Loading

தன் பரந்த மார்பில் படர்ந்திருந்த பாவையின் முகத்தை முழுதாக நெஞ்சில் அழுத்தியவனுக்கு, ஏனோ அத்தனை பரவசம்.

‘என் கண்ணம்மா எனக்கே தெரியாம என்ன காதலிச்சு இருக்காளா? அதுவும் என்னை மாதிரியே…’ என எண்ணும் போதே, துள்ளி குதித்து நீலகிரி மலையே உடைந்து விழும் அளவு சந்தோஷத்தில் கத்த தோன்றியது ஆரவ் முகிலனுக்கு.

பரபரப்பாக அவளை விலக்கி, முகத்தை தாங்கியவன், பெருவிரல் கொண்டு அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை அப்புறப்படுத்தியடி, “கண்ணம்மா… இதெல்லாம் கனவில்லையே? நிஜம் தான? நீ நீ… நீயும் நிஜமா என்னை விரும்புனியா? என்னை பார்க்க ஆசையா கிளம்புனியா? இதே ஊட்டில, என்ன மாதிரி நீயும் என்னை ரசிச்சியா? நிஜமா? உண்மையாவே நிஜமா?” என்றான் விழிகளில் பளபளத்த நீருடன்.

ஆனால், அதற்கு எதிர்பதமாக அவனின் முரட்டு இதழ்கள் புன்னகையில் துடித்திட, பக்கென புன்னகைத்தவள், “ம்ம்… நிஜமா… சத்தியமா! உங்க பின்னாடி அலைஞ்சேன். நீங்க போன இடத்துக்கு எல்லாம் வந்து, உங்களை மட்டும் தான் பார்த்தேன். ரசிச்சேன். சைட் அடிச்சேன்.” என தலையை சாய்த்துக்கொண்டவள், “நீங்களும் நிஜமா என்னை லவ் பண்ணீங்களா முகில்?” என்றாள் நம்ப இயலா தோரணையுடன்.

அவனோ அவளை வெகுவாய் ரசித்து ருசித்தபடி, “ப்ராமிஸ்டி. ஊட்டின்னு சொன்னாலே உன் முகம் மட்டும் தாண்டி எனக்கு ஞாபகம் வரும். என் நெஞ்சுல அடி ஆழத்துல பதிஞ்சு போன இந்த முகமும், நீ கொடுத்த அழிக்க முடியா உணர்வும் அத்தனை சீக்கிரம் மறைஞ்சு போக, இது வெறும் ஓவியம் இல்ல கண்ணம்மா. கல்வெட்டு.” என அவளை காந்த விழிப் பார்வையில் கவர்ந்திழுத்தவனின், வார்த்தைகளில் மீண்டும் மீண்டும் உயிர்தெழுந்தவள், ஆசையுடன் அவன் தோள்களை கட்டிக்கொண்டாள்.

“சின்னதா ஏற்பட்ட ஒரு சலனத்துனால, என் மனசுல நீங்க ஏற்படுத்துன தாக்கம், வெறும் விதை இல்ல முகில். வேர்… அத்தனை சீக்கிரம் புடிங்கி எறிய முடியல. அதை மறுபடியும் நான் உங்களை ஆபிஸ்ல பார்த்ததுக்கு அப்பறம் தான் புரிஞ்சுக்கிட்டேன். ஐ லவ் யூ அ லாட் முகில்!” என்றவள், கண்ணீருடன், அவன் கன்னத்தில் அழுத்த முத்தம் பதிக்க,

அவனோ, தொடர்ந்து பல முத்தங்களை முகமெங்கும் வாரி வழங்கி விட்டு, “எனக்கும் கண்ணம்மா. உன்ன மறந்துட்டேன்னு நினைச்சேன். ஆனா அப்படி என்னை நானே ஏமாத்திட்டு இருந்துருக்கேன்னு அப்பறம் தான் தெரிஞ்சுது. ஐ லவ் யூ டி. என் வாழ்க்கையில முதல் காதலும், கடைசி காதலும் நீ மட்டும் தான் கண்ணம்மா. அதே மாதிரி உனக்கும், உன் முதல் காதல் நான் மட்டும் தான். இனிமே எதையும் போட்டு குழப்பிக்காதடி. ப்ளீஸ்…” என்றவனின் கண்கள் கெஞ்சலாய் சுருங்க, எப்போதும் போலவே ஆடவனின் கெஞ்சல் மொழிகளுக்கு அவள் மனது அடிபணிந்தது.

மறுப்பாக தலையாட்டியவள், “மாட்டேன்… நான் ஏன் குழப்பிக்கணும். அதுவும் என் முகிலும் என்னை லவ் பண்ணிருக்காருன்னு தெரிஞ்சும், நான் ஏன் கண்டதை யோசிக்கணும். மாட்டேன். இனிமே, என் முகிலை தவிர நான் எதையும் யோசிக்க மாட்டேன். எனக்கு நீங்க மட்டும் போதும் முகில். இந்த காதல் மட்டும் போதும். நான் கிடைக்கவே கிடைக்காதுன்னு நினைச்ச என்னோட பொக்கிஷம் உங்களோட இந்த காதல் தெரியுமா?

இதுக்கு முன்னாடியும் நீங்க லவ் பண்றேன்னு சொல்லிருக்கீங்க தான்… ஆனா, இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்…” என உணர்வுகள் வழிய கூறி முடிக்கும் முன்னரே, அவளின் இதழ்களை கவ்வி இருந்தான் ஆடவன்.

இருவரும், விரும்பியே இதழ்களுக்குள் அடக்கமாகி, முத்தப்போரை நிகழ்த்திக்கொண்டிருக்க, சில நிமிடங்களில் மூச்சு வாங்க விலகியவன், அடக்கப்பட்ட ரசனையுடன்

“நீ என்னை லவ் பண்றேன்னு சொன்னப்ப, ஏதோ உணர்ச்சிவசப்பட்டு சொல்றன்னு தான் நினைச்சேன். ஆனா, இந்த அளவு உன் மனசுலயும் அதே காதல் இருக்கும்ன்னு தெரியலடி. இப்போ… இப்போ தெரிஞ்சதுக்கு அப்பறம்… என்னால சொல்லவே முடியலடி. அவ்ளோ ஹேப்பி…” என்றவனின் குரலில் அத்தனை மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.

மிளிர்ந்த கண்களுடன் பேசியவனின், முக பாவத்தையே கண்ணிமைக்காமல் பார்த்தவள், “எவ்ளோ ஹேப்பி?” என குறும்புடன் கேட்க, அவனும் அதே குறும்புடன் “அவ்ளோ அவ்ளோ ஹேப்பி… எவ்ளோன்னு காட்டவா?” என அவளை பார்வையால் ஊடுருவி விட்டு, மீண்டும் இழுத்தணைத்து முத்தங்களை தொடர்ந்தான்.

எத்தனை நேரம், அது தொடர்ந்ததோ அவர்களே அறியவில்லை. அவனுக்காக அவள் வாங்கிய புடவை, அவனின் கைப்பிடியில் கசங்கத் தொடங்க, அவளோ அவனை விட்டு மெல்ல விலகி நின்று, இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

மோகத்தில் திளைத்திருந்தவன், “தள்ளி போகாதடி” என மீண்டும் பிடித்து இழுக்க,

“உங்களுக்காக ஆசை ஆசையா வாங்குன புடவையை இப்படி தான் கசக்கி வைப்பீங்களா?” என முறைப்புடன் கேட்டவளைக் கண்டு வசீகரத்துடன் புன்னகைத்தவன், “அப்போ தான, அந்த புடவைக்கே மரியாத…” என்றான் கிசுகிசுப்பாக.

அவன் கூறிய தொனி புரிந்ததில் சிவந்தவள், “போங்க முகில்…” என்றாள் முகத்தை மூடிக்கொண்டு.

ஆரவிற்கோ கால்கள் தரையில் நிற்கவில்லை. தனக்கான, முழுதும் தனக்கே தனக்கான தன்னவளின் வெட்கம். ஐயோ… பறக்கும் சக்தி இருந்தால், அவளையும் தூக்கிக்கொண்டு பறந்து உலகத்தை சுற்றி வந்திருப்பான்.

தன்னையே பார்த்திருந்த முகிலின் பார்வையில், மேலும் மேலும் சிவந்து வெட்கத்தில் கரைந்து போனவள், பின் நிமிர்ந்து “சரி சொல்லுங்க!” என்றாள் வேகமாக.

அவனோ அழகாய் மென்னகை சிந்தி, “என்னடி சொல்லணும்?” எனக் கேட்க,

போலிக்கோபத்துடன் விழிகளை சுருக்கியவள், “என்ன சொல்லணுமா? இந்த புடவையை தான ஆசையா பார்த்தீங்க. இப்போ நானே கட்டிட்டு வந்திருக்கேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இந்த மொமெண்ட் என் வாழ்நாள் கனவு தெரியுமா…?” ஆசையுடனும், ஆவலுடனும் கேட்டுக்கொண்டே வந்தவளுக்கு இறுதி வார்த்தையில் குரல் கம்மி விட,

எச்சிலுடன் சேர்த்து இத்தனை வருடம் நெஞ்சம் தாங்கிய வேதனையை விழுங்கியவனின் கண்களிலும் நீர் திரையிட, “அவ்ளோ அழகா இருக்கடி. வானத்துல இருந்து இறங்கி வந்த ஏஞ்சல் மாதிரி…!” சொல்லும் போதே, நெஞ்சம் நிறைந்த உணர்வுகளின் பிடியில் உருகி இருந்தான் ஆரவ்.

“ஏஞ்சல் மாதிரியா?” என விழிகளை விரித்தவள், இதழ் சுளித்து, “ஆனா, ஏஞ்சல் எல்லாம் வரமாட்டாங்கன்னு தான சொன்னீங்க?” என்று அவனை வாரியபடி, துளிர்த்து நின்ற ஆணவனின் கண்ணீரை துடைத்து விட்டாள்.

அதில் பல்வரிசை மினுக்க சிரித்தவன், “யாரு சொன்னா வரமாட்டாங்கன்னு? என் கண்ணம்மா இருக்காளே. என்னை மறுபடியும் சிரிக்க வைச்சு, ரசிக்க வைச்சு, உணர்வுகளுக்கு உயிர் குடுத்து, என் காயத்துக்கு மருந்து போட்டு விட்டு, அப்போ என் கண்ணம்மாவும் ஏஞ்சல் தான?” என ரசனை மிக்க வினவ,

அவளும் நன்றாக நகைத்து விட்டு, “ஆமா ஆமா… அப்போ அந்த மேகத்துல இருந்து வந்த ஏஞ்சலும் நீங்க தான்.” என்று அவன் கன்னத்தை கிள்ளினாள் செல்லமாக.

அவள் செயலில் சத்தமாக சிரித்தவன், அவள் இடை வளைவில் கை விட்டு, தூக்கி அவனின் மடியில் அமர வைத்து, “நான் கேட்கணும்ன்னு நினைச்சேன். அன்னைக்கு அந்த பாப்பாகிட்ட என்ன சொல்லி சமாளிச்ச? எங்க அம்மா தான் தினமும் என்னை அடிக்கிறாங்க. அவங்ககிட்ட இருந்து ஏஞ்சல் காப்பாத்துமான்னு கேட்டு உன்னை ஷாக் ஆக வைச்சுச்சுல அந்த பாப்பா. அப்போ உன் முழியை பார்க்கணுமே. சோ ஸ்வீட்…” என அவ்விழிகளை ஈரப்படுத்தினான்.

வாகாக அவன் மடியில் அமர்ந்து அவன் மீதே உரிமையுடன் சாய்ந்து கொண்டவள், “முகில்…! கூச்சமா இருக்கு” என சிணுங்கி விட்டு,

“ஐயோ… அவள் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டா. அப்பறம் ஏதேதோ சொல்லி சமாளிச்சேன் முகில்.” என சலித்துக் கொண்டவளைக் கண்டு அவன் சிரித்து வைக்க, “ப்ச், சிரிக்காதீங்க முகில்.” என்று கைகளை கிள்ளினாள்.

பிறகு, “நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல. அதெப்படி, எல்லா ஜென்மத்துலயும் சார் ஒரே பொண்ணை தான் லவ் பண்ணுவீங்களோ?” என குறும்பு மின்ன பார்க்க, அவனோ வெட்க புன்னகை ஒன்றை வீசி,

“எஸ். ஒரே பொண்ணு தான். அதுவும் நீ மட்டும் தான்.” என்றான் ‘மட்டும்’ என்ற வார்த்தையை குஷியாக அழுத்தி.

“அது சரி… மேடம், நாங்க பேசுனத ஒட்டு கேட்டீங்களோ?” என விழிகளை உயர்த்த,

“ஐய… நான் ஏன் ஒட்டு கேட்க போறேன். நீங்க பேசுனது என் காதுல விழுந்துச்சு.” என அலட்டலாக பதில் கூறிய இதழ்களில் இதழ் பதித்தவன், நகரவே பிடிவாதம் பிடித்தான்.

“முகில்” என முனகியபடி, அவள் மூச்சை இழுத்து விட, “ஒன் மோர் கண்ணம்மா!” என்றவன், விட்ட முத்தத்தை தொடர எத்தனிக்க, அவனை நிறுத்தியவள், “இது என்ன கிஸ்ன்னு சொல்லவே இல்ல” என்றாள் அவனைப் பாராமல்.

இரத்த நிறத்தில் சிவந்திருந்த அதரங்கள், எப்போது வேண்டுமானாலும், இரத்தத்தை உதிர்க்க தயாராக இருக்க, அந்நிறத்தைக் கண்டு பித்தானவன், “ஃபிரென்ச் கிஸ்டி. எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன்.” என்றபடி, அவளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்க, அப்பாடத்தில் கவனமானாள் வான்மதி.

இதழணைப்பிலேயே தளர்ந்த மனையாளை, நெஞ்சில் சாய்த்து முதுகை தடவிக் கொடுத்தவனுக்கு, போன் வர, சுதாகர் தான் அழைத்திருந்தான்.

அதனை எடுத்தவன், “இஷு அழுகுறானாடா?” என வேகமாக கேட்க, “இல்ல இல்ல மச்சான். அவன் விளையாடிட்டு தான் இருக்கான் பார்க்ல. மதி என்ன பண்றா?” என்றான் தயக்கத்துடன்.

“உன் தங்கச்சிக்கு என்ன… என் மடில உட்காந்துட்டு, எந்திரிக்க மாட்டுறா. ரௌடி…” என்று கிண்டலாக கொஞ்சியவனை விட்டு நகர முயன்றவள், “முகில்… என்ன நீங்க?” என கிசுகிசுப்பாக பதற, சுதாகருக்கு ஒன்றும் புரியவில்லை.

“மச்சான் எல்லாம் ஓகே வா?” என அவன் மீண்டும் கேட்க, “எல்லாம் ஓகே தான்டா. உன் தங்கச்சி பிராடு, என்னையவே ஏமாத்தி இருக்கா. என்கிட்ட தான் சொல்லல உன்கிட்டயாவது சொன்னாளா, அவளும் ஊட்டில என்ன லவ் பண்ணதை. காட்டேஜுக்கு வந்து அவளை நல்லா நாலு சாத்து சாத்து. உன்னையவே ஏமாத்தி இருக்கா…” என்று சிறப்பாக அவனிடம் போட்டு கொடுத்திட, சுதாகருக்கு அதிர்ச்சியில் விழிகள் அகன்றது.

இங்கு வான்மதி தான், ஆரவை சரமாரியாக அடித்துக்கொண்டிருந்தாள். “என்ன முகில் நீங்க. அவன்கிட்ட போட்டு குடுத்துட்டீங்க. தெரிஞ்சா திட்டுவான். நீங்களும் பிராடு தான…” என மூச்சு வாங்க,

“நான்லாம் நல்ல பையன்ப்பா. ஆல்ரெடி எல்லாருக்கும் இதெல்லாம் தெரியும். நீ பண்ண திருட்டுத்தனம் தான் தெரியாது. நீ திருடின்னு எல்லாருக்கும் தெரிய வேணாம்.” என்றவனின் இதழ்கள் குறுஞ்சிரிப்பை பரிசளிக்க,         
விரல்கள் அவள் முதுகில் வீணை வாசித்திருந்தது.

முதலில் முறைத்து, பின் நகைத்து நெளிந்தவளின் முகம் சிறிது நேரத்தில் கலவரமாக, மெல்ல உடலை குறுக்கியவளின் மாற்றத்தை நொடியில் உணர்ந்து கொண்டவன், “ஆர் யூ ஆல்ரைட் கண்ணம்மா?” எனக் கேட்டான் அவ்வருடலை நிறுத்தி விட்டு.

“வாஷ்ரூம் போகணும்.” என விழித்தவளைக் கண்டு சிரித்தவன், “இதுக்கு ஏண்டி இப்படி முழிக்கிற. போயிட்டு வா.” என்று மடியில் இருந்து இறக்கி விட, அவள் நிற்க இயலாமல் அவன் தோள்களையே பற்றிக்கொண்டு, மேலும் விழிக்க, முதலில் புரியாமல் பார்த்தவன், பின் “பீரியட்ஸ் ஆகிட்டியா?” எனக் கேட்டான்.

தயக்கத்துடன் மேலும் கீழும் தலையாட்டியவளைக் கண்டு, “இந்த தடவையும் ரொம்ப பெயின் இருக்கா கண்ணம்மா. இல்ல, இத்தனை நாள் டேப்லட் போட்டதுல டிஃப்பரன்ஸ் தெரியுதா?” என தீவிரமாக கேட்க, அவனை ஒரு நொடி ஆழமாய் பார்த்தவள், “இப்போ தான் ஸ்டார்ட் ஆகி இருக்கு. போக போக தான் தெரியும் முகில்” என்றவள், “நான் மறந்துட்டேன் சுத்தமா. நாப்கின் வாங்கணும்” என்று தலையை குனிந்து கொண்டாள்.

“எனக்கு ஞாபகம் இருந்துச்சுடி. நான் வாங்கிட்டு தான் வந்தேன்.” என்று சொன்னபடி இயல்பாக எழுந்தவன், அவளுக்கு வேண்டியதை கொடுத்து விட்டு, “உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன். கீழ இறங்கி வராத. ரெஸ்ட் எடு சரியா” என்று கனிவாய் கூறி விட்டு, கீழே செல்ல, அவன் சென்ற திசையையே பார்த்திருந்தவளுக்கு, என்றும் மாறாத புன்னகை இதழ்களில் தழுவி இருந்தது.

அதன் பிறகு, இத்தனை நேரம் காதலனாக இருந்தவன், சேவகனாக மாறி இருந்தான்.

“கால் வலிக்குதா. பிடிச்சு விடவா?”

“ரொம்ப வலிச்சா சொல்லு. நான் ஊட்டிக்கு வர்றதுக்கு முன்னாடியே டாக்டர்ட்ட கேட்டு எக்ஸ்டரா மாத்திரையும் வாங்கிட்டு தான் வந்திருக்கேன். அதை போட்டுக்கலாம்.”

“சூப் ரொம்ப காரமாக இருக்குற மாதிரி இருக்கு கண்ணம்மா. காரம் கம்மியா வேற கொண்டு வரவா?”

“வயித்துக்கு தலைகாணி வைச்சுக்கோ. கொஞ்சம் சப்போர்ட்டா இருக்கும். பட் ரொம்ப நேரம் வைக்காத.”

முழுக்க முழுக்க அவளின் நலனை மட்டுமே சிந்தித்து, சிறிதும் விலகாமல் அவளை பார்த்துக்கொண்டவனை, அவள் விழிகள் ரசித்திருந்தது.

இமை கொட்டாமல் அவனை விழிகளுக்குள் நிரப்பியவள், கட்டிலில் காலை நீட்டி அமர்ந்து தலைகாணியை கீழே தள்ளி விட்டு, “இங்க உட்காருங்க” என்றாள் அருகில் கைகாட்டி உத்தரவாக.

அவன் புரியாமல் அமர்ந்ததும், அவனின் நெஞ்சத்திலேயே சாய்ந்து கொண்டவள், “இங்க இருக்க தான் எனக்கு பிடிச்சு இருக்கு. இப்படி உங்களை கட்டி பிடிச்சுட்டே இருந்தா வலியும் தெரியல…” என வாஞ்சையாக கூற, அதில் அழகாய் முறுவலித்தவன், “அப்போ, இங்கயே இருந்துக்கோ கண்ணம்மா. இட்ஸ் யுவர்ஸ் ஒன்லி” என்றான் கண் சிமிட்டி.

ஆனாலும், அவளை இறுக்காமல் மென்மையுடன் அணைத்துக் கொண்டவனை நிமிர்ந்து பார்த்தவள், “முகில்… இஷுவையும் உங்களை மாதிரி தான் வளர்க்கணும்.” என்று கூறி விட்டு, அவனின் அகன்ற மார்பிலேயே முத்தமிட, அவனோ புருவம் சுருக்கி சிரித்து, “என்ன திடீர்ன்னு?” என்றான்.

“ப்ச். சும்மா சொல்லணும்ன்னு தோணுச்சு. என் பையனை நான் எப்படி வளர்க்கணும்ன்னு சொல்ல கூடாதா?” என சிலுப்பியவள், “இனிமேயாச்சு, பேபி என்கூட தூங்கலாம்ல.” என்றாள் முகத்தை சுருக்கி.

“ம்ம்க்கும். இப்பவும் அவன் உன் கூட தான தூங்குறான்.” என அவன் சலிக்க,

“ஏன், பேபியை என் ரூம்ல விட மாட்டேன்னு சொல்லிட்டீங்க முகில். எனக்கு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?” எனக் கேட்டாள் குறையாக.

அவள் நெற்றியில் மெல்ல இதழ் பதித்தவன், “கொஞ்சம் சுயநலம் தான்…” என்றதில் அவள் குழம்பியவாறு பார்த்தாள்.

“ஆமா, நீ பாட்டுக்கு அவனை தூக்கிக்கிட்டு தனி ரூம்க்கு போய்டுவ. அதுக்கு அப்பறம், நான் உனக்கு தேவையே பட மாட்டேன். அவனும் உன்கிட்ட ஒட்டிக்குவான். நான் மட்டும் தனியா ஆகிடுவேன். நீங்க ரெண்டு பேரும் இல்லாம நான் மட்டும் எதுக்கு இருக்கணும்.” என சிறுவன் போல அழுகுரலில் கேட்டிருந்தவனை கண்டு திகைத்தவள், இப்படி ஒரு கோணத்தில் யோசிக்கவே இல்லை.

எந்த அளவு தனிமை அவனை வதைத்திருந்தால், அவளுக்காக இந்த அளவு ஏங்கி இருப்பான் என்றெண்ணமே அவளுக்கு கண்ணீரை சுரக்க வைக்க, அவனோ மேலும் தொடர்ந்தான்.

“உனக்கு இஷுவை மட்டும் தான் பிடிக்கும். அவனுக்காக தான் என் கூட இருக்கன்னு நினைச்சு எவ்ளோ நாள் தவிச்சு இருக்கேன் தெரியுமாடி. அவனுக்காக மட்டும் நீ என்கூட இருக்குறேன்றது ரொம்ப வலிச்சுச்சுடி. அதுவும் என்கிட்ட டைவர்ஸ் கேட்டதயே என்னால ஜீரணிக்க முடியல, இதுல, இஷுவை பார்த்ததுக்கு அப்பறம் மட்டும் ஃபீல் பண்ணுன. அப்போ நான் வேணாமா உனக்குன்னு அவ்ளோ வலிச்சுச்சு இங்க…” என்று அவள் கைகளை பிடித்து, அவன் நெஞ்சில் வைத்து அழுத்தினான்.

“சே சே… இல்ல முகில். எனக்கு நீங்களும் இஷுவும் ஒரே மாதிரி தான். அந்த நேரம் அழுத்தம் தாங்காம, மோனிட்ட டைவர்ஸ் வேணும்ன்னு மெஸேஜ் பண்ணுனேன் தான். ஆனா, இன்னொரு தடவை உங்களை இழக்குற அளவு எனக்கு தைரியம் இல்ல முகில். ஜஸ்ட் உங்களை பார்த்துக்கிட்டேவாவது உங்க கூடவே இருந்துடலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனாலும் ஒரு ஸ்ட்ரெஸ்ல உங்ககிட்ட டைவர்ஸ் கேட்டுட்டேன். ஆனா, நீங்க டைவர்ஸ் தரமாட்டேன்னு பிடிவாதமா காட்டுன காதல்ல, அப்படி கேட்டதை கூட மறந்துட்டேன்.

அதுக்கு அப்பறம் நான் மோனிகிட்ட கூட எதுவும் பேசலையே இதை பத்தி” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தவளின் தலையை வருடி விட்டவன்,

“ஓ! அப்போ நீ முன்னாடியே கேட்டதை தான் மோனி தன்விட்ட சொல்லி, அப்பறம் எனக்கு தெரிஞ்சுதா. நான் கூட , நான் அவ்ளோ சொல்லியும், ‘நீ இல்லன்னா செத்துருவேன்னு’ சொல்லியும் கூட நீ டைவர்ஸ் கேட்டு இருக்கன்னு ரொம்ப கோபமாகிட்டேன் கண்ணம்மா. அந்த நேரத்தில தான் நீ இஷுவை மட்டும் கேர் பண்ணிக்கிட்டியா? ரொம்ப பொசெசிவ் ஆகிட்டேன். அதான், உன்கிட்டயும் கோபமா நடந்துக்கிட்டேன்… சாரிடி.” என வருத்தம் போல பேசியவன், மென்முத்தமொன்றை அளிக்க,

“அச்சோ! நமக்குள்ள எதுக்கு சாரி எல்லாம். நீங்க கோபப்பட்டது கூட எனக்கு பிடிச்சு தான் இருந்துச்சு. கோபத்துல கூட பிடிவாதமா நீங்க காட்டுற லவ்வ நிறைய நாள் ரசிச்சு இருக்கேன் முகில்” என ரசனையுடன் அவள் கூறிட, “ம்ம்ஹும்?” என புருவம் உயர்த்தியவன் அவள் நெற்றியில் புன்னகையுடன் முட்டினான்.

பின் அவளே, “நீங்களும் தான் இஷுவை மட்டும் கேர் பண்ணிட்டு, அவனுக்கு மட்டும் முத்தம் குடுத்தீங்க. எனக்கும் கிஸ் வேணும் போல இருந்துச்சு. என்னமோ நீங்க இஷுக்கு குடுக்குற கிஸ் மேல எனக்கு ஒரு க்ரேஸ். பொசெசிவ்ன்னு கூட சொல்லலாம்.” என்று மூக்கை சுருக்கி உதட்டை பிதுக்க,

“நானும் ரொம்ப ஏங்கி போனேன்டி. ஆனாலும், நீ அருவருப்பா இருக்குன்னு சொன்னியா. அதான்… உன்னை ஹர்ட் பண்ணிடுவேனோன்னு பயந்து தள்ளியே இருந்தேன். ஆனாலும் என்னால முழுசா தள்ளி இருக்க முடியல கண்ணம்மா.” என்றவனின் ஏக்கக்குரல் அவளை பிசைய,

“சாரி முகில். அந்த சிச்சுவேஷனை எப்படி ஹாண்டில் பண்றதுன்னு எனக்கு தெரியல. ரொம்ப சாரி…” என அழுவது போல அவன் கன்னத்தை பற்றிக் கொண்டவளைக் கண்டு பதறியவன்,

“ஹே… நமக்குள்ள சாரி வேணாம்ன்னு சொல்லிட்டு, நீ மட்டும் சொல்ற. இட்ஸ் ஓகே டி. அந்த நேரத்தில உன் மனநிலை எப்படி இருந்துருக்கும்ன்னு எனக்கும் புரியுது கண்ணம்மா.” என்று மெல்ல முதுகை வருடி விட்டான்.

அதில் தெளிந்தவள், “அவன் என்ன ஆனான்? உண்மையாவே உயிரோட இல்லையா முகில்?” என உணர்வுகளற்ற குரலில் கேட்க, “உயிரோட மட்டும் தான் இருக்கான்.” என்றான் காரமாக.

“அவனை எல்லாம் ஹேமாகிட்ட பேடா பிஹேவ் பண்ணும் போதே, வெட்டி போட்டுருக்கணும். விட்டது என் தப்பு தான். அன்னைக்கு அவன் வீட்டில அடிச்சு பிரிச்சுட்டு வந்தும் அடங்கல அவனும் அவன் அப்பாவும்.

அடுத்த நாள், இஷுவையும் உன்னையும் கொலை பண்ண பிளான் பண்ணி இருக்கானுங்க. அவனுங்களோட ஆக்டிவிட்டீஸ் தெரியணும்ன்னு அவன் வீட்ல, எனக்கு தெரிஞ்ச ஆளையும் வேலைக்கு சேர சொல்லி இருந்தேன். அவன் மூலமா விஷயம் தெரிஞ்சதும், ரெண்டு பேரையும் கார்ல போகும் போது லாரியை விட்டு ஏத்த சொல்லிட்டேன்.” என்றதில் லேசாக திடுக்கிட்டவள் அரண்டு விழிக்க,

“நீ ஷாக் ஆகாத கண்ணம்மா. முதல் தடவை நான் வீட்டுல சண்டை போட்டு விக்ராந்தை அடிச்சுட்டு வந்தப்போ, அவனோட அப்பா என்னை கொலை பண்ண இதே செட் – அப் தான் பண்ணுனான். நல்லவேளையா நான் தப்பிச்சுட்டேன். இல்லைன்னா, இப்படி ஒரு நாள அனுபவிக்காமயே போயிருப்பேன்” என்றவனின் இதழ்களில் புன்னகை உதிக்க,

அவளோ வெகுவாய் அதிர்ந்து “என்ன சொல்றீங்க முகில். அவங்க இவ்ளோ மோசமானவங்களா? சே.” என்று முகத்தை சுளித்தாள்.

“ம்ம். ஆமா கண்ணம்மா. விடு. இப்போ ரெண்டு பேரும் ஆஸ்பத்திரில குத்துயிரும் கொலையிருமா இருக்கானுங்க. அப்டியே மீறி பொழைச்சலும், பூமிக்கு தான் பாரம்ன்னு, நானே வந்து விஷ ஊசி போடுறேன்னு சொல்லிருக்கேன். டாக்டர் நம்ம ஆளு தான். ஒரு பொண்ணோட உணர்வுகளை துச்சமா நினைக்கிறவன் இருக்குறதுக்கு சாகுறது மேல்.” என பற்களை கடித்தவனின் முகம் கடுகடுவென இருந்தது.

அவன் கன்னத்தை வருடி விட்டு, அவனை சமன்படுத்தியவள், “விடுங்க முகில். அவன் என்ன ஆனா நமக்கு என்ன. ஆனா ஒன்னு முகில், வெறும் ஸ்டேட்டஸ பார்த்து மட்டும் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நினைக்கிற பேரண்ட்ஸ் முதல்ல திருந்தணும்.

கல்யாணத்துக்கு அப்பறம், தன்னோட பொண்ணு வாழ்க்கைல என்ன நடக்குது, அவள் நல்லா இருக்காளா இல்லையான்னு தெரிஞ்சுக்கறது கூட பெத்தவங்களோட கடமை தான். ஆனா, பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா, அவங்க கடமை முடிஞ்சுருதுன்னு நினைச்சு, அவள் என்ன கஷ்டப்பட்டாலும் உன் தலையெழுத்துன்னு போறவங்க இருக்குற வரை, இந்த மாதிரி அபியூஸ் நடந்துக்கிட்டே தான் இருக்கும் முகில்.” என சீறலாக கூறியவள் விரக்தி புன்னகையுடன்,

“இதுல எனக்கு ரொம்ப வருத்தம் என்ன தெரியுமா முகில். எங்க அப்பாகிட்ட இல்லாத பணமே கிடையாது. அவரு நினைச்சு இருந்தா, ஒரு நிமிசத்துல என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, இன்னொரு வாழ்க்கையை கூட ஏற்படுத்தி குடுத்துருக்க முடியும். அந்த அளவு செல்வாக்கு இருக்கு. அப்படி பட்ட, என்னாலேயே இதுல இருந்து மீள முடியல.

ஆனா, கடனை வாங்கி பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைச்சு, அவள் கஷ்டப்படுறான்னு தெரிஞ்சும், அவளை கூட்டிட்டு வந்து வீட்ல வச்சு பார்த்துக்க முடியாத பணவசதி இல்லாத பெத்தவங்க எத்தன பேர் இருக்காங்க. அவங்களோட வாழ்நாள் உழைப்பே அந்த பொண்ணோட கல்யாணம் மட்டும் தான்.

அதுல அவன் நல்லவனா இருந்துட்டா நல்லது. இல்லன்னா, அவள் வாழ்க்கை கடைசி வரைக்கும், அவன் கூட தான்ல. பண ரீதியாவும், மன ரீதியாவும் தனிச்சு வாழவே முடியாத பொண்ணுங்க எத்தன பேர் இருக்காங்கள்ல. அத நினைச்சாலே, ரொம்ப பயமா, கஷ்டமா இருக்கு முகில். இதை வெளிய சொன்னா கூட, அந்த பொண்ணுக்கு எத்தன கெட்ட பேர்ல?” என வருத்தம் தோய்ந்த குரலில் பேசி முடித்தவளை, மென்மையாக அணைத்துக் கொண்டவன்,

“இதுக்கான முடிவும் பெத்தவங்க கையில தான் இருக்கு கண்ணம்மா!” என்றான் உறுதியாக.

அவள் விழி நிமிர்த்தி பார்த்ததும், “பையன்னா அப்படி தான் பண்ணுவான். பொண்ணுன்னா இப்படி தான் இருக்கனும்ன்னு ஒரு வரைமுறையோட, சின்ன வயசுல இருந்தே பையனுக்கு ஒரு ரூல்ஸ், பொண்ணுக்கு ஒரு ரூல்ஸ்ன்னு பிரிச்சு வளர்க்குறாங்க. அது தான் முதல் குற்றமே.

பையனா இருந்து ஏன் அழகுற? பையன் அழக்கூடாதுன்னு ஆரம்பத்திலேயே கண்ணீர் வெறும் பெண்களுக்கு மட்டும் தான் சொந்தம்ன்னு அவன் மனசுல ஆழமா பதிச்சுடுறாங்க.

அதுக்கு அப்பறம் அட்ஜஸ்ட்மெண்ட். வீட்டுல பொண்ணும் பையனும் இருந்தா, படிப்புல ஆரம்பிச்சு எல்லா விஷயத்துலயும் பொண்ணுங்க தான் அட்ஜஸ்ட் பண்ணனும்ன்னு பெத்தவங்களும் போதிக்கிறாங்க. பையனும் அதை அப்படியே புருஞ்சுக்குறான். ஏன், இப்போ எல்லாம் இது ஆம்பள பையன் படிக்கிற படிப்பு, இது பொண்ணுங்க படிக்கிற படிப்புன்னு பிரிவினை கூட வந்துருச்சு.

அடுத்ததா, நியூஸ்ல ஒரு பொண்ணை ரேப் பண்ணிட்டாங்கன்னு செய்தி வந்துட்டா, சில பெத்தவங்க வாயில இருந்து வர்ற முதல் வார்த்தை, ‘இந்த நேரத்துல அந்த பொண்ணு ஏன் அங்க போனா? என்ன ட்ரெஸ் போட்டு இருந்தா, அவன் கூட ஏன் தனியா போனா? இப்படி எல்லாம் வீட்டுக்கு அடங்காம இருந்தா இப்படி தான் அனுபவிக்கணும்ன்னு போற போக்குல சொல்லிட்டு போற சில வார்த்தைகள், அவங்க வீட்டு பையன் மனசுல கூட அப்படியே பதிஞ்சுடும்.

சோ, அவனும் ரேப் நடந்தா, அதுக்கு காரணம் பொண்ணுங்க தான். நம்ம இப்படி தான் இருக்கணும்ன்னு முடிவு பண்ணி, அவனும் அதே தப்பை பண்றான்.

அதுக்கும் மேல, வீட்டுல தங்கச்சியோ அக்காவோ, புருஷன் வீட்டுல சண்டை போட்டுட்டு வந்தா, பேரெண்ட்ஸ், ‘ஆம்பளைங்க அப்படி தான் இருப்பாங்க நீ அனுசரிச்சு போ’ன்னு சொல்ற ஒரு வார்த்தை அந்த வீட்டுல வளர்ற பையனுக்கும் தப்பான புரிதலை ஏற்படுத்துது.

அப்போ இருந்தே அந்த பையனுக்கு, நம்ம தான் எல்லா விஷயத்துலயும் டாமினேட் பண்ணனும், பொண்ணுங்க ஜஸ்ட் நம்ம அடிமை தான்ற எண்ணம் தானாவே வளர்ந்துடுது. அது ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதத்தில பொண்ணுங்களை கஷ்டப்படுத்த வைக்குது கண்ணம்மா.     

இதுக்கு எல்லாம் ஒரே வழி. பொண்ணுங்களையும் மதிக்கணும்ன்னு பசங்களுக்கு சொல்லி தந்து வளர்க்குற பெத்தவங்க கையில தான் இருக்கு கண்ணம்மா. பொண்ணுங்களை போதிக்கிறதை விட்டுட்டு, பசங்களை சரியா வளர்த்தாலே, நாட்டுல பொண்ணுக்கு எதிரா நடக்குற பாதி குற்றங்கள் நின்னுடும்.” என தன்போக்கில் பேசிக்கொண்டே சென்றவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட வான்மதி,

“உண்மை தான் முகில். எங்க வீட்லயே எனக்கும் சுத்திக்கும் அவ்ளோ வேறுபாடு பார்ப்பாங்க. ஆனா, அவங்க என்ன தான் அப்படி பிரிச்சு பேசுனா கூட, என் அண்ணன் மாதிரி பசங்க, வளர வளர எது தப்பு எது சரின்னு புருஞ்சுக்குற மனப்பக்குவத்தை ஏற்படுத்திக்கிறாங்க. ஒரு சிலர் அதையே பாலோ பண்ணி, தப்பும் பண்றாங்க. ஏன், நீங்க இல்ல…  நீங்க நினைச்சு இருந்தா, எப்படி வேணாலும் வாழ்ந்துருக்கலாமே.

உங்களுக்கு ஒரு பேட் எக்ஸ்சாம்பில் உங்க அம்மாவே போதும். அவங்களை பார்த்து நீங்களும் வளர்ந்து இருந்தா…” எனக் கூறி முடிக்கும் முன்,

“எனக்கு ஒரு கண்ணம்மா கிடைச்சுருக்க மாட்டா. அவளோட முகிலா நான் இங்க இருந்து இருக்க மாட்டேன். தேங்க் காட். இந்த லவ்வ மிஸ் செஞ்சுருப்பேன்.” என அவளை பார்த்து கண்ணடித்தவனைக் கண்டு சிரித்தவள், “இதுக்கு தான் சொன்னேன். இஷுவையும் உங்களை மாதிரியே வளர்க்கணும்ன்னு.” என்று அவன் கேசத்தை கலைத்து விளையாடினாள்.

“ஆனா, இப்படி கஷ்டப்படுற பொண்ணுங்க இருக்குற உலகத்துல தான் மிருணா மாதிரி உணர்வுகளோட விளையாடுற பொண்ணுங்களும் இருக்காங்கள்ல. இதே மாதிரி ஒரு சூழ்நிலைல உங்களுக்கு பதிலா ஒரு பொண்ணு இருந்திருந்தா, அவளோட நிலையே வேற. அவளோட உணர்வுகளை புரிஞ்சுக்கணும். ஹர்ட் பண்ண கூடாதுன்னு… நிறைய இருக்கு. பட் அதே மாதிரியான மன நிலை தான் ஆண்களுக்கும் இருக்கும்ன்னு சமூகம் புருஞ்சுக்கவே இன்னும் பல வருஷம் ஆகும் முகில்.” என அவனை அமைதியாக பார்த்தவளிடம்,

“அப்படியே புருஞ்சுக்கிட்டாலும், அதை வெளிக்காட்ட விடாது கண்ணம்மா. ஆம்பள தான. என்ஜாய் பண்ணுன தானன்னு… ப்ச். இப்ப நினைச்சாலும், எனக்கு இரிடேட்டிங்கா இருக்கு. அவளாம் பொண்ணுங்கள்ள இருந்து எக்செப்ஷன்.” என்றான் உதட்டை அழுந்த கடித்து.

“நீங்க ஏன் இரிடேட்டிங்கா ஃபீல் பண்ணனும். தப்பு பண்ண அவளுக்கே அந்த ஃபீல் இல்ல. நீங்க அதை ஒரு விஷயமாவே எடுக்காதீங்க. ஓகே வா?” என விரலை நீட்டி அவனை அன்பாக எச்சரித்தவளைக் கண்டு மென்முறுவல் பூத்தவன், “ஓகேங்க மேடம்…” என்றான் பணிவாக. அதில் அங்கு ஒரு மெல்லிய சிரிப்பலை பரவியது. 

அந்நேரம் கீழே அரவம் கேட்க, “பசங்க வந்துட்டானுங்கன்னு நினைக்கிறேன்.” என அவன் கூறியதும், “இஷு என்ன பண்றான்னு தெரியல. தூக்கிட்டு வாங்க முகில்” என்றவளுக்கு மகனை இத்தனை நேரம் காணாது கண்கள் பூத்திருக்க, அவர்களுக்கு வேலை வைக்காமல், அனைவரும் அவர்கள் அறையில் கூடி இருந்தனர் முறைப்புடன்.

சுதாகர் தான், “வண்டு இவன் சொன்னது உண்மையா?” என முறைப்பாக கேட்க, அவளோ ஆரவை விட்டு தள்ளி அமர முயன்று “ம்ம்” என தலையாட்ட ஆரவ் அவளை விலகவே விடவில்லை. கூடவே, அவனும் நடந்ததை பெருமையுடன், முகம் முழுதும் நிறைந்த புன்னகையுடன் கூற,

மோனிஷாவோ, “அடிப்பாவி. ஊட்டிக்கு நீ வந்தப்போ நான் எத்தனை தடவை கால் பண்ணேன். அப்போ கூட ஒண்ணுமே சொல்லல.” என வாயில் கை வைக்க, “அது… சொல்ல தோணல மோனி” என்றாள் அசடு வழிந்து.

லயாவும் ஹேமாவுமோ, “என்ன சொல்ல தோணலையா? அடிப்பாவி… உன்ன நாங்க ஏதோ நல்ல பொண்ணுன்னு நினைச்சுட்டு இருக்கோம். நீ என்னன்னா, அப்பவே கமுக்கமா வேலை பார்த்து இருக்க.” என்று அவளை சுற்றி வளைக்க,

தன்விக் தான் “மச்சான், உன்ன உண்மையை சொல்லு சொல்லுன்னு சொன்னதுக்கு இவளை க்ராஸ் செக் பண்ணிருந்தா, இந்நேரம் கண்டுபிடிச்சு இருக்கலாம்.” என்றான் நெஞ்சை பிடித்துக்கொண்டு.

கவின், “அப்போ ஹேமா வாமிட் பண்ணத தெரிஞ்ச மாதிரி சொன்னது கூட, நீ ஏற்கனவே பார்த்ததுனால தானா? நாங்க கேட்டப்ப எப்படி நடிச்ச? இதுல ரெண்டு பேரும் ‘நீ ஊட்டிக்கு வந்துருக்கியா?’ ன்னு மாறி மாறி கேள்வி வேற கேட்டுக்கிட்டீங்க…?” என புசுபுசுவென முறைக்க, இருவரும் வெட்கத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

சுதாகர் தான், “என்கிட்ட கூட சொல்லணும்ன்னு தோணலல வண்டு.” என வேதனையுடன் கேட்டிட,

“இல்ல சுத்தி. அது லவ்வான்னே எனக்கு தெரியாதப்ப நான் எப்படி சொல்றது. அப்பா இவரு போட்டோ காட்டுனப்ப கூட, அடுத்த நாளே, அந்த பேச்சும் நின்னுடுச்சு. முடிஞ்சு போன விஷயத்தை எதுக்கு சொல்லி உன்ன கஷ்டப்படுத்தணும்ன்னு தான்…” என தயங்க,

“அதனால தான், ஆரவ் என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டான்னு ஃபீல் பண்ணி சொன்னியா வண்டு? மனசுல ஆசையையும் வைச்சுக்கிட்டு, அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதமும் சொல்ல முடியாம. ஏன் வண்டு?” எனப் பாவமாக கேட்டவன், நடந்ததை ஏற்றுக்கொள்ள இயலாமல் பரிதவித்து, தங்கையை வயிற்றோடு கட்டிக்கொள்ள,

“எப்படியோ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல. விடுண்ணா.” என்றவள் அவனை சமன் செய்ய, ஹேமாவும் “அவளே இப்ப தான் சரி ஆகி இருக்கா. நீங்க திரும்பி ஆரம்பிக்காதீங்க சுதி. அதான் இப்போ எல்லாம் க்ளியர் ஆகிடுச்சுல” என்று மகிழ்வுடன் கூறியவளுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஆரவின் மலர்ந்த புன்னகை கண்டு அத்தனை மகிழ்ச்சி.

உறங்கி இருந்த இஷாந்தையும் கொடுத்து விட்டு அவர்கள் சென்று விட, ஒரு கையில் மகனையும், மறுகையில் மனைவியையும் படுக்க வைத்திருந்தவன், அவர்களின் அரவணைப்பிலேயே உறங்கியும் போனான்.

அதன் பிறகு, வந்த நான்கு நாட்களும் இருவருக்கும் ரம்மியமாக நகன்றது.

விடிந்தது முதல், ஊட்டியில் இருவரும் காதலித்த விஷயத்தை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு விதமாக பகிர்ந்து, அது சலித்தே போகாதது போல, அத்தனை ரசித்தனர்.

இடை இடையில் ஆரவின் முத்தப் பாடங்களும் நிகழ, இருவரும் காதல் உலகில் அழகாய் வலம் வந்தனர். அவளை மொத்தமாக தனக்குள் அவன் அடக்கிக்கொண்டாலும், அவளிடம் அத்து மீறாத காதலை மட்டுமே காட்டினான். அவனுக்குள் எழும், அடங்காத உணர்வுகள் கூட இப்போதெல்லாம் சமன்படுத்தப்பட்டு, முத்தங்களிலேயே உயிர் பெற்றது.

அவர்கள் ஊட்டிக்கு வந்தும் ஆறு நாட்கள் கடந்திருக்க, மறுநாள் சென்னைக்கு கிளம்புவதாக இருந்தது. அதனால், சற்று தொலைவில் ஊர் சுற்ற அனைவரும் கிளம்ப, வான்மதிக்கு தான் கிளம்பவே மனமில்லை.

இந்த இடைப்பட்ட நாட்களில், இருவரும் ஒருவரை ஒருவர் பாராமல் ரசித்த இடங்களுக்கு எல்லாம் சென்று மீண்டும் பார்த்து ரசித்திருந்தனர். வெளியில் சென்றால், ஆரவிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். இங்கு இருப்பது போல, ஒட்டிக்கொண்டே இருக்க இயலாது அத்தனை பேர் முன்பும் என்று முகம் சுருக்கியவள், கிளம்பிக் கொண்டிருந்த ஆரவிடம்,

“முகில்… இன்னைக்கு நம்ம இங்கயே இருக்கலாமா?” எனக் கேட்டாள் மெல்லிய குரலில்.

“ஏண்டி.  உடம்பு சரி இல்லையா?” என பதறியவன், அவளுக்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்த பின்னே நிம்மதி ஆகி, “எப்பவும் வெளிய போகணும்ன்னு நீ தான் கேட்ப இன்னைக்கு என்ன ஆச்சு?” என்றான் புரியாமல்.

“அது… நாளைக்கு நம்ம சென்னைக்கு போயிடுவோம். இன்னைக்கு ஒரு நாள் தான் ஊட்டில இருப்போம். அதான்…” என்று அவன் சட்டை பட்டனை திருக, அவன் சிரித்தபடி, “அதான்?” என்றான் நக்கலாக.

“ப்ச், வெளிய போனா, நம்ம ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணனும். எனக்கு உங்க கூடவே இருக்கணும் முகில்.” என்று முணுமுணுக்க, அவளை வாரி அணைத்தவன், “அதுக்கு என்ன இன்னைக்கு காட்டேஜை சுத்தி பார்த்துட்டா போச்சு” என்றான், அவளின் பின்னால் நகர்ந்து, பின்னிருந்தே கழுத்தில் முத்தமிட்ட படி.

அதில் சிலிர்த்தவள் கண் மூடி நிற்க, “இது ஹிக்கி கிஸ் கண்ணம்மா.” என ரகசிய குரலில் கூறியவன் மீண்டும் தொடர, யாரோ மாடி ஏறி வரும் சத்தத்தை கேட்டு தான் நகர்ந்தான்.

கவின் தான் வந்திருந்தான். “கிளம்பிட்டீங்களா?” எனக் கேட்டவன், ஸ்வெட்டர் அணிந்து தயாராகி பொம்மை போல் இருந்த இஷாந்தை தூக்கிக்கொள்ள, ஆரவ் “நாங்க வரல மச்சான். நீங்க மட்டும் போயிட்டு வாங்க.” என்றான்.

அவன் வேறேதும் கேளாமல், “ஓகே மச்சான். அப்போ நாங்க வர லேட் ஆகும். லன்ச் ஆர்டர் பண்ணிக்கோங்க.” என்றதில், சரி என்றவன், இஷாந்தை வாங்க வர, கவின் “இவன் எதுக்கு. நாங்க தூக்கிட்டு போறோம்” என்றான்.

வான்மதி தான், “அண்ணா ரொம்ப தூரம் போறீங்க. கஷ்டமா இருக்கும். அவன் வீட்ல இருக்கட்டும் அண்ணா. நீங்க வர்ற வரை இவனை பார்க்காம இருக்க முடியாது.” என்றிட,

“ப்ச், நாங்க இத்தனை பேர் இருக்கோம்ல. பார்த்துக்குறோம். இஷு குட்டி அம்மாக்கும் அப்பாவுக்கும் பை சொல்லு” என்று கை காட்ட, அவனோ இன்று வெளியில் செல்லும் ஆர்வத்தில் இருந்ததில் வேகமாக டாட்டா காட்டினான்.

“பாருங்க முகில் இவனை… எப்படி ஜாலியா கிளம்புறான்னு. அப்போ நம்மளும் போலாம் முகில்” என்றாள் தலையை ஆட்டி.

ஆரவ் அதற்கு பதில் பேசும் முன், “சாரி ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்பறம் யார் பேச்சையும் நாங்க கேட்க மாட்டோம். நீங்க வீட்லயே இருங்க. நாங்க உங்க இம்ச இல்லாம போயிட்டு வரோம்.” என சிலுப்பியவன், இஷாந்தை தூக்கிக்கொண்டு கீழே இறங்க,

வான்மதியோ, “இஷு பேபி அழுதான்னா என்ன பண்றது முகில். நம்மளும் போலாம்” என்றிட, ஆரவ், “அவங்க பார்த்துப்பாங்க கண்ணம்மா ரிலாக்ஸ்.” என்னும் போதே, கீழே இருந்து லயா, “நீ மூடு. நீங்க வர்றதுக்கு முன்னாடி நாங்க தான் பார்த்துக்கிட்டோம். என்னமோ உனக்கு மட்டும் எழுதி வைச்ச மாதிரி பேசுற.” என்று வான்மதியை அதட்ட, ஆரவ் நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

அதன் பிறகு அவள் சொன்னதை கேளாமல், அவர்கள் இஷாந்தையும் அழைத்துக்கொண்டு சென்றிட, ஆரவ் வான்மதியையே விழிகளால் வருடினான்.

அவன் பார்வையில் அவளும் சிவந்து நிற்க, “எ… என்ன பாக்குறீங்க?” என்றாள் திக்கி திணறி.

“ம்ம். இன்னைக்கு என்ன என்ன கிஸ் குடுக்கலாம்ன்னு பாக்குறேன்.” என அவளை இழுத்து தன் கை வளைவிற்குள் வைத்துக்கொண்டவன், கொஞ்சல் முத்தங்களை தொடர, கரடியாக அலுவலகத்தில் இருந்து போன் வந்தது.

அதை எடுத்து பேசியவன், சிறிது நேரத்தில், “கண்ணம்மா… ஒரு ஒன் ஹவர் கிளையண்ட் கால் இருக்கு. இங்க டவர் சரியா எடுக்கல. நான் கீழ இருக்குற ரூம்ல கால் அட்டென்ட் பண்ணிட்டு வரேன். நீ அதுவரை மேனேஜ் பண்ணு ஓகே வா?” எனக் கேட்க, அவளும் தலையாட்டினாள்.

சில நிமிடங்களில் ஏதோ சிந்தித்தவள் கண்களில் மின்னல் வெட்ட, சில வேலைகளை பார்த்து வைத்தவள், அவனுக்கு பிடித்ததால் வாங்கியே புடவையையே அப்போதும் கட்டிக்கொண்டு அறை வாசலில் படபடத்தபடி நகத்தைக் கடித்துக்கொண்டு நின்றாள்.

கைகள் வேறு நடுங்கி இருக்க, மேலே ஏறி வந்தவனுக்கு அவளின் நடுக்கமே புருவத்தை சுருங்க வைக்க, “என்னடி ஆச்சு?” என்றான்.

“ஒன்னும் இல்லையே. உங்க வேலை முடிஞ்சுதா?” என அவள் அவனைப் பாராமல் கேட்க, “ம்ம் முடிஞ்சுது” என்றபடி அறைக்கு சென்றவன் அங்கிருந்த மலர் அலங்காரங்களை கண்டு துணுக்குற்றான்.

முகம் கோபமாக மாற, விறுவிறுவென வெளியில் வந்தவன், “இந்த மேனேஜ்மேண்ட் ஆளுங்களுக்கு அறிவே இல்ல. அதான் டெகரேட் பண்ண வேணாம்ன்னு சொல்லியாச்சுல. அப்பறம் ஏன் இப்போ வந்து பண்ணாங்க. நீ ஏன் கண்ணம்மா அவங்களை உள்ள விட்ட?” என்று கடுப்பாக,

வான்மதி வேகமாக, “இல்ல இது அவங்க எதுவும் பண்ணல” என்றாள் பதற்றத்துடன்.

“பின்ன, கவி பார்த்த வேலையா இது. அவனுக்கு எத்தனை தடவை சொன்னாலும் விவஸ்தையே இருக்க மாட்டேங்குது…” என அவனை திட்டுவதற்காக போனை எடுத்தவனை தடுத்தவள், “அண்ணாவும் எதுவும் பண்ணல முகில்” என்றாள் நடுங்கிய குரலில்.

“வேற யாரு இப்படி பண்ணுனா கண்ணம்மா?” எனக் கேட்டவனுக்கு குழப்பமாக, “நான் தான் பண்ணேன்.” என அவள் விழிகளை நிமிர்த்தாமல் கூறியதில் லேசாக அதிர்ந்து விட்டு, பின் அவளையே ஆராய்ந்தான்.

நடுங்கிய கரங்களையும் ஒரு கணம் பார்த்து விட்டு, “எனக்காக சாக்ரிஃபைஸ் பண்றியா?” என விழி இடுங்க அவன் வினவ, சட்டென நிமிர்ந்தவள், “இல்ல” என்றாள் உடனடியாக.

பின்னந்தலையை கோதிக்கொண்டவன், “கம்பல்சரியா இது நடக்கணும்ன்னு இல்ல கண்ணம்மா. உனக்கு 
எப்போ கம்ஃபர்ட் – ஆ இருக்கோ அப்போ பார்த்துக்கலாம். இப்பவே எப்படி நடுங்குற பாரு” என்று அவன் கையை பிடித்துக்கொள்ள,

“அது… அது… நான் இப்படி பண்ணனால என்மேல கோபப்படுவீங்களோன்னு பயத்துல நடுங்குது. உங்களுக்கு பிடிக்கலையா?” எனக் கேட்கும் போதே கண்ணில் நீர் திரண்டிருக்க.

“பைத்தியமே. இது என்னடி கேள்வி. பிடிக்காம தான் உங்கிட்ட உரசிகிட்டே இருக்கேனா. எனக்கு வேணும்டி. நீ வேணும். ஐ நீட் யூ மேட்லி. ஆனா, உன் முழு மனசோட மட்டும் தான் இதெல்லாம் நடக்கணும். சின்னதா கூட இந்த விஷயத்துல நான் உன்ன காயப்படுத்திட கூடாது கண்ணம்மா.” என அழுத்தமாக உரைத்தவனிடம்,

“நான் முழு மனசோட தான் சொல்றேன். ஆனா, உங்களுக்கு இப்போ வேணாம்ன்னா எனக்கும் வேணாம்.” என்று கூறி முடிக்கும் முன்னே, அவளை கையில் அள்ளி அறைக்குள் சென்றிருந்தான்.

“மனுஷனை சோதிக்காதடி. நானும் எவ்ளோ தான் கண்ட்ரோல் பண்றது? ம்ம்?” எனக் கேட்டுக்கொண்டே அழுத்த இதழ் முத்தத்தை பதிக்க, அவள் அவன் கரங்களில் நெகிழ்ந்தாள்.

ஆரவ் அவளை இறக்கி விட்டதும், “முகில்… என்ன… என்னை தப்பா நினைக்கலைல…” என அவள் எச்சிலை விழுங்க, முதலில் எதுக்கு என்று விழித்தவன், அதன் பிறகே முறைத்து வைத்து, “இதையே நான் பண்ணிருந்தா தப்பா நினைச்சு இருப்பியாடி? லூசு.” என அதட்டிட, அவளுக்கு கண்ணீர் மடமடவென கொட்டியது.

“என்ன ஆச்சு கண்ணம்மா? எதுக்கு இந்த அழுகை?” என அவள் தாடையை பற்றி கனிவுடன் கேட்க, “ஒன்னும் இல்ல” என்று மறுத்தவள், அழுகையை மட்டும் நிறுத்தவில்லை.

“இல்ல. ஏதோ இருக்கு என்னன்னு சொல்லு.” ஆரவ் விடாமல் கேட்க,

முதலில் தவிர்க்க முயன்றவள் பின் முடியாமல், “இல்ல… நான் இதுக்கு கூட லாயக்கு இல்லன்னு அவன் சொன்னான். ஒருவேளை, நான் உங்களை சாடிஸ்ஃபை பண்ண முடியலைன்னா, என்மேல கோபப்பட மாட்டீங்க தான…” என கேவலுடன் கேட்டிருக்க அவனோ அதிர்ந்திருந்தான்.

அவன் பேசிய வார்த்தைகள் எந்த அளவு காயத்தை ஏற்படுத்தி இருந்தால், இந்நிலையில் அது பயமாக வெளிவந்திருக்கும் என்று உருகி போனவன், “அறிவு கெட்டவளே. நமக்குள்ள ரிலேஷன்ஷிப்பே இல்லைன்னா கூட நான் உன்மேல கோபப்பட மாட்டேண்டி. எனக்கு தேவ லவ் தான் லஸ்ட் இல்ல கண்ணம்மா. செக்ஸ் லவ்ல ஒரு பார்ட் தான். லைஃப் கிடையாது. இவ்ளோ குழப்பத்தை மனசுல வைச்சுக்கிட்டு தான், இதெல்லாம் டெகரேட் பண்ணியா?” என்றான் முறைப்புடன் கூடிய அதட்டலுடன்.

“இல்ல… டக்குன்னு தோணுச்சு. எனக்கு பிடிச்சு தான் பண்ணேன்.” என அவள் கன்னத்தை துடைத்தபடி பேச, “பிடிச்சு பண்ணவ… ஏன் இவ்ளோ ஷிவர் ஆகணும்டி.” என்றான் அவள் தலையை கலைத்து விட்டு.

பின் அறையை சுற்றி முற்றி பார்த்தவன், “எங்க இருந்துடி ரோஸ் எல்லாம் வர வைச்ச?” என நிலையை இயல்பாக்க முயல,

“அதுவா, காட்டேஜ் மேனேஜருக்கு கால் பண்ணி கேட்டேன், உடனே கொண்டு வந்து கொடுத்துட்டாங்க.” என்றதில் “கேடி…” என்றான் புன்னகைத்து.

“ஆனாலும் ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே…?” என தாடியை தடவியபடி அவன் சுற்றி பார்க்க, அவளோ “என்ன முகில் மிஸ் ஆகுது?” என்றாள் புரியாமல்.

“ம்ம். சொல்றேன்… நீ கொஞ்ச நேரம் கீழ இரு.” என்றவனை குழப்பத்துடன் பார்த்தபடியே அவள் கீழிறங்கி செல்ல, அடுத்த அரை மணி நேரத்தில் அறையில் சில மாற்றங்கள் செய்தான்.

பூ அலங்காரங்களை குறைத்து விட்டு, மெழுகுவர்த்தியை அறை எங்கும் எரிய விட்டவன், முடிந்த அளவு திரைச்சீலை கொண்டு அறையை இருட்டாக்கினான்.

பின், மெல்லிய இசையை ஒலிக்க விட்டவன், கீழே இருந்த வான்மதியை தூக்கிக்கொண்டு அறைக்கு வர, அவள் அறையைக் கண்டு வியந்தாள்.

“வாவ்? கேண்டில்ஸ் எங்க கிடைச்சுது உங்களுக்கு உடனே?” என்று விழி விரிக்க, அவனோ தாபக்குரலில், “அதுவா… நானும் ரூமை டெகரேட் பண்ண நேத்தே வாங்கி வைச்சேன். ஆனா, நீ ஆக்வார்டா ஃபீல் பண்ணுவியோன்னு பண்ணல.” என்றவனின் புரிதலில் நெக்குருகி போனவள், அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, அவனும் அவள் கழுத்தில் முகத்தை புதைத்தான்.

நேரம் செல்ல செல்ல, மெழுகுவர்த்தியின் நறுமணம், அவர்களுக்குள் உணர்வுகளைக் கிளற, மெல்ல அவளை படுக்கையில் கிடத்தியவன், மேகமாகி வானத்தின் மீது பரவினான்.

சின்ன முத்தங்களில் ஆரம்பித்தவன், அதனை பெரிய முத்தங்களாக மாற்றி, கரங்களையும் இதழ்களையும் அவள் மேனி மீது தன் விருப்பத்திற்கு பயணிக்க வைக்க, அவளோ அவனின் ஒவ்வொரு தொடுதலிலும் தளர்ந்து துடித்து கிறங்கினாள்.

தன்னவளின் கிறக்கத்தில் தானும் கிறங்கியவன், போதை கொண்டு பெண்ணுடன் மென்மையாக கலக்க முற்பட, அவன் நெருப்பாகவும் அவன் அனலில் உருகும் மெழுகாகவும் பெண்ணவள் உருகி போனாள்.

“முகில்… முகில்…” என அவள் அனத்த, அவனும் “கண்ணம்மா” என்ற முனகலுடன் அவளுடன் சங்கமித்தான்.

தினம் கொட்டி தீக்கவா
ஒரு முட்டாள் மேகமா
உன்ன சுத்தி வாழவா
உன் கொட்டா காகமா பறவையே

பறந்து போவமா மரணமே
மறந்து போவமா
உப்பு காத்துல
இது பன்னீர் காலமா…

தாம்பத்யம் இருவருக்கும் புதிதல்ல. ஆனால், அது ஏற்படுத்தும் சிலிர்ப்பு புதிது.

முத்தங்கள் இருவருக்கும் புதிதல்ல. ஆனால், அது கொடுக்கும் இனிமை புதிது.

கூடல் இருவருக்கும் புதிதல்ல, ஆனால், இடை இடையே வெளிப்படும் வெட்கங்கள் புதிது.

கீறல்களும் பற்தடங்களும் இருவருக்கும் புதிதல்ல. ஆனால், அது கொடுக்கும் நேசம் புதிது.

மூச்சடைக்கும் உறவு இருவருக்கும் புதிதல்ல… ஆனால், அது கொடுக்கும் தன்னலமற்ற காதல் புதிது.

இப்படியாக, எந்த உறவின் மூலம், எந்த கூடலின் மூலம் அவர்களின் மனம் காயப்பட்டதோ, அதே கூடலில் இருவரும் மீண்டும் உயிர்த்தெழுந்தனர்.

பெருமூச்சுகள் மட்டுமே அறையை நிறைக்க, கூடல் முடிந்தாலும் இருவருக்குள்ளும் இருந்த தேடல் முடியவில்லை. அத்தேடலே அவர்களை மீண்டும் மீண்டும் நாட வைக்க, இருவரின் மனதும் உடலும் புத்துணர்ச்சி பெற்றது புதிதாக பிறந்தது போல.

அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்த வான்மதிக்கு, அந்நிலை அத்தனை இதத்தை கொடுத்தது.

ஆரவோ, அவளை வருடியபடியே, “யூ மேட் மை டே கண்ணம்மா” என ஹஸ்கி குரலில் கூறியதில், வெட்கிப் போனவள், அவன் மார்பிலேயே முகத்தை மறைத்துக்கொள்ள, “பிடிச்சிருக்காடி?” எனக் கேட்டான் ரசனையுடன்.

“பிடிக்காம தான் இப்படி பிடிச்சுக்கிட்டே படுத்துருக்கேனா?” அவள் முணுமுணுப்பாக கேட்க, “அப்போ ஒரு ஸ்வீட் கிஸ் குடு” என்றான் குறும்பாக.

அதில் புன்னகைத்தவள், மெல்ல எழுந்து அவன் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதிக்க, மீண்டும் அவளை ஆட்கொள்ளத் தொடங்கினான்.

ஆரவின் உத்தரவின் பேரில் ஹனிமூன் இன்னும் மூன்று நாள் தொடர, அனைவர்க்கும் குஷியாகி போனது. 
இரவு இஷாந்த் வந்ததும், எப்போதும் போல மகனையும் மனைவியையும் நெஞ்சில் போட்டுக்கொண்டு உறங்கினான் ஆரவ்.

மறுநாள், கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தவளின் முன் முறைப்புடன் வந்து நின்றான்.

“என்ன ஆச்சு முகில்?” என அவள் விழிக்க, “ஜாம்பிடி நீ. என்ன பண்ணி வைச்சுருக்க பாரு.” என்று வெற்று தோள்பட்டையை காட்ட, அதுவோ அவள் பல் பட்ட தடத்துடன் சிவந்திருந்தது.

அவள் தான் பேந்த பேந்த விழித்து, “நான் இல்ல…” என்று வேகமாக தலையாட்ட, “நீ இல்லாம வேற யாருடி கடிச்சு வைப்பா. ஜாம்பி.” என்றான் கடிக்க வருவது போன்று.

“ஐயோ” என வெட்கத்தில் முகத்தை மூடியவள், பின் “நீங்க மட்டும் என்னவாம்…” என்றாள் சிணுங்களாக.

“நான் என்னடி பண்ணேன். நான்லாம் ரொம்ப சாஃப்ட் – ஆ தான் இருந்தேன்” என அவளை ரசித்தபடி கூற,

அவளோ அவனை முறைத்து, “யாரு நீங்க?” என்றவள், கழுத்தை மறைத்திருந்த கூந்தலை எடுத்து விட்டு காட்ட, அங்கோ அவனின் பற்தடம் பதிந்திருந்ததில் திகைத்தவன், “ஹே… என்னடி இப்படி ஆகிருக்கு. பட் நான் எப்ப கடிச்சுருப்பேன்…” என்று தீவிர சிந்தனையில் இருக்க அவளுக்கோ கன்னங்கள் சிவந்து விட்டது.

“நீங்க பொறுமையா யோசிங்க.” என வெட்கப் புன்னகையுடன் நகர போனவளை கை பற்றி பிடித்தவன், “ரெண்டு பேரும் மாத்தி மாத்தி காயமாக்கியாச்சு. மருந்து போட வேணாமா” என போலி அதட்டலுடன் கேட்க, “இருங்க. நான் போய் ஆயின்மெண்ட் கொண்டு வரேன்” என்றாள் வேகமாக.

அவனோ மர்மமாய் இதழ் விரித்து, “ஆயின்மெண்ட் என்கிட்டயே இருக்கே” என்று கூறி விட்டு, அவளுணரும் முன், உமிழ்நீர் கொண்டு அவள் காயத்தை சரிபடுத்த முயன்றான். வான்மதி நிலைகுலைந்து கண்களை மூடிக்கொள்ள, ஆரவ் அவனின் வானத்தினுள் தொலைந்து போனான், மேலும் இன்பக் காயத்தை உருவாக்கியபடி.

அந்நேரம், மண் வாசம் மணம் வீச, அவ்வாசத்தை சுவாசித்தபடி இருவரும் அன்பு தூறல்களை தூவிட,      
அவர்களை வாழ்த்தும் விதமாக கருமேகமும் தேன் தூவிச் சென்றது.

முற்றும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
71
+1
394
+1
13
+1
15

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    29 Comments

    1. priyakutty.sw6

      ஹாப்பி எண்டிங்…. 😍❤

      ஆரவ் – மதி…. 😍
      கவின் – லயா…. 😍
      தன்விக் – மோனிஷா… 😍
      சுதாகர் – ஹேமா…. 😍

      எல்லாருமே லவ்லி couples…. 😍❤

      என்னைக்கும் அவங்க ஹாப்பியா இருக்கட்டும்… 🥰🥰

      அவங்களுக்குள்ள இருந்த பிரண்ட்ஷிப் பிடிச்சது… 😊

      நைஸ் ஸ்டோரி dr… ❤

      All the best for all your upcomming novels… 🥰🤝

    2. அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.

      1. அருமை. சமுதாயத்திற்கு தேவையான கதை. உங்கள்
        எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி

    3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    4. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    5. Gayu R

      Very very beautiful and emotional love story… Supera irunthathu.. Neenga innum niriaya nalla kathaigal ezhutha ennudaiya vazhthukkal

    6. செமமமமம ❤️❤️❤️❤️❤️லவ்லி ஸ்டோரி 🥰🥰🥰.

    7. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.

    8. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்

    9. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    10. விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய கதைக்கரு. மனதிலிருக்கும் பாரம் இறங்குவது போன்றதொரு உணர்வை தரும் எழுத்தாளரின் எழுத்து நடையும், நகைச்சுவைத் திறனும் மிகவும் அசத்தல்.

    11. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    12. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    13. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    14. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    15. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    16. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.