Loading

 

ஈர்ப்பு 18

 

நான் உள்ளே செல்ல எத்தனிக்க, ‘ரைட் லெக் எடுத்து வச்சு உள்ள போ.’ என்றது என் மனசாட்சி.

 

‘ரொம்ப முக்கியம்!’ என்று மனதிற்குள்ளே முணங்கிக் கொண்டு உள்ளே சென்றேன்.

 

அவன் வீட்டிற்கு வருவது இதுவே முதல் முறை. எனவே, வீட்டை ஒவ்வொரு அங்குலமாக சுற்றிப் பார்த்தேன். அது ஒரு சாதாரணமான ‘அப்பர் மிடில் கிளாஸ்’ வீடு தான். கீழே சமையலறை, பூஜை அறை மற்றும் ஒரு படுக்கை அறையும் மேலே இரு படுக்கை அறைகளும் இருந்தன.

 

அங்கு நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்து அவன் வீட்டில் இல்லை என்று உறுதிபடுத்திக் கொண்டேன்.

 

‘நல்லவேளை அவன் இல்ல! எப்படியாவது இங்கயிருந்து சீக்கிரம் கிளம்பிடணும்.’ என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, சுதா ஆண்ட்டியோ அவரின் ஸ்பெஷல் ‘மேங்கோ ஜூஸ்’ஸை எடுத்து வந்து என் திட்டத்தை  தற்காலிகமாக ஒத்திவைக்க காரணமானார்.

 

‘ஹ்ம்ம், ஜூஸ் குடிச்சு முடிச்சவுடனே இடத்தை காலி பண்ணிடணும்’ என்று என் அடுத்த திட்டத்தை திட்டினேன்.

 

நேஹாவும் சுதா ஆன்ட்டியும் பேசிக் கொண்டிருக்க, அவர்களை இடைமறித்து பேச முடியவில்லை. அங்கு இருக்கவும் எனக்கு போரடித்ததால் மீண்டும் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன். அப்படி பார்க்கும் போது தான் சுவற்றில் சில புகைப்படங்கள் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்ததை கவனித்தேன்.

 

அவை சுவற்றில் மாட்டப்பட்டிருந்த விதம் என்னைக் கவர்ந்ததால் அருகில் சென்றேன். அங்கு சூரிய உதயம், பச்சை போர்வை போர்த்தியிருந்த மலைகள், நீல வானத்தை பிரதிபலிக்கும் நீர் நிலை, சிறகை விரித்து பறக்க முயலும் பறவைகள் என்பன போன்ற பல இயற்கை காட்சிகள் அழகாக படம் பிடித்து வைக்கப்பட்டிருந்தன. அனைத்திலும் கீழே ஒரு ஓரத்தில் ஆர்.கே என்ற கையொப்பம் இருந்தன.

 

அவற்றையெல்லாம் பார்வையிட்டு கொண்டே வந்தபோது கொஞ்சம் தள்ளி ராகுலின் புகைப்படங்கள் – அவன் சிறு வயது முதலான புகைப்படங்கள் அணிவகுத்திருந்தன. அவன் சிறுவனாக இருந்தபோது செய்த குறும்புகள் அவற்றில் காட்சிகளாக இருந்தன. 

 

ஒரு புகைப்படத்தில் பூங்காவில் கைகள் உடை முழுவதும் மண்ணால் அழுக்காகியிருக்க தரையில் அமர்ந்தவாறு சிரித்துக் கொண்டிருந்தான். இன்னொரு புகைப்படத்தில் கடற்கரையில் பலூனைப் பறந்து விடாதவாறு கையில் பிடித்து வைக்க முயன்ற படியான போஸில் இருந்தான். 

 

‘சோ க்யூட்!’ என்று ரசித்தேன் மனதிற்குள்ளே!

 

அதை பார்த்து எங்கோ செல்லவிருந்த என் நினைவை  சுதா ஆன்ட்டியின், “இங்க என்ன பண்ணிட்டு இருக்க, நதி மா?” என்ற கேள்வி தடுத்தது.

 

“இந்த போட்டோஸ் எல்லாம் அழகா இருக்கு ஆன்ட்டி. அதான் பார்த்துட்டு இருந்தேன். இது…” என்று இழுத்தேன். ராகுல் என்று தெரிந்தாலும் அவரின் முன் தெரிந்தவாறு காட்டிக்கொள்ள விரும்பவில்லை!

 

“என் பையன் ராகுல் தான் மா. சின்ன வயசுல ரொம்ப சேட்டை பண்ணுவான். இப்படி தான் போட்டோ எடுத்து வீடு ஃபுல்லா மாட்டி வச்சுருப்பாரு அவரு.  ஹ்ம்ம், அவனும் அவங்க அப்பாவும் ரொம்ப க்ளோஸ். அவரு இறந்ததுக்கு அப்பறம் தான் ரொம்ப இறுகிட்டான் ராகுல். அதுக்கு அப்பறம் அவன் இப்படி சிரிச்சு நான் பார்த்ததே இல்ல மா” என்று அவர் கவலைப்பட்டார்.

 

அவரின் கவலையைப் போக்க, “விடுங்க ஆன்ட்டி லாஃப்பிங் கேஸ் கொடுத்தாவது உங்க பையனை சிரிக்க வச்சுடுவோம்.” என்று நான் கூற அவரும் லேசாக சிரித்தார் அவர்.

 

சற்று தள்ளியிருந்த இயற்கை காட்சிகள் கொண்ட புகைப்படங்களை காட்டி, “அது…” என்று நான் இழுக்க, “எல்லாம் ராகுல் எடுத்தது தான் மா. அவனுக்கு போட்டோக்ராஃபில ரொம்ப இன்ட்ரெஸ்ட். இதெல்லாம் அவனும் அவன் பிரெண்டு கிருஷ்ணாவும் எடுத்தது.” என்று கூறினார்.

 

‘ஓஹ், அதான் ஆர்.கேன்னு போட்டிருந்துச்சா?’ என்று நானே எண்ணிக் கொண்டேன்.

 

“நீ வா மா, நான் உனக்கு சாப்பிடுறதுக்கு ஏதாவது எடுத்துட்டு வரேன்.” என்று அவர் அழைக்க, ‘அச்சோ இப்போ சாப்பிட ஆரம்பிச்சேனா டைம் ஆகிடுமே!’ என்று நினைத்த நான்,  “கொஞ்ச நேரம் ஆகட்டும் ஆன்ட்டி. நான் இந்த போட்டோஸ்லாம் பார்த்துட்டு இருக்கேன்.” என்று அப்போதைக்கு அதிலிருந்து தப்பித்தேன்.

 

அவர் சென்ற பிறகு, அவனின் புகைப்படங்களை ரசித்துக் கொண்டிருந்தபோது, வெகு அருகில் காலடிச் சத்தம் கேட்க, யாரென்று  நான் திரும்பிப் பார்த்தபோது, அங்கு ராகுல் அவனின் வேக நடையில் வந்து கொண்டிருந்தான்.

 

அவனை பார்த்ததும் சில நொடிகள் என் மூளை வேலை செய்யவில்லை. அவன் வரும் வழியிலிருந்து விலகிச் செல்லக் கூட முனையாமல் அப்படியே நின்றுக் கொண்டிருந்தேன்.

 

அவன் அருகில் வந்துவிட்டான் என்று தெரிந்தாலும், என்னால் அந்த இடத்தை விட்டு அகல முடியவில்லை.

 

‘போச்சு போச்சு, பக்கத்துல வந்துட்டான்!’ என்று என் மனம் கூவியது. ஆனால் அதைக் கேட்க வேண்டிய மூளையோ அவனை பார்த்ததும் செயலிழந்து விட்டதே!

 

அவன் அருகில் வந்து என்னை பார்த்ததும், என் அனுமதியே இல்லாமல் என் வாய் தந்தியடிக்க ஆரம்பித்தது.

 

“நா… நா… நான்… க்கும், எனக்கு போர் அ…அடிச்சது… அதான்… சுத்தி பார்த்துட்டு…”  என்று நான் திணற, அவனோ எப்போதும் போல் ஒரு பார்வை பார்த்தான். இம்முறை சற்று வித்தியாசமாக மேலும் கீழும் பார்த்துவிட்டு சென்றான்.

 

‘இப்போ எதுக்கு இப்படி பார்த்துட்டு போறான்?’ என்று எண்ணியவாறே கண்ணாடியை பார்க்க விரைந்தேன்.

 

‘எல்லாம் கரெக்டா தான இருக்கு! அப்பறம் ஏன் அப்படி பார்த்தான்?’ என்று நான் சிந்திக்க, “நதி, இங்க இருக்கியா, வா மா சாப்பிடலாம்.” என்றார் சுதா ஆன்ட்டி.

 

‘அச்சோ அவன் வேற இருக்கானே!’ என்று மனதிற்குள் நினைத்த அதை மறுக்க எத்தனித்தேன்.

 

“இல்ல ஆன்ட்டி, இன்னொரு முறை வந்து சாப்பிடுறேன். வீட்டுல தேடுவாங்க.” என்று பல காரணங்களை கூறினேன்.

 

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “உங்க வீட்டுல பெர்மிஸன் வாங்கியாச்சு நதிக்கா. உங்க அம்மா ஓகே சொல்லிட்டாங்க. சோ, நீங்க தாராளமா இங்க சாப்பிடலாம்.” என்று உள்ளே நுழைந்தாள் நேஹா.

 

“இது எப்போ நடந்துச்சு?” என்று நான் அதிர, “இப்போ தான்! என் பர்ஸை உங்க வீட்டுல வச்சுட்டேன்னு எடுக்க போனேன். அப்போ தான் இதையும் கேட்டுட்டு வந்துட்டேன்.” என்றாள் நேஹா பெருமையாக.

 

அவர்களின் பலகட்ட வற்புறுத்தலுக்கு பிறகு, இதோ நான் உணவு மேஜையில் அமர்ந்திருந்தேன்.  எனக்கு அருகில் நேஹாவும் எதிரில் ராகுலும் அமர்ந்திருந்தனர். 

 

அப்போது நேஹா என் பொடிக்கைப் பற்றி பேச ஆரம்பித்ததும், சுதா ஆன்ட்டி என்னை வாழ்த்தினார். ஒரு ஓரத்தில் ராகுலின் வாழ்த்திற்காகவும் காத்திருந்தது என் மனது.

 

‘இவனுக்கு தான் முன்னாடியே தெரியுமே! வாயை திறந்து ஒரு வார்த்தை விஷ் பண்ணா என்ன?’ என்று நான் சடைத்துக் கொள்ள, ‘அப்படி அவன் விஷ் பண்ணிட்டா மட்டும் நீ அவன்கிட்ட பேசிடுவியோ?’ என்று கேலி செய்தது என் மனசாட்சி.

 

‘ப்ச் உள்ள போ நீ!’ என்று எப்போதும் போல அதை விரட்டும் வேலையை செவ்வனே செய்தேன்.

 

“எங்க பொடிக் ஓபன் பண்ண போறீங்க நதி?” என்று சுதா ஆன்ட்டி வினவ, நான் இடத்தை சொன்னதும், ராகுலிடம் திரும்பி, “அந்த இடத்தை வாடகைக்கு விட்டுட்டியா?” என்றார்.

 

இதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சி. ‘என்னாது அந்த இடம் ராகுலோடதா!’ என்று ஒருநொடி உலகமே நின்று போனது போல நான் அதிர்ந்தேன்.

 

சுதா ஆன்ட்டியோ, “அவனுக்கு அந்த இடம் ரொம்ப ராசியானது. இது வரைக்கும் யார் யாரோ கேட்டு அந்த இடத்தை வாடகைக்கு கூட விடல. ஆனா, இப்போ எப்படி அந்த இடத்த வாடகைக்கு விட சம்மதிச்சான்னு தெரியல!” என்றார்.

 

அவன் முகமோ எப்போதும் போல நிர்மலமாக இருந்தது.

 

அதைக் கேட்டதும் உள்ளுக்குள் மகிழ்ச்சி ஊற்றெடுத்தாலும் ‘இப்போ நான் என்ன பண்ணனும், அவனுக்கு தேங்க்ஸ் சொல்லணுமா?’ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

 

‘இப்போ போய் சொன்னா, இவ்ளோ லேட்டா தேங்க்ஸ் சொல்றன்னு நினைக்க மாட்டானா?’

 

‘இதான் மேனர்ஸா, கர்டஸிக்காகவாவது தேங்க் பண்ண மாட்டீயா?’ – இவ்வாறு எனக்குள்ளேயே பேசி குழம்பிக் கொண்டேன்.

 

முடிவாக நன்றி சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து, ‘தேங்க்ஸ்’ என்று சொன்னவாறே நிமிர்ந்து பார்த்தால் எனக்கு எதிரில் அவனைக் காணவில்லை.

 

‘ச்சு, என்னது இது அதுக்குள்ள போய்ட்டான்?’

 

‘ஆமா நீ ஆடி அசஞ்சு சொல்ற வரைக்கும் அவன் இங்கயே இருப்பானா? ஒரு தேங்க்ஸ் சொல்றதுக்கு எவ்ளோ யோசனை!’ என்று வழக்கம் போல என் மனசாட்சி திட்டியது.

 

நானோ, அதைக் கண்டுகொள்ளாமல், ‘அச்சோ நம்ம லூசு மாதிரி தேங்க்ஸ் சொன்னதை யாரவது பார்த்துட்டாங்களா?’ என்று எண்ணியவாறே சுற்றிப் பார்த்தேன்.

 

அங்கு சுதா ஆன்ட்டியும் நேஹாவும் தீவிரமாக எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தனர்.

 

‘நல்லவேளை யாரும் கவனிக்கல!’ என்று பெருமூச்சு விட்டவாறு திரும்பினால், அங்கு சமையலறையின் வாசலில் சாய்ந்து நின்று என்னையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ராகுல்.

 

‘அச்சோ இவன் பார்த்துட்டானே!’ என்று அவன் பார்வையை தவிர்க்க வேகமாக எழுந்து கை கழுவச் சென்றேன். 

 

“என்ன நதி மா, அதுக்குள்ள எழுந்துட்ட? சரியாவே சாப்பிடல!” என்று சுதா ஆன்ட்டி வருத்தமாகக் கூறினார்.

 

‘க்கும், ராங் டைமிங்ல சாப்பிட சொல்றீங்களே ஆன்ட்டி. ஒரு நாள் அவன் இல்லாத நேரமா வந்து நல்லா சாப்பிட்டு போறேன்!’ என்று மனதிற்குள் கவுண்டர்  கொடுத்தேன்.

 

வெளியிலோ, “ஆன்ட்டி இவ்ளோ தான் நான் சாப்பிடுவேன்.” என்று பெரியதொரு பொய்யை சொன்னேன்.

 

அப்போது ராகுல், “ஆமா ம்மா இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் ரெஸ்டாரண்ட்ல  கூட கம்மியா தான் சாப்பிடுறாங்க.” என்றதும், எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

 

‘அய்யயோ அதையும் பார்த்துட்டான் போலவே!’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டேன்.

 

சென்ற வாரம் கல்லூரி தோழியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு அபியின் ரெஸ்டாரண்டிற்கு சென்றோம். அது தான் அவள் எங்களோடு கடைசியாக கொண்டாடும் பிறந்தநாள். அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருந்தது. முடிந்ததும் அவள் அமெரிக்கா சென்று விடுவாள். அதற்கும் சேர்த்து தான் அந்த ட்ரீட்.

 

அப்போது தான் ராகுல் என்னை பார்த்திருக்க வேண்டும். அவனின் முகத்தை பார்க்கக் கூட முடியாமல் சுதா ஆண்ட்டியிடம்  சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன்.

 

‘ச்சே, இப்படி எதாவது சிசுவேஷன்ல அவன் முன்னாடி அவமானப்பட்டுக்கிட்டே இருக்கேனே!’ என்று என் விதியை நொந்தவாறே வீட்டிற்கு திரும்பினேன்.

 

 

*****

 

அன்று பிற்காலைப் பொழுதில், நானும் சாண்டியும் எங்கள் பொடிக்கிற்கு சென்றோம். அந்த இடத்தை எங்களுக்கு ஏற்றவாறு சிறிது மாற்றி அமைக்க வேண்டியிருந்தது. எதை எதை மாற்ற வேண்டும் என்று திட்டமிட சென்றோம்.

 

ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை எல்லாம் குறித்துவிட்டு திரைச்சீலை போன்ற பொருட்களை வாங்க கடைக்கு சென்றோம். அலைந்து திரிந்து எங்கள் தேவைக்கு ஏற்றவாறு பொருட்களை வாங்கியதும் திருப்திகரமாக வீட்டிற்குச் சென்றோம்.

 

வீட்டிற்கு வந்ததும், அபியை அழைத்து பொடிக்கில் செய்ய வேண்டிய மாற்றங்களை பற்றிக் கூறினேன். அவனிடம் சிறிது ஆலோசித்துப் பின் இறுதி முடிவை எடுத்தோம். சீரமைப்புப் பணிக்கான ஆட்களை அவனே அழைத்து விடுவதாகக் கூறினான்.

 

பின் எப்போதும் போல் என் அம்மாவிடம் செல்ல சண்டையிட்டுக் கொண்டே நேரத்தைக் கழித்தேன். இப்போதெல்லாம் என் அப்பா கூட பொடிக் பற்றி அவ்வபோது கேட்டுக் கொண்டார்.

 

ஷீலா விஷயத்திற்குப் பின்னிருந்தே அவரிடம் சில மாற்றங்கள் தெரிந்தன. எல்லா விஷயங்களிலும் அவரே முடிவெடுப்பது மாறி இப்போதெல்லாம் அம்மாவிடமும் அபியிடமும் கலந்து பேசியே முடிவெடுக்கிறார். இந்த மாற்றங்களும் நல்லதிற்கே என்று எண்ணிக் கொண்டோம் நாங்கள்.

 

*****

 

அன்று இரவு வெகு நாட்களுக்குப் பிறகு, க்ரிஷை முகநூலில் பிடித்தேன். பொதுவான நல விசாரிப்புகளுக்குப் பிறகு, நான் பொடிக் பற்றி அவனிடமும் கூறி ஆலோசனை கேட்டேன்.

 

அவனும் உட்புற வடிவமைப்பில் சில ஆலோசனைகள் வழங்கினான். அதில் ஒன்றே, பொடிக்கில் எப்பொழுதும் மெல்லிய இசை அல்லது மெலோடியான பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருப்பது. இது வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவரும் என்பதால் இந்த யோசனையையும் செயல்படுத்த திட்டமிட்டேன்.

 

மேலும் அவன் எந்தெந்த பொருட்களை எங்கெங்கு அடுக்கி வைக்க வேண்டும் என்பன போன்றவற்றையும் கூறினான். 

 

க்ரிஷ் : இதெல்லாம் அப்படியே ஃபாலோ பண்ணனும்னு இல்ல. உனக்கு ஏதாவது டிஃப்ரெண்டா தோணுச்சுனா அதையும் ட்ரை பண்ணு.

 

நான் : ஹே இந்த ஐடியாஸ் சூப்பரா இருக்கு. உனக்கு எங்க பொடிக்கோட ‘அட்வைஸர்’னு போஸ்ட் கொடுத்துடுறேன். நீயும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கோ.

 

க்ரிஷ் : எனக்கு வேற வேலை இல்ல பாரு! 

 

நான் : ஹலோ, ஓவரா பேசாத. நான் ஏதோ போனா போகுதே, நமக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்குறானே, அவனையும் பார்ட்னரா சேர்த்துப்போம்னு நினைச்சா, நல்ல ஆப்பர்சுனிட்டியை மிஸ் பண்ணிட்டோம்னு கூடிய சீக்கிரம் ஃபீல் பண்ணுவ!

 

க்ரிஷ் : அது ஃபீல் பண்ணும்போது பார்த்துக்கலாம்.

 

நான் : ஹே உனக்கு தெரியுமா, நான் நேத்து ராகுல் வீட்டுக்கு போனேன்.

 

அங்கு நடந்தவைகளை பற்றி சுருக்கமாகக் கூறினேன். ராகுல் தான் அந்த இடத்தின் உரிமையாளன் என்று எனக்கு தெரிய வந்தது பற்றியும், அங்கு அவன் சிறு வயது புகைப்படங்களையும், அவன் எடுத்த புகைப்படங்களைப் பற்றியும் கூறினேன். பின் அவன் என் லூசுத்தனமான செய்கையை கவனித்ததையும், அவன் என்னை கலாய்த்ததையும் கூறினேன்.

 

க்ரிஷ் : ஹாஹா!!!

 

நான் : இப்போ எதுக்கு சிரிக்கிற (கோப ஸ்மைலிக்களை அனுப்பினேன்)

 

க்ரிஷ் : எப்பவும் அவன் கிட்ட பல்பு வாங்குறியே, அதை நினைச்சு தான் சிரிச்சேன். ஹாஹா.

 

நான் : க்கும்…

 

க்ரிஷ் : என் கிட்டலாம் நல்லா தான பேசுற, அப்பறம் ஏன் அவன் கிட்ட மட்டும் பேச மாட்டிங்குற?

 

நான் : ஹ்ம்ம், அவனை பார்த்தாலே மைண்ட் டோடலா ப்ளாங்க் ஆகிடுது. அப்பறம் எங்க பேசுறது? ‘வாயை திறந்தா காத்து தான் வருது’ மொமெண்ட்!

 

க்ரிஷ் : ஹாஹா, உனக்கு சப்ஸ்டிட்யூட்டே இல்ல. வேற ஏதாவது இண்ட்ரெஸ்டிங்கா நடந்துச்சா?

 

நான் : அந்த வீட்டுல ஏதோ ஃபெமிலியரா இருந்துச்சு. அந்த போட்டோஸ்லாம் ஏற்கனவே எங்கேயோ பாத்திருக்கேன். ஆனா எங்கன்னு தான் தெரியல!

 

க்ரிஷ் : என்னது ஃபெமிலியரா இருந்துச்சா. உன் ஃப்யூச்சர் வீடுல, மே பி அதனால கூட இருக்கலாம்!

 

அவன் இப்படி கூறியதும் அதை நினைத்து பார்த்து ஒரு நிமிடம் என் கன்னங்கள் சிவக்க ஆரம்பித்தாலும், அடுத்த நிமிடம் என் புன்னகையை கட்டுப்படுத்தி அவனுக்கு ரிப்ளை செய்தேன்.

 

நான் : அதெல்லாம் நடந்தா பார்த்துக்கலாம்!

 

மேலும் சிறிது நேரம் என்னை கேலி செய்து விட்டே அவன் ஆஃப்லைன் சென்றான்.

 

க்ரிஷ் கூறியதையே நினைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். ராகுலுடன் சேர்ந்து அந்த வீட்டிற்குள் நுழைவது மாதிரி என் கற்பனை விரிந்தது. அதெல்லாம் நடக்குமா என்று யோசித்துக் கொண்டிருக்க, ‘அவன் கிட்ட உன் லவ்வே சொல்ல பயப்படுற, இதுல அவன் கூட சேர்ந்து அவன் வீட்டுக்குள்ள நுழையுற மாதிரி கற்பனை வேற!’ என்று தலையிலடித்துக் கொண்டது என் மனசாட்சி.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
25
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்