Loading

வலியில் துடித்துக்கொண்டிருந்த பிரணவ்வை அழைத்துக்கொண்டு ஆகாஷ் மருத்துவமனை செல்லப் பார்க்க, பிரணவ்வோ, ” வீட்டுக்கு போகலாம் ஆகாஷ்…” என்றான் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து கொண்டு.

 

ஆகாஷ், “பட் பாஸ் நீங்க…” என ஏதோ கூற வர, “சொன்னத செய்ங்க ஆகாஷ்…” என்ற பிரணவ்வின் அழுத்தமான குரலில் வேறு வழியின்றி பிரணவ் தங்கியிருந்த வீட்டிற்கு காரை செலுத்தினான் ஆகாஷ்.

 

விழி மூடிக் கிடந்தவனின் மனமோ அந்த முகம் அறியாப் பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

 

வீட்டை அடைந்ததைக் கூட அறியாது சிந்தனைகளுக்கு மத்தியில் உழன்று கொண்டிருந்த பிரணவ்வைக் கலைத்தது ஆகாஷின் குரல்.

 

“பாஸ்… வந்திடுச்சி…” என்கவும் இமை திறந்து சுற்று முற்றும் பார்த்த பிரணவ் காரிலிருந்து இறங்கிக்கொள்ள, அவனைப் பின் தொடர்ந்து வரப் பார்த்த ஆகாஷைத் தடுத்தவன், “நீங்க ஆஃபீஸ் கிளம்புங்க ஆகாஷ்… ஐம் ஓக்கே… ப்ராஜெக்ட் சம்பந்தமா டீம் மெம்பர்ஸுக்கு ஹெல்ப் பண்ணுங்க…” எனக் கட்டளை இடவும் சரி எனத் தலை அசைத்து விட்டு ஆகாஷ் கிளம்பினான்.

 

சோர்வாக வீட்டினுள் நுழைந்த பிரணவ் தலைவலி தாங்காது மாத்திரை சாப்பிட்டவன் கொஞ்சம் நேரம் உறங்கலாம் என தன் அறைக்குச் சென்றான்.

 

உடை மாற்ற தன் உடைகள் அடங்கி இருந்த பையைத் திறந்தவனின் பார்வையில் பட்டது அந்த இளமஞ்சள் நிற துப்பட்டா.

 

கண்கள் சுருக்கி அதனை யோசனையுடன் பார்த்தவாறே வந்து கட்டிலில் அமர, அனுபல்லவியின் முகம் தானாகவே அவனின் மனக்கண் முன் வந்து சென்றது.

 

“யார் அவள்? இந்த துப்பட்ட்வோட சொந்தக்காரி யார்? அவ முகம் ஏன் எனக்கு ஞாபகம் வரது இல்ல? ஏன் பல்லவியைப் பார்க்கும் போது மட்டும் எனக்கு ஏதோ ஒரு உணர்வு தோணுது?” எனப் பிரணவ் தன்னையே கேட்டுக்கொள்ள, அவனுக்கு தலைவலி அதிகரித்தது தான் மிச்சம்.

 

அப்படியே கட்டிலில் சாய்ந்தவன் அந்த துப்பட்டாவினால் முகத்தை மூடிக்கொண்டு உறக்கத்தைத் தழுவினான்.

 

************************************

“எல்லா நியூஸ் சேனல்ஸ், சோசியல் மீடியாஸ்லயும் அந்த பிரணவ் பத்தின நியூஸை கொடுக்கட்டுமா சார்?” என அவனின் பீ.ஏ. கேட்கவும் விஷமமாகப் புன்னகைத்தபடி மறுப்பாகத் தலையசைத்தவன், “இப்பவே வேணாம்… எதுக்கும் சரியான நேரம்னு ஒன்னு இருக்கு… சரியான சமயத்துல அவன பழி வாங்குவேன் நான்… அது சாவை விட கொடுமையானதா இருக்கும்…” என்றான் அவன் குரூரமாக.

 

************************************

மறுநாள் காலையில் வழமையை விட விரைவாக எழுந்த அனுபல்லவி அவசரமாகத் தயாராகிக் கொண்டிருக்க, அப்போது தான் கண் விழித்த சாருமதி தன் தோழியைப் புரியாமல் பார்த்தாள்.

 

சாருமதி, “இவ்வளவு சீக்கிரமா எங்க கிளம்பிட்டிருக்க அனு?” எனக் கேட்கவும், அவள் பக்கம் திரும்பாமலே, “ஆஃபீஸ் டி… நான் கிளம்புறேன்…” என்ற அனுபல்லவி பேக்கை மாட்டிக்கொண்டு வெளியே ஓடினாள்.

 

நேராக பேரூந்து நிலையத்தை நோக்கி ஓடியவளின் போதாத நேரம் அவ்வளவு காலையில் எந்த பேரூந்துமே வரவில்லை. 

 

“ப்ச்…” என சலித்துக்கொண்டே பாதையில் வரும் வாகனங்களை நோக்கி லிஃப்ட் கேட்டு கரத்தை நீட்ட, அவளுக்கு முன் கருப்பு நிற ஆடி கார் ஒன்று வந்து நின்றது.

 

அனுபல்லவி, “தேங்க்ஸ் சார்… என்னை எம்.எல்‌. கான்ஸ்ட்ரக்ஷன் கிட்ட ட்ராப் பண்ணிடுங்க…” என காரில் ஏறிக்கொண்டே கூற, இன்னும் காரை இயக்காமல் இருக்கவும் ட்ரைவர் சீட்டின் பக்கம் திரும்பியவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

 

காலையில் சீக்கிரமே எழுந்து தயாராகி வந்ததே பிரணவ்வின் உடல்நிலையைப் பற்றி அறிந்து கொள்ளத் தான். இப்போது கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல பிரணவ்வே அவள் முன் வந்து நிற்கவும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தவள், “சா…” என ஏதோ கூற வர, பிரணவ் காரை வேகமாக இயக்கவும் தான் தன்னிலை அடைந்தாள் அனுபல்லவி.

 

அனுபல்லவி, ‘ப்ச் அனு… என்ன டி லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க? அவர் உன்ன பத்தி என்ன நினைப்பார்?’ என தலையில் அடித்தபடி மனதில் தன்னையே கடிந்துகொள்ள, அவளின் செய்கைகளை கடைக் கண்ணால் பார்த்து விட்டு மீண்டும் சாலையிலேயே பார்வையைப் பதித்தான் பிரணவ்.

 

“சாரி சார்… அது… நீங்கன்னு தெரியல… நான் வேற யாரோன்னு நினைச்சிட்டேன்…” என அனுபல்லவி தயங்கியபடி கூறவும் பிரணவ்விடமிருந்து, “ம்ம்ம்…” என்ற பதில் மட்டுமே வந்தது.

 

அனுபல்லவி, “சரியான உம்மனா மூஞ்சி… கொஞ்சம் வாய திறந்து பேசினா தான் என்னவாம்?” என நேரே பார்த்தவாறு முணுமுணுக்க, அது பிரணவ்வின் செவிகளை எட்டினாலும் அவன் பதில் உரைக்கவில்லை.

 

பிரணவ்வின் கார் எம்.எல். கான்ஸ்ட்ரக்ஷனை அடையவும் காரைப் பார்க் செய்தவன் அனுபல்லவி இறங்கும் வரை காத்திருக்க, அவளோ வாய் வரை வந்த கேள்வியைக் கேட்காமல் கார்க் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள்.

 

அப்போது தான் பிரணவ் அவளின் சிவந்திருந்த மணிக்கட்டை அவதானித்தான்.

 

நேற்று அவன் வலியில் துடித்த போது அனுபல்லவியின் கரத்தை அழுத்திப் பிடித்ததால் ஏற்பட்ட அடையாளம் எனப் புரிந்து கொண்டவன் அவசரமாக இறங்கி உள்ளே சென்றான்.

 

“ச்சே… இவ்வளவு நல்ல சான்ஸ் கிடைச்சும் அவர் கூட பேசி அவருக்கு இப்போ எப்படி இருக்குன்னு கேட்ட முடியாம போச்சே…” என அனுபல்லவி சலித்துக்கொள்ள, ‘ஆமா… வாயை திறந்து பேச தைரியம் இல்ல… இப்போ இங்க வந்து ஒவ்வொன்னு சொல்ற…’ என வழமை போல் அவளின் மனசாட்சி காரி உமிழ்ந்தது.

 

அனுபல்லவி தன் இடத்தில் வந்து அமர்ந்து ப்ராஜெக்ட் வேலையைக் கவனித்துக் கொண்டிருக்க, “பே…” என சாருமதி அவள் காதின் அருகில் வந்து கத்தவும் பயத்தில் துள்ளி விழுந்தவள் தோழியின் கேலிச் சிரிப்பில் தன் நெஞ்சை நீவி தன்னை சமன்படுத்த முயன்றாள். 

 

சாருமதி, “என்ன பயந்துட்டியா? அது சரி… எதுக்கு அவ்வளவு அவசரமா ஆஃபீஸ் வந்த?” எனக் கேட்கவும் அவ்வளவு நேரம் சாருமதியை முறைத்துக் கொண்டிருந்த அனுபல்லவி தோழியிடம் என்ன கூறி சமாளிக்கவென்று புரியாது திருட்டு முழி முழித்தவள், “அது… நான்… ஆஹ்… ப்ராஜெக்ட் விஷயமா சாரு… ப்ராஜெக்ட் விஷயமா…” என்றாள் சமாளிப்பாக.

 

“ஹ்ம்ம்… சரி ஓக்கே டி… நான் என் ப்ளேஸுக்கு போறேன்…” என்று விட்டு சாருமதி கிளம்பவும் அவ் வழியாக வந்த அர்ச்சனா தன் கையில் வைத்திருந்த காஃபியை வேண்டும் என்றே அனுபல்லவி தன் மேசை மீது வைத்திருந்த ஃபைலில் கொட்டி விட்டாள்.

 

அனுபல்லவி, “ஐயோ என் ஃபைல்…” என பதற, “ஓஹ் மை காட்… சாரி அனு… சாரி… சீரியஸ்லி நான் கவனிக்கல…” என்ற அர்ச்சனா ஃபைலைத் துடைப்பது போல் காஃபியை எல்லா இடத்திலும் தேய்த்து விட்டாள்.

 

“என்ன பண்றீங்க அர்ச்சனா? அது இன்னும் ஸ்பொய்ல் ஆகிடுச்சு…” எனக் கத்தவும், “அச்சோ… சாரி அனு…” என அர்ச்சனா மீண்டும் அதே கதையைக் கூறவும் அவளை முறைத்த அனுபல்லவி, “ப்ளீஸ் இதை நானே பார்த்துக்குறேன்… நீங்க கிளம்புங்க…” என்றாள் கடுப்பாக.

 

தோளைக் குலுக்கிய அர்ச்சனா, “ம்ம்ம் ஓக்கே…” என அங்கிருந்து சென்றவள், ‘இது வெறும் ஆரம்பம் மட்டும் தான் அனு… பிரணவ் வாயாலயே உனக்கு இந்த ப்ராஜெக்டை தந்ததுக்கு ஃபீல் பண்ண வைக்கல நான் அர்ச்சனா இல்ல…’ என்றாள் மனதில்.

 

அர்ச்சனா சென்றதுமே அனுபல்லவியின் மேசை மீதிருந்த தொலைபேசி அலற, அனுபல்லவி எடுத்து காதில் வைத்ததும், “அன்னைக்கு நான் தந்த ஃபைல எடுத்துட்டு என் கேபின் வாங்க…” என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

பிரணவ் தான் அழைத்திருந்தான். என்ன கூறப் போகிறானோ என்ற பயத்துடனே காஃபி கொட்டப்பட்ட ஃபைலையும் எடுத்துக்கொண்டு அவனின் அறைக்குச் சென்றாள் அனுபல்லவி.

 

அனுபல்லவி உள்ளே வந்ததுமே தன் மேசை ட்ராயரைத் திறந்து அதிலிருந்து ஏதோ களிம்பொன்றை எடுத்து அவளிடம் நீட்டினான் பிரணவ்.

 

அனுபல்லவி அவனைக் கேள்வியாக நோக்க, “சாரி மிஸ் பல்லவி… நேத்து உங்களை தெரியாம ஹர்ட் பண்ணிட்டேன்…” என்ற பிரணவ் தயக்கமாக அவளின் சிவந்திருந்த மணிக்கட்டைக் ஏறிடவும் அனுபல்லவியின் முகத்தில் மெல்லியதாய் ஒரு முறுவல்.

 

“தேங்க்ஸ்…” என அனுபல்லவி நன்றி உரைத்து விட்டு அதனை வாங்கிக்கொள்ளவும் பிரணவ் ஃபைலைக் கேட்டு கரத்தை நீட்ட, அவளோ புரியாமல் விளித்தாள்.

 

பிரணவ், “ஃபைல்…” என்கவும் தான் அது பற்றிய நினைவு வந்து தலை குனிந்து நின்றாள் அனுபல்லவி.

 

“என்னாச்சு?” என்ற பிரணவ்வின் கேள்விக்கு, தன் பின்னே மறைத்து வைத்திருந்த கிழிந்த ப்ராஜெக்ட் ஃபைலை அனுபல்லவி எடுத்து நீட்டவும், “என்ன இது?” எனக் கேட்டான் பிரணவ் கோபமாக.

 

“சார் அது…” என ஏதோ கூற வர, “உங்க எந்த எக்ஸ்ப்ளனேஷனும் எனக்கு அவசியம் இல்ல… உங்களை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைச்சா இப்படி தான் நீங்க அதை பண்ணுவீங்களா?” எனப் பிரணவ் பல்லிடுக்கில் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, அனுபல்லவியின் விழிகள் கண்ணீரைச் சுரந்தன.

 

அனுபல்லவி, ‘இப்போ தானே நல்லா பேசினார்… அதுக்குள்ள கோவப்படுறார்… இவரைப் புரிஞ்சிக்கவே முடியல என்னால…’ என மனதில் எண்ணியவாறு, “சார் என்ன நடந்திச்சுனா…” என தன்னிலை விளக்கம் கொடுக்க முற்பட்டாள்.

 

ஆனால் பிரணவ்வோ அதனைக் காதிலே வாங்காது அனுபல்லவியின் பேச்சை நிறுத்த அவளின் முகம் முன் கரம் நீட்டியவன், “எதுவும் சொல்ல வேணாம்… அதை டேபிள்ல வெச்சிட்டு போங்க நீங்க…” எனக் கோபமாகக் கூறவும் கலங்கிய விழிகளுடனே அங்கிருந்து புறப்பட்டாள் அனுபல்லவி.

 

அனுபல்லவி பிரணவ்வின் அறையினுள் நுழைவதும் சற்று நேரத்தில் அழுதுகொண்டே வெளி வருவதையும் அவதானித்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் மனம் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட, அதற்கு வேட்டு வைக்கும் விதமாக அவளின் மேசை மீதிருந்த தொலைபேசி ஒலி எழுப்பியது.

 

பிரணவ் அர்ச்சனாவைத் தன் கேபினுக்கு வருமாறு கட்டளை இடவும் புதிய ப்ராஜெக்ட்டை தன்னிடம் ஒப்படைக்க போவதாக நம்பிக்கொண்டு அர்ச்சனா பிரணவ்வின் அறைக்குச் சென்றாள்.

 

செல்லும் வழியில் இடைப்பட்ட அனுபல்லவியை கேலிப் பார்வை பார்த்து விட்டு செல்ல, அனுபல்லவியும் பிரணவ் அந்த ப்ராஜெக்ட்டை அர்ச்சனாவிடம் ஒப்படைக்கத் தான் அழைக்கிறான் என நினைத்தாள்.

 

அர்ச்சனா உள்ளே செல்லும் போது பிரணவ் கணினித் திரையில் ஏதோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அர்ச்சனா வந்ததை அறிந்தவன், “உட்காருங்க அர்ச்சனா…” என்கவும் வாயெல்லாம் பல்லாக அவன் முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் அர்ச்சனா.

 

தன் இருக்கையில் ஒரு பக்கம் சாய்ந்து அமர்ந்து கொண்ட பிரணவ் ஒரு விரலால் தாடையைத் தடவியபடியே அர்ச்சனாவின் முகத்தை தீவிரமாக நோக்கினான்.

 

அர்ச்சனா பிரணவ்வின் தீர்க்கமான பார்வையை காதல் பார்வை என எண்ணினாள் போலும். அவனைப் பார்த்து வெட்கப்பட, தன் முன் இருந்த கணினியை பிரணவ் அர்ச்சனாவின் பக்கம் திருப்பவும் அதிர்ந்த அர்ச்சனாவின் மனதில் பயப் பந்து உருள ஆரம்பித்தது.

 

இருக்கையில் நேராக அமர்ந்து கொண்ட பிரணவ், “எதுக்காக இப்படி பண்ணினீங்க?” எனக் கேட்டான் கோபமாக.

 

அர்ச்சனா, “சார் நான் இல்ல… அது அனு…” என ஏதோ கூற வர, “ஜஸ்ட் ஸ்டாப் இட்…” என பிரணவ் கோபத்தில் மேசையில் ஓங்கித் தட்டவும் பயத்தில் எழுந்து நின்று விட்டாள் அர்ச்சனா.

 

பிரணவ், “நீங்க எதுக்காக இப்படி பண்ணினீங்கன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா?” என்கவும் அனுபல்லவி தான் ஏதோ தன்னைப் பற்றி தவறாகப் போட்டுக் கொடுத்து உள்ளாள் என அர்ச்சனா மனதில் மேலும் அனுபல்லவி மேல் வன்மம் வளர்த்துக் கொள்ள, “இது தான் நான் உங்களுக்கு தர ஃப்ர்ஸ்ட் என்ட் லாஸ்ட் வார்னிங்… திரும்ப இப்படி ஏதாவது சின்ன பிள்ளைத்தனமா பண்ணினீங்கன்னா மூட்டை முடிச்சை எல்லாம் கட்டிக்கிட்டு வீட்டுக்கு போக வேண்டி வரும்…” என்றான் பிரணவ் மிரட்டலாய்.

 

அதில் லேசாக பயம் வந்தாலும் வெறும் ப்ராஜெக்ட் மேனேஜர் இவன் என்ன செய்து விடப் போகிறான் என்ற தைரியத்தில், “இதுக்கு முன்னாடி எல்லாம் நான் தான் எங்க டீமை லீட் பண்ணேன்… இப்போ நீங்க புதுசா வந்து ஒன்னுமே தெரியாத அந்த அனு கிட்ட இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்டை தூக்கி கொடுத்து இருக்கீங்க…” என அர்ச்சனா சற்று குரலை உயர்த்தவும் கேலியாக சிரித்த பிரணவ், “இதுக்கு முன்னாடி இருந்த ப்ராஜெக்ட் மேனேஜர் உங்க அப்பாவோட ஃப்ரெண்ட் அப்படிங்கிறதால தான் உங்களை லீடரா போட்டார்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா மிஸ் அர்ச்சனா? டோன்ட் ஜட்ஜ் அ புக் பை இட்ஸ் கவர்..‌. அன்டர்ஸ்டேன்ட்…” என்றான் அழுத்தமாய்.

 

பிரணவ்வை முறைத்த அர்ச்சனா கோபமாக எழுந்து அங்கிருந்து வெளியே செல்ல, கதவைத் திறக்கப் போனவளை சொடக்கிட்டு அழைத்த பிரணவ், “அப்புறம் இன்னொரு விஷயம்… இந்த பிரணவ் முன்னாடி வாய்ஸ் ரெய்ஸ் பண்ணுறது இதுவே கடைசியா இருக்கட்டும்… இல்ல நடக்குறதே வேற…” என்கவும் காலைத் தரையில் உதைத்தபடி அர்ச்சனா அங்கிருந்து வெளியேறவும் ஆகாஷ் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

 

கோபமாக செல்லுபவளையே புரியாமல் பார்த்தபடி வந்த ஆகாஷ், “என்னாச்சு பாஸ்? எதுக்காக அந்த பொண்ணு இந்த முறை முறைச்சிட்டு போகுது? ஒருவேளை நீங்க ஏதாவது…..” என இழுக்க, பிரணவ் பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக் கொண்டான்.

 

 

பிரணவ், “இன்னைக்கு ஷெடியூல் என்ன ஆகாஷ்?” என்க, “வன் அ க்ளாக் போர்ட் மீட்டிங் இருக்கு பாஸ்… அது முடிஞ்சதும் மிஸ்டர் மெஹெரா கூட ஜூம் மீட்டிங் இருக்கு பாஸ்… ப்ராஜெக்ட் சம்பந்தமா உங்க கூட ஏதோ இம்பார்ட்டன்ட்டா டிஸ்கஸ் பண்ண இருக்குறதா சொன்னார்…” என்றான்.

 

“ஹ்ம்ம் ஓக்கே… மிஸ்டர் மெஹெரா கூட இருக்குற மீட்டிங்ல மிஸ் பல்லவியையும் ஜாய்ன் பண்ணிக்க சொல்லுங்க… அதுக்கு முன்னாடி மிஸ் பல்லவியை என்னை வந்து பார்க்க சொல்லுங்க…” என பிரணவ் அடுத்தடுத்து கட்டளைகளைப் பிறப்பிக்க, பட் பாஸ்… மிஸ் பல்லவி எதுக்கு அந்த மீட்டிங்ல?” எனக் கேட்டான் ஆகாஷ் புரியாமல்.

 

பிரணவ், “அவங்க தானே இந்த ப்ராஜெக்ட்ல டீம் மெம்பர்ஸ லீட் பண்ண போறாங்க… சோ இந்த ப்ராஜெக்ட் நம்ம கம்பனிக்கு எவ்வளவு இம்பார்டன்ட்னு அவங்களுக்கு புரியணும்…” என்கவும் ஆகாஷ் சரி எனத் தலையசைத்தான்.

 

ஆகாஷ், “அப்புறம் பாஸ்…” என ஏதோ கூற வருவதும் தயங்குவதுமாக இருக்க, “என்னாச்சு ஆகாஷ்?” எனக் கேட்டான் பிரணவ் தொலைபேசியில் யாருக்கோ அழைத்தபடி.

 

“லக்ஷ்மி மேடம் உங்க மேல ரொம்ப கோவமா இருக்காங்க பாஸ்… நீங்க இந்த கம்பனிய எம்.டியா எடுத்து நடத்தணும்னு அவங்க விரும்புறாங்க… நீங்களா சொல்லலன்னா மேடமே எல்லாருக்கும் அதைப் பத்தி தெரியப்படுத்துறேன்னு சொல்றாங்க…” என ஆகாஷ் கூறவும் பிரணவ் மேசையில் இருந்த தொலைபேசியை கோபத்தில் தள்ளி விட்டான்.

 

“என் லைஃப் இப்படி இருக்குறதுக்கு முக்கிய காரணமே அவங்க தான்… இன்னும் என்ன தான் அவங்களுக்கு வேணுமாம்? இப்போ கூட நான் இங்க நிம்மதியா இருக்குறது அவங்களுக்கு பிடிக்கலயா?” என பிரணவ் ஆத்திரமாகக் கேட்கும் போதே அவ் அறைக்குள் நுழைந்தாள் அனுபல்லவி.

 

பிரணவ் அனுபல்லவிக்கு அழைக்கும் போது தான் ஆகாஷ் பிரணவ்வின் தாயைப் பற்றிக் கூறும் போது கோபத்தில் தொலைபேசியைத் தள்ளி விட்டது.

 

பிரணவ்வின் இந்த கோப அவதாரத்தைக் கண்டு அனுபல்லவி வாசலிலே அதிர்ந்து நிற்க, கண்களை மூடி தன்னை சமன் படுத்திக்கொண்டு ஆகாஷை வெளியேறுமாறு கண் காட்டினான்.

 

ஆகாஷ் வெளியேறியதுமே தன் இருக்கையில் அமர்ந்து பெருமூச்சு விட்டான் பிரணவ்.

 

அனுபல்லவி இன்னும் அதே இடத்தில் நின்று பிரணவ்வையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க, “இன்னைக்கு ஃபுல்லா அப்படியே நின்னுட்டு இருக்க ப்ளேனா?” என ஏற்கனவே இருந்த கடுப்பில் பிரணவ் கேட்கவும் தன்னிலை அடைந்த அனுபல்லவி அவசரமாக உள்ளே வந்து அவன் முன்னே நின்றாள்.

 

தலையை ஒரு கையால் தாங்கியபடி மேசையில் ஒரு ஃபைலைத் தூக்கிப் போட்ட பிரணவ், “இந்த ஃபைல்ல இருக்குறதை எல்லாம் ரிஃபர் பண்ணிக்கோங்க… ஈவ்னிங் மிஸ்டர் மெஹெரா கூட ஒரு மீட்டிங் இருக்கு… நீங்களும் ஜாய்ன் பண்ணிக்கணும்…” என்கவும் அனுபல்லவி ஏன் எதற்கு என்று கேட்காமலே, “ஓக்கே சார்…” என வாங்கிக் கொண்டாள்.

 

பிரணவ் தலையை அழுத்திப் பிடித்தபடி நெற்றி சுருக்கி அமர்ந்து இருப்பதைக் கண்டு மனம் கேளாத அனுபல்லவி, “ஆர் யூ ஓக்கே சார்?” என ஒருவாறு கேட்டு முடிக்க, தலையை நிமிர்த்தி அனுபல்லவியின் முகம் நோக்கியவன், “ஏன்? என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? பைத்தியம் போல இருக்கேனா?” எனப் பிரணவ் கோபமாகக் கேட்கவும் அவசரமாக மறுப்பாகத் தலையசைத்தாள் அனுபல்லவி.

 

“அப்போ என்ன? கிளம்ப வேண்டியது தானே… இன்னும் நிற்குறீங்க…” எனப் பிரணவ் பல்லிடுக்கில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பவும், “சாரி சார்… சாரி…” என்ற அனுபல்லவி அவசரமாக எழுந்து வெளியே ஓடினாள்.

 

அவள் சென்றதும், “ப்ச்…” என சலித்துக்கொண்ட பிரணவ், “அம்மா மேல இருக்குற கோவத்தை அந்த பொண்ணு கிட்ட காட்டினா சரியா? ச்சே…” என்றவனுக்கு தன் மீதே ஆத்திரம் வந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்