அத்தியாயம் 105
மீண்டுமாக விஸ்வயுகாவை தன்னுள் புதைத்துக் கொண்டவனின் காலில் இருந்து இரத்தம் வழிந்தது. அதைக் கண்டு விட்டவள், “என்ன யுகி இது ப்ளீடிங் ஆகுது. என்ன ஆச்சு? கில்லர் கிடைச்சானா?” எனப் பரபரப்பாகக் கேட்க,
“ஓ!” என்று அவன் வந்த வழியே அவளைக் கூட்டிச் சென்றான்.
கப்பலின் கடல் வியூ கொண்ட வெளிப்புற நடைபாதை பகுதியில் நாற்காலியுடன் வைத்து ஷ்யாம் என்கிற இளங்கோவைக் கட்டிப்போட்டிருந்தான் யுக்தா.
இளங்கோ இரத்தத்தில் குளித்திருந்தான். ஆனால் அக்கண்களில் வெறி அடங்கியபாடில்லை.
அவனைக் கண்டு முகம் சுளித்த விஸ்வயுகா, “இவனை ஏன் உயிரோட விட்டு வச்சுருக்க யுகி… இருந்தா இன்னும் எப்படி கொலை செய்றதுன்னு தான் ஆராய்வான்” என்றாள் கோபமாக.
“பொறு ஏஞ்சல். அவன் என்ன தான் சொல்றான்னு கேட்போமே” என்றபடி காலில் வழிந்த குருதிக்கு முதலுதவி பெட்டியைக் கொண்டு அவனே மருந்திட்டான்.
“குடு இங்க…” என்று விஸ்வயுகா அப்பொறுப்பை தனதாக்கிக் கொண்டாள்.
குறிஞ்சி இளங்கோ அசைந்தாலும் சுட்டு விடுவது போல அவன் நெற்றியில் குறி பார்த்து துப்பாக்கியைப் பிடித்தபடி இருக்க, அவள் தகவல் அனுப்பியதில் மற்றவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.
பொறுமையாக அவனுக்கு கட்டிட்டு முடித்த விஸ்வயுகா, “ஒரு பொண்ணு வேணாம்னு சொன்னா விரட்டி விரட்டி துரத்துறதும் இல்லாம, அவள் எதை காரணமா வச்சு மறுத்திருந்தாலும் அவளைக் கொலை செய்ற உரிமையை யார்டா குடுத்தது…” என இளங்கோவிடம் சீறினாள்.
இளங்கோ பற்களின் இடுக்குகளில் பதிந்த இரத்தக்கறையுடன் விகாரமாகச் சிரித்தான்.
“பிடிக்கலைன்னா பிடிக்கலைனு சொல்றதை விட்டுட்டு என் அப்பாவைக் கொலை செய்ற உரிமை மட்டும் உன்னை மாதிரி பணக்காரங்களுக்கு இருக்கா?” கடல் அலையைத் தாண்டியும் கொந்தளித்தான்.
“அதை நீ நேரா அந்த ஆளுக்கிட்ட கேட்டு, அவரை என்னமும் பண்ணிருக்கணும். அபர்ணா என்ன செஞ்சா? நீ கொலை செஞ்ச இத்தனைப் பொண்ணுங்களும் என்ன பாவம் செஞ்சாங்க?” என்று எகிறினாள்.
“பாவம் தான்… என்னை மாதிரி பசங்களை, ஸ்டேட்டஸ காரணமா வச்சு மறுத்ததே பாவம் தான். பாவத்துக்கு தண்டனை கொஞ்ச கொஞ்சமா சாகுறது தான். அதான் நானே தண்டனை குடுத்தேன். துளி துளியா அவங்க சாகுறது அவங்களுக்கே தெரியாம சாவாங்க… உன் உயிர் காதலன் சாகப்போறது மாதிரி” எனச் சத்தமிட்டுச் சிரித்தான்.
திகைத்து விட்ட விஸ்வயுகா யுக்தாவைப் பார்க்க அவனும் புரியாமல் பார்த்தான்.
குறிஞ்சியோ பதறி, “டேய் என்ன டிவிஸ்ட் பண்றியா?” என்று துப்பாக்கி வைத்து அவன் நெற்றியை தட்ட, “நான் கொண்டு வந்த ஒவ்வொரு வெப்பன்லையும் விஷம் கலந்துருக்கேன். அவனைக் குத்துன ஆணில கூட விஷம் தான்… ஒவ்வொரு செல்லையும் சிதைக்க ஆரம்பிச்சு இருக்கும். என்னை கட்டுப்படுத்த நினைச்ச எவனையும் நான் விட மாட்டேன். அவன் சாகட்டும். அப்பறம் என் டார்கெட்டை எவன் தடுக்குறான்னு பாக்குறேன்” என்ற எகத்தாளம் நிறைந்திருந்தது.
நந்தேஷ் மிரண்டு, “மொதோ ஹாஸ்பிடல் போகலாம்டா” என்று யுக்தாவிடம் வர, விஸ்வயுகாவிற்கு உலகே ஒரு கணம் சுற்றுவதை நிறுத்தியது போல இருந்தது.
மைத்ரேயன் இளங்கோவை அடிக்கப் போக குறிஞ்சி தடுத்தாள்.
“இவன்கிட்ட போறது சேஃப் இல்ல. வேணாம்…”
ஷைலேந்தரி அவனை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள் பயத்தில்.
யுக்தாவோ வெளிறிப்போன விஸ்வயுகாவை சமன் செய்யும் பொருட்டு, “ஏஞ்சல் ஜஸ்ட் ரிலாக்ஸ். இவனை நம்ம இடத்துக்கு வர வைக்கிறதுக்கு முன்னாடி இதெல்லாம் யோசிக்காம இருப்பேனா. இவன் கப்பல்குள்ள நுழைஞ்சதுல இருந்தே இவன் வச்சிருந்த பொருள எல்லாம் அவனுக்கு தெரியாம நாங்க ஸ்வாப் பண்ணிட்டோம். அவன் உடம்புல விஷத்தை தேய்ச்சுட்டு வந்துருந்தா கூட கடல்ல குளிப்பாட்டி தான் உள்ள விட்டுருப்பேன். உன்னை இங்க வச்சுட்டு இவ்ளோ பெரிய ரிஸ்க்கை எந்த பிரிவென்க்ஷனும் இல்லாம எடுப்பேனா? கூல்டி பொண்டாட்டி. உன் முன்னாடி நான் குத்து கல்லாட்டம் நல்லா தான இருக்கேன்” என்றான் சமாதானமாக.
எப்படியும் முன்னேற்பாடு செய்திருப்பான் தான். ஆனாலும் பயமாக இருந்ததே.
யுக்தா விரித்த வலையில் தான் விழுந்து விட்டதை எண்ணி கோபம் பீறிட்டது இளங்கோவிற்கு.
“விஷம் கலந்தது எது கலக்காதது எதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் யுக்தா. நீ சாகப்போறது உறுதி…” என்றவனுக்கே சிறு சந்தேகம் தான். தன்னை அத்தனை எளிதாக உள்ளே நடமாட விடும்போதே இந்த சந்தேகம் எழுந்திருக்க வேண்டுமென்ற தாமத ஞானத்தை திட்டிக்கொண்டான்.
“நான் செத்துட்டுப் போறேன். ஆனா அதை பார்க்க நீ கண்டிப்பா இருக்க மாட்ட ஷ்யாம். ஓ சாரி இளங்கோ” என்றவனை தன்னை இறுக்கி வைத்திருந்த கயிறைப் பிடித்து இழுத்தபடியே முறைத்தான்.
“என்னைக் கொன்னுட்டா எல்லாம் சரியாகிடும்னு நினைக்கிறியா… ஆகாது. என்னை மாதிரி அடுத்து அடுத்து வருவான். வந்து கொலை பண்ணுவான். இதுக்குப்பேர் கொலை இல்ல. மனசாட்சி இல்லாத பொண்ணுங்களை வதம் பண்றது…” எனப் பைத்தியத்தின் மறுபிறவி போல பிதற்றியவனை ஷைலேந்தரி நொந்து பார்த்தாள்.
“இவன் ஆழ் மனசுல இவனை யாரோ நரகாசுரன வதம் செஞ்ச ஸ்ரீகிருஷ்ணர்னு நம்ப வச்சிருக்கான் மைதா…” என்றிட, “சும்மா இருடி” என அடக்கியவன் “இவனை தூக்கி கடல்ல போடு யுக்தா… டிராகன் மாதிரி வாயில் விஷத்தை வச்சு துப்பிட போறான்” என்றான்.
“நீ ஏன் டா அவனுக்கு ஐடியா குடுக்குற” நந்தேஷ் தலையில் அடிக்க, ‘அப்படி கூட செய்திருக்கலாமோ’ என்ற தீவிர யோசனையில் இருந்தான் இளங்கோ.
யுக்தா இளங்கோவை கூர்மையாய் ஏறிட்டு, “இதெல்லாம் நீ தனியா செய்யலைன்னு எனக்குத் தெரியும்… யார் ஹெல்ப் பண்றதுன்னும் எனக்குத் தெரியும்” என்றதில் இளங்கோ கலவரமானான்.
குறிஞ்சிக்கு அவன் கண்ணைக் காட்டியதில், கப்பலிலேயே பதுக்கி வைக்கப்பட்ட அவனது தங்கை பானுப்பிரியாவையும் தாய் மங்கையையும் இழுத்து வந்தாள் மற்ற அதிகாரிகளின் உதவியோடு.
அவர்களைக் கண்டதும் இளங்கோ மட்டுமன்றி அனைவருமே அதிர்ந்தனர்.
“குடும்பமே கொலைகார குடும்பமா?” ஷைலேந்தரி வாயில் கை வைக்க, இரு பெண்களும் மாட்டிக்கொண்ட பயத்தை முகத்தில் அப்பட்டமாகக் காட்டினர்.
“ஐடி படிச்ச உன் தங்கச்சியை ஹேக்கிங்கும், மேட்ரிமோனில வர்ற ப்ரொபைல்ஸ் பத்தின டீடெய்ல்ஸ இல்லீகலா உன் கம்பியூட்டர்ல ரெட்ரைவ் பண்ணவும் யூஸ் பண்ணிருக்க. உன் அம்மாவை எல்லாரோட கல்யாணத்துக்கும் சமையல் வேலை பார்க்குற மாதிரி அனுப்பி அவங்க மட்டும் கேமரால பதிவாகாத மாதிரி உன் தங்கச்சியை வச்சு பட்டிங் டிங்கரிங் பண்ணிருக்க. கண் துடைப்புக்காக உன் தங்கச்சிக்கு ஒரு கல்யாண ஏற்பாடு வேற… ஹ்ம்ம்…” என அவனது ஜாதகத்தையே வெளியில் எடுத்து விட்டவனை இளங்கோ அதிர்ந்து பார்த்தான்.
தான் மாட்டிக்கொண்டாலும் தனது தாயும் தங்கையும் கொலையைத் தொடர வேண்டுமென்பதே ஷ்யாம் என்கிற இளங்கோவின் எதிர்பார்ப்பு. தனது ஐடென்டிட்டி முதற்கொண்டு அவ்வப்பொழுது மாற்றிக்கொண்டே வந்தவன், இருவர் மீதும் சந்தேகம் வரக்கூடாது என்றே அவர்களை விட்டுத் தள்ளி இருந்தான்.
கணவரின் கொலையை அறிந்தபின் பித்துப் பிடித்தது என்னவோ அவனது தாய்க்கு தான். திடீரென வசதியான வாழ்வு பறிபோனதில் சமநிலை தடுமாறிய தங்கையையும் பயன்படுத்தி மூளைச்சலவை செய்தவன் அவனுக்கு உதவியாக வைத்துக் கொண்டான்.
“புடிச்சு கடல்ல தூக்கி போடுடா…” விஸ்வயுகா கடுப்பானாள்.
“கேஸ் க்ளோஸ் பண்ண இவங்க மூணு பேரையும் டிபார்ட்மென்ட்ல ஹேண்ட் ஓவர் பண்ணனும்” என்றதில், “உனக்கு விஷ ஆணியை சொருக பார்த்துருக்கான். இவனை நான் உயிரோட இங்க இருந்து அனுப்பனுமா?” மூச்சிரைக்க காளி அவதாரம் எடுத்திருந்தாள் விஸ்வயுகா.
கண்ணோரம் சுருங்க புன்னகைத்தவன், “அதுக்கு? அவனுக்கு ஸ்லோ பாய்சன் குடுக்க போறியா?” ரசனை மின்னக் கேட்க, “பின்ன குடுக்கணும்ல” என்றாள் சீறலாக.
இளங்கோவின் குடும்பமே ‘இப்போ கொல்ல போறீங்களா? இல்ல விட போறீங்களா’ என்ற மிரட்சியுடன் இருவரையும் பார்த்தது.
“ஏஞ்சல் டெவிலா மாறாதடி…” அவள் கையைப் பிடித்து அமைதிப்படுத்தியவன், “மத்த ஸ்டேட்டும் இதுல இன்வால்வ் ஆகிருக்காங்க. என்கவுண்டர் பண்றதா இருந்தா தான் இவன் உள்ள வந்ததும் பண்ணிருப்பேனே… கொஞ்ச நேரத்துல ஷிப் மறுபடியும் கரைக்குப் போய்டும். நீ சமத்தா வீட்டுக்குப் போவியாம். இவனை ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு வந்துடுறேன்” எனக் கன்னம் கிள்ளினான்.
“ப்ச்… உனக்கு அடிபட்டு இருக்கே!” அவன் காலைக்காட்டி உர்ரென கூறியவளிடம்,
“நான் போகணும் ஏஞ்சல். இல்லன்னா இவன் தண்ணி காட்டிடுவான்” எனக் கொஞ்சிட,
நந்தேஷ் தான் “அடேய்… என்னடா பண்ணிட்டு இருக்கீங்க. சைக்கோ கில்லரைப் பிடிச்சு இருக்கோம்ன்ற பயம் இல்லைல” என நொந்து போக, இளங்கோ முயன்ற மட்டும் கயிறை அவிழ்க்க முற்பட்டு அதில் வெற்றியும் கண்டான்.
அதனைக் கண்டு கொண்ட யுக்தா கண்ணிமைக்கு நேரம் அவனது இரு கையையும் பின்னால் இழுத்துப் பிடித்து, ஹேண்ட் கஃப்பை போட்டு விட்டான்.
“உன் விளையாட்டை என்கிட்ட காட்டாத ஷ்யாம். உயிரோட இருக்க ஆசை இருந்தா ஒழுங்கா இரு” என எச்சரிக்க,
“நான் உயிரோட இருந்தா தான?” என வெற்றிப்புன்னகை வீசியவன், அவனைத் தள்ளி விட்டு கடலில் குதிக்க முற்பட, நந்தேஷும் மைத்ரேயனும் ஒன்றாய் அவனைப் பிடித்து விட்டனர்.
அவனை உயிருடன் ஒப்படைக்க வேண்டுமென்ற உத்தரவு மேலிடத்தில் இருந்து வந்ததால் தான் யுக்தாவும் அவனைப் பொறுமையாய் கையாளுகிறான்.
அவன் சுயநினைவுடன் இருந்தால் தில்லாலங்கடி வேலை செய்வானென்று அவர்கள் மூவருக்குமே மயக்க மருந்தை கொடுத்து வேறொரு கப்பலுக்கு மாற்றி அழைத்துச் சென்றனர். குறிஞ்சியும் யுக்தாவும் குற்றவாளிகளுடன் சென்ற பிறகு, நால்வரும் சிட் அவுட்டில் அமர்ந்து கருங்கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நம்ம ஆரம்பிச்சு வைச்ச கொலைக்கான திட்டத்தை நம்ம பண்ணவே இல்லைல” நந்தேஷ் வெகுவாய் வருந்துவது போல கூற,
“திட்டம் மட்டும் தான் நம்மளோடது…” ஷைலேந்தரி வாயைப் பொத்தி சிரித்தாள்.
“எப்படியோ எல்லாம் முடிஞ்சுதுல” எனப் பெருமூச்சு விட்டான் மைத்ரேயன்.
மூவரும் தலையை ஆட்டி ஒப்புக்கொள்ள, நந்தேஷ் தங்கையைப் பார்த்தான்.
“எல்லாம் முடிஞ்சுது விஸ்வூ. இனியும் பழசை யோசிச்சு உன்னை நீயே வருத்திக்காத…” என்றிட, அவள் யோசனையிலேயே இருந்தாள்.
“உன்னை தான் சொல்றேன்” விஸ்வயுகாவை உலுக்கியதும் நிகழ்விற்கு வந்தவள், “ப்ச் யுகிக்கு பாய்சன் ஏறிருக்காது தான?” எனக் கேட்டவளின் நினைவெங்கிலும் அவன் மட்டுமே இருக்கும்போது அவள் எங்கிருந்து மற்றதை சிந்திக்க?
அவளது மாற்றம் கண்டு மூவருக்கும் உள்ளார்ந்த நிம்மதி. நமுட்டுப் புன்னகையும் அவர்கள் இதழ்களில் பரவியது.
அனைவரும் வீட்டிற்கு வந்தபிறகே பெரியவர்களுக்கு நிம்மதி எழுந்தது. இரு நாட்கள் கடந்திருந்தது.
சௌந்தர் யோசனையுடனே இருக்க, அஸ்வினி அவர் தோளைத் தொட்டார். “என்னங்க அதான் எல்லாம் சரி ஆகிடுச்சே. யுகி சீரியல் கில்லரைப் பிடிச்சுட்டான்ல” எனப் பெருமையாகக் கூறினார்.
“அந்தப் பசங்களைக் கொன்ன கேஸ்ல அவனுக்கு கெட்ட பேர் வந்துட கூடாது அஸ்வினி. நான் சரண்டர் ஆகிடப்போறேன்” என அவர் கையைப் பிடித்தார்.
துக்கம் தொண்டையை அடைத்தது அஸ்வினிக்கு. “நீங்க என்ன நல்லவங்களையா கொன்னீங்க?” மீண்டும் ஒரு பிரிவை ஏற்க இயலாது துவண்டார்.
“நல்லவங்களோ கெட்டவங்களோ கொலையை மறைக்க முடியாதுல!” எனும்போதே தொலைக்காட்சியில் இளங்கோ பற்றிய விவரங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.
யுக்தாவிற்கும் அவனுடன் இணைந்து பணிபுரிந்த அதிகாரிகளுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆண்கள் இறந்து போன வழக்கில், அவர்களைப் பற்றிய இருண்ட பக்கங்களும் வெளிவர, அதில் விஸ்வயுகாவின் பெயரை வெளிவிட விரும்பாதவனாக அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்களோ அல்லது எதிரிகளோ செய்திருக்கலாம் எனத் தெரிவித்து இருந்தான்.
கூடிய விரைவில் குற்றவாளியைக் கைது செய்வதாக ஊடகவியலாருக்குப் பேட்டி அளித்திருந்தவன் சௌந்தரைப் பற்றியும் ஒரு வார்த்தை கூறவில்லை.
அதைக் கண்டு சௌந்தர் அதிர்ந்தார். தொலைக்காட்சி வழியே அவனையே பார்த்துக்கொண்டிருந்த விஸ்வயுகா இதனை எதிர்பார்த்தாள்.
அவசரமாக அவனுக்கு அழைப்பு விடுத்ததில், உடனடியாக எடுத்திருந்தான்.
“ஆர் யூ ஓகே யுகி?” எடுத்ததும் அவள் கேள்வியில் சிரித்தவன், “ஐ ஆம் ஓகே டி என்ன ஆச்சு?” என்றான்.
“ஏன் டயர்டா இருக்க. பேஸ் டல்லா இருக்கு டிவில. வேற சிம்ப்டம் எதுவும் இல்ல தான? காலுக்கு ப்ராபரா ட்ரீட்மெண்ட் பண்ணுனியா?” அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கினாள்.
இப்ப தான் பிரெஸ் மீட் முடிஞ்சு மூச்சே விடுறேன். ரெண்டு நாளா சரியா தூங்கல. இனி தான் ஹாஸ்பிடல் போகணும்” என்றதில் வெடுக்கென அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
“ஏஞ்சல்…” எனப் பேச வந்தவனுக்கு பீப் சத்தமே கேட்க, அலைபேசியை நெற்றியில் முட்டிப் புன்னகைத்தான்.
எண்ணியவாறே அவன் அலுவலகத்தை விட்டு வெளியில் வருகையில் காரில் கோபத்துடன் அமர்ந்திருந்தாள் விஸ்வயுகா.
“மத்த வேலையை ஒதுக்கி வச்சுட்டு முதல்ல காலுக்கு ஹாஸ்பிடல் போக வேண்டியது தான? அப்படி என்ன அசால்ட்டுத்தனம் உனக்கு” என்று காச் மூச்சென்று கத்தியவளை ரசித்தபடியே காரில் அமர்ந்தவன், மறுநொடி அவளது இதழ்களில் தன்னிதழ்களைப் பொருத்தி பேச்சை நிறுத்தி இருந்தான்.
அவனைப் பற்றிய ஏக்கத்திலேயே பொழுதைக் கழித்திருந்தவளுக்கு அம்முத்தம் தேவையானதாய்!
அவளும் அவனுடன் ஒன்றி விட்டுப் பின் வலுக்கட்டாயமாகத் தள்ளி விட்டாள்.
“சைக்கோ சைக்கோ… அடிபட்டா முதல்ல அதை பார்த்துட்டு தான் அடுத்த வேலையை பார்க்கணும்” எனப் படபடவென அடித்தாள்.
“சரிடி பொண்டாட்டி. கூல் டவுன்” என்று அவளைத் தன்னெஞ்சில் இறுக்க முயல, அவள் “முதல்ல ஹாஸ்பிடல்” என்று கண்டிப்புடன் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வேண்டிய சோதனைகளை செய்து மீண்டுமொரு முறை மருந்திட்டு பிறகே நிம்மதி அடைந்தாள்.
“ஹேப்பி?” யுக்தா கம்பீரப் புன்னகை வீச,
“ம்ம் லைட்டா…” என்றாள் சிலுப்பியபடி.
“இன்னும் என்னடி?”
“என்னவோ தெரியல. உண்மையாவே ஆணில விஷம் இருந்தா. கொஞ்சம் மூட் அவுட்!” உதட்டைப் பிதுக்கினாள்.
“மூட் சேஞ்ச் பண்ணிடலாமா?” காதோரம் கிசுகிசுத்தான்.
“பர்ஸ்ட் ரெஸ்ட்!” ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவளுக்கு இப்போது மென்னகை மலர்ந்தது.
“அப்பறம்?” வார்த்தையை முடிக்காமல் அவன் குறும்பாய் இழுக்க, “அப்பறமும் ரெஸ்ட்டு தான்” என்றாள் அடக்கப்பட்ட நகையுடன்.
“என்னை சோதிக்கிறடி நீ…” எனத் தாபத்தில் வெப்பமாய் தகித்தவனுக்கு பழிப்பு காட்டிச் சிரித்தாள்.
அத்தியாயம் 106
“என்ன யுகி எப்படி பண்ணிட்ட?” யுக்தா வீட்டினுள் நுழைந்ததும் சௌந்தர் தவிப்பாகக் கேட்டார்.
“செய்ய வேண்டியதை தான் செஞ்சுருக்கேன்ப்பா. நீங்களும் அம்மாவும் கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டுக்குப் போய் இருங்களேன்” என்றான் யோசனையாக.
“என்னை ஓடி ஒளிய சொல்றியா? அதுவும் நான் செஞ்சதுக்கு அவளையும் கூட்டிட்டு தலைமறைவாகணுமா” என ஆதங்கமாகக் கேட்டார்.
“அய்யய்ய உங்களை எப்படி அம்மா லவ் பண்ணுனாங்க. அன்ரொமான்டிக் பெர்சனா இருக்கீங்க நீங்க. உங்க பொண்டாட்டியை இத்தனை வருஷம் கழிச்சு பார்த்து இருக்கீங்க. இனியாவது அவங்களை நிம்மதியா வாழ வைங்க. இப்பவும் ஜெயிலுக்கு போறேன்னு பினாத்திட்டு இருக்கறதை விட்டுட்டு கொஞ்ச நாள் அவங்களைத் தனியா எங்கயாவது கூட்டிட்டுப் போயிட்டு வாங்க. அவங்களுக்கு மெண்டலி ரிலீஃபா இருக்கும். இங்க இருக்குற கேஸை நான் பாத்துக்குறேன். ரேப்பிஸ்ட்டை கொன்னது சரியா தப்பான்னு மீடியா கடும் பிசியா வாக்குவாதம் நடத்திட்டு இருக்கு. அதனால அவங்க முதல்ல பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை சில் பண்ணுங்க” என்றவனை வாஞ்சையுடன் கட்டிக்கொண்டார்.
“ப்பா இவனை நம்பாதீங்க” பின்னிருந்து நந்தேஷ் முதன்முறை அவரை ‘அப்பா’ என அழைக்கவும் நெக்குருகியவரிடம், “பொழுதன்னைக்கும் ஃபீல் பண்ணிட்டேலாம் இருக்க முடியாது” என்று பொங்கிய அன்பை மொக்கையிட்டு நிறுத்தினான்.
சௌந்தர் அவனை முறைக்க, “இவன் ஆளோட ரொமான்ஸ் பண்றதுக்காக உங்களை பேக்-அப் பண்ணி அனுப்ப பாக்குறான். அது புரியாம நீங்க என்னமோ கட்டிப்பிடி வைத்தியம் பார்த்துட்டு இருக்கீங்க” என்றதில், சௌந்தர் “அவன் அதெல்லாம் பார்க்க மாட்டான். யார் இருந்தா என்ன இல்லைன்னா என்ன அவனுக்கு…” எனக் கேலி செய்ய,
“அஃப்கோர்ஸ்” என அமர்த்தலாய் பதில் அளித்த யுக்தா சாகித்யனின் புஜத்தை நாணத்துடன் கிள்ளினாள் விஸ்வயுகா.
“சரி எங்க போறதுன்னாலும் உன் கல்யாணத்தை முடிச்சுட்டு போறோம்…” என்ற சௌந்தரிடம் வெட்கிய நந்தேஷ், “இன்னைக்கு ஈவ்னிங் பீச் வெடிங்ன்னாலும் ஓகே ப்பா” என்றான் நெளிந்து.
“அடச்சீ அலையாத” யுக்தா கேவலமாகப் பார்க்க,
“யப்பா நீங்க உடனே உடனே ரொமான்ஸ் பண்ணலாம், நேரங்காலம் பார்க்காம கல்யாணம் பண்ணலாம். அதை நாங்க பண்ணக்கூடாதா?” என்று பொங்கினான்.
“நீ முதல்ல உன் மாமியார் வீட்டுல பெர்மிஷன் வாங்கு. உன் மாமா வீட்டு சங்காத்தமே வேணாம்னு இருக்காங்க குறிஞ்சியோட அம்மா.”
“இது வேறயா?” என எச்சிலை விழுங்கியதில், இவர்களின் உரையாடலை கேட்டபடி அங்கு வந்த அஸ்வினி “நாங்க போய் குறிஞ்சி வீட்ல பேசுறோம் நந்து” என்றார்.
“அய்யயோ வேணாம்…” எனப் பதறிய விஸ்வயுகா, “அவனே பல அடிபட்டு லவ் பண்ணிருக்கான். நீங்க பேசி, அடுத்த அஞ்சு வருஷத்துக்கு அவன் சிங்கிளா இருந்தா வாலிபம் போய் அரைக்கிழவனாகிடுவான்…” என மிரண்டதில், யுக்தாவும் நந்தேஷும் பீறிட்டுச் சிரித்தனர்.
அஸ்வினி சுண்டிய முகத்துடன் “என்ன ஏஞ்சல்” எனப் பாவமாகக் கேட்க, “அச்சோ சும்மா லுலுவாய்க்குச் சித்தி” என்று கொஞ்சினாள்.
“ஆனாலும் அப்போ அப்போ உண்மை பேசிட்டு நழுவுற பார்த்தியா” நந்தேஷ் மேலும் கிண்டலடிக்க, “சும்மா இருடா” என்று அஸ்வினியின் வாடிய முகத்தைப் பார்த்து அதட்டினாள்.
பேச்சை மாற்றும் பொருட்டு, “ஆமா எங்க என் மச்சினிச்சியைக் காணோம்” என யுக்தா வினவ,
“என் நண்பனையும் காணோம் கவனிச்சியா?” என விஸ்வயுகா சிரிப்பை அடக்கிக்கொண்டதில், “ம்ம்ம் கவனிச்சேன் கவனிச்சேன்” எனத் தலையாட்டிக்கொண்டான்.
“மைதா… பட்டப்பகலுடா!” தன் மீது பரவியிருந்தவனிடம் பலவீனமாகக் கெஞ்சினாள் ஷைலேந்தரி.
“பர்ஸ்ட் நைட்டுக்கு தான்டி நைட்டு வேணும். செகண்ட் நைட்டுக்கு சென்டிமெண்ட்டெல்லாம் வேணாம்” என முனகியபடி அவளை ஆக்கிரமிக்கத் தொடங்க, அவர்களது இல்லறம் நல்லறமாய் தொடர்ந்தது.
திட்டமிட்டபடி அடுத்த ஒரு வாரத்தில் குறிஞ்சி நந்தேஷின் திருமணமும் கோலாகலமாக நடந்து முடிந்தது.
யுக்தா சாகித்யன் மீண்டும் டெல்லிக்குச் செல்ல வேண்டியது இருக்க, விஸ்வயுகா டெல்லியிலே ஒரு கிளை தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். சொன்னதுபடி, நந்தேஷின் திருமணம் முடிந்ததுமே முரண்டு பிடித்த அஸ்வினியையும் சௌந்தரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தனர் இளையவர்கள்.
“நீங்க ஹனிமூன்க்கு ஃபாரீன் போனா அதுல ஒரு நியாயம் இருக்கு. எங்களை ஏன் அனுப்புறீங்க?” என அஸ்வினி சலித்துக் கொண்டாலும், அவருக்கும் கணவனுடன் நேரம் செலவழிக்க ஆசை இருந்தது உண்மையே.
ஆயிரம் பத்திரம் சொல்லி விட்டே கிளம்பினர் இருவரும். மூன்று மாதங்கள் பயணம் அவர்கள் அனுபவித்த வேதனையை மறக்கச் செய்து புது வாழ்வைத் தொடங்கவே என்பதும் புரிந்தது.
அசோக்கின் பிடிவாதத்தால் நந்தேஷ்ஷும் அதே வீட்டில் இருந்து விட்டான். மைத்ரேயனும் ஷைலேந்தரியும் தனியாக வீடெடுத்துத் தங்கி கொள்ள, அவர்களை அங்கு ‘செட்’ செய்ததும் தான் யுக்தாவும் விஸ்வயுகாவும் டெல்லிக்கு கிளம்பினர்.
அடுத்த ஒரு வாரத்தில் மூன்று ஜோடிகளும் இணைந்தே தேனிலவுக்கு திட்டம் தீட்டி இருந்தது.
டெல்லியில் தனது குவார்ட்டர்ஸிலேயே விஸ்வயுகாவை விட்டு விட்டு அலுவலகம் சென்றான் யுக்தா.
அவனைக் கண்ட கபீர், “போன வேலை முடிஞ்சுது போலயே” என்றார் அர்த்தமாக.
எப்போதும் இருக்கும் அசட்டைத்தனம் மறைந்து, அவன் முகமே பூரிப்பில் மலர்ந்திருந்தது.
கடுமையான உழைப்பாளி, புத்திக்கூர்மையுடையவன் தனிமையில் கருகிப் போவதைக் கண்டு சில முறை வருந்தி இருக்கிறார் கபீர்.
“கல்யாணத்துக்கு கூட கூப்பிடல?” செல்லக்கோபத்துடன் அவனை முறைக்க,
வெட்கப்புன்னகை வீசியவன், “ஒரு நாள் உங்களுக்கு விருந்தே வச்சுடுறேன் சார்” என்றான்.
“என்னடா சென்னைக்குப் போனதுல முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செஞ்சுட்டியா” கேலியாய் அவர் வினவ,
அதற்கும் சிரிப்பையே பதிலாகத் தந்து, “முகத்துக்கு இல்ல ஹார்ட்டுக்கு” என்று நெஞ்சைக் குத்திக் கொண்டவனை, வியப்பாக ஏறிட்டார்.
“இனி இந்த ரிஸ்கியான என்கவுன்டரை எல்லாம் குறைச்சுடு மேன்” என்றவரை இதழ் வளைத்து பார்த்தவன், “ட்ரை பண்றேன் சார்” என்றான்.
“உன் வைஃப் பயப்பட போறாங்க… கல்யாணத்துக்கு முன்னாடி நானும் வீரமா சுத்திட்டு இருந்தவன் தான். அதுக்கு அப்பறம் கன் எடுக்கவே யோசிக்க வேண்டியதா இருக்கு” என்றதில்,
“நீங்க என் வைபை மீட் பண்ணிட்டு சொல்லுங்க” என்றான் கர்வமாக.
அதற்கும் வியப்பாக புருவம் தூக்கியவரிடம் வழக்கு பற்றிய தகவல்களை வழங்கி விட்டு மதிய நேரமாக தான் வீட்டிற்கு வந்தான்.
வீட்டினுள் நுழையும் போதே மீன் குழம்பு வாசம் ஆளைத் தூக்கியது.
“இன்னைக்காவது இதை எங்க ஆர்டர் பண்றான்னு கேட்டு வைக்கணும்” என்றபடி உள்ளே நுழைந்தவன் விஸ்வயுகாவைத் தேடினான்.
“ஏஞ்சல்” என அழைத்தபடி அறைக்கதவைத் திறந்தவன் ஒரு கணம் உறைநிலைக்குச் சென்றான்.
இளஞ்சிவப்பு நிற மெலிதான இரவு உடையில் அவளது அங்கங்களின் வடிவங்கள் அழகுற வெளிப்பட, ட்ரெஸிங் டேபிளின் முன் நின்றிருந்தவளைக் கண்டு போதையாகிப் போனான்.
அவன் வரும் அரவம் கேட்டதும், முன்னெற்றி முடியைக் கோதியபடி திரும்பியவள் இரு புருவத்தையும் உயர்த்தி அபிப்ராயம் கேட்க, சூடான மூச்சுக்காற்று அவள் நெற்றியைத் தீண்ட நெருங்கி நின்றான்.
“என்னடி என்னைத் தூண்டி விடுற?” கன்னத்தில் மெலிதாய் ஊதினான்.
“நீ மட்டும் தூண்டில் போட்டுத் தூண்டலாம். நான் தூண்டில் போடக்கூடாதா? ம்ம்?” அவனைச் சூடேற்றும் பார்வையை வீசியதில், இடையுடன் சுற்றி வளைத்தான்.
மெலிதான ஆடையின் வழியே அவனது கரத்தின் வெப்பம் உணர்ந்தவளுக்குள் சில்லிட்டது.
“காட்ஜியஸா இருக்கடி” கிறக்கத்துடன் அவள் முன் குனிந்தவனை நெஞ்சில் கை வைத்து தள்ளினாள்.
“முதல்ல பிரஷ் ஆகு. அப்பறம் சாப்பாடு… அப்பறம் முத்தம்… அப்பறம் இஸ்கு இஸ்கு…” என்று ஒவ்வொரு விரலாக நீட்டிக் காட்டியதில், “நம்ம வேணும்னா டிஃபரெண்ட்டா செய்யலாமா ஏஞ்சல்?” மோகத்தில் எரிந்து கொண்டிருந்தவனிடம், “என்னவாம்?” என்றாள்.
“முதல்ல இஸ்கு இஸ்கு. இடை இடைல முத்தம். அப்பறம் சாப்பாடு, அப்பறம் ப்ரெஷ் ஆகிக்கலாம். ஓகே வா?” என அவனும் அவளது ஒவ்வொரு விரலையும் நீட்டி முத்தமிட ஒவ்வொரு முத்தத்திற்கும் உருகிப்போனாள்.
ஆகினும், “நோ! நான் சொன்ன ஆர்டர் தான். போ!” எனப் பிடிவாதமாக குளியலறைக்குள் தள்ளினாள்.
உணவை மேஜையில் எடுத்து வைக்கும் போதே, முகத்தைத் துடைத்தபடி யுக்தா அங்கு வந்தான்.
முட்டி நிறைக்காத உடையில் அங்கும் அங்குமாக நடந்தவளைப் பார்க்க பார்க்க மூச்சு முட்டியது அவனுக்கு.
‘படுத்துறாளே!’ என முணுமுணுத்துக் கொண்டவன், நாற்காலியில் அமர அவனுக்கு உணவை எடுத்து வைத்து விட்டு அவளும் அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்.
“இப்போ நான் எதை சாப்புடுறது” மோனப்புன்னகையுடன் அவன் வினவ,
“டேய்!” என அதட்டலாக வெட்கினாள்.
“மீன் குழம்பு வாசத்தை விட உன் வாசம் தான் என் பசியைத் தூண்டுதுடி” அவளது வெற்றுத் தோள்பட்டையில் முகம் வைத்து அழுத்தினான்.
கூசி நெளிந்தவள், “மீசை குத்துதுடா” என்றாள் சிணுங்கி.
“ஹ்ம்ம்…” என்றபடி மீண்டும் மீசை உரச அவளுடன் உராய்ந்தான்.
“யுகி என்னடா ஒழுங்கா சாப்பிடு” எனச் செல்லமாய் அதட்டியவள், மீன் குழம்பை சோற்றில் குழைத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.
கண்ணை மூடி ஒரு கணம் அந்த சுவையில் மூழ்கியவன், “கேட்கணும்னு நினைச்சேன். எங்க ஆர்டர் பண்ணுன இதை. ஒரு தடவை அம்மாவும் கடைல வாங்குனதா சொன்னாங்க. நீயும் சென்னைல வாங்குனல்ல” என்றான் நினைவுப்படுத்தி.
“ம்ம் ஆமாமா வாங்குனாங்க!” என மறுவாய் கொடுத்தவளிடம், “என்னடி கடைப் பேர் கேட்டா சலிச்சுக்குற” என்றவனும் அவளுக்கு ஊட்டி விட,
“யுகா’ஸ் கிட்சன்ல வாங்குனேன்” என்றாள் சிரிப்பை அடக்கியபடி.
“அப்டி ஒரு ஹோட்டல் இருக்கா?” யோசனையுடன் கேட்டதில் அவனிடம் இருந்து எழுந்தவள், “ஊரெல்லாம் இவன் பெரிய சிபிஐ ஆபீஸர், முடிக்க முடியாத கேஸை எல்லாம் முடிக்கிறாருன்னு பீத்திக்கிறாங்க. வீட்ல சரியான மக்குடா நீ!” என்றாள் சிலுப்பலாக.
லொக்கு லொக்கு என இருமியவன் “என்னடி” எனப் பாவமாக பார்த்தான்.
“இன்னைக்கு மட்டுமில்ல, சித்தி உன்னைப் பார்க்க வரும்போதும் நான் தான் செஞ்சு குடுத்து விட்டேன்” என அமைதியாய் கூறியவளைத் திகைத்துப் பார்த்தான்.
“உனக்கு சமைக்க தெரியுமா?” விழி விரித்து அப்போது தான் அந்தக் கேள்வியையே கேட்டு வைத்தவன், அவள் முறைப்பதை உணர்ந்து “இல்லடி. உனக்கு இதுக்குலாம் டைம் இருக்காது தேவையும் இருந்துருக்காதுல?” என்றான்.
“தேவை இல்ல தான். ஆனா, உனக்காக கத்துக்கிட்டேன்” அவனது கையில்லாத பனியனில் முன்பகுதியை வருடியபடி கூறியதிலேயே தன்மீதிருந்த நேசத்தின் ஆழத்தை மீண்டுமாக உணர்ந்தான்.
“ஹே! அப்பவே கத்துக்கட்டியா?” லேசாய் குரல் பிசிறடித்தது.
“பின்ன, கல்யாணத்துக்கு அப்பறமும் உன்னை ஹோட்டல்லயோ, சமையக்காரங்க கையாலயோ சாப்பிட வைக்க எனக்குப் பிடிக்கல” என்றவளை அள்ளி இறுக்கி அணைத்திருந்தான்.
“என் காதல் பாரத்தை உங்கிட்ட இறக்க நினைச்சேன். இப்போ நீ குடுக்குற பாரத்தை தாங்க முடியாம தவிக்கிறேன்டி. மூச்சு முட்டுது…” எனத் திணறினான் ஆறடி ஆண்மகன்.
“மூச்சை எடுத்துக்கோ” நிமிர்ந்து கண்ணை மூடி நின்றவளின் அனுமதியில் மூச்சுப் பரிமாற்றத்தில் மூழ்கிப் போனான்.
முத்தத்தில் முகிழ வைத்தபடியே, அவளை ஒரு கையால் மெல்ல தூக்கியவன், மறக்காமல் கையையும் கழுவி விட்டு, அறைக்குள் நுழைந்தான்.
உள்ளே செல்லும் வரை முத்தத்தின் வீரியம் சற்றும் குறையவில்லை.
மூச்சு விட இயலாமல் அவளே நகர்ந்து, “இப்ப எனக்கு மூச்சு முட்டுதுடா” என்றாள் கண் மயங்க.
“என் மூச்சை எடுத்துக்கோ” அறைக்கதவை காலால் எட்டி உதைத்து அடைத்தவன், பாவையின் உயரத்திற்கு குனிந்து அடிபணிய, ரசனையாய் புன்னகைத்தவள் இப்போது அவனது இதழ்களை சிறைபிடித்தாள்.
காதலின் வேகம் அதிகரிக்கும் நேரம் மோகத்தின் வீரியம் இருவரையும் நிறைத்தது.
விரல்களின் மாயத்தில் வெண்ணிலவுப் பெண்ணைத் துவள வைத்தான்.
தன்னதரம் மூலம் கழுத்தின் வழியே பயணம் செய்தவன், தோள்பட்டையில் தாங்கி இருந்த இரவு உடையின் ‘ஸ்ட்ரிப்’பை நழுவ விட, அவளது இதயமும் சேர்ந்து நழுவியது. மூச்சின் ஆழமும் அதிகரித்தது.
மேனியெங்கும் தடம் பதித்து திடமிழக்க செய்தான். அவனும் சுயமிழந்தான். மற்றொரு புறம் இருந்த ‘ஸ்ட்ரிப்’பையும் தவற விட, அவள் அவனிடமே சரிந்து தன் நிலையில் தயக்கம் கொண்டாள்.
“லைட் ஆஃப் பண்ணிக்கலாமா?”
கேட்டவளைக் கண்டு ஒரு நொடிக்கும் அதிகமாய் விரிந்தது ஆடவனின் அழுத்த விழிகள்.
“பயம் போயிடுச்சோ என் ஏஞ்சலுக்கு?”
“உன் பக்கத்துல பயம் வராதுன்னு தோணுது!” மறுபதில் அளித்தவளின் நெஞ்சுக்கூட்டில் முகம் பதித்து அழுத்தியவன், “ஆனா எனக்கு லைட் வேணுமே…” என்றான் சில்மிஷமாக.
“யுகி”
அடுத்து பேச அங்கு வார்த்தைக்கு வேலையற்றுப் போனது. அத்தனை கால காதலையும் அணு அணுவாய் கொட்டி, ஏக்கத்தின் ஆழத்தை மொத்தமாக அள்ளிக் கொடுத்திருந்தான்.
ஒவ்வொரு தீண்டல்களும் தித்திப்பைத் தர, முத்தாய்ப்பாய் அவனுடன் காதல் தேரில் ராணியாய் வலம் வந்தாள் பெண்ணவள்.
சிற்றின்பங்களின் சேமிப்பில் பேரின்பங்களின் பேராவல்! மென்மையில் காதலைப் புரிய வைத்தவன், சற்று வன்மை கொண்டே மோகத்தையும் கலந்தான்.
வன்மையன்று, நேச வலி தீர்க்கும் வழியதுவொன்றே என இருவரும் இல்லறத்தின் தொடக்கத்தில் அதிவேகமாக அத்தியாயம் எழுதத் தொடங்க, அவன் இப்போதும் அவளுக்கு வழிகாட்டும் ஆசானானான்.
“ஏஞ்சல்… நிறுத்திடட்டா?” கூடிக்களிக்க பேராசை கண்ணில் நிரம்பி வழிந்தபோதும் அவளது விருப்பமொன்றே அவனுக்கு பிரதானமாய்!
“நான் வேணாமா?” காற்றாய் மயக்கம் கலந்து வந்தது அவள் குரல்.
“வேணும். நீ மொத்தமா வேணும். நீயா தந்தா…” தாபத்தின் காரணமாய் அவனிடம் வேக மூச்சு. அது நெருப்பாய் அவளைச் சுட,
“எனக்குள்ள மொத்தமா நீ வேணும் யுகி. உன்னைத் தா. என்னைத் தரேன்” என்றவளின் நேசத்தை இப்போதும் தாள இயலாதவனாய் தனது மொத்த பாரத்தையும் அவள் மீது திணித்தவன், பனியாய் படர்ந்து பனிமலரில் மையலிட்டு நேசமாய் ஒரு கூடலை அரங்கேற்றினான்.
யுக்தாவின் ஒவ்வொரு அசைவிற்கும் இசைந்து கொடுத்தவளின் செவிகளில் அவனுக்காக உருகிக் கேட்ட பாடலின் வரிகள் இப்போதும் அலை அலையாய் எழும்பி இசைத்தது.
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சுக் காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கை கோர்த்து தான்
உன் மார்புச் சூட்டில் முகம் புதைப்பேன்.
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே…
இறுதி பகுதி
கூடலின் பொழுதுகள் கூடுதலானக் காதலையே பொங்கி வழியச் செய்து கொண்டிருந்தது. இனிமையானத் தருணங்கள் தவிப்பின் விளிம்பில், தாபத்தின் உச்சத்தில் நிறைவு பெற்று உயிருக்குள் உயிராக இருவரையும் பின்னிப் பிணைய வைத்தது.
“சாருக்கு ரூமை விட்டு வெளில போற ஐடியாவே இல்லையா?” அவனது வெற்று மார்பில் கூந்தலதைப் பதித்து கேட்டாள் விஸ்வயுகா.
“ஆயக்கலைகள் அறுபத்து நாலாம் ஏஞ்சல்…” குறும்பாய் பெண்ணவளைக் கூச்சத்தில் சிலிரிக்க வைக்க,
“அதுக்கு?” தலையை நிமிர்த்தி பேந்த பேந்த விழித்தாள்.
“ஜஸ்ட் சொன்னேன்!” சிரிப்பை அடக்கியபடி விஷமப்புன்னகை பூத்தான்.
“உன் சிரிப்பே சரி இல்லைடா சைக்கோ…” அவன் மீசையைப் பிடித்து வளைத்தவளிடம், “எல்லாமே ட்ரை பண்ணனும்ல” எனும்போதே அவன் வாயை பொத்தியவள், “யுகி ப்ளீஸ்” என்று வெட்கம் தாளாமல் அவன் கன்னத்தில் தன் நெற்றியை வைத்து அழுத்தினாள்.
“ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” அவனும் கெஞ்சலை அதிகப்படுத்தி கொஞ்சலுக்கு அடிபோட்டு, விருப்பம் போல அவளது விருப்பமறிந்து மீண்டும் மீண்டும் இணைந்து கலந்தான்.
அடுக்களையில் காபி தயாரித்துக் கொண்டிருந்தாள் விஸ்வயுகா. இன்னும் யுக்தா எழவே இல்லை.
முந்தைய நாளின் நாணத்தின் மிச்சம் அவள் உதட்டில் குடிகொண்டிருக்க, சில நேரத்திலேயே உள்ளிருந்து பாடல் சத்தம் கேட்டது.
அதைக் கேட்டதுமே அஸ்வினியிடம் விலாவரியாக தன்னைப் பற்றி விசாரித்திருக்கிறான் எனப் புரிந்திட, அவஸ்தையாக இருந்தது.
“வசீகரா… என் நெஞ்சினிலே…” எனப் பாடல் ஆரம்பிக்கும்போதே குப்பென சிவந்து விட்டாள்.
“தினம் குளித்ததும் உன்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை”
என்ற வரிகளில் தலையில் இருந்து நீர் சொட்ட அவளது பின்னங்கழுத்தில் பற்தடம் பதித்தான் யுக்தா சாகித்யன்.
சொட்டிய நீர்த்துளிகள் அவளது கழுத்தின் வழியே வழிந்து எங்கெங்கோ ஊர்வலம் செல்ல, சிலிர்த்து அவன் மீது சாய்ந்தாள்.
“ரசனையான சாங்ல ஏஞ்சல்!” எனக் கிசுகிசுத்தவனிடம், “சாங்கை விட நீ செய்றது தான் ரசிக்க வைக்குதுடா” என்றவள், தனது துப்பட்டாவைக் கொண்டு அவன் தலையைத் துடைத்து விட,
“உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்…”
எனப் பின் பக்கம் அதே பாடல் ரிப்பீட் மோடில் பாடிக்கொண்டிருந்ததில், தனது டீ – ஷர்ட்டினுள் அவளை இழுத்து விட்டு இறுக்கி கொண்டான் விஷமமாய்.
“யுகி…”
“நீ ரசிச்ச பாட்டை, நம்ம ரீ-கிரியேட் பண்ண வேணாமா?” என மூக்கோடு மூக்கை உரசி, அவளுடன் இழைந்தான்.
“பட், இதுல லிரிக் தப்பு” என்றான் திடீரென.
“என்ன தப்பாம்?” அவன் கழுத்தைப் பிடித்துக்கொண்டு விஸ்வயுகா வினவ,
“உன் ஆடையாகவே நான் வேண்டும்னு தான் வரணும்” என்றவனின் பார்வையில் சொக்கிப்போனவளுக்குள் படபடத்தது.
அவனோ மேலும் தொடர்ந்து “கவிஞன் நானா இருந்துருக்கலாம். சரி போகட்டும்… பாட்டுக்கு எதுக்கு கவிஞனாக? உனக்கு மட்டும் நான் கவி வடிக்கிற கவிஞனாகிட்டுப் போறேன். அதுக்கு இசை மீட்ட உன்னை வீணையாக்கிக்கிறேன். ஓகே வா ஏஞ்சல்” எனக் குழைந்து குழாவி அவளைச் சிதைய வைத்தே காதலெனும் பேரண்டத்தில் உயிர் வதை கொடுத்தான்.
—-
“அழகி…” கொஞ்சும் குரலில் நந்தேஷ் மனையாளை அழைக்க, “ம்ம் சொல்லுங்க நந்தா” என்றபடி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தவள், துப்பாக்கியை பேண்ட் பாக்கெட்டில் சொருகிய படி கேட்டாள்.
அதில் மிரண்டவன், “யம்மா இந்தக் கருமத்தை வேற அப்ப அப்ப காட்டி பயமுறுத்துற. மீ பாவம்” என்றதில் சிரித்தாள்.
“சிரிக்காத. ரொமான்ட்டிக் மோட்ல இருக்கும் போதும் கண்ணு முன்னாடி கன்னு வருது தெரியுமா?”
“ஹா ஹா… பொண்டாட்டி மேல அந்தப் பயம் இருக்கணும்” திணக்கமாக அவள் உரைக்க, அதில் பார்வையை மாற்றியவன், “இப்ப உன்னை பதற வைக்கவா?” என்றான் இடுப்பில் கையூன்றி.
“என்னையெல்லாம் பயமுறுத்த முடியாதாக்கும்”
“ம்ம்?”
அவளை நெருங்கி இருந்தவன், முதுகுப்புறம் கையை வளைத்து சுண்டி இழுக்க, இதயம் படபடவெனத் துடித்தது அவளுக்கு.
“ஹார்ட் பீட் ரைஸ் ஆகுதே” கேலிப்புன்னகை அவனிடம்.
“போங்கப்பா இது போங்கு” என வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டவளை அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்க வைத்திருந்தான் நந்தேஷ்.
—-
“டேய் மைதா” சோபாவில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தபடி அழைத்தாள் ஷைலேந்தரி.
“என்னடி?” மடிக்கணினியில் புதைந்தபடி மைத்ரேயன் கேட்க,
“நம்ம எப்ப ஹனிமூன் போவோம்?” என்றாள் தீவிரமாக.
“கள்ளி…” மடிக்கணினியை மூடி வைத்து விட்டு அவள் அருகில் அமர்ந்தவன், “இங்கயே ஹனிமூன் ஸ்டார்ட் பண்ணிடலாமா?” என்றான் கிறக்கமாக.
“டேய் அதில்ல டா. எனக்கு அத்தானைப் பார்க்கணும்” என்றதில் “அடியேய்” எனப் பதறினான்.
“பதறாத பதறாத. நிறைய டவுட்ஸ் என் மண்டைக்குள்ள குடைஞ்சுக்கிட்டே இருக்கு. அத்தான்கிட்ட அதை எல்லாம் க்ளியர் பண்ணனும்”
“எனக்கும்டி. அவனுக்கு போன் பண்ணியே கேட்டுடலாம்ல”
“பண்ணாம இருப்பேனா. போன் பண்ணுனேனே”
“பதில் சொன்னானா?” மைத்ரேயன் வினவியதில்,
“என் அக்காக்காரி தான், கெட்ட வார்த்தைல திட்டி போனை வச்சுட்டா” என்றாள் பரிதாபமாக.
வாய்க்குள் சிரிப்பை அடக்கியவன் “தேவையா?” எனக் கிண்டல் செய்ததில், சிலுப்பினாள்.
மூன்று ஜோடிகளும் மூணாறு செல்வதாகத் தீர்மானமானது. யுக்தாவும் விஸ்வயுகாவும் நேரடியாக டெல்லியில் இருந்த வந்து விடுவதாகக் கூற, மற்ற நால்வரும் ஒன்றாக மூணாறை அடைந்தனர்.
லேக் வியூ ரிசார்ட்டிற்கு யுக்தாவும் விஸ்வயுகாவும் வருவதற்கு இரவு 10 மணியாகி விட்டது.
அதுவரையிலும் ஷைலேந்தரி உறங்காமல் பிடிவாதமாக விழித்திருந்தாள். அனைவருமே நீல நிறத்தை பிரதிபலித்த நீச்சல் குளத்தின் கரையில் அமர்ந்திருந்தனர்.
நந்தேஷ் கொட்டாவி விட்டபடி, “நாளைக்கு டீடெய்ல் கேட்டுக்கலாம்ல ஷைலு. இப்பவே கேட்கணுமா? எனக்குத் தூக்கம் வருது” எனக் கண்ணைக் கசக்கினான்.
மைத்ரேயன் அவனிடம், “போனதும் தூங்கிடுவ” எனக் கிசுகிசுக்க நந்தேஷ் அசடு வழிந்தவன், “நீயாவது சொல்லேன்” என்றான் குறிஞ்சியிடம்.
“நான் வேற கேஸ் ஹேண்டில் பண்ணிட்டு இருக்கேன் நந்தா. இளங்கோவை டெல்லி ஜெயிலுக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. நானும் அதுக்கு அப்பறம் யுக்தாகிட்ட டீடெய்ல் கேட்கல” என்றாள்.
“ஹாய் கைஸ்” அத்தனை நேர பயணத்திலும் புது பொலிவுடன் தங்கள் முன் வந்து நின்ற விஸ்வயுகாவைக் கண்டு மூவருக்கும் நெஞ்சம் நிறைந்தது.
நண்பனின் புன்னகை முகத்தைக் கண்ட குறிஞ்சிக்கும் அத்தனை நிறைவு.
“அக்கா…” ஷைலேந்தரி அவளைக் கட்டிக்கொள்ள, யுக்தா குறிஞ்சியை தோளோடு அணைத்து விடுவித்தான்.
பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, “எங்களுக்காகவா வெய்ட் பண்றீங்க?” எனக் கேட்டாள் விஸ்வயுகா.
“ஆமா ஆமா” என்ற ஷைலேந்தரி யுக்தாவிடம், “அத்தான்… அந்த நரேஷ் பாடி கிடைச்சுதா? அவன் எதுக்காக விஸ்வூவை கொலை செய்ய வந்தான்…” என்றாள் ஆர்வமாக.
“இந்தக் கருமத்தை கேட்க தான், அன்னைக்கு கால் பண்ணி என்கிட்ட வாங்கி கட்டுனியா” விஸ்வயுகா நக்கலாகக் கேட்க, ஷைலேந்தரி முறைத்தாள்.
வெள்ளிப்பற்கள் மின்னப் புன்னகைத்தவன், “ம்ம் கிடைச்சுது. நரேஷ் பாடியைக் கண்டுபிடிச்சாச்சு” என்றதில் மைத்ரேயன் “அவன் எதுக்கு இந்த பிரச்சனைக்குள்ள வந்தான் யுக்தா?” எனக் கேட்டான்.
“அவனா வரல இளங்கோ தான் இழுத்து விட்டுருக்கான்னு அவன்கிட்ட இன்வெஸ்டிகேட் செஞ்சப்ப தெரிஞ்சுது… சென்னைல முதல் கொலையான ரோஜாவோட சேர்த்து மாப்பிள்ளையோட இறப்பும், டைரக்டா கேஸ்க்குள்ள சிபிஐ என்டர் ஆனதும் இளங்கோ எதிர்பார்க்காதது.
நம்மளை திசை திருப்புறத்துக்காக நரேஷை மிரட்டி யுகாவை கொலை செய்ய சொல்லிருக்கான். அவனும் உயிருக்கு பயந்து இவளை அட்டாக் பண்ணி, தேவையில்லாம செத்தும் போய்ட்டான்” என விளக்கமளித்தான்.
“ஓ! இதுல இளங்கோவோட அம்மாவும் தங்கச்சியும் இருந்தது உனக்கு எப்படி தெரிஞ்சுது?” நந்தேஷ் கேட்டதும்,
“அவனோட தங்கச்சி பானுப்பிரியாவை விசாரிக்கும்போதே எனக்கு அவள் மேல ஒரு சின்ன சந்தேகம் இருந்துட்டே இருந்துச்சு. அண்ட், இளங்கோ கத்தார்ல இருக்குற மாறி காட்டி, அங்க இருந்தே அவன் போன் பேசுற மாதிரி நெட்ஒர்க் ஹேக்கிங் எல்லாம் பண்ற அளவு திறமைசாலியா இருந்துருக்கா. பட் அதை தவறான விஷயத்துக்கு யூஸ் பண்ணிக்கிட்டது தான் அவளுக்கு வினையா வந்துடுச்சு.
இதுக்கு இடைல, அவனோட அம்மா மங்கை சரியா கல்யாணம் நடந்த அன்னைக்குலாம் வீட்டைப் பூட்டிட்டு கிளம்பிருக்காங்க. அவங்க அந்த நேரத்துல எங்க இருந்துருக்காங்கன்னு விசாரிக்கும்போது தான் தெரிஞ்சுது, மண்டபத்துல இருந்தது. ஆனா சிசிடிவி எதுலயும் அவங்க வராத மாதிரி அதுலயும் போர்ச்செரி பண்ணிருக்காங்க. ரியல் ஃபுட் ஏஜை நாங்க ரெட்ரைவ் பண்ணதுக்கு அப்பறம் தான், அவங்களும் இதுல இன்வால்வ் ஆகிருக்குறது கன்ஃபார்ம் ஆச்சு” என்றான்.
விஸ்வயுகா பெருமூச்சுடன், “சோ… நாங்க கொலை செய்யணும்னு நினைச்ச பசங்களை நீயும் சித்தப்பாவும் முடிச்சுருக்கீங்க. அது சரி, அப்போ ஷைலு மால்ல ஸ்லோ பாய்சனை கை மாத்துனதை வீடியோ எடுத்தது யாரு? அதை எங்களுக்கு யாரு மெயில் பண்ணுனது? சித்தப்பாவா இருக்க வாய்ப்பில்லை…” என்றாள் யோசனையாக.
குறிஞ்சி தான், “அதை வீடியோ எடுத்ததே நான் தான்” என்றதில், “அடிப்பாவி துரோகி அண்ணி” என்று வாயில் கை வைத்தாள் ஷைலேந்தரி.
யுக்தாவோ, “மத்தவங்க மேல என்னோட கவனம் இருந்தாலும், உங்க நாலு பேர்கிட்டயும் ஏதோ சரி இல்லைன்னு உறுத்திக்கிட்டே இருந்துச்சு. சோ உங்களை ஃபாலோ பண்ண குறிஞ்சிக்கிட்ட சொல்லிருந்தேன். ஷைலு யார்கிட்ட இருந்து என்ன வாங்குனான்னு தெரியல. அவள் பாய்சன வாங்குன ஆள ஃபாலோ செஞ்சு, அவங்க மூலமா நீங்க என்ன செய்றீங்கன்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ளவே எனக்கும் ஏஞ்சலுக்கும் நிறைய மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்.
அதை எல்லாம் விட அஸ்வினி அம்மாவோட நிலைக்கு காரணமானவங்களைத் தண்டிக்க தான் மும்முரமா ஆதாரம் தேடிட்டு இருந்தேன். அதனால உங்களை நான் கொஞ்சம் அசால்ட்டா விட்டுட்டேன். ஒருவேளை முன்னவே தெரிஞ்சுருந்தா கூட நான் நடந்ததை யூகிச்சு இருக்கலாம்…” இப்போதும் அவளைக் காயப்ப்டுத்திய நொடியை எண்ணி அவன் அதிகமாய் காயப்பட்டான்.
யுக்தாவின் கையை அழுந்தப் பற்றிய விஸ்வயுகா, “மறுபடியும் எதுக்கு அது?” என சமன்செய்தவள், “அம்மா, அப்பா என்ன ஆனாங்க யுகி?” என்றாள்.
“கோர்ட்டுல கேஸ் போயிட்டு இருக்கு. டென் ஸ்டார் ஹோட்டல் ஊழல், இதுவரை செஞ்ச கரப்ஷன், கொலை முயற்சி, நீ குடுத்த கேஸ்ன்னு எல்லாமே அவங்களுக்கு தண்டனை வாங்கி குடுத்துடும். அண்ட், அஸ்வினிம்மா அந்த ஹோட்டலை கட்ட விடாம முடிஞ்ச அளவு தடுத்தாங்க. அதுக்கு அப்பறம் நானும் அதுக்கான தடையா கேஸ் போட்டு வச்சுருந்தேன், புறம்போக்கு இடத்தோட ஆக்கிரமிப்புன்னு… இப்போ அந்த ஹோட்டலை இடிக்க சொல்லி சம்மன் வந்துருக்கு. அங்க சில வருஷத்துக்கு முன்ன இருந்தவங்களை பத்தி டீப்பா விசாரிக்க சொல்லிருக்காங்க. போலீசும் எப்பவோ சிவகாமினால ஏமாற்றப்பட்டு சுனாமில செத்தவங்களைத் தோண்டி எடுத்துட்டு இருக்காங்க…” என்றவனின் இதழ்களில் லேசான விரக்தி புன்னகை.
“விசாரிச்சா நான் மட்டும் தான் மிஞ்சுவேன்…” வலியை மறைத்துக்கொண்டு தோளைக் குலுக்கினான்.
“யுகி!” விஸ்வயுகாவிற்கும் அவனது வலி பலமாய் தாக்கியது.
கண்ணைச் சிமிட்டி தன்னை அடக்கிக்கொண்டவன், “ஐ ஆம் ஓகே ஏஞ்சல்” என்றான்.
அவனுக்கும் அவளுக்குமான இழப்புகள் சாதாரணம் இல்லை தான். அதை எல்லாம் கடந்து, கடந்த காலத்தை கிட்டத்தட்ட மறக்கவே முயற்சி செய்கின்றனர்.
அவர்களைக் கண்டு மற்ற நால்வருக்குமே வேதனை எழுந்திட, ஷைலேந்தரி வேகமாக மனநிலையைச் சரி செய்யும்பொருட்டு, “இளங்கோவுக்கும் அவங்க குடும்பத்துக்கும் தண்டனை குடுத்துட்டாங்களா அத்தான்? அவன் ஏமாத்தி எதுவும் வெளில வந்துட போறான். விஷ ஜந்து” என்றாள்.
“ம்ம்… மங்கைக்கும் பானுப்பிரியாவுக்கும் லைஃப் சென்டன்ஸ் குடுத்து இருக்காங்க. இளங்கோ கோர்ட்டுக்குப் போற வழிலேயே தப்பிச்சுப் போக ட்ரை பண்ணுனான். சோ… என்கவுண்டர் பண்ண வேண்டியதா போய்டுச்சு” என வருத்தம் மிஞ்சும் பாவனையில் கூறியதில் குறிஞ்சி அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
“அடப்பாவி என்கிட்ட சொல்லவே இல்ல?” விஸ்வயுகா கன்னத்தில் கை வைக்க, “நீ பயந்துட்டன்னா” என்றான் குறும்பாக.
“அவன் மேல இருந்த கோபத்துக்கு சொல்லிருந்தா நானே வந்து சுட்டுருப்பேன்டா. கொஞ்ச நேரத்துல என்னைக் கதி கலங்க வச்சுட்டான்” எனப் பொறிந்தாள் விஸ்வயுகா.
மைத்ரேயன் தயக்கத்துடன் “என் அப்பா, அம்மா எங்க?” எனக் கேட்க,
அவனைப் பார்த்தவன், “அவங்க ஏஞ்சலை ஹர்ட் பண்ண பிளான் தான் போட்டாங்க. குற்றம் நடக்கலைன்னு விடுதலை செஞ்சுட்டாலும், என்னால அவங்களை விட முடியல மைத்ரா. இப்போதைக்கு அவங்க ப்ராபர்ட்டியை எல்லாம் சீஸ் பண்ண வச்சுட்டேன். உன் அப்பான்ற ஒரே காரணத்துக்காக இன்னும் எதுவும் செய்யல” என்றவனின் விழிகளில் இன்னும் சீறல் மிச்சமிருந்தது.
“என் அம்மா மேல இருக்குற கோபத்துல என்னவோ செஞ்சுட்டாங்க விடு யுகி…” என அவனைச் சமன்படுத்தினாள் விஸ்வயுகா.
“உண்மையாவே செஞ்சுருந்தா என்ன ஆகியிருக்கும் விஸ்வூ” மைத்ரேயனுக்கு கண் கலங்கிப் போனது.
உரையாடல்கள் சென்சிட்டிவாக செல்வதை உணர்ந்த குறிஞ்சி, “அடேய் நம்ம ஹனிமூன்க்கு வந்துருக்கோமா, கேஸ் விசாரணைக்கு வந்துருக்கோமா?” என்றாள் கடுப்பாக.
அதில் சிரித்த நந்தேஷ், “உங்க கூட ஒண்ணா இருந்தாலே எனக்கு லவ் மோட் வர மாட்டுது. இன்வெஸ்டிகேஷன் மோட்லயே இருக்கு மூளை” என்றதில், “ஆமா இவன் இன்வெஸ்டிகேட் பண்ணிக் கிழிச்சான். சோலைக்காட்டு பொம்மை வரைஞ்சு போட்டு தள்ள பார்த்தவன் தான நீயி” என ஷைலேந்தரி வாரியதில் அவர்களின் சிரிப்பொலி நீச்சல் குளத்தில் எதிரொலித்து, நிலவின் பிம்பம் தாங்கிய நீரையும் சலசலக்க வைத்தது.
எபிலாக்
மூன்று மாதங்கள் அழகுற நகர்ந்திருந்தது.
தீமா தீமா தீமா… தீமா தீமா…
பீமா பீமா பீமா பீமா பீமா…
“பீமா பேய்மான்னுட்டு… பரதேசி ஒரு பாட்டைக்கூட சரியா பாடாத” தமையனை ஷைலேந்தரி முறைக்க, அவனும் இணைந்து முறைத்தான்.
டெல்லியிலேயே புது கிளை திறந்திருந்தவர்கள், சென்னைக்கும் டெல்லிக்குமாக பயணம் மேற்கொண்டனர் அவ்வப்பொழுது.
என்னவோ மீண்டும் சென்னையில் இருக்க விஸ்வயுகாவிற்கு விருப்பமில்லை. பங்களாவில் சகல வசதிகளுடன் வாழ்ந்தவள் தான். ஆனால் இப்போது தன்னவனுடன் அந்தச் சிறிய அபார்ட்மென்ட்டில், நெருக்கமாக இருக்கவே விரும்பியது.
இருவரும் ஒன்றாக சமைத்து, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து, தங்களது அலுவலிலும் கவனம் செலுத்தி, அன்பில் நீராடி, முத்தத்தில் திண்டாடி, மோகத்தில் முத்துக்குளித்து காதலுக்கு வானமே எல்லை என்பது போல சிறகு விரித்துப் பறந்தனர்.
விஸ்வயுகாவை அனுப்பி விட்டு வருந்திய மூவருக்கும் அவளது பிரிவில் வேதனை எழுந்தாலும் பழகிக் கொண்டனர். யுக்தாவும், “உனக்கு சென்னைக்கு போகணும்ன்னா சொல்லு நான் டிரான்ஸ்பர் வாங்கிடுறேன்” என்றே சொல்லி வைத்திருந்தான்.
“என்கூட தனியா இருக்க கசக்குதா?” விழிகளில் நெருப்பு அம்பை எய்தவளை காதல் அம்பைத் தாக்கி வீழச் செய்திருந்தான் யுக்தா.
அவர்களது அலுவக திறப்பிற்காக தான் நந்தேஷ், குறிஞ்சி, மைத்ரேயன், ஷைலேந்தரி நால்வருமே வந்திருந்தனர். யுக்தா வழக்கு விஷயமாக சென்றிருப்பதால் அவன் மட்டும் வரவில்லை. ஆனால் அவனைப் பற்றிய செய்தி வெளிவந்தது.
டெல்லியின் புறநகர் பகுதிகளில் பதுங்கி இருந்த குற்றவாளிகள் யுக்தா சாகித்யன் தலைமையில் நடைபெற்ற என்கவுண்டரில் உயிரிழந்தனர்.
இதுவரை ஐம்பத்தைந்து குடும்பங்களை நாசம் செய்திருந்ததாக இறந்து போன குற்றவாளிகளின் மீது புகார் இருக்க, சட்டத்தில் மாட்டாமல் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தவர்கள் இப்போது என்கவுண்டரில் உயிர் துறந்தனர்.
யுக்தாவின் புகைப்படத்தை செய்தியில் கண்டதும், “கியூட்டு” என மனதினுள் கொஞ்சினாள் விஸ்வயுகா.
நந்தேஷ் தான், “இனியும் இந்த ரிஸ்க் எல்லாம் எடுக்கணுமா அவன்” என்றான் லேசான பயத்துடன்.
அவனை நிமிர்ந்து முறைத்த விஸ்வயுகா, “அவனோட கேரியர் ஸ்பேஸ்ல யாரும் தலையிட வேண்டாம். எனக்கும் சேர்த்து தான் இது” எனக் கடுமையாகக் கூறியதில் அவன் வாயை மூடிக்கொண்டான்.
குறிஞ்சி அதை அப்படியே அவனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி இருக்க, அவனிடம் மலர்ந்த முறுவல்.
அன்று இரவு அனைவருடனும் உணவு அருந்திக் கொண்டிருக்க, விஸ்வயுகா எப்போதும் விட அமைதியாக இருந்தாள்.
“என்ன ஆச்சு ஏஞ்சல். இன்னைக்கு ஆபிஸ் ஓப்பனிங்க்கு நான் வரலைன்னு கோபமா?”
“இம்பார்ட்டண்ட் ஒர்க் இருக்குன்னு சொல்லிருந்தா. நான் போஸ்ட்போன்ட் பண்ணிருப்பேனே?”
“எதுக்கு… இனி அதுக்குன்னு திரும்ப இவங்கல்லாம் அலையனும். அடுத்த ஒரு வாரத்துக்கு எனக்கும் வேலை அதிகம் ஏஞ்சல். எனக்காக உன் வேலையை கெடுத்துக்காத” என்றதில் அவளுக்கும் முறுவல் பிறக்க தலையாட்டினாள்.
சில நொடி அமைதிக்குப் பிறகு, “சேஃபா இரு யுகி. எனக்குப் பயமெல்லாம் இல்ல. ஆனா சொல்றது என் கடமை” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன், “உனக்காக என்னை கவனமா பார்த்துக்குறதும் என்னோட கடமை யுகா” என்றான் தீர்க்கமாக.
இரவு உணவு முடித்து மற்ற நால்வரும் விமானத்தில் சென்னைக்குப் பறந்து விட, அவர்களை வழியனுப்பி விட்டு தனது அறைக்கு வந்தவள், உடை மாற்ற எண்ணி வார்டரோபைத் திறந்து அதிர்ந்தாள்.
உள்ளே பல வகையான இரவு உடைகள், கண்ணைக் கூசும் விதமான அளவில் நிறைந்திருந்தது.
“என்னடா இது?” திருதிருவென விழித்தபடி விஸ்வயுகா கேட்க, “டெய்லி ஒன்னு வேணும்ல. இன்னும் அறுபத்து நாலு கலைல பல கலைகள் மிச்சம் இருக்குடி…” என்றான் குறும்புடன்.
“அச்சோ போடா” எனச் சிணுங்கியவளோ, அவனைக் கொள்ளைக் கொள்ளும் வேகத்துடன், தினம் ஒரு இரவு உடையில் அவனை மயங்கச் செய்தாள்.
—-
மைத்ரேயன் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான். “மைதா” தன் இரண்டு மாத கருவைத் தாங்கியபடி ஷைலேந்தரி அழைக்க, “ப்ச் போடி” என அவள் கையைத் தட்டி விட்டான்.
“இப்ப ஏன் கோபப்படுற. உன் அப்பா, அம்மாவை அப்படியே விட வேணாம். ஏதோ ஒரு ஆஸ்ரமத்துல இருக்காங்க இப்போ. இட்ஸ் நாட் ஃபேர். நீ ஒன்னும் அவங்களை கூட வச்சு பார்த்துக்க வேணாம். பட் கேர் பண்ணிக்க வேண்டியது நம்ம கடமை” என்றவளைத் தீயாக முறைத்தான்.
“இனி அவங்களே நினைச்சாலும் விஸ்வூவை ஒன்னும் செய்ய முடியாது. உனக்கும் அவங்கள அப்படியே விட்டதுல வருத்தம் இருக்க தான செய்யுது. விடுடா. அவங்களுக்கு ஒரு சான்ஸ் குடுக்கலாம்…” என வற்புறுத்தி அவர்களைத் தனியாக ஒரு வீட்டில் தங்க வைத்து, மாத செலவிற்கு பணமும் இருவருமாக கொடுத்து வந்தனர்.
தன் தவறை உணர்ந்த லிங்கமும் அகிலாவும் பிள்ளையைப் பிரிந்த ஏக்கத்தில் கண் கலங்கினர்.
அதன்பிறகே மைத்ரேயனுக்கும் மன நிம்மதி கிடைத்தது.
“தேங்க்ஸ்டி” ஷைலேந்தரியை அணைத்துக் கொண்டவனைத் தள்ளி விட்டவள், “போடா டொமேட்டோ. தேங்க்ஸ்ஸாம்ல” என உதட்டைச் சுளித்ததில் மைத்ரேயன் இன்னுமாக இறுக்கி அணைத்தான்.
—-
கண்ணாடி முன் நின்று அங்கும் இங்கும் திரும்பித் தன்னைப் பார்த்துக் கொண்டாள் குறிஞ்சி.
“அழகி ஆபிஸ்க்கு கிளம்பாம என்ன உன் அழகை நீயே ரசிச்சுட்டு இருக்க” நந்தேஷ் கிண்டலாகக் கேட்க, “நான் வெய்ட் போட்டுட்டேன்” என்றாள் உர்ரென்று.
“ம்ம்… நாள் ஆக ஆக உன் அழகு கூடிட்டே போகுது அழகி” என்றவனை முறைத்தவள், “நானே வெய்ட் போட்டுட்டேன்னு பீல் பண்றேன். இன்னும் கொஞ்ச நாள்ல இன்னும் நிறைய வெய்ட் போட்டுடுவேன்” என உதட்டைப் பிதுக்கினாள்.
“அதெல்லாம் வெய்ட் போட மாட்ட அழகி. கண்ட்ரோல் பண்ணிக்கலாம்” அவள் வாடலை தாங்க இயலாமல் அவன் கூற,
“அதெல்லாம் கண்ட்ரோல் பண்ண விடாதே உங்க பிள்ளை…” மீண்டும் உர்ரென்று கூறியதில், “இல்லடி…” எனச் சொல்ல வந்தவன் விழி விரித்தான்.
“ஹே என்ன சொன்ன?” மகிழ்வில் கத்தியே விட்டவனிடம், வெட்க புன்னகை சிந்தினாள்.
“என்னவோ ஏதோன்னு பயந்தே போய்ட்டேன்… ஐயோ” என அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன், “இதை மொதல்ல அம்மாட்ட சொல்லிட்டு வரேன்” என்று கீழே ஓடினான். சில நாட்களுக்கு முன் தான் அஸ்வினியும் சௌந்தரும் வெளிநாட்டில் இருந்து திரும்பி இருந்தனர். யுக்தாவும் விஸ்வயுகாவும் மட்டும் தனியாக இருப்பதில் வருத்தம் இருந்தும், அவர்களுடன் அவ்வப்பொழுது தங்கி வந்தனர்.
கணவனின் சந்தோஷத்தில் குறிஞ்சிக்கும் மனம் நிறைய, தனது வீட்டிற்கு சொல்லி விட்டுப் பின் யுக்தாவிற்கு அழைத்தாள்.
அலுவலகத்திற்குச் சென்ற விஸ்வயுகாவிற்கு காலையில் இருந்தே தலைவலி. அதில் பாதியில் வீட்டிற்கு வந்து விட்டவளுக்கு தலை சுற்றியது. சற்றே நிதானித்து அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்றவள், அதன்பிறகே கருவுற்றதை அறிந்து கொண்டாள்.
கண்ணைக் கரித்தது. கயவர்களிடம் காயப்பட்ட போதே உடலெங்கும் பலத்த அடி அவளுக்கு. அதன்பிறகு மாதவிடாயும் ஒழுங்கின்றி சோதிக்க, குழந்தைப்பேறின் வாசத்தை அறிய இயலுமா என்ற சந்தேகம் அதிகளவிலேயே இருந்தது.
அதை ஒரு முறை யுக்தாவிடமே கூறி விட்டாள். அவளது வலி அவனுக்கும் வலி கொடுத்தது.
ஆனாலும் நிதானமாக, “நமக்கு குழந்தை பிறந்தாலும் இல்லைன்னாலும் நம்ம ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம். ஒருவேளை அஸ்வினிம்மா இல்லைன்னா நான் என்ன ஆகிருப்பேனோ… என்னை மாதிரி பல்லாயிரம் குழந்தைங்க அனாதையா இருக்காங்க யுகா. நமக்குள்ள இனி எந்தக் குறையும் வேணாமே. உன் கண்ல தெரியிற வலி, என்னைக் கொல்லுதுடி. ப்ளீஸ்…” அவள் கையைப் பிடித்துக் கலங்கி விட்டான் யுக்தா.
அதில் பதறியவள், “ஹே நான் ஜஸ்ட் சொன்னேன்டா. நீ எதிர்பார்த்து இருக்கலாம்ல… அதான்… சரி இப்பவே அடாப்ட் பண்ணிக்கலாமா?” அவனைக் காயப்படுத்தி விட்ட அசட்டுத்தனத்தில் பதறினாள்.
“அப்படிலாம் எடுத்ததும் அடாப்ட் பண்ண முடியாது. நிறைய ப்ரொசீஜர் இருக்கு. இப்ப அவசரம் இல்ல. பர்ஸ்ட் நம்ம நமக்கான நேரத்தை திகட்ட திகட்ட அனுபவிக்கலாம் ஓகே வா ஏஞ்சல்” என்றதில் மென்புன்னகையுடன் அவன் மீது சாய்ந்தாள்.
இப்போதோ சந்தோஷத்தின் கூவலை அடக்க இயலாமல் திணறினாள். அவனுக்கும் அவளுக்குமாக ஒரு உயிர். நினைக்கவே தித்தித்தது.
உடனடியாக யுக்தாவிற்கு அழைக்க, அவன் ஹஸ்கி குரலில் “சொல்லு ஏஞ்சல். நீ ஓகே தான?” என்றான் எடுத்ததும்.
“ஏன் ஹஸ்கி வாய்ஸ்ல பேசுற. வேலைல இருக்கியா?” எனும்போதே “என்கவுண்டர்டி…” என்றான்.
“சரி சரி நீ பாரு. வைக்கிறேன்” என அழைப்பைத் துண்டிக்கும் போதே துப்பாக்கிச் சத்தம் கேட்டது. மனதை பிசைந்தாலும் சிறிது நேரத்தில் குறிஞ்சியின் அழைப்பு வந்தது.
“ஹாய் அண்ணி!” என்ற விஸ்வயுகாவிடம் அவள் விவரம் கூற, “வாவ்! காங்கிரேட்ஸ்” என மகிழ்ந்தாள்.
முதலில் யுக்தாவிடம் விஷயத்தைக் கூறும் பொருட்டு, விஸ்வயுகா அமைதி காக்க, “யுகி போன் பண்ணுனானா இப்ப ஓகே வா அவன்?” என்றாள் குறிஞ்சி.
புருவம் சுருக்கிய விஸ்வயுகா, “என்ன ஓகே? புரியல…” எனக் கேட்க, “நான் குட் நியூஸ் சொல்ல அவனுக்கு கால் பண்ணுனேன். அவனுக்கு கொஞ்சம் இஞ்சூரி ஆகிடுச்சு போல. ஹாஸ்பிடல்ல இருந்து பேசுனான். உனக்கு தெரியாதோ?” என சந்தேகமாகக் கேட்க, விஸ்வயுகாவின் முகம் சுண்டி விட்டது.
டெல்லியில் அமைந்துள்ள வசந்த் விஹாரில் வானுயர வளர்ந்திருந்தது லேக் வியூ அபார்ட்மெண்ட்.
இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்க, அவசரமாக காரை அதனிடத்தில் நிறுத்தி விட்டு, மின் தூக்கிக்காக காத்திருந்த யுக்தா தாமதமாவதை உணர்ந்து, இரண்டிரண்டு படிகளாக தாவி ஆறாவது மாடியை அடைந்தான்.
“ஏஞ்சல் கிட்ட மாட்டுனா சட்னி தான். நல்லவேளை அவள் வர்றதுக்குள்ள வீட்டுக்கு வந்தாச்சு” என ஆசுவாசத்துடன் வீட்டுக் கதவைத் திறந்தவன், ஹாலில் போடப்பட்டிருந்த சோஃபாவில் கால் மேல் போட்டபடி மிடுக்காக அமர்ந்திருந்த மனையாளைக் கண்டு அசடு வழிந்தான்.
“ஹாய் ஏஞ்சல். சீக்கிரம் வந்துட்ட. பிசினஸ் வுமன் பிசி இல்லையோ?” எனக் கேட்ட படி உள்ளே வந்தவன், “டூ மினிட்ஸ் குளிச்சுட்டு வந்துடுறேன்…” என்றபடி அறைக்குள் நுழைய போக,
“குண்டு பட்ட காயத்துல தண்ணி படாம குளி” சலனமற்று உரைத்தாள் விஸ்வயுகா.
சரட்டென் நின்று விட்டவன், “குறிஞ்சிஈஈஈ…” எனக் கோர்த்து விட்ட தோழியை உள்ளுக்குள் திட்டிக்கொண்டு,
முகத்தைத் தொங்க போட்டபடி அவளருகில் வந்து அமர்ந்தான்.
“எங்க குண்டு பட்டுச்சு?” அவனை உறுத்து விழித்தவாறு அவள் கேட்க,
“ஆர்ம்ல… ஜஸ்ட் லைட்டா உரசிட்டுப் போச்சு அவ்ளோ தான் ஏஞ்சல்” சிறுவன் போல விழிகளை நிமிர்த்துவதும் பின் தாழ்த்துவதுமாக கூறினான்.
யுக்தாவின் சட்டையைப் பற்றி இழுத்த விஸ்வயுகா, ஒவ்வொரு பட்டனாகக் கழட்டத் துவங்கினாள்.
“சின்ன அடி தான் யுகா” என்றவனின் இதழை ஒரு விரலால் அடக்கியவள், “வாயை மூடு” என அதட்டினாள்.
அவளே சட்டையைக் கழற்றி விட, கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உள் பனியன் அணிந்து இருந்தவனின் வலது புற ஆர்மில் கட்டுப் போடப்பட்டிருந்தது.
“சின்ன அடி தான்டி”
“வாயை மூடுன்னு சொல்றேன்ல… இதான் குண்டு உரசிட்டுப் போறதுக்கு அர்த்தமா?” சூடான விழியில் நீர் திரவமொன்று உதித்தது.
“நிஜமாவே ஏஞ்சல். கட்டு தான் இவ்ளோ பெருசா இருக்கு. ப்ராமிஸ்” எனத் தன் தலையில் தானே கை வைத்து சத்தியம் செய்தான்.
அவனை பதிலின்றி பார்த்தவள், “குளிச்சுட்டு வா! டின்னர் ரெடி பண்றேன்” என அடுக்களைக்குள் புகுந்து கொள்ள, அவள் பின்னே உரசியபடி வந்து நின்றவன், “ஏஞ்சலுக்கு கோபமா?” என்றான் அவள் செவிமடலில் மூச்சுக்காற்று தீண்ட.
அவள் அமைதியைத் தொடர, “பேசுடி கேக்குறேன்ல” என அவளைத் திருப்பினான்.
“என்ன பேச சொல்ற? கவனமா இருக்க மாட்டியா? நீ என்கவுண்டர் பண்ணு என்ன வேணாலும் பண்ணு. ஆனா உன்னை நீ கவனமா பார்த்துக்கோன்னு படிச்சு படிச்சு சொன்னேனா இல்லையா?” மூச்சிரைக்க கோபம் கொண்டவளின் விழிமொழிகளும் ரசனையைத் தந்தன ஆடவனுக்கு.
“நான் கவனமா தான்டி இருந்தேன். இனி இன்னும் கவனமா இருக்கேன் போதுமா?” என சமாதானம் செய்ய அவள் நாடியைப் பிடித்தான்.
அதனை வெடுக்கென தள்ளிவிட்டவள், “நான் போன் பண்ணுனதுல தான நீ டிஸ்ட்ராக்ட் ஆகிட்ட?” எனக் கண் கலங்க கேட்க,
“ஹே இல்லடி!” என்றவனை தீயாக முறைத்தவள், பொய் சொல்லாதடா சைக்கோ புருஷா. நீ என்கவுண்டர் பண்ண போறப்ப என்கிட்ட சொல்லிட்டுப் போ. அந்த டைம்ல நான் உனக்கு கால் பண்ணாம இருப்பேன். நீயும் கவனமா இருப்பல்ல. கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா என்ன ஆகியிருக்கும். குண்டடி பட்டு சாகுறதுக்கா என்னை டெல்லிக்கு கடத்திட்டு வந்த? என ஆவேசமாகப் பேசியபடியே அவன் பனியனைப் பிடித்து அருகில் இழுத்தாள்.
“அப்படி சொல்லிட்டுப் போனா, நீ டென்ஷனாவே இருப்ப ஏஞ்சல்” அவன் மறுக்க, “இதுக்கு அது எவ்ளோவோ பரவாயில்ல” என்றவள்,
“நீ வேணும்டா. புருஞ்சுதுல. நீ முழுசா இருக்கணும் என்கூட. நெக்ஸ்ட் என்கவுண்டர்ல உன்மேல சின்னதா துரும்பு பட்டுச்சுன்னு தெரிஞ்சுது… நானும் உன்கூட வரேன்னு கிளம்பி வந்துடுவேன்” எனக் கண்ணை உருட்டி மிரட்டினாள். அதில் அழுத்தமும் நிரம்பி இருக்க, அத்தனை நேரமும் அவளது காதலில் நனைந்து கொண்டிருந்தவன் இறுதி வரியில், “அடியேய்… உன்னைப் பார்ப்பேனா ரவுடிஸ ஷூட் பண்ணுவேனா? கொஞ்சம் உன் தண்டனையைக் குறைச்சுக்கோடி. உன் புருஷன் பாவம்” என்றபடி அவள் அதரத்தில் தன்னதரம் உரசினான்.
“நீ பாவம் இல்ல பாவி.”
“மீ வெரி புவர் புருஷன்டி” எனப் பாவமாய் உதட்டைப் பிதுக்கியவனைக் கண்டு அவள் மென்மையாய் புன்னகைக்க, அதில் தான் அவனும் இலகுவாக்க அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
அணைப்பில் கரைந்த நொடிகளுக்குப் பிறகு, “இன்னைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரலாம்னு நினைச்சேன். நீயா உன்னை பஞ்சராக்கிட்டு வந்துட்ட…” என அவள் விலகி நின்று கூற, யுக்தாவின் தடித்த இதழ்கள் புன்னகைக்க துடித்தது.
“நான் பஞ்சரானேன்னு எப்ப சொன்னேன்? இன்னைக்கு என்ன கலர் நைட் ட்ரெஸ் ஏஞ்சல்” என அவள் செவியோரம் கிசுகிசுத்தான்.
வெட்கம் முகத்தை நிறைக்க, “அடிபட்டு வந்துட்டு இவருக்கு ரொமான்ஸ் கேட்குது… போடா” எனத் தள்ளிவிட்டவளை நொடியில் அள்ளிக்கொண்டான்.
“யுகி… இன்ஜுரி ஆகிருக்குடா” என்றதைக் காதில் வாங்காதவனாக, “நைட் ட்ரெஸ் நான் தான் சூஸ் பண்ணப் போறேன் இன்னைக்கு…” என குறும்பு மின்னக் கூறியவன் அவளைக் கையில் வைத்தபடியே வார்டரோபை திறந்தான்.
“ஐயோ யுகி இறக்கி விடு. நான் இதை சர்ப்ரைஸ்னு சொல்லல…” அவளுக்கு அடிவயிற்றில் பெரும் பிரளயமே நிகழ்ந்தது.
“வேற என்னவாம்? ம்ம்…” மேலுதட்டை மடித்து யுக்தா கேலிநகையுடன் கேட்க, பூ முகம் சிவந்து விட்டது.
அதற்குள் தேடும் பாவனையுடன் ஒரு இரவு உடையைத் தேர்ந்தெடுத்தவன், “இது ஓகே வா ஏஞ்சல்” எனக் கண் சிமிட்டிக் கேட்க,
அதனைக் கண்டு திருதிருவென விழித்தாள்.
“இத போடுறதுக்கு போடாமயே இருக்கலாம்” என முணுமுணுத்தவள், “விடுடா” எனக் கூச்சம் தாளாமல் துள்ளினால் அவனுக்கு வலிக்குமென்று விலகவும் முயற்சிக்காமல் இருக்க, “இது செம்மயா இருக்கும்டி ப்ளீஸ்ஸ்ஸ்” என எப்போதும் போல கெஞ்சல் பாணியில் அவளைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.
முத்தத்தின் முடிவிலிகளில் இருவரும் மூழ்கியபிறகு, “எப்பவும் எனக்கு மெசேஜ் பண்ணிட்டு தான கால் பண்ணுவ ஏஞ்சல். இன்னைக்கு என்ன கால் பண்ணிட்ட. எதுவும் முக்கியமான விஷயமா?” எனக் கேட்டவன், அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான்.
“ம்ம்… உன் இரத்த சொந்தத்துல ஒருத்தவங்க உன்னைத் தேடி வரப்போறாங்க…” அவனது கன்னத்தை வருடியபடி முறுவலுடன் கூறினாள் விஸ்வயுகா.
புருவம் இடுங்க பார்த்த யுக்தா, “என் இரத்த சொந்தமா? அது யாரு?” என்றான் புரியாமல்.
பக்கென சிரித்த விஸ்வயுகா, “நீ வெளில தான்டா சிபிஐ வீட்டுக்குள்ள வந்துட்டா காதல் புத்தியை மறைச்சுடுது” எனக் கிண்டல் செய்ய, சில நொடிகள் யோசித்தவன் பின் படக்கென எழுந்து அமர்ந்தான்.
“யுகா?” கேள்வியாய் அவளைப் பார்க்க,
“யுகாக்கும் யுகிக்கும் இடைல குட்டி யுக்ஸ் பேபி வரப்போறாங்க” எனக் கண்சிமிட்டியவளை உணர்வுப் பெருக்குடன் ஏறிட்டான்.
“நிஜமா?” அவள் வயிறை தடவிக்கொடுத்தபடி யுக்தா கேட்டதில்,
“எல்லாமே நிஜம் தான்…” என அவனை இழுத்து மார்போடு பொத்தினாள்.
“ஹேப்பி?” என அவனைப் போலவே கேட்க,
“உன்கூட எப்பவுமே நான் ஹேப்பி தான்டி. இரத்த சொந்தம் இருந்தாலும் இல்லைன்னாலும், இதயத்துல கலந்த சொந்தம் நீ இருக்கியே. ஆனாலும் இப்ப என் யுக்ஸ் பேபிக்காக வெயிட்டிங். அப்பறம் அவங்களும் கோச்சுப்பாங்க…” என அவளது வயிறை கிள்ளி முத்தமிட்டவனை வாரி அணைத்துக் கொண்டாள் யுகியின் ஏஞ்சல்.
முற்றும்
மேகா