Loading

“ஹெலோ மிஸ்டர் பிரணவ்… கே சே ஹோ? (எப்படி இருக்கீங்க?)” என திரையில் தெரிந்த மிஸ்டர் மெஹெரா புன்னகையுடன் கேட்கவும், “மே அச்சா ஹு மிஸ்டர் மெஹெரா… (நான் நல்லா இருக்கேன்)” எனப் புன்னகையுடன் பதிலளித்தான் பிரணவ்.

 

மிஸ்டர் மெஹெரா, “அச்சா… அச்சா… யே கோன் ஹே? (நல்லது… நல்லது… இவர் யார்?)” எனக் கேட்டார் அனுபல்லவியைக் காட்டி.

 

இவ்வளவு நேரமும் ஏதோ ஊமைப் படம் பார்ப்பது போல் அவர்கள் பேசுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த அனுபல்லவி திரையில் தெரிந்தவர் தன்னைக் காட்டி பிரணவ்விடம் ஏதோ கூறவும் பிரணவ்வைப் பார்த்து கண்களை விரித்தாள். 

 

அவளின் முக பாவனைகள் சிரிப்பை வரவழைத்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாத பிரணவ், “யே மிஸ் அனுபல்லவி ஹே… வோ வஹீ ஹே ஜோ இஸ் ப்ராஜெக்ட் மே சபீ கா மார்க்தர்ஷன் கர்னே வாலே ஹே… (இவர் மிஸ் அனுபல்லவி… இந்த ப்ராஜெக்ட்டில் அனைவரையும் வழி நடத்தப் போவது இவர் தான்)” என அனுபல்லவியை அறிமுகப்படுத்தவும், “ஹெலோ மிஸ் அனுபல்லவி…” என அனுபல்லவியைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தார் மிஸ்டர் மெஹெரா.

 

அனுபல்லவி, “ஹெலோ சார்…” எனப் பதிலளிக்கவும் லேசாகத் தொண்டையை செறுமிய பிரணவ், “தென் லெட்ஸ் டிஸ்கஸ் அபௌட் தி ப்ராஜெக்ட் மிஸ்டர் மெஹெரா…” என்கவும் மிஸ்டர் மெஹெரா ப்ராஜெக்ட் பற்றிய தன் விருப்பங்களையும் வேண்டுகோள்களையும் முன் வைத்தார்.

 

அனுபல்லவிக்கு புரியும் நோக்கில் ஆங்கிலத்திலேயே கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

பிரணவ் அனுபல்லவிக்கு கண் காட்டவும் அனுபல்லவி தன்னால் முடியுமா என்ற விதமாக அவனைத் தயக்கமாக ஏறிட, பிரணவ் கண்களை மூடித் திறந்து அவளுக்கு தைரியம் ஊட்டவும் ஆழப் பெருமூச்சு விட்டுக் கொண்ட அனுபல்லவி மிஸ்டர் மெஹெரா கூறியவைகளுக்கு தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தாள்.

 

ஏற்கனவே பிரணவ் அந்த பிராஜெக்ட் விஷயமாக அவளுக்கு தேவையான தெளிவுகளை வழங்கி இருக்க, அதன் மூலம் முதன் முறையாக இருந்தாலும் சிறப்பாவே தன் கருத்துக்களை எடுத்துரைத்தாள் அனுபல்லவி.

 

மெஹெராவிற்கும் அவள் கூறிய யோசனைகள் பிடித்து விட, “க்ரேட் மிஸ் அனுபல்லவி… க்ரேட்… ஐம் ரியலி இம்ப்ரஸ்ட் வித் யுவர் ஐடியாஸ்… மிஸ்டர் பிரணவ்… லெட்ஸ் கன்ட்னியூ திஸ் ப்ராஜெக்ட் வித் ஹர் ஐடியாஸ்…” என்கவும் பிரணவ்விற்கும் அனுபல்லவிக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

 

அதுவும் அனுபல்லவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிரணவ் தன்னை நம்பி ஒப்படைத்த முதல் வேலையின் ஆரம்ப கட்டத்திலேயே அவன் மனதைக் கவர்ந்ததை எண்ணி அவ்வளவு ஆனந்தம்.

 

இன்னும் சிலவற்றை பேசி முடித்து விட்டு ஜூம் மீட்டிங் நிறைவு பெற, புன்னகை முகத்துடன் நின்ற அனுபல்லவியின் பக்கம் திரும்பிய பிரணவ், “கங்ரேட்ஸ் மிஸ் பல்லவி…” என அவளை நோக்கி கரம் நீட்டினான்.

 

“தேங்க்ஸ் சார்…” என நீட்டி இருந்த அவனின் கரத்தைப் பற்றிக் கூறினாள் அனுபல்லவி.

 

அனுபல்லவியின் மலர்ந்த முகத்தையே ஒரு நிமிடம் தன்னை மறந்து ரசித்த பிரணவ் இன்னும் பற்றிய அவளின் கரத்தை விடாமல் இருக்கவும், “சார்…” என அனுபல்லவி தன் கரத்தை அவனின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றபடி அழைக்கவும் தன்னிலை அடைந்த பிரணவ் அவசரமாக அவளின் கரத்தை விட்டான்.

 

பிரணவ், “சா…சாரி சாரி பல்லவி… நான் வேற ஏதோ…” என ஏதோ கூற வரவும், “இட்ஸ் ஓக்கே சார்…” என்றாள் அனுபல்லவி புன்னகையுடன்.

 

“அப்புறம்… மிஸ்டர் மெஹெரா அவ்வளவு ஈசியா எந்த டீலிங்குக்கும் ஒத்துக்க மாட்டார்… ஆனா உங்க ஃபர்ஸ்ட் ட்ரைலயே அவரை இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க… ரியலி சூப்பர்… சீக்கிரம் இந்த ப்ராஜெக்ட்டையும் அதே போல நல்லா செஞ்சி முடிப்பீங்கன்னு நம்புறேன்…” என பிரணவ் கூற, “ஷியுர் சார்… நான் கிளம்பட்டுமா?” என அனுபல்லவி அனுமதி கேட்கவும் சரி எனத் தலையசைத்தான் பிரணவ்.

 

************************************

 

மறுநாளில் இருந்து ப்ராஜெக்ட் வேலைகள் துரிதமாக நடைபெற்றன.

 

அனுபல்லவியின் தலைமைத்துவம் குழுவில் இருந்த அனைவரையும் கவர்ந்து விட, பிரணவ்விற்கே அவளை நினைத்து பிரமிப்பாக இருந்தது.

 

அர்ச்சனா மாத்திரம் அனுபல்லவியைப் பழி வாங்க எப்போது வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தாள்.

 

அதற்கு ஏற்றதாக சரியான வாய்ப்பும் வெகு விரைவில் அவளுக்கு கிட்டியது.

 

குழுவிலுள்ள ஒவ்வொருவருமே ப்ராஜெக்ட் வேலைகளை பிரித்து செய்ய, இறுதியில் அனுபல்லவி அதனை சரி பார்த்து பிரணவ்விடம் ஒப்படைப்பாள்.

 

அன்றும் அது போலவே ப்ராஜெக்ட் சம்பந்தமான ஃபைல்களை மறுபரிசீலனை செய்து விட்டு பிரணவ்விடம் ஒப்படைக்கச் சென்றாள்.

 

அப்போது பிரணவ் அறையில் இருக்காமையால் ஃபைல்களை அவனின் மேசை மீது வைத்து விட்டு வெளியேற, அர்ச்சனா அவ் அறைக்குள் நுழைந்தாள்.

 

அனுபல்லவி வைத்த ஃபைல்களுக்கு பதிலாக தான் கொண்டு வந்த ஃபைல்களை மாற்றி வைத்தவளின் முகத்தில் ஒரு குரூரச் சிரிப்பு.

 

சற்று நேரத்திலே ஆகாஷுடன் அவ் அறைக்கு வந்தான் பிரணவ்.

 

“நாளைக்கு மார்னிங் போர்ட் மீட்டிங்கை அரேன்ஜ் பண்ணிடுங்க… அப்புறம் அப்பா மெய்ன் ப்ரான்ச்ல ஏதோ ப்ராப்ளம்னு சொன்னார்… அது என்னன்னு பாருங்க… ப்ராஜெக்ட் வர்க் எந்த அளவுல போய்ட்டு இருக்கு?” எனப் பிரணவ் தன் இருக்கையில் அமர்ந்தவாறு கேட்க, “டன் பாஸ்… நான் மூர்த்தி சார் கூட பேசுறேன்… டீம்ல எல்லாருமே ரொம்ப ஃபாஸ்ட் அன்ட் ஸ்மார்ட்டா வர்க் பண்றாங்க பாஸ்…” என்றான் ஆகாஷ்.

 

பிரணவ், “குட்… இந்த ப்ராஜெக்ட் சக்சஸா முடிஞ்சா அப்புறம் ஓவர்சீஸ்ல கூட எங்க கம்பனிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்…” என்றான் மகிழ்வுடன்.

 

“ஆமா பாஸ்… நீங்க கரெக்டான ஆள் கிட்ட தான் இந்த ப்ராஜெக்டை மேனேஜ் பண்ண கொடுத்து இருக்கீங்க… உங்க அளவுக்கே மிஸ் அனுபல்லவியும் இந்த ப்ராஜெக்டுக்காக அவ்வளவு சின்சியரா வர்க் பண்றாங்க…” என்கவும் பிரணவ்வின் முகத்தில் மெல்லியதாக புன்னகை அரும்பியது.

 

பின் ஆகாஷ் யாருக்கோ கைப்பேசியில் அழைத்தவாறு வெளியேறியவன் யாருடனோ மோதி நின்றான்.

 

“ஸ்ஸ்ஸ்…” எனத் தலையைத் தேய்த்தபடி நிமிர்ந்த சாருமதி தனக்கு முன்னே கைப்பேசியில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த ஆகாஷைப் பார்வையாலே எரித்தவள் அவன் காதில் வைத்திருந்த கைப்பேசியைப் பறித்து அழைப்பைத் துண்டித்தாள்.

 

திடீரென நடந்த இச் செயலில், “ஹேய்…” எனக் கோபமாகத் திரும்பிய ஆகாஷ் தன்னையே முறைத்துக் கொண்டிருந்த சாருமதியைக் கேள்வியாய் நோக்கினான்.

 

“யோவ்… எங்கயா பார்த்துட்டு வர? கண்ணு என்ன பிடரிலயா இருக்கு? பனை மரத்துக்கு பாதி வளர்ந்து இருக்க… முன்னாடி வரவங்க எல்லாம் எங்க கண்ணுக்கு தெரிய போகுது? நெட்ட கொக்கு…” என சாருமதி எகிற, “ஏய்… யாரைப் பார்த்து டி நெட்ட கொக்குன்னு சொன்ன? நாங்க எல்லாம் கரெக்ட் ஹைட்ல தான் இருக்கோம்… நீ தான் டென்த் ஸ்டேன்டுக்கு மேல வளராம விட்டுட்ட போல… குட்டச்சி… குட்டச்சி…” என்றான் ஆகாஷ் கேலியாக.

 

சாருமதி, “உன்ன… உன்ன… நான் குட்டச்சியா? நான் குட்டச்சியா?” எனக் கோபமாகக் கேட்டவள் ஆகாஷின் கரத்தை இழுத்து பற்தடம் தெரிய கடித்து வைத்தாள்.

 

ஆகாஷ், “ஆஹ்… இரத்தக் காட்டேரி… வலிக்கிது விடு டி…” என வலியில் கத்தவும் அந்தத் தளத்தில் இருந்த அனைவரின் பார்வையும் அவர்கள் பக்கம் திரும்ப, சத்தம் கேட்டு அங்கு வந்த அனுபல்லவி, “ஹேய் சாரு… சாரு… என்ன டி பண்ற? விடு டி அவரை…” என சாருமதியை தன் பக்கம் இழுக்கவும் ஆகாஷின் கரத்தை விட்டாள் சாருமதி.

 

சாருமதி கோபத்தில் மூச்சு வாங்க, “என்ன பண்ற சாரு? அவர் பிரணவ் சாரோட பீ.ஏ.” என அனுபல்லவி கடிந்து கொள்ள, “அதுக்காக? என்ன வேணாலும் சொல்லுவாரா?” எனச் சாருமதி கோபமாகக் கேட்க, “நீ தான் டி முதல்ல என் கூட சண்டைக்கு வந்த…” என்றான் ஆகாஷ் சாருமதியின் முகம் முன் விரல் நீட்டி.

 

“யூ… யூ… ஹவ் டேர் யூ? எப்படி நீ என்னை டி போட்டு பேசலாம்?” என சாருமதி மீண்டும் ஆகாஷிடம் சண்டைக்குச் செல்ல, “இங்க என்ன நடந்துட்டு இருக்கு? இது என்ன ஆஃபீஸா? இல்ல ஃபிஷ் மார்க்கட்டா?” என்ற பிரணவ்வின் கோபமான குரலில் அவ் இடமே அமைதி ஆனது.

 

பிரணவ், “ஆகாஷ்… நீங்க இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நான் சொன்ன வேலையை செஞ்சீங்களா? இல்லையா?” எனக் கடுமையாகக் கேட்க, “சாரி பாஸ்… இதோ இப்போ போய் பார்க்குறேன்…” என்ற ஆகாஷ் போகும் போது சாருமதியைப் பார்த்து முறைத்து விட்டு போனான்.

 

ஆஃபீஸில் இருந்த மற்றவர்கள் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, “இங்க என்ன ஃபேஷன் ஷோவா நடக்குது?” எனப் பிரணவ் கோபமாகக் கேட்கவும் அவசரமாக அனைவரும் தம் வேலையைப் பார்க்க செல்ல, அவர்களைத் தொடர்ந்து செல்லப் பார்த்த அனுபல்லவியைத் தடுத்த பிரணவ், “மிஸ் பல்லவி‌… நீங்க எங்க போறீங்க? இம்மீடியட்டா என் கேபினுக்கு வாங்க…” என்று விட்டு சென்றான்.

 

அவனின் குரலில் இருந்த கடுமையே அனுபல்லவிக்கு உள்ளுக்குள் உதறலைக் கொடுத்தது.

 

அனுபல்லவி தயக்கமாக உள்ளே நுழைய, அவளின் மேல் சில ஃபைல்களை தூக்கி வீசினான் பிரணவ்.

 

பயமும் அதிர்ச்சியுமாக பிரணவ் வீசிய ஃபைல்களை அனுபல்லவி கையில் எடுக்க, “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? கொஞ்சம் பாராட்டினா போதுமே‌… உடனே தலைல ஏறி உட்கார்ந்துடுவீங்க…” என ஆத்திரத்தில் கத்தினான் பிரணவ்.

 

“சார்… எ…என்னாச்சு?” எனக் கேட்டாள் அனுபல்லவி தயக்கமாக. 

 

“பாருங்க என்ன பண்ணி வெச்சி இருக்கீங்கன்னு… எல்லா கோடிங்குமே தப்பு தப்பா இருக்கு… ரீசெக் பண்ணிட்டு சப்மிட் பண்ண மாட்டீங்களா?” என பிரணவ் கடிந்துகொள்ள, அவசரமாக தன் முன் பிரணவ் தூக்கிப் போட்ட ஃபைல்களை புரட்டிப் பார்த்தாள் அனுபல்லவி.

 

அதில் இருந்தவற்றைக் கண்டு அதிர்ந்த அனுபல்லவி, “சார்… இது… நான் எல்லாம் கரெக்ட்டா செக் பண்ணிட்டு தான் உங்க டேபிள்ல கொண்டு வந்து வெச்சேன்… இது நான் வெச்ச ஃபைல் இல்ல சார்…” என்க, “அப்போ… நான் தான் எல்லாம் மாத்தி வெச்சேனா? இல்ல நான் பொய் சொல்றேனா?” எனக் கேட்டான் பிரணவ் கோபமாக.

 

அனுபல்லவி, “ஐயோ இல்ல சார்… இதுல என் தப்பு எதுவும் இல்லன்னு சொல்றேன்… நான் கோடிங் எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணேன்…” என தன் பக்கம் உள்ள நியாயத்தை விளக்கப் பேச, அது பிரணவ்வின் கோபத்தை இன்னும் தூண்டி விட்டது.

 

பிரணவ், “ஷட் அப்… ஜஸ்ட் ஸ்டாப் யுவர் நான்சன்ஸ்… எதுவும் பேச வேணாம்… இன்னைக்கே இதெல்லாம் கரெக்ட் பண்ணி என் கிட்ட சப்மிட் பண்ணணும்… யாரோட ஹெல்ப்பும் இல்லாம நீங்க மட்டும் தனியா…” எனக் காட்டுக் கத்தலாய் கத்த, “பட் சார் ஆல்ரெடி லேட் ஆகிடுச்சு… இன்னைக்கே எப்படி?” எனக் கேட்டாள் அனுபல்லவி.

 

“ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் யுவர் ப்ளடி டாக்… ஜஸ்ட் டூ வட் ஐ சே… இன்னைக்கே இதெல்லாம் முடிச்சு கொடுத்துட்டு தான் நீங்க கிளம்பணும்… எத்தனை மணி ஆகினாலும் சரி…” எனப் பிரணவ் கட்டளை இடவும் தலை குனிந்த அனுபல்லவி வேறு வழியின்றி அவன் கூறியதை செய்து முடிக்க அங்கிருந்து சென்றாள். 

 

ஏற்கனவே ஆஃபீஸில் இருக்கும் அனைவரும் வேலை முடிந்து வீடுகளுக்கு கிளம்பி இருக்க, ஓரிரண்டு பேர் மட்டுமே காணப்பட்டனர்.

 

சாருமதி அனுபல்லவிக்காக காத்திருக்க, கவலை தோய்ந்த முகத்துடன் தன்னை நோக்கி வந்த தோழியைப் புரியாமல் நோக்கியவள், “என்னாச்சு அனு? ஏன் டல்லா இருக்க? கிளம்பலாமா?” எனக் கேட்டாள்.

 

“இல்ல சாரு… நீ கிளம்பு… எனக்கு கொஞ்சம் வர்க் இருக்கு…” என அனுபல்லவி சோகமாகக் கூறவும், “இன்னுமா? ஓக்கே அப்போ நானும் இருந்து உனக்கு ஹெல்ப் பண்றேன்…” என சாருமதி கூறவும் பிரணவ் கூறியதை எண்ணி பல்லைக் கடித்த அனுபல்லவி தன்னை சமன் படுத்திக்கொண்டு, “ம்ஹ்ம்… நீ போ சாரு… இது நான் பண்ண வேண்டிய வேலை… முடிச்சிட்டு வரேன்…” என்றாள்.

 

சாருமதி, “நீ மட்டும் எப்படி தனியா வர போற? ஆஃபீஸ்ல கூட யாருமே இல்ல…” என்க, “எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல டி… நான் சீக்கிரம் எல்லா வர்க்கையும் முடிச்சிட்டு பஸ்ல வரேன்… இல்லன்னா டாக்சி புக் பண்ணி வரேன்… நீ என்னை நினைச்சி ஃபீல் பண்ணாதே… போய்ட்டு வா…” என அனுபல்லவி மறுக்கவும், “நிஜமா தான் சொல்றியா? உன்னால முடியுமா?” என தோழியை எண்ணி வருத்தமாகக் கேட்டாள்.

 

அவளுக்கு கண்களை மூடித் திறந்து அனுபல்லவி ஆறுதல் அளிக்கவும் மனமேயின்றி அங்கிருந்து கிளம்பிய சாருமதி தனக்கு நேராக வந்து கொண்டிருந்தவனைக் கவனிக்காது அவன் மீது மோதவும் அவனின் கரத்தில் இருந்த ஃபைல்கள் அனைத்தும் கீழே விழுந்தன.

 

“ப்ச்… சாரி சார்… சாரி சார்…” என சாருமதி அவன் யார் என்று கூட கவனிக்காது அவசரமாக குனிந்து கீழே விழுந்து கிடந்த ஃபைல்களை எடுத்து அடுக்க, அவளுக்கு உதவியாக குனிந்து ஃபைல்களை எடுத்தவன், “கண்ணு எங்க பிடரிலயா இருக்கு குட்டச்சி?” என்றான் கேலிக் குரலில்.

 

அதிர்ச்சியுடன் தலை நிமிர்ந்து பார்த்த சாருமதி தனக்கு முன் தன்னை நக்கலான பார்வையுடன் நோக்கிக் கொண்டிருந்த ஆகாஷைக் கண்டு கோபத்தில் பல்லைக் கடித்தாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்