- “நிஜமாவே நீ நீ நீ ஆவியா… ??”
“ப்ப்ச் உங்களுக்கு எப்படி ப்ரூஃப் பண்றது னு சொல்லுங்க… பண்றேன்… “
“எங்க இங்கிருந்தே அந்த பீரோவை திறந்து காட்டு பார்க்கலாம்…. “
“அய்யே… நீங்க நிறைய பேய்ப்படம் பார்த்து கெட்டுப் போயிட்டிங்க… அப்படி எல்லாம் ஆவியால செய்ய முடியாது…. “என்றாள் தேவான்ஷி.
“அப்புறம் நீயெல்லாம் என்ன பேய் அடப் போமா எங்க சந்திரமுகி அக்கா அசால்டா ஒரு கட்டிலை ஒத்த கையால தூக்கி நிறுத்தும் தெரியுமா… சரி சரி அந்த ஜெகன் மோகினி படத்தில் வர்ற மாதிரி காலை நீட்டி போட்டு பத்த வச்சு சோறாக்கு பார்க்கலாம் …. அதுவும் தெரியாதா… சரி விடு… இப்ப நீ என்ன பண்ற குரலை மாத்தி மிமிக்ரி பண்ற…. அட பேய் மாதிரி மிரட்டவாவது செய்மா… அப்புறம் உன்னை பேய் னு நாங்க எப்படி நம்புவது… ” சலித்து கொண்டான் வேதாந்த்.
“ஜேபி சார் ஜேபி சார்… நான் அது மேல நின்னேன் தானே… அப்போ நான் ஆவி தானே சொல்லுங்களேன் உங்க ஃப்ரெண்டு கிட்ட…. “
“ஹ்ஹேன் ஹ்ஹ்ஹே… அந்த அலமாரி மேல நிக்கிறது பெரிய பிரமாதமா எங்க வீட்டு குட்டி வாண்டு பொழுதனைக்கும் லாஃப்ட் ல தான் ஏறி குதித்து விளையாடும்… அதுக்காக அது ஆவி ஆகிட முடியுமா…???”
“ப்ப்ச் நீங்க நம்பாட்டி போங்க….. ஜேபி சார் நீங்க நம்புவீங்க தானே… !!”பரிதாபமாக கேட்டாள்.
“ம்ம்க்கும் ரொம்ப முக்கியம்… ஆமா நீ எப்போ இங்கிருந்து போவ …. ??”
“எங்க போகணும்… ??”
“ம்ம்ம் சுடுகாட்டுக்கு..”
“அச்சோ எனக்கு பயமா இருக்கு பா நான் போக மாட்டேன்… ஓ மை காட் தனியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா… அதுவும் அங்க ஒரு ஃபேன் இல்ல ,ஏசி இல்ல ,சாப்பிட ஸ்நாக்ஸ் கூட இல்ல…
“ம்ம்ம் நீ விட்டா டிவி ப்ரிட்ஜ் எல்லாம் வாங்கி வைக்க சொல்லுவ போல இருக்கு… “
“ஓஓஓ அதெல்லாம் வைக்க முடியுமா அப்போ எல்இடி டிவி வாங்கி வைக்கிறிங்களா ப்ளீஸ் ப்ளீஸ்… நான் சன் மியூசிக் பார்க்கனும்… “
“அட கடவுளே ஒரு ஆவியை இந்த பாவி கிட்ட கெஞ்ச வச்சுட்டியே !!”
“டேய் சும்மா இரு டா… இதோப் பாரு ஒழுங்கா இங்கிருந்து ஓடிடு… நானே எங்க அப்பாவை பார்க்க முடியாத கவலையில இருக்கேன்… “கடுப்பாக பேசினான் ஜேபி.
“சார் நான் நல்லா பாடக் கூட செய்வேன்… நான் வேணுன்னா ஒரு பாட்டு பாடவா…. “நானே வருவேன்… நானேனே வருவேன் “
“யம்மா தாயே… போதும்… போதும்… காது வலிக்குது… இப்ப உனக்கு என்ன தான் வேணும்.. ??”
“சார் எங்க அப்பா அம்மாவையும், என் தங்கச்சியையும் ,பார்க்கணும்… ப்ளீஸ் சார் அவங்க நான் இல்லாம ரொம்ப கஷ்டப்படுவாங்க… “
“அவங்களை காட்டினதும் பார்த்துட்டு போயிடணும் மறுபடியும் வந்து என் உயிரை வாங்க கூடாது… “என்று ஜேபி சொன்னதும் சரி என்று சம்மதித்தாள்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
மஞ்சள் சிவப்பு நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்க…. ஆங்காங்கே தீப்பந்தங்களும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன.
நடுக் கூடத்தில் போடப்பட்டிருந்த ஹோம குண்டத்தில் தீச்சுவாலை எரிந்து கொண்டிருக்க ச்சுஸ்ரூபத்தில் நெய்யை எடுத்து ஊற்றினார் மந்திரவாதி…. அதன் முன்பாக அரிசி மாவில் செய்யப்பட்ட மனித உருவ பொம்மைக்கு ஆணி அடித்து அதனை படுக்க வைத்திருந்தார்.
சுற்றி வர எலுமிச்சை பழங்கள் வரிசை கட்டி நின்றிட கையில் சிறு சிறு மண்டை ஓட்டுக்களை போல வடிவம் கொண்ட மணிகளால் கோர்க்கப்பட்ட வெண்ணிற மாலை அவரின் கையில் தவழ்ந்த வண்ணம் இருந்தது.
எதிரே அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் முகத்தில் பதட்டமும் பயமும் போட்டி போட்டு கொண்டு இருக்க மற்றொரு பெண்ணோ தலை விரி கோலமாக வியர்த்து விறுவிறுத்த முகத்துடன் ஆக்ரோஷமாக உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தாள்.
வெளியே ஜேபி பயபக்தியோடு காத்திருந்தான்.