இமை 56
பளார் என்று அறைந்த சத்தம் அந்த அறையெங்கும் ஒலிக்க அடி வாங்கிய தன் கன்னத்தில் கை வைத்தபடி தன் எதிரே கோபமாக பார்த்து கொண்டு இருந்த தன் முதலாளி தயாளனை அச்சத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்.. நேத்ராவை கடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் அந்த அடியாள்..
“ஒரு சின்ன குழந்தையை உங்களால தூக்க முடியல நீங்க எல்லாம் ரௌடின்னு சொல்லாதிங்கடா..” தன் அடியாட்கள் மீது எரிந்து விழ, “சார் அந்த குழந்தைக்கு கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு வளையம் போட்டிருக்காங்க சார் அதை மீறி எங்களால் அந்த குழந்தை கிட்ட நெருங்க கூட முடியல..” அவன் தன் இயலாமையை சொல்ல தயாளன் மீண்டும் அவன் கன்னத்தில் அறைந்தார்..
“என் முன்னாடியே அவனை புகழ்ந்து பேசற.. உனக்கு அவ்வளவு தைரியம் யார் கொடுத்தது..” என்று ஆத்திரமாக கேட்டு மீண்டும் அறைய, “சார் நீங்க என்ன அடிச்சாலும் இதுதான் சார் உண்மை.. முதல்ல எதிரியோட பலத்தை ஏத்துக்கிட்டாதான் அவங்களோ பலவீனத்தை நம்ம தெரிஞ்சிக்க முடியும்
உண்மையாகவே அந்த குழந்தை பக்கத்தில் யாரும் இல்லாத மாதிரி தெரிஞ்சாலும் அந்த குழந்தைகிட்ட நெருங்கினாலே சுத்தி ஆளுங்க வந்திட்றாங்க.. எங்க இருந்து எப்படி வராங்கன்னு தெரியல.. இதெல்லாம் கண்டுபிடிக்கணும்.. அவங்க கண்ணுக்கு தெரியாமல் தனியாக பிரிக்கணும்.. அப்பறம் தான் அந்த குழந்தையை கடத்தணும்..” என்று விளக்கமளிக்கவும்,
“அந்த விஜய் கூட ரெண்டு பேர் இருக்கானுங்க அவன் அந்த தைரியத்தில் தான் இப்படி இருக்கான்.. அவனுங்க பிரிஞ்சா மட்டும் தான் நான் நினைச்சது எல்லாம் நடக்கும்.. முதல்ல இவங்களை பிரிக்கணும்.. அதுக்கு என்ன செய்யலாம் என்று யோசி..” தயாளன் அந்த அடியாட்களிடம் உத்தரவிட
“நீங்க ஈசியாக சொல்லிடுவிங்க கஷ்டம் எங்களுக்கு தானே..” அவன் முணுமுணுக்க “என்னடா முணுமுணுக்கிற..? தயாளன் மிரட்டலாக கேட்க “சார் நாங்க எல்லாம் அடியாள்.. ஒரு ஆளை காட்டி அடின்னு சொன்னா அடிப்போம்.. கொல்லுன்னு சொன்னால் அவங்களை சொல்லுவோம்.. மத்தபடி எங்களுக்கு நல்லது கெட்டது யோசித்து செய்ற அளவுக்கு அறிவில்லை.. அதனால் நீங்களே யோசிச்சு அவங்கள எப்படி பிரிக்கணும்னு எங்க கிட்ட சொல்லுங்க அதன்படி நாங்கள் செய்கிறோம்..” என சொல்லவும்
“நீங்க எல்லாம் அண்டா அண்டவா திங்கிறதுக்கு தாண்டா லாய்க்கு.. ஒரு வேலைக்கு உருப்படி இல்ல போங்க போய் நல்லா கொட்டிக்கிங்க.. நானும் யோசிச்சு சொல்றேன்..” அந்த அடியாளை அனுப்பி விட்டு யோசனையில் இருந்த தயாளனுக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வர, அதை உயிர்ப்பித்து காதில் வைக்க அங்கு மருத்துவர் கூறியதை கேட்டு பதறியடித்து அங்கு விரைந்து சென்றார்..
மருத்துவமனையில் அஷ்வின் இருந்த கோலத்தை பார்த்து மனம் துடித்தவர், அவன் அருகில் வந்து, அஷ்வின் என்னடா இதெல்லாம்?. உனக்கு என்ன ஆச்சு?.. தயாளன் பரிதவிப்போடு கேட்க
“ப்பாஆ அந்த மதி சந்தோஷமாக இருக்கா.. அதுவும் என் கண் முன்னாடி அந்த விஜய்யை கட்டி பிடித்து அவன்கிட்ட காதலை சொல்றா.. நான் வேண்டாம் என்று தூக்கி போட்ட அந்த மதி அவ சந்தோஷமாக வாழ்றது என்னால பார்க்க முடியல.. என் முகத்தை பார்க்க பிடிக்காமல் ரம்யா இப்போ வரைக்கும் என்னை பார்க்க கூட வரல..
ஆனால் இந்த மூஞ்சியை வச்சிருக்கிற இந்த மதியை மட்டும் அந்த விஜய் எப்படி ஏத்துக்கிட்டான்..? எனக்கு இவங்க சேர கூடாது..? அந்த மதி எனக்கு வேணும்.. அவ என் காலுக்கு கீழே இருக்கணும்.. நான் சந்தோஷமாக இல்லை.. இவங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக இருக்க கூடாது..” அருகில் இருந்த பூ சாடியை கீழே தள்ளி விட்டு, தன் காயம் கொடுத்த வலியை மீறி ஒரு பைத்தியம் போல் கத்தி கொண்டு இருந்த தன் மகனை அதிர்ந்து பார்த்தபடி நின்றிருந்தார்..
விதுரனும், ஷக்தியும் விஜய்யையும், எழிலையும் வீடியோ காலில் அழைத்து காண்பித்ததில் இருந்து அஷ்வின் இப்படி தான் ஹிஸ்டீரியா வந்தவன் போல் கத்தியபடி கையில் கிடைத்த, கண்ணில் தெரிந்த பொருட்களை எல்லாம் போட்டு உடைத்து அந்த அறையை காய்கறி சந்தை போல் அலங்கோல படுத்தி இருந்தான்.. மனம் கலங்க அஷ்வினை பார்த்து கொண்டிருந்த தயாளனிடம்
“சார் இவர் இப்டியே கத்திட்டு இருந்தால் மத்த பேஷண்ட் டிஸ்டர்ப் ஆகிறாங்க.. இவரை அமைதியா இருக்க சொல்லுங்க இல்லன்னா இவர் பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல சேர்த்து விடுங்க.. இவருக்கு இந்த ஹாஸ்பிடல் சரிவராது.. இவர் கொஞ்சம் கொஞ்சமாக மனநோயாளியாக மாறிட்டு வர்றாங்க நினைக்கிறேன்..” என்ற மருத்துவரை எரித்து விடுவது போல பார்த்த தயாளன்
“யாரை பார்த்து பைத்தியம் சொல்ற..? அவன் என் மகன் என் சொத்துக்கு ஒரே வாரிசு.. அவனை பைத்தியம் சொல்ற நீ எல்லாம் என்ன டாக்டர்..” மருத்துவரிடம் காய்ந்து விட்டு, அஷ்வின் அருகில் வந்த தயாளன்
“நீ நினைக்கிறது எல்லாம் நடக்கும்.. நிச்சயமா அப்பா நடத்தி காட்டுவேன்.. அதுவரைக்கும் நீ கோபப்படாமல் கொஞ்சம் பொறுமையா இரு.. நீ இப்படி கத்தி பேசினா எல்லாரும் உன்ன பைத்தியம் என்று நினைச்சுப்பாங்க.. இப்ப இந்த டாக்டர் சொன்னதை நீ கேட்ட தானே?. நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் நிதானமும், பொறுமையும் வேணும் கொஞ்சம் அமைதியா இரு எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” அஷ்வினை சமாதானம் செய்ய
“எனக்கு இந்த ஹாஸ்பிடல் வாசம் பிடிக்கல நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போங்க..” முகத்தை இறுக்கமாக வைத்தபடி அஷ்வின் சொல்ல,
“சரி போகலாம்.. நீ கோப படாதே..” அஷ்வினை சமாதானம் செய்துவிட்டு மருத்துவரிடம் பேசி விட்டு அஷ்வினை அன்றே வீட்டிற்கு அழைத்து சென்றார்.. அஸ்வின் இந்த கோபத்திற்கு இன்னொரு காரணம் அவன் மனைவி ரம்யா..
அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் தன்னை அவள் ஒதுக்கி வைத்தது அவனுக்கு ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் கொடுத்தது.. அந்த நேரத்தில் இருவரும் விஜய் எழில் காதல் காட்சிகளை அலைபேசியில் காண்பிக்கவும் கோபத்தின் உச்சிக்கே சென்றான்..
சிலர் இப்படி தான் தனக்கு ஒரு கண் போனாலும் தன் எதிரிக்கு இரண்டு கண்கள் போக வேண்டும் என்று நினைப்பது.. தனக்கு கிடைத்ததை வைத்து மனம் நிறையாமல் அடுத்தவர் சந்தோஷத்தை பார்த்து மனம் எரிவது.. அஷ்வினும் இப்போது அந்த நிலையில் தான் இருக்கிறான்..
தான் அருவருப்பாக வெறுத்து ஒதுக்கிய ஒரு பெண் இப்போது தன்னை விட அனைத்திலும் உயர்ந்த ஒருவன் அவளை தன் உயிரில் தாங்குவதை தாங்க முடியவில்லை அவனுக்கு.. அதன் விளைவு தான் இந்த ஆத்திரம் கோபம்..
“ஷக்தியும், விதுரனும் தங்கள் துணைகளோடு ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தனர்.. நேத்ரா அவர்களிடம் நன்றாக ஒட்டி கொண்டாள்.. “சரிடா நாங்க வந்த வேலை சிறப்பாக முடிஞ்சது..இனி நாங்க ஊருக்கு கிளம்பறோம் நேத்ரா பேபியை பத்திரமாக பார்த்துக்கோ.. அந்த தயாளனை சாதரணமாக நினைச்சிட்டு அசால்டாக இருக்காத..” என்று எச்சரித்துவிட்டே கிளம்பினர்
மலரும், வெண்பாவும் எழிலை அணைத்து கொண்டு வாழ்த்து தெரிவிக்க பதிலுக்கு எழிலும் அவர்களை அணைத்து கொண்டாள்.. எதற்கோ வெண்பாவை விதுரன் அழைக்கவும் இருவரிடமும் சொல்லிவிட்டு வெண்பா அங்கிருந்து செல்ல
“அண்ணி விஜய் அண்ணாக்கு அவர் விரும்பின வாழ்க்கை கிடைக்க போகுது நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” மலர் சந்தோஷமாக கூற, “அப்போ ரெண்டு பேரும் நாத்தனார் கொடுமை எதுவும் செய்ய மாட்டிங்களா அப்பாடா நான் தப்பிச்சேன்..” மதி விளையாட்டாக சொல்ல,
“ம் கூம் நீங்க என்னை கொடுமை செஞ்சாலும் அண்ணாவுக்காக நாங்க பொறுத்துப்போம்..” என்ற மலரை வியப்பாக பார்த்த மதி, “அவ்வளவு பாசமா அண்ணன் மேல..” என்று அப்போதும் விளையாட்டாக கேட்ட எழில், “சின்ன வயசுல இருந்து நீயும் உங்க அண்ணாவும் ஒன்றாக வளர்ந்து இருக்கிங்க.. உன் கணவர் ஷக்தி அண்ணா அவரோட ஃப்ரெண்ட்டாக இருக்கிறதால உங்க ரெண்டுபேரையும் புரிஞ்சிக்கிட்டாங்க..
இப்போ அந்த புரிதல் எனக்கும் இருக்குமா என்று உனக்கு சின்ன சந்தேகம் அப்படி தானே?.. கவலையே படாத மலர் நான் எப்போதும் உனக்கும் உன் அண்ணனுக்கும் இடையில் வரமாட்டேன்.. ஆனால் உங்க கூடவே தான் இருப்பேன்.. உங்க கூட்டணியில் என்னையும் சேர்த்துக்கோங்க..” எழில் தலைசாய்த்து சொல்ல
“அண்ணி, நீங்க நினைக்கிற மாதிரி நான் விஜய் அண்ணா கூட பிறந்த தங்கச்சி இல்லை..” என்ற மலரை திகைத்து பார்த்த எழில் ”என்ன சொல்ற மலர் அப்போ இவங்க..?” எழில் விஜய்யை காண்பித்து புரியாமல் கேட்க, மலர் தன்னை பற்றி தன் முதல் திருமணத்தை பற்றியும் அவள் கணவன் இறந்து அடுத்து ஷக்தி தன்னை காதலித்தது தான் மறுத்தது.. பிடிவாதமாக இருந்து ஷக்தி தன் காதலில் ஜெயித்தது..” என்று தன் காதல் கதையை கூறிய மலர்
வெண்பா விதுரன் காதல் கதைகளை கூறியவள், “நாங்களும் இந்த கேடுகெட்ட சில மனுசங்களால பாதிக்கப்பட்டவங்க தான் அண்ணி.. வெண்பாமாலை விதுரன் அண்ணா கல்யாணம் செஞ்சிட்டு போனதும் நான் தனியாகிடுவேன் சொல்லி விஜய் அண்ணா தான் என்னை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க.. இந்த காலத்தில் கூட பிறந்த அக்கா தங்கச்சியவே பாரமாக நினைக்கிறவங்க மத்தியில் விஜய் அண்ணா ஜெம்..
எல்லா விசயதிலேயும் என் கூட எனக்கு துணையாக இருந்தாங்க.. இப்போ நான் இவ்வளவு சந்தோஷமாக வாழ முக்கிய காரணம் விஜய் அண்ணா தான்.. அண்ணா மட்டும் இல்லை சுமித்ரா அம்மா, மணி அப்பா எல்லாரும் என்னை என் குழந்தையையும் அவங்க வீட்டில் ஒரு ஆளாக தான் நடத்தினாங்க.. இதோ நீங்களே என்னை அண்ணா கூட பிறந்த..” என்று சொல்லி கொண்டு இருந்த மலர் வாயை மூடிய எழில்
“இனி அந்த வார்த்தையை சொல்லாத மலர்.. நீ எப்பவும் இந்த வீட்டு பொண்ணு தான்.. உன் அம்மா வீடு இது தான்.. வேறு எதுவும் பேச கூடாது..” என்று உரிமையாக அதட்டிய எழிலை மலர் சந்தோஷமாக அணைத்து கொள்ள, வெண்பா இருவரையும் சந்தோஷமாக பார்த்து கொண்டு இருந்தாள்.
ஏனோ இப்போது ஷக்தியும், விதுரனும் பிரமிப்பாக தெரிந்தனர் எழிலுக்கு.. அவர்களின் காதலும் பிரமிப்பாக தெரிந்தது அவளுக்கு..
“எவ்வளவு பெரிய விசயத்தை ரொம்ப ஈசியாக நடத்திட்ட மச்சி.. உண்மையகவே நேத்ரா பேபியை என்னை அப்பாவாக அக்செப்ட் செய்வாளா என்று ரொம்ப தவிப்பும், கொஞ்சம் பயமும் இருந்தது.. ஆனால் அதை எல்லாம் நீ முறியடிச்சிட்டடா ஷக்தி..” விஜய் ஷக்தியிடம் நெகிழ்ந்து கூற,
“எல்லா விசயத்தையும் எமோஷனலா ஹேண்டில் செய்ய கூடாது மச்சி.. நேத்ரா பேபிக்கிட்ட நீ எமோஷனல் ஃபீலிங்குள்ள இருந்த நான் வெளியே இருந்தேன்.. இந்த மாதிரி சிட்சுவேஷன் நானும் கடந்து வந்திருக்கேன்டா..” என்ற ஷக்தியை அணைத்து விடுவித்தான்..
எழிலின் பார்வை சற்று தூரத்தில் நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்த விஜய்யை சுற்றி வட்டமிட்டு கொண்டு இருந்தது.. தன் உலகம் இத்தனை அழகாக மாறும் என்று இரண்டு நாட்கள் முன்பு யாராவது கூறி இருந்தால் ஒரு ஏளன சிரிப்போடு அவர்களை கடந்து போயிருப்பாள்.. ஆனால் அது அத்தனையும் உண்மை அதை நடத்தி காட்டியவன், இதோ அவள் கண் முன்னே கால்களை சற்று அகட்டி கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி கொண்டு நண்பர்களிடம் சிரித்து பேசிக்கொண்டு இருந்த விஜயேந்திரன், எழிலின் தீரன் எழில்
கண்களை நிறைத்தான்..!!
இமை சிமிட்டும்
[IT_EPOLL id=”1″][/IT_EPOLL]