Loading

இமை..9

 

எழிலிற்கு அடிபட்டது தெரிந்ததும் அவளை இன்னும் மருத்துவமனை அவளை மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறிய விஜய்க்கு அதற்கு மேல் வேலை செய்ய மனமில்லாமல், எழில் சேர்ந்திருந்த மருத்துவமனைக்கு தன் காரை விரைந்து செலுத்தினான்..

 

 

தான் அங்கு அவளை பார்க்க சென்றால், அந்த அஷ்வின் எதாவது இடைஞ்சல் செய்வானோ என்று நினைத்து ஒரு நொடி தயங்கியவன், மனம் போகும் போக்கை நினைத்து தடுமாறியது சில நிமிடங்களே.. “அடே விஜி நீயாக யாரோ ஒருவனை பார்த்து பயப்படற?. அவன் மனம் வியப்பாக வினா எழுப்ப, இது பயம் இல்லை.. என்னால லிட்டில் கேர்ள் கஷ்டப்பட கூடாது என்ற நல்ல எண்ணம் தான்..” என்று அவன் மனதின் கேள்விக்கு பதில் கூற,

 

 

“ஆஹன்..!! அன்னிக்கு அம்மா கிட்ட என்னமோ சொன்னியே எனக்கு பிடிச்சிருந்தா அந்த பொண்ணே தடுத்தாலும் அவளை மீறி தூக்கிட்டு வருவேன்னு.. இப்ப என்னமோ இப்படி பதுங்கற?. என அவன் மனசாட்சி கேலி செய்ய இப்பவும் அதேதான் சொல்றேன் எனக்கு பிடிச்சிருந்தா கண்டிப்பா அவ மறுப்பை மீறி நான் தூக்கிட்டு வருவேன் ஆனா இந்த பிடித்தம் வேற.. ஒரு அழகான பூவை ரசிப்பது போல், துறுதுறுன்னு இருக்கிற குழந்தை ரசிப்பது போல்.. லிட்டில் கேர்ளும் என் ரசனைக்கு உரியவள்..

 

 

இப்போ அவளுக்கு ஆபத்து வந்திருக்கு.. அந்த குழந்தை முகம் வேதனையில் முகம் சுளிக்க இருப்பது பார்த்துட்டு எப்படி பார்த்திட்டு நான் சும்மா இருப்பேன்..? மனதின் கேள்விக்கு பதில் கூறிக்கொண்டு 

 

 

”ம்கூம் என்ன ஆனாலும் லிட்டில் கேர்ளை ஒரு முறை நேராக பார்த்துவிட்டால் போதும்..” என்று உறுதியாக நினைத்து இதோ காரை கன்னியாகுமரி நோக்கி செலுத்தினான்.. சில மணி நேரங்களில் கன்னியாகுமரி வந்தவன், நேராக எழில் இருந்த மருத்துவமனை வந்தவன், தன் ஆட்களுக்கு அழைத்து எழில் இருக்கும் அறையை விசாரித்து அங்கு செல்ல,

 

 

“ஆ..ஆ.. அம்மா வலிக்குது.. ரொம்ப வலிக்குது.. முகமெல்லாம் ரொம்ப வலிக்குதே.. கண்ணை திறக்க முடியல.. கால் வலிக்குது.. கை எறியுதே..” என்ற எழில் அலறலை கேட்டு, எழிலை பார்க்க வந்த விஜய் அறை வாசலில் அப்படியே ஆணி அடித்தாற்போல நின்று விட்டான்..

 

 

 

“இந்த பொண்ணுக்கு தெரிஞ்சவங்க யாராவது கூட வந்திருக்காங்களா?.. மருத்துவர்  நர்ஸிடம் விசாரிக்க, “இல்லை டாக்டர் யாரும் வரல யாரோ கொண்டு வந்து இவங்களை சேர்த்தாங்க.. இவங்கள பார்த்தால் ஏதோ கேங் ரேப்..” என்று நர்ஸ் மருத்துவரிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே.. “

 

 

 

ஸ்டாப் தட் நான்சன்ஸ்.. பேஷண்ட்டை நீங்க செக் செஞ்சீங்களா?..”  கோபமாக கேட்டபடி உள்ளே வந்த விஜய்யிடம், “அது வந்து சார் இவங்கள நாலுபேர் கடத்தி ட்ரெஸ் கிழிச்சு, இவங்களை கார்ல இருந்து கீழ தள்ளி விட்டாங்களே.. அப்போ எதுவும் நடந்திருக்காதா?..” என்று அவனிடமே அந்த நர்ஸ் கேட்க,  

 

 

ஓ அப்போ செக் பண்ணாமலே நீங்களா ஒரு முடிவுக்கு வந்துட்டிங்க அப்படிதான?..” என்று ஏளனமாக கேட்க, “இல்ல சார் அது வந்து..” நர்ஸ் பதில் சொல்ல முடியாமல் தயங்க “நீங்க படிச்சு தான நர்ஸ் வேலைக்கு வந்திங்க?.. இல்லை எதாவது திருட்டுத்தனம் செஞ்சு இந்த வேலைக்கு வந்திங்களா?.. ஒரு பேஷண்ட் முன்னாடி என்ன பேசணும்?.. 

 

 

“எப்படி பேசணும் என்று பேஸிக் மேனர்ஸ் கூட தெரியாதா?..” என்று எழிலுக்கு கேட்காத வண்ணம் அடிக்குரலில் சீறியவன், “எங்கே உங்க லைசென்ஸ் காமிங்க இப்பவே உங்க லைசென்ஸ் கேன்சல் செய்ய சொல்றேன்..” என்று வார்த்தையில் வாள் எடுத்து வீசியவன், தன் செல்ஃபோனை எடுக்க 

 

 

இவனின் கோபத்தில் நடுங்கிய நர்ஸ், “சார் .. சார் பிளீஸ் சார் இனி இப்படி நான் செய்ய மாட்டேன் இந்த ஒரு தடவை மன்னினிச்சிடுங்க சார்..” இன்று வெகுவாக மன்னிப்பு வேண்ட, அந்த மருத்துவரும் கூட சேர்ந்து விஜய்யிடம் மன்னிப்பு கேட்கவும், அவன் கோபம் சற்று மட்டுப்பட்டு அவன் கவனம் இப்போது எழில் மீது திரும்பியது..

 

 

அவள் முகத்தை பார்த்தவன் நெஞ்சம் அதிர உள்ளுக்குள் துடித்தான்.. மாசு மரவற்ற குழந்தை முகம் என்று எந்த முகத்தை ரசித்தானோ இன்று அந்த முகத்தை சிதைத்த கயவர்களை உயிரோடு சித்ரவதை செய்ய மனம் துடித்தது.. வலியில் துடித்துக் கொண்டிருந்த எழிலை கண்டு மனம் வலிக்க, 

 

 

“லிட்டில் கேர்ள்!!..” என்று தனக்குள் முணுமுணுத்தபடி அவள் அருகில் வந்தவனிடம், மருத்துவர் “சார் நீங்க யாரு?.. இவங்களுக்கு என்ன வேணும்?.. என்று மருத்துவர் கேட்க,  “அவங்க அஷ்ஷி.. என் அஷ்ஷீ.. அவங்க வந்துட்டாங்களா?.. அஷ்ஷீ என்னை விட்டு எங்கேயும் போய்டாதிங்க.. எனக்கு பயமாக இருக்கு.. அவங்க மறுபடியும் இங்க வந்திடுவாங்க.. எனக்கு பயமாக இருக்கு ரொம்ப வலிக்குது..” என்று காற்றில் கைகளை நீட்டி அவனை துழாவி அழுதவளிடம் தன் கரங்களை கொடுக்க 

 

 

அவன் கரங்களை இறுக பற்றிய எழில் “அஷ்ஷீ எனக்கு ரொம்ப வலிக்குது தாங்கவே முடியல..” என்று சிறு குழந்தை போல் உதடு பிதுக்கி அழுது அரற்றி கொண்டிருந்தவளை காண முடியாமல் முகம் திருப்பிய விஜய்

 

 

“ரொம்ப வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்காங்க நீங்க சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டே இருக்கீங்க ஏதாவது செஞ்சு வலியை குறைங்க..” விஜய் மருத்துவரிடம் கோபமாக கூற “சார் நாங்க என்ன செய்ய மயக்க மருந்து கொடுத்தும் தூங்காமல் இருக்காங்க.. எங்களோட ட்ரீட்மெண்ட்டுக்கு ஒத்துழைக்க மாட்டிகிறாங்க அவங்க ஆழ் மனதின் பயம் அவங்களை தூங்க விடல..‌ இவங்க அமைதியாக இருந்தா மட்டும் தான் எங்களால் மேற்கொண்டு ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்..” கூறிய மருத்துவர், 

 

 

எழில் விஜய்யின் கரம் பிடித்ததும் அரற்றல் குறைந்தது வலியில் முணங்கி கொண்டு இருக்க “அவங்க இவ்வளவு நேரம் உங்களை தான் தேடிட்டு இருக்காங்க போல.. அவங்க உங்க கைய புடிக்கவும் அமைதியாகிட்டாங்க..” என்று அந்த மருத்துவர் வியப்பாக கூறியவர், நர்ஸிடம் திரும்பி, “இவங்களுக்கு வலி குறையறதுக்கு இன்ஜெக்ஷன் போடுங்க..” என்றுவிட்டு, எழிலை பரிசோதனை செய்ய தொடங்க 

 

 

“டாக்டர் நான் வெளியே இருக்கேன்.. நீங்க இவங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுங்க..” என்றபடி தன்னை பிடித்திருந்த எழில் கரங்களை விடுவித்து கொண்டு விஜய் வெளியே செல்ல போக, அவன் கரங்களை விடுவித்ததும் எழில் மீண்டும் சத்தமாக பயத்தில் அரற்ற, 

 

 

அடுத்த நொடி, விஜய் அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு அவள் தலையை மென்மையாக வருடி கொடுத்தவன், “ஒண்ணும் இல்லை லிட்டில்.. நான் இங்கே தான் இருக்கேன்.. நான் இருக்க வரை உன்னை யாரும் நெருங்க முடியாது.. மை லிட்டில் கேர்ள் நிம்மதியாக தூங்கு..” என்று மென்மையாக கூற, 

 

 

“அஷ்ஷீ!.. அஷ்ஷீ “ இங்கேய இருங்க.. என்னை விட்டு போகாதீங்க ப்ளீஸ் என் பக்கத்திலேயே இருங்க என முணங்கி கொண்டே இருந்தவள், விஜய் குரலில் இருந்த மென்மையிலும், மருந்தின் வீரியத்திலும் ஒரு கட்டத்தில் ஆழ்ந்த நித்திரைக்கு செல்ல, அவள் நன்றாக உறங்கியதை உறுதி செய்து கொண்ட விஜய், 

 

 

“இவங்களை கொஞ்ச நேரம் பார்த்துக்கோங்க நான் கொஞ்ச நேரத்தில் வந்திட்றேன்..” என்றவன், தன்னை பிடித்திருந்த எழில் கரங்களை மென்மையாக விடுவித்தபடி அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் விரைவாக மருத்துவமனை விட்டு வெளியே வந்தவன், 

 

 

தன் ஆட்களுக்கு அழைத்து இன்னும் ஒரு மணி நேரத்துல எழிலை கடத்தினவங்க பத்தின தகவல் எனக்கு வந்தே ஆகணும்.. என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது இன்னும் ஒரு மணி நேரத்தில் அவனுங்க என் கண் முன்னே நிற்கணும்..” சட்டை கையை மடக்கி விட்டபடி தன் ஆட்களுக்கு உத்தரவிட்டவன், அங்கு தன் ஹோட்டலில் தன் பிரத்யேக அறைக்குள் வந்து சோர்ந்து அமர்ந்தான்..

 

விஜய் சென்ற சில நிமிடங்களில் காவல்துறையினர் அங்கு வந்தனர்.. அங்கு உறக்கத்தில் இருந்த எழிலிடம் எதையும் விசாரிக்க முடியாமல் அவள் விழிக்கும் வரை காத்திருந்தனர்..

 

எழிலை தேடி சென்ற அஷ்வின், அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அங்கு காரை செலுத்தினான்.. அவன் அங்கு வருவதற்குள் எழில் தோழிகள் மருத்துவமனைக்கு வந்திருக்க, ‘இந்த பேபிக்கு நான் தான் முக்கியம் என்று எப்போ தான் உணர போறாளோ.. அவ இங்க ஹாஸ்பிடல் சேர்ந்தது எனக்கு முதல்ல சொல்லாம அவ ஃப்ரெண்ட்ஸ்க்கு சொல்லிருக்கா..” என்று ஏனோ எழில் தானாக இந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது போல் எரிச்சலாக நினைத்து கொண்டு

 

 

“இருக்கட்டும் இவளை சீக்கிரம் கல்யாணம் முடிக்கணும்.. யாரோடும் இவள பழக விட கூடாது.. எப்பவும் என் கைக்குள்ளேயே வச்சிக்கணும்..” என்று தன் போக்கில் நினைத்துக் கொண்டிருந்த அஸ்வினுக்கு எழிலின் தற்போதைய நிலை என்னவென்று கவலலையோ பதட்டமா இல்லை.. அவளை யார் கடத்தினார்கள் என்று அறிந்து கொண்டு கடத்திய கயவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோபம் இல்லை.. 

 

 

 

தனக்கு யார் மயக்கம் மருந்து கொடுத்தார்கள் என்றும் அறிந்து கொள்ள ஆர்வம் இல்லை.. ஆனால் எழில் தன்னிடம் எதுவும் கூறாமல் அவளாக மருத்துவமனை வந்து சேர்ந்து விட்டதாக நினைத்து கொண்டு அவளை தன் கை பாவையாக ஆட்டி வைக்க மட்டும் மனம் நிறைய ஆசை உண்டு..

 

 

இங்கு நடந்த களேபரத்தை, எழிலை கடத்த வந்த கும்பல் தலைவன் எழிலை கடத்த சொல்லி தங்களுக்கு பணம் கொடுத்தவரிடம் கூற “என்னங்கடா சொல்றீங்க அந்த எழிலை நீங்க கடத்தலையா?..” என்று நம்ப முடியாமல் மறுமுனையில் இருந்தவர் கேட்க, ஆமாங்க அய்யா, எங்களுக்கு முன்னே வேற யாரோ அந்த பெண்ணை கடத்திட்டாங்க..‌” என்று சொல்லவும், 

 

 

“அப்போ உங்களால் முடியாததை வேற யாரோ நல்லபடியாக செஞ்சு முடிச்சிட்டாங்க அப்படி தான.. எப்படியோ அவ ஒழிஞ்சு போனால் சரிதான்.. யார் கடத்தினால் எனக்கென்ன?.” என்று அசால்ட்டாக கூறிவிட்டு “யார் வீட்டுக்கு யார் மருமகளாக வர்றது?.. என்று மறுமுனையில் அத்தனை நேரம் குரலில் இருந்த இலகு தன்மை மறைந்து கோபமாக கேட்க, “என்ன சார் நீங்க தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னிங்க.. இப்ப அந்த பெண்ணை நீங்களே கடத்த சொல்றிங்க..” என்றவனிடம்

 

 

“நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னது என் பையனுக்காக.. இப்ப இவள கடத்த சொன்னது எனக்காக.. என் வீட்டுக்கு இவளா மருமக?.. அவ அழகில் மயங்கி தான் என் பையன் எங்க கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டான்.. என் பையன் கேட்டது என்னால மறுக்க முடியல அதனால சம்மதம் சொன்னேன்.. அவனுக்கு மட்டும் தான் சம்மதம் சொன்னேன்..  

 

 

எனக்கு என் கௌரவம் முக்கியம்.. அதான் அவளை கடத்த சொல்லி அவ அழகை சிதைக்க சொன்னேன்..‌ எந்த அழகை பார்த்து அவன் மயங்கினானோ அந்த அழகே இல்லாமல் செய்ய நினைச்சேன்.. அப்படி செய்தா என் மகனே அவளை விட்டு விலகுவான்.. அதுக்கு தான் அவளை கடத்த சொல்லி உங்கள அனுப்பினேன்.. 

 

 

ஆனால் பாரு கடவுள் என் பக்கம் தான் இருக்கார்.. அதான் நான் நினைச்சத உங்க மூலமா இல்லைனாலும், வேற யார் மூலமா நிறைவேற்றி வச்சிட்டார் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” என்று மறுமுனையில் இருந்த அஸ்வின் தந்தை உற்சாகமாக கூறியவர்,

 

 

“நான் சொன்னதை உங்களால் செய்ய முடியாம போனாலும் நீ கவலைப்படாத.. நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்க மாட்டேன்.. என் இனாமாக நீயே வச்சிக்கோ.. நான் என் பையனுக்கு போன் செய்ய போறேன்..” என்று கூறி இணைப்பை துண்டித்தார்.. “இந்த ஆள் என்ன பிச்சையா போட்றாரு?.. 

 

 

இந்த ஆள் கொடுத்த காசுக்கு மேலேயே நம்ம வேலை பார்த்திருக்கோம்.. பிச்சை போட்ற மாதிரி பேசறான்.. இவனுக்கு ஒரு நாள் இருக்கு..” என்று மனதில் கறுவிக்கொண்ட கடத்தல் கும்பல் தலைவன், “இனி நமக்கு இங்கு வேலை இல்லை வாங்கடா ஊருக்கு போகலாம்..” என்று தன் சகாக்களை அழைத்து கொண்டு ஊருக்கு சென்றான்..

 

 

மருத்துவமனைக்கு எழிலை பார்க்க வந்த அஷ்வினை காவல்துறையினர் தடுத்து, எழிலை பார்க்க விடாமல், அவனிடம் விசாரணை செய்து கொண்டிருந்தனர்.. 

 

 

மருத்துவமனையில் எழில் முகத்தை பார்த்த அவளின் தோழிகளுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.. இன்னும் இதுக்கு மேல நம்ம எழில் வீட்டில் சொல்லாம இருக்க முடியாது என்று நினைத்து  அவள் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்க அவர்களும் அலறியடித்து கொண்டு கன்னியாகுமரி வந்தனர்.. 

 

 

எழில் இருந்த கோலத்தை கண்டு, அடிப்பாவி மகளே உன்னை போக வேண்டாம் என்று நான் படிச்சு படிச்சு சொன்னேனே.. இப்ப இப்படி அடிபட்டு கிடக்கிறியே!!..” எல்லாரும் சேர்ந்து என் பேச்சை கேட்காம அவளை இங்க அனுப்பி வச்சிங்களே.. இப்போ என்ன ஆச்சு பார்த்திங்களா?.. அய்யோ என் பிள்ளை முகம் இப்படி ஆகிபோசாசே..”என்று எழில் அன்னை தன் தலையில் அடித்து கொண்டு அழ,

 

 

“ம்மா சத்தம் போடாதிங்க மா.. பேஷண்ட் இப்ப அமைதியான தூக்கம் தான் ரொம்ப முக்கியம்..” நர்ஸ் வந்து சிவகாமியை அதட்டி செல்ல சிவகாமி வாய் மூடி அழுது கொண்டிருந்தார்..

 

 

ஹோட்டல் தன் அறையில் கண்கள் மூடி படுத்திருந்த விஜய்க்கு எழில் வலியில் துடித்துக் கொண்டு இருந்தது காதில் ஒலிக்க அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் எழுந்தவனின் செல்ஃபோன் சத்தம் கொடுக்க,  அவன் அனுப்பிய ஆட்களில் ஒருவன் அழைத்து,

 

 

“சார் மேடம் கடத்தினவனுங்கள கண்டுபிடிச்சு எங்க கஸ்டடியில் வச்சிருக்கோம்.. நீங்க வந்து இவனுங்கள என்ன செய்யணும் சொல்லுங்க பாஸ்..” என்று கூற, “நான் வந்துட்றேன்..” என்று இணைப்பை துண்டித்த விஜய்

 

 

ஒரு முறை எழிலை பார்த்துவிட்டு அந்த கயவர்களை பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து, மருத்துவமனை சென்றவன்,

 

 

“என்ன நடந்தாலும், யார் தடுத்தாலும் குறிச்ச தேதியில் இந்த கல்யாணம் நடந்தே தீரும்.. உங்க பொண்ணு தான் என் மனைவி..” என்று அஷ்வின் எழில் பெற்றோரிடம் உறுதி செய்து கொண்டிருப்பதை கேட்ட விஜய்.. சில நொடிகள் அதிர்ந்து நின்றவன், அடுத்த நொடி தன்னை சுதாரித்துக் கொண்டு

 

 

“அப்பாடா பேபி வீட்டில் இருந்து ஆள் வந்துட்டாங்க.. பரவாயில்லைடா  அஷ்வின் நான் கூட  உன்னை தப்பாக நினைச்சிட்டேன்  நீ லிட்டில் கேர்ளை உண்மை விரும்பற என்று இப்ப நம்பறேன்…” என்று திருப்தியாக நினைத்தவன்,

 

“இனி உனக்கு ஒண்ணும் ஆகாது லிட்டில் கேர்ள்.. நீ நல்லா சந்தோஷமாக இருப்ப!!..”  பாய் டா..” என்று அறை வாசலில் நின்றபடி உறங்கி கொண்டிருந்த எழிலை சில நொடிகள் பார்த்து விட்டு மருத்துவமனை விட்டு வெளியேறினான்..

 

இமை சிமிட்டும்..

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்