Loading

கதிர் மணிமேகலை திருமணம் இனிதே நடந்து முடிந்தது. 

ஜீவனுக்கு கண்ணீர் துளிகள் துளிர்க்க , மணிமேகலையை கதிர்வேலன் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.  விழியும் அனுவும் மணிமேகலையுடன் சென்றிருந்தனர்.

“அத்தை ஆல் தி பெஸ்ட் நாங்க காலையில் வர்றோம் சரியா…!!” என்று வாழ்த்தி விட்டு அவரை கதிரின் அறைக்குள் அனுப்பி வைத்து விட்டு அன்றே வீடு திரும்பினர்.

கதிர்வேலன் படபடப்புடன் அமர்ந்திருந்தார்.  மணிமேகலை உள்ளே நுழைய குளிரூட்டப்பட்ட அறையிலும் அவருக்கு வியர்த்து கொட்டியது. 

உதடு மடித்து சிரித்தபடி வந்த மணிமேகலையோ.,” ம்ம்க்கும் “என செறுமினார்.

“ஸ்ஸ்ஸ் வாங்க மேகா…  உட்காருங்க.. ப்ப்ச்.. இருங்க டோர் லாக் லாக் ஆகி இருக்கா… நா நான் பண்ணிட்டு… ” தடுமாறித்தான் போனார் கதிர்வேலன்.

 

“லாக் பண்ணிட்டு தான் வந்தேன் முதல்ல டென்ஷன் ஆகாம உட்காருங்க… இது உங்க ரூம் தானே ஏன் இந்த படபடப்பு …?நான் எவ்வளவு கூலா இருக்கேன் “என்று சாவகாசமாக அமர, கதிர் நிலை தான் அந்தோ பரிதாபம் ஆகிப் போனது.

நா உலர்ந்து போனது அவருக்கு .

 

“இல்ல அது வந்து… !!”

“என்ன டீலரே இவ்வளவு பதட்டம் உங்களுக்கு முதல்ல இதைக் குடிங்க, அப்புறம் பேயைப் பார்த்தது மாதிரி பதறாம  அன்னைக்கு ரெஸ்டாரண்ட் ல இருந்தீங்களே அது மாதிரி நார்மலா பிகேவ் பண்ணுங்க பார்ப்போம் “என பால் சொம்பை நீட்டினார்.

 

“சாரி சாரி இதை வாங்கனும் இல்ல மறந்துட்டேன்… ஐம் சாரி… “

 

“ப்ப்ச் பரவாயில்லை விடுங்க… பட் காலில் விழுவேன் னு எதிர்பார்க்க கூடாது…  ஓகே…  இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் எனக்கு அலர்ஜி…  நான் கொஞ்சம் ப்ராக்டிகலான ஆள்… அது இத்தனை நாளில் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் இருந்தாலும் இன்ஃபார்ம் பண்றேன்…  அன்ட் கல்யாணம் ஆகி அன்னைக்கே எல்லாம் நடக்க வேண்டும் னு எதிர்பார்க்காதீங்க அது கேஷுவலா நடக்கட்டும்… இல்ல எனக்கு இப்பவே வயசாயிடுச்சு இனியும் தள்ளிப் போட மாட்டேன் னு சொன்னா ஓகே நோ ப்ராப்ளம் பட் உங்களுக்கு மட்டும் தான் ஹாப்பினஸ் அதில் கிடைக்கும் “என்று வெளிப்படையாக பேசிய மணிமேகலையை கதிருக்கு இன்னும் அதிகமாக பிடித்து விட்டது.

புன் சிரிப்புடன் பார்த்தவர்,”  மேடம் உங்களை நம்பி ஹனிமூன் ட்ரிப் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன் அது இருக்கலாமா இல்லை கேன்சல் பண்ணிடலாமா… ??” இயல்பாக பேசத் துவங்கினார் கதிர்.

 

“நோ நோ… அது வேற இது வேற ஆமா எந்த கன்ட்ரி போறோம்… ??”

 

“அச்சோ வேற கன்ட்ரி போற அளவுக்கு இன்னும் வசதி வரலை…  இங்கே பக்கத்தில் இருக்கும் பாரீஸ்… !!”

 

“எது பாரீஸ் கார்னரா  ….??”

 

“நோ நோ ரியல் பாரீஸ் தான்…”

“சார் அதுவேற கன்ட்ரி தான் உங்களுக்கு தெரியாதா…!!”

 

“சும்மா சொன்னேன் மேகா….  நாம கேரளா போறோம், அங்கே என் ஃப்ரெண்ட் போட் ஹவுஸ் ஒண்ணு இருக்கு அவன் நமக்காக கிஃப்ட் பண்ணி இருக்கான் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு வரலாம்…”  என்றார்.

 

“சூப்பர்… போகலாமே  இப்போ தூங்கலாமா… காலையில் சீக்கிரம் எழுந்தது , ஹோம புகை எல்லாம் கண் பயங்கரமா எரியுது, ஸோ..” என்று சொல்ல

 

“தாராளமாக தூங்கலாம் ஒரே பெட் ஓகே தானே…!! இல்ல இந்த சீரியல் ,சினிமாவில் வர்ற மாதிரி  ஷோபாவிற்கு போக சொல்லிடுவிங்களா…??”

“நாம என்ன நாடகமா நடிக்கிறோம்  ஒரே பெட் தான் சார் தூங்குங்க, நான் இந்த அலங்காரத்தை எல்லாம் ரிமூவ் பண்ணிட்டு வரேன்” என டிரெஸிங் டேபிள் நோக்கி செல்ல,” மே ஐ ஹெல்ப் யூ… !”

 

“வித் ப்ளஷர் வாங்க ,நெக்லஸை எல்லாம் போட்டு விட்டு இருக்குதுங்க , கழுத்து வலிக்குது தலையில் வேறு ஒரு பூ மார்க்கெட் ஏறி இருக்கு… !!” என்று முதலில் பூவை தான் கழற்றி வைத்தார் .

“ஹாஹாஹா அது எல்லாம் ஃபார்மலா பண்றது தான் மா…  “என சிரித்தபடியே நெக்லஸை கழற்றி வைத்து விட்டு கண்ணாடியில் தங்களின் பிம்பத்தை பார்க்க இருவரும் ஒருவரில் ஒருவர் லயித்திருந்தனர்.

“அழகு தான்…!!”

 

“யாரு… ?”

“யாரோ…!!” 

“யாரோவா…?, பின்ன நானில்லையா..!”  கதிர் ஏமாற்றமாக கேட்க

“இந்த ரூமில் நூறு பேரா இருக்காங்க…  உங்களைத் தான் சொன்னேன்… “

“தெரியும்… சும்மா… பட் மேடம் தான் இன்னைக்கு செம ப்யூட்டி…”  ரசனையாக சிரித்தார்.

“ம்ம்ம்… ” 

மணிமேகலை இரவு உடை மாற்றி வந்ததும் படுத்து விட,  கதிரவன் உறங்கிப் போயிருந்தார். 

“தூங்கியாச்சா… !!” சிரித்தபடி கட்டிலின் மறுபுறம் படுத்து விட்டாலும் மனம் குறுகுறுத்தது அவருக்கு.

முதன் முறையாக ஒரு ஆணின் வாசம் தன் அருகில்…  அதுவும் தனியறையில்…திருமண வாழ்வைப் பற்றியே சிந்தித்திராதவருக்கு மணக்கோலம்  அமைந்திட மனம் பூரித்தாலும் அன்னை தந்தை உடன் பிறந்த அண்ணன் என்று யாரும் இன்றி திருமணம் நடந்தது வருத்தமாகத் தானிருந்தது. 

அவர்கள் இருந்த போதே திருமணம் செய்து இருக்கலாமோ எனத் தோன்றினாலும்,  கதிர்வேலன் போன்ற ஒரு மனிதன் கிடைக்க தான் இத்தனை தாமதமான திருமணம் போல என்று எண்ணியபடி கண்களை மூட கதிர் புன் சிரிப்புடன்.,” என்ன ஒரே திங்கிங்கா இருக்கீங்க…  ம்ம்ம்…  கொஞ்சம் முன்னாடியே மேரேஜ் பண்ணி இருக்கலாமேன்னா… !!” மணிமேகலையின் மனதைப் படித்தது போல கேட்டிட மணிமேகலை சிரித்து விட்டார்.

 

“என்ன சிரிப்பு மேடம்…?”

“ம்ம்ம்… என் ஹஸ்பண்ட் ஒரு வேளை மேஜிக் மேனா இருப்பாரோன்னு தான்…  !!”

“ஓஓஓ அப்போ அதை தான் நினைச்சீங்களா…!!” கதிரின் முகம் வாடிப் போனது.

 

“சார் அடுத்து நினைச்சதை கேட்டுட்டு  ஃபீல் பண்ணுங்க…!!”

“என்ன நினைச்சிங்களாம்…?”

“ம்ம்ம் இப்படி ஒரு  பச்சைப் பிள்ளையை மேரேஜ் பண்ண தான் இவ்வளவு லேட் மேரேஜ் போலனு நினைச்சேன்…!!”

“ஓஓஓ நான் பச்சைப்பிள்ளையா…அது சரி…!!”

“ம்ம்ம் இல்லையா அப்புறம் … இதே இந்த இடத்தில் ஒரு விவரமானப் பையன்” எனும் போதே.,” ஸ்ஸ்ஸ் மேகா “என்று வாயைப் பொத்தியவர், தன்னருகே இழுத்துக் கொண்டார்.

பார்வை பரிமாற்றம்  உடலிலும் மூளையிலும் வேதியியல் மாற்றத்தை நிகழ்த்த இணைய துடித்த நேரத்தில்,  சற்று முன் மேகாவின் வார்த்தை நினைவு வர , தன் எண்ணங்களுக்கு தடை போட்டு நகர , மேகாவோ புன்னகையுடன்,” தாபத்திலும் தாரத்தின் வார்த்தையை மதிக்கிறவர் குழந்தைப்பையன் தானே…  நான்  ஹாப்பி தான்  கதிர் “என்றதும் கதிரின் அணைப்பு இறுகியது.

அழகான சங்கமம் அங்கே நிகழ்ந்திருந்தது. 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இங்கே ஜீவா தனியே அமர்ந்து இருந்தான் .

“என்ன ஆச்சு டா ஏன் தனியா உட்கார்ந்து இருக்க…?” வேதாந்த் வந்தமர்ந்தான். 

தேவான்ஷி ஊஞ்சலில் அமர்ந்தபடி அவர்களைப் பார்த்து கொண்டிருந்தாள்.

அனு காஃபியுடன் வந்தாள்.

“விழி எங்கே அனு…??”

“அவங்க பாப்பாவை தூங்க வச்சுட்டு இருக்காங்க அதான் நான் எடுத்து வந்தேன்” என்றாள்.

“ம்ம்ம் “என்றவன் வேதாவிற்கு பதில் சொல்ல ஆரம்பித்து விட்டான்.இல்ல இத்தனை  நாளும் அத்தை  இருந்தாங்க… ஏதாவது பேசி வம்பு பண்ணிட்டு வீடு கலகலன்னு இருக்கும்… இப்போ ஏதோ வெறுமையாக ஃபீல் ஆகுது… விழிக்கு மேரேஜ் பண்ணும் போது கூட ரொம்ப தெரியலை பட் இப்போ ஏதோ போல இருக்கு டா…” என்றான் மனதார

“ஒரு வாரம் அப்படி தான் டா இருக்கும்…சரி ஆகிடும்…  அத்தை இப்பவாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களேனு சந்தோஷப்படு… !! என்ன இருந்தாலும் அவங்களுக்குனு ஒரு துணை இருந்தா தான் அது அழகு…  கடைசி காலத்தில் நம்ம பார்த்தாலும் நம்ம வொஃய்ப் பார்ப்பாங்களான்றது சந்தேகம் தான் இந்த கல்யாணம் எனக்கு சந்தோஷம் தான்…  அதை விட கதிர் சார் உண்மையிலேயே ஜெம் பர்சன்… நம்ம அத்தை கொடுத்து வச்சவங்க தான் “என்றான் உணர்ந்து.

“அதெப்படி இவ்வளவு உறுதியா சொல்ற…??”

“அத்தை என்ன தான் மெச்சூர்டா இருந்தாலும் அவங்க ஒரு பொண்ணு இல்லையா.. நம்ம வீட்டுப் பொண்ணை வேற வீட்டிற்குள் மருமகளா அனுப்புறோம் அந்த வீட்டைப் பத்தி விசாரிக்க வேண்டும் இல்லையா அதை தான் செஞ்சேன் “என்றான் வேதாந்த்.

“தாங்க்ஸ் டா… !!”என்றதும் முதுகில் ஒன்று விழுந்தது ஜீவாவிற்கு..

“ஸ்ஸ்ஸ் ஆஆஆ ஏன் டா… ??”

“ம்ம்ம் இது போல பிரிச்சு பேசினா இப்படி தான் அவங்க எனக்கும் அத்தை தான்” என்று சிரித்தான் வேதா.

சிறிது நேரம் பேசி விட்டு, அங்கிருந்து செல்ல தேவான்ஷி ஊஞ்சலில் அமர்ந்தபடியே இருக்க ,அனு தான் அவளை உலுக்கினாள். 

“என்ன ஆச்சு அக்கா…??” 

“ம்ம்ஹூம் எதுவும் இல்லை…”  ஜீவன் போகும் வழியை ஏக்கமாக பார்த்து விட்டு சென்றாள்.

“இந்த அக்கா என்ன நினைச்சுட்டு இருக்கான்னே தெரியலையே…!!” அனு குழம்பியபடி உள்ளே செல்ல,  திரும்பி வந்த வேதா மீது இடித்து கொண்டாள்.

“ஆஆஆ…  என் தலை  போச்சு…  குட்டிசாத்தான் கவனமா வர மாட்ட..!!”

“டேய் சைனா பீஸ் நீ தான் கவனிக்காம வந்திருக்க உன் முட்டக்கண்ணை வச்சு நல்லாப் பாரு “என அலுத்தபடி தலையைத் தடவிக் கொண்டாள்.

“போய்த்தொலை உன்னோடு சண்டை போடுற மூட்ல நான் இல்ல” என்றபடி பால்கனிக்கு சென்றான்.

“லூசுப்பய…” என்று திட்டிவிட்டு சென்றாள் அனுகீர்த்திகா.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சாமியாரின் முன்பு பவ்யமாக நின்றிருந்தார் இளங்கோவன்.

“என்ன ஆச்சு இளங்கோ…  நீ நடந்துக்கிற முறை ஏதோ தவறா இருக்கு… உன் மகளை நீயே தப்பிக்க விட்டதா தான் எனக்குத் தோணுது… பாசம் தடுக்கிறதா…  வெறும் உடலை நேசிக்காதே இளங்கோ உன் லட்சியம் நிறைவேற நீ இதை செய்து தான் ஆக வேண்டும்… உன் மகளை நமது திட்டத்திற்கு ஏற்ப தயார் படுத்தி அழைத்து வா…” என்றார் அவர்.  

“சாமி இதுவரை உங்கள் பேச்சை மீறி நான் நடந்ததே இல்லை உண்மையாகவே அனு காணாமல் தான் போய் விட்டாள்…  நான் வேறு யாரையாவது ஏற்பாடு செய்கிறேன் என் வம்சம் விருத்தியாக வேண்டும் அதற்கு நீங்க தான் உதவி செய்யனும்… உங்களைத் தான் நான் மலை போல நம்பி இருக்கேன் சாமி…  கை விட்டுராதீங்க “என உருகினார் இளங்கோவன்.

“உன்னை நம்ப வேண்டும் என்றால் நான்  கேட்டதைக் கொடு உன் மகள் எந்த திசையில் இருக்கிறாள் என்பதை எனது ஞான திருஷ்டி மூலமாக கண்டறிந்து சொல்கிறேன்…”  என்றதும் இளங்கோவின் முகம் பளிச்சென்று ஆனது.

“நிச்சயம் சாமி நீங்க கேட்டது குறைவில்லாமல் உங்களுக்கு வரும் “என்று கூறி விட்டு கிளம்பினார்.

மந்திரவாதி மனதில் சிரித்துக் கொண்டார்.

‘ஒருவன் புத்திசாலி என்பது அவனது படிப்பில் இல்லை அவனது பகுத்தறிவில் இருக்கிறது என்பதற்கு ஏற்ப இருக்கின்றனர் இந்த மெத்த படித்த மேதாவிகள்…’ என்று ஏளனமாக இளங்கோவன்  போகும் திசையை பார்த்து கொண்டே நர்த்தனாவிற்கு அழைத்தார்.

“சாமி சொல்லுங்க சாமி …!!”என்று  ஹஸ்கி வாய்சில் பேசியபடி கழிவறைக்குள் புகுந்து கொண்டாள் நர்த்தனா.

“என்ன மகளே  பணம் தயார் தானே…??” 

“சாமி ஒரு வாரம் கழித்து தந்திடுவேன் சாமி,  நீங்க மருந்தை மட்டும் சீக்கிரம் செஞ்சு தாங்க அவங்களுக்கு இன்னைக்கு முதல் ராத்திரியே நடந்திடுச்சு…   “

“மகளே உன் மகன் மட்டும் தான் அந்த வீட்டு வாரிசு…  இருவரும் இணைந்தாலும் குழந்தை பாக்கியம் அவர்களுக்கு கிடையாது கவலை கொள்ளாதே ஒரு வாரம் கழித்து பணத்தை கொடுத்து விட்டு மருந்தை வாங்கி செல் “என்றார்.

“அப்படியே செய்றேன் சாமி…” பவ்யமாக நர்த்தனா இணைப்பை துண்டித்தாள்.

மன மகிழ்ச்சியுடன் மந்திரவாதி உறங்க செல்ல,   பலமாக காற்று வீசியது. 

“ஹோஹோஹோ “என்ற இரைச்சல் சத்தம் கேட்டதும் ,மிகப் பெரிய சூறாவளி காற்று என்றெண்ணியவர் ,வெளியே வந்து பார்த்திட , அங்கே மயான அமைதியாக இருந்தது .

“டேய் இப்போ சூறாவளி காத்து அடிச்சதே… !!”

“இல்லையே சாமி சாதாரணமாக தான் இருக்கு…  “சீடன் கூற ,”இல்லையே நான் உணர்ந்தேனே என் அறைக்குள்ளேயே அவ்வளவு பெரிய சத்தம் கேட்டதே… “சற்று கலக்கமாக கேட்க சீடனோ “இல்லவே இல்லை” என்று உறுதி பட கூறினான்.

கனவு எதுவும் வந்திருக்குமோ குழம்பியவர் ,உள்ளே செல்ல முனைய கதவு திறக்க மறுத்தது .

“திறந்து தானே வச்சிருந்தேன்…  பிறகெப்படி… ??”

வேகமாக அழுத்தித் தள்ள முற்பட , கரும்புகையாய் ஒரு உருவம் சடாரென முன்னால் தோன்ற பயந்து போய் கீழே விழுந்தார்  மந்திரவாதி. 

 

கழுத்தில் ஏதோ பெரிய கட்டை ஒன்று அழுத்துவது போல இருக்க கை வைத்தபடி விலக்க முயன்றார். மூச்சு முட்ட ,கண்கள் இரண்டும் மேலே பார்த்தபடி இருக்க, நாக்கு வெளியே வந்தது…  கைகாலை உதறியபடி துடிக்க ,மேலே தேவான்ஷி தலை கீழாக தொங்கி கொண்டிருந்தாள்.

 

“ஆஆஆஆ “என அலற முடியாமல் அரற்ற, வியர்த்து கொட்டியது அவருக்கு.

சற்று நேரத்தில் முகத்தில் வெளிச்சம் பட, அவரது அறையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க சோர்வாய் படுத்திருந்தார் மந்திரவாதி.

சீடனோ .,”சாமி கண் விழித்துட்டிங்களா …!! உங்களுக்கு எதுவும் இல்லையே நான் டாக்டரை வரச் சொல்கிறேன் “என வெளியேறினார்.

அந்த அறையின் மூலையில் வெறித்த பார்வையுடன் தேவான்ஷி நின்றிருந்தாள்.

“ஆஆஆஆ “என கத்தியபடி மீண்டும் மயங்கினார் மந்திரவாதி.

….. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. என்ன சாமி நல்லா வாங்கினியா….எவ்வளவு கேடி வேலை பாத்திருப்ப….இன்னைக்கு நல்லா வாங்குனியா….
      இந்த தேவா மனசுல என்ன நினைச்சிட்டு இருத்கானே தெரியலயே….ஆனா ஏதோ எரு திட்டம் அவள் மனசுல ஓடுது என்னனு தான் தெரியல….

    2. Nan kuda ava pei ilayonnu ninachen Partha ava terror pei ya la iruka…. Yen ma pathila vitta aven oruthn close aairuntha ellaroda pirachanayum mudunjurukume…