இலக்கணப்போலி
“காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கும்…
நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிப்பரப்பாகும்…
உன் நரம்பே நாணேற்றி உனக்குள் அம்புவிடும்…
காதலின் திரைசீலையைக் காமம் கிழிக்கும்…
ஹார்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்…
உதடுகள் மட்டும் சகாராவாகும்…
தாகங்கள் சமுத்திரமாகும்…
பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்…
காதலித்துப் பார்!”
-வைரமுத்து
மனதினுள் மணாளனை நினைத்தபடி படித்து முடித்திருந்த மீனாட்சியினுள் புது வெட்கம் பிறந்தது.
கவிதையிருந்த காகிதத்தை நெஞ்சத்தோடு அணைத்துக் கொண்டவளின் உதடுகளின் ஓரங்கள் விரிந்து விரிந்து சுருங்கின.
நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவளின் முகத்தில் பொலிவும், புன்னகையும் போட்டிப் போட்டுக் கொண்டு பந்தயம் புரிந்து கொண்டிருந்தது.
செக்கச் சிவந்த கொழுந்தானாள் மீனாள்!
திருமணமாகி இன்று இரண்டாம் நாள்.
நேற்று அவனோடு கழித்த இரவு அவளது அங்கங்களில் மட்டுமல்ல அவளது உள்ளத்திலும் அடையாளாங்களை விட்டுச் சென்றிருந்தது.
இப்பொழுது நினைக்கவும் உள்பாதத்திலிருந்து உச்சந்தலை உடல் கூச, சிலிர்த்துப் போய் அமர்ந்திருந்தாள் மீனாட்சி.
நிலைகதவில் அமர்ந்திருந்தவள் பின்னிருந்த கதவின் தண்டில் சாய, அவளின் கண்களில் பல கற்பனைக் கனவுகள் மிதக்க ஆரம்பித்திருந்தன.
அவளின் ஏகாந்தங்களிலும் தன்னைப் பற்றிய நினைவுகளை நிரப்பிக் கொண்டவன் எப்பொழுது வீடு திரும்புவான் என்று கேட்டு சிணுங்கியது அவள் ஆசை மனம்.
அப்பொழுது “ஐயோ… அத்தாச்சி…….!!” என மாரில் அடித்துக்கொண்டு வீட்டினுள் ஓடி வந்தார் ஓரு பெண்மணி.
அக்கூச்ச்சலில் உடல் தூக்கிவாரிப்போட விழித்த மீனாட்சி, பின்வாசலிளிருந்து எழுந்து உள்ளே ஓடி வந்தாள்.
“என்னத்துக்குடி இப்படி கத்துறவ??” தானும் பதட்டத்தோடு பக்கத்திலிருந்த அறையினுள்ளிருந்து வெளிவந்தார் பானுமதி.
“எம்மருமவே நம்மள விட்டுப் போயிட்டான் அத்தாச்சி….” என்று சொல்லி அப்பெண் ஓலமிட, மனதில் விழுந்த இடியோடு அசையாமல் நின்றிருந்தாள் மீனாட்சி.
அன்றிலிருந்து மூன்றாவது நாள்…
ஐந்து நாட்களுக்கு முன் நடந்த தன் திருமணத்தில் கட்டியிருந்த அதே பட்டை உடுத்தி வீட்டின் நடுக்கூடத்தில் அமர்த்தப்பட்டாள் மீனாட்சி.
நெற்றி நிரம்பிய பொட்டும், கழுத்தில் தொங்கும் தாலியும், கைகளில் குழுங்கும் கண்ணாடி வளையல்களும், தலை நிரம்பிய பூவும் சிறிது நேரத்தில் மேனியிறங்கப் போவதை சுற்றியிருந்தவர்களின் வேதனை முகம் அறிவிக்க, உயிர்ப்பற்று அமர்ந்திருந்தவளின் முகத்திலும் ஒளியில்லை.
கணவனோடு சேர்ந்து வந்த தாலியையும் மெட்டியையும் சேர்த்து, சிறுவயதிலிருந்து தன் தோள்களில் தவழ்ந்த பூவையும் நெற்றியில் நிறைந்திருந்த செந்நிற சாயத்தையும் இழந்தாள் மீனாட்சி.
இலக்கணப்போலி – நாம் தினம்தினம் காணும் சக மனிதர்களில் இருவரை மையமாகக் கொண்ட கதை.
ஆடம்பரங்களோ, ஆறடி ஆண் மகன்களோ இதில் அணிவகுக்கமாட்டர்.
அண்மையில் நீங்கள் கண்ட யாரோ ஒருவரின் கதையாகக் கூட இது இருக்கலாம்.
அடுக்கு மாளிகைகளையும், படிக்கட்டு தேகங்களையுமே இதுவரை கதைகளில் கடந்து வந்த எனக்கு இதில் வரும் கதாப்பாத்திரங்களை சித்தரிப்பது சற்று சிரமமாகவே இருந்தது.
உங்களின் ஆதரவே இப்போட்டியில் எனக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பரிசாக மாற வழிவகுப்பீர்களாக…
நன்றி
வாழ்த்துக்கள் சிஸ்😍😍😍 படைப்பு வெற்றி பெற.
Thank you❤️
இப்பொழுது நிறைய மாறி விட்டது . பழைய படி யாரும் இப்படி செய்வதில்லை . மறுமணம் இயல்பாக நடக்கிறது . அதேபோல் பூவும், பொட்டும் யாரும் இழப்பதில்லை . சமுதாயம் ஒத்துக் கொள்கிறது .
.