Loading

அடுத்து வந்த நாட்களில் பிரணவ் சிதாரா என்ற ஒருத்தியையே மறந்து விட்டான். இருவருக்கும் இடையில் நடந்தது எதுவுமே அபினவ்விற்கும் ஆதர்ஷிற்கும் தெரியாது. சிதாரா எதுவும் சொல்லவில்லை. பிரணவ்விடம் கேட்கவும் விடவில்லை. அது பிரணவ்விற்கு இன்னும் சாதகமாக அமைந்தது. அப்படி இருந்த ஒரு சமயம் தான் விதி மீண்டும் சிதாராவை பிரணவ்வின் கண் முன் காட்டி அவனின் வாழ்வையே தலைகீழாக புரட்டிப்போட்டது.

பிரணவ் தன் தொழிலில் சுயமாக முன்னேறி நல்ல நிலையில் இருந்தான். ஒருநாள் அவனின் நண்பனான அபினவ் பிரணவ்விற்கு அழைத்து மறுநாள் ஊட்டிக்கு ஏதோ சுற்றுலா செல்ல அழைத்திருந்தான். உற்ற தோழனின் பேச்சை மறுக்க முடியாது சம்மதித்தான் பிரணவ்.

மறுநாள் பிரணவ் அபினவ்வின் ஊருக்குக் கிளம்பத் தயாராக இருக்கும் போது அவனிடமிருந்து மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. அபினவ், “மச்சான் ஏர்போட்ல ஒருத்தங்க வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க.. நீ வரும் போது அவங்கள பிக்கப் பண்ணி இங்க கூட்டிட்டு வரியா” என்க, “சரி நீ நேம் என்ட் எப்படி இருப்பாங்கன்னு சொல்லு” எனக்‌ கேட்டவனுக்கு அபினவ் பதில் சொல்லப்போக, அதற்குள் அவனை யாரோ அழைக்கவும், “மச்சான் நீ போய் கால் ஒன்னு தா.. அவங்களே வருவாங்க..  சரிடா இங்க சின்ன வேலையொன்னு.. பாய்…” என அழைப்பைத் துண்டித்து விட்டான்.

பிரணவ்வின் கத்தல் எதுவும் அபினவ்வின்‌ செவியை அடையவில்லை. “ப்ச்.. இவன் வேற யாருன்னு டீட்டைல்ஸ் சொல்லாம கட் பண்ணிட்டான்.. எல்லாம் முடிஞ்சி கடைசில என்ன ட்ரைவர் வேலையையும் பார்க்க வெச்சிட்டான்.. எல்லாம் என்‌ தலையெழுத்து..” எனக் கூறிவிட்டு காரை‌ உயிர்ப்பித்தான்‌ பிரணவ்.

ஏர்போட்டை அடைந்தவன் அபினவ்வுக்கு அழைத்து, “நான் வந்துட்டேன்..எங்க இருக்காங்கடா” என்க, “உன்னோட கார் நம்பர் குடுத்து இருக்கேன்டா.. வெய்ட் பண்ணு வருவாங்க..” என்றான் அபினவ். பின் காரிலிருந்து இறங்கி மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் தன் முன் நிழலாட மொபைலிலிருந்து பார்வையை அகற்றியவன் தன் முன்னே யாரென்றே அடையாளம் தெரியாதவாறு லக்கேஜ்ஜுடன் விரித்து விட்ட கூந்தல், கண்ணில் சன் கிளாஸ் அணிந்து மாஸ்க் போட்டு கறுப்பு ஷேர்ட், ஜீன்ஸ் அணிந்து கையில் ஓவர்கோட், ஹேன்ட்பேக் சகிதம் நின்றிருந்தவளை கேள்வியாய் நோக்கினான். பின் நினைவு வந்தவனாக “நீங்க தான் அபினவ் சொன்னவங்களா… வாங்க கிளம்பலாம்.. உங்க லக்கேஜ குடுங்க.. நான் எடுத்து வெக்கிறேன்..” என்றவன் அந்தப் பெண்ணிடமிருந்து லக்கேஜை வாங்கி காரில் ஏற்ற, அவள் ஏறியதும் கார் புறப்பட்டது.

சிறிது நேரத்தில் அப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு வர, அவள் அதனை ஏற்றுப் பேசவும் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்தவனின் நெற்றியில் யோசனை முடிச்சுகள்.

பிரணவ் மனதில், ‘இந்த வாய்ஸ் நம்ம ரொம்ப கேட்டு பழக்கப்பட்ட வாய்ஸா இருக்கே…யாரா‌ இருக்கும்…’ என யோசித்த வண்ணம் ஃப்ரொன்ட் மிரர் வழியாக அப் பெண்ணைப் பார்த்தான். மாஸ்க் போட்டு இருந்ததால் அவனால் அடையாளம் காண இயலவில்லை.

“ப்ச், யாரா இருந்தா நமக்கென்ன” என மீண்டும் பாதையில் கவனம் செலுத்தினான். அப் பெண்ணோ அழைப்பில் மூழ்கி இருந்தாள்.

அந் நேரம் அபினவ் மீண்டும் பிரணவ்வை தொடர்பு கொண்டான். எடுத்ததும், “மச்சான் ஆல் ஓக்கே தானே… எதுவும் பிரச்சினை இல்லல்ல… எங்க இருக்கீங்க…” என அபினவ் பதற்றமாக கேக்க, பிரணவ் “எதுக்கு மச்சான் இவ்ளோ டென்ஷனா இருக்காய்.. பக்கத்துல வந்துட்டோம்… ஆல் ஓக்கே.. என்ன பிரச்சினை வர போகுது… நீ கூட்டிட்டு வர சொன்னவங்க முகத்த கூட நான் பார்க்கல இன்னும்…” என்க, அந்தப்பக்கம் அபிணவ் பெருமூச்சு விடுவது நன்றாகவே கேட்டது.

பின் அபினவ், “சரி மச்சான். நீ சீக்கிரமா வந்து சேரு… நாம அப்புறமா பேசலாம்…” என பிரணவ் மேலும் கேள்விகளை அடுக்கு முன் அவசரமாக அழைப்பை துண்டித்தான்.

பிரணவோ, “என்னாச்சு இவனுக்கு..‌எதயுமே முழுசா சொல்லுறான்‌ இல்ல..” என சலிப்பாக கூறிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் கார் கிராமத்தை‌ அடைந்தது. உடனே வண்டியிலிருந்து இறங்கியவள் லக்கேஜ்ஜை கூட எடுக்காமல் அவனிடம் எதுவும் சொல்லாமல் நேராக வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் செல்வதைக் கண்ட‌ பிரணவ், “அவ்வளவு தூரம் ஓசில இந்தப் பொண்ணுக்கு ட்ரைவர் வேலை பாத்திருக்கேன்… ஒரு தேங்ஸ் கூட சொல்லாம போறத்த பாரு… இதுக்கெல்லாம் அந்த அபினவ்வ சொல்லனும்…” என எப்போதும் போல் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

அக்ஷராவும் லாவண்யாவும் வண்டியிலிருந்த பெண்ணின் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டிருக்க, மொபைலில் அழைப்பொன்றில் இருந்த பிரணவ் பேசி முடித்து விட்டு அவர்களிடம் வந்தான்.

பிரணவ், “யாரு வனிம்மா அந்த பொண்ணு… உங்க ப்ரெண்டா… சரியான திமிரு பிடிச்சவளா இருப்பா போல…‌ ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம அவ பாட்டுக்கு போறா…” என்கவும் அக்ஷராவும் லாவண்யாவும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

எங்கே அவனுக்கு அடையாளம் தெரிய. அவள் தான் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்டு இருந்தாளே.

“என்னண்ணா இப்படி‌ கேக்குறீங்க… நெஜமாலுமே அவள உங்களுக்கு அடையாளம் தெரியலயா…” என‌ அக்ஷரா கேட்க, அவளுக்கு இல்லை என்பதாய் இட வலமாக தலையசைத்தான்.

லாவண்யா, “என்ன எங்க கூட விளையாடுறீங்களாண்ணா… உங்களுக்கு அவள பிடிக்காதுங்குறதுக்காக நீங்க சித்துவ பத்தி இப்படியெல்லாம் பேச‌ வேணாம் அண்ணா…” என்று‌ விட்டு வேகமாக அங்கிருந்து அகன்றனர்.

அவர்கள்‌ கோவமாக சென்றது எதுவும் பிரணவ்வின்‌ கருத்தில் பதியவில்லை.

அவன் தான் ‘சித்து’ என்ற பெயரிலே விழி விரித்து சிலையாகி நின்றானே. அதிர்ச்சியில் விழி விரித்து நின்றவனை கலைத்தது ஆதர்ஷின் அழைப்பு.

“இங்க என்னடா பண்ற தனியா… வா உள்ள போலாம்…” என ஆதர்ஷ் கூறவும்,

“மச்சான்… நான் தாரா கூட பேசனும்டா… ப்ளீஸ்டா…” என்ற பிரணவ்வின் பதிலில் அவனை ஆழ நோக்கினான் ஆதர்ஷ்.

அதற்குள் அபினவ்வும் அங்கு வந்து சேர்ந்தான்.

பின் நிதானமாக குரலில் கடுமையை தேக்கி வைத்து, “இங்க பாரு பிரணவ்… நான் உனக்கு இது முதலும் கடைசியுமா சொல்றேன்… உனக்கும் சித்துவுக்குமான உறவு எப்பவோ முடிஞ்சி போச்சி… இல்ல இல்ல… நீ தான் முடிச்சி வெச்சாய்…. உன்னால அவ ரொம்ப கஷ்டப்பட்டுடா… அகைன் உன்னால அவ கஷ்டப்படுறத நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்… நீ எனக்கு ஃப்ரெண்டா இருக்கலாம்… இதுக்கு முன்னாடி நீ பண்ண தப்புக்கு எதுவும் சொல்லலன்னு நீ பண்ற எல்லா விஷயத்துக்கும் நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு எதிர்ப்பாக்காதே… இப்ப இருக்கிறது உன்னோட தாரா இல்ல… ஜஸ்ட் சிதாரா… எங்க எல்லாருக்கும் சித்து… அவ்ளோ தான்… உன்னால அவளுக்கு மட்டும் ஏதாச்சும் பிரச்சினை வந்தால் நீ இந்த ஆதர்ஷ ஃப்ரெண்டா மட்டும் தானே பாத்திருக்காய்… அதுக்கப்புறம் சித்துக்கு அண்ணனா பார்ப்பாய்…” என்று விட்டு உள்ளே சென்று விட்டான் ஆதர்ஷ்.

அபினவ்வோ, “ஆதர்ஷ் சொல்லிட்டு போறதெல்லாம் நீ மைன்ட் பண்ணிக்காத மச்சான்… அவன் சித்து மேல உள்ள பாசத்துல பேசிட்டு போறான்.. கோவம் கொறஞ்சதும் அவனாவே வந்து பேசுவான்.. வா நாம உள்ள போலாம்…” என பிரணவ்வை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

மறுநாள் அதிகாலையிலே செல்ல இருப்பதால் அன்று இரவு யாருமே உறங்கவில்லை.

எனவே அனைவரும் வெளியே தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு பக்கம் பெண்களும் மறுபக்கம் ஆண்களும் என இருக்க பிரணவ்வின் பார்வை முழுவதும் சிதாராவிடமே இருந்தது.

இதனைக் கவனித்த அபினவ் பிரணவ்வை நெருங்கி அவன் காதில் மெதுவாக, “டேய்… எனக்கென்னவோ நீ இன்னிக்கி ஆதர்ஷ் கிட்ட அடி வாங்காம இருக்க மாட்டாய் போல…” என்றான்.

அவன் கூறியது பிரணவ்வின் செவிகளை எட்டினால் தானே. அபினவ்வால் தலையில் அடித்துக்கொள்ள மட்டும் தான் முடிந்தது.

சற்று நேரத்தில் அங்கு இருக்க முடியாமல் சிதாரா எழுந்து வீட்டிற்குள் செல்ல நினைக்க, வீட்டினுள் நுழையச் செல்லும் நேரம் சரியாக அவளை மோதுவது போல் வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு கார்.

கார் அவளை நோக்கி மோதுவது போல் வரவும் தோட்டத்திலிருந்த அனைவரும் பயந்து அவளின் திசை பார்க்க பிரணவ்வோ, “தாரா… கார்…” எனக் கத்தினான்.

கார் தன்னை நோக்கி வந்ததும் சிதாராவின் இதயமே ஒரு நிமிடம் நின்றது. அதனால் பிரணவ் அவளை அழைத்ததை அவள் கவனிக்கவில்லை. அது நிறுத்தப்பட்டதும் தான் போன உயிர் திரும்ப வந்தது.

பிரணவ்வும் அங்கிருந்து சிதாராவை அவதானித்துக் கொண்டிருந்தான். முதலில் கோபமாக அக் காரை நோக்கி சென்றவள் அக் காரிலிருந்து இறங்கியவனைக் கண்டதும் அதிர்ந்து பின் அவனை அணைத்துக் கொள்ளவும் பிரணவ்விற்கு உள்ளே பற்றி எரிந்தது.

பின் அக்ஷராவும் லாவண்யாவும் அவ்விடம் சென்று அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு நண்பர்களை நோக்கி வந்தனர்.

சிதாரா அனைவருக்கு வந்த அந்த ஆடவனை அறிமுகப்படுத்தி வைத்தாள். அவன் ஆர்யான். நியுயார்க்கில் சிதாராவின் சீனிய் மற்றும் அவளின் உயிர்த்தோழன் கூட.

பின் அபினவ் மற்றும் ஆதர்ஷை அறிமுகப்படுத்தச் செல்லவும் அவளைத் தடுத்தவன், “வெய்ட் வெய்ட் மினி… நானே சொல்றேன்…” என்க, அவனுக்கு சம்மதமாய் தலையாட்டினாள்.

ஆர்யான் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வை நோக்கி, “இவங்க ஆதர்ஷ் அப்புறம் அபினவ்… மினியோட சீனியர்ஸ்… எல்லாத்துக்கும் மேல அவளோட ஸ்வீட் ப்ரதர்ஸ்… மினிக்கு என்ன பிரச்சினைனாலும் முன்னாடி வந்து சப்போர்ட் பண்ணுவாங்க…” என்க இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

“ஐம் ஆர்யான்… நைஸ் டு மீட் யூ காய்ஸ்…” என அவர்களை அணைத்து விடுவித்தான்.

பின்‌ பிரணவ்விடம் திரும்பியவன், “இவரு…” என‌ சற்று நேரம் யோசிக்க, “இது பிரணவ் அண்ணா… அபி என்ட் தர்ஷ் அண்ணாவோட ஃப்ரெண்ட்…” என அக்ஷரா அவசரமாக பதிலளித்தாள்.

“ஓஹ்… சாரி டியுட்… மினி இவங்கள பத்தி தன்னோட லைஃப்ல ரொம்ப முக்கியமான பர்சன்ஸ்னு சொல்லிருக்கா… அதனால தான் அவங்கள முன்னாடியே தெரியும்..” என ஆர்யான் பிரணவ்விடம் மன்னிப்பு வேண்டும் விதமாக கூற, சிதாராவின் உதடுகள் தானாகவே, “அடப்பாவி… என்னமா நடிக்கிறான்…” என முனுமுனுத்தன.

ஆதர்ஷ் மற்றும் அபினவ் இருவருக்குமே தர்மசங்கடமான ஒரு நிலை உருவாகியது.

பிரணவ்வுக்கோ உள்ளே புகைந்தது. மனதிற்குள்ளேயே, “நான்‌ அவளுக்கு வேண்டாதவனா… என்ன பத்தி எதுவுமே இவன் கிட்ட சொல்லலயா இவ…” என அவர்களை வறுத்தெடுத்தான்.

சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு ஆதர்ஷ் அபினவ் உட்பட அனைவருமே தத்தம் வேலையை கவனிக்க உள்ளே சென்று விட பிரணவ் மட்டும் அங்கு தனித்து விடப்பட்டான்.

அவனோ, “யார் இந்த புதுசா வந்து சேர்ந்து இருக்கிறவன்… வார்த்தைக்கு வார்த்தை என்னோட மினி என்னோட‌ மினினு வேற சொல்றான்… இத இப்படியே விடக்கூடாது… ஏதாச்சும் பண்ணனும்…” என யோசனையிலிருந்தான்.

மறுநாள் சுற்றுலா ஆரம்பிக்க, ஆர்யான் எப்போதும் சிதாராவுடனே சுற்றிக் கொண்டிருக்கவும் பிரணவ்விற்கு ஆத்திரமாக வந்தது.

எப்படியாவது சிதாராவுடன் தனியாக பேச வேண்டும் என பிரணவ் காத்திருக்க, ஆர்யானோ அதற்கு வாய்ப்பளிக்காது அவளுடனே சுற்றவும் எரிச்சலடைந்த பிரணவ் சிதாரா தனியாக மாட்டியதும் அவள் கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஆள் அரவமற்ற ஒரு இடத்துக்கு வந்தான்.

அவன் விட்டதும் அவன் அழுத்திப் பிடித்த இடம் சிவந்திருக்க வலியில் கையைப் பிடித்துக் கொண்டு சிதாரா, “ஹவ் டேர் யூ… யாரு உங்களுக்கு என் கைய பிடிச்சு இழுத்துட்டு வர இவ்வளோ ரைட்ஸ குடுத்தது…” என ஆவேசமாகக் கேட்டு விட்டு அங்கிருந்து செல்லப் பார்க்க,

மீண்டும் அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன் விடாமலே, “ஏன் நான் பிடிச்சா மட்டும் உனக்கு வெறுப்பா இருக்கா தாரா… நான் பிடிக்காம உன் கூட வந்தானே ஒருத்தன் எப்பப்பாரு உன்னையே ஒட்டிக்கிட்டு… அவன் பிடிச்சா மட்டும் சுகமா இருக்….” என அவன் முடிக்கும் முன்னே அவன் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது சிதாராவின் கைகள்.

சிதாரா, “அவன பத்தி என்ன தெரியும்னு இவ்வளோ அசிங்கமா பேசுறாய்… அது சரி.. உன் புத்தியே இதானே.. அது எப்படி மாறும்…” என்க,

“ச…சாரி தாரா… அது உன் மேல உள்ள லவ்வுல பேசிட்டேன்… அவன் யாரு என் தாராவ தொட்டு பேசன்னு ஒரு பொசசிவ்னஸ்ல பேசிட்டேன்… ஐம் சாரி தாரா…” என பிரணவ் அவளிடம் கெஞ்ச,

அவன் கூறியதைக் கேட்டு கத்தி சிரித்தாள் சிதாரா.

பின், “உனக்கு என் மேல லவ்வு… இதுல பொசசிவ்னஸ் வேறயாம்… ச்சீ… இப்படி சொல்லவே உனக்கு அசிங்கமா இல்ல… உன்ன பாத்தாவே வெறுப்பா இருக்கு…” என்றாள்.

அவள் தோள்களைப் பற்றிக் கொண்ட பிரணவ், “நீ பொய் சொல்லுற தாரா… எனக்கு தெரியும் நீ எனக்காக தான் இவ்வளவு மாறி‌ இருக்கன்னு… உனக்கு என் மேல இன்னும் லவ் இருக்கு..” என்க,

அவன் கரங்களைத் தட்டி விட்டவள் ஆவேசமாக, “இல்ல… இல்ல… இல்ல… நான் உன்ன வெறுக்குறேன்… அடியோட வெறுக்குறேன்… உன்ன எந்தளவு காதலிச்சேனோ அத விட பல மடங்கு உன்ன நான் வெறுக்குறேன்… உன் பார்வை என் மேல படுறதயே நான் அசிங்கமா நெனக்கிறேன்…” என கத்தினாள்.

அவ்வளவு நாளும் கட்டுப்படுத்தி வைத்த கண்ணீர் அவளையும் மீறி வெளிப்பட்டது.

அவள் சத்தம் கேட்டு அனைவரும் அவ்விடம் வரப்பார்க்க அவர்களை தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறி அனுப்பிய அபினவ்வும் ஆதர்ஷும் அங்கு வந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து லாவண்யா, அக்ஷரா மற்றும் ஆர்யான் வந்தனர்.

ஆர்யான் அங்கு வந்ததுமே அவசரமாக சிதாராவிடம் சென்று, “மினி கூல்.. அமைதியா இரு… எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்…” என அவளை சமாதானப்படுத்தப் பார்க்கவும் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளிய பிரணவ்,

“நீ யார்டா எங்களுக்குள்ள வர… அவ என் தாரா… அவ என்ன பத்தி என்ன வேணாலும் பேசுவா… உனக்கென்னடா வந்தது…” என்றான்.

அக்ஷராவும் லாவண்யாவும் சிதாராவின் அழுகையை நிறுத்தப் போராட மேலும் மேலும் அவள் அழுகை அதிகமானது.

அவன் தன்னை தள்ளி விட்டதைக் கூட பொருட்படுத்தாத ஆர்யான், “ப்ளீஸ் பிரணவ்.. நீங்க என் கூட எப்ப வேணாலும் சண்ட போடுங்க… ப்ளீஸ்…  இப்போ மினிய எதுவும் கேக்க வேணாம்…” எனக் கெஞ்ச,

“இவ்வளவு சொல்றேன் திரும்ப திரும்ப மினி மினின்னுட்டு வராய்… அவ என் தாரா… எனக்கும் அவளுக்கும் இடைல ஆயிரம் இருக்கும்… நீ யார்டா அதை பத்தி பேச…” என பிரணவ் மீண்டும் ஆர்யானை அடிக்கப் பாய,

ஆதர்ஷும் அபினவ்வும் அவனைத் தடுக்க முன் வர அதற்குள் சிதாரா, “நிறுத்துங்க…” எனக் கத்தியதும் பிரணவ் அப்படியே நின்றான்.

பின் பிரணவ்வை நோக்கி சிதாரா வர, ஆர்யான், “மினி… வேணாம் ப்ளீஸ்டா…” என்க, அவன் முன் கை நீட்டி தடுத்தவள் தன் கண்களைத் துடைத்து கொண்டு பிரணவ்விடம் திரும்பி,

“சொல்லு… நீ யாரு எனக்கு… வார்த்தைக்கு வார்த்தை என் தாரா என் தாரானு சொல்லுறாய்… எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்…” என்க,

பிரணவ், “தாரா நீ ஏன் இப்படி எல்லாம் பேசுறாய்… நான் உன்னோட பிரணவ்… நானும் நீயும் ரெண்டு வருஷமா காதலிச்சோம்… ” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு கை தட்டி சிரித்த சிதாரா, “ஓஹ்… காதலிச்சது உண்மை தான்… பட் நான் மட்டும் தான் காதலிச்சேன்… நீ… ச்சீ.. சொல்லவே அசிங்கமா இருக்கு…” என்க,

“ஓக்கே தாரா… எல்லாம் விடு… இந்த நிமிஷம் நான் உன்ன லவ் பண்றேன்… எனக்கு தெரியும் நீயும் என்ன இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்காய்…” என பிரணவ் கூற,

சிதாரா, “நான் எப்படி பிரணவ் நீ சொல்றத நம்புவேன்… எவ்வளவு சீப்பான ரீசன் சொல்லிட்டு விட்டுப் போனாய்…” என அவள் சொல்லி முடிக்கும் முன்னே கண்ணீர் அவள் கன்னத்தைத் தாண்டி ஓடியது.

ஆர்யான், “போதும் மினி… இதுக்கு மேல எதுவும் சொல்லாதே… ப்ளீஸ்…” என்றவனைத் தடுத்தவள்,

“இல்லடா… நான் இன்னெக்கி பேசியே ஆகணும்… எவ்வளவு நாளைக்கு தான் என் மனசுலயே எல்லாம் வெச்சிட்டு இருப்பேன்… இதுக்கு ஒரு முடிவு வேணாம்…” என்ற சிதாரா அழுதவாறே பேசினாள்.

“உன் கிட்ட அன்னெக்கி எவ்வளவு கெஞ்சினேன்… என்ன விட்டுப் போகாதேன்னு… உன் கால்ல கூட விழுந்தேன்…” என உடைந்த குரலில் கூறியவள் திடீரென பிரணவ்வின் சட்டையைப் பிடித்து,

“ஆனா நீ… என்ன வார்த்தையெல்லாம் சொன்னாய்.. இப்ப கூட அதப் பத்தி நெனச்சா…” என சொல்லும் போதே அவளுக்கு மூச்சு வாங்க அனைவரும் அவர்களின் பின்னே நின்றதால் அவர்களுக்கு அவள் முகம் தெரியவில்லை.

பிரணவ் மாத்திரம் அவள் வேகமாக மூச்சு வாங்குவதைக் கண்டவன், “தாரா…” என ஏதோ சொல்ல வர அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தவள், “ச்சீ… இனி என்ன அப்படி கூப்பிடாதே… உனக்கு அந்த தகுதி கூட இல்ல… உன் வாய்ல இருந்து என் பேரு வரதே அசிங்கமா நெனக்கிறேன்.. ” என்றவள்,

பின் அவன் முன் விரல் நீட்டி, “திரும்ப என் லைஃப்ல என்டர் ஆகனும்னு நெனச்ச… அசிங்கமாகிரும்… திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங்…” என்றாள்.

சிதாராவின் பேச்சிலே பிரணவ் தன் தவறு உணர்ந்திருந்தான்.

எதுவுமே கூறாது அவளைத் தடுக்க வழியற்று கண்களில் சோகத்தைத் தேக்கி கல்லாக சமைந்திருந்தான்.

சிதாரா நேராக ஆர்யானிடம் சென்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

அங்கிருந்த யாரும் எதுவுமே பேசவில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்