண்ணா, நம்ம அங்க போய் பேசுவோம்.” என்றவாறே அவனை இழுத்துச் சென்றாள் சாண்டி.

 

அவள் சென்று கால் மணி நேரமாகியது. அவளை அழைத்தபோது, “அங்க தான் கஸ்டமர்ஸ் அவ்ளோவா இல்லையே. நீயே பார்த்துக்கோ.” என்று கூறியவாறு அங்கு பேச்சில் மூழ்கி விட்டாள்.

 

‘இவ இவ்ளோ நேரம் என்ன பேசுறான்னு தெரியலையே! ஒருவேளை என்னை பத்தி ஏதாவது சொல்லிருப்பாளோ? இவளை நம்ப முடியாது. சொன்னாலும் சொல்லிருப்பா!’ என்று எண்ணிய நான், “ஹே சாண்டி, இங்க வா.” என்றேன் இம்முறை சற்று சத்தமாக.

 

“நீ போ சாண்டி. நான் அப்பறம் வரேன்.” என்று என்னை ஒருநொடி ஆழ்ந்து பார்த்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினான் ராகுல்.

 

‘க்கும், அப்பறம் வரானாம்!’ என்று மானசீகமாக உதட்டை சுழித்துக் கொண்டேன்.

 

“எதுக்கு டி இப்போ கூப்பிட்ட?” என்று சாண்டி வர, “ஹான், இங்க எதுக்கு வந்திருக்கோம். நீ என்ன பண்ணிட்டு இருக்க?”என்று முயன்று கோபமாக கேட்டேன்.

 

“இதே கேள்வியை தான் கொஞ்ச நேரம் முன்னாடி வாசல்ல வச்சு கேட்டேன் ஞாபகம் இருக்கா?” என்று கேள்வியை என்புறம் திருப்பினாள்.

 

ஒன்றும் கூறாமல் அங்கு ஏற்கனவே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை மறுபடியும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன்.

 

“ஹ்ம்ம், இங்க ஒன்னுக்கு ரெண்டு ரொமான்ஸ் சீன் ஓடிட்டு இருக்கு. எனக்கு தான் ஒன்னும் செட்டாக மாட்டிங்குது!” என்று அவள் அலுத்துக் கொள்ள…

 

“ரெண்டு இல்ல டி மூணு!” என்றேன்.

 

“அடப்பாவிங்களா! யாரு டி அந்த மூணாவது ஜோடி?” என்றாள் சிறிது அதிர்ச்சியுடன்.

 

அவள் கன்னத்தை பிடித்து வாசல் நோக்கி திருப்பி அங்கு வந்து கொண்டிருக்கும் நேஹாவை காட்டினேன்.

 

“இது நேஹா தான… திரும்பியும் ரித்தீஷ் கூட சுத்துறாளோ?’ என்று சாண்டி வினவ, “சீ… இந்த நேரத்துல எதுக்கு அந்த ரோக் பத்தி ஞாபகப் படுத்துற?” என்று அவளை கடிந்தேன்.

 

“அப்பறம் யாரு டி?” என்று ஆர்வமாக அவள் வினவ, “கொஞ்சம் இந்த பக்கம் பாரு மா.” என்றவாறே அங்கு ப்ரியாவுடன் அவளுக்கு உடை தேர்வு செய்வது போல அங்கு வந்து கொண்டிருக்கும் நேஹாவை சைட்டடித்துக் கொண்டிருக்கும் ஆனந்தை காட்டினேன்.

 

“அடப்பாவிங்களா! அப்போ இங்க இருக்க ஒருத்தர் கூட சிங்கிள் இல்லையா என்னை தவிர?” என்று அவள் அதிர, “நீயும் யாரு கூடயாவது மிங்கிள் ஆகிடு சாண்டி.” என்று ஃப்ரீ அட்வைஸ் கொடுத்தேன்.

 

“போடி லூஸி, நீயும் உன் ஐடியாவும்! இந்த சாண்டி எப்பவும் சிங்கிள் அண்ட் எங்கு!” என்று பெருமையாக கூறிக்கொண்டாள்.

 

இப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்க, “எக்ஸ்க்யூஸ் மீ!” என்ற குரலில், சாண்டி, “யெஸ், வாட் டூ யு வான்ட்?” என்றவாறே திரும்பினாள்.

 

“நீங்க தான்…” என்ற பதிலில் ஒரு நிமிடம் இருவருமே அதிர்ந்தோம்.

 

“வாட்ட்?” சாண்டி தன் அதிர்ச்சி தாங்காமல் சற்று சத்தமாகவே வினவினாள்.

 

நானோ அங்கிருந்தவர்கள் பார்வை எங்களை நோக்கியிருந்ததை உணர்ந்து அவளை அமைதிபடுத்தும் விதமாக அவள் முதுகை நீவி விட்டு மற்றவர்களின் கவனம் நம்மிடம் தான் இருக்கிறது என்று பார்வையால் உணர்த்தினேன்.

 

அதில் சிறிது ஆசுவாசம் அடைந்தாள் அவள். கேள்வி வந்த இடத்தை நோக்கி பாய்ந்தது என் பார்வை. அங்கு எங்களை விட இரண்டு அல்லது மூன்று வயது சிறியவளாக இருக்கக்கூடிய ஒரு பெண் அவள் அம்மாவுடன் நின்று கொண்டிருந்தாள்.

 

ஒரு நீண்ட பெருமூச்சுடன் இம்முறை சற்று சத்தத்தைக் குறைத்து, “என்ன கேட்டீங்க?” என்றாள்.

 

“உங்களுக்கு கரெக்டா தான் கேட்டுச்சு. நீங்க என் அண்ணியா வந்துடுறீங்களா?” என்றாள் அவள்.

 

எனக்கோ இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. நான் தடுப்பதற்குள் சாண்டி வெடித்திருந்தாள்.

 

“ஹலோ, எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க? கடைக்கு எதுக்கு வரீங்களோ அதை மட்டும் பண்ணுங்க.”

 

இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பாளோ அவளை அடக்கி அங்கிருந்து செல்ல வைத்தேன். பின் அந்த பெண்ணைப் பார்த்த எனக்கு பாவமாக இருந்தது. அவள் கண்களில் சற்று முன்பு வரை இருந்த குறும்பின் சாயல் மாறி முழுக்க பயத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

 

நான் அவளிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவளை பற்றி கேட்டேன்.

 

“ஹாய் நதிக்கா, என் பேரு ஜீவிகா. இப்போ தான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். இங்க வந்ததுலயிருந்து உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு இருந்தேன். நீங்க ரெண்டு பேரும் க்யூட்டா பேசிட்டு இருந்தீங்க. ஒட்டு கேட்கணும்னு கேட்கல. நீங்க உங்க பிரெண்ட்ஸ் பத்தி ட்ரயல் ரூமுக்கு வெளிய பேசிட்டு இருந்தது உள்ள இருந்த எனக்கும் கேட்டுச்சு. அப்போவே உங்க ரெண்டு பேரையும் பிடிச்சது. நீங்க லவ் பண்றது தெரிஞ்சதும் அட்லீஸ்ட் அவங்களையாவது எங்க வீட்டுக்கு அண்ணியா கூட்டிட்டு போனா எங்க வீடும் கலகலவென இருக்கும்னு நினைச்சு எங்க அம்மாகிட்ட கூட சொன்னேன்.” என்று சோகமாக கூறினாள் அவள்.

 

அப்போது தான் எங்கள் அருகில் இருக்கும் அந்த ஆன்ட்டியை பார்த்தேன். அவருக்கு வரவேற்பு புன்னகையை கொடுக்க, அவரும் லேசாக சிரித்தார். அவரின் முகத்திலும் இங்கு நடந்த சம்பவத்தை குறித்த கவலை தென்பட்டது.

 

“இது எங்க அம்மா காயத்ரி.” என்று அவள் அறிமுகப்படித்தியதும், “ஹாய் ஆன்ட்டி.” என்றேன். அப்போதும் அவர் எதுவும் கூறாமல் சிரித்தபடி என் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

 

“எங்க அம்மாக்கு அவங்க சின்ன வயசுல இருந்தே பேச்சு வராது.” என்று ஜீவிகா கூறவும் தான் அவர் வந்ததிலிருந்து எதுவும் கூறாமல் இருக்கும் காரணம் புரிந்தது. புரிந்ததும் என் மனம் சற்று கனமாக, மெல்ல அவர் கைகளை அழுத்தி, “சாரி ஆன்ட்டி.” என்றேன்.

 

அவரோ தலையசைத்து ஏதோ கூற முயன்றார். எனக்கு புரியாததால் ஜீவிகாவை பார்த்தேன்.

 

“நீங்க எதுக்கு சாரி சொல்றீங்கன்னு அம்மா கேட்குறாங்க. சாரி அக்கா நான் தான் யோசிக்காம பேசிட்டேன். அவங்க சிங்கிள்ன்னு சொன்னதும் நான் திடீர்னு அப்படி பேசிட்டேன். ரொம்ப நாள் பேசாம உள்ளேயே அடக்கி வச்சுருந்தது வெளிய வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.” என்றாள்.

 

அவள் சொல்ல சொல்ல, சாண்டி ஏன் இப்படி ரியாக்ட் செய்தாள் என்பதே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவள் இன்னமும் ரித்தீஷ் விஷயத்திலிருந்து வெளிவரவில்லை என்பதும் எனக்கு புரிந்தது. அவளை எப்படியாவது அதிலிருந்து வெளிக்கொணர வேண்டும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன்.

 

நான் அமைதியாக இருப்பதை பார்த்த ஜீவிகா, “நான் சின்ன வயசுலயிருந்தே ரொம்ப வாய் பேசுவேன். அப்போலாம் அண்ணாவும் என்கூட நல்ல தான் பேசிட்டு இருந்தான். அப்பாவோட டெத்துக்கு அப்பறம் தான் அவன் எல்லாருக்கிட்டயும் பேசுறதை குறைச்சுட்டான். அப்பறம் நானும் அம்மாவும் தான். வீட்டுல என் சத்தம் மட்டும் தான் கேட்டுட்டே இருக்கும். அப்போவே  அம்மா கிட்ட சொல்லுவேன், என்னோட அண்ணியை நான் தான் செலக்ட் பண்ணுவேன். என்னை மாதிரியே அவங்களும் பேசிட்டே இருக்கணும்னு சொல்லுவேன். அதான் இங்க வந்து உங்களை பார்த்ததும் கொஞ்சம் ஹைப்பர் ஆகி அப்படி கேட்டுட்டேன். சாரி அக்கா, அண்… அந்த அக்கா கிட்டயும் நான் சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க.” என்றாள் ஜீவிகா.

 

அவள் கூறியதில் இருந்தே, அவளின் சிறு வயது ஏக்கமே அவளின் அந்த கேள்விக்கு காரணம் என்று நான் புரிந்து கொண்டேன்.

 

அந்த சூழ்நிலையை மாற்றும் பொருட்டு, “ஹே ஜீவி, நீ எதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ற? அவளுக்கு எதுக்கு சாரி எல்லாம்! ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி கொடுத்தாலே கன்வின்ஸ் ஆகிடுவா. நீ எதுக்கு உன் சாரி எல்லாம் வேஸ்ட் பண்ற?” என்று நான் கேட்டு முடிக்க என் முதுகில் ஒரு அடியை வைத்தவாறு அங்கு வந்தாள் சாண்டி.

 

“ஏன் டி எரும, சிக்கன் பிரியாணி கொடுத்தா சமாதானம் ஆகிடுவேனா?” என்று மேலும் என்னை அவள் அடிக்க வர, “ஜீவி, உனக்கு சப்போர்ட் பண்ண என்னை காப்பாத்த மாட்டியா?” என்றவாறே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தேன்.

 

ஒரு வழியாக இருவரும் சமாதானமானோம். இன்னும் கண்களில் சிறிது வருத்தத்துடன் இருந்த ஜீவியை கண்களால் சாண்டிக்கு காட்டினேன்.

 

“ஹே ஜீவி, என் அழகுல மயங்கி என்னை அண்ணியா செலக்ட் பண்ணியிருப்பன்னு பார்த்தா, என் பேச்சுல மயங்கியா செலக்ட் பண்ண. என்னோட பேச்சை ரசிக்கிற ஆளும் இந்த உலகத்துல இருக்காங்க.” என்றவாறே என்னை மிதப்பாகப் பார்த்தாள்.

 

“ஹ்ம்ம், ரொம்ப ஓவரா பெருமை பட்டுக்காத. ஃபர்ஸ்ட் டைம் கேட்க தான் ரசிக்கிற மாதிரி இருக்கும். அப்பறம் போக போக கொடுமையா தான் இருக்கும்!” என்று நான் சொன்னதும் ஜீவிகாவும் அவளின் அம்மாவும் சிரித்தனர்.

 

“போடி லூஸி!” என்று சிணுங்கினாள் சாண்டி.

 

“ஜீவி, நீ எப்போ உள்ள வந்த? காயு ம்மா எப்படி இருக்கீங்க?” என்றவாறே அங்கு வந்தான் ராகுல்.

 

‘இவனுக்கு எப்படி இவங்களை தெரியும்?’ என்று கேள்வியுடன் அவனைப் பார்க்க, சாண்டி அதை அவனிடமே கேட்டாள்.

 

“அண்ணா உங்களுக்கு இவங்களை முன்னாடியே தெரியுமா?” என்று சாண்டி வினவ, “ம்ம்ம் என் பிரென்ட் கிருஷ்ணாவோட அம்மா அண்ட் தங்கச்சி.” என்று அவர்களை அறிமுகப்படுத்தினான்.

 

அவனின் கிருஷ்ணா என்ற அழைப்பில் என் மனம் க்ரிஷை நினைவு கூர்ந்தது. ‘ச்சே, அவனா இருக்காது. உலகத்துலயே அவன் ஒருத்தன் தான் க்ரிஷ்ன்னு பேரு வச்சுருப்பானா? ஃபர்ஸ்ட் க்ரிஷோட ஃபுல் நேம் என்னனு கேட்கணும்.’ என்று எனக்குள்ளேயே கூறிக் கொண்டேன்.

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னேனே, என் கேர்ள்-பிரெண்டை கூட்டிட்டு வந்து ட்ரெஸ் வாங்குறேன்னு, இது தான் என்னோட கேர்ள்-பிரெண்ட் என்றவாறே அவனின் ‘காயு ம்மா’வைக் கட்டிக் கொண்டான்.

 

‘அதான இவனுக்காவது கேர்ள்-பிரென்டாவது?’ என்று நினைத்தாலும் மனம் அமைதியடைவதை என்னால் உணர முடிந்தது.

 

எது கொடுத்த தைரியமோ அவனை பார்த்து உதட்டைச் சுழித்தேன். அவனோ என் செய்கையை கவனித்து புருவம் உயர்த்தினான். அவனின் அந்த செய்கையைப் பார்த்தே நான் செய்த செயல் ஞாபகம் வந்தது.

 

‘ஐயையோ, ஏதோ ஒரு ஞாபகத்துல இப்படி பண்ணிட்டேனே. சும்மாவே இவன் ஒரு மாதிரி பார்ப்பானே!’ என்று புலம்பியபடி, நிமிர்ந்து அவனை பார்த்தால், அவனோ அடக்கப்பட்ட புன்னகையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கு மேல் தாங்க முடியாது என்று ஏதோ வேலை இருப்பதாகக் கூறி உள்ளே சென்றேன்.

 

அங்கு என்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டு வந்த போது  அங்கு இன்னும் ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ சீன் ஓடிக் கொண்டிருந்தது.

 

ஆனந்த் நேஹாவை பார்ப்பதும் பின் அங்கிருந்த உடைகளைப் பார்ப்பதும் என்று போக்கு காட்டிக் கொண்டிருந்தான்.

 

அவன் அருகில் சென்று, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டேன்.

 

“ஏன் பார்த்தா தெரியலையா? ட்ரெஸ் செலக்ட் பண்ணிட்டு இருக்கேன்!” என்று பிடிபட்ட பதட்டத்துடன் கூறினான் ஆனந்த்.

 

“ஓஹ், யாருக்கு செலக்ட் பண்ணுறீங்க?”

 

“வேற யாருக்கு, ப்ரியாக்கு தான்!”

 

“ஆஹான், இது ப்ரியாக்கு தெரியுமா?”

 

“ஏன் தெரியாம? நீயே சொல்லு ப்ரியா…” என்றவாறே பக்கத்தில் திரும்பிப் பார்த்தான்.

 

அங்கு யாரும் இல்லாததைக் கண்டு, முதலில் அதிர்ந்தாலும் பிறகு சமாளித்துக் கொண்டு, “நதி, ப்ரியா எங்க?” என்று என்னிடமே வினவ, “அதை நான் தான் உங்க கிட்ட கேட்கணும் பாஸ். ப்ரியா எங்க?” என்றேன் வாய்க்குள் அடக்கிய சிரிப்புடன்.

 

“ஹிஹி, இங்க தான் இருந்தா. ஒருவேளை ட்ரயல் ரூமுக்கு போயிருப்பா.” என்று சமாளித்தான் ஆனந்த்.

 

“ஹாஹா, நல்லா சமாளிக்குறீங்க பாஸ். ஆனா, இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இங்க என்ன நடக்குது?” என்று நான் வினவ, “என்ன நதி, இது கூட தெரியாம இருக்க. இங்க நான் நடக்குறேன், ஏன் நீ கூட தான் நடக்குற.” என்று பழைய அறுவையை அவிழ்த்துவிட, “என்ன ஜோக்கா? சிரிப்பே வரல! ஒழுங்கா நேஹாக்கும் உங்களுக்கும் இடையில என்ன நடக்குதுன்னு சொல்லுங்க.” என்று பாயின்டிற்கு வந்தேன்.

 

“அது… வந்து…” என்று இழுத்துக் கொண்டே, வராத அலைபேசி அழைப்பை ஏற்று ‘2 மினிட்ஸ்’ என்று எனக்கு ஜாடை வேறு காட்டியவாறே வெளியே சென்றான்.

 

“ப்ச், எஸ்கேப் ஆகிட்டான்!  இப்போ இந்த ப்ரியா எங்க இருக்கான்னு வேற தேடணுமே!” என்று புலம்பியவாறே கண்களை சுழற்றினேன்.

 

அங்கு ஒரு மூலையில் ப்ரியா நின்றிருந்தாள். ‘இவ எதுக்கு அங்க தனியா நின்னுட்டு இருக்கா?’ என்று யோசித்தவாறு அருகில் சென்ற போது தான், அவள் நின்றிருந்த இடத்திற்கு நேர்கோட்டில் இருக்கும் மற்றொரு மூலையில் அபி நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.

 

‘அதான பார்த்தேன்! இவ ஏன் சம்மந்தமே இல்லாம இங்க நின்னுட்டு இருக்கான்னு. சாரும் இங்க தான் இருக்காரா? இவங்களுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு மூலக் கார்னர் கிடைக்குதோ! கடைசில என் பொடிக்கை ‘லவர்ஸ் ஸ்பாட்’ ஆக்கிடுவாங்க போலயே!’ என்று புலம்பியவாறே அபியிடம் சென்றேன்.

 

“அபி அண்ணா இங்க என்ன பண்ற?” என்று பாசமாக நானா வினவ, சிறிது தடுமாற்றத்துடன், “நதி, இங்க சிசிடிவி ஃபிக்ஸ் பண்ணிருக்கோம்ல, அது கரெக்ட்டா ஒர்க் பண்ணுதான்னு பார்த்துட்டு இருந்தேன். இப்போ நான் வெளியே போய் மத்ததெல்லாம் கரெக்டா இருக்கான்னு செக் பண்றேன்.” என்றவாறே வெளியே ஓடினான்.

 

‘என்னடா இது எல்லாரும் இன்னைக்கு ஏதோ ரன்னிங் ரேஸ்ல ஓடுற மாதிரி ஓடுறீங்க!’

 

அங்கு ப்ரியாவோ பிடிபட்ட பதற்றத்துடன் இருந்தாள். அவளிடம் சென்று, “ப்ரி மா இங்க என்னடா செல்லம் பண்ற?” என்று அதே கேள்வியை கேட்டேன்.

 

“ஹான், அது எனக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ணிட்டு இருந்தேன்.” என்று அவள் பதில் கூற, “அதுக்கு எதுக்கு கிட்ஸ் செக்ஷன்ல இருக்கீங்க?” என்று நான் கேட்டதும் தான் அவள் தான் இருக்கும் இடத்தை பார்த்துவிட்டு, அதை சமாளிக்கும் விதமாக என்னை பார்த்து இளித்தாள்.

 

“என்ன ட்ரெஸ் செலக்ட் பண்றியா, இல்ல வேற யாரையாவது செலக்ட் பண்றியா?” என்றேன் கண்ணடித்தவாறு.

 

“சீ போடி.” என்றவாறே அவளும் ஓடினாள்.

 

“ஹாஹா!” என்று சிரித்தவாறே திரும்பினேன். அங்கு சுவரில் சாய்ந்தவாறு ஒரு காலை சுவற்றில் ஊன்றியாவாறு என்னை பார்த்துக் கொண்டிருந்தான் ராகுல்.

 

‘அச்சோ தனியா சிக்கிட்டோமோ!’ என்ற பயத்தில் நான் அசையாமல் அங்கேயே நின்றிருந்தேன்.

 

அவன் என் அருகில் வந்து, “என் கேர்ள்-பிரென்டுக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ணனும். அதுக்கு உன் ஹெல்ப் வேணும்.” என்றான்.

 

‘என்ன என் கிட்டயா பேசுனான்!’ என்று எண்ணியவாறே அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

 

இரண்டடி இடைவெளியில் நின்றிருந்தான். நான் அவனை பார்த்ததும், அவன் புருவம் உயர்த்தினான். எதுக்கென்றே தெரியாமல் என் தலை தானாக அசைந்தது.

 

“சுடி தான் பார்க்கணும்.” என்று அவன் கூறியதும் தான், என்னிடம் அவன் ஏதோ கேட்டான் என்றே எனக்கு ஞாபகம் வந்தது.

 

‘அச்சோ என்ன கேட்டான்னு தெரியலையே!’ அவனை நோக்கி ஒரு புரியாத பார்வையை வீசினேன்.

 

அவன் அதை சரியாகப் புரிந்து கொண்டு இதழோர சிரிப்புடன், “உன் ஹைட், உன் வெயிட் இருக்க பொண்ணுக்கு சுடி செலக்ட் பண்ணனும்.” என்று கூற, நான் ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டதை போல, அவனை அழைத்துச் சென்றேன்.

 

இரண்டு மூன்று உடைகளை எடுத்து காண்பித்தேன். அவன் கைகளில் இருந்த உடைகளை ஒரு முறை பார்த்து விட்டு, என்னை அங்கிருந்த கண்ணாடி முன்பு அழைத்துச் சென்று, அவன் கைகளில் இருந்த ஒன்றை எனக்கு வைத்துப் பார்த்தான்.

 

ஒரு நொடி எனக்கு மூச்சடைப்பது போல இருந்தது! கண்ணாடி முன்பு நான், எனக்கு பின்னால் அவன்! அவன் கைகள் அணைவாய் அந்த உடையை என் மேல் வைத்தபடி இருந்தன.

 

அந்த தருணம் என் வாழ்வில் மறக்க முடியாததாக மாறியது. எங்களின் ஜோடி பொருத்தத்தை உள்ளுக்குள் ரசித்தவாறு நான்! அவன் பார்வையிலும் ரசிப்பை பார்த்து தானாக என் கன்னங்கள் சிவந்தன.

 

அவன் மூச்சு காற்று என் காதுகளில் படுமாறு அருகில் வந்து, “பிடிச்சுருக்கா?” என்று கேட்க, மற்றுமொரு முறை மூச்சடைக்கும் தருணம். என் இதயம் வேகமாக துடிப்பது எனக்கே கேட்டது!

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
24
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்