Loading

இமை ‌..7

 

திருமண மண்டபத்தில் அஷ்வினை பார்த்ததும் தன் உற்சாகம் எல்லாம் வடிந்து சோர்ந்து அமர்ந்திருந்த எழிலை அவள் தோழிகள் மேடைக்கு அழைக்க, அதில் மீண்டும் உற்சாகம் வர பெற்று மேடை ஏற போனவளை தடுத்து தன் கைக்குள் வைத்தபடியே பரிசு கொடுத்து விட்டு அவளை தன்னுடனே அழைத்து மண்டபத்தை விட்டு வெளியே வந்தான்

 

 

அஷ்வினுடன் வெளியே வந்த எழிலிற்கு மனம் மிகவும் ஏமாற்றமாக இருந்தது.. தான் நினைத்து வந்த எதுவும் நடவாமல் தோழிகளின் முறைப்பை பரிசாக பெற்று கொண்டு, பாதியிலேயே மண்டபத்தை விட்டு வெளியே வந்ததும்.. குழந்தையின் கையில் ஐஸ்கிரீம் ஒன்றை கொடுத்து அதை உண்ண முடியாதபடி அந்த கையை பற்றி கொண்டே அழைத்து செல்லும் மனநிலையில் எழில் அஷ்வின் பின்னே சென்றாள்.. 

 

 

அங்கு அஷ்வினுக்கு மயக்க மருந்து கொடுத்து எழிலை ஒரு கும்பல் கடத்தி சென்றது.. எழிலும் ஐஸ்வினும் மண்டபத்தை விட்டு வேலையை வந்த மறுநொடி சுமித்ராவிற்கு விஜய் அழைத்திருந்தான்… அவன் பேசுவது சரியாக கேட்காமல் தன் கணவரிடம் கூறிவிட்டு வெளியே வந்து பேசிய சுமித்ரா அங்கு அஷ்வினை மயக்கம் அடைய செய்துவிட்டு எழிலை கடத்திச் செல்வதை கண்டு அதிர்ந்து நின்றவர், அடுத்த நொடி தன்னை சுதாரித்துக் கொண்டு.. அந்த காரின் நம்பர் பிளேட் பார்க்க முயல அந்த நம்பர் பிளேட்டின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி கார் எண்களை மறைத்து வைத்திருந்தனர்.. 

 

 

கார் புயல் வேகத்தில் செல்ல, “அச்சோ.. யாராவது வாங்களேன்..” என்று  என்று மண்டபத்தில் கத்தி அழைக்க, இணைப்பில் இருந்த விஜய் அன்னையின் அலறல் குரலில் திகைத்து “அம்மா என்னம்மா ஆச்சு?..” என பதட்டமாக கேட்க “விஜி அன்னைக்கு நம்ம நகைக்கடையில பார்த்தோம் இல்ல அந்த பொண்ணு யாரோ கடத்திட்டு போறாங்க டா..” என்று கூற விஜய்க்கு திக்கென்றது.. நொடிக்கு குறைவான நேரத்தில் அவள் முகம் மனதில் வந்து போக, அதுவரை இயல்பாக பேசிக் கொண்டு இருந்தவன் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவன், யாரும்மா கடத்தினாங்க?.. அவ மட்டுமா அங்க வந்தா?..” என்று சந்தேகமாக கேட்க,

 

 

“இல்ல விஜி.. அது வந்து..” என்று இங்கு கல்யாண மண்டபத்தில் நடந்ததை கூறியவர், நீ கூப்பிட்டு பேசவும் சரியா கேட்கல.. அதான் வெளியே வந்து பேச வந்தேன் என் கண் முன்னாடியே அந்த பையனை அடிச்சு போட்டு அந்த பெண்ணை கடத்திட்டாங்க விஜி.. இந்த காலத்தில் சின்ன குழந்தையே விட மாட்டிகிறாங்க.. இந்த..”

 

“ம்மா எதுவும் சொல்லாதீங்க.. கண்டிப்பாக எதுவும் ஆகாது நாம அவளை கணாடுபிடிச்சிடலாம்..” என்று விஜய் அன்னைக்கு ஆறுதல் கூற, “எப்படி விஜி முடியும் என்னால கார் நம்பரை கூட பார்க்க முடியல.. நான் வண்டி நம்பரை பார்க்க முயற்சி செஞ்சேன் அது மேல வேறு எதையோ ஒட்டி  நம்பரையே மறைச்சு வெச்சிருக்காங்க டா..” என்று  கூற, மறுமுனையில் கேட்டிருந்த விஜய்யும் பதட்டமானான்..

 

 

“லிட்டில் கேர்ள் அவளை எதுக்கு கடத்தினாங்க?..” என்று குழப்பமாக தனக்குள் சிந்தித்துக் கொண்டிருக்க, “எனக்கு தெரியல பா?.. இவ்வளவு நேரம் பட்டாம்பூச்சி மாதிரி அவ்வளவு சந்தோஷமாக சுத்திட்டு இருந்தா.. அந்த பையன் வந்ததும் தன் கூட்டுக்குள் அடங்கின கிளி மாதிரி முகம் வாடி ஒரு இடத்தில் அமைதியா உட்கார்ந்து இருந்தாள்.. அந்த பையன் தான் அவளை இங்க இருக்க விடாமல் அவசரமாக கூட்டிட்டு போனான்.. பாவி பையன் அவளை இங்கு இருக்க வச்சிருந்தா அவளுக்கு இந்த ஆபத்து வந்திருக்காது..

 

 

அச்சோ இந்நேரம் அந்த பொண்ணு என்ன நிலையில் இருக்கோ தெரியலயே.. நான் மண்டபத்துக்குள்ள போய் சொல்றேன்..” என்று அவசரமாக கூற, “அம்மா இப்ப நீங்க அங்க போய் சொல்லி எல்லாரும் வந்து விசாரிக்கறதுக்குள்ள நேரம் கடந்திடும்.. கடத்தினவங்க ரொம்ப தூரம் போய்ருவாங்க.. 

 

 

அதனால் நீங்கள் பதட்டப்படாம எந்த கார்?.. அது கலர்?.. அது எந்த பக்கம் போச்சு என்று பதட்டப்படாமல் நிதானமாக சொல்லுங்கம்மா.. அதோடு நீங்க இருக்கிற இடத்தை எனக்கு லொகேஷன் அனுப்புங்க நான் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட பேசறேன்..” என்று கூற சுமித்ரா தனக்கு தெரிந்த விபரங்களை கூற அதை கவனமாக கேட்டுக்கொண்டவன், 

 

 

சுமித்ராவிடம், கவலை படாதிங்க எப்படியாவது லிட்டில் கேர்ள் காப்பாத்திடலாம்..” என்று அன்னைக்கு சமாதானம் கூறிய விஜய்க்கும் பதட்டமாக இருந்தது.. 

 

 

தன் பதட்டத்தை அன்னையிடம் காட்டினால்  அவர் இன்னும் பதட்டம் அடைய கூடும் என்று நினைத்து இணைப்பை துண்டித்தவன், மனம் நிலையில்லாமல் தவிக்க, தானாக அவன் கரங்கள் தன் நெஞ்சை நீவி விட்டு கொண்டது.. “லிட்டில் உனக்கு ஒன்னும் ஆகாது தைரியமா இரு..” என்று மனதோடு அவளுக்கும், தனக்கும் சேர்த்து தைரியம் கூறிக்கொண்டு 

 

 

அடுத்து நொடி அந்த ஊரின் இன்ஸ்பெக்டரை அழைத்து நிலவரத்தை கூற, அடுத்த சில நிமிடங்களில் காவல்துறை அங்கு வந்து சேர்ந்தது.. விஜய் அதோடு நிறுத்தாமல், தனக்கு தெரிந்த சில அடி ஆட்கள் மூலம் விவரத்தை கூறி எழிலை தேட சொல்லி இருந்தான்..

 

 

அதற்குள் மண்டபத்தில் இருக்கும் ஆட்களுக்கு விசயம் தெரிந்து, எழிலுக்காக பரிதாபம் கொள்ள, அங்கிருந்த காவல் துறை அதிகாரி சிசிடிவியில் பார்க்க நான்கு பேர் எழிலை கடத்தியது தெரிய வர, காவல்துறையினர் மும்மரமாக எழிலை தேட தொடங்கினர்.. 

 

 

“அந்த பொண்ணுக்கு ஒண்ணும் ஆகாதுதானப்பா?.. என் கண் முன்னாடி நடந்து என்னால எதுவுமே செய்ய முடியலையே.. சுமித்ரா தன் கணவரிடம் ஆதங்கமாக கூற, “ஒண்ணும் ஆகாது சுமி.. நம்ம பையன் கிட்ட சொல்லிட்டேல்ல அவன் பார்த்துப்பான்..” என்று ஆறுதல் கூற, “யார் கடத்தி இருப்பாங்க?.. அந்த பொண்ணை கடத்திற அளவுக்கு எதிரி இருக்காங்களா?..” என்று மணிகண்டன் தனக்கு தானே கேட்டுக் கொண்டு இருக்க, 

 

 

“டேய்.. நாம் அவள கழுத்தை வந்து நமக்கு முன்னாடி வேற யாரோ கடத்திட்டு போயிட்டாங்க..  வேற யார்டா அவங்களை கடத்தி இருப்பாங்க?.” என்று குழப்பமாக தன் ஆட்களைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தான் சென்னையில் இருந்து எழிலை பின்தொடர்ந்து வந்த அந்த பழைய கும்பல்..

 

 

இங்கு காரில் இரண்டு ஆண்டுகளுக்கு நடுவில் எழில் உடல் நடுங்க அமர்ந்திருந்தாள்.. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அசம்பாவிதம் எழிலை பயத்தில் நடுங்க வைத்தது.. அந்த ஆண்களின் பார்வையும் அவர்கள் மேலிருந்து வந்த மது வாடையும், எழிலிற்கு உடல் உதற வைத்தது.. “முருகா முருகா.. என்னை எப்படியாவது காப்பாத்து.” மனதில் மனமுருகி வேண்டியவள்,  

 

 

“நீங்க யாரு எதுக்காக என்னை கடத்திட்டு வந்திருக்கிங்க?.. பணத்துக்காக கடத்தினால் நிச்சயமாக அது கிடைக்காது.. ஏன்னா எங்க கிட்ட பணம் இல்லை.. ப்ளீஸ் என்னை விட்டிருங்க..” என்று கெஞ்சிய எழிலை முத்தமிடுவது போல் ஒருவன் நெருங்க, பயத்தில் இதயம் தன் துடிப்பை நிறுத்தி பின் துடித்தது.. எழில் உதட்டை நெருங்கிய நொடியில் மற்றொருவன் தடுத்து, 

 

 

“டேய் இப்பவே என்னடா அவசரம்?.. இவள பார்த்தால் அள்ளி அவசரமாக சாப்பிட்றதுக்கா கல்யாண மண்டபத்தில் பிளான் செஞ்சு கடத்தினோம்?.. இதெல்லாம் நிருத்தி நிதானமாக ஆர அமர ரசிச்சு ருசிச்சு சாப்பிடணும்..” ஒருவன் அவள் வாசம் பிடித்து சொல்ல, எழிலிற்கு அவன் பேச்சு குமட்டிக் கொண்டு வந்தது..

 

“டேய் போலிஸ் நம்மள கண்டுபிடிக்க போறாங்க டா?..” ஒருவன் பயத்துடன் கூற, “இதென்ன நமக்கு புதுசா?.. நம்ம எத்தனை பேர் பாரத்திருக்கோம்.. அவங்களை ருசிச்சு இருக்கோம்.. அப்போ எல்லாம் பிடிக்காத போலிஸ் இப்போவா பிடிக்க போறாங்க?..” என்று ஒருவன் அலட்சியமாக கூற ஆனால் இத்தனை செஞ்ச எத்தனையோ சம்பவத்துல இதுதாண்டா ரொம்ப ரொம்ப சிறப்பான சம்பவம்.. 

 

 

இவ எவ்வளவு அழகா இருக்கா பாரேன்.. கைவிரல் இருந்து கால் பாதம் வரை அத்தனை அழகு டா..! இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த அழகெல்லாம் நமக்கு சொந்தமாக போகுது என்று நினைக்கும் போது அப்படியே சரக்கு அடிக்காமல் போதை ஏறின மாதிரி இருக்கு ஒருவன் கண்கள் மூடிக்கொண்டு வக்கிரமாக கூற, அவர்களின் பேச்சு எழிலுக்கு அடி வயிற்றில் அமிலத்தை சுரப்பது போல் இருந்தது.. 

 

 

செய்தித்தாள்களில் படித்ததும்.. தொலைக்காட்சி பார்த்து பதறிய நாட்கள் அனைத்தும் இன்று தான் நேரடியாக அனுபவித்து கொண்டிருப்பது நினைத்து முதன்முதலாக தான் பெண்ணாக பிறந்ததற்கு, அதுவும் அழகான பெண்ணாக பிறந்ததற்கு மிகவும் வருந்தினாள்.. கடவுளே இவங்களோட சுண்டு விரல் என் மேல பட கூடாது.. அப்படி பட்டுச்சு அந்த நிமிசமே நான் என்ன அழிச்சிப்பேன்..‌” என்று கடவுளிடம் மனதார வேண்டி கொண்டு வர, 

 

 

“என்ன செல்லக்குட்டி கடவுள் கிட்ட ரொம்ப வேண்டுகிறாயோ?.. அத்தனை பெண்களோட குரலை கேட்காத கடவுள் உன்னோட குரல் கேட்பாரா என்ன?.. இன்னைக்கு நீ எங்களுக்கு தான்.. உன்னை நாங்க முதன் முதலில் கல்யாணம் மண்டபத்தில் பார்த்த போதே அப்படியே உன் அழகு எங்களுக்கு  ஜிவ்வுன்னு ஆச்சு.. 

 

 

அப்பவே உன்னை தூக்க நாங்க பிளான் போட்டோம்.. உன் கூட வந்தானே ஒருத்தன் அவனை போட்டு தள்ளிட்டு தான் உன்னை தூக்க நினைச்சோம்.. ஆனால் அவன் பெரிய இடம் போல அவன் மேல கைய வச்சு அதைத் நூல் பிடிச்ச மாதிரி தொட்டு போலிஸ் எங்களை கண்டுபிடிச்சிட்டா நாங்க பாவம்ல அதான் அவனுக்கு மயக்க மருந்து கொடுத்தோம்.. அமைதியாக இருந்தால் ஒரு வாரம் மட்டும் நீ எங்க கூட இருக்கலாம்.. முரண்டு பிடிச்ச..” என்று ஒருவன் நாக்கை துருத்தி மிரட்ட எழில் மனதிற்குள் கந்தசஷ்டி கவசம் சொல்லி கொண்டே இருந்தாள்..

 

 

“டேய் பின்னாடி பாரேன் ஒரு போலீஸ் வண்டி வருது நீ ஒன்னும் இல்லடா ரெண்டு வருது மற்றொருவன் பதட்டமாக கூற நால்வரும் பின்னால் திரும்பிப் பார்க்க அவர்கள் ஓட்டி கொண்டிருந்த காரை துரத்திக் கொண்டு இரண்டு காவல்துறை வாகனம் வந்து கொண்டு இருந்தது.. அதை பார்த்ததும் தான் வேண்டிய கடவுள் தன்னை காக்க நேரில் வந்துவிட்டதாக பூரித்து காவல்துறை வாகனத்தை பரவசமாக பார்த்திருந்த எழிலின் கன்னத்தில் ஒருவன் ஓங்கி அறைந்திருந்தான்

 

 

“இப்படி போலீஸ் எங்களை கண்டுபிடிக்கிற அளவுக்கு நீ என்னடி செஞ்சு வச்சுட்டு வந்த.. ஆனால் யார் வந்தாலும் நீ முழுசா அவங்க கைக்கு சேர மாட்ட..” சீக்கிரமா ஓட்டு டா.. போலிஸ் நம்மளை தான் துரத்திறாங்க.. நாம அவங்க கிட்ட மாட்டிக்க கூடாது..” ஒருவன் எச்சரிக்க

 

 

“அடே இங்கேயும் முன்னாடி யாரோ வழிமறிச்சு நிக்கிறாங்க டா..” என்று கார் ஓட்டி கொண்டிருந்தவன் கூற, நால்வருக்கும் பதட்டம் ஆனது.. “எப்படி கண்டுபிடிச்சாங்க தெரியல.. இவளுக்கு பின்னால் யாரோ பெரிய ஆள் இருப்பான் நினைக்கிறேன்.. இப்போ என்னடா செய்றது..? ரொம்ப இவ்வளவு கஷ்டப்பட்டு இவளை கடத்தினது வேஸ்ட்டா போக கூடாது..” என்று மற்றொருவன் கூற, இனி இவர்களால் தன் பெண்மைக்கு ஆபத்து இப்போது எழிலிற்கு மன திடம் வந்தது..

 

 

இப்போது தன் பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரே எடுத்தவள் நால்வரின் முகத்திலும் அடிக்க நால்வரும் கண்கள் முகமெல்லாம் எரிய வலியில் கத்தினர்.. அந்த வலி கொடுத்த ஆத்திரத்தில் எழில் அருகில் இருந்த இருவர்  அவள் ஆடைகளை கிழித்தவன் ஓடும் காரில் இருந்து எழிலை தள்ளிவிட்டு, நால்வரும் காரில் இருந்து குதித்து ஆளுக்கொரு திசையில் தப்பிவிட்டிருந்தனர்…

 

ஓடும் காரில் இருந்து விழுந்த வேகத்தில் எழில் முகம் கூரிய கல்லில் குத்தி அவள் வலது கன்னத்தை சிதைத்து விட்டிருந்தது.. இடது கால் எலும்பு முறிந்து வலி மிகுதியில் மயக்கத்திற்கு சென்று விட்டிருந்தாள்..‌கண்கள் இருட்டி மயக்கிய வேளையில், “சார் அவங்களை கண்டுபிடிச்சிட்டோம்.. காவல் அதிகாரி ஒருவர் செல்போனில் யாருக்கோ தகவல் கூறியதை கேட்டு கொண்டே மயங்கி இருந்தாள்..

 

 

இமை சிமிட்டும் 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்