Loading

அடுத்து வந்த நாட்களில் எல்லாம் பிரணவ் அனுபல்லவியை எப்போதும் தன் முன்னே வைத்திருப்தற்காக இல்லாத வேலைகள் எல்லாம் அவளுக்கு கொடுக்க, மனதில் அவனைத் திட்டித் தீர்த்தாலும் அனைத்தையும் ஒழுங்காக செய்தாள் அனுபல்லவி.

இடைக்கிடையே வேண்டுமென்றே பிரணவ் அனுபல்லவியை சீண்டுவதும் அதில் அவள் படும் அவஸ்தையை ரசிப்பதுமாக இருந்தான்.

அனுபல்லவிக்கு தான் பிரணவ்வின் மாற்றத்திற்கான காரணமும் புரியாமல் அவனின் சீண்டல்களால் உள்ளுக்குள் அவன் மேல் எழும் காதலை மறைக்கவும் முடியாமல் திண்டாடினாள்.

இவர்களுக்கு நடுவில் அர்ச்சனா தான் பிரணவ்வை அனுபல்லவியிடம் இருந்து மொத்தமாக விலக்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள்.

ஆகாஷோ சாருமதியை வெறுப்பேற்றி பதிலுக்கு சாருமதி அவனுடன் சண்டையிடும் நிமிடங்களை எல்லாம் சுவாரசியமாக ரசித்தான்.

சரியாக ஒரு வாரத்தில் அனுபல்லவியின் தலைமையில் பிரணவ்வின் வழி நடத்தலில் மிஸ்டர் மெஹெராவிடம் வாக்களித்த ஒரு மாதத்திலேயே வெற்றிகரமாக அந்த பிராஜெக்டை பிரணவ்வின் குழு நிறைவு செய்தனர்.

இதில் அனுபல்லவிக்குத் தான் ஏகபோக மகிழ்ச்சி. பிரணவ் தன்னை நம்பி ஒப்படைத்த முதல் ப்ராஜெக்டை எந்தவொரு பிரச்சினையும் இன்றி நிறைவு செய்ததால் வந்த மகிழ்ச்சி அது.

ப்ராஜெக்ட் வேலைகள் சிறப்பாக முடியவும் அனைவரையும் மீட்டிங் ஹாலில் ஒன்று கூட்டி இருந்தான் பிரணவ்.

அனைவரும் வந்து அமரவும் அவர்களைப் பார்த்து புன்னகைத்த பிரணவ், “இந்த வன் மந்த்தா எல்லாரையும் ரொம்ப படுத்திட்டேன்னு நினைக்கிறேன்…” என்கவும் அனைவரும் புன்னகைக்க, அனுபல்லவியோ, ‘எல்லாரையும் எங்க படுத்தினீங்க? என்னைத் தானே வெச்சி செஞ்சீங்க…’ என உள்ளுக்குள் கறுவினாள்.

பிரணவ்விற்கு அவளின் முக பாவனையில் இருந்தே அவள் என்ன நினைக்கிறாள் எனப் புரிந்து கொண்டவன் யாரும் கவனிக்காத நேரம் அவளைப் பார்த்து கண் அடிக்க, அனுபல்லவியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அதற்கு மாறாக அவளின் கன்னங்களோ வெட்கச் சதுப்பைப் பூசிக் கொண்டன.

தன் தொண்டையை செறுமிய பிரணவ், “அப்புறம் ஒரு குட் நியுஸ் சொல்லத் தான் உங்க எல்லாரையும் இன்னைக்கு கூப்பிட்டேன்…” என்கவும் அனைவரும் அவனை ஆர்வமாக நோக்க, “நான் எதிர்ப்பார்த்ததை விடவே இந்த ப்ராஜெக்டை நீங்க எல்லாரும் ரொம்ப நல்லாவே கம்ப்ளீட் பண்ணி இருக்கீங்க… வெல் டன் காய்ஸ்…” எனக் கை தட்டவும் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

பிரணவ், “என்ட் ஆல்சோ மிஸ் பல்லவியை கண்டிப்பா நாம பாராட்டியே ஆக வேண்டும்… ஏன்னா இது அவங்க கைட் பண்ற ஃப்ர்ஸ்ட் ப்ராஜெக்ட்… பட் எந்தவொரு குறையும் சொல்ல முடியாத அளவுக்கு அவங்க வர்க்க அவ்வளவு அழகா பண்ணினாங்க…” என்கவும் அங்கிருந்த அனைவரும் அவளுக்காக கை தட்ட, அர்ச்சனாவோ பல்லைக் கடித்து தன் கோபத்தை அடக்கினாள்.

“சூப்பர் டி அனு…” என சாருமதி அவளை அணைத்துக்கொள்ள, புன்னகைத்த அனுபல்லவி எழுந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தாள்.

“சரி இப்போ அந்த குட் நியூஸ் என்னன்னு சொல்றேன்…” என்ற பிரணவ் அனைவரும் அவனின் முகத்தையே ஆவலுடன் நோக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு புன்னகைத்தவன், “இந்த ப்ராஜெக்ட்டை நீங்க சக்சஸ்ஃபுல்லா முடிச்சதால இந்த மந்த உங்க சேலரி டபள் ஆக்கப்பட்டிருக்கு…” என்கவும், “ஹே…..” என அனைவரும் உற்சாகமாகக் கத்தினர்.

ஆகாஷ், “சைலன்ட்ஸ்… சைலன்ட்ஸ்…” என அவர்களை அடக்கவும் அமைதி அடைந்தனர் அனைவரும்.

பிரணவ், “இந்த சக்சஸை செலிப்ரேட் பண்ணும் விதமா உங்க எல்லாருக்கும் நம்ம கம்பெனி சார்பாக இன்னைக்கு லஞ்ச் அரேன்ஜ் பண்ணி இருக்கு… ஹோப் யூ ஆல் என்ஜாய்…” என்று விட்டு முடித்துக் கொண்டான்.

அனைவரும் உற்சாகமாக மீட்டிங் ஹாலில் இருந்து கலைந்து செல்ல, சாருமதியுடன் செல்லப் போன அனுபல்லவியை, “பல்லவி… ஒரு நிமிஷம்…” என தடுத்து நிறுத்தினான் பிரணவ்.

சாருமதியும் அவளுடன் நிற்க, “மிஸ் சாருமதி… நீங்க கிளம்புங்க… பல்லவி கூட இம்பார்டன்ட் விஷயம் ஒன்னு பேச இருக்கு…” எனப் பிரணவ் கூறவும் அனுபல்லவி கண் காட்டவும் சாருமதி அங்கிருந்து செல்ல, அவளுடன் கூடவே பின்னால் சென்றான் ஆகாஷ்.

அனுபல்லவி, “சொல்லுங்க சார்…” என்கவும், “அது… பல்லவி… நாளைக்கு ஈவ்னிங் மிஸ்டர் மெஹெராவோட பார்ட்டி ஒன்னு இருக்கு… அதுக்கு நீங்களும் என் கூட வரணும்…” என்றான் பிரணவ்.

“சார்… நான் எதுக்கு?” எனத் தயங்க, “ஏன்? என் கூட வரது உங்களுக்கு இஷ்டம் இல்லையா? இல்லன்னா நான் உங்களை ஏதாவது பண்ணிடுவேனோன்னு பயப்படுறீங்களா?” என்றான் பிரணவ்.

எவ்வளவு முயன்றும் தன் வார்த்தைகளில் இருந்த கடுமையை பிரணவ்வால் மறைக்க முடியவில்லை. அனுபல்லவி மறுக்கவும் ஏன் என்றே தெரியாத ஒரு கோபம் துளிர் விட்டது.

பிரணவ்வின் கோபத்தில் பதறிய அனுபல்லவி, “ஐயோ அப்படி எதுவும் இல்ல சார்… நான் சும்மா தான் கேட்டேன்…” என்க, “மிஸ்டர் மெஹெரா தான் உங்களை இன்வைட் பண்ணினார்…” என்றான் பிரணவ்.

அனுபல்லவி, ‘அச்சோ அனு… கொஞ்சம் கூட உனக்கு அறிவில்ல… இந்த வன் வீக்கா தான் அவர் உன் கிட்ட நல்லா பேசுறார்… வீணா திரும்ப அவரைக் கோவப்படுத்திட்ட…’ என மனதில் தன்னையே கடிந்து கொண்டவள், “நான் வரேன் சார்… எத்தனை மணிக்கு பார்ட்டி? எங்க நடக்கும்?” எனக் கேட்கவும் மனதில் எழுந்த மகிழ்ச்சியை வெளியே காட்டாத பிரணவ், “ஈவ்னிங் ஃபைவ் அ க்ளாக் போல ரெடி ஆகி இருங்க… நானே உங்களை வந்து பிக்கப் பண்றேன்…” என்றான்.

தானே வருவதாக கூற வந்த அனுபல்லவி பிரணவ்வின் கோபம் நினைவு வந்தவளாய், “ஓக்கே சார்… அப்போ நான் போகட்டா?” எனக் கேட்டாள்.

பிரணவ், “என்ன அவசரம்? கொஞ்சம் இருங்க…” என்றவன் வண்ணக் காகிதத்தால் சுற்றிய ஒரு பெட்டியை அனுபல்லவியிடம் நீட்டவும் அனுபல்லவி தயக்கமாக, “என்ன சார் இது?” எனக் கேட்க, “ஏன்? சொன்னா தான் வாங்கிக்குவீங்களா?” எனப் பிரணவ் சற்று கடுமையாகக் கேட்கவும் சட்டென அவன் கையில் இருந்த பெட்டியை வாங்கிக் கொண்டாள் அனுபல்லவி.

அனுபல்லவிக்கு தெரியாமல் லேசாகப் புன்னகைத்த பிரணவ், “நாளைக்கு இந்த ட்ரெஸ்ஸ போட்டுட்டு ரெடி ஆகிட்டு இருங்க…” என்றான் கட்டளையாக.

“ம்ம்ம்ம்ம்…” எனத் தலையாட்டிய அனுபல்லவி அங்கேயே நிற்க, அவளைப் புருவம் உயர்த்தி கேள்வியாக நோக்கிய பிரணவ், “இன்னும் என்ன?” என்க, “ஆஹ்… ஒன்னும் இல்ல சார்… நான் போறேன்…” என்று விட்டு அவசரமாக அங்கிருந்து சென்றாள்.

அனுபல்லவி சென்றதும் பெருமூச்சு விட்டபடி தன் இருக்கையில் அமர்ந்த பிரணவ், “ஹப்பாடா… ஒரு வழியா அவ எந்த கேள்வியும் கேட்காதது போல பண்ணிட்டேன்… ஒரு கிஃப்ட் கொடுக்க இருக்குற பாடு… ஐயையோ… உன் நிலமை ரொம்ப மோசம்டா பிரணவ்…” எனக் கூறிப் புன்னகைத்தவனின் முகம் திடீரென மாறியது.

தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் வலியை உணர, தலையை அழுத்தப் பற்றிக் கொண்டான்.

சில நிமிடங்கள் கழித்து வலி லேசாக மட்டுப்படுவது போல் இருக்க, ட்ராயரைத் திறந்து தலைவலி மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டான்.

இங்கு சாருமதியைத் தொடர்ந்து வந்த ஆகாஷோ, “ஹேய் குட்டச்சி…” எனக் கத்த, கோபத்துடன் அவன் பக்கம் திரும்பிய சாருமதி அவன் முன் விரல் நீட்டி ஏதோ சொல்ல முயன்றவள் என்ன நினைத்தாலோ கண்ணை மூடி தன்னை சமன்படுத்திக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

சாருமதி அமைதியாகப் போவது ஆகாஷிற்கு ஏதோ போல் இருக்க, ஓடிச் சென்று அவள் முன் நின்று வழி மறித்தான்.

சாருமதி அவனைக் கேள்வியாக நோக்கவும் “ஈஈஈஈ…” என இளித்த ஆகாஷ், “சாரி குட்டச்சி…” என்க, “இங்க பாருங்க ஆகாஷ்… உங்க கூட பேசினாவே சண்டை தான் வருது… தயவு செஞ்சி என்னை டிஸ்டர்ப் பண்ணாம போங்க…” என்றாள் சாருமதி சலிப்பாக.

ஆகாஷ், “மதி… உன் கிட்ட மட்டும் தான் நான் இப்படி நடந்துக்குறேன்… உன்னை சீண்ட எனக்கு பிடிச்சிருக்கு…” என்க, அவனின் பிரத்தியேகமான அழைப்பு சாருமதியில் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ண, அதனை முகத்தில் காட்டாதவள், “ஏன் என்னைப் பார்த்தா உங்களுக்கு லூசு போல தெரியுதா? எப்பப்பாரு ஏதாவது சொல்லி சீண்டிட்டே இருக்க…” என்றாள் முறைப்புடன்.

‘கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டோமோ?’ என எண்ணிய ஆகாஷின் முகம் வாடியது.

“சாரி மதி… இனி உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… பட் நான் உன்ன லவ் பண்றேன்னு சொன்னது நிஜம் தான்… அது விளையாட்டுக்கு சொல்லல…” என்ற ஆகாஷ் அங்கிருந்து நகர, ‘என்ன பட்டுன்னு சாரி கேட்டுட்டு போறான்? விடக் கூடாதே…’ என நினைத்த சாருமதி, “ஹேய் பனைமரம்…” என அழைக்கவும் அவள் பக்கம் திரும்பினான் ஆகாஷ்.

சாருமதி, “என்ன நீ ஈஸியா சாரி சொல்லிட்டு போற? இவ்வளவு நாளா என்னை சீண்டினதுக்கு எல்லாம் பனிஷ்மென்ட்டா இன்னைக்கு உன் பர்ஸை காலி பண்ண போறேன்… மரியாதையா வந்து பில் பே பண்ணுங்க…” என்கவும் ஆகாஷ் சரி எனத் தலையசைக்க, கேன்டினை நோக்கி நடந்த சாருமதி ஆகாஷைக் கடந்து செல்லும் போது, “லவ் பண்ணுறேன்னு சொல்லுவாங்களாம்… ஆனா நம்மள இம்ப்ரஸ் பண்றது போல எதுவும் பண்ண மாட்டார்… சீண்டுறதுல மட்டும் குறைச்சல் இல்ல…” என முணுமுணுத்தவாறு செல்ல, அதனைக் கேட்ட ஆகாஷின் இதழ்கள் தானாக மலர்ந்தன.

************************************

மறுநாள் மாலை தன் வீட்டில் அனுபல்லவி பார்ட்டிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்க, அவளையே புருவம் சுருக்கி பார்த்த சாருமதி, “அனு… இந்த ட்ரெஸ் எப்போ வாங்கின? நான் இதுவரை உன் கிட்ட இப்படி ஒரு ட்ரெஸ்ஸ பார்த்ததே இல்லயே… ரொம்ப ரிச்சா வேற இருக்கு…” என்க, தோழியின் கேள்வியில் தன் முகத்தில் தெரிந்த பதட்டத்தை மறைத்த அனுபல்லவி, “அது… சாரு… நேத்து பிரணவ் சார் மிஸ்டர் மெஹெராவோட பார்ட்டிக்கு இன்வைய்ட் பண்ணி இருக்காங்கன்னு சொன்னதும் வரும் போது வாங்கிட்டு வந்தேன்… அங்க பார்ட்டிக்கு பெரிய பெரிய இடத்துல இருந்து வருவாங்க… அதான் டி நல்ல ரிச் ட்ரெஸ்ஸா வாங்கினேன்… இந்த மந்த் சேலரி கூட டபிளா தருவாங்க தானே… சோ எந்தப் பிரச்சினையும் இருக்காது…” என சமாளிக்கவும் சரி எனத் தலையசைத்தாள் சாருமதி.

சரியாக மாலை ஐந்து மணி வாக்கில் பிரணவ் அனுபல்லவியின் வீட்டின் முன் வந்து ஹார்ன் அடிக்க, கிளம்பத் தயாரான அனுபல்லவியிடம் வந்த சாருமதி, “அனு… பார்த்து பத்திரமா போய்ட்டு வா… உனக்கு இந்த பார்ட்டி எல்லாம் புதுசு… பிரணவ் சார் கூட போறதனால பயம் இல்ல… ஆனா அங்க வர எல்லாரையும் நம்ப முடியாதே… ஜாக்கிரதையா இரு…” என்கவும் புன்னகைத்த அனுபல்லவி, “சரி சாரு… நான் கவனமா இருக்கேன்… நீ எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காதே… தூங்கு… என் கிட்ட தான் இன்னொரு கீ இருக்குல… சரி டி… அப்போ நான் கிளம்புறேன்…” என்று விட்டு புறப்பட்டாள்.

அனுபல்லவி வரும் வரை கார் ஸ்டீரிங் வீலில் விரல்களால் தாளமிட்டபடி இருந்த பிரணவ்வின் விழிகள் இமைக்க மறந்தன.

பிரணவ் நேற்று கொடுத்த பார்டரில் கல் வேலை செய்யப்பட்ட இளஞ்சிவப்பு நிற சாரியில் அதற்கேற்றவாறு பட்டர்ஃப்ளை ஸ்லீவ் ப்ளவுஸ் அணிந்து அவளின் நீண்ட சுருள் கூந்தலை விரித்து மொத்தமாக ஒரு பக்கம் போட்டு அளவான ஒப்பனையில் தோதான நகைகளுடன் நடந்து வந்த அனுபல்லவியை விட்டு பிரணவ்வின் விழிகள் அகல மறுத்தன.

அனுபல்லவி வந்து காரில் ஏறிய பின்பும் பிரணவ் அதே நிலையில் இருக்க, “சார்…” என்ற அனுபல்லவியின் குரலில் தன்னிலை அடைந்து அவசரமாக பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

பிரணவ்வின் பார்வையில் அனுபல்லவியின் மொத்த உடலும் சிலிர்த்து அடங்க, பிரணவ்வோ இரு கைகளாலும் முகத்தை தேய்த்து விட்டவன், ‘இப்படியாடா பிரணவ் பார்த்து வைப்ப? பல்லவி உன்ன பத்தி என்ன நினைச்சி இருப்பா? இதுக்கு முன்ன பொண்ணுங்களை பார்த்ததே இல்லையா? ஓஹ் காட்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப் பிரணவ்…’ என அனுபல்லவியின் பக்கம் அலை பாயும் தன் மனதை அடக்க வெகுவாகப் போராடினான்.

‘ஏன் நான் பார்க்க கூடாதா? எனக்கு இல்லாத உரிமையா?’ என பிரணவ் தன் மனதிடம் கேள்வி எழுப்ப, பிரணவ் இன்னும் காரை உயிர்ப்பிக்காமல் முகத்தை மூடியபடி அமர்ந்திருக்கவும் அவனுக்கு என்னவோ என பதட்டமடைந்த அனுபல்லவி பிரணவ்வின் தோள் தொட்டு, “சார்… என்னாச்சு? ஆர் யூ ஓக்கே?” எனக் கேட்கவும் நிமிர்ந்த பிரணவ், “ஐ… ஐம் ஓக்கே பல்லவி… போகலாம்…” எனக் காரை உயிர்ப்பித்தான்.

அப் பயணம் வெகு அமைதியாகக் கழிய, இருவரின் மனங்களோ மற்றவரின் அருகாமையை எண்ணி உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டன.

அனுபல்லவியின் அருகாமையில் பிரணவ்வின் உடலில் ஹார்மோன்கள் தன் வேலையை சிறப்பாக ஆரம்பிக்க, ஏசி போட்ட காரிலும் அவனுக்கு வியர்த்து வடிந்தன.

இதே நிலை நீடித்தால் நிச்சயம் தன் வசம் இழப்போம் எனப் புரிந்து கொண்ட பிரணவ் அதனைக் கலைக்கும் விதமாக மியூசிக் பிளேயரை ஆன் செய்ய, அதுவும் கூட அவனுக்கு எதிராக செய்தது.

பாடல் வரிகளில் அனுபல்லவியின் முகம் சிவக்க, விஜய் யேசுதாஸின் குரல் அவ் ஏகாந்த நிலையை மேலும் அதிகரிக்க, இருவரின் பார்வையும் தம் இணைகளுடன் கலக்க முயற்சித்தன.

தெளிமானம் மழவில்லின்
நிறம் அணியும் நேரம்
நிறமார்ந்நொரு கனவு என்னில்
தெளியுன்ன போலே

புழையோரம் தழுகும்
தண்ணீரும் காற்றும்
புளகங்ஙள் இழை நெய்‌தொரு
குழல் ஊதிய போலே

குளிரேகும் கனவு என்னில்
கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம்
தளிராடிய நேரம்

அகம் அருவும் மயிலிணைகள்
துயிலுணரும் காலம்
என் அகதாரில் அனுராகம்
பகருன்ன யாமம்

அழகே…!!!
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே…!!!
என்னுயிரில் விடரும் பனிமலரே

மலரே நின்னை
காணாதிருந்நால்
மிழிவேகிய நிறமெல்லாம்
மாயுன்ன போலே

அலிவோடு என் அரிகத்தின்
அணையாதிருந்நால்
அழகேகிய கனவெல்லாம்
அகலுன்ன போலே

ஞானென்றே ஆத்மாவின்
ஆழத்தின் உள்ளில்
அதிலோலம் ஆரோரும்
அறியாதே சூட்சிச்ச

தாளங்கள் ராகங்கள்
ஈணங்களாயி
ஓரோரு வர்ணங்களாயி

இடறுன்னு ஒரென்றே
இடை நெஞ்சின் உள்ளில்
ப்ரணயத்தின் மழையாய்
நீ பொழியுன்னீ நாளில்

தளருன்னு ஒரென்றே
தனு தோறும் நின்றே
அலை தல்லும் ப்ரணயத்தால்
உணரும் மலரே… அழகே…

குளிரேகும் கனவு என்னில்
கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம்
தளிராடிய நேரம்

அகம் அருவும் மயிலிணைகள்
துயில் உணரும் காலம்
என் அகதாரில் அனுராகம்
பகருன்ன யாமம்

அழகே…!!!
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே…!!!
என்னுயிரில் விடரும் பனிமலரே…

இதே நிலை அவர்கள் திரும்பி வரும் பொழுதும் நீடிக்குமா?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்