Loading

      சுட்டு எரிக்கும் சூரியனின் வெப்பத்தை துஜ்ஜம் என்று எண்ணி ஓடிக் கொண்டு இருந்தான்.அவனின் ஓட்டத்தை கண்டு , அந்த அரங்கத்தில் இருந்த அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரித்து கொண்டு இருந்தார்கள். அவனுடன் ஓடி வந்த மற்ற சக வீரர்கள் இவனின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவனின் பின்னே ஓடி வந்தார்கள். அவனின் ஓட்டத்தை கண்டு பெண்களின் கூக்குரல் தான் அவ்வரங்கத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது.  அங்கு இருந்த இளைஞர்கள் பலர் அவனை ஏக்கமாகவும் , சில தங்களின் ரோல் மாடல் எனவும் நினைத்துக் கொண்டார்கள். 

        ஆண்மைக்கே உரிய ஆண் அழகனாய் இருந்தான். முறுக்கு ஏறிய புஜங்களும் , நீளமான கண்களும் , அந்த கண்கள் மற்றவர்களை தன் பக்கம் இழுக்கும் தன்மை கொண்டு இருந்தது.அவனின் விழி பார்வை கூர்மையாக இருந்தது. எதிரிகளை தன்னுடைய கூர் விழி பார்வையாலே குத்தி கிழித்து விடுபவன் போல இருந்தது அவனின் பார்வை. அளவான மூக்கு, லைட் சிகப்பு நிறத்தில் இருந்தது அவனின் உதடுகள். அவனின் உடல் நிறமோ சிகப்பு சாயம் பூசப்பட்ட பட்டு ஆடை போல , சூரியனின் வெளிச்சம் அவனின் உடலின் மீது பட்டு லைட் சிகப்பு வண்ணத்தில் மின்னியது. தன்னுடைய ஆற்றல் முழுவதையும் சேர்த்து ஓடினான் அந்த விளையாட்டு மைதானத்தில். அவனின் முயற்ச்சிக்கு பலனாய் முதல் பரிசை கைப்பற்றினான். 

       அவன் வெற்றி கோட்டை தாண்டிய அந்த நொடி அரங்கமே கொண்டாடியது.

தன்னுடைய பரிசை வாங்கிக் கொண்டவன் வேகமாக அங்கு இருந்து புறப்பட்டான். அவனை போட்டோ எடுக்க காத்து இருந்த பத்திரிக்கையாளர்களை துச்சம் என்று நினைத்து அவர்களை கடந்து சென்றுவிட்டான்.

       வீட்டிற்கு வந்ததும் நேராக தன்னுடைய அறைக்கு சென்றவன் , கதவை அறைந்து சாத்திவிட்டு குளியல் அறையில் சென்று விட்டான். தன்னுடைய ஒட்டு மொத்த கோபத்தையும் தண்ணீரில் காண்பித்துக் கொண்டு இருந்தான். கோவம் தணிந்ததும்  , அமைதியாக கட்டிலில் படுத்துக்கொண்டான். தன்னுடைய தலையை கூட துவட்ட தோன்ற வில்லை அவனுக்கு. கட்டிலில் போடப்பட்டு இருந்த போர்வை எல்லாம் தலையில் இருந்த தண்ணீரால் நனைந்து ஈரமானது. அவனுடைய மொபைல் சத்தம் போடவும் அதை எடுத்து பார்த்தவனின் முகம் பழைய படி கோபத்தை தாங்கிக்கொள்ள அவன் அறியாமலே அவனுடைய விரல் அந்த போன் அழைப்பை ஏற்றது. 

      ” அண்ணா!” என்ற அழைப்பில் தான் போனை பார்த்தான். போனில் அழைப்பு வந்தது நார்மல் அழைப்பாக இல்லாமல் வீடியோ அழைப்பாக இருந்தது.முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக தன்னுடைய போனையே பார்த்துக்கொண்டு இருந்தான். 

      “அண்ணா” சாரிடா’ இன்னைக்கு இப்பார்ட்டண் எக்ஸாம் டா! அதனால் தான் என்னால் வர முடியவில்லை. இப்ப தான் போனில் பார்த்தேன் நீ ஓடி ஜெயிச்ச வீடியோவை. எனக்கு ரொம்ப சந்தோசம். அப்பொழுது தான் நனைந்த போர்வையை பார்த்தவன் பதறி கொண்டே “அண்ணா! தலையை துவட்டாமல் ஏன்டா இப்படி படுத்து இருக்க ? உனக்கு தான் ஈர தலையோடு

இருந்தால் சீக்கிரமாக உடம்புக்கு காய்ச்சல் வந்து விடும்…… போன் கட்டாகி இருந்தது. 

         அவனோ தன்னுடைய போனை எப்பொழுதோ தூக்கி போட்டு இருந்தான். அந்த போன் இந்நேரம் எந்த நிலையில் இருக்கிறதோ தெரியவில்லை? தன்னுடைய கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு படுத்துக்கொண்டு இருந்தான்.

        சிறிது நேரம் கழித்து தன்னுடைய தலையை யாரோ துணியால் துவட்டுவது போன்று உணர்ந்தவன் தன்னுடைய கண்களை மெதுவாக திறந்து பார்த்தான். அவனுடைய அருமை தம்பி தான் வேக… வேகமாக வீடு வந்து சேர்ந்து இருந்தான். நேராக ஓடிவந்து அவனின் தலையை துவட்டி கொண்டு  இருந்தான். மீண்டும் அவன் கண்களை மூடிக்கொள்ள ,

     ஒரு பெரிய மூச்சு ஒன்றை வெளியே விட்டவன் , அவனை இழுத்து தன்னுடைய மார்பின் மீது கிடத்தி “தலையை நன்கு துவட்டி விட்டான் “. சிறிது நேரம் கழித்து “அண்ணா! எனக்கு பசிக்கிறது டா!

        அவ்வளவு தான்’ இவ்வளவு நேரம் இருந்த கோவம் எல்லாம் மாயமாக மறைந்து இருந்தது. வேகமாக எழுந்தவன் நேராக கிச்சனில் சென்று சமைக்க தொடங்கினான். தோசை மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்து இருந்த காய்கறிகளை எடுத்து தோசையின் மீது போட்டு நெய் ஊற்றி கொண்டு வந்து கொடுத்தான். மறந்தும் அவனுடைய உதடு சிரிப்பை உதிர்க்கவும் இல்லை. தோசை இருந்த தட்டினை உணவு வைக்கும் மேசையின் மீது “தொம்” என்று வைத்தான். 

   தன்னுடைய அண்ணனின் சின்ன பிள்ளை தனமான கோவத்தை கண்டு மனதிற்குள் சிரித்தவன் வெளியே முகத்தை மட்டும் “உம்” என்று வைத்துக் கொண்டு , ஒரு கையால் தன்னுடைய கண்ணத்தை தாங்கி பிடித்துக்கொண்டு சோகமாக இருப்பது போல அமர்ந்து இருந்தான். 

         மறுபடியும் தன்னுடைய தம்பியை பார்த்து முறைத்து விட்டு மீண்டும் தன்னுடைய அறைக்கு செல்ல , வேகமாக அவனின் கையை பிடித்தவன் “சாரி அண்ணா! உனக்கு தெரியும் தானே? இது என்னுடைய பைனல் இயர் பைனல் எக்ஸாம் என்று. நான் மைதானத்திற்கு வராமல் போனதற்கு சாரி….. சாரி . ஆனா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காத’ எனக்கு உன்னைவிட்டால் யார் இருக்கா? கண்கள் இரண்டும் கலங்கி இருக்க. 

     இதற்கு மேலும் தன்னுடைய கோவத்திற்கு வேலை அளிக்காமல் தன்னுடைய தம்பியை பார்த்து மென் புன்னகை ஒன்றை சிந்தினான்.

       அப்பாடா! அண்ணா! சிரிச்சிட்டாரு என்று சொன்னவன், இப்பொழுது தோசை தான் தேவை என்று தோசையை சாப்பிட மூழ்கி விட்டான்.   

         சாப்பிட்டுக்கொண்டு இருந்த தன்னுடய தம்பியின் தலையில் ஒரு கொட்டு வைத்து “எப்படி.. எப்படி ? சாருக்கு என்னை விட்டால் இந்த உலகத்தில் வேற யாருமே இல்லையா?” நீ சொல்றது கொஞ்சம் இல்ல ரொம்ப பெரிய ஐஸ்கட்டி என்னுடைய தலையில் வைக்கிற மாதிரி இல்லையா? இந்த ஊரில் என் கூட நீ இருக்கிறதே! நீ ஒழுங்கா படித்து பெஸ்ட் டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்பது தான்! நம்ம அம்மாவும் அப்பாவும் ஊரில் இருக்காங்க என்பதை கொஞ்சம் கூட நீ மறக்க கூடாது! எப்ப பாரு பொய் சொல்லிக் கொண்டே ஊரை சுற்றுவது. ஒழுங்கா சாப்பிட்டு போய் படி டா.

       தன்னுடைய தலையை தேய்த்துக்கொண்டே “தேவ்’ அண்ணா! நான் சொல்வது உண்மை. நம்ம அப்பா , அம்மாவை விட நீங்க தானே என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டீர்கள். உண்மை சொல்லவேண்டும் என்றால் என்னுடைய அண்ணா மட்டும் நீங்கள் இல்லை! என்னுடைய பெற்றோரும் நீங்கள் தான். ஒரு நாள் நான் உங்களை விட்டு சென்றுவிட்டால் இப்பொழுது தான் நான் எந்தளவிற்கு உங்களுக்கு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும் என்றவன் மீண்டும் தட்டில் தன்னுடைய கவனத்தை பதித்தான்.  ஏதாவது பேசிக்கொண்டே இருக்காதே! என்றவன் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். இவ்வார்த்தை மட்டும் உண்மையானால் அவனின் இதயம் தான் தாங்குமா?

………………………………………………………………….         “என்னடி ?” ரொம்ப சின்சியராக காலையிலே வேலை பார்த்துக்கொண்டு இருக்க ? பாஸ் என்ன ரொம்ப வேலை கொடுத்து விட்டாரா? அவரு அப்படி எல்லாம் செய்ய மாட்டாரோ? அவரு உன்னை பார்த்து கிலோ கணக்கில் புன்னகை மட்டும் தானே செய்வாரு ? 

        தன்னுடைய தோழியின் கிண்டல் பேச்சிற்கு பெரியதாக ரியாக்சன் எதுவும் கொடுக்காமல் அமைதியாக ஒரு புன்னகை மட்டும் செய்தாள்.

        என்னடி? நான் மட்டும் பேசிக்கொண்டே இருக்கேன். ஆனா நீ எதுவும் பேசாமல் இருக்க ? என்ன ஆச்சு? எல்லாம் ஒகே தான? 

        “ஆங்” நான் எல்லாம் நல்லாத்தான் இருக்கேன் . நீ போய் உன்னுடைய வேலையை பாரு என்றவள் , வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் சொல்லமுடியாத வலிகளையும் வேதனைகளும் அடக்கி வைத்து இருந்தாள். இப்படியே உட்கார்ந்துகொண்டு இருந்தால்              ” கண்டிப்பாக நம்முடைய  பிரச்சனை மற்றவர்களுக்கு தெரிந்துவிடும்” என்று நினைத்தவள் வேகமாக வாஷ் ரூம் சென்று கதவை மூடிவிட்டு , தண்ணீர் குழாயை திறந்து விட்டு அழ ஆரம்பித்துவிட்டாள். எவ்வளவு நேரம் தான் தன்னுடைய மன வலியை மற்றவர்களுக்கு தெரியாமல் வைப்பது? மற்றவர்களுக்கு தெரியாமல் வைத்துக்கொண்டாலும் தன்னுடைய மனதிற்கு தெரியும் தானே? ” வலியின் ஆழம் என்ன வென்று?”.   எவ்வளவு நேரம் அழுதாள் என்று அவருக்கே தெரியாது? தன்னுடைய அழுகையை சிறிது மட்டுபட்டதும்  , தண்ணீரை எடுத்து முகத்தில் நன்கு அடித்து கழுவிக்கொண்டு  மறுபடியும் தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தாள். 

        “ஹே” அங்க பாரு டி’ பக்கத்து குருப்க்கு புதுசா ஒரு ஆள் வந்து இருக்கான். பார்க்க எவ்வளவு அழகா இருக்கான் பாரு ? தாடி எல்லாம் வைத்துக்கொண்டு எவ்வளவு அம்சமா இருக்கான் பாரு டி’

       மற்றொரு பெண்ணோ , ஆமா பா எம்புட்டு அழகா இருக்கான் இவன். இவன் தான் அந்த குருப் லீடர் டி. நானும் இந்த குருப்பில் இருந்து அந்த குருப் போய்விடலாம் என்று நினைக்கின்றேன். சீக்கிரமாக அவனுடைய போன் நம்பர் வாங்க வேண்டும். அப்போ தான் சீக்கிரமாக அவனை கரைட் செய்ய முடியும். அப்படியே காதலிக்கவும் செய்ய முடியும்.

          நம்பர் வாங்கினால் ? எனக்கும் தர வேண்டும் புரிகின்றதா? 

      தன்னுடைய தோழிகள் பேசிக் கொள்வதை எதையும் தன்னுடைய காதில் வாங்க வில்லை அவள். அவளுடைய மனதில் எதையும் பதிப்பிக்கும் அளவிற்கு இப்போது மனது நிம்மதியாகவும் இல்லை. தன்னுடைய மனம் என்னும் கடல் அலையில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டு இருந்தாள் வதனி.  

        அவளை மட்டுமே இரண்டு கண்கள் பார்த்துக்கொண்டு இருந்தது. 

       ஒருவர் வந்து வதனி உன்னை எம்.டி கூப்பிடுகிறார் என்று கூறிவிட்டு சென்று விட்டார். 

       சில நிமிடங்களில் எம்.டியின் அறைக்கதவை தட்டிவிட்டு , உள்ளே சென்று எம்.டியின் முன் நின்றாள்.

   எம்.டி,   மிஸ் வதனி  இவர்தான் புதியதாக நம்ம கம்பெனியில் வந்து சேர்ந்து இருக்காரு. இவருடைய பெயர் மித்ரன். மிஸ்டர் மித்ரன் உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் மிஸ் வதனியிடம் கேட்டுக்கொள்ளுங்கள். 

       வதனி, சரி என்று மட்டும் தலையை ஆட்டிவிட்டு தன்னுடைய இடத்திற்கு வந்து மீண்டும் தன்னுடைய இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். அந்த புதிய ஆடவனை தலைநிமிர்ந்து ம்ம்  பார்க்கவில்லை. அவளுடைய மனம் முழுவதும் இருந்தது எல்லாம் ஒரே ஒரு எண்ணம் மட்டுமே “நீ ஏன்டா என்னை விட்டு போன? ” நீ போகும் போது என்னிடம் சொல்லவேண்டும் என்று கூட தோன்றவில்லையா? என்னுடைய மனசு முழுக்க இப்ப வலி மட்டுமே இருக்கிறது டா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்