காவ(த)லன் 24
பொழுது புலர்ந்து குளிர் காற்று மெல்ல இதம் தரும் சூட்டில் வீச, சூரியன் தன் கதிர்களை சன்னலின் வழியே ஊடுருவினான்.
சூரியக் கதிர்கள் சுள்ளென்று முகத்தில் பட தன் உறக்கம் கலைந்த அமரி… எழ நினைக்கையில் முடியாது போகவே, இன்னும் கணவனின் அணைப்பிலேயே இருக்கின்றோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தாள்.
முகத்தில் நாணம் தோன்ற கணவனின் நெஞ்சத்திலேயே முகம் மறைத்தாள். அதில் மேலும் தன்னுடைய மனைவியை தனக்குள் ஆழ புதைத்தான்.
இருவருக்கும் ஒருவரை விடுத்து எழ மனமில்லாது தங்களது உலகத்தில் தனித்திருந்தனர். வெற்றி இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான்.
உறக்கம் கலைந்த அமரி, அவனை விட்டு எழ மனமுமில்லாமல், அவனது அணைப்பில் அவஸ்த்தையையும் இன்பத்தையும் ஒருங்கே பெற்று நெளிந்துக் கொண்டிருந்தாள்.
தனக்குள் கலந்திட்ட தன்னுடைய எழிலை மேலும் மேலும் தனக்குள் பதிந்துக் கொண்டான். கணவனின் பிடியில் வலி ஏற்பட விலக எத்தனித்தவளை எழ விடாது தடுத்திருந்தான்.
“உறக்கத்தில் கூட உன்னை பிரிய விட மாட்டேன்” என்று சொல்லியது அவனின் அணைப்பு.
கணவனின் காதலில் உருகியவள் இரவு நடந்ததை எண்ணி தனக்குள் புன்னகைத்தவளாய் தலை உயர்த்தி கணவனின் கன்னத்தில் முத்தம் வைத்து, “லவ் யூ காவலரே” என சொல்லியவாறே அவனின் மீசை நுனியை பிடித்து இழுத்தாள்.
மனைவியின் செயலில் கண் விழித்த வெற்றி வலித்த போதிலும் சிறு சத்தம் கூட எழுப்பாது, “ஆசை அதிகமாச்சுதுன்னா இப்படி பண்ணனும்” என சொல்லிக்கொண்டே அவளின் கன்னத்தை தன் பற்கள் பதியுமளவிற்கு அழுந்த கடித்தான்.
அமரியின் கண்கள் வலியில் கலங்கிய போதும் அவளின் முகம் முழுக்க மகிழ்ச்சி பரவியிருந்தது.
“காதல் இப்படி வெறித்தனமா இருக்கணும்… நம்மளோட ஒவ்வொரு செயலும் காதலில் ஆழ பதியனும், இப்போ என் பல் தடம் உன் கன்னத்தில் இருக்காப்போல” என்ற வெற்றி,
தனது எழிலின் கண்களில் துளிர்த்த விழி நீரை தன் இதழ் கொண்டு துடைத்து, அவளின் முகம் முழுக்க தன் இதழில் ஊர்வலம் போக, சட்டென்று கணவனின் பிடியிலிருந்து விலகியவள்…
போர்வையை இழுத்து தன்னை மூடியவளாக மெத்தையிலிருந்து இறங்கி…
“நீங்க இப்போ எதுக்கு அடி போடுறீங்கன்னு தெரியுது காவலரே… இரும்பு காவலர் தாங்கலாம், ஆனால் என்னால முடியாது…” என்று இரவு நடந்த தாம்பத்தியத்தின் விளைவால் உடம்பில் ஏற்பட்ட வலியை மனதில் வைத்து பேசிய அமரி அறைக்குள்ளிருந்த குளியலறைக்குள் புகுந்துகொள்ள, வெற்றி சத்தமாக கலகலத்து சிரித்தான்.
அசதியில் வெற்றி மீண்டும் உறங்க கண்களை மூட இரவு நடந்த நிகழ்ச்சி கண் முன்னே, மனைவியின் கொலுசொலி சிணுங்களில் தனது கம்பீரம் துறந்து, அவளின் பெண்மையில் தன்னுடைய ஆண்மை களவு போன காட்சி விரிய இரும்பு காவலனுக்கும் முகத்தில் நாணம் எட்டி பார்த்தது.
நாளை கோவிலுக்கு நீர் எடுக்க போக வேண்டுமென கதிர் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு இரவு வெற்றி அமரியுடன் வந்துவிட்டான்.
அங்கேயே உணவினை முடித்துக்கொண்டு வந்திருக்க, வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு நேராக தங்களது அறைக்கு வந்துவிட்டனர்.
வெற்றி குளியலறைக்குள் நுழை, அமரி வேகமாக சென்று படுத்துக் கொண்டாள்.
வெற்றி வருவதற்குள் உறங்கிட வேண்டுமென தவித்தவளுக்கு உறக்கம் வராது போக்கு காட்டியது.
வெற்றி காதலை சொல்லியது நினைவில் மேலெழும்பி அவஸ்தையைக் கூட்டியது.
‘இன்னைக்கு நைட்டு செம வேலை இருக்கு’ என வெற்றி சொன்னது வேறு நேரம் காலம் தெரியாது காதில் ஒலித்து படபடப்பை தோற்றுவிக்க, அமரி முழுதாய் சுயம் தொலைந்தாள்.
குளியலறை கதவு திறக்கும் சத்தத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
கட்டிலின் அருகில் வந்த வெற்றி, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு மனைவியையே உதட்டில் தோன்றிய குறுஞ்சிரிப்புடன் பார்த்து நின்றான்.
அமரி உறங்கி விட்டதாக காட்டிட முனைய, அவள் உறங்கா அவஸ்தை போர்வையை இறுக்கிப் பிடித்திருந்த அவளது கைகளில் கண்டுகொண்ட வெற்றி வாய்விட்டு சிரித்தான்.
வெற்றியின் சிரிப்பு சத்தத்தில் ஒற்றை கண்ணை மட்டும் அமரி திறந்து பார்க்க, வெற்றியின் முகம் மிக நெருக்கமாய் அவள் கண் முன்.
“ராஸ்கல்… என்கிட்டே நடிப்பா?” அவளின் கன்னம் கிள்ளினான்.
“ஆத்தீ…” என நெஞ்சில் கை வைத்து பதறி எழுந்தவளின் கரம் பற்றி இழுத்து தன் மேல் போட்டிருந்தான். அவள் உணரும் முன்பே.
“அப்படி என்ன பண்ணிடுவேனாம்… ஹான்?”
வெற்றி குறும்பாய் கேட்டிட…
அவளை அவன் உரசலில் தீப்பிடிக்க, அவனது கைகளில் நெளிந்தாள்.
“அசையாத எழில்… உருக்குற.”
வெற்றி சொல்லியதும் தான், தான் முழுதாக அவன் மீது படுத்திருப்பது உணர்ந்து, வெட்கம் கொண்டவளாக அவனது மார்பிலே தன் முகம் புதைத்தாள்.
“நம்ம வேலையை பார்ப்போமா?” வெற்றி ஹஸ்கி குரலில் கேட்க,
“அச்சோ” என்று அவன் உதட்டில் கை வைத்து மூடினாள்.
“எழிலுக்கு வேண்டாமா?” வெற்றியின் உதடு அவளின் கையில் குறுகுறுப்பை ஏற்படுத்த, கையை வேகமாக விலக்கினாள்.
“ஏனாம்? கையில் மட்டுமில்லை…” என்ற வெற்றி மெல்ல அவளுக்கு மட்டுமேயான ரகசியம் பேசிட, “அச்சோவ்” என்று அவனுள்ளே தன்னை ஒப்புவிக்கத் தொடங்கினாள்.
காத்திருப்பின் சுவை அதீதம். அதன் தித்திப்பை துளி மிச்சமின்றி தன்னவளினுள் சேர்ப்பித்து , தனக்குள் கடத்தி, இருவரின் நெஞ்சமும் நிறைய கரை சேர்ந்தனர்.
யாருக்குள் யார் அடங்கி ஆட்சி செய்தனர் என்பது அவர்களுக்கே உரித்தானது.
இரவின் இனிமை இப்போதும் முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது.
‘இப்போ மட்டும் தன்னுடைய முகத்தை கதிர் பார்த்தால் அவ்வளவுதான்’ என நினைத்த வெற்றி மேலும் உறங்க பிடிக்காது எழுந்து பின்கட்டில் பொதுவாக இருக்கும் குளியலறைக்கு சென்றான்.
அமரி குளித்து முடித்து வரும் போது, வெற்றி கண்ணாடி முன்பு நின்றிருந்தான். சீப்பினை வைத்து அவன் முடியை அழுந்த வாறிக் கொண்டிருக்க, அவனுக்கும் கண்ணாடிக்கும் இடையில் நுழைந்த அமரி, வெற்றியின் கையிலிருந்த சீப்பினை வாங்கி மேசையில் வைத்து விட்டு, தன் கையினால் அவனின் சிகையை கலைத்து சரி செய்தாள்.
“போலீசுன்னா எப்பவும் படியதான் முடியை சீவியிருக்கனுமா” எனக் கேட்டவள்… “அன்னைக்கு பஞ்சாயத்துல ஒரு குதி குதிச்சு வேட்டியை மடிச்சு கட்டுனப்போ, உங்க கேசம் காற்றில் அலை அலையாய் முன்னுச்சியில் வந்து விழுந்தப்போ செமயா இருந்துச்சு” என அவனை ரசித்த நொடியை தன்னையறியாது கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அப்படியா?” எனக் கேட்டுக்கொண்டே அமரியின் இடையை நோக்கி கையை கொண்டு செல்ல, அவன் கை உரசியதில் கண்களை இறுக மூடி நின்றாள்.
ஆனால் அவனோ அவளுக்கு பின்னால் கண்ணாடி மேசையிலிருந்த பை ஒன்றை எடுத்து,
“எழில்” என்று மென் குரலில் அவளின் காது மடலில் தன் இதழ் உரச அழைத்தான்.
“நீங்க எழிலுன்னு சொல்லும் போது, ஒவ்வொரு முறையும் அந்த பெயரில் காதல் அதிகரிப்பது போலவே இருக்கு” என்றவாறு கண்களை திறந்தவளுக்கு முன், பையை நீட்டினான்.
அதனை பெற்றுக்கொண்டவள் என்னவென்று பார்க்க, அழகிய புடவை அதிலிருந்தது.
“நல்லாயிருக்கு காவலரே, உங்களுக்கு இந்தளவுக்கு ரசனையா புடவையெடுக்கத் தெரியுமா?” என ஆச்சரியமானவள் “எனக்கா” எனக் கேட்டிருந்தாள்.
மனைவியை முறைத்து பார்த்து,
“உனக்கில்லை என் பொண்டாட்டிக்கு” என்றவன்…
“மனசுக்கு புடிச்ச பொண்ணுக்குன்னு வாங்கும்போது ரசனை அதிகமாகவே வெளிப்படும்” என மனைவியின் முகத்தில், தான் புடவை வாங்கிக் கொடுத்ததால் ஏற்பட்ட மகிழ்வினை ரசித்துக் கொண்டேக் கூறினான்.
“இன்னைக்கு இதையே கட்டிக்கோ” என்று வெற்றி சொல்ல, சரியென்ற தலையாட்டாலுடன் கணவனின் கால் மீதி ஏறி நின்று அவனின் கன்னத்தில் முத்தம் வைத்தவள்…
“நன்றி காவலரே” என ஆடை மாற்ற ஓடிவிட்டாள்.
ஓடும் மனைவியை கண்களில் காதல் பொங்க பார்த்திருந்தான்.
அவன் எதிர்பார்த்த காதல் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் அழகாக நடந்தேற வெற்றி மகிழ்ச்சியில் திளைத்தான்.
ஒவ்வொரு நொடியையும் தனது எழிலோடு காதலாய் அனுபவித்தான்.
ஐந்து நிமிடங்களில் புடவை அணிந்து, முகப்பூச்சு எதுவுமின்றி நெற்றியில் வைத்த சிறு புள்ளி பொட்டோடு வெற்றியின் முன் வந்தவள், “எப்படியிருக்கு காவலரே” என்க,
தனது எழிலை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் துளையிட்டவன், “நல்லாயிருக்கு” என்றான்.
தான் வங்கிக்கொடுத்த புடவையில் எவ்வித ஒப்பனையுமின்றி அவனுக்கு தேவதையாக தெரிந்தால் அவனது எழில்.
வெற்றி “நல்லாயிருக்கு” என்று ஒற்றையாய் சொல்ல,
“அவ்வளவுதானா?” என முகம் சுருக்கி அமரி கேட்டதில் மனைவியை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்த வெற்றி அவளின் நெற்றியில் முட்டி “நான் சொன்னா மட்டுந்தான் நீ அழகுன்னு உனக்குத் தெரியுமா?” என்க…
“இங்க நான் எதுவும் பார்க்கவில்லை” என்ற சசியின் குரல் அறையின் வாயிலில் ஒலித்தது.
சசி என்று அறிந்து அமரி வெற்றியிடமிருந்து நகர முயற்சித்தவாறே சசியை “கரடி” என முணுமுணுக்க, வெற்றி அவள் நகர இடமளிக்கவில்லை.
“நீ பார்த்தாலும் எனக்கொன்றுமில்லை” என்று சசியிடம் கூறிய வெற்றி, அமரிக்கு தன் விரலினால் குங்குமம் எடுத்து அவளின் நெற்றி வகிட்டில் வைத்தான்.
“செம ஸீன் அண்ணா” என கைத்தட்டிய சசி… “உனக்குள்ள இப்படியொரு ஆளை நான் எதிர்பார்க்கவில்லை” என்றான்.
அதற்கு வெற்றியிடத்தில் சன்னமான குறுநகை மட்டுமே பதிலாக வந்தது.
“தாத்தா கூட்டியாற சொன்னாங்க அண்ணா, நேரமாச்சுதாம்” என சசி தான் வந்த விடயத்தைக் கூற… வெற்றி முன் செல்ல அமரி சசியோடு பின் சென்றாள்.
“எதுக்கு என்னை கரடி சொன்ன?” சசி, அமரியிடம் சிறு பிள்ளை போல் வினவினான்.
“நீயும் கல்யாணம் இல்லை காதல் பண்ணு, இந்தக் கரடிக்கான அர்த்தம் அப்போ விளங்கும்” என்று அமரி சொல்ல,
“அதுக்குதான் குடுத்து வைக்கலையே” என்ற சசியின் பெருமூச்சு அனலாய் வீசியது.
அவனின் பாவனைகள் அமரிக்கு சிரிப்பை வரவழைத்தது.
சசியை பார்த்து சிரித்துக்கொண்டே அமரி படியில் கால் வைக்க தடுமாறி கீழே விழ இருந்தவளை, மனைவியின் மீதே கவனம் வைத்தவாறு அவளுக்கு முன் சென்று கொண்டிருந்த வெற்றி நொடியில் திரும்பி அவளை பிடித்திருந்தான்.
கீழே விழுந்து விடுவோம் என்கிற பயத்தில் மருண்டு விழித்தவளை நிலையாக நிற்க வைத்தவன்,
“படியில் பார்த்து நடக்கனும் தெரியாது,” என கடிந்து கொண்டான்.
அருகிலிருந்த சசியை முறைத்தான்.
வெற்றியின் முகத்தில் விரவியிருந்த கோபத்தைக் கண்டவள், “கோபத்தில் கூட நீங்க அழகுதான் காவலரே” என்று சொல்லி அவனின் கன்னத்தை கிள்ளி செல்ல, அடுத்த கணம் வெற்றி கோபம் மறைந்து புன்னகைத்தான்.
வெற்றியின் கோபம் அவ்வளவு எளிதில் போகக் கூடியதில்லை என்பது தெரிந்திருந்த சசி அவனின் நொடிப்பொழுது சிரிப்பினை ஆச்சரியமாகக் கண்டான்.
“உங்களை அடக்கவும் ஒரு ஆள் வந்திருச்சு போல” என்று சசி கூற,
“போடா போ” என்று சசியின் முதுகில் தட்டினான் வெற்றி.
வெற்றி, அமரி… இருவரின் முகத்தை வைத்தே அவர்களின் வாழ்வு தொடங்கி விட்டது என்பதை தனது அனுபவித்தினால் அறிந்த செண்பகம் பாட்டி இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று அமரியை விளக்கேற்ற வைத்து தம்பதியரை ஆசிர்வதித்தார்.
அவரைத் தொடர்ந்து மூத்த உறுப்பினர்கள் அனைவரும் ஆசி கூற, கோவிலை நோக்கிச் சென்றனர்.
“சக்தி எங்க?” என வெற்றி கேட்க,
“அவன் ஆளு கோவிலுக்கு வந்துட்டதா போன் வந்துச்சு பய சிட்டா பறந்துட்டா(ன்)” என்று சசி பதில் சொல்ல நல்லு பார்த்த பார்வையில் வெற்றியின் பின்னால் ஒளிந்து கொண்டான்.
“நிச்சியத்துக்கு முன்னுக்க பொண்ண பார்க்க போனது அவரு… சசியை எதுக்கு மொறைக்கிறீங்க மாமா” என சசிக்கு அமரி பரிந்து பேச…
“உன் கொழுந்தன நான் ஒன்னும் சொல்லலத்தா” என்று மருமகளின் வார்த்தைக்கு பணிந்தார் நல்லு.
“எல்லாம் சொல்லுறவங்க சொன்னாதான் கேட்கிறாங்க” என சசி முணுமுணுக்க, “நீ சொன்னது எனக்குக் கேட்டுச்சு” என்று நல்லு சொல்ல… அதன் பிறகு கோவில் சென்றும் மூடிய வாயினை சசி திறக்கவில்லை.
அருவிக்கு அருகிலுள்ள பாறை மறைவில் மதி அமர்ந்திருக்க அவளுக்கு நேரே பாறை மீது, வீட்டு உறுப்பினர்கள் வந்தால் அவர்கள் தெரியுமாறு சக்தி அமர்ந்திருந்தான்.
“இப்போ எதுக்கு உத்து உத்து பார்த்திட்டு இருக்க?” வந்து கிட்டத்தட்ட அரை மணியாகியும் சக்தி எதுவும் பேசாதிருக்க மதி சற்று கடுப்பானாள்.
“உன்னை இப்படி பார்த்துக்கிட்டே கிடக்கணும் போல இருக்கு மதி” என்று சக்தியின் வாய் மொழிந்ததே தவிர அவனிடத்தில் எவ்வித அசைவுமில்லை.
“அப்போ பார்த்துக்கிட்டே கிட” என்றவள் வேகமாக அங்கிருந்து வெளியேற, அவளின் கையை பிடித்து சக்தி இழுப்பதற்கும்… கோவிலுக்குள் நுழைய கால் வைத்த நல்லு பார்ப்பதற்கும் சரியாக இருந்தது.
“பெரிப்பா கிட்ட மாட்டுனாண்டா” என்று சசி மனதில் நினைக்க, நல்லு சேதுவை அர்த்தமாக பார்த்தார்.
“அடேய் சக்தி”… சசியின் குரல் வந்த திசையை நோக்கிய சக்தி பட்டென்று மதியின் கையை விட்டுவிட்டு குடும்பத்துடன் இணைய,
“கொஞ்சம் பார்த்து நடந்துக்க சக்தி,” என்றதோடு சேது, நல்லு மற்றும் வெங்கடாசலத்தை தொடர்ந்து கோவிலுக்குள் சென்றுவிட…
“கல்யாணம் ஆகற வர கொஞ்சம் பொருடா” என்ற வெற்றி சக்தியிடமிருந்து யாருக்கும் தெரியாது துப்பாக்கியினை வாங்கி தனது இடையில் சொருகினான்.
“என்னடா நடக்குது இங்க” எனக் கேட்ட சசியிடம், “எல்லோரும் வரும்போது துப்பாக்கி எடுத்து வந்தால் பெரியப்பாரு திட்டுவாங்கன்னு… என்னை முன்னுக்க எடுத்துட்டு போக சொன்னாங்க, ஏன்னு எனக்கும் தெரியாது” என்று சக்தி கூறினான்.
ஏற்கனவே கோவில் மண்டபத்தில் தங்கவேலுவின் குடும்பம் அமர்ந்திருக்க அவர்களுடன் இவர்களும் சேர்ந்தனர். அன்னமும், பஞ்சுவும் அமரியிடம் பேச… ஜானகியும், செண்பகமும் வாணியின் நலம் விசாரித்தனர்.
பூசாரி, “இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறது” என்று சொல்ல கோவிலின் பின் பகுதிக்கு சென்ற வெற்றி ராமிற்கு அழைத்தான்.
இரண்டு நிமிடங்களில் பேசிவிட்டு திரும்பியவன் தனக்கு பின்னால் கதிர் நின்றிருப்பதை பார்த்து,
“ஏதோ நடக்க போற மாதிரி தோணுது மச்சான்” என்றான்.
“உன்னால சொல்ல முடியாத விடயமென்றால் விடுடா, அதைவிட்டு எதுக்கு இந்த மழுப்பலான வார்த்தை” என கதிர் சொல்ல,
“எனக்கே இது இன்னும் உறுதியா தெரியல, நடந்தாதான் என்னன்னு தெரியும். தெரியாத ஒன்றை சொல்லி உன்னையும் ஏன் குழப்பனும் அதான்” என்று வெற்றி தான் மறைக்க நினைத்ததற்கான காரணத்தை வெளிப்படையாக கதிரிடம் கூறினான்.
பெண்கள் அனைவரும் வாணியின் பேறு காலத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க, அமரி வெற்றியைத் தேடி கோவில் முழுக்க நடந்தாள்.
“யாரை தேடுற” என்ற சசியிடம்,
“உங்க அண்ணனைதான்” என்றாள்.
“எதுக்கு?”
“எதுக்கோ!”
“கோவில் பின்னுக்க போனாங்க” என்றுக் கூறிய சசி தங்க சங்கிலி ஒன்றை அமரியிடம் நீட்டி “போட்டுக்கோ” என்றான்.
அமரி ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கவில்லை. அவன் நீட்டியதும் வாங்கி கழுத்தில் போட்டுக்கொண்டாள்.
“நீ வாங்க மாட்டேன்னு நினைச்சேன்.”
“கொடுத்தது நீயாச்சே” என்றவள்,
கலங்கிய கண்ணை சசி துடைப்பதை கவனித்து விசாரிக்க…
“பெரியப்பாரு என்னை கூட்டி வந்தப்போ எனக்கு சொந்தமா இருந்தது இந்த சங்கிலி மட்டுந்தான், இது என்னை பெத்தவங்க எனக்கு போட்டதா இருக்கலான்னு இத்தனை வருசமா பத்திரமா வச்சிருந்தேன்” என்று சொல்லியவன்…
“எனக்கு எல்லாமே வெற்றி அண்ணாதான், அண்ணனுக்கு பாசத்தை வெளிக்காட்ட தெரியாதே தவிர எனக்கு எப்போ என்ன தேவைன்னு இந்த நொடி வரை சரியா செஞ்சிருக்கு… அடுத்த நிமிடம் எனக்கு ஏதாவது தேவைப்பட்டால் கூட, நான் சொல்லுறதுக்கு முன்ன அண்ண செஞ்சிடும்… அண்ணனுக்கு வர போற பொண்ணு நான் யாருன்னு தெரிஞ்சு என்னை இந்த குடும்பத்திலிருந்து பிரிச்சிடுன்னு சின்ன கவலை இருந்துச்சு… ஆனால் இப்போ சுத்தமா எனக்கு அந்த கவலை இல்லை. என்னைப் பற்றி தெரிஞ்சும், என்கிட்ட எதுவும் கேட்காம ஒரு சகோதரனா என்னை நீ நினைக்கிறது… எனக்குன்னு ரத்த சொந்தம் கிடைச்ச மாதிரி இருக்கு, இப்போ போலவே நீ எப்பையும் இருக்கணும்” என்று நீளமாக பேசி முடித்தவன் கண்கள் குளம் கட்டியது.
அமரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, ஆனால் அவனின் தற்போதைய மனநிலையை மாற்ற வேண்டும் என நினைத்தாள்.
“நீ அழுதா நல்லாவேயில்லை… எப்பவும் போல கலகலன்னு இரு, நீயில்லாமா நம்ம குடும்பம் இல்லை… நீ வருத்தப்படுறன்னு தெரிஞ்சாலே எல்லோரும் வாடிப்போவாங்க” என்று ஆறுதல் சொல்லிய அமரி அவனின் கண்களை துடைக்க,
“என்ன ஓவர் சென்டிமென்ட் சீனு போலவே” என கலாய்த்தவாறே வெற்றி வந்தான்.
“எத்தனை தரம்டா சொல்லுறது… நீயும் சேர்ந்துதான் நம்ம குடும்பமுன்னு, இனி இந்த மாதிரி பேசிக்கிட்டு திரிஞ்ச அப்பாரு கிட்ட சொல்ல வேண்டியது இருக்கும்” என்ற வெற்றி அமரியிடம் சசி சங்கிலியை கொடுத்த போதே அங்கு வந்திருந்தான்.
“அண்ணா” என்று சசி வெற்றியை அணைக்க, அவர்களை அழைத்து வர அங்கு வந்த சக்தி,
“என்னை விட்டுட்டு என்ன பண்ணுறீங்க” என்றவாறு இருவரையும் சேர்த்து அணைத்தான்.
“அன்னைக்கு ராவு வெற்றியை நான் புடிச்சதுக்கு என்னவோ சொல்லிட்டு, இன்னைக்கு நீங்க என்னடா பண்ணுறீங்க” என கதிரும் அவர்களிடம் வர,
“அப்படியே ஓடிடு” என்று கதிரை பார்த்து சொல்லிய வெற்றி மற்ற இருவரையும் பிரிக்க முயற்சிக்க…
வெற்றி சொல்லியதை காதில் வங்காதவாறு அவர்களின் அணைப்பில் கதிரும் அடங்கினான்.
கோவிலில் இருப்போரெல்லாம் நால்வரையும் பார்த்து சிறு நகையோடு கடந்து செல்ல, நல்லு தனது செருமலுடன் அங்கு வந்தார்.
அவரின் சத்தத்தில் வெற்றியை விட்டு மற்ற மூவரும் பிரிந்து நிற்க,
“எப்போபாரு செருமறது இல்லாட்டி மொறைக்கிறது” என வழக்கம்போல் சசி சக்தியிடம் புலம்ப,
“என்னத்தா, எல்லா நாளும் எங்கள் வீட்டில் கார்த்திகை அப்படின்னு பாட்டு எங்கேயோ கேட்குது போலிருக்கே” என்று அமரியிடம் நல்லு கேலியாகக் கேட்க,
“ஆமாம் மாமா, ஆனா இதுங்க பண்றத பார்த்தாக்க ஒரு படமே எடுக்கலாம்” என அமரியும் அவருடன் சேர்ந்து கலாய்த்தாள்.
“உங்களால மானமே போச்சுடா” என்று வெற்றி தலையில் தட்டிக்கொண்டு நகர, மற்ற மூவரும்…
“ரொம்ப ஓவராதான் போயிட்டோமோ” என்றவாறு நல்லுவை காணததை போல் அங்கிருந்து நகர்ந்தனர்.
“என்னப்பா நல்லு இந்த வயசுல புள்ளைகளை கேலி செய்துகிட்டு” என்று கேட்டுக்கொண்டே வந்த விநாயகம் “எல்லாம் தயாரா இருக்குப்பா வா போவோம்” என்க அனைவரும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் அம்மன் சிலை முன்பு சென்று நின்றனர்.
இதுநாள் வரை எதிரும் புதிருமாக இருந்த இரு குடும்பமும் ஒண்ணுக்குள் ஒண்ணாக இருப்பதைக் கண்ட மக்களும் ஒன்றாக சேர்ந்து முழுமனதுடன் அம்மனை வணங்க பூசாரி கற்பூர ஆராதனை காட்டினார்.
அனைவரும் பக்தியுடன் கண் மூடியிருக்க, மெல்ல வெற்றியை கூட்டத்திலிருந்து வெளியே அழைத்து வந்த அமரி, “கால் வலிக்குதா” என்று கேட்டுக்கொண்டே குனிந்து வெற்றியின் காலை ஆராயந்தாள்.
“வலியெல்லாம் அதிகமில்லை எழில், நேற்றுக்கு இன்று பரவாயில்லை” என்றான்.
“மலையேறி போகணும்… பாதை கரடுமுரடா இருக்கும் அதான், வலி அதிகமாகிட்டா” என தன்மீது அக்கறையாகக் கேட்ட மனைவியை காதலாக நெருங்கிய வெற்றியை
“அண்ணா தாத்தா கூப்புடுறாங்க” என்ற சசியின் விளிப்பு தடுத்து நிறுத்தியது.
அமரி ஏதோ சொல்ல வாய் திறக்க, கை நீட்டி தடுத்த சசி “கரடி… அதானே சொல்லப்போற, அப்புறம் சொல்லிக்கலாம் வாங்க” என்று முன்னால் சென்றான்.
தீபாராதனை முடிந்து அம்மனின் மடியிலிருந்து எடுக்கப்பட்ட மாலைகளை வெற்றி மற்றும் கதிருக்கு அணிவித்து, பரிவட்டம் கட்டிய பூசாரி… சிறு பித்தளை குடம் ஒன்றை இருவரின் கையிலும் ஒன்றுபோல் அளித்தார்.
புறப்படும் வேளையில் சக்தியிடம் குடும்பத்தையும் சசியிடம் அமரியையும் கவனமாக பார்த்துக்க சொல்லிக் கூறினான்.
“உன்னால ஊரே ஒண்ணா நிக்குறத பாக்க சந்தோஷமா இருக்கு வெற்றி… இதே மன நிறைவோடு திருவிழாவும் நல்லபடியா நடக்கணும்” என்றுக் கூறியவாறு செல்லச்சாமி இருவருக்கும் விபூதி வைத்து வழி அனுப்பினார்.
கோவிலைத் தாண்டி அருவி மலை பாதையில் கால் வைத்த வெற்றி தனது எழிலை பார்த்து வருகிறேன் என்பதாக தலையசைத்துச் சென்றான்.
இருவரின் உருவமும் மறையும் வரை பார்த்திருந்த கூட்டம் அவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்க… கூட்டத்தில் மறைந்து நின்றிருந்த ஒருவன் மட்டும் வெளியே நழுவினான்.
“ஐயா அந்த பய கிளம்பிட்டாங்க” என்று அவன் யாருக்கோ அலைபேசியில் தகவல் அளிக்க, அந்தப்பக்கம் இடியென சிரிப்பு சத்தம் கேட்டது.
“இன்னும் செத்த நேரத்துல அந்த போலீஸ்காரன் செத்துட்டாங்கிற செய்தி என்னை சந்தோஷப்படுத்த போகுதுடா” என்றவன் வெற்றி இறந்து கிடப்பதைப்போல் கற்பனையில் நினைத்து பார்த்து அகம் மகிழ்ந்தான்.
அமைச்சர் வெளியில் வராதபடி உள்ள போட்டுட்டாங்க அதனால அவன் இருக்க வாய்ப்பு இல்ல ஒருவேளை வெற்றி முதல் வேப்பிலை கையில சுத்த அந்த போலீஸ்காரனா இருப்பானோ 🙄🙄