இமை ..8
கோபத்தில் விஜய் கூண்டு புலியாக இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்.. எவ்வளவு தைரியம் அவனுங்களுக்கு லிட்டில் கேர்ளை கடத்தி கொண்டு போற அளவுக்கு.. அவள் மேலே சின்ன கீறல் விழுந்தாலும் உங்களை சும்மா விட மாட்டேன் டா மனதில் கறுவிக்கொண்டு.. தன் ஆட்களின் அழைப்பிற்காக காத்திருந்தான்..
அன்று ஹோட்டலில் முதன் முதலில் பார்த்த போது அவள் அழகு அவனை பாதிக்கவில்லை.. ஆனால் அவள் மாதாந்திர பிரச்சினையில் அவஸ்தை அடைந்த போது தான் அவளை கவனித்தான்.. அந்த மாசுமறுவற்ற முகத்தில் வந்து போன வேதனையின் சாயல் அவனை என்னவோ செய்தது உண்மை..
ஆனால் அவளுடன் அஷ்வின் இருப்பதை உணர்ந்து தன் உணர்வுகளை முகத்தில் காட்டாமல் மறைத்து தன் இயல்பை மீறி அவளுக்கு உதவி செய்தான்.. அஷ்வினை தூண்டி விட்டு அவளை பார்த்துக் கொள்ள செய்தான்.. தன் அன்னை அவளை யாரோ கடத்தி சென்றுவிட்டதாக கூறிய போது தான் அவள் தன் மனதில் ஏதோ ஒரு இடத்தில் அவள் அமர்ந்து இருப்பது இப்போது தான் நன்றாக உணர்ந்து கொண்டான்.. இது காதல் என்று அவன் உணரவில்லை.. ஆனால் அவள் மேல் ஒருவித ஈர்ப்பு இருந்தது உண்மை..
அவளை நேராக அனுக முடியாமல் அவளுக்கு இடையே அஷ்வின் இருக்கவும், அவளை விட்டு விலகி இருந்தான்.. மறக்க முயற்சி செய்து அதில் வெற்றி அடையும் நேரம் மீண்டும் இதோ அவன் எண்ண அலைகளில் அவளை பற்றி நினைக்க வைத்து விட்டாள்
இப்போது அவளுக்கு எந்த தீங்கும் வரவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவனை முனைப்புடன் செயல்பட வைத்தது.. அதனாலயே காவல்துறைக்கு புகார் அளித்தாலும், கூடவே தன் ஆட்களையும் அனுப்பி வைத்தான்.. அவர்களிடமிருந்து இன்னும் தகவல் வராமல் இருக்க நிலை கொள்ளாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்.. அவன் செல்ஃபோன் இசைக்க, அதை உயிர்ப்பித்து அவசரமாக காதில் வைத்தான்..
விஜய் செல்ஃபோனை காதில் வைத்தபடி மறுமுனையில் இருந்த காவல் அதிகாரி கூறுவதை கேட்டு கொண்டு இருந்தான்.. “என்ன சார் இப்படி பண்ணிட்டிங்க?.. அந்த பொறம்போக்குகளை தப்ப வச்சசிட்டிங்க.. அந்த பெண்ணுக்கு மயங்கி விழற அளவுக்கு கொண்டு வந்துட்டிங்களே ..” என்று கோபமும் ஆதங்கமுமாக கேட்க நாங்க எவ்வளவு முயற்சி செஞ்சோம் சார் அவனுங்களை பிடிக்க முடியலை.. ஆனா அந்த பொண்ணுக்கு பெரிய அடி எதுவும் இல்லாமல் காப்பாத்திட்டோம்..” என்று அந்த காவல் அதிகாரி வாய் கூசாமல் பொய் கூற, அவர் குரலில் இருந்த தடுமாற்றம் அவர் ஏதோ தன்னிடம் மறைக்கிறார் என்று உணர்ந்து
“என்ன சார் நான் உங்க பக்கத்தில் இல்லை என்பதால் நீங்க சொல்வதை எல்லாம் நம்புவேன் என்று நினைக்கிறிங்களா?.. உண்மையாக என்ன நடந்தது சொல்லுங்க?..” என்று விஜய் அழுத்தமாக கேட்க, அவன் குரலில் இருந்த அழுத்தம் அந்த காவல் அதிகாரிக்கு உள்ளே பயத்தை கொடுத்தாலும், தன் பதவி தந்த தைரியத்தில் “சார் எங்களுக்கு தகவல் கொடுத்ததோடு உங்க கடமை முடிஞ்சது.. இங்க என்ன நடக்குதுன்னு உங்களுக்கு சொல்லத் தேவையில்லை..
அதோடு அடுத்து நாங்க என்ன செய்யணும் என்று நீங்க சொல்ல தேவையில்லை.. இனி நாங்க பார்த்துக்கிறோம் உங்க வேலையை மட்டும் நீங்க பாருங்க..” என்று அதிகாரி திமிராக கூற, மறுமுனையில் சில நொடிகள் அமைதியாக இருந்த விஜய் “ஓகே இன்ஸ்பெக்டர் இனி நான் என்ன செய்யணுமோ நான் பாத்துக்குறேன்.. உங்க வேலையை பத்திரமாக பார்த்துக்கோங்க..” என்று நக்கலாக கூறி எச்சரித்து விட்டு இணைப்பை துண்டித்தவன், அடுத்த நொடி தன் ஆட்களுக்கு அழைக்க
அவர்கள் எடுத்த நொடி “அங்க என்ன நடக்குது?.. அந்த பொண்ணு பத்திரமாக இருக்காங்களா?..”” என்று விசாரிக்க “அது.. வந்து..” என்று விஜய்யின் ஆட்கள் சொல்ல தயங்க, சற்று முன் காவல் அதிகாரி பேசிய தோரணையும், இப்போது இவர்களின் தயக்கமும், விஜய்க்கு உள்ளே பதட்டத்தை கொடுக்க, “இப்போ சொல்ல போறிங்களா இல்லையா?..” என்று அவனின் கர்ஜனை குரலில்
“சார் நாங்க எல்லாரும் அவனுங்களை கார்னர் பண்ணவும், அவனுங்க ஓட்ற கார்ல இருந்து அந்த பெண்ணை தள்ளி விட்டு அவனுங்களும் குதிச்சிட்டாங்க சார்..” என்று தயக்கமாக கூற, “ஓ காட்!!. அவளுக்கு என்ன ஆச்சு அவ நல்லா இருக்கா தானே?.. நான் உங்களை எதுக்கு அங்க போக சொன்னேன்?..என்று தன் தவிப்பை மறைத்து கொண்டு கோபமாக கேட்க
“இல்லை சார் அது அவனுங்க திடீர் என்று அந்த பெண்ணை தள்ளி விடுவாங்க என்று நாங்க நினைச்சே பார்க்கல சார்..” அவர் மன்னிப்பு கேட்க, “கடத்தினவன் அந்தப் பெண்ணை பூ போல் திருப்பி அனுப்புவான்னு நினைச்சிங்களோ?.” என்று கோபமாக கேட்டவன், “சரி அந்த பெண்ணுக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை தானே..? என்று விசாரிக்க, அது வந்து சார் என்று அவன் ஆள் தயங்க என்ன ஆச்சு லெனின்?..” என்று விஜய் கேட்க
“அது வந்து சார் அந்த பொண்ணு ட்ரெஸ் கிழிச்சு கீழ தள்ளி விட்டதுல அந்த பெண் முகத்தில் ஒரு பக்கம் நல்ல அடி சார்..” என்று கூறி முடித்த நொடி..”ஏய்..!!” என்று விஜய் தன்னை மீறி கத்தி விட்டிருந்தான்.. தான் அத்தனை சொல்லியும், எழிலை ஆபத்தில் சிக்க வைத்தது நினைத்து காவல்துறை அதிகாரி மீதும், தான் அனுப்பிய ஆட்கள் மீதும் மிகுந்த கோபத்தில் இருந்தவன், என்ன சொல்றிங்க?.. அவ ட்ரெஸ் கிழிச்சுட்டாங்களா?.. என்று அதிர்ந்து கேட்க “இல்லை ரொம்ப இல்லை சார்.. அங்காங்கே கிழி..”
“போதும்.”
இப்போ அந்த பொண்ணு எங்க இருக்கா?.ஹாஸ்பிடல் கூட்டி போய்ட்டாங்களா?..” என்று சிறு நடுக்கத்துடன் கேட்க
“அது ஆம்புலன்ஸ்க்காக காத்திட்டு இருக்காங்க..” என்றதும், அவன் கோபம் எல்லை கடக்க தன்னை முயன்று கட்டுப்படுத்தி கொண்டு, ”நீங்க என்னடா பண்றிங்க தடிமாடுங்களா.. இன்னும் பத்து நிமிசத்தில அந்த பெண் ஹாஸ்பிடல்ல சேர்த்தாகணும்.. ஆம்புலன்ஸ் வர வரைக்கும் காத்திருக்காதிங்க இதனால் எந்த பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்.. சீக்கிரம் போங்க..” என்று கட்டளையிட்ட விஜய்க்கு இப்பவே அங்கு செல்ல கால்கள் பரபரத்தது..
இங்கு மண்டப வாசலில் மயங்கி கிடந்த அஷ்வினுக்கு மயக்கம் தெளிந்ததும், எழிலை தேட, “சார் நீங்க மட்டும் வராமல் இருந்திருந்தால் எங்க எழில் எங்க கூட சந்தோஷமாக இருந்திருப்பா.. நீங்க வந்ததும் அவளை கூட்டிட்டு போய் இப்ப யாரோ கடத்த வச்சிட்டிங்களே.. போங்க சார் போய் எங்க எழிலை தேடுங்க.. எப்படியாவது அவளை கண்டுபிடிங்க சார்..” எழில் தோழிகள் அஸ்வினிடம் ஆதங்கமாக கூற
“தேடு தேடுன்னா அவளை நான் எங்கே தேட?.. நான் போய் போலிஸ்ல முதல்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்திட்டு வர்றேன்..” என்றவனை அவன் தோழிகள் எரிச்சலாக பார்த்து, அவங்க எப்பவோ வந்து அவளை தேட போய்ட்டாங்க.. நீங்களும் போங்க போய் தேடுங்க.. இதோ இந்த பக்கம் தான் போனாங்க..” என்று கூற, “எனக்கு மயக்க மருந்து கொடுத்ததில் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு..
ஆனாலும் எனக்கு என் ஹெல்த்தை விட என் பேபி முக்கியம் நான் போறேன் போய் என் பேபியை தேடி கண்டுபிடிக்கிறேன்..” என்று வீரவசனம் பேசியவன், தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்ப, கடவுளே எங்க எழில் இவர் கைக்கு கிடைக்கவே கூடாது.. யாராவது நல்லவங்க கிட்ட கொடுத்திடுங்க.. என்று எழில் தோழிகள் அவளுக்காக வேண்டிக் கொண்டனர்..
இங்கு அங்காங்கே துணி கிழிந்த நிலையில் மயக்கத்தில் இருந்த எழில் மேல் ஒரு துணியை போர்த்தி விட்ட காவல் துறையினர் ஆம்புலன்சிற்காக காத்திருக்க, விஜய் அனுப்பி வைத்த ஆட்கள் அதிரடியாக அங்கு வந்து எழிலை தூக்கிக்கொண்டு காரில் படுக்க வைத்து விரைவாக மருத்துவமனை நோக்கி சென்றனர்.., கண்ணிமைக்கும் நொடியில் நடந்துவிட்ட செயலில் காவல்துறை அதிகாரிகள் திகைத்து நிற்க,
காரில் சென்று கொண்டிருந்த விஜய்யின் ஆட்கள் அவனுக்கு அழைத்து எழிலை தாங்கள் மருத்துவமனை அழைத்து செல்வதாக தகவல் தெரிவித்து மருத்துவமனை பெயரை கூறிவிட்டு இணைப்பை துண்டிக்க, அதுவரை பொறுமையாக காத்திருந்த விஜய் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல், கன்னியாகுமரி கிளம்பியவன் அவர்கள் கூறிய மருத்துவமனை நோக்கி தன் காரை செலுத்தினான்..
அங்கு சென்றதும் இனி தான் நிரந்தரமாக எழிலை பார்க்க போவது இல்லை என்பதை உணராமல் புயல் வேகத்தில் காரை செலுத்தினான்..
இமை சிமிட்டும்..