Loading

திடீரென ஆர்யான், “மினி…” எனக் கத்தவும் அவன் கத்தலில் திரும்பியவர்கள் சிதாராவின் நிலையைக் கண்டு அதிர்ந்து அவசரமாக அவளிடம் ஓடினர்.

பிரணவ், “தாரா…” என அவளிடம் செல்லப் பார்க்க, அவன் கையை யாரோ பிடித்து வைத்திருப்பதை உணர்ந்தவன் யாரெனப் பார்க்க, ஆதர்ஷ் தான் அவனை செல்ல விடாமல் பிடித்திருந்தான்.

ஆதர்ஷ், “நீ பண்ணது எல்லாம் போதும்… தயவு செஞ்சி இங்கயே இரு…” என கோபமாகக் கூறியவன் சிதாராவிடம் விரைந்தான்.

பிரணவ் எதுவும் செய்ய முடியாமல் அங்கு நின்றே கவலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிதாரா வலிப்பு வந்து துடிக்க ஆர்யான் அவசரமாக அருகிலிருந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்து அவள் உள்ளங்கையில் வைத்து மடித்து அழுத்தினான்.

மெதுவாக அவளது வலிப்பு நிற்க சிதாராவை கரங்களில் ஏந்திய ஆர்யான் யாரிடம் எதுவும் கூறாது ஓடிச் சென்று டாக்சி பிடிக்க அக்ஷராவும் லாவண்யாவும் அவனுடன் சென்றனர்.

ஏனையோரிடம் தகவலைக் கூறி அவர்களை ரெட் ஹவுஸ் செல்லக் கூறிய அபினவ் இன்னொரு டாக்சி பிடித்து ஆதர்ஷ், பிரணவ்வுடன் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

ஹாஸ்பிடலில் அனைவரும் டாக்டர் சிதாராவைப் பரிசோதித்து விட்டு வரும் வரை தவிப்புடன் இருக்க,

பிரணவ் அங்கு ஒரு ஓரமாக கை கட்டி நிற்பதைப் பார்த்த ஆர்யான் பிரணவ்விடம் சென்று அவன் சட்டையைப் பிடித்து,

“எதுக்குடா இன்னும் இங்க நின்னுட்டு இருக்காய்… இன்னும் என்ன வேணும் உனக்கு… அவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேன் தானே இப்போ எதையும் பேச வேணாம் நிறுத்து நிறுத்துன்னு… கேட்டியாடா… இப்ப பாரு மினி எந்த நிலைல இருக்கான்னு… இதுக்கெல்லாம் நீ மட்டும் தான்டா காரணம்… உன்ன…” என கோபத்தில் கத்தி விட்டு பிரணவ்வை அடிக்கக் கை ஓங்க,

அபினவ் அவனைத் தடுக்க முயற்சிக்க, சிதாராவைப் பரிசோதித்து விட்டு வெளியே வந்த டாக்டர் அவர்களைக் கண்டு,

“நிறுத்துங்க… இங்க என்ன நடக்குது… இது என்ன ரௌடிசம் பண்ணுற இடம்னு நெனச்சீங்களா… பேஷன்ட்ஸ் இருக்குற இடம்… திரும்ப இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்திங்கனா நான் போலிஸ கூப்பிட்டுருவேன்… மைன்ட் இட்…” என அவர்களைத் திட்ட,

பிரணவ்வை விட்டு டாக்டரிடம் ஓடி வந்த ஆர்யான், “சாரி.. சாரி டாக்டர்… மினி இப்போ எப்படி இருக்கா… நல்லா இருக்கால்ல… ” என பதட்டமாய்க் கேட்டான்.

டாக்டர், “ப்ளீஸ் பீ காம் சார்… அவங்க இப்போ நல்லா தான் இருக்காங்க… டோன்ட் வொரி… அவங்களுக்கு இதுக்கு முன்னாடி ஃபிட்ஸ் வந்து இருக்கா…” என்க,

லாவண்யா இல்லை என சொல்ல வர,

“ஆமா டாக்டர்… இது தேர்ட் டைம்…” என ஆர்யானிடமிருந்து பதில் வர அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

டாக்டர், “ஆஹ் ஓக்கே… ஏதோ ஒரு விஷயம் அவங்க மனச ரொம்ப பாதிச்சிருக்கு… அத ஞாபகப்படுத்துற விதமா ஏதாச்சும் நடந்தா தான் இப்படி ஃபிட்ஸ் வருது இவங்களுக்கு… ஐ திங்க் இன்னெக்கி ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்து இருக்காங்க… அதனால தான் இன்னும் கான்ஷியஸ் வரல… நாங்க ட்ரீட்மன்ட் பண்ணி இருக்கோம்… சோ ஒரு டூ த்ரீ ஹவர்ஸ்ல கண்ணு முழிச்சிருவாங்க… அவங்கள வார்டுக்கு சேன்ஜ் பண்ணுறோம்… அதுக்கப்புறம் நீங்க போய் பார்க்கலாம்…” என்க,

ஆர்யான், “தேங்க் யூ டாக்டர்..” என்றதும் அவர் சென்றார்.

பின் ஆர்யான் இதற்கு முன்பு சிதாராவிற்கு வலிப்பு வந்தது பற்றியும் தாம் எவ்வாறு நண்பர்கள் ஆனோம் என்பது பற்றியும் கூறவும் அனைவரும் அதிர்ந்தனர். நர்ஸ் வந்து டாக்டர் அழைப்பதாகக் கூறவும் ஆர்யானும் ஆதர்ஷும் அவரை சந்திக்கச் செல்ல, அவரோ மீண்டும் சிதாராவிற்கு இவ்வாறு வலிப்பு ஏற்பட்டால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் எனக் கூறவும் இருவருமே அதிர்ந்தனர்.

அவரிடம் நன்றி கூறி விட்டு இருவரும் சிதாரா இருந்த வார்டுக்கு வந்தனர்.

அக்ஷரா, “டாக்டர் என்ன சொன்னாங்க அண்ணா…” என ஆர்யானிடம் கேட்க, அவன் ஏதோ யோசனையில் இருக்க,

ஆதர்ஷ் டாக்டர் கூறிய அனைத்தையும் அவர்களிடம் கூறியவன் வந்த ஆத்திரத்தில் பிரணவ்விடம் சென்று அவன் கன்னங்களில் மாறி மாறி அடித்தான்.

பிரணவ்வோ குற்றவுணர்ச்சியில் இருந்ததால் ஆதர்ஷ் அடித்தது எதுவும் உறைக்கவில்லை.

ஆதர்ஷ், “மனுஷனாடா நீ… ச்சீ… உன்ன எல்லாம் ஃப்ரண்ட்டுன்னு சொல்லவே அசிங்கமா இருக்குடா…” என்றவன் மீண்டும் அவனை அடிக்க லாவண்யா வந்து தடுத்தாள்.

பின் பிரணவ்வை பார்த்து லாவண்யா, “உங்களுக்கும் சித்துக்கும் இடைல ஏதோ மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்… அதனால தான் பிரிஞ்சிட்டீங்கன்னு நெனச்சேன் அண்ணா… பட் எங்க சித்துவ நீங்க இப்படியெல்லாம் பேசி இருப்பீங்கன்னு சத்தியமா எதிர்ப்பார்க்கல அண்ணா… அந்த பைத்தியக்காரி உங்கள எவ்வளவு காதலிச்சிருக்கான்னா எங்க கிட்ட ஒரு வார்த்தை உங்கள பத்தி தப்பா சொல்லல அவ… ” என்கவும் பிரணவ்விற்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.

நர்ஸ் வந்து, “இவ்வளவு பேர் இருந்தா பேஷன்ட்டுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்… யாராவது ஒருத்தர் மட்டும் கூட இருங்க…” என்க,

ஆர்யான் சிதாராவுடன் இருக்க மற்ற அனைவரும் வெளியேறினர்.

சற்று நேரத்தில் சிதாரா கண் விழித்து ஆர்யானுடன் பேசிக்கொண்டு இருக்க, அபினவ், பிரணவ் தவிர அனைவருமே சிதாராவைக் காண உள்ளே வந்தனர்.

ஆதர்ஷ் தான் அவனை உள்ளே வர வேண்டாம் எனக் கூறியிருந்தான்.

பிரணவ் ஏற்கனவே குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருப்பதால் அவனுடன் அபினவ்வும் நின்றான்.

அபினவ் பிரணவ்விடம், “நீ பண்ணது தப்பு தான் மச்சான்… இல்லன்னு சொல்லல… அதுக்காக நான் இங்க நின்னுட்டு இருக்குறதுக்கு அர்த்தம் நீ பண்ண தப்புக்கு சப்போர்ட்டா இருக்குறேன்னு இல்ல… என்னோட ஃப்ரெண்ட் தான் பண்ண தப்ப உணர்ந்திருப்பான்னு ஒரு நம்பிக்கை… இந்த நேரத்துல உன்ன தனியா விட எனக்கு மனசு வரலடா…” என்க,

“தேங்க்ஸ் டா…” என அவனை அணைத்துக் கொண்ட பிரணவ்,

“நீயும் உள்ள போடா… உனக்கும் அவ மேல நிறைய அக்கறை இருக்குன்னு எனக்கு தெரியும்… எப்படியும் உள்ள இருக்குற யாரும் தாராவ பத்தி என் கிட்ட சொல்ல மாட்டாங்க… நீ போய் பாத்துட்டு வந்து அவள் எப்படி இருக்கான்னு சொல்லு…” என்றான்.

அபினவ், “நீயும் உள்ள வா மச்சான்… ” என்க,

“வேணாம்டா… தாரா என்ன பாத்தா இப்ப ரொம்ப டென்ஷன் ஆகுவா… என்னாலயும் அவ முகத்த நேரா பார்க்க சக்தி இல்ல…” என பிரணவ் கூற,

வேறு எதுவும் கூறாமல் சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்தான் அபினவ்.

பின் சிதாராவை டிஸ்சார்ஜ் செய்து அவர்கள் தங்கியிருந்த ரெட் ஹவுஸ் அழைத்துச் சென்றனர்.

அடுத்த இரண்டு நாளில் டூர் முடிய அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.

அந்த இரண்டு நாளுமே ஆர்யான், லாவண்யா, அக்ஷரா மூவரும் சிதாராவை விட்டு எங்கும் அசையவில்லை.

எப்போதும் அவளுடன் ஏதாவது பேசிக்கொண்டு அவள் யோசனை வேறு எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

பூஞ்சோலை கிராமத்தை அடையும் போது இரவாகி இருந்தது.

எனவே அனைவரும் அன்று அங்கே தங்கி விட்டு அடுத்த நாள் வீடுகளுக்கு செல்ல முடிவெடுத்தனர்.

மறுநாள் காலையில் அனைவரும் கிளம்பிய பின் ஆதர்ஷ், பிரணவ், அபினவ் மூவரும் கிளம்பத் தயாராகினர்.

ஆர்யான் தோழிகள் மூவருடன் ஹாலில் இருக்க மற்ற மூன்று‌ ஆண்களும் மேலே அறையில் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

பிரணவ், “டேய் ஆதர்ஷ்… ப்ளீஸ்டா… ஒரே ஒரு தடவ நான் தாரா கூட பேசனும்டா… திரும்ப அவள ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பேச மாட்டேன்… ப்ராமிஸ்டா… ” என்க,

ஆதர்ஷோ அபினவ்வைப் பார்த்து, “இவனுக்கு பேசாம இருக்க சொல்லு அபிணவ்… இது வரைக்கும் இவன் செஞ்சி வெச்சிருக்குறதையே சரி பண்ண முடியாம இருக்கோம்… ஒழுங்கா ஊருக்கு கிளம்புற வேலைய பார்க்க சொல்லு…” என்க,

பிரணவ், “மச்சான் ப்ளீஸ்டா… ஊருக்கு போக முன்னாடி கடைசியா ஒரே ஒரு தடவ தாரா கூட பேசிட்டு வரேன்டா…” என்றான்.

அதற்கும் ஆதர்ஷ் அபினவ்வைப் பார்த்து ஏதோ சொல்ல வர,

இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழித்த அபினவ்,

“அட ச்சீ நிறுத்துங்க… ஆதர்ஷ்… உனக்கு தான் அவன் மேல இருந்த கோவம் கொறஞ்சிடுச்சுல்ல… பின்ன நேரா பார்த்து பேசிக்கிட்டா என்னவாம்… நடுவுல என்ன வெச்சி காமெடி பண்றீங்களா… டேய்.. அதான் பிரணவ் அவன் பண்ண தப்ப உணர்ந்துட்டானே… கடைசியா ஒரு தடவ சித்து கூட பேசுறேன்னு சொல்றான்.. சரின்னு சொல்லேன்டா…” என ஆதர்ஷைப் பார்த்து கூறியவன்,

பின் பிரணவ்விடம், “இங்க பாருடா… திரும்ப ஏதாவது ஏடாகூடமா பேசினன்னு வையேன்… அப்புறம் நானே உன்ன சும்மா விட மாட்டேன்…” என்றான்.

சற்று சமாதானமான ஆதர்ஷ், “சரி… பட் அவன் எங்க எல்லாரு முன்னாடியும் தான் சித்து கூட பேசணும்…” என்கவும் பிரணவ் சற்று யோசித்து விட்டு சரி என்றான்.

தமது பையுடன் மூவரும் கிளம்பி ஹாலுக்கு வர ஆர்யான் ஏதோ சீரியசாக கூறிக் கொண்டிருக்க, மூவரும் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

பிரணவ் மெதுவாக அவர்களிடம் சென்று தொண்டையை செறும நால்வரும் அவனை ஏறிட்டனர்.

பிரணவ் தயங்கியபடி சிதாராவைப் பார்த்து ‘தாரா’ எனக்கூற வர சிதாராவின் பார்வையில் அவசரமாக,

“சிதாரா.. நான் உன் கூட கொஞ்சம் பேசணும்..” என்க,

ஆர்யான் கோவமாக எழுந்து ஏதோ கூற வர அவனைத் தடுத்த சிதாரா,

“சொல்லுங்க பிரணவ்…” என சிறிதும் மாற்றமின்றி தெளிவான குரலில் கூறினாள்.

அவளின் தெளிவான பேச்சில் அங்கிருந்த அனைவருமே வியக்க ஆர்யான் மட்டும் மகிழ்ந்தான்.

பிரணவ், “உன் கிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இருக்கான்னு தெரியல… எதுவும் தெரியாம பண்ணேன்னு பொய் சொல்ல மாட்டேன்… தெரிஞ்சி தான் எல்லாம் பண்ணேன்… பட் ப்ளீஸ் முடிஞ்சா என்ன மன்னிச்சிடு…” என்க,

சிதாரா ஒரு நொடி கூட யோசிக்காது, “சரி மன்னிச்சிட்டேன்… வேற ஏதாவது சொல்லனுமா…” என்றாள்.

சிதாராவின் தெளிவான பேச்சை பிரணவ் கூட எதிர்ப்பார்க்கவில்லை.

அதை அவன் முகமே காட்டிக் கொடுத்தது.

ஆர்யானுக்கு அப்போது பிரணவ்வைக் காணும் போது ஏனோ சிரிப்பு வந்தது.

வாயை மூடி சிரித்தான்.

“எனக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் தர மாட்டியா தாரா…” என சட்டென பிரணவ் ஏக்கமாக வினவ,

ஆதர்ஷ் கோவத்தில் பிரணவ்வை ஏதோ சொல்ல முன்னேற அவன் கைப் பிடித்து தடுத்தான் அபினவ்.

அனைவரும் சிதாராவின் பதிலை எதிர்ப்பார்க்க சிதாராவோ திரும்பி ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தாள்.

ஆர்யான் கூட சிதாராவின் முகத்தை தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிதாரா, “சாரி பிரணவ்… என்னால நீங்க கேட்டத தர முடியாது… நான் உங்கள மன்னிச்சிட்டேன் தான்… ஆனா நீங்க பண்ண எதையுமே மறக்கல… அத என்னால மறக்க முடியுமான்னு கூட தெரியல… அதை மனசுல வெச்சிக்கிட்டு திரும்ப உங்க கூட என்னால இருக்க முடியாது… சோ நீங்க ஆசைப்படுற மாதிரி உங்களுக்கு ஏத்த ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க… சாரி…” என்க,

பிரணவ், “நான் நிஜமாவே திருந்திட்டேன் தாரா… என் தப்ப உணர்ந்துட்டேன்… என்னால இனி உன்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது… நம்ம பிரேக்கப் அப்போ நீ கூட சொன்னாய் தானே என்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு… நாமளே கல்யாணம் பண்ணிக்கலாமே…” என்கவும் சிரித்தாள் சிதாரா.

பின், “அந்த டைம்ல காதல் கண்ண மறச்சிடுச்சி பிரணவ்… ஏதோ உங்க மேல அப்போ இருந்த அளவுக்கதிகமான காதல்ல அப்படி சொன்னேன்… இப்போ தான் வெளியுலகத்த பாத்து கொஞ்சம் மெச்சூர்ட் ஆகி இருக்கேன்… அதனால தான் நான் எவ்வளவு பைத்தியக்காரியா இருந்திருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்…” என சிரித்தபடி கூறிய சிதாரா பின் பிரணவ்வின் கண்களைப் பார்த்து அழுத்தமாக தெளிவாக,

“ஆனா இப்போ தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க… நான் நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன்… ஆனா அது என்ன பத்தி முழுசா தெரிஞ்சி என்ன புரிஞ்சிக்கிட்டு என்ன நானாவே ஏத்துக்குற ஒருத்தனா இருப்பான்… நிச்சயம் அது நீங்க இல்ல..” எனக் கூறினாள்.

அவள் இன்னொருவனைத் திருமணம் செய்வேன் எனக் கூறியதைக் கேட்ட பிரணவ்விற்கு கோபமாக வந்தது.

பிரணவ், “உன்னால நிச்சயமா என்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது தாரா… எப்போ இருந்தாலும் நீ என்ன தான் கல்யாணம் பண்ணிப்பாய்…” என சிதாராவைப் பார்த்து கூறியவன் தனது பையுடன் அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.

அவன் செல்வதை புன்னகையுடன் பார்த்தக் கொண்டிருந்தாள் சிதாரா.

ஆதர்ஷ், “சாரிம்மா.. அவன் சொன்னது எதையும் நீ கண்டுக்காதே… அவன் சும்மா பைத்தியம் போல உளறிட்டு போறான்… நாங்களும் கிளம்புறோம்மா..” என சிதாராவிடம் கூறினான்.

பின் அபினவ், ஆதர்ஷ் இருவரும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப அனைவரும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் ஆதர்ஷிடமிருந்து அபினவ்விற்கு அழைப்பு வந்தது. ஆதர்ஷ் அபினவ்விடம் சிதாராவிற்கும் ஆர்யானிற்கும் திருமணம் நிச்சயித்து உள்ளதாகக் கூறவும் அபினவ் மகிழ, அபினவ்வின் அருகில் இருந்த பிரணவ்வும் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

பிரணவ் மனதில், “உன்னால அவ்வளவு சீக்கிரம் தாராவ என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது ஆர்யான்… குறுக்கு வழிலயாவது நான் அவள அடஞ்சே தீருவேன்…” என நினைத்துக் கொண்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்